மு. செ. பாதுஷா
எங்களுடைய கார்ப்பரேட் நிறுவனங்களில் லீடர்ஷிப் / மேனேஜ்மென்ட் / பிரொக்யூர்மென்ட் பயிற்சிகளின் போது, “சுருக்கமாகவும் தர்க்கத்துடனும் எதிராளியை மௌனமாக்குவது” பற்றிப் பேசும்போது, Adobe CEO Bruce Chizen-க்கு Apple CEO Steve Jobs எழுதியதாக கூறப்படும் நேர்த்தியான இந்த மின்னஞ்சலை மிகவும் சிலாகித்து எடுத்துக் காட்டுவார்கள்:
“Adobe is recruiting from Apple. One of us must change our policy. Please let me know who.”
நீண்ட நாட்களுக்கு பிறகு, அதே மாதிரியான நேரடியான, நச்செனக் கூறப்பட்ட பதிலை சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் Dong Jun வழங்கியிருப்பதை பார்க்கிறேன்:
“We have trade and energy agreements with Iran. We will respect and honor them and expect others not to meddle in our affairs. Iran controls the Strait of Hormuz, and it is open for us.”
"ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கலாமா" என்று கேடியும், ஜெய்சங்கரும் டிரம்பின் காலில் விழுந்து அனுமதி கேட்டது போலல்ல, இது வேற லெவல் OG moment.
இந்த இரண்டு பதில்களிலும் தேவையற்ற பெருமிதம், வெளிப்படையான மிரட்டல் அல்லது ஆவேசம் எதுவும் இல்லை. இரண்டும் நேர்மையாகவும், தெளிவாகவும் கூறப்பட்டவை. முக்கியமாக, இரண்டும் POINT-BLANK.
தற்போதைய போர் சூழலில், Iran, Qatar, China, Spain, Russia போன்ற நாடுகளின் டிப்ளமேட்களின் “strategic delivery of words” ஒப்பில்லாததாக, அதியுயர் தரத்தில் இருப்பது தற்செயலானது அல்ல. அரசியல்வாதிகள் அற்புதமானவர்களாக தெரிகிறார்கள். BATNA-ல் negotiation சம்பந்தமாக கத்துக்கிட்டதெல்லாம் ஒன்னுமேயில்லை.
இதற்கு மாறாக, டிரம்போட கருத்துக்களும் அறிக்கைகளும் அந்த அளவுக்கு செம்மையாக இல்லாமல் இருப்பது அயர்சியைத் தருகிறது.
"Yes, there is big hole on one side of the board. And the damage, caused by the hole, is bulging in the other side. There is a vertical Crack too."
"Pitty USA."
https://www.facebook.com/share/p/1ECBP2Eyut/