Tuesday, June 16, 2015

பார்ப்பனர்களும், அடிமை டவுசர்களும்: சில கேள்விகள், பதில்கள்

பார்ப்பனர்களும் அவர்களின் அடிமை டவுசர்களும் சில கேள்விகளை சுய மரியாதை தோழர்களிடம் கேட்டிருந்தார்கள். அவர்கள் கேட்ட கேள்விக்கு பங்காளி "மாணிக் வீரமணியின்" பகுத்தறிந்த பதில்கள்:
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 1:
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

பதில்:
  • அருமையான கேள்வி. ஜாதி பேதம் பார்ப்பவர்கள் எல்லா ஜாதியிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். கிருஸ்துவ சபைகளில் கூட சிலவற்றிலும், முஸ்லிம்களில் சில முட்டாள்களிடமும் கூட இருக்கத்தான் செய்கிறது. எங்கே இருந்தாலும் எதிர்க்கப்பட வேண்டியதுதான்.
  • ஆனாலும் நோய் நாடி. நோய் முதல் நாடி என்பதை தீர்வாக கொள்வோம். இந்த ஜாதி பேதத்தை கண்டு பிடித்து, எல்லோர் நெஞ்சிலும் இந்த விசத்தை புகுத்திய அயோக்கியத்தனம் பார்பனருக்கே மட்டுமே உரித்தான சொத்து என்பதை உலகமே அறியும். 
  • மத்தவனெல்லாம் கூட தொட மாட்டோம், ஒன்னா புழங்க மாட்டோம்னு தான் சொன்னான். ஆனா பார்த்தாலே தீட்டு, நிழல் பட்டா தீட்டுன்னு எல்லாம் எழுதி வச்ச பொறுக்கித்தனமெல்லாம் குடுமிகளின் குடும்ப சொத்தல்லவா?
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 2:
--------------------------------------------------------------------------------------------------------------------------கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?

பதில்:
  • ஸ்கூல்ல டீச்சர் அடிக்கும்போது "அவனுந்தான் பேசினான்" னு சொல்லி அழும் அஞ்சு வயது குழன்தைக்கு இருக்கும் அறிவு இருந்தால் கூட இந்த கேள்வி வந்திருக்காது.
  • "கடவுள் இல்லை" என்ற பிரச்சாரத்தில் "அத்தனை மத கடவுள்களும் அடங்கும்" என்ற சிற்றறிவு கூட இல்லாமல் ஒரு அற்ப சந்தோசத்தை தேடி கேட்கும் கேள்வி இது.
  • சரி அப்படியே வச்சுக்குவோம், "இயேசுவும், அல்லாஹ்வும் கடவுள் இல்ல"-ன்னு சொல்லிட்டா, "ராமனும், சிவனும், விஷ்னுவும், பிரம்மாவும் கடவுள் கிடையாது"-ன்னு ஒத்துக்க நீங்க தயாரா?
  • கிருஸ்துவர்கள் நாத்திகர்களின் பிரச்சாரத்தை கண்டுகொள்வதே கிடையாது.
  • முஸ்லிம்கள் நாத்திகர்களை விவாதத்திற்கு அழைத்து அவர்களின் அத்தனை கேள்விகளுக்கும் முறையான பதிலை கொடுத்தோம்.
  • ஆனால் நீங்க தான் லபோதிபோன்னு வாயில அடிச்சுக்கிட்டு ஒப்பாரி வைக்கிறிங்களே தவிர நாத்திகனின் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாமல் ஏமாற்றிக்கொண்டு திரியுரீங்க.
  • ஓடுற நாய கண்டா வெரட்டுர நாய்க்கு இளப்பம் என்பது போல நாத்திகனும் உங்களயே சுத்தி சுத்தி அடிக்கிறான். இது உங்க தப்பு.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 3:
--------------------------------------------------------------------------------------------------------------------------
தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?

பதில்:
  • தியாகராஜர் ஆரதனையானாலும் சரி, முத்துராமலிங்கத்தின் குருபூஜை ஆனாலும் சரி, இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் ஆனாலும் சரி அதன் மூலம் ஏதேனும் ஆதிக்கத்தை நிருவாத வரையில் எதையும் கண்டிக்க அவசியம் இல்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 4:
--------------------------------------------------------------------------------------------------------------------------
பிராமணன் பூணூலை அறுக்க துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?

பதில்:
  • ஒரு கிருஸ்தவனின் சிலுவை அவனை கிருஸ்துவனாக மட்டுமே அடையாளப்படுத்தும். அதே போலத்தான் முஸ்லிமின் தொப்பியும், சீக்கியர்களின் தலைப்பாகையும்.
  • ஆனால் ஒரு பிராமணனின் பூணூல் அவனை மட்டுமே உயர்ந்தவன் மற்றவனெல்லாம் இழிபிறப்பு என்று அடையாளம் காட்டுகிறது.
  • சிலுவையை எந்த கிருஸ்துவன் வேண்டுமானாலும் அணியலாம், தொப்பியை எல்லா முஸ்லிமும் அணியலாம். தலைப்பாகையை எந்த சீக்கியனும் அணியலாம்.
  • அதே போல பூணூலை எந்த ஹிந்து வேண்டுமானாலும் அணியலாம் என்று சொல்லும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா?
  • பத்து குடும்பம் இருக்கும் தெருவில் ஒரு வீட்டு வாசலில் மட்டும் "இங்கு பத்தினிகள் இருக்கிறார்கள்" என்று பதாகை வைத்தால் மற்ற வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் வேசிகள் என்றுதானே அர்த்தம்?
  • மற்றவரையெல்லாம் வேசியாக்கிவிட்டு தான் மட்டும் பத்தினி வேடம் போடும் அயோக்கியத்தனத்தின் அடையாளம் தான் பூணுல். அது அகற்றப்பட்ட வேண்டியதே.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 5:
--------------------------------------------------------------------------------------------------------------------------
தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிட கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?

பதில்:
  • தாலி என்பது அவசியம் இல்லை. அது ஒரு நகை மட்டுமே. இஷ்டப்பட்டால் அணியலாம் அல்லது அவிழ்த்து போடலாம். ஆனால் அந்த நகையில் தான் ஒருவனின் உயிர் இருப்பதாகவும் அவன் செத்துவிட்டால் அதை அணியும் தகுதி போய்விட்டதாகவும் கருதுவது தான் மூடநம்பிக்கை. அதை தகர்க்கத்தான் கணவன் கையாலேயே தாலியை அறுத்தனர். அதெல்லாம் எனக்கு தேவையில்லை என்று சொல்பவரை வற்புறுத்துவது பெரியாரின் கொள்கையே கிடையாது.
  • சமூக கொடூரத்தை மட்டுமே அவர் தீவிரமாக எதிர்த்தாரே தவிர இதுபோன்ற விசயங்களில் பிரச்சாரம் மட்டுமே சரியானது என்று இருந்தார். அதுக்கும் மேல ஒருத்தர் தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். பூணூலை போல அதில் வேசியாக்கும் விசம் இல்லை. நீங்கள் சொன்னதை திக முடிவாக ஏற்றால் எனக்கும் சம்மதமே. ஆனால் கருவறைக்குள் வைத்து கசமுசா செய்தவனையே அரவணைத்துக் கொண்டு அலையும் கூட்டத்திடம் இருந்து இந்த கேள்வி வருவது தான் வேடிக்கை ஆனது.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 6:
--------------------------------------------------------------------------------------------------------------------------
எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?

பதில்:
  • கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பது கடவுள் சேவைக்கு அல்ல. மக்கள் சேவைக்கு. மக்களுக்கு நல்லது நடக்கும் என்கிற ஆசையில் தான். மக்கள் என்பதில் நாத்திகன், ஆத்திகன் என அனைவரும் அடங்குவர். அதனால்தான் அனைவரையும் அழைக்கிறோம். 
  • சரி, அப்படியே நாத்திகர்களை மட்டுமே கட்சியில் சேர்த்து ஒருவேளை ஆட்சியை பிடித்துவிட்டால் தமிழகம் முழுக்க இருக்கும் அத்தனை கோவில்களையும் இடித்துவிட்டு பள்ளிக்கூடங்களாக மாற்றிவிட சம்மதமா?.
  • கொள்கைக்கும் சேவைக்கும் வித்தியாசம் தெரியாமல் உளறுவது சரிதானா? உங்கள் வீடு தீப்பிடித்து எரியும் போது வைணவர்கள் மட்டும் வந்து என்னைய காப்பாத்துங்க என்றா அழைப்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 7:
--------------------------------------------------------------------------------------------------------------------------
கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை, காமராஜர், எம் ஜி ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?

பதில்:
  • பெரியார் சிலையையும் கூட கடவுள் சிலை போல ஆக்கிவிட்டதில் எனக்கும் வருத்தம் உண்டு என்றாலும் வழிபாட்டுக்கும், மரியாதை செய்வதற்கும் வித்தியாசம் உண்டு.
  • பெரியார் சிலையை எந்த சூத்திரனும் தொடலாம்..எந்த பஞ்சமனும் மாலை அணிவிக்கலாம்..எந்த ஆகம விதியும் தேவையில்லை..பெரியார் சிலை என்பது ஒரு அடையாளம் தான்.
  • ஒருவேளை இன்னின்ன ஜாதிக்காரன் மட்டும் தான் பெரியார் சிலைக்கு மரியாதை செய்யலாம் என்ற நிலை வந்தால் அதை உடைத்தெறியும் முதல் ஆளாக நானிருப்பேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 8:
--------------------------------------------------------------------------------------------------------------------------
பிராமணனை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் பிராமணனைத்தவிற மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூறுகிறீர்களா?

பதில்:
  • சின்ன திருத்தம். பிராமணனை எதிர்க்கவில்லை. பிராமனியத்தை எதிர்க்கிறோம். பிராமணீயத்தின் அடிப்படையான வருணாசிரமத்தை எதிர்க்கிறொம். அது ஒரு சூத்திரன், பஞ்சமனிடம் இருந்தாலும் எதிர்க்கத்தான் செய்வோம்.
  • மற்றவர்களை விட பிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்பதைத்தான் எதிர்க்கிறோமே தவிர கல்வியால் அறிவால் ஒருவன் உயர்ந்ததை எப்படி மறுக்க முடியும்?
  • பிராமணர்களை விட மற்றவர்கள் சில விசயத்தில் அறிவு குறைந்தவர்கள் என்பதே கருத்து. ஏனென்றால் நேர்மையாக வாழ்பவனை விட கிரிமினலுக்கு மூளை சற்று அதிகமாகவே வேலை செய்யும் என்பது தான் நிதர்சனமான உண்மை. அதை எப்படி மறுப்பது?
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 9:
--------------------------------------------------------------------------------------------------------------------------
நாட்டில் நடந்துள்ள கொலைகள், கற்பழிப்புகள், திருட்டுகள், ஊழல்கள், கொள்ளைகள் இவற்றில் பிராமணனின் பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற ஜாதியர்கள், பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா?

பதில்:
  • பார்ப்பனர்கள் கொலை கொள்ளை, கற்பழிப்பில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதல்ல எங்கள் குற்றச்சாட்டு. 
  • கேவலம் மூன்று சதவீதத்தை தாண்டாத போதே அரசுத்துறை, தனியார்துறை, நீதித்துறை யில் பெரும்பங்கை எடுத்துக்கொண்டு மற்றவர்கள் முன்னேறிவிடாமல் பாதுகாக்கும் செயலைத்தான் எதிர்க்கிறோம். 
  • கோவில்கள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கருவறைக்குள் கசமுசா செய்வதைத்தான் எதிர்க்கிறோம்.
  • கொலை கொள்ளையெல்லாம் சமாளித்துவிடக்கூடிய குற்றங்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் அயோக்கியத்தனம் என்பது மக்களை பிறப்பால் வேறுபடுத்தி, கேவலப்படுத்தி, பிளவை உண்டாக்கும் சந்தர்ப்பவாத குற்றம். இதுதான் பெருங்குற்றமும் கூட.
  • கேவலம் மூன்று சதவீதத்தை தாண்டாத போதே ஆசிரமங்களில் நடக்கும் கூத்துகளை தாங்க முடியவில்லை. சங்கரமடமே சமீபத்திய சாட்சி.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 10:
--------------------------------------------------------------------------------------------------------------------------
கோவிலில் நுழைய அனுமதி, தெருவில் நடமாட தடை, தடுப்பு சுவர் கட்டுதல், இரட்டை டம்ப்ளர் முறை, கவுரவக் கொலைகள் இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சதவிகிதம் பிராமணர்கள், எவ்வளவு சதவிகிதம் பிராமணரல்லாதோர் என்ற விவரம் தங்களிடம் உள்ளதா? இவற்றை எல்லாம் உங்களால் பகிர்ந்து கொள்ள முடியுமா? எதிர்த்து குரல் எழுப்பும் ஆண்மை உண்டா?

பதில்:
  • எல்லாம் சரிதான். இதையெல்லாம் பெரியாரிஸ்ட்டுகள் எதிர்க்காமல் சங்கராச்சாரி வகையறாக்களா எதிர்த்து பிரச்சாரம் செய்துகொண்டு இருப்பதாக நினைக்கிறிர்கள்?
  • ஒரு ரவுடி கும்பலின் அடியாளுக்கு இருக்கும் அதிகபட்ச ஆசையே அந்த கிரிமினல் கூட்டத்துக்கு தலைவன் ஆகுவதாகத்தான் இருக்க முடியும். 
  • கருவறைக்குள் மற்றவர் நுழைய பார்ப்பான் தடுத்ததை பார்த்துவிட்டு தெருவுக்குள் நுழைய இவன் அனுமதி மறுக்கிறான். 
  • நாலணா நூலை மாட்டிக்கொண்டு உயர்ந்தவன் என்று சொல்வதை பார்த்துவிட்டு ரெட்டை டம்ளரை உருவாக்குகிறான்.
  • நந்தனை நெருப்பில் எரித்த கதையை கேட்டுவிட்டு கவுரவக்கொலை செய்கிறான்.
  • அக்ரஹாரம் தனியாக இருப்பதை பார்த்துவிட்டு தடுப்புச்சுவரும், தனி சுடுகாடும் உண்டாக்கிவிட்டான்.
  • அத்தனைக்கும் அடிப்படை அயோக்கியத்தனமே பார்ப்பனீயத்திடம் இருந்து தான் பெறப்பட்டது. 
  • உங்கள் கிரிமினல் கும்பலில் அடியாட்களாக இருந்த சில்லறைகள் தான் இந்த இழிசெயல்களை செய்கின்றனவே தவிர அப்ரூவர் ஆகி பெரியாரிஸ்ட்டாக ஆனவன் செய்வதில்லை.
  • எல்லாம் சரிதான். இத்தனை சமூக கொடுமைகளை பட்டியலிடும் நீலிக்கண்ணிர் கும்பலே. இதுவரை இந்த பிரச்சினைகளுக்காக இந்து மத அமைப்புகளோ, பார்ப்பனர் சங்கமோ நடத்திய போராட்டங்கள் குறித்து ஏதேனும் ஆவணங்கள் உண்டா? ஏண்டா இப்படி செய்ரீங்கன்னு கேக்கும் ஆண்மை உண்டா??
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 11:
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பிராமண பெண் தலைமை ஏற்று நடத்தும் அ தி மு க கட்சி ஒரு திராவிட கட்சியாயிற்றே. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் உங்களிடம் உண்டா?

பதில்:
  • அதிமுக-வை திராவிட கட்சி என்று சொல்லிக்கொண்டு திரிவது ஊடகங்களும், சில ஊளை உதார் கும்பலும் தானே தவிர எந்த ஒரு பெரியார் தொண்டனும் அல்ல. திராவிடம் என்ற வார்த்தை வந்துவிட்டாலே அது திராவிட கட்சி ஆகிவிடாது என்கிற சின்ன அரசியல் அறிவுகூடவா இல்லை? அப்படி பார்த்தால் தேமுதிக தான் முக்கியமான திராவிட கட்சி. தேசியத்தை முன்னேற்றும் திராவிட கட்சி அதுதான்.
  • திராவிட கொள்கையின் படி நடப்பதே திராவிட கட்சி. அதன்படி அறிஞர் அண்ணா மற்றும் திரு.கருணாநிதி அவர்களின் ஆரம்ப காலத்தோடு திராவிட ஆட்சி முடிந்து விட்டது. இப்போது இருப்பவை எல்லாம் பத்தோடு பதினொன்றாக ஆட்சிக்கு அலையும் அரசியல் கட்சிகள் மட்டுமே.
  • அது சரி, ஒரு திராவிட கட்சிக்கு பார்ப்பன பெண் ஒருவர் தலைமை ஏற்றதை எதிர்த்து ஏன் எந்த பார்ப்பன இயக்கமும் சின்ன முக்கல் முனகலை கூட வெளிப்படுத்தவில்லை? மனு சாத்திரப்படி பெண்கள் தலைமை ஏற்பது பெரும்பாவம் ஆயிற்றே. இதை அந்த பார்ப்பன பெண்மணியிடம் ஏன் எந்த ஆன்மீக அலப்பறைகளும் எடுத்து சொல்லவில்லை? பயமா???
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 12:
--------------------------------------------------------------------------------------------------------------------------
12. அந்த ஒரு பிராமண பெண்ணின் காலில் விழும் ஒரு மந்திரியையாவது, சட்டசபை உறுப்பினரையாவது, ஒரு கவுன்சிலரையாவது கேலி பேசும் ஆண்மை உங்களிடம் உண்டா?

பதில்:
  • அனேகமாக நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து நேற்று இரவுதான் பூமிக்கு வந்தவராக இருக்க வேண்டும்.
  • அதிமுக அமைச்சர்களை எல்லான் கூன்பாண்டிகள் என கேலிகிண்டல் செய்வதே நாங்கள் தான்...
  • முகநூலில் இருக்கும் ஃபேக் ஐடிக்கு கூட தெரிந்த விசயத்தை தெரியாதது போல கேள்வி கேட்பதெல்லாம் என்ன மாதிரியான டிசைன்?
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 13:
--------------------------------------------------------------------------------------------------------------------------
பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டிசிஎஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?

பதில்:
  • டிசிஎஸ், இன்போசிஸ் எல்லாம் பிராமணர்களால் உருவாக்கப்பட்டதா??? சரி இருக்கட்டும் உங்க ஆசைப்படியே. அந்த நிருவனங்களில் வேலை செய்யும் அனைத்து திராவிடர்களையும் திரும்ப அழைக்க நாங்கள் தயார்.
  • அதுபோல கரையான் புற்றுக்குள் கருநாகம் புகுந்ததை போல திராவிட மண்ணில் சூத்திர அரசர்கள் கட்டிய கோவில்களுக்குள் புகுந்து கொண்டு அதிகாரம் செய்யும் அயோக்கிய கும்பலை எல்லாம் திரும்ப அழைக்க நீங்கள் தயாரா?
  • திராவிடனுக்கும் நமக்கும் ஒத்துவரவில்லை. அதனால் இனிமேல் எந்த பார்ப்பனரும் திராவிட மண்ணில் இருக்கக்கூடாது என்று சொல்லி உங்கள் பூர்வீகமான மத்திய ஆசியாவை நோக்கி அழைத்துச்செல்ல நீங்கள் தயாரா? டீலா நோ டீலா?
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 14:
--------------------------------------------------------------------------------------------------------------------------
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை கொல் என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?

பதில்:
  • இந்த கேள்விக்கு ஒரு வாரம் முன்பு ரங்கராஜ் பாண்டே என்பவரை மல்லாக்கப்போட்டு வாயிலே நெல்லு குத்தியதை மறந்துவிட்டீர்கள் போலும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 15:
--------------------------------------------------------------------------------------------------------------------------
குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப்பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?

பதில்:
  • ராமானுஜர் தலித்துகளும் வேதம் படிக்க வேண்டும் என்று கோபுரத்தின் மீது ஏறி நின்று கூவியது வரலாறு. அதனால் தான் அவரை பற்றி பெருமை பேசுகிறொம். 
  • இதிலிருந்தே தெரியவில்லையா? எங்களுக்கு எதிரி பார்ப்பனர் அல்ல. பார்ப்பனீயம் தான் என்று.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 16:
--------------------------------------------------------------------------------------------------------------------------
பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன் சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத் திறனை கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது பாமரேனியன் வகை நாய்க்குட்டிகள்தான் காவலுக்கு வளர்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா?

பதில்:
  • பிறப்பு அடிப்படையில் தரம் பிரிப்பதென்ற இழிநிலையைத்தான் நாங்கள் எதிர்த்து பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறோம். அதையே நீங்கள் பெருமையாக பேசித்திரிவது கேவலமாக இல்லையா?
  • பிறப்பால் ஒருவனுக்கு உயர்வும், தாழ்வும் வருமென்றால் அது இந்த உலகில் இருக்கும் அனைவருக்கும் சமமானதே. ஏனென்றால் இன்றைய அறிவியல் கூட மனிதர்கள் அனைவரும் ஒரே ஆப்ரிக்க தாயில் இருந்து வந்தவர்கள் என்றுதான் சொல்கிறது.
  • காவல்துறையில் எந்தவகை நாய்களை வைப்பதென்பது மோப்ப சக்தியை பொருத்ததே அன்றி ரகத்தால் வருவதல்ல. அல்சேசனை விடவும் சிறந்த மோப்ப சக்தியுள்ள நாய் ரகங்கள் கிடைத்தால் அதையே பயன்படுத்துவதில் என்ன தவறு?
  • இதுக்கும் வருனாசிரமத்தை நியாயப்படுத்துவதற்கும் என்ன எழவு சம்பந்தம் என்றே புரியவில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 17:
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். ஹிந்துக்கள் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தவர்கள் மோதிரம் அகற்றும் போராட்டம் நடத்தும் ஆண்மை இருக்கிறதா?

பதில்:
  • கிருஸ்துவர்கள் நிச்சயதார்த்தம் அன்றே கூட மோதிரம் அணிவார்கள். திருமணத்திற்கு தனி மோதிரம். அதுபோல இந்துக்களும் பரிசம் போட்ட அன்னைக்கு ஒரு தாலியும், கல்யாணத்தந்னைக்கு ஒரு தாலியும் கட்டிக்கலாமா? 
  • உங்களை நோக்கிய கேள்வியை கிருஸ்துவர்களை நோக்கியும், முஸ்லிம்களை நோக்கியும் திருப்பிவிடும்போதே தெரிகிறது உங்களிடம் பதில் இல்லை என்று.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 18:
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஈ வெ ரா கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?

பதில்:
  • காசு விசயத்தில் திகவினருக்கு இருக்கும் ஆசைதான் காரணம் என்றாலும் அவர்கள் செய்ததும் ஒரு வகையில் சரிதான் என்பதற்கு உங்களின் 14 வது கேள்வியே ஆதாரம்.
  • அத்தனையும் ஆவணமாக தனிக்குழுவின் கையில் பாதுகாக்கப்பட்டு இருக்கும் போதே பெரியார் சொல்லாததை எல்லாம் அவர் மேல் இட்டுக்கட்டும் அயோக்கியர்களுக்கு பயந்துகூட இப்படி செய்திருக்கலாம்.
  • எல்லாம் சரிதான், பல நூற்றாண்டுகளாக வேதங்களை எல்லாம் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே படிக்க வேண்டும் என்றும் மற்றவர் அதை கேட்டாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் அடக்குமுறை செய்த அயோக்கிய கும்பலை கேள்வி கேட்க ஆண்மை இருக்கிறதா குடுமியாரே?
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 19:
--------------------------------------------------------------------------------------------------------------------------
பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டைபற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?

பதில்:
  • இல்லவே இல்லை. திக காரன் மட்டும் தான் கருப்பு சட்டை அணியவேண்டும் மற்றவர் எவரும் அணியக்கூடாது என்று எப்போதாவது சொல்லியிருக்கிறொமா?
  • அதே போல பூணூல் என்னும் நாலணா கயிறை எல்லோரும் அணியலாம் அல்லது குறைந்தபட்சம் எல்லா இந்துக்களும் அணியலாம் என்றாவது சொல்ல உங்களால் சொல்ல முடியுமா?
  • பூணூல் என்னும் அயோக்கிய அடையாளத்தை மற்ற எதோடும் ஒப்பிடாதீர்கள். அது எந்த வாதத்திலும் நிற்காது.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 20:
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் நம்பி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?

பதில்:
  • எந்த ஒரு மனிதனின் நம்பிக்கையிலும் தலையிட எவனுக்கும் உரிமை இல்லை. ஆனால் ஒருவனின் நம்பிக்கையை வைத்துக்கொண்டு அவனை சுரண்டுவதையும் அடிமைப்படுத்துவதையும் எந்த ஒரு சமூக அக்கறை கொண்ட மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
  • அதை எதிர்க்க வேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு. அது சரி..திக காரனுக்கு வேலை வெட்டி இல்லை. உங்களுக்குமா வேறு வேலை வெட்டி இல்லை?
  • எல்லா கோவில்களையும் அயோக்கியத்தனமாக அபகரித்துக்கொண்டு அடுத்தவன் காசில் வயிறு வளர்த்துக்கொண்டு அவனையே தேவிடியா மகன் என திட்டிக்கொண்டு இருப்பதை தவிர்த்த வேறு வேலை வெட்டியே இல்லையா உங்களுக்கு?

Monday, June 15, 2015

முஸ்லிம்களை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்

முஸ்லிம்களை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் : அக்னியை முழங்கிய ஆசாம் கான்....!!
முஸ்லிம்களை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று உத்தர பிரதேச அமைச்சர் ஆசம் கான் அக்னியை முழங்கியுள்ளார்.
இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு....
சூரிய நமஸ்காரம் செய்ய மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் என்று சொன்ன பாஜக யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முஸ்லிம்களை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு போகட்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு பாகிஸ்தானால் இடம் கொடுக்க முடியாது, எனவே முஸ்லிம் விரோத துவேஷ கருத்துக்களை பேசிவரும் யோகி போன்ற எங்களை பிடிக்காத சில நபர்கள் வேண்டுமானால் பாகிஸ்தானுக்கு குடிபெயரலாம் என்றார்.
யோகா சிறந்த உடற்பயிற்சி என்பதை தாம் ஏற்றுக் கொள்ளும் அதேவேளையில், அதில் சூரியனை வணங்குவது என்ற அம்சத்தை நாங்கள் ஏற்க முடியாது என்றார்.
நாங்கள் சூரியனை சூரியன் என்கிறோம் நீங்கள் சூரிய பகவான் என்கிறீர்கள். இதில் உள்ள வித்தியாசத்தை புரிந்துக் கொள்ளாமல் முஸ்லிம்களை சாடுவது ஏற்புடையதல்ல.
யோகாவின் சிறப்பை பறைசாற்றும் நீங்கள் முஸ்லிம்களின் தொழுகையை குறித்து என்றாவது சிந்தித்ததுண்டா ? ஒருமுறை மன ஓர்மையுடன் தொழுது பாருங்கள்...
அதில் உள்ள பலன்களை தெரிந்துக்கொள்வீர்கள். எமெர்ஜென்சி காலக்கட்டத்தில் ஜெயிலில் இருந்தபோது தம்முடன் சேர்ந்து பல ஹிந்து சகோதரர்கள் நோன்பு நோற்றதையும் தொழுகையில் ஈடுபட்டதையும் நினைவு கூர்ந்தார்.
தகவல் உதவிக்கு நன்றி : மறுப்பு முகநூல் பக்கம்

கடாபியின் மறுபக்கம்.

1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெரும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .
4.அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.
5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.
6.எந்த ஒரு லிப்யனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.
7. லிப்யர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.
8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.
9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.
10. லிப்யா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது.
11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.
12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.
13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்.
14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.
15. 25% லிப்யர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.
16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு.

நிறுவனமயமாகும் அமைப்பு, அதன் பண்புகள்

ஒரு அமைப்பு நிறுவனமயமாகும் போது கீழ் கண்ட சில அதன் பண்புகளாகும்:
.
  1. அதிகாரம் பிரமீடு வடிவில் உச்சியில் குவிக்கப்படும்.
  2. மாற்றமற்ற ஒரு இறுகிய சித்தாந்தத்தை தன் கொள்கையாக கொள்ளும். விவாதத்திற்கு ஒரு எல்லையை நிர்ணயித்து அந்த எல்லைக்குள் விவாதத்தை அனுமதிக்கும்.
  3. வேறு மாதிரி இருப்பவர்களை, வேறு மாதிரி இருப்பதற்கான உரிமைகளை ஏற்றுக் கொள்ளாமல் அல்லது வேறு மாதிரி இருப்பவர்களை என்ன செய்வது என்ற ஒரு அடிப்படை விவாதம் கூட இல்லாமல், வன் முறை கொண்டு ஒடுக்க முற்படும்.
  4. வளர்ச்சி என்பது உளவியல் சம்பந்தம் உடைய ஒன்றாக கருதாது விமர்சனமற்று வளர்ச்சிக்கான ஒரே விளக்கமாக அறிவியலைக் கொள்ளும். அல்லது அறிவியல் அற்ற தன்மையை கொள்ளும். யாருடைய வளர்ச்சி என்ற கேள்வியே இருக்காது.
  5. அமைப்பு எதிரியின் கருத்து மேலாண்மையை நிறுவும் சிவில் சமூக உறுப்புகளை அடையாளம் கண்டு அதை மாற்றத் துணிவதும், அதே சிவில் சமூக உறுப்புகளை தனது கருத்து மேலாண்மையை நிறுவ எந்த விமர்சனமும் இன்றி பயன்படுத்த துணிவதும் நிறுவனமாதலின் ஒரு பகுதியே.
  6. தன்னைக் கலைத்துக் கொள்வது பற்றிய விவாததிற்க்கே இடமிருக்காது. தன்னைக் கலைத்துக் கொள்வதற்கான ஒரு வரலாற்று சூழல் வரும்போது அது தன்னை வரலாற்றில் இருந்து துண்டித்துக் கொண்டு தன் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளும்.
  7. உறுப்பினர்களின் சுயத்திற்க்கும் பொது வெளியில் அவர் காட்டும் பிம்பத்திற்கும் இடைய நிலவும் உறவும் முரணும் குறித்த அடிப்படைப் புரிதல் இருக்காது.
.
-துணைத் தளபதி மார்கோஸ்

பா.நடேசன், கனிமொழி - மின்னஞ்சல்

தங்கராஜ் புகழேந்தி நல்ல உணர்வாளர். ஆனால் யதார்த்தம் தெரியாதவர். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு புலத்தில் இருக்கிறவர்களிடம் தனது உணர்ச்சி அரசியலைக் கொஞ்சக் காலம் விதைத்துக் கொண்டிருக்கிறார். கனிமொழியோடு தொடர்பில் இருந்தவர் அரசியல் பொறுப்பாளர். பா.நடேசன். அவர்தான் மின்னஞ்சல் மூலம் அவரோடு தொடர்ப்பில் இருந்தார்.
.
மார்ச் 30 இல் நடேசன் பின்வரும் செய்தியை கனிமொழிக்கு அனுப்பினார்:.
“அன்புடன் சகோதரி கனிமொழிக்கு,தற்போது இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் கொண்டிருக்கின்றனர். .நாம் நீண்டகாலமாகவே யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றோம். எமது அவலங்களை போக்குவதற்காகவே நாம் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். .ஆனால் சிங்கள அரசு யுத் தத்தை தொடர்ச்சியாக நடாத்திவருகின்றது. சிங்கள அரசின் அதிமுக்கிய மூத்த அமைச்சர்கள் இந்திய அரசின் உதவியினாலேயே தாம் இந்த யுத்தத்தை வென்றுகொண்டிருப்பதாக பகிரங்கமாக அறிவித்த வண்ணம் உள்ளனர். .இது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. இந்த நேரத்திலாவது நீங்களும் அப்பாவும் சேர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி யுத்த நிறுத்தத்தை கொண்டுவந்தால் எமது மக்களை காப்பாற்றலாம். நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமே எதிர் காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைக்கும் நிரந்தர சமாதானத்திற்கும் வழிவகுக்கும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன்..
நன்றி,என்றும் உங்கள் அன்பான,சகோதரன் பா.நடேசன்“
இதற்கு பின்வரும் பதிலை கனிமொழி ஏப்ரில் 07 அன்று அனுப்பியிருந்தார்:
“நடேசன் அண்ணன்,நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான் அறிவேன். நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாக சம்பந்தப்பட்ட எல்லோருடனும் பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ஆயுதங்களை கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. .தயவு செய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவு செய்யக்கூடும் போல் தோன்றுகின்றது. நான் சொல்வதை செய்ய முடியாதுவிட்டால் தயவு செய்து டில்லியுடனேயே கதையுங்கள். மக்களைப் பற்றி உள்துறை அமைச்சரும் கரிசனையாக உள்ளார். .கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கும் வகையிலும், தீர்க்கமானவையாகவும் உள்ளன. தயவு செய்து அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். .தயவு செய்து தவறான வழிகாட்டல்களைப் பின்பற்றாதீர்கள்.”கனிமொழி”
இந்தக் கடிதம் மிகவும் யதார்த்தமானது. கனிமொழி அமைச்சர் கிடையாது. வெறுமனே ஒரு இராஜ்யசபை உறுப்பினர்தான். 
.
இருந்தும் அவர் புலிகளுக்கு “ஆயுதங்களை கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தயவு செய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவு செய்யக்கூடும் போல் தோன்றுகின்றது” எனச் சொல்கிறார். 
.
ஆயுதங்களை கீழே போடுங்கள், போட்டால் மத்திய அரசு போர் நிறுத்தம் செய்ய முன்வரும் என்று சொல்லவில்லை. “ஆயுதங்களை கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தயவு செய்து அதைச் செய்யுங்கள்” என்றுதான் எச்சரிக்கையோடு எழுதினார். 
.
“அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவு செய்யக்கூடும் போல் தோன்றுகின்றது” என்கிறார். “தோன்றுகிறது” என்ற சொல்லைத்தான் கவனமாகப் பயன்படுத்துகிறார்.
.
-
Veluppillai Thangavelu
https://www.facebook.com/V.T.NakKeeran/posts/10155805921600454

Thursday, February 26, 2015

அந்த முஸ்லிம் பெண்கள்

அந்த முஸ்லிம் பெண்கள்.
(டீஸ்டா செடல்வாட் மீதான பழி வாங்கும் நடவடிக்கை குறித்து நான் மார்ச் மாத உயிர்மை இதழில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சிலவரிகள்....)
"..........இவ்வளவுக்குப் பின்னும் இது போன்ற வன்முறைகளில் இன்று அதிக அளவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது குஜராத் 2002 ல்தான் என்பது குறிப்பிடத் தக்கது. மோடி அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சர் உட்பட 117 குற்றவாளிகள் அங்கு இப்போது தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அதன் பின்புலமாக உள்ளவை இரண்டு.

  1. ஒன்று பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் கொண்ட உறுதி. 
  2. மற்றது அந்த உறுதியை அவர்களுக்குத் தந்து அதை அணையாமல் காத்த டீஸ்டா செடல்வாடின் ஈடு இணையற்ற கடும் அர்ப்பணிப்பு.
பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், குறிப்பாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் உறுதியுடன் நின்றதையும், அவர்களின் கணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதை ஒரு இழிவாகக் கருதாமல் அவர்களுக்குத் துணை நின்றதையும் நினைக்கும்போது மனம் சிலிர்க்கிறது. 

பாலியல் வன்முறை என்று வந்து விட்டால் பாதிக்கப் பட்டவர்களின் பெயரைக் கூட வெளியிடக் கூடாது, படத்தை அறவே வெளியிடக் கூடாது என்கிற சூழலில் ரொம்பவும் கட்டுப் பெட்டியானவர்கள் எனக் கருதப்படும் முஸ்லிம் பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதும், கொடும் பாலியல் வன்முறைக்கு ஆளான பில்கிஸ் பானு போன்றோர் தொலைக் காட்சிகளில் நேர்காணல் அளித்ததும், பல நேரங்களில் இத்தகைய பெண்களின் கணவர்கள் அவர்களோடு நின்றதும் வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்று.

தங்களுக்கு இழைக்கப்பட்டது அவமானமல்ல. அது குற்றம். அது வன்முறை. அந்தக் குற்றத்துக்கு உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதொன்றே அவர்களின் ஒரே நோக்காக இருந்தது

(படத்தில் பில்கிஸ் பானு (2008). அவர் மீது வன்முறை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட்ட அன்று ப்ரெஸ் மீட்டில்... 'நான் சுமத்திய குற்றம் உண்மை என்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது... என் உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளது..' என்று அவர் அன்று கூறினார்)

அடத்தூஊ கேடுகெட்ட காவி பன்னிகளா

அடத்தூஊ.... கேடுகெட்ட காவி பன்னிகளா....
சக மனிதனை தொடவோ அல்லது தனக்கு நிகராக அருகில் உட்காரவோ கூட அனுமதிக்காத ஈனப்பிறவிகள் வாழும் இதே நாட்டில்,
.
அவர் யார், என்ன சாதியென்று பார்க்காமல் சாக்கடை ஓரமாக கிடந்த தொழுநோயாளிகளை தொட்டு தூக்கி உணவளித்து உடையளித்து பாதுகாத்த அன்னை தெரேசாவை கொச்சை படுத்தும் ஈனப்பிறவிகளே....
.
உங்கள் மூஞ்சியில் காறி உமிழ்கிறேன்... த்தூஊஊஊ....
.
- அன்சாரி முஹம்மது

---------------------------------------------------------------------------------------------------------------

மதங்களின் மீது வெறுப்பேறி இருந்த ஒரு காலம் இருந்தது, பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மதங்கள் மனித வாழ்க்கையின் எச்சங்களை, மனித மனத்தின் வக்கிரமான சகிக்க இயலாத இன்னொரு பக்கத்தை இயல்பான வாழ்க்கைக்கு உந்தித் தள்ளும் வடிகாலாக தொடர்ந்து இருந்து வந்திருப்பதை வரலாற்றில் வாசித்து அறிய முடிந்திருக்கிறது.
.
"மார்க்ஸ்" சொன்னதைப் போல "மதம் மனித மூளையால் விடை கண்டறியப்படாத பல்வேறு குழப்பமான கேள்விகளுக்கான பதிலாய் உருவெடுத்திருக்கிறது", பல்வேறு பெயர்களும், கோட்பாடுகளும் பொதிந்து கிடந்தாலும் அடிப்படையில் மதங்கள் மனித மனத்தை வடிகட்டும் வேலையைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறது அல்லது கூட்டு சமூகத்தின் மனசாட்சியை அழிவு, அச்சம் மற்றும் மரணத்தின் பிடியிலிருந்து பன்னெடுங்காலமாக அது காப்பாற்றி வந்திருக்கிறது. மரணமும், பிரிவும் மனிதனுக்குக் கொடுக்கிற சொல்லொனாத் துயரத்தை மதம் ஓரளவு துடைத்திருக்கிறது.
.
நிகழ்காலத்தில் புழக்கத்தில் இருக்கிற மதங்களில் கிறிஸ்துவத்தின் மீது எனக்கு அளப்பரிய மரியாதை உண்டு, எல்லாவற்றுக்கும் பொதுவான கடவுளரைத் தொழுவதற்குக் கூடப் பல படிநிலைகளையும் தடைகளையும் உண்டாக்கி வைத்திருந்த பிற்கால இந்துத்துவத் கோட்பாடுகளுக்கு நடுவே மனிதக் குழந்தைகளை அழைத்து உணவூட்டி, உடை கொடுத்து ஒரே வகுப்பறையில் அமர வைத்த மதம் கிருத்துவம்.
.
தந்தை பெரியாரின் திராவிடக் கருத்தாக்கம் உள்ளீடு செய்யப்பட்டு தமிழ்ச் சமூகம் உயர் சாதிக் கோட்பாட்டு ஆளுமையில் இருந்து பரவலாக விடுபடுவதற்கு முன்னதாகவே கிறிஸ்துவம் நமது கூட்டு சமூக மனநிலையில் பொதுவுடைமை கருத்தாக்கத்தையும், அறிவேற்றத்தையும் தீவிரமாகவே உள்ளீடு செய்திருக்கிறது. இன்றைக்கும் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில், குறிப்பாகத் தென் மாவட்டங்களில், கிறிஸ்துவத் தேவாலயங்களும், கல்வி நிலையங்களும் சமூக மாற்றத்திலும், சமூக நீதியிலும் பெருமளவு தாக்கம் உருவாக்கி இருக்கின்றன.
.
உயர் ஞான மரபு, முக்தி, முற்றும் துறத்தல் என்று இந்து மதம் வெகு மக்களின் வாழ்க்கையில் இருந்து வெகு தொலைவில் நிலை கொண்டிருந்த போது கிறிஸ்துவ மதமும் அதன் போதகர்களும் வாழ்க்கையின் விளிம்பில் கிடந்த எமது மக்களை தங்கள் திருக்கரங்களால் பூசிக்க மட்டும் அழைக்காமல், அவர்களை கல்வி கற்கவும், பொது சமூக நீரோட்டத்தில் கலந்து மதிப்புறவும் உதவி செய்தார்கள். கெட்டியாய் உறைந்து போயிருந்த நலமுற்ற மக்களையே சீண்டாமல் கிடந்த மதங்களிடையே அழுகிக் கிடந்த தொழு நோயாளிகளையும், புழுக்கள் நெளிந்த நோயாளிகளையும் அரவணைத்துக் கொண்டார்கள்.
.
எல்லா மதங்களையும் போல கிறிஸ்துவத்திலும் பல்வேறு நிறை குறைகளும், முரண்களும், குற்றங்களும் இருக்கலாம், ஆனால், தமிழ்ச் சமூகத்துக்கு கிறிஸ்துவம் ஒரு பெரும் கொடை என்பதை மனசாட்சி உள்ள எந்தத் தமிழனும் மறுக்க முடியாது. தென் மாவட்டங்கள் பலவற்றில் கல்வியும், அடிப்படை வாழ்க்கை வசதிகளும் இல்லாது அழிந்து கொண்டிருந்த எமது மக்கள் பலரின் வாழ்க்கையில் கிறிஸ்துவமும், கிறிஸ்துவ தேவாலயங்களும் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கி இருக்கிறது.
.
அந்த வரிசையில் இந்திய சமூகத்தின் இன்னொரு மூலையில் கிடந்த மேற்கு வங்கத்தையும், அதன் நிலப்பரப்பு மக்களையும் தனது தூய அன்பினாலும், பெருங்கருணையினாலும் "அன்னை தெரேசா" போன்ற மகத்தான மனிதர்கள் அரவணைத்துப் போற்றினார்கள். வீதியில் எறியப்பட்ட அனாதைக் குழந்தைகளின் உணவுக்காகக் கொடை கேட்டு தெருக்களில் அலைந்த அன்னையின் முகத்தில் எச்சில் உமிழப்பட்ட கொடுங்கனத்திலும், அமைதியின் உருவாய், "கிறிஸ்துவத்தின் பெயரால் இந்த எச்சிலை நான் எடுத்துக் கொள்கிறேன், ஆனால், எமது குழந்தைகளுக்காய் வேறு ஏதேனும் கொடுங்கள்" என்று கேட்ட தாய்மையின் பெருவடிவம் அன்னை தெரேசா.
.
பொதுவான கடவுளை வணங்குதற்கும் தனிப்படிகளைக் கட்டி வைத்து, கடவுளின் பெயரால் மனிதர்களை இழிவு செய்யும் பிற்கால இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு கிறிஸ்துவத்தையும் அதன் மகத்தான கல்வி மற்றும் சமூகப் பணியாற்றிய மனிதர்களையும் விமர்சிப்பதற்கோ, புழுதி வாரித் தூற்றுவதற்கோ எத்தகைய தார்மீக உரிமையும் இல்லை.
.
கிறிஸ்துவம் மானுடக் குழந்தைகளை ஒருங்கிணைத்து ஒரே வரிசையில் அமர வைத்த அதே காலத்தில் தான் பொதுக் குளங்களில், பள்ளிகளில், தெருக்களில், அரசியலில் என்று சமூகத்தின் எல்லாப் படிநிலைகளிலும் எமது குழந்தைகளை அண்ட விடாமல் செய்தது இந்து மதத்தின் "சோ கால்ட்" உயர் குடிக் கூட்டம், இன்று வரைக்கும் குழந்தைகளாய் மானுடத்தின் பூக்களாய் மலர்கிற பிஞ்சுகளை, பூமியின் புன்னகை போலச் சிரிக்கிற பிஞ்சுகளை வர்ணத்தின் பெயரால், சாதியின் பெயரால் மனம் குறுக வைக்கிற உங்கள் வக்கிர மதத்தை விடப் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது கிறிஸ்துவமும் அதன் பணிகளும்.
.
### போங்கடே நீங்களும் உங்க மதமாற்ற ஊளையும் ### — feeling Devine with the work of Mother Teresa & Christianity in India.
.
Arivazhagan Kaivalyam