தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக களமிறங்கும் மக்கள் நலக் கூட்டு இயக்கம் வெளியிட்டுள்ள 37 பக்கங்களைக் கொண்ட குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையில் 24 தலைப்புகளில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியில் மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில், மமக சமீபத்தில் வெளியேறியது. மற்ற 4 கட்சிகளும் தொடர்ந்து கூட்டியக்கத்தில் உள்ளன.
கூட்டியக்கத்தின் தேர்தல் அணுகுமுறை குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் மதிமுக தலைமை அலுவலகமான சென்னை தாயகத்தில் இன்று நடந்தது. இதில், கூட்டியக்கத்தின் குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் வெளியிட்டனர். அதன் முக்கிய அம்சங்கள்: