Saturday, April 1, 2017

அபுல் கலாமும், அப்துல் கலாமும்!

அபுல் கலாமும், அப்துல் கலாமும்!

உலக அரங்கில் இந்தியாவின்
பெருமையை உயர்த்திய இருவர்.
ஒருவர் அபுல் கலாம் ஆசாத்.
இன்னொருவர் அப்துல் கலாம்.

ஐ.ஐ.டி.யை உருவாக்கி
மறைந்தவர் அபுல் கலாம்.
ஐ.ஐ.எம்.மில் உரையாற்றி
மறைந்தவர் அப்துல் கலாம்.

இருவருமே மிகச் சிறந்த
கல்வியாளர்கள், கவிஞர்கள்,
கலை இலக்கிய ஆர்வலர்கள்,
இறை நம்பிக்கை உடையவர்கள்,
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை
இலக்காகக் கொண்டவர்கள்.

இந்தியாவின் முதல் கல்வி
அமைச்சராகப் பொறுப்பேற்ற
அபுல் கலாம், உலகத் தரத்துக்கு
இந்தியக் கல்வியை உயர்த்தினார்.

உலகமே அழைத்த போதும்
விஞ்ஞானியான அப்துல் கலாம்,
இந்தியாவை வளர்க்கவே தம்
அறிவைப் பயன்படுத்தினார்.

சாகித்ய அகாடமி, லலித கலா
அகாடமி, நாடக அகாடமி,
சங்கீத அகாடமி, யு.ஜி.சி,
ஆவணக் காப்பகங்கள்,
அருங்காட்சியகங்கள், நூலகங்கள்,
அறிவியல் தொழில் நுட்ப
ஆய்வுக் கூடங்கள், ஐ.ஐ.டி.கள்,
மருத்துவக் கல்லூரிகள் என
விடுதலை இந்தியாவின்
பெருமை என எவற்றையெல்லாம்
சொல்கிறோமோ, அவை
அனைத்துக்கும் அடித்தளமிட்டவர்
அபுல் கலாம்.

அறிவியல் கண்டுபிடிப்புகள்,
அணு ஆயுத சோதனைகள்,
நவீன செயற்கைக் கோள்கள்
என இன்றைய இந்தியாவின்
அடையாளங்கள் பலவற்றுக்கும்
முகவரி தந்தவர் அப்துல் கலாம்.

- Aloor Sha Navas

பாகிஸ்தான்ல இருந்து வந்த ஆர்.டி.எக்ஸ்.மருந்துகளை, லஞ்சம் வாங்கி கொண்டு இந்தியாவிற்குள் அனுமதித்த "இந்து அதிகாரிகள்"

மும்பை தொடர்குண்டு வெடிப்பில்,
பாகிஸ்தான்ல இருந்து வந்த
ஆர்.டி.எக்ஸ்.மருந்துகளை, லஞ்சம் வாங்கி
கொண்டு இந்தியாவிற்குள் அனுமதித்த
"இந்து அதிகாரிகள்" இவர்கள். சில
லட்ச அபராதத்துடன் குறைந்த பட்ச
தண்டனையுடன் வெளியில் திரிந்து
கொண்டிருக்கிறார்கள்

1) S.N. Thapa, former additional customs collector
2) R K Singh, Former assistant commissioner of customs,
3) Jaywant Gurav, former customs inspector
4) S S Talwadekar, former customs superintendent.
5) Vijay Patil, ex police sub-inspector
6) Ashok Muleshwar, P M Mahadik, Ramesh Mali and S Y Palshikar; -all Police Constables

ஓகே. பாபர் மசூதி இடிப்பு காரணமா,
இயல்பா ஏற்படுற ஒரு எதிர்ப்பு உணர்வில்
யாகூப் மேமன் மும்பை தொடர் குண்டு
வெடிப்புக்கு காரணமா இருந்தார்னு யோசிச்சுக்கலாம்.

ஆனா, எந்த உணர்வும் இல்லாம...
நாய்க்கு ரொட்டி துண்டு போடுறா
மாதிரி, வீசி எறியப்பட்ட லட்சங்களுக்காக,
பாகிஸ்தான்ல இருந்து வந்த ஆர்.டி.எக்ஸ்
மருந்தை, இந்தியாவுக்குள்ள அனுமதிச்ச
இந்த "இந்து" அதிகாரிகளுக்குத்தான
அதிகபட்ச தண்டனையான தூக்கு
தண்டனை கொடுத்துருக்கணும்.
காசுக்காக நாட்டை காட்டி கொடுத்துடீங்களே
அப்படின்னு. ஆனா இவங்களை
எல்லாம், ஒரு லட்ச ஓவா அபராதம்,
ஆறு ஏழு வருஷ தண்டனையோட
வெளில விட்டுட்டு, யாகூப் மட்டும்
தூக்குல போட்டது ஏன் அப்படினுதான்
கேக்கறோம் ??

அத விட்டுட்டு, கொஞ்சமா செஞ்சாலும்
தப்புதான். பெருசா செஞ்சாலும் துப்புதான்....
சே... தப்புதான் அப்படின்னு ஸ்டேடஸ்
போடாதீங்க சித்தப்பாஸ்.

நேத்து பொறந்த நாங்களே இவ்ளோ
டீடைல் தெரிஞ்சு வச்சுட்டு பேசுறப்ப...
கொஞ்சம் ஹோம்வொர்க் பண்ணிட்டு
ஸ்டேடஸ் போடுங்க !!!

--கவிதா சொர்ணவல்லி---

ஒரு வழக்கு தொடர்பான விசாரணை முழுமையாக முடிவதற்கு முன்பே தீர்ப்பு - அதுவும் மரண தண்டனை

வழக்கு விசாரணை
இன்னும் தொடர்கிறதே...!

யாகூப் மேமனுக்கு மரண
தண்டனை அளிக்கப்பட்ட
பிறகும் மும்பை வெடிகுண்டு
வழக்கு இன்னும் தடா நீதிமன்றத்தில்
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

2002ஆம் ஆண்டிற்குப் பிறகு
கைது செய்யப்பட்டவர்கள்
குறித்தான விசாரணையாம் இது.

அதாவது 2002இல் கைது
செய்யப்பட்ட அபூசலீம்,
2003இல் கைது செய்யப்பட்ட
முஸ்தபா தோஸா,
2010 இல் கைது செய்யப்பட்ட
முஹம்மத் தாஹிர் மர்ச்சண்ட்
உட்பட ஏழுக்கும் அதிகமான
பேரிடம் தடா நீதிமன்றத்தில்
வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

யாகூப் மேமன் தூக்கில்
ஏற்றப்பட்ட வியாழக்கிழமை கூட
விசாரணை நடந்துகொண்டு
தான் இருந்தது.

ஒரு வழக்கு தொடர்பான
விசாரணை முழுமையாக
முடிவதற்கு முன்பே தீர்ப்பு -
அதுவும் மரண தண்டனை
என்று தீர்ப்பு அளிக்க முடியுமா?

-சிராஜுல்ஹஸன்

தி.மு.க. விடுத்த ஓர் அறிக்கை எல்லாக் கட்சிகளையும் கதிகலங்க அல்லது விழிபிதுங்க வைத்திருக்கிறது.

தி.மு.க. விடுத்த ஓர் அறிக்கை
எல்லாக் கட்சிகளையும் கதிகலங்க
அல்லது விழிபிதுங்க வைத்திருக்கிறது.

தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும்
என்று கோரும் பாஜக ஆளும்
மாநிலங்களிலும் மது உண்டு,
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும்
மது உண்டு. ஏன், ஆம் ஆத்மி ஆளும்
தில்லியிலும்கூட மது உண்டு.
ஆக, இது அரசியல் மட்டுமே.

கலிங்கப்பட்டியில் டாஸ்மாக்
கடை நேற்று புதிதாகத் திறந்தார்களா
என்ன... அல்லது, ரகசியமாக இயங்கிக்
கொண்டிருந்ததா... தி.மு.க. அறிவித்ததும்
மற்ற கட்சிகளுக்கு தம் இருப்பைக்
காட்ட வேண்டிய நிர்ப்பந்தம்
ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

பாமக பாவம். அடுத்த தேர்தலில்
எந்தக் கூட்டணியில் எங்கே சேர
வேண்டியிருக்கும் என்று
நிச்சயமில்லாததால், மதுவுக்கு
எதிரான கட்சி என்று பீற்றிக்
கொண்டிருந்தாலும் கடையடைப்புக்கு
ஆதரவு தராமல் நழுவுகிறது. அதன்
மதுவிலக்குக் கொள்கை எப்படிப்பட்டது
என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

நடந்து கொண்டிருப்பதெல்லாம்
இந்த அரசியலின் விளையாட்டுகளே.
தமிழகத்தில் எழுச்சி வந்து விட்டது,
தன்னெழுச்சியாக மக்கள் கிளர்ந்தெழப்
போகிறார்கள் என்பதெல்லாம் மாயை.

- Shah Jahan

ல் கலாமை ஜனாதிபதியாக்கியது வாஜ்பாய் தான் என்ற தவறான தகவல்

பாரதரத்னா அப்துல் கலாமை
ஜனாதிபதியாக்கியது வாஜ்பாய்
தான் என்ற தவறான தகவல் பரவுகிறது!

மெஜாரிட்டி இல்லாத வாஜ்பாய் அரசு
ஜனாதிபதி வேட்பாளராக பைரோன் சிங்
செகவாத் என்ற ஆர் எஸ் எஸ காரரை
அறிவிக்கதான் முனைப்பு காட்டியது!
காங் ஆதரிக்காது! தோல்வி ஏற்படும்
என கருதி பின்வாங்கி திணறியது!

அன்றைய தே ஜ கூட்டணியில்
மெஜாரிட்டி எம் பிக்களை வைத்திருந்த
சந்திரபாபு நாயுடுதான் அப்துல்
கலாமை தேர்வு செய்தார்!

காங் முழு மனதோடு ஏற்று
கொண்டது! அரை மனதோடு
வேறு வழியில்லாமல் ஏற்று
கொண்டது வாஜ்பாய் அரசு!

-Padithurai Pandi