Saturday, April 1, 2017

இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக வாக்களிக்க மறுத்தது எங்கள் மகிழ்ச்சியை உடைத்தது.

இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம்
குறித்து பாலஸ்தீன தலைவர்களும்
மக்களும் மகிழ்ச்சியடைந்தனர், ஆனால்
இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக
வாக்களிக்க மறுத்தது எங்கள்
மகிழ்ச்சியை உடைத்தது.

எங்களைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு
சிறப்பான இடம் உண்டு. எனவே இந்தியா
வாக்களிப்பிலிருந்து விலகியது இந்தியா
அதன் மரபான நிலைப்பாட்டிலிருந்தும்,
கொள்கையிலிருந்தும் விலகியுள்ளதாகவே
எங்களுக்கு தெரிகிறது. பாலஸ்தீனம்
குறித்த இந்தியாவின் நிலைப்பாடு 70
ஆண்டுகளாக மாறாமல் இருந்தது.

இந்திய-பாலஸ்தீன உறவுகள்
காலனியாதிக்கத்துக்கு எதிரான பரஸ்பர
நம்பிக்கை, புரிந்துணர்வில் நட்புறவாக
இருந்து வந்தது. அதிகாரத்தில் என்ன
அரசியல் பண்புகள் இருந்தாலும் பாலஸ்தீனத்துடனான இந்திய உறவு
பலமாகவே இருந்தது.

இஸ்ரேலுடனான இந்தியாவின் ராணுவ
உறவுகள் குறித்து நாங்கள் எங்கள்
கவலைகளை வெளியிட்டு வந்தாலும்,
பாலஸ்தீனம் குறித்த தங்கள் நிலைப்பாடு
மாறாது என்று இந்தியா எப்போதும்
உத்தரவாதம் அளித்து வந்தது. தற்போது
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில்
வாக்கெடுப்பிலிருந்து விலகியதன்
மூலம் இந்தியாவின் அயலுறவுக்
கொள்கையின் மாறாத அடிப்படையான
அணி சாராத் தன்மை தற்போது
அதனிடமிருந்து விடைபெற்றுள்ளது.

இந்தியா விலகியது சிறிய பாதை
விலகலாகவே நாங்கள் கருதுகிறோம்.
இது உலகின் அடக்கப்பட்ட மக்களுக்கான
இந்தியா அளித்து வரும் இத்தனையாண்டு
கால ராஜீய வரலாற்றை இப்போதைய
இந்திய விலகல் பிரதிபலிக்கவில்லை
என்றே இன்னும் நம்புகிறோம். இது ஒரு
முறை நிகழும் நிகழ்வே, இந்தியாவின்
இந்த நிலைப்பாடு நிரந்தரமல்ல என்றே
நம்புகிறோம்.

- இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர்
அத்னான் அபு அல்ஹைஜா தி ஹிந்து
பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் ஆக்கம்.

ஒரு தலித் பெண்ணை முஸ்லிம் ஒருத்தன் கடத்திட்டு போய்டான்

எப்போதும் எங்கள் குடிசையை கொளுத்தி, குடியை கெடுப்பவனுங்க ஆம்பூர் சம்பவத்துல தீடீர்னு பாசக்காரனுன்களாயிட்டானுங்க.

ஒரு தலித் பெண்ணை முஸ்லிம் ஒருத்தன் கடத்திட்டு போய்டான், தலித் போராளிகள் எங்கே காணாமல் போய்டாங்கனு ஒரே பாசப் பொங்கல்.

இப்போ தலித் பெண் பவித்ரா, ஷமில் என்னை கடத்தவில்லைனு சொல்லுறா. ஆனா நம்ம திடீர் பாசகாரனுங்க இதப்பத்தி பேசாமல், பவித்ராக்கு எத்தனை காதலர்கள்னு அடுத்தக்கட்ட நரி ஆராய்ச்சி நடத்த ஆரம்பிச்சிட்டானுங்க.

-Viji Ambedkar

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கல்லீரல் மிகக் கடுமையான பாதிப்படைந்திருக்கிறது

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு
கல்லீரல் மிகக் கடுமையான
பாதிப்படைந்திருக்கிறது என்றும்,
உடனடியாக அவருக்குக் கல்லீரல் மாற்று
அறுவை மருத்துவம் செய்யப்பட
வேண்டும் என்றும் நம்பத்தகுந்த
அரசுத்தரப்பு மருத்துவர்களிடம் இருந்து
செய்தி.

குறுகிய கால இடைவெளியில் அவர்
சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவுக்குக்
கொண்டு செல்லப்படலாம் என்றும்,
அவரது ஏனைய உடல் உள்ளுறுப்புகள்
மிகச் சிறந்த செயல்பாட்டுடன்
இல்லாததால் கல்லீரல் மாற்று அறுவை
மருத்துவம் மிகவும் சிக்கல் நிரம்பியதாக
இருக்கக் கூடும் என்றும் மருத்துவர் குழு
கவலை தெரிவித்திருக்கிறது.

அரசியல் மற்றும் கொள்கை வழியிலான
முரண்பாடுகளைக் களைந்து தமிழக
மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்
பிரதிநிதி என்கிற வகையில் தமிழக
முதல்வர் சிறந்த மருத்துவ வசதிகளைப்
பெற்று வெகு விரைவில் நலம் பெற
வேண்டும் என்று வாழ்த்துவோம்.

-Arivazhagan Kaivalyam

இத்தகைய குறுநில ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க, இந்தியா எனும் பெரிய தாதாவிடம் இருப்பதுதான் இப்போதைக்கு தமிழ்நாட்டுக்கு நல்லது.

இனவாதம் , சாதிப்பெருமை, Phylogenetic
analysis of caste பேசும் அன்புமணி போன்ற
ஆட்கள் எப்படி வெக்கமே இல்லாமல்
Anbumani for 4 CM என்று பேசமுடிகிறது
என்று தெரியவில்லை. ஒருவேளை
முதல்வர் என்ற பதவி சாதி சங்கங்களுக்கு
மட்டும் தலைவராக இருப்பதால்
கிடைக்கக்கூடியதா என்ன ? .

எனது சாதி மட்டுமே உயர்ந்தது,
பிறிதெல்லாம் கேவலபட்ட சாதிகள் என்று
நேரடியாகவும் மறைமுகமாகவும் பல
சந்தர்ப்பங்களில் பேசிவரும் கட்சி ,
சாதீய படுகொலைகளை கவுரவக்
கொலைகள் என்று oxymoronனாக
குறிப்பிடும் Moron கள் நிறைந்த கட்சி ,
இனக்கலப்பு என்பது சாதிக்கு ஏற்பட்ட
அச்சுறுத்தல் என்று வெளிப்படையாக
முன்மொழியும் கட்சி நூற்றுக்கும்
அதிகமான சாதிகள் இருக்கும் மாநிலத்தை
ஆளப்போகிறோம் என்று சொல்வது ,
ஆமாடா நாங்க தான் உங்களை ஆள
வேண்டியவர்கள் என்று பிற சாதிகளுக்கு
விடும் நேரடி நக்கல் என்று எடுத்துக்
கொள்ளலாமா ?

தங்கள் சாதி ஆட்கள் அதிகம்
இருக்கிறார்கள் என்பதற்காக தமிழ்நாட்டை
இரண்டாக பிரிக்கவேண்டும் என்றெல்லாம்
உளறிக்கொட்டிய கட்சி எந்த அடிப்படையில்
இப்படி ஆட்சி அமைப்போம் என்று
சொல்கிறது ?

சாதீய படுகொலைகளை தற்கொலைகள்
என்று சொல்லும் வேடதாரிகள், என்
இனத்துப் பெண்கள் வேறு இனத்து
ஆட்களை மணந்தால் அவர்களையும்
வெட்டுவோம் என்று கொக்கரிக்கும்
ஆட்கள் , இங்கே எவன் செத்தாலும் கவலை
இல்லை ஈழத்தில் செத்தவனுக்கு மட்டுமே
என் ஒப்பாரி என கள்ள மவுனம் காக்கும்
ஆட்கள், பிராமணனை மட்டும் திட்டிவிட்டு
மாணவர்கள் மத்தியில் பரவும் சாதிக்
கயறு கலாசாரத்தை கண்டுக்க வக்கு
இல்லாதவர்கள் , இவர்கள் எல்லாம் தான்
தனி தமிழ்நாடு வேண்டும் என்று அடம்
பிடிப்பவர்கள்.

கூட்டு முயற்சியாக உருவெடுக்கவேண்டிய
தனி தமிழ்நாட்டு முன்னெடுப்புகள்
எல்லாவற்றிற்கும் மிகப்பெரிய தடைக்கல்லாக
இருக்கும் இவர்கள் , இவர்களது சாதி
வெறி அடியாட்கள் எல்லாரும் ஒருமித்த
குரலில் " தனி தமிழ்நாடு வேண்டும்" என்று
சொல்வது சமீபத்திய காலத்தின் ஆகச்
சிறந்த நகைமுரண்.

"தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும்"
என்ற கோஷத்தில் இருக்கும் சுருதி
குறைந்து தமிழ்நாட்டை வன்னியன் ஆள
வேண்டும், தமிழ்நாட்டை தேவன் ஆள
வேண்டும், தமிழ்நாட்டை நாடார் ஆள
வேண்டும் என்று திரிந்துபோவது கண்கூடு.
உண்மையில் தமிழன் என்ற சொல்
அர்த்தமற்றுப் போகும் அளவுக்கு இந்த
சாதி மட்டுமே தமிழன் என்ற வரையறையை
இத்தகைய ஆட்கள் தொடந்து முன்வைத்து
வருகிறார்கள்.இவர்கள் பேசும் தமிழ்
தேசியமானது , பார்ப்பனீயத்தை எல்லாம்
விஞ்சும் சாதிவெறி உணர்வு என்பது
நனிவிளங்கும்.

இத்தகைய குறுநில ரவுடிகளிடம் இருந்து
தப்பிக்க, இந்தியா எனும் பெரிய
தாதாவிடம் இருப்பதுதான் இப்போதைக்கு
தமிழ்நாட்டுக்கு நல்லது.

-UmamaheshVaran Lao Tsu

திராவிடர் என்று கேரளா கர்நாடக ஆந்திர காரன் யாரூமே சொல்லலியே ஏன்?

திராவிடர் என்று கேரளா
கர்நாடக ஆந்திர காரன்
யாரூமே சொல்லலியே ஏன்?
- ஆர்வக்கோளாறுகள்..

தமிழ்தான் திராவிடமொழியில்
மூத்த மொழி, அதிலிருந்து
தான் நமது மொழியான
கன்னடம், மலையாளம் போன்ற
மொழிகள் தோன்றின எனபதை
அவன் ஏற்றுக் கொண்டால்,
நாம் தமிழருக்கு கீழ்தான்
என்ற உண்மையை அவன்
ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும்.

அப்படி ஏற்றுக்கொள்வதை
அவன் தனக்கு ஏற்பட்ட
அவமானமாக கருதுகிறான்.
அதனால்தான் அவன்
திராவிடத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவன் ஏற்றுக்கொள்ளாமல்
இருப்பதற்கு அவன் தரப்பில்
நியாயமான காரணம் இருக்கிறது.

ஆனால் நாம் ஏற்றுக்கொள்ளாமல்
இருப்பதற்கு சாதி வெறியை
தவிர, வேறு என்ன இருக்கிறது.

ஆதலால் நான் திராவிடன்
என்று சொல்வது தமிழர்களான
நமக்கு பெருமையே தவிர,
எக்காலத்திலும் சிறுமை இல்லை.

ஆதலால் நான் திமிருடன்
சொல்வேன், "நான் திராவிடனென்று"

-திராவிடப் புலி

ஆழமான ரணங்ளையும், நீண்ட ஆறாத வடுக்களையும்தான் ஏற்படுத்தும்.

இந்திய அரசும், இந்திய நீதிதுறையும், தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக, திட்டமிட்டு நிகழ்த்தி வரும் வன்முறைகளின் குரூர தன்மை நாளுக்கு நாள் புதிய பரிமானங்களை அடைந்து வருகின்றது.

சமீபத்திய உதாரணம், யாகூப் மேமன். தன் மீதான 'கரை'யை துடைக்கும் பொருட்டு, தனது பெற்றோர், மனைவி மற்றும் 40 நாள் 'கைக்குழந்தை'யோடு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து, தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்மந்தமில்லை என்பதை நிருபிக்க
தானாக முன்வந்து சரண் அடைந்தவரை அவரது பிறந்த நாளன்று குரூரமாக தூக்கிலிட்டு கொன்றுள்ளது.

இவ்வளவு அநீதிகளுக்குப் பின்பும் இந்திய முஸ்லீம்கள் இந்திய நீதித்துறையின் மீது வைத்திருக்கும் அப்பாவித்தனமான, ஏமாளித்தமான நம்பிக்கை அபாரமானது.

பன்மை தன்மை கொண்ட ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கௌரவமும், இருப்பும் தொடர்ந்து திட்டமிட்டே கேலிக்குறியதாகவும், கேள்விக்குறியதாகவும் ஆக்கப்படும்போது அது ஆழமான ரணங்ளையும், நீண்ட ஆறாத வடுக்களையும்தான் ஏற்படுத்தும்.

-மு.செ.பாதுஷா