Wednesday, August 9, 2017

கலைஞர் மட்டும் பலமனைவி கொண்டவராகவும் எம் ஜி ஆர் பொன்மனச்செம்மலாகவும் அறியப்பட்ட பொதுப்புத்தியின் உளவியல்

Joe Milton
Via Facebook
2017-08-09

தன்யா என்ற பத்திரிகையாளருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் நடக்கும் அக்கப்போருக்குள் போக விரும்பவில்லை . அதை தொடர்ந்து இந்த அம்மையார் கலைஞர் மீது காழ்ப்புணர்வை கொட்டிய பழைய டிவீட்டுகளை சிலர் பகிர்ந்ததால் படிக்க நேர்ந்தது . அதில் பல கலைஞரின் மூன்று மனைவி வாழ்க்கையை முன்வைத்து மிகக் கேவலமாக பகடி செய்வதாக இருந்தது . 

இதை இவர் மட்டும் செய்யவில்லை . ஒருவருக்கு எத்தனை மனைவிகள் , அவர் அதை ஏன் செய்தார் , அவர்கள் வாழ்க்கை என்ற தனிப்பட்ட விடயங்களை வைத்து பொதுவாழ்வின் தகுதி பேசும் அபத்தத்தை எல்லாம் தாண்டி எனக்கு பலமுறை தோன்றியது வேறொன்று .

கலைஞரின் முதல் மனைவி ஒரு மகனை பெற்றெடுத்து பின்னர் இளம் வயதிலேயே இறந்து விடுகிறார் . எம்.ஜி.ஆரின் முதல் மனைவியும் அதே போல (அவருக்கு ஒரு குழந்தை கருவுற்று இறந்து விட்டது என சொல்வாரும் உண்டு) இளம் வயதிலேயே இறந்து விடுகிறார் . கலைஞருக்கு இரண்டாம் திருமணம் ஆகி குழந்தைகள் பிறக்கிறது . எம் .ஜி . ஆருக்கும் இரண்டாம் திருமணம் ஆகிறது .  இரண்டாம் மனைவியோடு வாழ்ந்து வந்த கலைஞர் தன்னோடு நாடகத்தில் நடித்த ராசாத்தியை மூன்றாவது மனைவியாக்கிக் கொள்கிறார் . அதே போல இரண்டாம் மனைவியோடு வாழும் போதே தன்னோடு சினிமாவில் நடித்த ஏற்கனவே மணமான ஜானகியை எம் ஜி ஆர் மணந்து கொள்கிறார் . பின்னர் இரண்டாவது மனைவி இறந்தார் , ஜானகியை தாண்டிய வரலாறெல்லாம் விட்டுவிடுவோம் .

இதில் கலைஞர் மட்டும் பலமனைவி கொண்டவராகவும் எம் ஜி ஆர் பொன்மனச்செம்மலாகவும் அறியப்பட்ட பொதுப்புத்தியின் உளவியல் காரணம் என்ன ?

Tuesday, August 8, 2017

ஔரங்கசீப் கோயில் இடித்தார்

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது.

ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட
ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை.

இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள்.

விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு.

நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?

ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

முனைவர் அ. தஸ்தகீர்.(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)

ஆதாரம்:
பிஷம்பர்நாத் பாண்டே,
'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'
Page : 70,71

இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

P.N.Pande

“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”

P.N.Pande,
Islam And Indian Culture,
Page 55

பெண் நபி ஏன் இல்லை?

பெண் நபி ஏன் இல்லை?
எனக் கேட்ட ஹெஜ்.ஜி. ரசூல் உள்ளிட்ட பொதுவுடமை கட்சியினருக்கு.....!

கேள்வி : ஏராளமான நபிமார்களை (ஆண்களை மட்டும்) தேர்ந்தெடுத்து இவ்வுலகத்திற்கு இறைவன் அனுப்பியுள்ளான் என்கிறது உங்கள் மதம். அப்படியென்றால் நபியாக ஒரு பெண்ணைக் கூட தேர்ந்தெடுக்கவில்லையே ஏன்? அல்லது ஒரு பெண் நபியாக வருவதில் உங்கள் இறைவனுக்கே உடன்பாடில்லையா? இப்படியிருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு உங்கள் மதத்தில் தான் சம உரிமை இருக்கிறது என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? என்று வாதிடுபவர்களுக்கு.....!

பதில் :
( நபியே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! (அல்குர்ஆன் 16:43, 22:07)

இவ்விரு வசனங்களும் ஆண்கள் தாம் நபிமார்களாக அனுப்பப்பட்டனர் என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாத வார்த்தைகளால் அறிவிக்கின்றன. 12:109 வசனமும் இதே கருத்தைக் கூறுகின்றது.

மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஆண்களாகவே அனுப்பப்பட்டனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
எனவே பெண் நபிமார்கள் அனுப்பப்படாததன் காரணங்களை அறிந்து கொள்வதற்கு முன் ஆன்மீகத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் பெண்களில் நபிமார்கள் - இறைத் தூதர்கள் அனுப்பப்படாததற்கு பெண்களை மட்டம் தட்டுவது தான் காரணம் என்று சிலர் கூறுகின்றனர்.

பல்வேறு மதங்களில் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடைவதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பொருத்த வரை இத்தகைய பாரபட்சம் ஏதும் இல்லை என்பதை திருக்குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது.

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்ற தைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்ட வராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழை வார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.
(அல்குர்ஆன் 40:40)

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:124)

ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச்செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம். (அல்குர்ஆன் 16:97)

உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) (அல்குர்ஆன் 3:195)

நல்லறங்கள் மூலம் உயர் நிலையை அடைவதிலும் அதற்கான பரிசுகளை இறைவனிடம் பெறுவதிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இறைவன் எந்தப் பாரபட்சமும் பார்ப்பதில்லை என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.

குறைவான நல்லறம் செய்த ஆணை விட நிறைவான நல்லறம் செய்த பெண் இறைவனிடம் உயர்ந்தவளாவாள். ஆணா பெண்ணா என்று கவனித்து மறுமையில் பரிசுகள் வழங்கப்படுவதில்லை. நடத்தைகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

எனவே ஆன்மீக நிலையில் பெண்கள் தகுதியற்றவர்கள் என்பதற்காக பெண்களில் நபிமார்கள் அனுப்பப்படுவது தவிர்க்கப்படவில்லை என்பதை இதிருந்து அறியலாம்.

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண் களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள் ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூயையும் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன் 33:35)

இதற்கு நிகரான ஒரு பிரகடனம் உலகில் எந்த மதத்தின் வேத நூல்களிலும் காண முடியாது. ஆண் பெண் என அல்லாஹ் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதற்கு இதுவும் சான்றாகவுள்ளது.

இறைவனிடமிருந்து செய்தியைப் பெறுவதற்கும், இறைச் செய்தி கொண்டு வரும் வானவரைச் சந்திப்பதற்கும் பெண்கள் தகுதியற்றவர்கள் என்பதால் இறைவன் பெண்களில் நபிமார்களை அனுப்பாமல் இருந்திருப்பானோ என்றால் அதுவும் இல்லை.

மூஸா நபியின் தாயாருக்கு ஒரு செய்தியைத் தன் புறத்திருந்து இறைவன் அறிவித்துள்ளான் என்பதை 20:38, 28:7 ஆகிய குர்ஆன் வசனங்களில் காணலாம்.

ஈஸா நபியின் தாயார் மர்யம் (அலை) அவர்களிடம் ஜிப்ரீல் எனும் வானவர் வந்ததையும் இறைக் கட்டளையைத் தெரிவித்ததையும் குர்ஆன் 19:17 வசனத்தில் காணலாம்.

இன்னும் சொல்வதாக இருந்தால் ஒருவன் உண்மையான முஸ்லிமாக வாழ விரும்பினால் அவன் கடந்த காலத்தில் வாழ்ந்த இரண்டு நபர்களைப் போல் வாழ வேண்டும். அவ்விருவர் தான் முஸ்லிம்களுக்குரிய முன் மாதிரிகளாவர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அவ்விருவரும் பெண்களாவர்.

என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பா யாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன் உதாரணமாகக் கூறு கிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்.
(அல்குர்ஆன் 66:11, 12)

உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஆன்மீகத்தில் முன் மாதிரிகளாக இரண்டு பெண்களையே இறைவன் குறிப்பிடுகிறான் என்றால் பெண்கள் ஆன்மீகத்தில் ஆண்களுடன் போட்டியிட்டு அவர்களையும் மிஞ்ச முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அப்படியானால் பெண்கள் நபிமார்களாக அனுப்பப் படாதது ஏன்? இக்கேள்விக்கு விடை மிக எளிதானது.

இறைத்தூதர்கள் என்ற பொறுப்பை, தகுதியை நிர்ணயிக்கும் விவகாரமாக மட்டும் பார்க்கிறார்கள். உண்மையில் இறைத்தூதுப்பணி என்பது மிகவும் கடினமான பொறுப்பாகும். இப்பொறுப்பை நிறைவேற்றுவது ஆண்களில் கூட அனைவராலும் சாத்தியமாகாதது. இறைத்தூதராக அனுப்பப்பட்டவர்கள் அன்றைய சமூகத்தில் இருந்த அத்தனை கொள்கை கோட்பாடுகளையும் தனியொருவராக நின்று எதிர்க்க வேண்டும்.

· அவ்வாறு எதிர்க்கும் போது கொல்லப்படலாம்!

· நாடு கடத்தப்படலாம்.

· கல்லெறிந்து சித்ரவதை செய்யப்படலாம்!ஆடையைக் கிழித்து நிர்வாணப்படுத்தப்படலாம்.

· இன்னும் சொல்லொண்ணாத் துன்பங்களை அவர்கள் அனுபவித்து ஆக வேண்டும்.

பெண்களாக இருந்தால் இவை அனைத்துக்கும் மேலாக அவர்களிடம் பாலியல் பலாத்காரம் செய்து மேலும் துன்புறுத்துவார்கள்!

ஒட்டுமொத்த சமுதாயத்தையே தன்னந்தனியாக களத்தில் நின்று எதிர்ப்பதால் ஏற்படும் சிரமங்களை எந்தப் பெண்ணாலும் நிச்சயம் தாங்கிக் கொள்ளவே முடியாது.

இன்றைக்குக் கூட உடலுக்கு அதிக வேதனை தராத பணிகளில் தான் பெண்கள் நாட்டம் கொள்கிறார்களே தவிர பாரம் இழுக்கவோ, மூட்டை தூக்கி இறக்கவோ பெண்கள் போட்டியிடுவதில்லை. விரும்புவதுமில்லை. இறைத்தூதர்கள் என்ற பணி இதை விட பல ஆயிரம் மடங்கு கடினமான பணியாகும்.

பெண்களை இழிவு செய்வதற்காகத் தான் இப்பொறுப்பு வழங்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறு என்பதை மேலே நாம் எடுத்துக்காட்டிய சான்றுகள் சந்தேகமற நிரூபிக்கும்.

------------------------------------------------------------
சகோதரர் பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து..!

Sunday, August 6, 2017

பணம் என்பது போகும் போதுதான் மொத்தமாகப் போகும். வரும் போது சிறுகச் சிறுகத்தான் வரும

ரீ ரிலீஸ்தான். ஆனால் மனிதர்களைப் பற்றிய கதை என்பதால் இது மீண்டும் உதவக்கூடச் செய்யலாம்.

அவரது பெயரை எக்ஸ்மேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உண்மையான பெயரெல்லாம் ‘எதுக்குங்க’ ஒற்றை வரியில் மறுத்து விட்டார். ஒரு ஊதாரி இளைஞனாகத்தான் அவரைச் சந்தித்தேன். அவரிடமிருந்து மீண்ட போது, செய்யும் தொழில் சம்பந்தமாகவும் அதை மேலெடுத்துச் செல்வது குறித்தும் தெளிவான புரிதல்கள் கிடைத்தன. எப்போதுமே மேனேஜ்மெண்ட் தியரிகளை விழுந்து விழுந்து படிக்கிறோம். ஆனால் உடன் வாழ்பவர்கள் பலர் அதையெல்லாம் அறியாத ஒழுங்கை தொழிலில் காட்டிக் கொண்டிருக்கும் விதத்தை மெச்சுவதே இல்லை. அப்படித்தான் எக்ஸ்மேன் வாழ்க்கையையும் எடுத்துக் கொள்ள முடிகிறது.

எக்ஸ்மேன் நீலகிரி மலையைச் சேர்ந்தவர். அவர் சின்ன வயதாக இருக்கும் போது, கருவாடு லோடு அடித்ததற்காகத் தண்டிக்கப்பட்டு மலையை விட்டு இறங்கியிருக்கிறார். கருவாடு லோடு அடித்ததெல்லாம் ஒரு குத்தமாய்யா என்றுதான் நானும் கேட்க நினைத்தேன். அது வேறொன்றுமில்லை. அந்தக் கால அம்பாசிடரில் எக்ஸ்மேன் க்ளீனர் வேலைக்குப் போயிருக்கிறார். அம்பாசிடரில் க்ளீனரா என்பதும் இன்னொரு கேள்வி. ஆனாலும் உதவியாளர் என்று எடுத்துக் கொள்வோம். காரின் உரிமையாளருக்குத் தெரியாமல், செத்துப் போன பிணங்களை அதிகக் காசிற்காக அமர்த்திக் கொண்டு வருவதற்குப் பெயர்தான் கருவாடு லோடு.

தேயிலை லோடெல்லாம் அம்பாசிடருக்குள் அடிக்க முடியுமா என்ன? கூடுதல் காசென்றால் முன்னூறு நானூறு ரூபாய் அவ்வளவுதான். ஒருநாள் ஓனர் இதைக் கண்டுபிடித்து விட்டார். அடித்துத் துரத்தி விட்டார். வீட்டுக்குப் போனால் அங்கேயும் அடி. வெறுத்துப் போன எக்ஸ்மேன் மலையிலிருந்து தரைக்கு இறங்கி விட்டார். யாரும் அவரைத் தேடவில்லை என்பதிலிருந்தே மலையில் அவருக்கு இருந்த முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

கீழே வந்தவர் லாரியில் க்ளீனராக வேலைக்குச் சேர்ந்தார். அந்த லாரியையே ஓட்டினார். அந்த லாரி உரிமையாளரின் தங்கையைத் திருமணம் செய்து கொண்டார். தன்னால் அதிகப்பட்சமாக ஐந்து நாட்கள் வரை தூங்காமல் வண்டியோட்ட முடியும் என்று சொன்ன போது நான் அசந்து விட்டேன். உழைப்பு உழைப்பு அதைத் தவிர அதற்கடுத்து அவர் எதையும் செய்யவில்லை. இரண்டு லாரிகள் ஆனது. மூன்று லாரிகள் ஆனது. இடையில் செங்கல் வியாபாரம் செய்தார். மணல் வியாபாரம் செய்தார். ஜல்லி வியாபாரம் செய்தார்.

அப்படியே நூல் பிடித்து மேலேறி கட்டிடக் காண்டிராக்டர் ஆனார். அவர் செய்த தொழில்களையெல்லாம் பட்டியலிட்டால், ஆயிரத்து ஐநூறு வார்த்தைகளைத் தாண்டி விடும். இரண்டு பெண் பிள்ளைகள். பேரப் பிள்ளைகளும்கூட வந்துவிட்டனர். மலையை விட்டு இறங்கிய பிறகு அவர் மீண்டும் மலையேறவே இல்லை. ஏதோ ஒரு வைராக்கியத்தில் சமதளத்திலேயே இருந்து கொண்டிருக்கிறார். ஏன் இந்த வைராக்கியம் என்றேன். அது இல்லாமல் இருந்தால் நான் இந்த இடத்தில் இருந்திருக்கவே மாட்டேன் என்றார் புன்னகையுடன். எப்போது இந்த சபதத்தை முடிக்கப் போகிறீர்கள் என்றேன். நான் செத்த பிறகு என்னையும் கருவாட்டு லோடு அடித்து மேலே கொண்டு போனவுடன் சபதம் முடிந்துவிடும் என்று சொல்லிவிட்டு அடர்த்தியாகச் சிரித்தார். என்னிடம் சொல்வதற்கு எதுவும் வார்த்தைகள் இல்லை.

இந்த நிமிடத்தில் அவர் சில பல கோடிகளுக்கு அதிபதி. ஆனாலும் அவர் அலுவலகத்தில் இன்னமும் வாட்டர் கேன் விற்றுக் கொண்டிருக்கிறார். வீட்டில் இருப்பவர்கள் தடுத்துப் பார்த்து விட்டார்கள். யார் பேச்சையும் கேட்பதில்லை. இன்னமும்கூட சில சமயங்களில் அவரே டூவிலரில் வைத்து தண்ணீர் கேன் போடப் போகிறார். என்னாச்சு இந்த மனிதருக்கு? ஒரு கேனுக்கு எட்டு ரூபாய் கிடைக்குமா என்றேன். எட்டு ரூபாய் உங்களுக்குச் சாதாரணமாகப் போய்விட்டதா என்று கோபமாகக் கேட்ட அவர் தன்னுடைய உபதேசத்தை ஆரம்பித்தார். “பணம் என்பது போகும் போதுதான் மொத்தமாகப் போகும். வரும் போது சிறுகச் சிறுகத்தான் வரும். மலையே ஆனாலும் உட்கார்ந்து உடைத்துச் சாப்பிட ஆரம்பித்தால், சில வருடங்களிலேயே தின்று முடித்து விடலாம்” என்றார். யோசித்துப் பார்த்தேன். ஊதாரித்தனம் உறைத்தது. அவரிடம் பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாய் அமைதியாய் அமர்ந்திருந்தேன்.

கருவாட்டு லோடு அடித்த மனிதர் தன்னுடைய வாழ்க்கையில் ஒருவட்டம் அடித்து நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார். ஆனாலும் ஓட்டத்தை நிறுத்தவில்லை. அவர் ஓட்டத்தை நிறுத்துகிற அன்றைக்கு அவரைத் தூக்கிக் கொண்டு கருவாடு லோடு அடிக்கும் பாக்கியம் கிடைத்தால் மகிழ்வேன்.

Thursday, August 3, 2017

இயக்கவாதிகளின் ஒழுங்குகள்

Devi Somasundaram
Via Facebook
2017-08-03

கோடு தாண்ட கூடாதா ராமன்கள், இயக்கவாதிகள்.

அதென்ன ராமன்களுக்கு மட்டும்னு கேட்கலாம். சீதைகளுக்கு தான் ஏகப்பட்ட கோடுகள் ஏற்கனவே இருக்கே மேலும் இயக்கவாதிகளில் ஜெண்டர் பார்க்க தேவை இல்லைன்னும் எடுத்துகலாம். *ஒரு இயக்கவாதி இப்படி தான் இருக்கனும் என்ற கட்டுபாடுகள் உண்டா என்றால், ஆம் உண்டு*

*இயக்கம் என்பது என்ன?*

மக்கள் என்பவர்கள் சாதாரண சமுக குழு. அவர்கள் மீதான ஆதிக்கத்தை எதிர்க்க  வலுவற்ற  சாமன்யர்கள்.அவர்கள் உரிமைகாக, விழிப்புணர்வுகாக அமைப்பை எதிர்த்து போரடுவதும்,செயல்படுவதும்  தான் இயக்கம்.. 

இயக்கவாதிகள் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற இயக்கத்தின் கட்டுபாடுகள் தாண்டி தனி மனிதனாக ஒரு இயக்கவாதியின் பொறுப்பு

1) அவரது பொருளாதார நாணயம்.
2) அவரது ஒழுக்க நாணயம்.
3) அவரது நேர்மை.

இவை ஒவ்வொரு இயக்கவாதியும் கட்டாயம் கடை பிடித்தே ஆக வேண்டியவை.

 *ஏன் இயக்கவாதி பொருளாதார நேர்மையுடன் இருக்கனும்.?*

போராட்டத்தின் மூலம் எதிர்க்க படும் அமைப்பின் வலிமை நேர்மையால் தான் எதிர்க்க பட இயலும். நேர்மையற்ற இயக்கவாதி பாஸிஸத்திற்கு விலை போக வாய்ப்புண்டு. இரண்டாவது மக்கள் நம்பிக்கை பெற நேர்மை மிக முக்கியம்.

எற்கனவே  பாஸிஸ அடக்கு முறைக்குள் சிக்கிய மக்கள் தங்கள் நம்பிக்கைகாக ஒருவரை சந்தேகத்தோடு அணுக முடியாது. அவரது நாணயமற்ற தன்மை அவர் மீதான நம்பிக்கை உடைத்தால் அது இயக்கத்தின் தோல்வியாக கூடும்.
  
*இவை தவிர்த்து சாதாராண மக்களுடன் பழகும் போது இயக்கம் குறித்த கடுமை தன்மை வெளிபடுத்த கூடாது*

உதாரணமா  ஒரு பிரபல இயக்க வாதி சொன்னதை  பார்க்கலாம் "போராட்டத்தின்  மீட்சியை  ஒரு போராளி வெளிபடுத்த கூடாது, அது இளம் போராளிகள் மனதில் அச்சத்தை உருவாக்கும். கைது, போலிஸ், சித்ரவதை, அடி, வலி இவற்றை  போராளி வெளியில் சொல்லவே கூடாது. இளம் தலைமுறை மனதில் அச்சம்  ஏற்படுத்தும். அதே நேரம் போராட்டத்தின் விளைவை சொல்லி கொண்டே இருக்கனும். இந்த உரிமை இந்த போராட்டத்தால் தான் கிடைத்தது என்பதை சொல்லனும். அது போராட வேண்டும் என்ற ஆர்வத்தை இழந்தவனிடம் ஏற்படுத்தும்.

*பொது வெளியில் ஒரு இயக்கவாதின் பொருமை எல்லை மீறவே கூடாது*

ஆயிரம் பேர் கூடி இருக்கும் இடத்தில் அடிச்சுட்டாங்கன்னு சத்தம் வந்தா உடனே ரியாக்ட் செய்ய கூடாது. அது வன்முறையை கட்டவிழ்த்து விடும். மேலும் தடுமாறும் கூட்டத்தை கட்டு படுத்த தெரியனும். நிதானமும், அடுத்து என்ன செய்யனும் என்ற திட்ட மிடலும் தான் இயக்கவாதியாய் இருப்பவன் அறிதல் .

*எந்த சூழலிலும் இயக்க தலைமைகளை தனிபட்ட ரீதியில் விமர்சிக்க கூடாது*

இயக்க சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தான் குற்றம் சாட்டனும். நம்  அறியாமை தலைமையை தாழ்த்தி விட்டால் அது இயக்கத்தின் அழிவை நிச்சய படுத்தி விடும்.

*எந்த அமைப்பை எதிர்க்கிறோமோ அதன் அமைப்பு தன்மையை மட்டுமே எதிர்க்கனும்*

சாதாராண மனிதர்கள் உங்க அம்மா யாரு அப்பா யாருன்னு தனி மனிதன் சார்ந்த எதிர்ப்பை எப்பொழுதும் செய்ய கூடாது. அது அமைப்பின் கருத்தியல் தோல்வியாய் முடியும்.

இவ்லோ பேசறியே நீ பெரிய அப்பா டக்கரான்னு கேட்டா... 5 வயசுலேர்ந்து அப்பா கைய புடிச்சுட்டு இயக்க கூட்டங்களில் நின்ற அனுபவத்தை இங்கே ஆவண படுத்தினேன். அவ்வளவே.

இவ்லோ பேசறியே நீ ஏன்  இயக்கவாதியா இல்லன்னு கேட்கலாம். சிம்பில்... இவ்லோ கட்டுபாடுகளை ஏற்கும் அளவு பொறுமை இல்லை.. 

இவை இறுதியானவை இல்லை..நான் அறிந்தவை மட்டுமே, மேலும் அறிந்தவர்கள் தொடரலாம்..

#இயக்கவாதிகள்..