Friday, August 11, 2017

மோசமான அரசியல்வாதிகளாக சித்தரிக்கப்படுபவர்கள

Anbe selva
Via Facebook
2017-08-11

​தினகரன், அமித் ஷாவைப் போல ஆள்கடத்தல், கொலை வழக்குகளின் சூத்திரதாரி அல்ல. லாலு பிரசாத், மோடியை போல இனப்படுகொலை செய்தவர் அல்ல, ஆ.ராசா, அத்வானி போல நாடுமுழுவதும் மதக்கலவரத்தை தூண்டியவர் கிடையாது,  உமாபாரதி அல்ல கனிமொழி,

ஆனாலும் இவர்கள்தான் இந்தியா முழுவதும் மோசமான அரசியல்வாதிகளாக சித்தரிக்கப்படுபவர்கள், அது எப்படி வயிற்றை கீறி உள்ளே இருக்கும் சிசுவை உருவும் கொடூர கலவரங்களுக்கு காரணமான அரசியல்வாதிகளை விட நிர்வாகத்தில் தவறிழைக்கும் அரசியல்வாதிகளை குற்றவாளிகளாக பார்க்க பழக்கப்படுகிறோம்..

இந்தியாவில் பாசிசம் குறித்தும் அது வளர்வதற்க்கு பார்ப்பனியத்தில்  இருக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து முதன் முதலாக கோட்பாட்டு ரீதியாக 1930 களில் எழுதியவர் எம்.என்.ராய்.

முதலாளித்துவ அரசுகளில் நிகழும் நிர்வாக தவறுகள் இல்லையென்றால் இத்தாலியில் பாசிசம் தானாக அழிந்து போயிருக்கும் என்கிறார்கள். ஊழல் நிர்வாக தவறுகளுக்கு எதிராக அதிமனித பிம்பங்களை கட்டமைத்தே பாசிசம் வளர்வதாக சொல்கிறார்கள்..

இத்தாலியில் முசோலினியால் அப்படி கட்டமைக்கப்பட்ட பாசிசம் சில ஆண்டுகளிலேயே நிர்வாக ரீதியாக  தோல்வியடைந்ததை ஒப்புக் கொண்டது வரலாறு, அதுதான் மோடியின் DEMONETIZATION க்கும் இப்போது நடந்திருக்கிறது..

பின் எந்த வகையில் இந்த கொலைகாரர்கள் நிர்வாக திறமை மிக்கவர்கள்?..

சமூகத்தில் உயர்வுதாழ்வு இருக்கவேண்டும், "மேன்மை" யானவர்களுக்காக மந்தமானவர்கள் கஷ்டப்படுவது  நியாயமானது என்றார் நீட்ச்சே ஜெர்மனியில், சாதி வர்ண பாகுபாடுகள் நியாயமானது  பிராமணர்களுக்கு பணிவிடை செய்வதுதான் சூத்திரர்களின் விதிப்பயன் என்கிறது பார்ப்பனீயம்..

நீட்சேவை நாஜிக்களின் தத்துவ குருவாக  பார்த்தார் ஹிட்லர்.  மனுஸ்மிருதியிடம் இருந்து தத்துவ வலிமைபெறும் ஆர்.எஸ்.எஸ் தான் மோடியின் குரு.. அதனால்தான் உலகில் மனுஸ்மிருதியை போல ஒரு சிறந்த நூலை பார்த்ததில்லை என்றார் ஹிட்லரின் குரு நீட்சே.

பார்ப்பனீயம் பாசிச வடிவமெடுப்பதும் இந்த அடிப்படையில்தான், இந்திய முழுவதும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை ஊதிப்பெருக்குவதின் பின்னால்தான் பார்ப்பனிய பாசிசம் தன்னை வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறது..

சரி இந்த கொலைகாரர்கள் அப்படியென்ன நிர்வாகத்தில் சிறந்தவர்களா என்றால், கடந்த 30 ஆண்டுகளாக பாஜக அரசியல் செல்வாக்கு செலுத்தும் பிஹார் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் தான் இந்தியாவின் பின்தங்கிய நோய்வாய்ப்பட்ட மாநிலங்களாக (BIMARU ) அறியப்படுகிறது,  எனில் இவர்கள் எப்படி நிர்வாகத்தில் சிறந்தவர்கள்?..

இந்தியாவின் மிகமோசமான அரசியல்வாதியாக  சித்தரிக்கப்படும் லாலுபிரசாத் தான்  இந்தியாவில் ரயில்வேயை முதன் முதலாக லாபத்தில் நடத்தியவர் எனில் அவர் மோசமான அரசியல்வாக சித்தரிக்கப்படுவதற்கு  ரதயாத்திரை சென்ற அத்வானியை சிறையிலடைத்ததைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்.

BSNL 2ஜி ஏலத்தில் பங்கெடுத்தும் அரசிற்கு ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி இழப்பு என்று இந்தியா முழுதும் எப்படி குதித்தார்கள், 4ஜி ஏலத்தில் பாஜக அரசு பங்கெடுக்கவே இல்லையே எவ்வளவு பெரிய இழப்பு யாராவது குதித்தார்களா?..

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழலைப் போல இந்திய வரலாற்றில் தொடர் கொலைகளை உடைய ஒரு கிரைம் ஊழல் நடந்திருக்கிறதா?..

சஹாராவின் சுப்ரதா ராய் உள்ளே கிடப்பதற்கும் மோடிக்கு லஞ்சம் கொடுத்ததாக உளறிக் கொட்டியதற்கும் சம்பந்தம் இல்லையா என்ன, சரி மோடி நிர்வாகத்தில் குராஜாத்தின் கதி என்ன?, 30 சதவீத கிராமங்கள் இன்னும் இருளில் மூழ்கித்தானே கிடக்கின்றன,

மோடியின் DEMONETIZATION நடவடிககிக்கு  முதல்நாள் அமித்சா தலைவராக இருக்கும் குஜராத்தின் கூட்டுறவு வங்கிகளுக்கு 500 கோடிகளுக்கு மேல் கைமாறிய குற்றச்சாட்டு எத்தனை பேருக்கு இந்த ஊடகங்கள் தெரியப்படுத்தின.

இவர்கள் எந்த காலத்திலும் நேர்மையிலும் நிர்வாகத்திலும் சிறந்தவர்கள் அல்ல, அவர்கள் ஆண்ட மாநிலங்கள் கூட    தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடைய இன்னும் 30 வருடங்கள் பிடிக்கும்..

பிறகெப்படி இவர்கள் நேர்மையான நிர்வாகத்திற்கு உரிமை கோருகிறார்கள், 30 ஆண்டுகளாக திட்டமிட்டு நடந்த போலியான வலிமையான பொய்யான பிரச்சாரத்தின் மூலமே  இந்த கருத்தை வளர்த்தெடுத்து இருக்கிறார்கள்..

இந்தியா முழுவதும் நிர்வாகத்திலும், நீதிமன்றங்களிலும், ஊடகங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனிய கூட்டமைப்பு திட்டமிட்டே இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது..

ஓயாமல் கத்தியிருக்கிறார்கள், தொய்வில்லாமல் தொடர்ச்சியாக கத்தியிருக்கிறார்கள் பார்ப்பனரல்லாத அரசியல்வாதிகள், பார்பனீயத்தால் ஆசீர்வதிக்கப்படாதா எல்லோர் மீதும் தொடர்ந்து இந்த கருத்தை கட்டமைத்து வந்திருக்கிறார்கள்.  

நாமும் கூட சங்கர் படங்களை ஹிட்டாக்கி ஒருவகையில் இதற்க்கு உதவி இருக்கிறோம்..
  
பாதி எரிந்த ஆயிரக்கணக்கான பிணங்களை கங்கையில் மிதக்க விட்டுவிட்டு கங்கையை சுத்தப்படுத்த பலகோடி ஒதுக்கும் முட்டாள்தனத்தை நோக்கி கேள்வி எழுப்பாமல் தெர்மோகோலை நோக்கித்தான் நாமும் கத்திக் கொண்டிருக்கிறோம். 

நம்முடைய மடத்தனம்தான் இப்போது எந்த கூச்சமே இல்லாமல் அவர்களை பாசிசத்தை நோக்கி தைரியமாக நகர வைக்கிறது.

ஊழல் என்பது இந்தியாவின் சிஸ்டமேடிக் காண பிரச்சினை, அதிலிருந்து எந்த அரசியல்வாதியும் தப்ப முடியாது, அனால் பாசிசம் அப்படியல்ல..

ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால் குறைந்த படீஸாஹ் ஜனநாயகம் உயிரோடு இருக்க வேண்டும், அனால் பாசிசதில் அதற்கும் வாய்ப்பில்லை, பாஜக வும் மோடியும் அதைத்தான் செய்துவருகிறார்கள்.. பார்ப்பனியத்தின் இறுதி இலக்கும் அதுதான்..

இவர்கள் காட்டும் தெர்மோகோலிடம் ஏமாறாமல் காவிகளின் கமலகுண்டலத்தை நொறுக்கமால் உயிர்பிழைக்க முடியாது.. 

  -Anbe selva

பார்ப்பனக் காதலியும் பார்பன எதிர்ப்பும்

Don Ashok
Via Facebook
2017-08-11

பார்ப்பனக் காதலி பற்றி கடைசியில் சொல்கிறேன். கண்முன் இருக்கும் பிரச்சினையில் இருந்து துவங்குவோம். மோடியின் துக்ளக் தர்பாரில் நடக்கும் இந்த 1000/500 ரூபாய் விசயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல், இந்தக் கொடுமையை இணையத்தில் ஆதரித்துப் பேசுகின்றவர்களில் 10க்கு 9பேர் பார்ப்பனர்கள். 

இரவு 9மணிக்கு மோடி பஞ்ச் டயலாக் பேசினால் 8மணி 59நிமிடத்தில், "ஆஹா ஓஹோ.. இதனால இந்தியா வல்லசரசு ஆயிரும். அதுவரைக்கும் பக்கத்து வீட்ல கடன் வாங்குங்க. கிட்னியை வைத்து சட்னி வாங்குங்க. ஜெய்ஹிந்த்," என்று வீடியோ போடுகின்றவர்கள் பார்ப்பனர்கள்தான். 

பூணூல் தெரிய சட்டை அணிந்துகொண்டு, "மோடி ரூபாய் நோட்டுக்குள்ள சிப்ஸ்சு வச்சிருக்காரு. சாட்டிலைட்டுகுள்ள கேக்கு வச்சிருக்காரு...," என வீடியோ போடுகின்றவர்கள் பார்ப்பனர்கள்தான்.  

"ஏழைங்க எல்லாம் எப்படி சில்லறை இல்லாமல், ரூபாய் நோட்டு இல்லாமல் சாப்பிடுவாங்க?" என யாராவது கேட்டால், "ரேஷன்ல அரிசி ஃப்ரீதானே? நாட்டுக்காக ரெண்டு நாள் பட்டினி கிடந்தா ஒன்னும் செத்துவிட மாட்டாங்க," என க்ரெடிட் கார்டு திமிரில் பதில் போடுகின்றவன் பார்ப்பானாகத்தான் இருக்கிறான்.

தேவர் ஜெயந்தி வந்தால் முதல் ஆளாக வாழ்த்து போடுவதுபோல அந்த சாதி இளைஞர்களை உசுப்பிவிட்டு குளிர்காயும் ஆள் பார்ப்பானாகத்தான் இருக்கிறான்.

இன்று மட்டுமல்ல, காலங்காலமாய் ஏழைப் பாழைகள், உரிமைக்காக போராடுபவர்கள், கல்விக்காக ஏங்குபவர்கள் இப்படி அனைவரையும் ஈவிரக்கமின்றி நசுக்க முற்படுபவர்களில் முதல் வரிசையில் நிற்பவர்கள் அவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

சரி இவர்கள் செய்யும் அநியாயத்தில் கொஞ்சமேணும் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

இடஒதுக்கீடு ஏதோ நாட்டையே கெடுப்பதுப்போல பொய்பேசும் இவர்கள் மேனேஜ்மண்ட் சீட்டுகள் இருப்பதை பற்றி என்றாவது பேசியிருக்கிறார்களா?

ஏழையிடம் பணம் பிடுங்குவதில் காட்டும் அக்கறையை ஏன் ஸ்விஸ் வங்கியில் குவிந்திருக்கும் கறுப்புப்பணத்தை பிடிங்குவதில் காட்டவில்லை மிஸ்டர்.மோடி என கேட்டிருக்கிறார்களா?

நீதிமன்றம் கேட்ட 500கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிய பணக்கார கடன்காரர்களின் லிஸ்டை ஏன் இன்னும் கொடுக்கவில்லை என யாராவது மோடியை கேட்டிருக்கிறார்களா?

நாய் மேல் காட்டும் பரிவை, காளைகள் மேல் காட்டும் பரிவை உடுமலை சங்கர்கள் மேல் காட்டியிருக்கிறார்களா? ஏதாவது சாதி ஒழிப்பு, மறுப்பு போராட்டங்களில் தென்பட்டிருக்கிறார்களா? அல்லது ஒரு கண்டனமாவது தெரிவித்திருக்கிறார்களா?  இட ஒதுக்கீட்டை ஒருபக்கம் திட்டினாலும், இன்னொருபக்கம் தலித்துகளுக்கு எதிராக 'இட ஒதுக்கீட்டுப்போராளி' அய்யா ராமதாஸ் ஒரு கூட்டத்தைக் கூட்டினால் நெய் ஊற்றி எரியவிட முதல் ஆளாக போய் அமர்ந்திருக்கிறார்கள்.

சரி. அப்படியே அவர்களில் யாராவது ஒருவன் மதவாதத்தை எதிர்த்து, மோடியை எதிர்த்து, அநியாயத்தை எதிர்த்து எழுதினால், "ஆஹா நமக்கொரு தோழன் கிடைத்துவிட்டான்," என நிமிர்வதற்குள், அவனும் அரேபிய ஆடுகளை ஏமாற்றிக் கூட்டிப்போய் யாக நெருப்பில் போடுகின்றவனாக அல்லவா இருக்கிறான்?

இவர்களுக்கு 3000 ஆண்டுகளாக சமூகப்படிநிலையில் ஆண்டு அனுபவிக்கும் தங்கள் இடத்தை காத்துக்கொள்ள சாதி வேண்டும்.  அதற்கு மதம் வேண்டும்.  அதற்கு அழகான பட்டு அங்கியாக தேசப்பற்று என்ற சொல்லாடல் வேண்டும்.  அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், செய்கிறார்கள்.

கேட்டால், முன்பு போல் இல்லை அவர்கள் எல்லாம் சாந்தசொரூபிகள் என்பீர்கள்.  தனியார் துறையில் வேலை பார்க்கும் எவனாவது ஒருவனை தன் டூவீலரிலோ, அல்ல கணிணியிலோ பெரியார் படத்தை ஒருமாதம் வைக்கச் சொல்லுங்களேன் பார்ப்போம்.  ஒன்பது ஓட்டைகளிலும் ரத்தம் வரும் அளவிற்கு வேலையைக் காட்டுவார்கள்.     திராவிட இயக்கம் ஆழ வேரூன்றியுள்ள தமிழகத்திலேயே இதுதான் நிலைமை.

எனக்கும் தேசப்பற்று உண்டு. தேசம் என்பது அந்த தேசத்தின் மக்கள் தானேயொழிய, தேசப்பற்று என்பது அந்த மக்களின் மீது நாம் கொள்ளும் பற்றுதானேயொழிய, தேசம் என்பது தனியாக வானத்தில் இருந்து குதித்தது இல்லை. ஒருநாளைக்கு நூறு ஜெய்ஹிந்த் சொல்லும் ஆட்களை விட எனக்கு தேசப்பற்று நிறையவே உண்டு.

சார். நான் சாதி எல்லாம் பார்ப்பதில்லை.  மக்கள் விரோதமாக எழுதும் கயவர்களாக பார்த்து கண்டிக்கிறேன்.  அவர்களில் 99% பேர் பார்ப்பனர்களாக இருப்பது என் தவறில்லை.

காதலியைப் பற்றி கேட்டீர்கள் அல்லவா? ஆம். சிறு வயதில் எனக்கொரு பார்ப்பனக் காதலி இருந்தாள்.  அவள் பத்து க்ரெடிட் கார்டுகள் வைத்துக்கொண்டு தேசப்பற்று பேசும் பெரிய பணக்காரி எல்லாம் கிடையாது. இந்நேரம் தன் குழந்தைகளை வைத்துக்கொண்டு பேங்கிலோ, ஏடிஎம்யிலோ வரிசையில் நின்று கொண்டிருப்பாள். சில்லறைக்காக வெயிலில் அலைந்து கொண்டிருப்பாள்.  சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு இந்நேரம் அவளைப் போல எத்தனையோ பெண்கள்  சிரமப்பட்டுக்கொண்டிருப்பார்கள். எல்லோருக்கும் சேர்த்துதான் என்னைப் போன்றவர்கள் காட்டுக்கத்தல் கத்திக் கொண்டிருக்கிறோம்.

(இதே கேள்வியை சென்ற ஆண்டு யாரோ கேட்டார்கள்.  பதிலை மீள்பதிவ் செய்திருக்கிறேன்)

ஏமாற்றுபட்டுவிட்டோம் என்ற மனவலி இப்போதும் அவர்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது, வாழ் நாள் முழுவதும் அது இருக்கும்

ஹரி
Via Facebook
2017-08-11

பெண் நண்பர் ஒருவரின் பெற்றோர்கள் பிரபல மேட்ரிமோனியல் தளங்களில் பதிவு செய்துவிட்டு தங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடி கொண்டிருந்தனர், அவரும் அவ்வப்போது Login செய்து தனக்கு வந்துள்ள வரன் விண்ணப்பங்களை ஆய்வு செய்த வண்ணம் இருந்திருக்கிறார், அதில் இருந்த ஒரு விண்ணப்பம் பிடித்து போக பெற்றவர்கள் அனுமதியுடன் அதற்க்கு பதில் அனுப்ப, பதிலுக்கு மிக பணிவாக அசர வைக்கும் ஆங்கிலத்தில் பதில் வர தொடர்ந்து இணையத்தில் இந்த சம்பாஷணை தொடர்கிறது, எதிர்புறம் தன்னை லண்டனில் ஒரு மிகப்பெரிய வேலையில் இருப்பவன் என்றும் பெண் நண்பரை தனக்கும் தன் குடும்பத்திற்கும் மிகவும் பிடித்திருக்கிறது எனவும், ஜாதகமும் பொருந்துகிறது என அடுக்கடுக்காய் அன்பு கணைகள் தொடுக்க உருகி போன இவர் உரையாடலை வாட்ஸப்பில் வரவேற்று தொலைபேசி அழைப்புகளில் தொடர்ந்திருக்கிறார். ஒரு சில நாட்களிலேயே இந்த உரையாடல்கள் காதலாய் மலர இவரை பார்ப்பதற்காக இவர் பெற்றோர்களை பார்த்து பேசுவதற்காக லண்டனில் இருந்து இந்தியா வருவதாக தெரிவித்தவன், இவருக்காக ஒரு விலையுயர்ந்த நெக்லஸை பரிசாக கொண்டு வருவதாகவும் வாட்சப்பில் புகைப்படம் அனுப்ப, ஏற்கனவே லண்டனில் இருந்து மாப்பிளை வாறார் என அகமகிந்து அவசர கோலத்தில் வீட்டையெல்லாம் ரெடி பண்ணி காத்திருந்த பெற்றோரும் பெண்ணும் இந்த நெக்லஸ் போட்டாவை பார்த்து ‘நெக்’குருகி போனார்கள்.

அந்த மாப்பிளை மவராசன் இந்தியா வரும் தினமும் வந்தது, இவர்களும் காத்திருந்தனர், ஆனால் சொன்ன நேரத்திற்கு ஆளும் வரவில்லை, போனும் வரவில்லை, கால் செய்தாலும் யாரும் எடுக்காததால் முதலில் பதறி போன பெண் பொறுமையிழந்து தொடர்ந்து கால் செய்ய, பல முயற்சிகளுக்கு பிறகு போனை எடுத்த லண்டன் மாப்பிள்ளை சற்றே கலவர குரலில் "ஹனி, சம் ப்ராப்லம் ஹியர், நான் திருப்பி கால் பண்றேன் என வைக்க முயல, பதறி போன பெண் "என்னடா ஆச்சு சொல்லு, ஐ வில் ஹெல்ப் யூ" என வெள்ளந்தியாய் கேட்க, இந்த ஒரு வார்த்தைக்காகவே காத்திருந்த லண்டன் லார்டு தன் மோசடி மூட்டையை அவிழ்க்க துவங்கினான், 'மும்பை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் செக்கிங்கில் இருக்கிறேன் என்றும் விலையுயர்ந்த நெக்லஸ் மற்றும் அதிக அளவில் பவுண்டு பணம் கொண்டு வந்த காரணத்தால்  பிடித்து வைத்து கொண்டு லஞ்சம் தந்தால் தான் அதை எடுத்து போக அனுமதிப்போம் என கஸ்டம்ஸ் அதிகாரிகள் முரண்டு பிடிப்பதாக தெரிவித்தவன், அவர்களுக்கு கொடுப்பதற்கு தன்னிடம் இந்திய ரூபாய் எதுவும் இல்லை , அக்கவுண்டில் செலுத்துகிறேன் என்றாலும் வெளிநாட்டு வங்கியில் இருந்து தங்களுக்கு பணம் வந்தால் எங்களுக்கு பிரச்னை என அவர்கள் மறுத்துவிட்டதாகவும் செய்வதறியாமல் நான் இங்கு நிற்கிறேன் என கதற,அதிர்ந்து போன பெற்றோரும் பெண்ணும், "இந்த இந்தியாவே இப்படித்தாங்க, லன்ச் சாப்பிடறதே லஞ்சத்திலதான், நீங்க கவலைப்படாதீங்க மாப்ள, போன அந்த ஆஃபிஸர் கிட்ட கொடுங்க, நாங்க பேசிக்கிறோம்" என சொல்ல,

போனை வாங்கி சலித்த குரலில் பேசிய ஆபிசர் , "சார் கஸ்டம்ஸ் ஆக்ட் படி ஆண் 50000 பெருமானம் உள்ள நகை பொண்ணுங்கன்னா 100000 பெருமானம் உள்ள நகை தான் வெளிநாட்லருந்து கொண்டு வரலாம், உங்க மாப்பிள்ளை வச்சிருக்கிற நெக்லஸ் மட்டும் ஒரு ஆறு லட்சம் வரும், அது போக பவுண்டு பணம் மட்டும் நம்ம ரூபா மதிப்புக்கு ஒரு 30 லட்சம் இருக்கும் சார், கஷ்டம் சார், லா பிரகாரம் இதெல்லாம் சரி வராது, பெனால்டி போட்டா எகிறிடும், அதான் ஒரு 5 லட்சம் பார்த்து செய்ய சொல்லுங்க , விட்ரலாம், என்ன சொல்றீங்க ?" என போனில் பேரத்தை ஆரம்பிக்க, இடையில் மறித்து போனை வாங்கிய லண்டன் மாப்பிள்ளை, "அங்கிள், இவங்க பொய் சொல்றாங்க நான் இந்தியன் கஸ்டமஸ் ஆக்ட் படிச்சுட்டு தான் பணம் கொண்டு வந்தேன், வெளிநாட்டு பணம் கொண்டு வர லிமிட் கிடையாது, கஷ்டம்ல்ஸ ஜஸ்ட் டிகிளேர் தான் பண்ணனும், இவங்க வேணும்னே பண்ணறாங்க, டோன்ட் பே தேம் அங்கிள், தீஸ் ஆஃபீசர்ஸ் ஆர் சீட்டிங்" என பொய்க்கண்ணீர் வடிக்க. "மாப்பிள்ளை இங்க எல்லாம் இப்படித்தான், நாங்க பாத்துகிறோம், நீங்க போனை ஆபிசர் கிட்ட கொடுங்க என பெண்ணின் பெற்றோர் சொல்லியிருக்கின்றனர், பொய் கோபத்துடன் போனை வாங்கிய ஆபிசர் "சார், இதெல்லாம் வேலைக்காவாது, டிபார்ட்மென்டுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிரும், நீங்க ஒழுக்கமா  பெனால்டி கட்டி எடுத்துட்டு போக சொல்லுங்க" என எகிற, "சார், சாரி சார் ..உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க, இன்னொரு அரை மணிநேரத்தில் பணம் அனுப்புறோம், அவரை விட்டுருங்க சார் ப்ளீஸ், பொண்ணை பார்க்க மொத மொதல்ல வாறார், அபசகுனமா நினைச்சுக்க போறார், பார்த்து செய்யுங்க" என கெஞ்ச, "சரி பெரியவரே, கல்யாண மேட்டர், அதனால ஒத்துக்குறோம், இந்த அக்கவுண்டுக்கு பணத்தை பிரிச்சு போடுங்க" என மூன்று நாலு வங்கி கணக்குகளை தர அத்தனையும் நோட் பண்ணிக்கொண்டு பெண்ணின் குடும்பம் போனை வைத்த மறுநொடி பணத்தை போட பேங்கை நோக்கி ஓட துவங்கினர்.

அப்போது எதேசையாக நண்பருக்கு நான் போன் பண்ண விஷயம் தெரிந்து அதிர்ந்து விட்டேன், நண்பரித்தில் மிக தெளிவாகவே சொன்னேன், இது ஒரு ஏமாற்று வேலை, நீங்கள் பணத்தை இழக்க போகிறீர்கள், பொறுமையாக நான் சொல்வதை கேளுங்கள் என இந்த மோசடி பற்றிய இணைய செய்திகளை அவருக்கு அனுப்பினேன், படித்து நண்பரின் குடும்பம் சற்று கலவரமானாலும், "தம்பி மாப்பிளை ரொம்ப நல்லவர், இங்க வந்தவுடன் பணத்தை கூட திருப்பி தரேன்னு சொன்னார், நீங்க சொல்ற விஷயங்கள் உலகத்தில நடந்திருக்கலாம், ஆனா இவர் பாவம் அதனால நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க" என என்மீது கோபப்பட்டனர், சற்று மன வருத்தம் இருந்தாலும் ஒரு குடும்பத்தின் கடின உழைப்பு, சேமிப்பு வீண் போய்விடக்கூடாது என மனதில் பட்டதால் தொடர்ந்து அவர்களிடத்தில் பேசி இந்த மோசடியை விளக்கினேன். “தம்பி, அப்ப அந்த கஸ்டம்ஸ் ஆஃபீசர் பொய் , இந்த மாப்பிள்ளை பொய் , ஏர்போர்ட் பொய் , எல்லாமே பொய் னு சொல்றீங்களா என்ற கேள்விக்கு "நிச்சயமாக,...வேண்டும் என்றால் உங்க மாப்பிள்ளைக்கு கிட்ட சொல்லி லண்டன்ல இருந்து அவர் இப்ப வந்திருக்கிற விமான டிக்கட்டை வாட்சப்ல அனுப்ப சொல்லுங்க, ஏன்னு கேட்டா ஒரு சில காரணத்துக்காக பேசஞ்சர் லிஸ்ட் செக் பண்றோம் னு சொல்லுங்க" என்றேன், இவர்களும் கேட்டிருக்கிறார்கள், முதலில் என்ன நம்ப மாட்டேங்கிறீங்களா என பொய் கோபம் காட்டிய மாப்பிள்ளையும், சார் டைம் இல்ல என அவசரம் காட்டிய ஆபிசரும் தொடர் கேள்விகளுக்கு பிறகு நிரந்தரமாக ஸ்விட்ச்ச் ஆப் ஆகிவிட்டனர்.

இந்த மோசடி கும்பலில் பெண்களும் இருக்கிறார்கள், அர்த்த ராத்திரி ஆன்லைன் சாட்டிங் கனவான்கள் தான் இவர்கள் குறி, அதே டெய்லர் அதே வாடகை போல , இவர்களிடத்தில் அதே காதல், அதே ஏர்போர்ட் , அதே கஸ்டம்ஸ் தான், வழிசலுக்கு எற்றவாரு ஒரு அமவுண்டை மொத்தமாக வழித்துவிட்டு கொண்டு சுவிட்ச் ஆப் ஆகிவிடுவார்கள். நல்ல காதலையே வெட்டி கொன்றுவிடும் நம்ம ஊரில் இந்த கனவான்கள் கள்ள காதலில் தான் ஏமாந்த கதையை யாரிடத்தில் சொல்வார்கள் பாவம், ஆகவே நீங்கள் யாராயிருப்பினும் இவ்வகை மோசடிகளை தெரிந்து கொள்ளுங்கள், தெளிவாக இவற்றில் இருந்து உங்களையும் உங்கள் சேமிப்பையும் காத்து கொள்ளுங்கள். நண்பர்கள் யாரேனும் இதில் அகப்பட்டுக்கொண்டிருப்பின் அவர்களுக்கும் இந்த மோசடியை தெரியப்படுத்துங்கள். ஏனெனில் நமக்கு தெரிந்த ஒரு எச்சரிக்கை தகவலை சரியான நேரத்தில் நண்பர்களுக்கு சொல்லாமல் மௌனம் காப்பதும் ஒருவகையில் அவர்கள் ஏமாற்றுவதற்கு துணை போவது போலத்தான். மயிரிழையில் பணம் தப்பிய மகிழ்ச்சி அந்த பெற்றோருக்கும் பெண்ணுக்கும் இருந்தாலும் தான் ஏமாற்றுபட்டுவிட்டோம் என்ற மனவலி இப்போதும் அவர்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது, வாழ் நாள் முழுவதும் அது இருக்கும் , So Beware and be safe friends.

-

ஆசியாவிலேயே பாம்புக்கடி விஷ முறிவு மருந்தை இலவசமாக தருகிற ஒரே மாநிலம்

Sivasankaran Saravanan
Via Facebook
2017-08-11

பொது அறிவுக்கேள்வி:
ஆசியாவிலேயே பாம்புக்கடி விஷ முறிவு மருந்தை இலவசமாக தருகிற ஒரே மாநிலம் எது?

விடை:
தமிழ்நாடு

அதுவும் ஒவ்வொரு 20 கிலோமீட்டர் சுற்றளவிலும்  மருந்து இலவசமாக கிடைக்கிறது.  ஏன் மற்றவர்களால் முடியவில்லை என்றால் விஷ முறிவு மருந்துகள் விலை அதிகம் .

விஷ பாம்புக்கடி 90 சதவீதம்,  கிராமங்களில் தான் நடக்கின்றன.  இருந்தும் இந்த மாநிலம் பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதில் உலகத்திற்கே வழிகாட்டியாக உள்ளது. கிராமங்களில் நிகழ்கிறவற்றை தடுப்பதுதான் அரசுக்கு பெரும் சவால்.  ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருந்து கிடைப்பது பெரிதல்ல.  ஆரம்ப சுகாதார மையங்களிலும் தமிழகத்தில் கிடைக்கிறது.  எனவே இது மகத்தான சாதனை.

அதுமட்டுமின்றி இந்த மாநிலத்தில் தான் பாம்பு விஷ முறிவு மருந்துக்கான ஆராய்ச்சி மையம் இருக்கிறது . இங்கிருந்து தான் தெற்காசியா முழுவதும் விஷ முறிவு மருந்துகள் செல்கின்றன..!

இதே போல  நாய்க்கடிக்கும் இலவச மருந்து இங்கேதான். என் நண்பன் இரானுவத்தில் இருக்கிறான் அங்கே அவனுக்கு நாய்கடித்துவிட்டது அங்குள்ளவர்கள் அவனுக்கு டி டி போட்டு தமிழ்நாடு என்றதும் லீவ் கொடுத்து ஊருக்கு அனுப்பிவிட்டு இருக்கிறார்கள். அங்குதான் நாய்க்கடிக்கு சிறந்த சிக்கிசை உள்ளது என்று.

பாம்புக்கடி மருந்து கள் நமது அரசு மருத்துவமனைகளில் எப்போதும் உள்ளது. நமது அரசு மருத்துவர்கள் பாம்புக்கடியை திறம்பட கையாள்வார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தான் மற்ற மருத்துவர் களைக் காட்டிலும் அதிக அனுபவம் உண்டு. ஒரே சிக்கல் என்ன வெனில் நோயாளியின் உடன் வருவோர் கொடுக்கும் தொல்லைகள் தாங்க முடியாது.

சார் உங்களால முடியாதுனா சொல்லுங்க.
நாங்கள் பிரைவேட்ல பார்த்துக்குறோம், அப்பல்லோவுக்கே போறோம். இப்படி அலப்பறை விடுவார்கள்.

"அய்யா சாமிகளே! அங்கே எல்லாம் பாம்புக்கடி மருந்து இல்லப்பா. நீங்கள் போனாலும்  திருப்பி அரசு மருத்துவமனைக்குத் தான் அனுப்பி விடுவார்கள். சொல்றத கேளு" - என சமாளித்து வைத்தியம் பண்ணனும்.

மருத்துவத்துறை மற்றும் பொது சுகாதாரத்தில் தமிழ்நாடு தான் மிகச்சிறந்த கட்டமைப்பு கொண்ட மாநிலம். அதை பொறுத்துக் கொள்ளமுடியாத கயவர்கள் தான் தற்போது இதை சிதைக்க நீட் லொட்டு லொசுக்கு என கொண்டுவருகிறார்கள்.

Thursday, August 10, 2017

பேலியோவில் ஏன் தேன் பரிந்துரைக்கப் படுவதில்லை?

Dr.ஃபரூக் அப்துல்லா
Via Facebook
2017-08-10

பேலியோவில் ஏன் தேன் பரிந்துரைக்கப் படுவதில்லை?

இந்த கேள்வி தற்போது ஹாட் டாபிக்காக சுற்றி வருகிறது

மேலும் இஸ்லாமிய சமுதாய மக்களிடையே இது குறித்த அதிருப்தி இருப்பதும் புரிகிறது

குரான் தேனை மருந்தென்று கூறுகிறது
நபிகள் நாயகம் அவர்களும் தேனை ஸ்லாகித்து கூறியுள்ளனரே
பிறகு ஏன் பேலியோ அதற்கு முரணாக இருக்கிறது??

இதற்கான எனது விடை பின்வருமாறு

தேன் என்பது மருத்துவ குணம் கொண்டது என்பதில் ஐயமில்லை
தேனை மருந்தாக எடுப்பதில் நமக்கு பிரச்சனையில்லை

பிறகு ஏன் தேன் பேலியோவில் பரிந்துரைக்கப்படவில்லை

காரணம் 1

தற்போது பேலியோவிற்கு வரும் 99 சதவிகிதத்தினர் தங்களுக்கு இருக்கும் வியாதியை குணப்படுத்தவே வருகின்றனர்

உடல் பருமன், நீரிழிவு , ரத்த கொதிப்பு,
பி சி ஓ டி  போன்றவை அந்த வியாதிகள். 

இவர்களுக்கு இனிப்பு எந்த ரூபத்தில் சேர்த்தாலும் பிரச்சனை தான்.

தேனில் உள்ள ஃப்ரக்டோஸ் ரத்தத்தில் கலந்து ரத்த சர்க்கரை அளவு களை ஏற்றுகிறது

அதை கட்டுக்குள் கொண்டு வர இன்சுலின் சுரக்க என்று எடை குறைப்பிலோ நீரிழிவிலோ முன்னேற்றம் அடைய முடியாது

ஆகவே தேனை பொது பரிந்துரையாக கொடுக்கவில்லை

காரணம் 2

ஒரு பொருளை மருத்துவ ரீதியாக மருத்துவர் வேண்டாம் என்று கூறினால் அது வேறு சில நோய்களுக்கு மருந்தாய் இருப்பினும் நாம் அதை தவிர்ப்பது நல்லது.

உதாரணம்
யூரிக் ஆசிட் அதிகம் உள்ளவருக்கு கீரை மட்டன் மீன் எப்படி வேண்டாம் என்கிறோமோ அதே காரணத்தினால் தான் உடல் பருமன், நீரிழிவு, ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், தேன், சர்க்கரை வேண்டாம் என்கிறோம். 

கீரை மட்டன் மீன் போன்றவை சத்து மிக்க உணவாய் இருப்பினும் ஒருவருக்கு யூரிக் அமில அளவுகள் கட்டுக்குள் வரும்வரை அவற்றை நிறுத்த சொல்வது போலத்தான் தேனை நிறுத்தச் சொல்வதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காரணம் 3

தற்போது சந்தையில் கிடைக்கும் தேன்களில் பெரும்பான்மை high fructose corn syrup களாகும். இவற்றில் இருப்பது சர்க்கரை கரைசல் மட்டுமே. தேனை காலை வேலையில் அதிகமாக எடுத்து நீரிழிவு முற்றிய பலரை யாம் அறிவோம். 

சுத்தமான தேன் தானா என்பதை உறுதி செய்யவும்

யாரெல்லாம் தேன் எடுக்கலாம்??

குழந்தைகள் , உடல் பருமன் இல்லாத வளரும் பிள்ளைகள் , உடல் பருமன் இல்லாதவர்கள் (BMI  <25) , நீரிழிவு, ரத்த கொதிப்பு, ஃபேட்டி லிவர், பிசிஓடி போன்ற வியாதி இல்லாதவர்கள், ஆட்டோ இம்யூன் வியாதி இல்லாதவர்கள்  ( தற்போது பேலியோ கடைபிடிக்கும் அனைவருக்கும் இதில் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது)

இவர்கள் தாங்கள் உண்ணும் செயற்கை சர்க்கரைகளை நிறுத்தி விட்டு தூய தேனை சிறிது எடுப்பது நன்மை பயக்கும்

அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு

ஆகையால் தேனாகவே இருப்பினும் அளவோடு எடுப்பது நல்லது.

யாரெல்லாம் தேன் எடுக்க கூடாது???

1. நீரிழிவு நோயர்கள்
2. ரத்த கொதிப்பு உள்ளவர்கள்
3. ஐந்து வருடங்களுக்கு மேல் BMI 30 க்கு மேல் இருந்தவர்கள்
4. உடல் பருமனானவர்கள்
5. PCOD உள்ளவர்கள்
6. ஃபேட்டி லிவர் உள்ளவர்கள்

இவர்கள் தங்களது பிரச்சனையை முழுமையாக சரிசெய்து விட்டு மருத்துவ பரிந்துரையின் பேரில் தேன் எடுக்கலாம்

ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

ஒரு அப்பா தன் பிள்ளைக்கு கேட்பதெல்லாம் வாங்கி கொடுப்பார். ஆனால் பிள்ளை சொல்பேச்சு கேட்காமல் வரம்பு மீறினால் அவனை வழிக்கு கொண்டு வர சில நேரங்களில் கடுமையாக நடப்பார் இல்லையா அதைப் போலவே

தேன் இயற்கையானது, மருத்துவ குணம் கொண்டதாயினும்

நாம் மாவுச்சத்து விசயத்தில் வரம்பை மீறி விட்டபடியாலும்

அதன் விளைவாக பல நோய்களை ஏற்படுத்திக் கொண்டதாலும்

நமக்கு மருந்தாய் இருக்க வேண்டிய தேனைக்கூட உண்ண முடியாமல் போனதற்கு நாம் தான் காரணம்.

தேன் அல்ல

Dr.ஃபரூக் அப்துல்லா
நோய் தடுப்பு துறை மருத்துவர்
சிவகங்கை