Friday, August 25, 2017

விநாயகர் - சில கேல்விகள்

Mathi mathi
Via Facebook
2017-08-24

1.)பார்வதி தன்னோட உடலில் இருந்த அழுக்குகளை திரட்டி உருட்டி  ஒரு குழந்தையை(விநாயகரை)  உருவாக்க முடியும்  என்றால்  பார்வதி எத்தனை ஆண்டுகள் குளிக்காமல்  இருந்திருப்பார்?

2.) அழுக்குகளையே  உடலில் இருந்து திரட்டி எடுத்த பிறகு  ஏன் குளிக்க வேண்டும்?

3.) நாமெல்லாம் ஒரு நாள்  குளிக்காவிட்டாலே நம் உடலில் உள்ள வியர்வை துர்நாற்றம் தாங்க முடியவில்லை. ஆனால்  ஒரு குழந்தையை( விநாயகரை)  உருவாக்கக் கூடிய அளவிற்கு பார்வதியின் உடலில் அழுக்கு இருந்திருக்கின்ற போது  பார்வதியின் மீது எவ்வளவு துர்நாற்றம் வீசும். அவ்வளவு  துர்நாற்றத்தில் சிவன் எப்படி பார்வதியோடு குடும்பம் நடத்தினார்?

4.) பார்வதி தன் அழுக்கில் உருவாக்கிய( விநாயகர்)  குழந்தை பேசுகின்ற  அளவிற்கு வளருகின்ற வரை சிவனுக்கே தெரியாதா?

5.) பிள்ளையை தெரியாத தகப்பன் எங்காவது உண்டா? சிவனுக்கு தன் பிள்ளையை( விநாயகரை) தெரியாவிட்டால்  யாருடைய தவறு?

6.) சரி அதை விடுங்கள்  பார்வதியின் வீட்டின் குளியலறையில்  கதவு இல்லையா?  கதவு இல்லாத வீடு  எங்காவது உண்டா? அதுவும் பார்வதி வீட்டு குளியலறையிலே கதவு இல்லாவிட்டால்  ஏழை எளிய மக்களின் வீட்டில் என்ன செய்வது?

7.) கதவு இல்லாததற்கு பதிலாக விநாயகரை காவலுக்கு வைக்கும் போது  தலையில் சடையோடும் கழுத்தில் பாம்போடும்  ஒருவர் வருவார் அவர் உனது அப்பா என்றும் அவரிடம் சண்டையிடாதே என்றும் விநாயகரிடம் பார்வதி சொல்லியிருக்க வேண்டுமல்லவா?

8.) சரி  சிவனை உள்ளே செல்ல விநாயகர் அனுமதிக்காத போது  சிவன் ஏன் அவசரப் பட வேண்டும்? பார்வதி குளித்து விட்டு வரும் வரை காத்திருக்கலாமே?

9.) உள்ளே செல்ல  அனுமதிக்காதது குற்றமா?  இந்த  காரணத்திற்காக  விநாயகர் தலையை  வெட்டுவதா? இதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?
( பெண்களை கற்பழித்தவன்,சாதிய ஆணவக் கொலை செய்தவனெல்லாம்  வெளியில் திரிகின்றான் அவனையெல்லாம் என்ன செய்வது?

10) சரி விநாயகர் தலையை வெட்டினால்  மீண்டும் மனித தலையை பொருத்தினால் தானே பொருந்தும்?யானை தலை எப்படி பொருந்தும்?யானைக்கு  5 அறிவு மனிதனுக்கு 6 அறிவு? மனித கழுத்தின் சுற்றளவு எவ்வளவு யானை கழுத்தின் சுற்றளவு எவ்வளவு? யானை தலையை விநாயகர் கழுத்தில் பொருத்தினாலும்  முகம் வானத்தை மேல் நோக்கி தானே பார்க்கும் தும்பிக்கை தானே பாக்கவாட்டில் இருக்கும்? ஆனால் முகம் பக்கவாட்டில் நம்மை நோக்கி இருக்கிறது தும்பிக்கை தரையை நோக்கி இருக்கிறதே? எப்படி இதெல்லாம் சாத்தியம் ? பொருத்தமே( லாசிக்கே) இல்லையே?

11).) சரி 5- அறிவு விநாயகரை  எப்படி 6- அறிவு மனிதன் கடவுளாக ஏற்க முடியும்?

12.) யானையை விட மனிதன் உயர்ந்தவனா? மனிதனை விட யானை உயர்ந்ததா?

வன்புணர்வு செய்த வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு ஆதரவாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது.

Sivasankaran Saravanan
Via Facebook
2017-08-25

வன்புணர்வு செய்த வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு ஆதரவாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது.  ஹரியானாவில் சுமார் 25 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இந்த செய்தி நம்ப முடியாத அதிர்ச்சியை கொடுக்கலாம்.  *என்னடா ஒரு பொறுக்கி சாமியார் ரேப் பண்ண கேஸ்-ல தண்டிக்கப்பட்டுள்ளார், இதை கண்டித்து யாராவது கலவரத்தில் ஈடுபடுவார்களா?* என ஆச்சரியப்படுவார்கள்.  *ஏன்னா ஜெயேந்திரர்  கைது செய்யப்பட்டபோது இட்லி சாப்பிட்டுட்டு எலக்ட்ரிக் ட்ரெயின்ல வேலைக்கு போயிட்டு வந்த மாநிலம் நம் தமிழ்நாடு*. அதனால் ரேப்பிஸ்டுக்கு ஆதரவா கலவரம் பண்றதெல்லாம் நமக்கு அதிர்ச்சியா இருக்கும். ஆனால் இதுதான் ஹிந்துத்வ வட இந்தியா.

இந்த நிலையைத்தான் தமிழ்நாட்டில் கொண்டுவர காவிகள் விரும்புகிறார்கள்.  இதற்குத் தடையாக திராவிட உணர்வு அவர்களை ரொம்பவே காயடிக்கிறது.  அதனால் தான் நேரடியாகவும் அல்லக்கைகளை விட்டும் திமுக அதிமுக ஒழியவேண்டும், கழகங்கள் இல்லா தமிழகம் என சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். 

ஹரியானாவில் பாஜக தான் ஆட்சி செய்கிறது. கலவரங்களை அனுமதிப்பது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. சொல்லப்போனால் செல்வாக்கு குறையும்போதெல்லாம் கலவரத்தை முன்னெடுப்பது தான் ஆர்எஸ்எஸ் பழக்கமே. தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த ரேப்பிஸ்ட் சாமியாரை அளவுக்கதிகமாக புகழ்ந்து பேசினார் ஒரு அரசியல் தலைவர்.  அந்த தலைவர் வேறு யாருமல்ல, இந்தியத் திருநாட்டின் பிரதமரான மோடி தான்.

Thursday, August 24, 2017

டேய் வரேன்டா ... வரேன்டா... வாங்கிக்கப்பா

Palanivel manickam
Via Facebook
2017-08-25

#உங்களுக்கு_தெரியுமா ???

1973 ஆம் ஆண்டு தந்தை பெரியார்
மறைந்து விடுகிறார்.

சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பெரியாருக்கு நினைவேந்தல் கூட்டம்
நடத்த முற்படுகிறோம்.

இந்து பத்திரிகையின் ராம் தான் அன்றைய SFI இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பின் அறிவிக்கப்படாத வழிகாட்டி.

பெரியாருக்கு நினைவேந்தல் கூட்டம் அமைக்க சி.பி.எம். ஆய்வு மாணவர்கள் சிலர் எதிர்ப்புக் காட்டினர்.

ஆராய்ச்சி மாணவர்கள் சங்கத்தின் செயலர் என்ற முறையில் இச்சங்கம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக இளந்தமிழர் என்ற அமைப்பின் சார்பில் இக்கூட்டத்தை நடத்தினோம். பொது மக்களும் கலந்து கொள்ளும் வகையில், மத்திய நூலக மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.

அன்றைய கல்வி அமைச்சர் நாவலர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.கே.,  நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்கலைக் கழக, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என எதிர்ப்பார்த்ததிற்கு மேல் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

நடிகவேள் ராதாவின் பேச்சு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

*நடிகவேள் இவ்வாறு பேசினார்*

படிக்காத என்னை ஏன் அழைத்தீர்கள்
என்று உரையைத் தொடங்கியவர்

1920 களில் பெரியார் முதல் வலம் வருகிறார்.

அப்போது நாடகக்குழுவில் சிறுவனாக வேலை செய்து வந்தேன். காலையில் நாடகக் குழுவினருக்கு காபி தேநீர் வாங்கச் செல்வேன்.

அய்யர் கடையில் 20 அடி தூரத்திலிருந்து "அய்யா சாமி" என்று உரத்தக் குரலில் கத்துவேன்.

"டேய் வரேன்டா" என்று கூறிவிட்டுப் பாத்திரத்தில் காபியை அய்யர் எடுத்து வருவார்.

நான் எடுத்துவந்த பாத்திரத்தையும், பணத்தையும் மண் தரையில் வைக்கச் சொல்வார். நீண்ட கைப்பிடியுடன் உள்ள அவரது பாத்திரத்திலிருந்து காபியை ஊற்றுவார்.

1930களில் தமிழ்நாடெங்கும் பெரியார் மீண்டும் வலம் வருகிறார்.

காபி கடைக்கு மிக அருகில் செல்ல முடிகிறது. "சாமி காபி கொடுங்கள்" என்று கூறியவுடன் "இதோ வரேன்டா!" பாத்திரத்தையும் பணத்தையும் உணவகத்தின் மேஜை மீது வைக்க முடிந்தது. "டேய்" என்ற ஆணவச் சொல் காணாமல் போய்விட்டது.

1940களில் பெரியார் வலம் வருகிறார்.

உணவகத்தின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு "அய்யரே! காபி கொடு,
காசு கொடுக்கிறன்" என்று மிடுக்கோடு
பேச முடிந்தது.

"இதோ தரேன்! வாங்கிக்கப்பா" இப்படியாக, படிப்படியாக அனைவருக்கும் மரியாதையும், சம உரிமையும் கிடைக்கிறது. இதை யார் வாங்கித்தந்தது?

அய்யா_சாமி : டேய் வரேன்டா ...
சாமி : வரேன்டா ...
அய்யரே : வாங்கிக்கப்பா ...

மாணவர்களே! சற்றுச் சிந்தித்துப்
பாருங்கள்

ஒரு முறை இந்தச் சொற்களைச் சொல்லிப் பாருங்கள், இந்த ஒலி சத்தத்தின் வேறுபாடுகளில் தந்தை பெரியாரின் உழைப்பும், சீர்திருத்தமும் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டு, அவரின் குரலில், அவருக்கே உரித்தான பாணியில் நடித்துக் காட்டினார். மண்டபமே அதிரும்படியான கையொலி சத்தம்.

நடிகவேள் ராதாவின் பகுத்தறிவுப் பணி என்றும் போற்றப்படும்.

👊👊👊

நன்றி : பேராசிரியா் மு. நாகநாதன்.

சிபிஎஸ்இ, நீட் என்ட்ரன்ஸ்

டான் அசோக்
Via Facebook
2017-08-24

டேய். ஏன்டா இவ்ளோ பேச வைக்கிறீங்க?  

சி.பி.எஸ்.சில படிக்கிறவன் எவனும் கோச்சிங் செண்டர் போகாம ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்குறதை வச்சே நீட்ல பாஸ் ஆகலடா.  எல்லாரும் லட்சம் லட்சமா கொடுத்து கோச்சிங் செண்டர் போயிருக்கான்டா.

அரசு பள்ளி புள்ளைங்க பாதி பேரு சாப்பாட்டுக்கே சத்துணவை நம்பி இருக்குற புள்ளைங்கடா.. அதுங்க எப்படிடா கோச்சிங் செண்டர் போயி படிக்கும்?  கோச்சிங் செண்டர் போகாம எப்படிடா நீட் தேர்வு பாஸ் பண்ணும்? 

என்னடா எவனை கேட்டாலும் லூசு மாதிரி, “நம்ம சிலபஸ் சரி இல்ல பாஸ்..  சிலபஸ் மாத்தணும் பாஸ்,”னு சொல்றீங்க? 

மண்டைல மூளைதான் இருக்குமா இல்லேன்னா சாணி இருக்குமாடா? 

ஒரு அஞ்சறிவு நாய்க்கு கூட நாலுவாட்டி சொன்னா இது புரியுமே!!  

சாதாரண லாஜிக் தானடா இது?  ஏன்டா உங்களுக்கு புரியமாட்டேங்குது? ச்சை...

விநாயகர் சதுர்த்தியா - வெட்கமாக இல்லையா?

விநாயகர் சதுர்த்தியா - வெட்கமாக இல்லையா?...........

விநாயகர் எனும் கடவுள் இந்த நாட்டிலே உற்பத்தியான கடவுள் என்றும் சொல்ல முடியாது. வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே இவ்வளவு கூத்தடிக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம், அரசமரத்தின் கீழ், குளத்தங்கரையிலும், வீதிகளின் சந்தியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கியதையைச் சொல்லப்போனால் அது ஏனைய கடவுள்களுக்கு மிகவும் வெட்கக்கேடாகும்.

அதாவது, இவருடைய பிறப்பின் வரலாறு அந்தப் பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட புராணங்களில் இருந்து பார்த்தாலும் கூட மிக மிக மோசமாக உள்ளது. விநாயகர் பிறப்பு பற்றி மூன்று வரலாறு உள்ளது. நம் மக்களுக்கு இவற்றில் இருந்து இது உண்மையில் கடவுள் என்று சொல்ல முடியுமா என்பதை அறிய முடியவில்லை.

சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி குளிக்கப் போனாளாம். தான் குளிக்கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து குளிக்கும் அறைக்கு வெளியே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாளாம். அந்த உருவத்தை எப்படி உற்பத்தி செய்தாள் என்பது தான் கடவுள் தன்மையை விளக்கும் அதிசயம்.

முதலாவதாக, பெண்கள் குளிக்கும்போது அங்கு அந்த அறைக்கு ஆண்கள் போவது சர்வ சாதாரணமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், யாராவது வந்து விடுவார்களோ என்ற பயம் இருந்திருக்கத் தேவையில்லை; காவல் செய்யவும் ஆள் தேவையில்லை. அடுத்தபடியாக, ஆண்கள் யாராவது வந்து விடுவார்கள் என்ற பயம் இருந்தால், விநாயகர் என்று செய்யப்பட்ட அந்த உருவம் ஆண் உருவம் தானே! ஆண்கள் வந்துவிடக் கூடா தென்ற நினைப்பினால் ஒரு ஆணையே உற்பத்தி செய்து சதா நேரமும் பார்த்துக்கொண்டு இருக்கச் செய்வது எவ்வளவு புத்திசாலித்தனம்?

குளிப்பதற்காகச் சென்ற பார்வதி, தன் உடம்பின் மேல் உள்ள அழுக்கை உருட்டி ஒரு உருண்டை பிடித்து, அதை வாசற்படியில் வைத்து உயிர்கொடுத்தாள் என்று கூறப்படுகிறது. இதுதான் விநாயகர்!

ஒரு மனிதனுடைய எடைக்கு ஏற்றவாறு அத்தனை பெரிய அழுக்கு பார்வதியின் மேல் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியுமா? ஒரு நாளாவது பார்வதி குளித்து இருப்பாளேயானால் இவ்வளவு அழுக்குப் பிடித்து இருக்குமா? எனவே, சுத்த ஆபாசமும், அசுத்தமும் நிறைந்தவளாகவே நாம் அவளைக் கருதவேண்டியுள்ளது.

அடுத்தபடியாக, அவள் குளிக்கும்போது அங்கே வருகின்றான் சிவன். சிவனைக் கண்டதும் உமா கேட்கின்றாள், "இங்கே எப்படி வந்தீர்? நான் குளிக்கும் போது நீர் வரலாமா? ஒரு ஆளை நடையில் காவல் வைத்து இருந்தேனே, அவனை எப்படி தட்டிக் கழித்துக்கொண்டு வந்தீர்கள்?" என்றதும், அதற்குப் பரம சிவன் கூறுகின்றார், "நான் வரும்போதுநடையிலே ஒருவன் நின்று கொண்டு வழி மறித்தான்; நான் இங்கே வரவேண்டும் என்று கூறினேன். அதற்கு அவன் விடமாட்டேன் என்றான்; யாராய் இருந்தாலும் சரி, கணவனாய் இருந்தாலும் விட மாட்டேன் என்றான்! என்னைவிடாமல் தடுத்தான். எனவே நான் என் கை வாளால் அவன் தலையைச் சீவினேன். பிறகு தடையின்றி உன்னைக் காண வந்தேன்" என்றான்.

இதிலே, குளிக்கும் பெண் தன் மனைவியாய் இருந்தாலும்கூட அவனுக்கு அங்கே என்ன வேலை? இரண்டாவது, அதற்காக ஒரு மனிதனையே கொலை செய்து விட்டுப் போகவேண்டிய அவ்வளவு பெரிய சங்கதி அங்கே என்ன நடந்துவிட்டது? மூன்றாவது, அவள் கணவனே என்று தெரிந்த பின்னும் பரமனை அவன் தடுத்தது எவ்வளவு முட்டாள்தனம்? இவற்றை எல்லாம் யோசனை செய்தால் இது ஒரு அண்டப்புளுகு என்பதும், முட்டாள்தனமான நடவடிக்கை என்பதும் விளங்கும்.

இதனை அறிந்த பார்வதி, துடிதுடித்துக் கொண்டு ஓடி வந்து பார்க்கின்றாள். தலை துண்டாக்கப்பட்டு உள்ளது. ஆனால் துண்டாக்கப்பட்ட தலையை அங்கே காணோம். உடனே பரமனை நோக்கி, "நாதா என் அருமைச் செல்வம் - என் குழந்தை போன்று நான் உற்பத்தி செய்த அந்த அருள் செல்வத்தை எனக்குத் தாங்கள் தந்தாக வேண்டும். இல்லையேல் என்னால் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது!" என்று கூறினாள்.

பிறகு இதைக்கேட்ட பரமன் என்ன செய்வதென்று யோசித்து, கடைசியாக ஒரு யானையின் தலையைக் கொய்து அந்த முண்டத்தின் மேல் வைக்கின்றான். உடனே அந்த முண்டம் யானைத்தலை கொண்ட விநாயகர் ஆகிறது. இது ஒருகதை.

மற்றொன்று -பரமனும், பார்வதியும் ஒரு நாள் வனத்திற்குச் சென்றபோது, ஒரு ஆண் யானையும், பெண் யானையும் கலவி செய்து கொண்டு இருந்ததைப் பார்வையிட்டனர். அதே ஆசையால் பரமனும், பார்வதியும் யானை வடிவில் உருமாறிக் கலவிசெய்து பெற்றதுதான் விநாயகர்.மூன்றாவது,ஒரு நாள் பார்வதியும், பரமனும் போய்க்கொண்டு இருக்கையில், ஒரு யானையின் உருவம் (பொம்மை) ஒன்றைக் கண்டார்களாம். ஆகவே, அதன் மேல் மோகம் கொண்ட பார்வதியும் அதுபோல் பிள்ளை பிறக்கவேண்டும் என்ற நினைத்தாளாம். ஆகவே, அப்படிப் பிறந்ததுதான் விநாயகர் என்றும் கூறுகிறார்கள்.ஆகவே இந்த மூன்று கதைகளையும் தெரிந்த மக்களே இந்தப்படி மண்டையை உடைப்பார்கள் என்றால், இவர்களின் புத்திகெட்டத் தன்மையை, முட்டாள்தனத்தைப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா? இந்தப்படி ஆபாசமான கதையை எழுதி நம்மை நம்பும்படிச் செய்துவிட்டனர் பார்ப்பனர். ஆகவே, இது சிவனும், சுப்பிரமணியனும் வந்த காலத்திலே வந்தது, வடநாட்டான் இங்கு கொண்டுவந்து விளம்பரம் செய்துவிட்டான். அது இப்போது பெரிய கடவுளாக மதிக்கப்பட்டு எல்லாக் காரியங்களுக்கும் முன்னே வைக்கும் இடத்தைப் பெற்றுவிட்டது. ஆனதால் தான் பிள்ளையார் சதுர்த்தி - விநாயகர் சதுர்த்தி என்று ஆடம்பரமான நாளைக் கொண்டாடுகிறார்கள்.

-vetrivendan
எனவே, இதை எல்லாம் அறிவைக் கொண்டு ஆராய்ந்தால், பகுத்தறிவைப் பயன்படுத்திப் புகுந்து பார்த்தால் மனிதனுக்கு இதன் உண்மை புலனாகும். ஆனால் நாம் அப்படிச் செய்வது இல்லை.

இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

Tuesday, August 22, 2017

நீட் விலங்கை தமிழகம் உடைத்தெரியும்! அதன் பயனை இந்தியா முழுவதும் அனுபவிக்கும்!

Prabhakaran Alagarsami
Via Facebook
2017-08-22

தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றில் இப்படி ஒரு சவாலான சூழலை நாம் சந்திப்பது இது முதல்முறையல்ல.

1950ஆம் ஆண்டு, செண்பகம் துரைசாமி என்கிற பார்ப்பன பெண்மணி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினால், தமிழகத்தில் அதுவரை நடைமுறையில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற 100% இடஒதுக்கீடு முறை செல்லாது என்று ஆக்கப்பட்டது. தந்தை பெரியார் அதை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார். காமராசரும் முயற்சி எடுத்தார். அதன் விளைவாக இந்திய அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட்டு, இந்தியா முழுமைக்கும் இன்று பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் பயன்பெறும் இடஒதுக்கீடு என்பது சாத்தியமானது!

1979ஆம் ஆண்டு, அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் தவறான ஆலோசனையின் காரணமாக ஒரு விபரீத முடிவினை எடுத்தார். அதாவது, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டினை பெறுவதற்கு ரூ.9000 வருமான வரம்பு என்கிற பொருளாதார அளவுகோளை கொண்டுவந்தார். திராவிடர் கழகமும், திமுகவும் அதைக் கண்டித்து தமிழகம் முழுக்க மக்களை திரட்டினார்கள். அதன் விளைவு 1980ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. தன் தவறை உணர்ந்த எம்.ஜி.ஆர், தான் கொண்டுவந்த திட்டத்தை பின்வாங்கியதோடு மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் அளவை 30% இருந்து 50%மாக உயர்த்தினார். அதுதான் இன்றுவரை நீடிக்கிறது!

1993ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிறப்பு சட்டம் இயற்றி அதை அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணை என்கிற பாதுகாப்பு வலையத்திற்குள் வைத்து, தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான சமூகநீதியை காப்பாற்றினார். இதிலும் திராவிடர் கழகத்திற்கும் அதன் தலைவர் வீரமணிக்கும் முக்கிய பங்கு உண்டு! பாஜக ஆட்சி செய்கின்ற இராஜஸ்தான் உட்பட, தமிழகம் காட்டிய வழியில் பின்பற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

இவற்றோடு ஒப்பிட்டு பார்த்தால், தற்போதையை நீட் சிக்கல் என்பது அவ்வளவு ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. குறைந்தபட்ச நியாய உணர்வு கொண்ட ஒரு மத்திய அரசு இருந்திருந்தால்கூட, தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு தமிழகத்திற்கு விலக்கு அளித்திருக்க வேண்டும். குறைந்தபட்ச நீதியுணர்வு கொண்ட உச்சநீதிமன்றம் இருந்திருந்தால்கூட, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எழுப்பிய மிகச்சரியான கேள்விகளை ஏற்றுக்கொண்டு, தமிழகத்திற்கு நீதி வழங்கியிருக்க வேண்டும்!

தற்போதைய சூழலை பார்க்கும்போது, நீட் சிக்கலின் விபரீதத்தை தமிழக மக்கள் பெரிதும் உணர்ந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. கெட்டவாய்ப்பாக, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடக்குமேயானால், தமிழகம் இப்போது இருப்பதுபோலவே தூங்கிக்கொண்டிருக்காது என்று உறுதியாக நம்புகிறேன்.

நீட் விலங்கை தமிழகம் உடைத்தெரியும்! அதன் பயனை இந்தியா முழுவதும் அனுபவிக்கும்!

ஒரு இந்தியன், எப்படி இந்தியாவின் மீது படையெடுக்க முடியும்?

யுவான் சுவாங்
Via Facebook
2014-08-22

ஒரு நாடு என்ற பொருளில் இந்தியா என்று நாம் இன்றைக்கு அழைக்கின்ற புவிப்பரப்பு எப்போது உருவானது? கஜினி முஹம்மத் இந்தியா மீது படை எடுத்தார் என சொல்வது அபத்தம், கஜினி முகமதுவின் காலத்திலோ, அதற்கு முன்னரோ இந்தப் புவிப்பரப்பு ஒரே ஆட்சியின் கீழ் ஒரு நாடாக எப்போதும் இருந்ததில்லை.

ஏன், 1947 ஆகஸ்டு 15-ம் தேதியன்று காஷ்மீரும், ஆந்திரத்தின் பெரும் பகுதியும், பல வடகிழக்கு மாநிலங்களும் இந்திய யூனியனில் இல்லை. எழுபதுகளுக்கு முன்னர் சிக்கிம் இந்தியாவில் இல்லை. அவ்வாறிருக்கும் போது 20-ம் நூற்றாண்டில் உருவாகவிருக்கும் இந்தியா மீது 11-ம் நூற்றாண்டிலேயே கஜினிமுகமது எப்படிப் படையெடுக்க முடியும்?

இவ்வாறு பேசுவதே தேசத் துரோகம் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குமுறுவார்கள். அகண்ட பாரதத்திற்கு அவர்கள் வரைந்துள்ள எல்லைக் கோட்டின்படி ஆப்கானிஸ்தானமும் இந்தியாவில் அடக்கம். அந்தக் கணக்கின்படி பார்த்தால் இராசேந்திர சோழனைப் போல கஜினி முகமதுவும் ஒரு இந்தியன். ஒரு இந்தியன், எப்படி இந்தியாவின் மீது படையெடுக்க முடியும்?

கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் சாளுக்கியர்கள் மீது படையெடுத்தான். இராசேந்திர சோழனின் படையெடுப்பை இந்தியா மீதான படையெடுப்பென்றோ, இந்து மன்னர்களுக்கிடையிலான மோதல் என்றோ குறிப்பிடாத வரலாற்றுப் பாடநூல் கஜினி முகமது எனும் ‘இஸ்லாமிய’ மன்னன் ‘இந்தியா’ மீது படையெடுத்ததாகக் குறிப்பிடுவது மதவெறி இன்றி வேறு ஒன்றுமில்லை.

நன்றி: யுவான் சுவாங்