Monday, January 8, 2018

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்?

*ஓட்டுநர் ஜெயராமன்*

“கிழக்கு தாம்பரத்துல பஸ்ஸை எடுக்குறேன்னு வெச்சிக்க, பிராட்வே போய் சேர 28 கிலோ மீட்டர்.

எடையில 36 ஸ்டாப் கீது. எழுவது நிமிஷம் கணக்குல போய் சேரணும். ரோட்டுல டிராபிக் தொல்லை இல்லாத, ஸ்டாப்புல ஆளே இல்லாத விடிகாலை அஞ்சு மணியா இருந்தாலும் அதே கணக்குதான்; டிராபிக் ஜாம் நச்சுற, ஸ்டாப்புக்கு ஸ்டாப் கும்பல் ஏற்ர சாயங்காலம் அஞ்சு மணியா இருந்தாலும் அதே கணக்குதான்.

முன்ன போனாலும் பிரச்னை; பின்ன போனாலும் பிரச்னை. இதுல இன்னொரு சவாலு லிட்டருக்கு 5.5 கி.மீ. வர மாரி ஓட்டணும். இதல்லாம்கூட சமாளிச்சுடலாம். மக்களை சமாளிக்குறது பெரிய பேஜாரு. ஒரு வண்டில 48 பேர் உட்காரலாம். 25 பேர் நிக்கலாம். ஆக, 73 பேர். கணக்குபடிதான் வண்டில ஆள் ஏத்துனோம்னு வெச்சிக்க, நம்மூர்ல பாதி பேர் ரோட்டுல நடந்துதான் போவணும்.

ஒரு கணக்கு சொல்லவா? ஒரு நாளைக்கு நாடு முழுக்க ஓடுற ரயிலுங்க 2.05 கோடிப் பேரை ஏத்திக்கினு போவுது; ஆனா, தமிழ்நாட்டுல மட்டும் அரசாங்க பஸ்ஸுங்க எவ்ளோ பேரை ஏத்துறோம் தெரியுமா, 2.10 கோடிப் பேர்! இந்தியாவுலேயே பஸ்ஸுல அதிகமா ஆளுங்களை ஏத்திக்கினு போவறது சென்னைலதான்.

அப்போ நெரிசல் இல்லாம எப்படி இருக்கும்? ஒரு மணி நேரம் உள்ள பிராயணம் செஞ்சிட்டு எறங்குறவங்ளைவிட நாளெல்லாம் புகைலயும் தூசிலயும் வெயில், மழையிலயும் ஆணி அடிச்சா மாரி உக்காந்திக்கினு போற எங்களுக்கு கஸ்டம் ஜாஸ்தி.

ஆனா, பஸ்ஸுக்கு வெளில ரோட்டுல போறவங்களுக்கும் எங்க கஸ்டம் தெர்யாது, பஸ்ஸுக்குள்ள உட்கார்ந்துக்கினு வர்றவங்களுக்கும் எங்க கஸ்டம் புர்யாது.

ரெண்டு உதாரணம் சொல்றேன். படிக்கிற பசங்க இருக்காங்களே, ஓடுற வண்டிலதான் ஏறுவேன், எறங்குவேன்னு சத்தியம் பண்ணாத கொறையாதான் வருவானுங்க இது உள்ள.

டூவீலர்காரங்க எப்ப எங்கெ பூருவாங்கன்னு தெரியாது. இது வெளிய. விதுக்கு விதுக்குன்னு இருக்கும்பா, ஒவ்வொரு நிமிஷமும். ஒரு பக்கம் டப்புன்னு உசுரு பூடும் அவங்களுக்கு. இன்னொரு பக்கம் வாழ்க்கையே பூடும் எங்களுக்கு.

ஒரு சின்ன விபத்து போதும் ஒரு டிரைவரு குடும்பம் சீரழிய. எவ்ளோ பிரச்ன தெரியுமா? மொதல்ல போலீஸ் கேஸு. அதோடு ஆபிஸ்ல சஸ்பெண்டு ஆர்டரு கொடுத்துருவாங்க. அடுத்து, லைசென்ஸு சீசாயிரும். அப்புறம் சம்பளமும் இல்லாம, கேஸையும் நடத்தணும். மீண்டு வர்றதுக்குள்ள போதும்டா சாமீன்னு ஆயிரும். குத்தம் எங்க பக்கம்னு ஆச்சு, அதோட வேலை போச்சு. இந்தப் பதட்டத்துலேயேதான் ஒவ்வொரு நிமிஷமும் வண்டில ஓடணும்.

நாளெல்லாம் உட்கார்ந்திருக்குற ஒடம்பு சூடு. நேரத்துக்குச் சாப்பிட முடியாத கோளாறு. மூணு வேளையும் வெளி சாப்பாடு. பசியை மறக்க கொறைஞ்சது 10 டீ. கூடவே பதட்டம். இவ்வளவு போதாதா? வயித்துப் புண்ணு, முதுகு வலி, இடுப்பு வலி, முட்டி வலி, ரத்த அழுத்தம், சக்கரை வியாதின்னு எல்லாம் வந்திரும்.

ஆனா, எல்லாத்தையும் மீறியும் இந்த வேலை புட்சுருக்குபா.” ஏன் தெரியுமா? "வெறும் காசுக் கணக்குப் பார்த்தா எல்லாம் நஷ்டம். ஆனா, அந்தப் பக்கம் பலனடையுறது யாரு? நம்ம மக்கள்."

---

2015 ன் கொடூர வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து வண்டி ஓட்டியவர்கள் நாங்கள், எங்களிடம் வந்கு யாரும் தொழில் தர்மம் பற்றி பாடம் எடுக்க வேண்டாம்.

---

தோழர்களே புரிந்துகொள்ளுவோம், அரசு  போக்குவரத்துத் துறையினர் நடத்திவரும்  வேலை நிறுத்தப் போராட்டம் என்பது  அவர்களாக விரும்பி எடுத்த முடிவு அல்ல.

இந்தப் போராட்டம் தொழிலாளர்கள் மீது  அரசால் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகும்.

---

கடந்த #ஜனவரி_4 வியாழக்கிழமை அன்று தொடங்கிய #பஸ்_தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று வரை ஓயவில்லை.

ஆளும் அதிமுகவின் ஆதரவாளர்களை தவிர மீதம் உள்ள அனைத்து அரசு பேருந்து ஓட்டுனர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன, இதனால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது ஏறக்குறைய 14000 அரசு பேருந்துகள் இயங்கவில்லை.

இதற்கான காரணம் என்ன..??

தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மின்வாரியம், பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஓட்டுநர்களாக (டி பிரிவு) அரசு பணியில் சுமார் 2.5 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இணையான சம்பளம் தங்களுக்கு வழங்கப்படாதது ஏன்? என்பதுதான் போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கேள்வி.

ஊதிய உயர்வு போன்ற பல்வேறு காரணங்களை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. #போக்குவரத்து_கழக_தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் #23_முறை நடந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு #அடிப்படை_ஊதியம் ரூ.5,200, #தர_ஊதியம் ரூ.1,600 என கணக்கிட்டு ரூ.20,000 வரை மாத ஊதியம் கிடைக்கிறது. ஆனால், கல்வி, சுகாதாரம், மின்வாரியம், பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு தர ஊதியத்தை ரூ.2,400 என்று கணக்கிட்டு ரூ.24,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. தற்போது அவர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விட அதிக நேரம் பணியில் இருக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44 மடங்கு ஊதிய உயர்வு வழங்குவதாக அரசாங்கம் கூறியுள்ளதை மறுத்துள்ளார்கள்.

2001 முதல் தொழிலாளர்களிடமிருந்து #பிடித்தம் செய்த #7000_கோடி_ரூபாய் பணத்தை அந்தந்த துறையில் அதாவது #அரசு_வருங்கால_வைப்புநிதி ஆணையத்தில், #எல்_ஐ_சி_காப்பீடு பணத்தையும், #சமூக_காப்பீடு_திட்டத்தீன் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட பணமும் மேலும் நன்றி தொகையையும் இது வரை செலுத்தவில்லை மற்றும் அவர்களின் வங்கி கணக்கிலும் இது வரை டெபாசிட் செய்யப்படவில்லை.  இது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றது.

போக்குவரத்து துறையில் 70 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். கடைசியாக வாங்கிய ஊதியத்தில் பாதியை ஓய்வூதியமாக பெறுகிறார்கள். தொழிலாளர்கள் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. மின்சாரம், பொதுப்பணி, ஆவின் போன்ற துறைகளில் ஓய்வுபெற்ற அடுத்த 30 நாட்களில் ஓய்வுகாலப் பலன்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டில் #ஜூன்_டிசம்பர் வரையில் ஏறத்தாள 10000 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளன. அவர்களுக்கான் நிலுவையில் உள்ள தொகை #800_கோடி_ரூபாய் ஆகும். தனது இறுதி நாட்களில் மருத்துவ செலவிற்கு கூட போதுமான பணம் மற்றும் பெற வேண்டிய சலுகைகள் இல்லாமல் அவர்களின் குடும்பம் அவல நிலையில் உள்ளன.

வயதான காலத்தில் ஓய்வுகாலப் பலன்களை அனுபவிக்காமலேயே கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,000 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து #மே_2017 அன்று நடந்த வேலைநிறுத்த போராடத்தில் நிலுவையில் உள்ள ஓய்வூதிய தொகை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் #எஸ்மா_சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட #மாயாண்டி_சேர்வை என்கிற 83 வயது முதியவர் #உயர்நீதிமன்ற_நீதிபதிகளுக்கு எழுதிய கடிதத்தை வைத்து நீதிபதிகள் தாமாகவே முன்வந்து #பொதுநல வழக்கு ஒன்றை பதிவு செய்து மீதமுள்ள #1138_கோடி_ரூபாய் ஓய்வூதிய தொகையை தவணை முறையில் படிப்படியாக வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தனர். அதிலும் அரசு தாமதம் காட்டி வருகிறது தான் வேதனைக்குறிய விஷயம்.  

இதையடுத்து இவை அனைத்தையும் முன்வைத்து #17_தொழிற்சங்க_நிறுவனங்கள் கடந்த ஐந்து நாட்களாக போராடி வருகின்றனர்.

நிறுவாக செலவுக்காக பணத்தை விரயம் செய்த அரசு பெற வேண்டிய அவ்வூழியர்களின் அடிப்படை உரிமை தொகை மற்றும் தர தொகையை தர மறுப்பது மற்றும் குறிப்பிட்ட அரசு துறைக்கு அநீதியை இழைக்கும் தமிழக அரசுக்கு அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி தனது கடுமையான #கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது..

----

Saturday, January 6, 2018

மான்யம் வேண்டாமென்று பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா?

வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதம் income tax தருகிறோம் (அரசுக்கு).   மீதி சம்பளத்தில் (28 சதவீதம் GST என வாங்கும் பொருளுக்கு கட்டுகிறோம். பெட்ரோல்  மற்றும் பல பொருட்கள் GST யில் சேர்க்காமல் 60 சதவீதத்திற்கும் மேல் TAX கட்டுகிறோம். மொத்தத்தில்  சராசரி 50 சதவீதம் வாங்கும் பொருளுக்கும் உங்களிடமே (அரசுக்கு) தருகிறோம்.

ஆக 30+50= 80 சதவீத வருமானத்தை உங்கள்(அரசு) கஜானாவில் சேர்ந்துள்ளவர்களை பார்த்து

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ? என கேட்பவர்கள் கவனிக்க

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….!
(நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர் ” மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக
விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம்
அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….

————-

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு –

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!

– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த
குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை-
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று காண்பது …?

– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –

– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?

– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணப்படுவதற்காக – உருப்படியான
வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –

-எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக்
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?

– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?
– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில்
செய்துக்
கொள்ளும் நா
ள் என்றாவது வருமா…. ?

– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும்
Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள் ?திரிகிறார்கள் ?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல்
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –

– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?

– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உருத்தவில்லையா ?

– நாங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax and Property Tax –

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?

– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – என்றைக்கு,
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள
இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ –
அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை –
நீங்கள் கோராமலேயே நாங்கள் அனைவரும் அவசியம்  விட்டுக் கொடுப்போம்…!!!
                   🙏
🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்,
நன்றி !!     🙏 படித்ததில் பிடித்ததால் பதிவிடுகிறேன்

Wednesday, January 3, 2018

ரஜினியின் பிராடு குடும்பம்

ஃபாரூக் முகமது
2018-01-04

ஆன்மீக அரசியல் - நேரடி மோசடி
கதம் கதம் - மக்களின் சொத்து

கோச்சடையான் என்கிற பொம்மை திரைப்படத்தை, லதா இரண்டு நபர்களுக்கு விற்பனை செய்ததால் பெங்களுரு காவல்துறை லதா மீது எப்ஐஆர் பதிவு செய்யும் வரை சென்று, பின்னர் பணம் கொடுத்து சரி செய்யப்பட்டது.

ரஜினியின் மகள் தொடங்கிய 'ஆக்கர் நிறுவனம்' தயாரித்த கோவா திரைப்படத்தில் பணியாற்றிய
90 சதவிகித ஊழியர்களுக்கு பணமே தரவில்லை. இறுதியில் இதுவும் நீதிமன்றம் சென்று,
பின்னர் சரி செய்யப்பட்டது.

லதா ரஜினிகாந்த் ஆழ்வார்பேட்டையில் நடத்தி வரும், ட்ராவல்ஸ நிறுவனத்திற்கான இடத்தை வாடகைக்கு விட்ட சென்னை மாநகராட்சி, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கடை வாடகையை உயர்த்துவது வழக்கம். இது போல உயர்த்தியதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தார் லதா. உரிய வாடகையை செலுத்தாவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிண்டியில் லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியின் கட்டிட உரிமையாளருக்கு 10 கோடி வாடகை பாக்கியை வைத்து, அவர் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்ததும் 2 கோடியை தருவதாக ஒப்புக் கொண்டு, பின்னர் அதையும் தராமல் இழுத்தடித்ததால், ஒரு கட்டத்தில் அவர் பள்ளியை இழுத்துப் பூட்டினார்.

ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் பல மாத சம்பள பாக்கி வேலை நிறுத்தம், போராட்டம் என்று நடந்திருக்கின்றன.

இவை அனைத்தும் ஒன்று ரஜினிக்கு தெரியாமல் நடந்திருக்க வேண்டும். அல்லது, தெரிந்தே நடந்திருக்க வேண்டும்.

ரஜினிக்கு தெரியாமலே நடந்திருந்ததாக வைத்துக் கொண்டால், ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்வதற்கு கூட ரஜினிக்கு துப்பு இல்லை என்றே முடிவெடுக்க முடியும்.

தெரிந்தே நடந்திருந்தது என்றால் பேசுவதற்கு எதுவுமில்லை.

#பகிரி

https://m.facebook.com/story.php?story_fbid=1400556020072189&id=100003534139817

Monday, January 1, 2018

திராவிட ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டதா

Satheesh kumaar
Via facebook
2018-01-01

ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால், அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள். அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது.

அது "50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது" என்பது.

நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !!

கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!

#உயர்க்_கல்வி

பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்.

தமிழ் நாடு - 38.2%.
குஜராத் - 17.6%;
மபி - 17.4%;
உபி - 16.8%;
ராஜஸ்தான் - 18.0%;
இந்திய சராசரி : 20.4%

#கல்வி_நிலையங்களின்_தரம்

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,

முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்.

பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பீகார் - 1 ; ராஜஸ்தான் - 3.

முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்

தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ;

பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4

#பொருளாதார_மொத்த_உற்பத்தி (GDP)

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு.

தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த #பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்.

ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.

தமிழ் நாடு - 18.80 lakh crore (2nd Place); பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 10.94 lakh crore (5th Place ; மபி - 7.35 lakh crore (10 th Place) ; உபி - 12.37 lakh crore (4 th Place) ; ராஜஸ்தான் - 7.67 lakh crore (7 th Place) ; சத்தீஸ்கர் - 2.77 lakh crore (17 th Place)

#சாப்ட்வேர்_ஏற்றுமதி (ஆயிரம் கோடியில்)

தமிழ் நாடு - 75,000 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1917 ; மபி - 343 ; உபி - 13,740 ; ராஜஸ்தான் - 712; சத்தீஸ்கர் - 18

#சிசு_மரண_விகிதம் 1000 பிறப்புக்கு

தமிழ் நாடு - 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி: 40

#ஒரு_லட்சம்_பிரசவத்தில்_தாய்_இறக்கும்_விகிதம்

தமிழ் நாடு - 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285; ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167

#தடுப்பூசி_அளிக்கப்படும்_குழந்தைகள்_சதவீதம்

தமிழ் நாடு - 86.7%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 55.2%; மபி - 48.9%; உபி - 29.9%; ராஜஸ்தான் - 31.9%; சத்தீஸ்கர் - 54%; இந்திய சராசரி : 51.2%

#கல்வி_விகிதாசாரம்

தமிழ் நாடு - 80.33%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79%; மபி - 70%; உபி - 69%; ராஜஸ்தான் - 67%; சத்தீஸ்கர் - 71%; இந்திய சராசரி : 74%

ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-

தமிழ் நாடு - 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919

#தனி_நபர்_வருமானம் (Per Capita Income) - ரூபாயில்

தமிழ் நாடு - 1,28,366 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1,06,831; மபி - 59,770 ; உபி - 40,373 ; ராஜஸ்தான் - 65,974 ; சத்தீஸ்கர் - 64,442; இந்திய சராசரி : 93,293

தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.

#வீடுகளுக்கு_மின்சாரம் (households having electricity)

தமிழ் நாடு - 98.3%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 96%; மபி - 89.9%; உபி - 70.9%; ராஜஸ்தான் - 91%; சத்தீஸ்கர் - 95.6%

#மனித_வள_குறியீடு (Human Development Index)

தமிழ் நாடு - 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ; ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087

#ஏழ்மை_சதவீதம் Poverty (% of people below poverty line)

தமிழ் நாடு - 11.28%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63%; மபி - 31.65%; உபி - 29.43%; ராஜஸ்தான் - 14.71%; சத்தீஸ்கர் - 39.93%; இந்திய சராசரி : 21.92%

#ஊட்டசத்து_குறைபாடு_குழந்தைகள் (Malnutrition)

தமிழ் நாடு - 18%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5%; மபி - 40%; உபி - 45%; ராஜஸ்தான் - 32%; சத்தீஸ்கர் - 35%; இந்திய சராசரி : 28%

#மருத்துவர்களின்_எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு - 149; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36

இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம்,,,,

உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற அமெர்த்தியா சென் அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார்,,,,

#தமிழ்நாட்டை_வடமாநிலங்களோடு_ஒப்பிடுவதே_தவறு #முன்னேறிய_நாடுகளோடு_தான்_ஒப்பிட_வேண்டும்

இனி எவனாவது தமிழ்நாடு திராவிடக் கட்சிகளால் நாசமாய் போச்சு என்றால், வட மாநிலத்திற்கு போகும் அடுத்த ரயிலில் ஏற்றி அனுப்புங்கள்,,,,

manoj Kumar அவர்களின் பதிவு via தோழர் Anbe Selva

https://www.facebook.com/permalink.php?story_fbid=567189796964043&id=100010190820245

Sunday, December 31, 2017

பறைச்சிகள் எல்லாம் இரவிக்கை கட்டியதால் தான் துணி விலை கூடியது

கிருஷ்ணசாமி பெ கண்ணன்
Via facebook
2017-12-31

"பறைச்சிகள் எல்லாம் இரவிக்கை கட்டியதால் தான் துணி விலை கூடியது", எனப் பெரியார் சொன்னதாகச் சமூக வலைத் தளங்களில் சிலர் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றனர். அதற்கான விளக்கம்:

வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்த சமயம். வேலூர் நாராயணன் அவர்கள் மகனுக்கும், அமைச்சர் சத்யவாணி முத்து அம்மையார் அவர்கள் மகளுக்கும் இடையே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. அதனை விரும்பாமல் ஜாதிப் பெயரை சொல்லி மேயர் திட்டியதாக ஒரு பிரச்சினை வெடித்தது.

அந்தச் சூழலில் வேலூர் நாராயணன் அவர்கள் தம் பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் அவர்களை உரையாற்றிட அழைத்திருந்தார். இந்தக் கூட்டத்தின் பின்னணியை அறிந்த தந்தை பெரியார் அவர்கள், பொதுக் கூட்டத்திலேயே விவரங்களைப் போட்டு உடைத்து விட்டார்.

வேலூர் நாராயணன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அப்படியா சொல்லியிருக்க மாட்டார். ஒருக்கால் அப்படி சொல்லியிருந்தால் அவர் தி.மு.க.வில் இருப்பதற்கே லாயக்கற்றவர் என்று கடுமையாகப் பேசினார் தந்தை பெரியார்.

அக்கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார் அவர்கள், ஜாதியைப் பற்றிப் பேசுகிறவர் அத்தனைப் பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனே என்று கூறினார். என்னைப் பொறுத்தவரை நான் பறையனாக இருப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதையே கேவலமாகக் கருதுகிறேன். எனக்குப் பிள்ளை இல்லை. ஒரு சமயம் பிள்ளை இருந்தால், அதுவும் பெண்ணாக இருந்தால், மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன்.

காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படி சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லி விடுவேன். இதேபோல் தாழ்ந்த ஜாதிப் பையன்களாகப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன்", என்று சென்னை அயன்புரத்தில் நடைபெற்ற அந்தப் பொதுக் கூட்டத்தில்  (11.12.1968) பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், நான் பறையன் எனக் கேவலமாகச் சொன்னதாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லை சொன்னாலும், அதை ஒழிப்பதற்காக சொன்னது தான்.

எலெக்சன் நேரத்தில் இப்படியெல்லாம் செய்வது சாதாரணம். எலெக்சன் போது, "ராமசாமி நாயக்கர் பறைச்சியெல்லாம் ரவிக்கை போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள்", என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள்.

நான் சொன்னது உண்மைதான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கை போடக் கூடாது; போட்டால் அடிப்பார்கள். மேலே துணியே போகக்கூடாது. அப்படி இருந்த சமுதாயம் காலம் மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது; இன்றைக்கு ரவிக்கை இல்லாமல் பார்க்க முடியவில்லையென்று சொன்னேன்.

இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும், நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதேயாகும்".

Isai Inban பதிவிலிருந்து .....

தரவு:
கவிஞர் கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்.

தோழர்....  ராஜா ஜி

https://m.facebook.com/story.php?story_fbid=2031819907106161&id=100008345140039