Thursday, January 25, 2018

ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை ஏன் வெறுக்கின்றனர்? : அ.மார்க்ஸ் பதில்!

ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை ஏன் வெறுக்கின்றனர்? : அ.மார்க்ஸ் பதில்!

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து கோவில்களை சிதைத்தார்களா? இந்துக்கள் மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி? மத மாற்றம்? இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சி காரணம்? போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார், பேராசிரியர் அ.மார்க்ஸ்.

கேள்வி -பதில் தொகுப்பு:-

இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர். வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா?

வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படிப் போதித்துள்ளன. ஆனால் வரலாற்றை ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் இன்று இஸ்லாமியரை அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது விளங்கும். வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) ‘தஸ்யு’க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் படைஎடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரீயர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகா தவர்களாகவும் ஆக்கினார்கள்.

ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய காலத்தில் இங்குக் குடியேறியவர்கள்தான். சௌகான், பரிகரர், சோலங்கி எல்லாம் வந்தேறிகள்தான். எனில் இஸ்லாமியரை மட்டும் வந்தேறிகள் எனச் சொல்வது என்ன நியாயம்? “ஆரியர் வருகை” எனச் சொல்லும் நம் பாடநூல்கள் “இஸ்லாமியர் படை எடுப்பு” எனச் சொல்வது பிஞ்சு மனத்தில் வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? இங்குள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இந்த நாட்டுக் குடிமக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான். யாருக்கும் வக்காலத்து வாங்குவதல்ல நமது நோக்கம். அரசியல் நோக்கில் இங்கே பரப்பப்பட்டுள்ள மதவெறி பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளது.

இளைஞர்களும் பொதுமக்களும், படித்தவர்களும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து தங்களின் கவனத்தைத் திருப்பி வகுப்பு வெறிக்கு பலியாவதற்கு முஸ்லிம்கள் பற்றி மதவெறியர்களாலும், பத்திரிகைகளாலும், கல்வியாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் கட்டுக் கதைகள் முககியப் பங்கு வகிக்கின்றன. எனவே இந்தக் கட்டுக் கதைகளை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிவது சனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரின் கடமை. இந்த நிலையில் வரலாற்று ஆதாரங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புள்ளி விவர நிறுவனங்கள் தொகுத்துள்ள செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிவதுதான் நமது நோக்கம். இங்கே சொல்லப்பட்டவற்றை ஆதாரங்களுடன் மறுத்தால் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இஸ்லாமியர் படை எடுத்து வந்து இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள் என்பதற்குத்தான் ஆதாரங்கள் இருக்கிறதே?

கஜினி முகம்மது பதினேழு முறை சோமநாதபுரம் கோயிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்குப் பாடநூற்கள் சொல்லியுள்ளன இல்லையா? பண்டைய இந்தியாவில் கோயில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடங்கள் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன. இல்லாவிட்டால் தஞ்சைப் பெரிய கோயிலைச்சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்? பண்டைய மன்னர்களின் போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளைடியப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதான். இந்த அடிப்படையில்தான் கஜினி முகமது கொள்ளையிட்டதும். கோவிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னனைக் கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தைக் கொள்ளையிடவும் எதிரியின் பண்பாட்டு ஆளுமையை அழிக்கவும்தான் கோயில்கள் மீது படையெடுக்கப்பட்டன.

எந்த முஸ்லிம் மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோயில்களையோ தனது பாதுகாப்பிலிருந்த இந்துக் கோயில்களையோ இடித்ததில்லை. அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திலும் அப்படித்தான். அவருக்கு எதிராகச் சதி செய்தவர்களின் கோட்டைகளும் கோயில்களும் இடிக்கப் பட்டன. மற்றபடி முழுமையான மதச் சுதந்திரம் இருந்தது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டிலிருந்து குமரகுருபரர் காசிக்குச் சென்று முப்பதாண்டுகள் சமயப் பொழிவுகள் செய்து அங்கே குமாரசாமி மடம் ஒன்றையும் நிறுவினார்.

இன்னொன்றையும் யோசித்துப் பாருங்கள். தஞ்சைப் பெரிய கோயில் உட்பட இன்றுள்ள பல கோயில்கள் சமண/புத்த கோயில்களை இடித்துக் கட்டப்பட்டவைதானே. இராசராசன் இலங்கையிலுள்ள அநுராதபுரம், பொலனருவை ஆகிய இடங்களிலிருந்த புத்தக் கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி அந்த ஊர்களுக்கு ‘ஜனநாத மங்கலம்’ என்னு தன்னுடைய பெரையச் சூட்டவில்லையா? சுபதாவர்மன் (கி.பி. 1193-1120) என்கிற ‘பார்மரா’ மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமணக் கோயில்களைக் கொள்ளையிடவில்லையா? காசுமீர் இந்து மன்னன் ஹர்ஷன் ஆட்சியில் கோயில்களை இடிப்பதற்கென்றே ‘தெய்வங்களை நிர்மூலம் செய்கிற அதிகாரி’ (தேவோத்பத நாயகன்) என்று ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்ததாக கல்ஹணன் எழுதிய ராஜதரங்கிணில் குறிப்பிடப்பட்டுள்ளதே!

பவுத்த சமணக் கோவில்களை இடித்துத்தான் தஞ்சைப் பெரிய கோவில், காஞ்சி காமாட்சி கோவில் போன்றவையெல்லாம் கட்டப்பட்டன என சுரேஷ்பிள்ளை, மயிலை சீனிவேங்கடசாமி முதலியோர் நிறுவியுள்ளனர். திருவாரூர் கோவில் திருக்குளத்தை விரிவு செய்ய வேண்டும் எனக் காரணம் சொல்லி அங்கிருந்த சமணக் குடியிருப்பு அழிக்கப்பட்டது குறித்துப் பெரியபுராணத்திலேயே சான்றுகள் உள்ளன. எனவே கோயில் இடிப்பு என்பதை எந்தஒரு குறிப்பிட்டமதத்தைப் பின்பற்றும் மக்களின் செயலாகவும் கருத வேண்டியதில்லை.

ஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே? இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்திருக்கிறோமே?

மறுபடியும் பாடநூல்களா, சரி. மன்னர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களின் எதிரிகள்தான். ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களைக் கொள்ளையடித்தவர்கள்தான். முஸ்லிம் மன்னர்கள் இந்துக்கள் மீது ‘ஜிஸியா’ வரிசுமத்தியது உண்மைதான். ஆனால் இந்த வரி இந்துக கோயில்களைப் பராமரிக்க என்று சொல்லப்பட்டது. இஸ்லாமிய மக்கள் மீது வரி இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். ‘சக்காத்’ என்ற பெயரில் அவர்களிடமும் வரி வசூலிக்கப் பட்டது. ‘ஜிஸியா’ வரியும் கூடப் பெண்கள், குழந்தைகள், பார்ப்பனர்களிடம் வசூலிக்கப்பட்டதில்லை. இந்து மன்னர்கள் யூதக் குடிகளிடமிருந்து ‘ஜிஸியா’ வசூலித்தனர் என்று பதினான்காம் நூற்றாண்டுப் பயணி ஒருவர் குறிப்பிடுகிறார்.

ஜிஸியாவுக்காகப் பயந்து கொண்டு இந்துக்கள் மதம் மாறினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். எந்த முஸ்லிம் மன்னரது காலத்திலும் இந்து மக்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதில்லை. இதன் பொருள் மதமாற்றங்ளே இல்லை என்பதல்ல; இரண்டு வகைகளில் மதமாற்றங்கள் நடைபெற்றன. ஒன்று: “எல்லோரும் சகோதரர்களே” என்கிற ‘சுஃபி’ துறவிகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்து மதச் சாதிக் கொடுமைகளால் வெறுப்புற்ற அடிநிலை மக்கள் இஸ்லாமிற்கு மாறினர். இரண்டு: அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கமாக இருந்து புதிய மன்னர்களைத் தங்கள் விசுவாசத்தால் அசத்த விரும்பியர்களும் மதம் மாறியுள்ளனர். ஆனால் எந்த நிலையிலும் சாதாரண மக்கள் கட்டாயமாய் மதம் மாற்றப்பட்டதில்லை. அரசியல் காரணங்களுக்காகச் சில சமயங்களில் சந்தேகத்திற்கிடமான சில சமீன்தார்கள் மதம் மாற்றப்பட்டிருக்கலாம்.

அலாவுதீன் கல்ஜி இந்து ஜமீன்தார்களை ஒடுக்கினானே?

அவர் இந்துவல்லாத இஸ்லாமிய ‘இக்தாதார்’களையும் கூடத்தான் ஒடுக்கினார். மதவெறியன் என நீங்கள் அவரைத் தூற்றுகிறீர்கள். ஆனால் அவர் காலத்திய இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஜியாபரனி என்ன சொல்கிறார் தெரியுமா? இஸ்லாம் மதத்திற்காகக் கல்ஜி ஒரு அரசன் என்ற முறையிலோ, தனி வாழ்விலோ எதுவும் செய்ததில்லை எனத் தூற்றினார். திருப்பித் திருப்பிச் சொல்கிறேன் என நினைக்காதீர்கள். அரசியல் காரணங்களுக்காகச் சில தனிநபர்களை இஸ்லாமாக்க அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் செய்த சில முயற்சிகளை, பெரும் மக்கள் திரள்களைக் கட்டாயமாக மதம்மாற்றினார்கள் என்ற பொருளில் நாம் புரிந்துகொள்ளக் கூடாது. அரசியல் நோக்கத்திற்காகக் குறுநில மன்னர்களோடு கட்டாயமான மண உறவுகளை இந்து மன்னர்கள் ஏற்படுத்திக் கொண்டது பற்றி வரலாற்றிலும், சங்கப் பாடல்களிலும் படிக்கிறோமில்லையா அப்படித்தான் இதுவும். இதெல்லாம் சரி அல்லது தவறு என நான் சொல்ல வரவில்லை. எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்புமேற்கொள்ளப்பட்ட அதிகார வெறி பிடித்த மன்னர்களின் நடவடிக்ககளை அவற்றிற்குரிய சூழலிலிருந்து விலக்கிப் பூதாகரப்படுத்தி இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது இரத்த வெறி கொண்ட பகைமையை ஏற்படுத்தப் பயன்படுத்தக் கூடாது.

இந்து மன்னர்கள் எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கலாம். ஆனால் ஓரிருவரைக் கூடக் கட்டாயமாய் மதம் மாற்றியதில்லையே?

நாம் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம் போன்றவை பரப்புதற்குரிய மதங்கள். இந்து மதம் அப்படிப்பட்டதல்ல. முற்பிறவியில் ஒருவர் செய்த கருமவினைகளுக்கேற்ப இப்பிறவியில் அவர் குறிப்பிட்ட சாதியில் பிறந்து இழிவுகள் அல்லது பெருமைகளை அடைகிறார் என்கிறது இந்துமதம். எனவே ஒருவரை வேற்று மதத்திலிருநது இந்து மதத்திற்கு மாற்றினால் அவரை எந்தச் சாதியில் வைப்பது என்பது இந்து மதத்திற்கு ஒரு பிரச்சனை. அடுத்து இங்கேயுள்ள வைதிக, சனாதன, வருணாசிரமதத்திற்கு இந்து மதம் என்ற பெயர் சமீபத்தில் ஏற்பட்டதுதான் என்பதை சங்கராச்சாரி, விவேகானந்தர், பாரதி உட்படச் சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

வரலாறு முழுமையும் பல்வேறு சுதந்திரமான இனக்குழு மக்களை அவர்களுக்கொரு சாதிப் பெயர் கொடுத்துத் தனது ஆட்சிக்குள்ளும் சாதிய ஏற்றுத் தாழ்வுகளுக்குள்ளும் இந்து மன்னர்கள் பார்ப்பனரின் துணையோடு கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் அந்தச் சுதந்திர மக்கள் மீது பொருளாதாரச் சுரண்டல்களும் சாதியக் கடமைகளும் திணிக்கப்பட்டு அவர்கள் என்றென்றும் அடிமைகளாக்கப் பட்டனர். மூன்றாவதாக மதம் மாற்றியதில்லையே தவிர, மாற்று மதஙகளை இழிவு செய்வதிலும் அரசதிகாரத்தின் துணையோடு மாற்று மதத்தவரை இரக்கமேயில்லாமல் கொன்று குவித்ததிலும் இந்து மதம் வேறெந்த மதத்திற்கும் சளைத்ததில்லை. இந்து சமயாச்சாரியார்களின் துணையோடு பாண்டிய மன்னன் எண்ணாயிரம் சமணர்களை ஆசன வாயில் கூரிய இரும்பைச் செருகிக் கொன்றதை நமது பக்தி இலக்கியங்கள் பாராட்டியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

‘பாசிப்பல் மாசிமெய்யர்’, ‘ஊத்தைவாயர்’, ‘மந்திபோல் திரியும் அந்தகர்கள்’ என்றெல்லாம் திருநாவுக்கரசர் சமணர்களைத் திட்டியுள்ளதைத் தேவாரத்தில் காணலாம். சமணர்களையும் சாக்கியர்களையும் “கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங்கட்டாய் அரங்கமா நகருளானே” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் வேண்டினார். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போலச் சாக்கியப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுள்ளம் வேண்டுமெனச் சம்பந்தர் பாடினார். பாடியது மட்டுமல்ல சோழ, பாண்டிய அரசுகளின் துணையோடு இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டதற்கு வரலாற்றில் சான்றுகளுள்ளன.

பிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்கள் காலத்தில் இஸ்லாமியக் கோயில்களைப் பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இஸ்லாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக் கூட இருந்திருக்கிறார்களே!

உண்மைதான். நான் முன்பே குறிப்பிட்டபடி இவை எல்லாமே அரசியல் நோக்கில் செய்யப்பட்டவைதான். முஸ்லிம் மன்னர்களின் காலத்திலும் இந்துக் கோயில்கள் பராமரிக்கப்பட்டதால் இன்றளவும் பழமையான இந்துக் கோயில்கள் நாடெங்கும் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள். ரஜபுத்திரர், பார்ப்பனர் போன்ற இந்துமத ஆதிக்கச் சக்திகள் முஸ்லிம் மன்னர்களிடம் உயரதிகாரிகளாக இருந்துள்ளனர். அக்பரிடம் அதிகாரியாக இருந்த ராஜா மான்சிங் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். முகம்மது பின் துக்ளக் காலத்தில் அலிஷா நாது என்கிற இஸ்லாமிய குறுநிலத் தலைவன் தனக்குட்பட்ட பகுதியில் கொடுமைகள் செய்வதாகப் பரான் என்ற இந்து நிலப்பிரபு முறையிட, அந்தப் பகுதி நாதுவிடமிருந்து பறிக்கப்பட்டு பரானிடம் வழங்கப்பட்டது. இதற்காக நாது சகோதரர்கள் துக்ளக்கை எதிர்த்துக் கலகம் செய்தனர். அயோத்தியிலுள்ள அனுமான் கர்த்திக் கோயில் தொடர்பாகச் ‘சுன்னி’ முஸ்லிம்களுக்கும் இந்துச் சாதுக்களுக்குமிடையே பிரச்சினை வந்தபோது டில்லி மன்னர் வாஜித் அலிஷா இந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார். இது தொடர்பாக அலிஷா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் உள்ளன. பழைய சங்கதிகள் கிடக்கட்டும். சமீபத்திய வரலாற்றுக்கு வருவோம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?
நாடு என்றால் என்ன, நாட்டுப் பற்று என்பதெல்லாம் எவ்வாறு மக்கள் மத்தியல் உருவாக்கப்படுகிறது, இந்தியா என்றொரு நாடு ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இருந்ததுண்டா, எந்த ஒரு பகுதி மக்களும் தாங்கள் பிரிந்து போய்ச் சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்பினால் அதனை நிறைவேற்றுவதுதானே நியாயம் என்பன போன்ற கேள்விகளிலிருந்து தொடங்கி மிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய விசயம் இது. விரிவாகப் பேசுவதற்கு இங்கே அவகாசமில்லாததால் நேரடியாக நீங்கள் கேட்டதற்கு வருவோம்.

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிராகத் தொடக்க காலத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். குறிப்பாக 1857 முதல் சுதந்திரப் போரில்  முஸ்லிம் மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அகில இந்தியத் தேசிய உணர்வு என்பதை முதற்கட்ட இந்துத் தலைவர்கள் உருவாக்கியபோது ஆங்கில ஆட்சியின் ‘புதிய இழிவு’களுக்கெதிராக இந்தியப் பழமையை அவர்கள் உயர்த்திப் பிடித்தனர். இந்தியப் பழமை என்பதை இந்துப் பழமையாகவே முன் வைத்த இவர்கள் இந்த அடிப்படையில்  ஆரிய சமாஜம், வருணாசிரம சபை, இந்து மகாசபை போன்ற புத்துயிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். இன்றைய ‘இந்துத்துவம்’, ‘இந்து ராஷ்டிரம்’ ஆகிய கருத்தாக்கங்கள் முதன் முதலில் முன வைக்கப்பட்டது இந்துமகாசபையில்தான் என்பது இன்று அவர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. சாவர்கர், பாய் பரமானந்தர் போன்றவர்களால் தலைமை தாங்கப்பட்டு இயங்கிய இவ்வமைப்பு இந்துக்கள் மத்தியில் முக்கியமான கருத்தியல் சக்தியாக விளங்கியது. குறிப்பாகக் காந்தியின் வருகைக்கு முன்பு இதன் பங்கு குறிப்பிடத்தக்கது.

1933ல் இந்து மகாசபையின் தலைவராக இருந்த பாய் பரமானந்தர் பிரிவினைக்கு முறபட்ட இந்தியாவை மத அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிக்க வேண்டும் என முதன் முதலில் சொன்னவர்களில் ஒருவர். இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியைச் சிந்துவிற்கு அப்பாற்பட்ட ஆப்£கானிஸ்தான் முதலியவற்றோடு இணைத்து “ஒரு மாபெரும் முஸல்மான் பேரரசு உருவாக்கப்பட வேண்டும். அங்குள்ள இந்துக்கள் இங்கே வந்துவிட வேண்டும். இங்குள்ள முஸ்லிம்கள்  அங்கே போய்விடவேண்டும்” என்றார்.  1905ம் ஆண்டு வாக்கிலேயே தனக்கு இக்கருத்து தோன்றியது எனவும் அவர் கூறினார். பின்னர் 1937ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டில் அப்போது தலைவராக இருந்த சாவர்கர், “இந்தியாவை ஒற்றைத் தேசமாகக் கருத முடியாது. முக்கியமாக இரண்டு தேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன. ஒன்று இந்துக்களின் தேசம்; மற்றது முஸ்லிம்களின் தேசம்” என்றார்.

இங்கொன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களுக்குத்  தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கை முஸ்லிம் லீக்கால் முதன் முதலில் எப்போது வைக்கப்பட்டது தெரியுமா? 1940ம் ஆண்டு லாகூர் மாநாட்டில்தான். அதற்கு முன்பே இந்து மகாசபை இந்தக் கோரிக்கையை வைத்துவிட்டது என்பதுதான் உண்மை.நாட்டுப்பிரிவினை பற்றிப் பேச சர்வ கட்சி மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அதில் ஜின்னா மூன்று கோரிக்கைகளை வைத்தார். 1. மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒன்று பிரதிநிதித்துவம், 2. பஞ்சாப் மற்றும் வங்கத்தில் முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம், 3. சிந்து, பலூசிஸ்தான் மற்றும் வடமேற்கு எல்லை மாகாணம் எனப் புதிய மூன்று முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங்களை உருவாக்குதல். இவை அனைத்தும் முற்றிலும் நியாயமான கோரிக்கைகள். அன்றைய முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கோரினார் ஜின்னா. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் இதை ஏற்றுக் கொண்டனர். தேஜ் பகதூர் சப்ரு போன்றவர்கள் இதை அம்மாநாட்டிலேயே ஆதரித்துப் பேசினர்.மாநாட்டில் பங்கு பெற்ற இந்து மகாசபைத் தலைவர்கள் இதற்கு எதிராகப் பேசி ஒரு முடிவுக்கு வராமல் மநாட்டைக் கலைத்தனர். அதன் பிறகு ஜின்னா தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். “ஜின்னாவின் திட்டம் அறிவு ததும்பும் திட்டம்” எனப் பாராட்டினார் பெரியார் ஈ.வெ.ரா.

தாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று இந்துககள் சொன்னார்களா? நம்ப முடியவில்லையே! அவர்களுக்கு இதில் என்ன லாபம்?

இந்துக்கள் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்து மகாசபைத் தலைவர்கள் சொன்னார்கள். சாதாரண மனிதனுக்கு, தான் ஒரு இந்து என்ற உணர்வே கிடையாது. அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமானால் இருக்கலாம். உயர்சாதி இந்து ஆதிக்கச் சக்திகள் வெள்ளையரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறித்துத் தாங்கள் வைத்துக் கொள்ள விரும்பியபோது சாதிகளாய்ப் பிளவுண்டிருந்த மக்களை ‘இந்துக்கள்’ என்ற பெயரில் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது. எனவே முஸ்லிம்கள் என்றொரு ‘எதிரி’யைக் காட்டித் தங்களிடமிருந்து அந்நியமாகியிருந்த தாழ்ந்த சாதி மக்களைத் தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உயர்சாதியினருக்கு இருந்தது.

இன்னொன்றையும் நீங்கள் வரலாற்று ரீதியாய்ப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலேயரின் வருகையோடு தேர்தல் அரசியலும், மக்கள் தொகைக் கணக்கீடும் (1891) இங்கே நுழைந்தது. இந்தக் கணக்கீட்டில் முஸ்லிம், கிறிஸ்தவர், சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர் எனத் தனித் தனியே விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சூழலில் பாகிஸ்தான் இந்தியாவோடு இணைந்திருந்தால் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையை விட அதிகமாய்ப் போய், தேர்தல் அரசியலில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் ஆபத்திருந்ததை இந்துத் தலைவர்கள் உணர்ந்தனர். இந்நிலையை எதிர்கொள்ள அவர்கள் இரண்டு வழிகளை மேற்கொண்டனர்.

ஒன்று : தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துககளாகக் கருத வேண்டும் என்கிற கருத்தைப் பரப்புவது. 1934 பிப்ரவரியில் அலகாபாத்தில் கூட்டப்பட்ட இந்து மகாசபையின் சிறப்புக் கூட்டமொன்றில் இக்கருத்து விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துககளாகக் கருத வேண்டும் என்ற கருத்தை ஆர்ய சமாஜிகளும் இதர சனாதனிகளும் எதிர்த்தனர். எனினும் அரசியல் லாபம் கருதித் தலைவர்கள் இக்கருத்தை வலியுறுத்தினர். இறுதியாக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுக்கிணற்றில் நீர் இறைக்கும் உரிமை போன்றவற்றை மறுக்கக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய இந்து மகாசபை, “இருந்தாலும் அவர்கள் ‘யஞ்ஞோபவீதம்’ (பூணூல்) அணியக்கூடாது” என அறிவித்தது.

இரண்டு: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்து தனி நாடாக்கிவிட்டால் எஞ்சிய பகுதியில் ‘இந்து ராஜ்யம்’ அமைத்து அதில் தாங்கள் ஆட்சி செலுத்த முடியும் என உயர்சாதி இந்துக்கள் நினைத்தனர். உண்மைஇப்படி இருக்க நாட்டுப் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டுமே காரணம் எனச் சொல்வது அபத்தம்.

அப்படியானால் நாட்டுப் பிரிவினையில் முஸ்லிம்கள்ளுக்குப் பங்கே இல்லை என்கிறீர்களா?

இந்துக்களுக்குத் தனியாக ஒரு நாடு என்றால் அதில் தாங்கள் தலைமை ஏற்க முடியும் என இந்து ஆதிக்கச் சக்திகள் நினைத்தது போலவே முஸ்லிம்களுக்குத் தனிநாடு என்றால் தாங்கள் ஆதிக்கம் செலுத்த முடீயும் என முஸ்லிம் மேல்தட்டினரும், முஸ்லிம் லீக் தலைவர்களும் நினைத்தனர். ஆனால் அடிப்படையில் ஒவ்வொரு முஸ்லிமும் பிரிவினைவாதி என்றோ, முஸ்லிம் மதத் தலைவர்கள் (உலமாக்கள்) பிரிவினை வாதத்தை முன் வைத்து முஸ்லிம்களைத் தங்களின் கீழ்த் திரட்டினர் என்றோ கருத வேண்டியதில்லை. ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற மன்னர்கள் வெள்ளையராட்சியை எதிர்த்துக் கடுமையாகப் போராடியதை முன்பே குறிப்பிட்டேன்.

1857 சுதந்திரப் போர் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களில் மவுல்விகளான அகமதுல்லாஷா, இனாயத் அலி போன்றோர் நானாசாகேப், ஜான்சிராணி ஆகியோரோடு இணையாகப் போற்றப்படுகின்றனர். 1885ல் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது சர் சையத் போன்ற இஸ்லாமிய மேல்தட்டினர் காங்கிரசில் சேர வேண்டாம், ஆங்கிலேய ஆட்சிக்குச் சார்பாக இருந்து முஸ்லிம்களுக்குச் சலுகைகள் பெறுவதுதான் முக்கியம் எனக் கூறியபோது முஸ்லிம் மதத்தலைவர்களான மவுலானா ரஷீத் அலி காங்கோய் போன்றோர், “காங்கிரசில் சேர்ந்து இந்துச் சகோதரர்களுடன் போராடுங்கள்” என முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தனர். இந்தத் தன்மை கடைசிவரை தொடர்ந்தது. ஜின்னா போன்ற அரசியலை முதன்மையாகக் கொண்ட சக்திகள் காங்கிரசுக்கு மாற்றாக இருந்து பிரிவினையை ஆதரிப்பது என்பதும் மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்ற மதப் பற்றாளர்கள் தொடர்ந்து காங்கிரசில் இருந்து அதனை எதிர்ப்பது என்பதும் தொடர்ந்தது.

மத அடிப்படையிலும் உலமாக்கள் நாட்டு ஒற்றுமைக்கு ஆதரவு காட்டினர். கூட்டுத் தேசியத்திற்கு இஸ்லாம் எதிரானதல்ல. முகம்மது நபி அவர்களே மதினாவிற்குச் சென்றவுடன் பிற மதத்தினருடன் கூட்டுத் தேசியத்தை வலியுறுத்தினார். ஜமாத் லைவராக இருந்த மவுலானா உசேன் அகமத் மதானி, “தேசம் (குவாம்) என்பது நில எல்லைத் தொடர்பான கருத்தாக்கம். ‘உம்மாஹ்’ அல்லது ‘மிலாத்’ என்பது மதம் தொடர்பான கருத்தாக்கம். இரண்டையும் குழப்ப வேண்டியதில்லை. ஒருநில எல்லைக்குள் இரு மதத்தினர் இணைந்து வாழ்வதென்பது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானதல்ல” என்றார்.

சர் சையத் போன்ற மேல்தட்டினர் காங்கிரசுக்கு எதிராக வெள்ளையருக்கு ஆதரவளித்தனர் என்று சொன்னீர்கள். இது இழிவில்லையா?

சர் சையத் செய்தது சரி என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இந்து மத ஆதிக்கச் சக்திகளுக்கெதிராக வெவ்வேறு குழுவினர் தங்களின் உரிமைகளைப் பெற வேண்டி, காங்கிரசை எதிர்த்தனர்என்பது சர் சையத் போன்றோர் மட்டும் செய்த காரியமல்ல. பல பிரிவினரும் இதைச் செய்துள்ளனர். நமது நீதிக்கட்சி, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரும் கூட இந்நிலை எடுக்க நேர்ந்ததை நாம் மறந்துவிடக் கூடாது நான் சொல்ல வருவது இதுதான்.

ஒன்று: ஆதிக்கச் சக்திகள் அவர்கள் – முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, இந்துக்களாக இருந்தாலும் சரி – தங்களின் நலன் நோக்கில்தான் செயல்படுகின்றன. முஸ்லிம்களை மட்டும் சுட்டிக்காட்டி எதிர்ப்பது அபத்தம்.

இரண்டு: முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றைக் கருத்துடையவர்கள், ஒரே மாதிரி செயல்படுபவர்கள், ஒரே மாதிரி வாக்களிப்பவர்கள் என்பதெல்லாம்கூட அவர்கள் பற்றிச் சொல்லக்கூடிய கட்டுக் கதைகளில் ஒன்றுதான். முஸ்லிம்களுக்குள்ளும் பல்வேறு போக்குகள் இருந்தன. அரசியல் சக்திகளது கருத்தும் மதத் தலைவர்களது கருத்தும் எல்லாக் காலங்களிலும் ஒத்துப்போனதில்லை. பலரும் நினைப்பது போல முஸ்லிம் மதத் தலைவர்களும் முஸ்லிம் மக்களும் பிரிவினைவாதிகள் இல்லை. தவிரவும் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த முஸ்லிம் சமூகத்தை நவீனப்படுத்துவது, புதிய ஆங்கிலக் கல்வியை அவர்களுக்கு அறிமுகம் செய்வது, புதிய பல்கலைக் கழகம் ஒன்றை உருவாக்குவது என்றெல்லாம் சையத் போன்றவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெறும் ஆங்கில ஆதரவு நடவடிக்கையாகப் பார்த்துவிட முடியாது.

இந்திய வரலாறு எழுதப்பட்டதே இந்து வகுப்புவாதச் சார்போடுதான் என்பது போலச் சொன்னீர்கள். வரலாறு என்பது பழைய சம்பவங்களைத் தொகுத்துச் சொல்வதுதானே? இது எப்படி ஒரு பக்கச் சார்பாக இருக்க முடியும்?

வரலாறு என்பது ஒருவகையான ‘கதை சொல்லல்’தான். ஒரு சம்பவத்தைக் கண்ணால் பார்த்த இருவர் தனித்தனியே அதை விவரிக்கும் போது இருவேறு கதைகள் உருவாகிவிடுகின்றன என்பதை நாம் அனுபவத்தில் உணர்கிறோம். வரலாறும் அப்படித்தான் சம்பவங்கள் ஒன்றாக இருந்த போதிலும் சொல்பவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அவற்றில் ஒரு சில தேர்ந்தெடுக்கப்படும்போது வெவ்வேறு வரலாறுகள் தோன்றிவிடுகின்றன. தொடக்கக் காலத்தில் இந்திய வரலாற்றை எழுதியவர்கள் ஜேம்ஸ்மில் போன்ற வெள்ளையர்கள்தான். பிரித்தாளும் சூழ்ச்சி என்பது அவர்களின் அரசியல் கொள்கை.எனவே இந்திய வரலாற்றைக் காலப்பாகுபாடு செய்யும்போது ‘இந்து இந்¤தியா’, ‘முஸ்லிம் இந்தியா’, ‘பிரிட்டிஷ் இந்தியா’ எனப் பகுத்தனர். எனவே இந்து இந்தியா படையெடுப்பால் முஸ்லிம் இந்தியாவாக்கப்பட்டது என்பதும் வெள்ளையராட்சியில் இது நவீன வளர்ச்சியைப் பெற்றது என்பதும்இதன் மூலம் பொருளாகிறது. ஆனால் நவீன வரலாற்றறிஞர்கள் இந்திய வரலாற்றை இப்படி மத அடிப்படையில் பகுப்பது தவறு என்கின்றனர். பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியா, நவீன இந்தியா எனப் பிரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். நேரு கூட இப்படித்தான் பகுத்துள்ளனர்.

வெள்ளையர் எழுதிய வரலாற்றுக்கு எதிராக இந்தியத் தேசியவாதிகள் வரலாறு எழுதியபோது ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் பழம் பெருமையைத் தூக்கிப் பிடித்தனர். உணர்வு ரீதியாய் இந்தியத் தேசியத்தைக் கட்டமைக்க முயன்ற உயர்சாதி இந்துக்கள் பண்டைய ‘இந்து’ இந்தியாவை இலட்சியமாக முன் வைத்தனர். இந்தச் செயற்பாடுதான் முஸ்லிம்கள் பற்றிய பல்வேறு விதமான வரலாற்றுப் பொய்களுக்கும் காரணமாகியுள்ளன. பெரும்பாலும் உயர்சாதியினரே ஆதிக்கம் செலுத்தும் கல்வித்துறை, பத்திரிகை, தொலைக்காட்சி முதலியவற்றில் இந்நிலை தொடர்கிறது. இதனால் சாதாரண மக்கள் மத்தியிலும் இப்பொய்கள் ஆழப்பதிந்துள்ளன. இருந்தபோதிலும் பல சனநாயகச் சிந்தனையுடைய வரலாற்றாசிரியர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் இத்தகைய வரலாற்றுப் பொய்களைத் தோலுரிக்கும் முயற்சிகளையும் செய்தே வந்திருக்கின்றனர். பாபர் மசூதிப் பிரச்சினையில் கூட இந்து மத வெறியர்கள் வரலாற்றைப் புரட்ட முயற்சித்த போதெல்லாம் இந்தப் புரட்டல் வேலைகளுக்கெதிரான இவர்களின் முயற்சிகள் பாராட்டும்படியாக இருந்தன. இன்று இந்துத்துவவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் செய்த முதல் வேலைகளில் ஒன்று வரலாற்றைத் திருத்தியதுதான். பழைய பாடநூற்களை நீக்கிவிட்டு சி.பி.எஸ்.சி என்கிற மத்திய உயர் கல்வி நிறுவனம் இப்போது ஏழு புதிய வரலாற்றுப் பாடநூற்களை வெளியிட்டுள்ளது. இதில் மதச்சார்பற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டு, முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டும் பல கருத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தப் போகிற முயற்சி இது.

கடைசியாக ஒரு கேள்வி. இந்தக் காஷ்மீர் விவகாரம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். இந்திய யூனியனில் ஒரு மாநிலமாகிய காசுமீருக்கு மட்டும் என்ன தனி உரிமை? அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்கிவிட வேண்டும் என்கிற கோரிக்கை நியாமானதுதானே?

காஷ்மீர்ப் பிரச்சினையையும் நீங்கள் கொஞ்சம் வரலாற்று ரீதியாய்ப் பார்க்க வேண்டும். 1846க்குப் பின்பு பிரிட்டிஷாரின் எடுபிடிகளான டோக்ரா மன்னர்கள் காஷ்மீரை ஆண்டு வந்தனர். இவர்கள் இந்துக்கள். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மொத்த சனத் தொகையில் 77 சதம் பேர் முஸ்லிம்கள். டோக்ரா மன்னர்களின் கொடுமையான ஆட்சிக் கெதிராக 1931ல் காஷ்மீர மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இதன் விளைவாக அரசியல் சீர்திருத்தத்திற்கான குழு ஒன்றை அன்றைய அரசு அமைத்தது. இந்தப் பின்னணியில் 1939ல் ஷேக் அப்துல்லா தலைமையில் ‘தேசிய மாநாடு’ கட்சி தொடங்கப்பட்டது. இக் கட்சியின் சார்பாகப் பல்வேறு சனநாயகக் கோரிக்கைகளை உள்ளடக்கிய ‘புதிய காஷ்மீர்’Õ கோரிக்கை 1944ல் முன்வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 1945ல் “டோக்ரா மன்னர்களே வெளியேறுங்கள்” போராட்டம் தொடங்கப்பட்டது. ராஜா அரிசிங்கின் அரசு கொடும் அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முயன்றது. இதற்கிடையில் 1947ஆக.15ல் ஆட்சி மாற்றம் நடைபெற்றது.

மத அடிப்படையிலான நாட்டுப் பிரிவினையோடு இந்த ஆட்சி மாற்றம் அரங்கேறியது. ஜோத்பூர், ஜீனாகத், அய்தராபாத், காஷ்மீர் போன்ற சமஸ்தானங்களைப் பொறுத்தமட்டில் “மக்கள் விருப்பை அறியக் கணிப்புத் தேர்தல் ஒன்று நடத்தி அதனடிப் படையில் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என இந்திய அரசு (அக். 5, 1947) அறிவித்தது. ராஜ அரிசிங் இணைப்பு பற்றித் திட்டவட்டமாக முடிவு எதையும் அறிவிக்காத சூழலில் 1947 அக்டோபர் 26ல் வடமேற்கு எல்லைப் பகுதியிலிருந்த இனக்குழு மக்கள் பாகிஸ்தான் அரசாதரவோடு காஷ்மீர் மீது படையெடுத்தனர். சமாளிக்க முடியாத அரிசிங் இந்திய அரசின் உதவியை நாடினார். இணைப்புக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே படைகளை அனுப்ப முடியும் என்கிற நிபந்தனையோடு படைகளை அனுப்பிக் காஷ்மீரை இந்திய அரசு கைப்பற்றிக் கொண்டது. இணைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்யவே அரிசிங் காஷ்மீரை விட்டே ஓடினார்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை சீரானவுடன் கணிப்புத் தேர்தல் நடத்துவதாக நேரு வாக்களித்தார். ஆனால் அந்த முடிவை நிறைவேற்றும் முயற்சியை அவர் மேற்கொள்ளவேயில்லை. இந்த அடிப்படையில் இந்திய-பாக். போர் ஒன்று நிகழும் வாய்ப்பு வளர்ந்தது. இந்தப் பின்னணியில் இந்தியாவே இந்தப் பிரச்சினையை ஜன. 1, 1948 ?

https://m.facebook.com/photo.php?fbid=109153425919523&id=100004745972810&set=a.104192513082281.10547.100004745972810

Wednesday, January 24, 2018

உங்கள் நிலைப்பாடு என்ன?

முஹம்மத் ஹுஸைன்,
தி இந்து நாளிதழ்
23.01.2018

உங்கள் நிலைப்பாடு என்ன?

பிறர் மனம் நோகாமல் இனிமையாக நடந்துகொள்வது மிகவும் முக்கியம். ஆனால், நல்லவர் என்று பெயரெடுக்கும் முனைப்பில் நம்முடைய இயல்பையும் தனித்துவத்தையும் இழக்காமல் இருக்க வேண்டியது அதைக்காட்டிலும் அவசியம். நம்முடைய விருப்பு வெறுப்பை மறைத்து நம்முடைய நிலைப்பாட்டைப் பிறருக்காக மாற்றிக்கொள்வது தவறான செயல். நம்முடைய இயல்புக்கு எதிரான எந்த ஒரு செயலும் மன உளைச்சலைத்தான் தரும்.

நூலிழை வித்தியாசம்

உறுதியான நிலைப்பாடுதான் கருத்துப் பரிமாற்றத்துக்கான அடிப்படைத் தேவை. எல்லாவற்றிலும் அவரவருக்கு ஒரு நிலைப்பாடு இருக்கும். ஆனால், அதன் உறுதித் தன்மை நமது தெளிவான புரிதலையும் ஆளுமையையும் சார்ந்திருக்கும். இந்த உறுதியான நிலைப்பாட்டுக்கும் திமிருக்கும் மெல்லிய நூலிழை அளவுதான் வித்தியாசம்.

நமது நிலைப்பாட்டில் உள்ள தவறைத் தெளிவாகச் சுட்டிக்காட்டிய பின்னும் திமிரானது அதனை ஏற்றுக்கொள்ள அனுமதிக்காது. ஆனால், உறுதியான நிலைப்பாடு தன்னைத் தெளிவாக முன்னெடுத்து வைத்துப் பிறருக்கு அதைப் புரியவைக்க முயலும். பிறரின் கருத்துகளையும் நேர்மையுடன் பரிசீலித்துத் தேவைப்பட்டால் தன்னை மாற்றிக்கொள்ள அது உதவும். சிலருக்கு இயல்பாகவே தனித்துவத்தை இழக்காமல் உறுதியாக இருக்கும் திறன் இருக்கும். மற்றவர்கள் கீழே உள்ள எளிய வழிமுறைகள் மூலம் அதை வளர்த்துக்கொள்ளலாம்.

மனநிலையை மாற்றியமைத்தல்

உறுதியான நிலைப்பாட்டுக்குத் தடையாக இருக்கும் தவறான எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் முதலில் அகற்ற வேண்டியது அவசியம். உங்கள் இயல்பை நேர்மையாக வெளிப்படுத்தத் தடையாக இருக்கும் எந்த எண்ணமும் நம்பிக்கையும் உங்களுக்குத் தேவையற்ற ஒன்று என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

எல்லைகளை வரையறுத்தல்

எல்லைகளை வரையறுப்பது மிகவும் எளிதானது. உங்களுக்கென்று எப்போதும் ஒரு சுதந்திரம் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் எல்லைகள் தானாகவே உருவாகிவிடும். பின் அந்த எல்லைகளைத் தெளிவாகப் பிறருக்கு உணர்த்துவது அவசியம். இந்த எல்லைகள் கண்களுக்குப் புலப்படாத ஒரு பாதுகாப்புக் கவசம். இது அளிக்கும் தைரியம் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதற்கு உதவும். எல்லைகள் வரையறுக்கப்படவில்லை என்றால் உங்களது வாழ்க்கை பிறரால் தீர்மானிக்கப்படும்.

விளைவுகளுக்குப் பொறுப்பேற்றல்

உங்கள் நிலைப்பாடு மற்றவர்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஆனால், அவர்கள் மறுதலிப்பதற்கான காரணம் உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். பெற்றோர்களோ ஆசிரியர்களோ நண்பர்களோ யாராக இருந்தாலும் காரணங்களைத் தெளிவாகக் கேளுங்கள். அவற்றில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் தைரியமாக உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள். ஒருவேளை அது உங்களுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தினால் நேர்மையுடன் அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். நம் தவறுகளைவிடச் சிறந்த ஆசான் கிடையாது. எனவே, அந்த விளைவுகளைப் படிப்பினையாக எடுத்துக்கொண்டு வாழ்வை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

சுருக்கிக்கொள்ளாதீர்கள்

மனதை ஊடுருவி அதனுள் இருப்பதை அறியும் சக்தி இங்கு யாருக்கும் இல்லை. எனவே, உங்கள் தேவைகளும் விருப்பங்களும் பிறருக்குத் தானாகவே புரியும் என்று எதிர்பார்க்காதீர்கள். சரியா தவறா என்ற வட்டத்தில் உங்களைச் சுருக்கிக்கொள்ளாதீர்கள். நீங்கள் நினைப்பதை எந்தத் தயக்கமும் இன்றி, தெளிவாகச் சொல்லுங்கள். தயக்கமற்ற வெளிப்பாடு உங்கள் நிலைப்பாட்டை எளிதாகப் பிறரிடம் எடுத்துச் செல்லும்.

மற்றவர் நடத்தைக்கு நீங்கள் பொறுப்பல்ல

உங்களது உறுதியான நிலைப்பாடு பிறருக்குக் கோபத்தையோ வருத்தத்தையோ ஏற்படுத்தலாம். ஆனால், அது அவர்களின் பிரச்சினை. நீங்கள் அதற்கு எந்த விதத்திலும் பொறுப்பல்ல. பிறரிடம் இனிமையாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் உங்கள் நேர்மையான நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள். நிலைப்பாட்டை மாற்றுவதால் உங்களுக்கும் அவர்களுக்கும் எத்தகைய நன்மையும் விளையாது. எனவே, உங்கள் நிலைப்பாட்டில் உண்மை இருந்தால் மற்றவர்களின் தவறான உணர்ச்சி வெளிப்பாடுகளைப் புறந்தள்ளி துணிந்து முன்னேறுங்கள்.

விடா முயற்சி

இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் உங்களுக்கு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் தன்மை வந்துவிடும் என்று எண்ண வேண்டாம். இது விடாமல் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயிற்சி. இது உங்கள் இயல்பாக மாறுவதற்குச் சில காலம் பிடிக்கும். ஆனால், முயன்றால் முடியாதது எதுவும் இல்லையே!

முதலில் பாதிப்பு குறைவாக இருக்கும்விதமாக உங்கள் நண்பர்களிடம் இதைச் செயல்படுத்திப் பழகலாம். அடுத்து, நட்புவட்டத்துக்கு அப்பால் உங்களுடைய விருப்பு வெறுப்புகளை அவர்களிடம் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லி உங்கள் நிலைப்பாட்டை நிலைநிறுத்த முயலுங்கள். பின் இதனால் பெற்ற ஊக்கத்தைக் கொண்டு படிப்படியாக மற்றவர்களிடமும் இதைச் செயல்படுத்துங்கள்.

பரஸ்பர மரியாதை

உறுதியான நிலைப்பாடு எப்போதும் பரஸ்பர மரியாதையை அளிக்கும். மனதில் எதையும் புதைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசுவதால் தேவையற்ற மன அழுத்தம் உங்களுக்கு ஏற்படாது. தனித்துவத்தை இழக்காமல் விரும்பியதைச் செய்வதால் உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பேற்பதால் ஆதங்கமும் ஏற்படாது. மொத்தத்தில் இந்தப் பண்பு நல்ல உறவுகளையும் மகிழ்வையும் திருப்திகரமான வாழ்க்கையையும் அளிக்கும்.

Monday, January 22, 2018

கேள்விக்கு என்ன பதில்?

கேள்விக்கு என்ன பதில்?

• மனிதனை நான்கு வர்ணங்களாக பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் என பிரித்தது எந்த மதம்?

• சக மனிதனை சூத்திரன் (வேசியின்மகன்) எனக்கூறி தீண்டதகாதவன் என சொன்னது எந்த மதம்?

• பெண்களை மேல் ஆடை அணிய விடாமல் தடுத்தது எந்த மதம்?

• பெண்களின் மார்பு சைசுக்கு வரிபோட்டு முலைவரி வசூலித்தது எந்த மதம்?

• கடவுளுக்கு செய்யும் சேவை எனச் சொல்லி பெண்களை பொட்டுகட்டி தேவதாசியாக்கி அவளை கோவிலுக்கு வரும் சன்யாசிகளுடன் விபச்சாரம் செய்ய வைத்தது எந்த மதம்?

• கடவுள் பெயரை சொல்லி சகமனிதனை கோவில் கருவறைக்குள் நுழையவிடாமல் வைத்திருப்பது எந்த மதம்?

• வேதம் ஓதுவதை சூத்திரன் கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று எனச் சொல்லியது எந்த மதம்?

• கணவன் இறந்தால் சதி எனும் தீயில் பெண்களை தள்ளி உடன்கட்டை ஏற்றியது எந்த மதம்?

• இந்தியா முழுவதும் சாதி வெறியை பற்ற வைத்து சகமனிதனை இழிவுபடுத்துவது எந்த மதம்?

• சங்கராச்சாரியாருக்கு ஒரு நீதியும் பாமரனுக்கு ஒரு நீதியும் சொல்வது எந்த மதம்?

• தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என சொன்னது எந்த மதம்?

• மனித இனத்திற்கு கேடுவிளைவிக்ககூடிய தகாத உறவுகளை புராண இதிகாசமாக்கி அதை புனிதமாக்குவது எந்த மதம்?

• மாட்டு சாணி, மூத்திரத்தைகூட புனிதமாக்கி அதை பஞ்சகௌவியம் என்று அருந்தவைத்து அழகு பார்ப்பது எந்த மதம்?

• பெண்களை கவர்ச்சி பொருளாகவே வைத்து அவர்களை சிறுமை படுத்தியது
எந்த மதம்?

• மதவெறியின் காரணமாக சமண சமய துறவிகளை கழுவில் ஏற்றி கொலை செய்தது எந்த மதம்?

• பார்பனர்கள் மட்டுமே  உயர்ந்தவர்கள் மற்ற அனைவரும் தாழ்ந்தவர்கள் எனச் சொல்வது எந்த மதம்?

இத்துடன் இன்னும் ஏராளமான அநியாயங்களையும் இந்த மண்ணில் பல நூற்றாண்டுகளாக செய்து வரும் பார்பனியத்தை கேள்வி  எழுப்பினால் எனது மதத்தை இழிவுபடுத்திவிட்டான் என்று  கொக்கரிக்கிறாயே...? நீ மூடனா இல்லை மத வியாதியா?

Thursday, January 18, 2018

என் தலையை நான் சீவியே நாட்களாகிவிட்டது

Rajagopal Subramaniam
2018-01-18

முன்னொரு காலத்தில திமுக-ன்னு ஒரு கட்சி இருந்ததாகவும்,

அதன் தலைவர் "ராமன் எந்த இஞ்சினீரிங் காலேஜ்ல படிச்சா" - னு கேட்டதாகவும்,

அப்படி சொன்னவுடனே அவரின் தலையை சீவ  ஒரு வடஇந்திய பரதேசி விலை வைத்ததாகவும்,

அதற்கு அவர் "என் தலையை நான் சீவியே நாட்களாகிவிட்டது" - என்று சொன்னதாகவும்,

அந்த கட்சி தொண்டர்கள் கமலாலயத்தை முற்றுகையிட்டு கதறவிட்டதாகவும்

சொல்லிக் கொள்வார்கள்...

https://m.facebook.com/story.php?story_fbid=10155210758437876&id=743032875

Wednesday, January 17, 2018

ஆண்டாள் ஒரு தேவதாசி

Jawahar kennady A
2018-01-18

"ஆண்டாள் ஒரு தேவதாசி அவர் சீறிரங்கம் கோவிலில்தான் இருந்தார்" - இந்த செய்தியை முதன்முதலில் கூறியவர் டி.ஏ.கோபிநாதராவ் என்ற வரலாற்று அறிஞர்.(History of Sri Vaishnavam , Madras , 1923, p. 5)....

இவர் பிறப்பால் ஒரு பார்ப்பனர், அந்த தம்பி  சொல்லி ஒரு நூற்றாண்டுகாலம் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு அமைதிகாத்தமைக்கு நீ முதலில்  மன்னிப்பு கேட்கவேண்டாமா  Harihara Sharma.ராஜா. .... 😡

https://m.facebook.com/story.php?story_fbid=1583621861717935&id=100002104092645

Tuesday, January 16, 2018

பெரியவளாகாத பெண்ணோடு தொடர்பு கொண்டு அவளுடைய மரணத்திற்கு காரணமாக இருந்த கயவர்களை கொண்டிருந்தது இந்து சமுதாயம்

Ananthanarayanan pakshirajan
2018-01-16

வெட்கம் என்றால் என்ன என்பதைச் சிறிது அறியாதவர்கள் இந்துத்துவ வெறியர்கள்.  பைபிளில் கன்னிமையை திருமணத்திற்கும் முன் இழந்த பெண்ணை என்ன செய்யச் சொல்கிறது என்பதை மிகுந்த குதூகலத்தோடு பதிவிட்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து கிறித்துவ நாடுகளில் திருமணத்திற்கு முன் கன்னிமை இழந்த பெண்ணை கல்லால் அடித்துக் கொன்றதாகச் சரித்திரம் இல்லை. 

இனி இந்து சமுதாயங்களின் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம். 

எங்கள் குடும்பங்களிலேயே பெண் பெரியவளாவதற்கு முன்னால் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் என் தந்தை தலைமுறை வரை இருந்தது.  பெரியவளாகாத பெண்ணோடு தொடர்பு கொண்டு அவளுடைய மரணத்திற்கு காரணமாக இருந்த கயவர்களை கொண்டிருந்தது இந்து சமுதாயம்.  குறிப்பாக பிராமண சமுதாயம். விதவைகளை எந்த மனிதாபிமானமும் இன்றி தீயிலிட்டு  எரித்தது இந்து சமுதாயம்.

நேருவும் அம்பேத்காரும் இந்து திருமணச் சட்டத்தை திருத்த முயற்சி செய்த போது அவர்கள் படங்களை எரித்தவர்கள் இந்துத்துவ வெறியர்கள்.

சரி இனி மனுவிற்கு வருவோம். சென்ற நூற்றாண்டின் நடு ஆண்டுகள் வரை இதுதான் இந்துச் சட்டங்களில் தலையாயது.

24. “Utmam sevmansto…….” – 8/365. In case a man from a lower caste enjoys sex with a woman from a higher caste, the person in question is to be awarded the death sentence. And if a person satisfies his carnal desire with women of his own caste, he should be asked to pay compensation to the women’s faith.

25. “Ya to kanya…………….” – 8/369. In case a woman tears the membrane [hymen] of her Vagina, she shall instantly have her head shaved or two fingers cut off and made to ride on Donkey.

26. “Bhartaram…………….” – 8/370. In case a women, proud of the greatness of her excellence or her relatives, violates her duty towards her husband, the King shall arrange to have her thrown before dogs at a public place.

38. “Vandyashtamay…….” – 9/80. A barren wife may be superseded in the 8th year; she whose children die may be superseded in the 10th year and she who bears only daughters may be superseded in the 11th year;  but she who is quarrelsome may be superseded without delay.

39. “Trinsha……………….” – 9/93. In case of any problem in performing religious rites, males between the age of 24 and 30 should marry a female between the age of 8 and 12.

40. “Yambrahmansto…….” – 9/177. In case a Brahman man marries Shudra woman, their son will be called ‘Parshav’ or ‘Shudra’ because his social existence is like a dead body.

இன்றும் மனுஸ்மிருதியையும் சூத்திரர்களையும் வைசியர்களையும், பெண்களையும் பாபயோனியில் பிறந்தவர்கள் என்று கண்ணன் சொன்னதை நியாயப்படுத்தும் சில தமிழ் பிராமணர்கள்தான் பைபிளைப் பற்றிப் பேசுகிறார்கள்.

இவர்கள் நாங்கள் நியாயப்படுத்தவில்லை என்று சொல்லலாம்.  இதே போன்று பைபிளில் பெண்ணைக் கல்லால் அடிக்க வேண்டும்என்று சொன்னதை நியாயப் படுத்தும் ஒரு கிறித்தவ நாட்டையாவது இவர்கள் காட்ட வேண்டும்.

எந்த அற உணர்வும் இல்லாதவர்கள் இந்துத்துவ வெறியர்கள், குறிப்பாகச் சில தமிழ் பிராமண வெறியர்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=2253668931325945&id=100000485801824

எங்களது நம்பிக்கையை கேள்வி கேட்கலாம்மா??

Prakash JP

அது எங்கள் நம்பிக்கை... எங்களது நம்பிக்கையை கேள்வி கேட்கலாம்மா?? எங்களது நம்பிக்கையை அவமானப்படுத்தலாம்மா, புண்படுத்தலாம்மா?? யார் அந்த உரிமையை கொடுத்தது??

இப்படி எல்லாவற்றையும் இது எங்கள் நம்பிக்கை.. இதை கேள்வி கேட்க, விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை... என சொல்லிகொண்டிருந்தால், இந்த உலகில் எந்த வளர்ச்சியும், அறிவியல் கண்டுப்பிடிப்புகளும், முனேற்றமும் ஏற்பட்டிருக்காது.. கிணற்றில் போட்ட கல்லை போல ஒரே காலகட்டத்தில் முடங்கியிருக்கும்.. நம்பிக்கைகளை கேள்வி கேட்டதால்தான் பல மாற்றங்கள் உருவாகின.. உதாரணங்கள் சிலவற்றை பார்ப்போமா?? 

பெண்களை உடன்கட்டை ஏற்றி கொளுத்துவது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், உடன்கட்டை தடுப்பு சட்டம் வந்திருக்குமா??

பால்ய வயதில் திருமணம் ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், பால்ய விவாக தடுப்பு சட்டம் வந்திருக்குமா??

வர்ணாசிரம சாதி ஏற்றத்தாழ்வுகள் ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், அனைவரும் சட்டதின் முன் சமம் என்னும் உரிமை கிடைத்திருக்குமா??

கணவன் இறந்தால், மனைவிக்கு மொட்டை அடித்து, முக்காடு போட்டு, மூலையில் உட்க்காரவைப்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், இந்த சமூக தீமை ஒழிந்திருக்கும்மா??

பெண்களுக்கு பொட்டுகட்டி கோவில் தேவதாசியாக்குவது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், தேவதாசி தடை சட்டம் வந்திருக்குமா??

பார்பனர் அல்லாதவர்கள் படிக்கக்கூடாது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் படிக்க முடியும்மா??

சில பிரிவு பெண்கள் மேலாடை உடுத்தக்கூடாது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், அனைத்து பெண்களுக்கும் மேலாடை அணிய உரிமையுண்டு என்ற சட்டம் வந்திருக்கும்மா??

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்க்கு என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், பெண் கல்வி சாத்தியப்படிருக்கும்மா?? 

திருமணம் முடிந்த பெண், முதல் நாள் பார்ப்பன நம்பூதிரியுடன் இரவு தங்கவேண்டும் ன்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், இந்த இழி பழக்கம் மறைந்திருக்கும்மா??     

ஒரே மதம் என்று சொல்லிக்கொண்டு, ஒரு பிரிவின் மீது தீண்டாமை கடைபிடிப்பது ஒருவரது  நம்பிக்கை என விட்டிருந்தால், தீண்டாமை தடை சட்டம் வந்திருக்குமா??

ஒரே மதம் என்று சொல்லிக்கொண்டு, எங்கள் கோவிலினுள் நுழையாதே என தடுப்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், அனைத்து சாதிக்கும் ஆலய நுழைவு சாத்தியப்பட்டிருகும்மா??

பார்பனர்களே மேலானவர்கள், தகுதியானவர்கள் என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், பெரும்பான்மை இந்துக்களான BC/MBC/SC மக்களுக்கு இடஒதுக்கீட்டை அளிக்கும் சட்டம் வந்திருக்கும்மா?? வெறும் 3% சதம் இருந்த பார்பனர்கள், 90% சதவீத வேலை & படிப்புகளை ஆக்கிரமிப்பு செய்திருந்தது மாறியிருக்கும்மா??

பார்பனர்கள் கடல் தாண்டி போகக்கூடாது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், இன்றைய நிலையில் லட்சகணக்கான பார்பனர்கள் வெளிநாடுகளில் வசிக்க, வேலைசெய்ய முடியும்மா??    

உலகம் தட்டையானது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், உலகம் உருண்டையானது என்பது நிருபிக்கப்பட்டிருக்கும்மா??

பூமியைத்தான் சூரியன், சந்திரன் போன்றவை சுற்றிவருகின்றன என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், அறிவியல் வளர்ந்திருகும்மா??

ராகு, கேது என்ற பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுகுவதால்தான் கிரகணங்கள் உருவாகின்றன எனபது புராண நம்பிக்கை என விட்டிருந்தால், வான்வெளி அறிவு வளர்ந்திருகும்மா??

பிராத்தனை செய்தால் குணமாகும் என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், மருத்துவ அறிவியல் வளர்ந்திருகும்மா?? 

தமிழ் நீச பாஷை, தமிழில் கடவுளை வழிபடக்கூடாது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், தமிழ் அர்ச்சனை என்னும் சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும்மா??

எனவே, ஒருவரது அல்லது ஒரு பிரிவினது நம்பிக்கை என எதையும் விட்டுவிட முடியாது.. அறிவியல் அடிப்படையில் விளக்க முடியாத, ஏற்கமுடியாத ஒன்றை, உலகம் முழுதும், எல்லா காலகட்டத்திலும் கேள்வி கேட்ப்பார்கள்.. தமிழகத்தில், சித்தர்கள் துவங்கி, வள்ளலார், அய்யா வைகுண்டர், நாராயண குரு, தந்தை பெரியார் என என பலரும் பழம் பழக்கவழக்கங்களை, காலம் காலமான நம்பிக்கைகளை, சனாதான மூடநம்பிக்கைகளை கேள்வி கேட்டார்கள்..

தமிழ் மக்கள் நம்பிகையில் கேள்வி கேட்பதை ஏற்பார்கள்.. ஆனால், அந்த கேள்வியினால் அடுத்தவருக்கோ அல்லது தமக்கோ பலன் அளித்தால்... ஆகையால்தான் பெரியார் என்ற ஒருவர் உயிருடன் இறுதிவரை இருக்க முடிந்தது... அனைத்து நம்பிக்கையிலும் ஆதாரபூர்வமான கேள்விகளை அவர் எழுப்பினார்..

அது சரி, நம்பிக்கையை தானே அவமானபடுத்தினோம்.. ஆனால், ஹிந்து சனாதான மதம், இந்துகளையே சூத்திரன், பஞ்சமன் என அவமானபடுத்துகிறதே... அதேபோல இஸ்லாம் மதத்தில் அந்தகாலகட்டத்தில் எழுதிய வார்த்தைகளை அப்படியே நம்புவதால், நம்பிக்கைகளை கேள்வி கேட்பதை அனுமதிக்காததால், எதையும் சிந்திக்காமல் பயங்கரவாத செயல்களுக்கு அப்பாவிகளை மூளைசலவை செய்து சுலபமாக திசைதிருப்ப முடிகிறது... ஆனாலும், கட்டுபாடுகள் அதிகமுள்ள அரபு நாடுகளிலேயே, பெண்களுக்கு வாக்குரிமை, ஓட்டுனர் உரிமை என காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருவது சிறப்பு..

https://m.facebook.com/story.php?story_fbid=2042898455929287&id=100006274564260