Sunday, February 4, 2018

திராவிடர் என்று ஏன் பெயர் வைக்க வேண்டியதாயிற்று? - பெரியார்உரை

திராவிடர் என்று ஏன் பெயர் வைக்க வேண்டியதாயிற்று? - பெரியார்உரை

தலைவர் அவர்களே! மாணவர்களே!

இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்க வில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்த மானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டியிருக்கிறது. ஆனால், படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப் படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங் களிடத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகி விட்டது.

உங்கள் படிப்பின் தன்மை

முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர்களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன ஏற்படும் என்று கருதுவதற்கில்லை. படிப்பது என்பது வெறும் பேச்சளவிற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக என்று சொல்லப் படுகிறது. ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தி யாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பது கூட ஒரு பொது அருத்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல் லாமல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவர்கள் என்றுதான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் அதாவது படித்த படிப்பில்; அறிவு ஆவது சரியாக இருக்கிறதா என்றால் அதுகூடச் சரியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று முரணான அறிவு ஏற்படும் படியாக இரண்டு கருத்துள்ள அதாவது முரண் கருத்துள்ள படிப்பேதான் கொடுக்கப்படுகின்றது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் இரண்டும் கொண்டவர் களுமாகி விடுகிறார்கள். மாணவர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியவர்களும், உபாத்தியாயர்களுங்கூட மூட நம்பிக்கையுடையவர்களாகவே இருக்க வேண்டிய வர்களா கிறார்கள். உதாரணமாக, சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வானசாஸ்திரம், உடற்கூறு, உலோக விஷயம் முதலியவை களில் படித்துத் தேறியவர்களில் யாருக்காவது இது சம்பந்தமான மூடநம்பிக்கைக் கொள்கை இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? சரித்திரம் படித்தவன் இராமாயண பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்த்துப் படித்து, இராமனும் பரதனும் இந்த நாட்டை ஆண்டான் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்குப் பாரததேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்திலும் அதற்கு ஏற்றவண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக் கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள் நிஜமான நபர்கள் அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர் களுக்கு சரியாகத் தெரிவதில்லை. நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும், அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாதது மான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விபரம் தெரிகிறது. ஆனால் நடந்தவைகளுக்குச் சரியான விபரம் தெரிவ தில்லை. சேர, சோழ,பாண்டியர், நாயக்கர் ஆகியவர் களும், அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிகளும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லைகளும், முறை களும், முடிவுகளும் சரித்திரம் படித்த 100-க்கு 90 மாணவர் களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசரதனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதிகளுக்கும், இரணியனுக்கும், பலிச் சக்கர வர்த்திக்கும், மனுநீதி கண்ட சோழனுக்கும் அண்ணன் தம்பிமார்கள், மனைவி மக்கள்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100-க்கு 90 மாணவர்களுக்குத் தெரியும். பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞான சாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம், இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக் குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும் சாபம், இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மையென்ற காரணமும், அதை அனு சரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர் களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப் படிப்பாகப் போய்விட்டது.

படிப்பால் ஏற்படும் பயன்

இது தவிர, இனிப் படிப்பினால் ஏதாவது ஒழுக்கம், நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம் முதலியவை ஏதாவது ஏற்படுகிறதா? அல்லது படித்த மக்களிடம் இவை ஏதாவது இருந்து வருகிறதா? என்றால் அதுவும் சிறிதும் சரியானபடி இல்லாமல் வெறும் கற்பனைக் குணங்களும், பற்றுகளுந்தான் பெரிதும் காணப்படுகின்றனவே தவிர உண்மையானதும், இருக்க வேண்டியதுமானவைகள் அருமையாகவே இருக்கின்றன. இதை விரிக்கில் மிகமிக நீளும். ஆகவே, இம்மாதிரி படிப்பைப் படிக்கின்ற பிள் ளைகள் எவ்வளவு சிறிய பிள்ளைகளானாலும் இவை களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என்று உங்களுக்கு சொல்லுவ தால் கேடு எதுவும் ஏற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள். உங்களுக்கு உபாத்தி யாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக் கொடுத்ததையும், எழுதினாலும் உங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக் கூடும். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்கம் விரும்புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர்கள் விளக்கம் பெற விரும்புவீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகுவார்களானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் கடமையாவது காலப் போலக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறைபாட்டைப் பற்றி சரியான படி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்பவர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரியான தும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண்பட்ட மனப் பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் செய் யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகத்தான். எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.

திராவிடர் கழகம் ஏன்?

இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என் பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்க வேண்டியதா யிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படலாம். அவற் றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவி னையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடிய தென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் - திராவிடர் என்பது, திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப் பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மை களும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதி களுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் நிலை ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவி டத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது.

இதுகூட ஏன்?

இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டு வருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போ கவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிராயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப் பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண் டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம், 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக் கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென் படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத் தான்) இருக்கிறதே தவிர திராவிட ரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒரு கூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென் பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய அவசிய மில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யா மலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது. அக்கட்டுப் பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப்பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப் பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப் படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங் களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித் தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுவ தாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்குமுள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடு கிறார்கள். அப்படிக்கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக்கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், பிரா மணனுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றிபெறாததற்குக் காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும். இது திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப் படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.

அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப் பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார (பான)த் திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். கலந்துவிட்டது என்பது... ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிரா மணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத் திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்ப வர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்து விட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போக போக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படி யாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவ மாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவ தால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களுமாகும்.

திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக் கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டு விடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறைய னாயிருந்தால் சூழ்ந்துகொண்டிருந்த அவனைப் பறையனாக் குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப் பாய் நசித்துப்போய்விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல் லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரண மாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். உதாரணமாக ஆரிய னுக்கு உருவக் கடவுள், இஸ்லாமியனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவி டனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்து விட்டதாகவோ ஒழிக்கப் பட்டதாகவோ அருத்தமா? இங்கு தான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன் னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையதுகளுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்து தான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும். சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவைகள் இன்றைக்கும் அப்படியே பின் பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையே யாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்திய வர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகிய வர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப் படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில் தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டு வருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவைகள் மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறு வீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல் வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக் கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.

(09.07.1945)

Wednesday, January 31, 2018

இந்திய சூப்பர் ஸ்டார்கள்

Krisshnavel T S
Via facebook
2018-01-31

இந்திய சூப்பர் ஸ்டார்கள்

அமிதாப்பச்சன் என்ற பெயர் இந்தியாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் பெரும் அளவில் பேசப்பட்ட ஒரு பெயர் ஒரு நபர், மற்றொருவர் ரஜினிகாந்த்

இந்த கட்டுரை எழுத வேண்டிய காரணம் ஏன் ஏற்பட்டது என்றால், சில நாட்களுக்கு முன் ஒரு வடஇந்திய நண்பர் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது “உங்கள்” தமிழ் நாட்டில் மட்டுமே சாதி மறுப்பு உள்ளது என்று பெரிதாக அலட்டிக் கொள்ளவேண்டாம்,

உங்களுக்கே தெரியும் “எங்கள்” வடஇந்தியாவில் முதல் பெயருக்கு பின் இருக்கும் இரண்டாவது பெயர் அவரவர் சாதியை குறிக்கும். அமிதாப்பச்சன் என்ற பெயரில் பச்சன் என்பது அவரது சாதி பெயர் அபிஷேக்பச்சன் என்பதில் பச்சன் சாதி பெயர்

ஐஸ்வர்யா ராய் என்பதில் ராய் என்பது சாதி பெயர்.
இவ்வளவு ஏன் பிரகாஷ்ராஜ் என்ற வில்லன் நடிகரின் பெயர் உண்மையில் பிரகாஷ் ராய், அவரும் ஐஸ்வர்யா ராயும் ஒரே சாதியினர் தெரியுமா. நீங்கள் சொல்வது போல வடஇந்தியாவில் எல்லா மட்டத்திலும் சாதி பார்கிறார்கள் என்று பொதுவாக சொல்லாதீர்கள்.

உங்கள் ரஜினிகாந்த் ஒரு பஸ் கண்டக்டர் என்ற நிலையில் இருந்து ஒரு சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தது போல, ஒரு வறுமையான குடும்பத்தில் பிறந்து தன உழைப்பால் உயர்ந்த அமிதாப்பச்சன் தன் மகனுக்கு ஐஸ்வர்யா ராய் என்ற வேறு சாதி பெண்ணை திருமணம் செய்து வைக்கவில்லையா என்று கேட்டார்.

ரஜினிகாந்த் சொல்வது போல சொல்லவேண்டும் என்றால், எனக்கு  “தலே சுத்திரிச்சு”

அவருக்கு நான் கொடுத்த விளக்கங்களே பின்வருவன:  பிகு – அந்த வடஇந்திய நண்பர் இனி என்னுடன் குடிப்பதில்லை என்று “மா – கி - கசம்” செய்திருப்பதாக வேறு ஒரு நண்பர் மூலம் கேள்வி பட்டேன்.       

நான் அவரிடம், “மிஸ்டர் சந்தீப்” என்று தொடங்கினேன், உடனே இடைமறித்த அவர்..... ப்ளீஸ் கால் மீ மிஸ்டர் திவாரி, என்றார். நான் சொன்னேன், அதெல்லாம் அய்யா பெரியாருக்கு முன்பு மட்டுமே, தமிழ் நாட்டில் நாங்கள் முதலியார்வாள் பிள்ளைவாள் என்றெல்லாம் கூப்பிட்டது, தமிழ்நாட்டில் உங்கள் முதல் பெயர் சொல்லித் தான் நாங்கள் அழைப்போம் பிடிக்கவில்லை என்றால் அன்பிரண்டு செய்துவிடுங்கள். உடனே அவர் “ஒகே ஒகே கம் டு த பாய்ன்ட்” என்றார்.

மிஸ்டர் சந்தீப், ரஜினிகாந்த் குறித்து நீங்கள் சொன்னது உண்மைதான், ஒரு பஸ் கண்டக்டராக தன் வாழ்வை தொடங்கி தன் உழைப்பால் உயர்ந்தவர் தான். பிறப்பால் மராட்டியர், வளர்ப்பால் கன்னடியர், தொழில் மற்றும் தற்போதைய சூழலில் அவர் தமிழர் தான் என்று கூட ஒத்துக்கொள்கிறேன்.

ஆனாலும் கெய்க்வாட் என்ற சாதி பெயரை கொண்ட அவரது முன்னோர்கள் மராட்டிய மாவீரன் சிவாஜியின் வம்சத்தை ஏமாற்றி மராட்டிய சாம்ராஜ்யத்தை கைப்பற்றிய முதலாம் பெஷ்வா பாஜி ராவ் என்ற பார்பன முதலமைச்சரின் உறவினர்கள் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.        

பரோடா நகர் இன்றைய குஜராத் மாநிலத்தில் இருக்கிறது, ஆனால் மராட்டிய ராஜ்ஜியம் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பஞ்சாப் வரை சென்று சண்டையும் செய்தனர்.

முதலாம் பெஷ்வா பாஜி ராவின் தலைமையில் பார்பனர் ஆட்சி அமையும் போது பரோடா நகரின் முதல் அரசனாக 1721-ல் முடிசூடிக்கொண்ட பார்பனன் தான் பிலாஜி ராவ் கெய்க்வாட்.

ஒய்.ஜி.பார்த்தசாரதி குடும்பம் ரஜினிகாந்த் உழைப்பால் உயர்ந்தவர் என்ற காரணத்தால் லதாவை அவருக்கு திருமணம் செய்து கொடுக்கவில்லை, அவர் பார்பனர் என்ற காரணத்தால் தான் திருமணம் செய்து கொடுத்தனர்.

மோகன்தாஸ் காந்தியை கொன்ற கோட்சே மற்றும் குழுவினருக்கு பணவுதவிகள் செய்தது இந்த பரோடா மன்னன் கெய்க்வாட் உட்பட பல மராட்டிய சிறு மன்னர்கள் ஆனால் அவர்கள் எல்லோரும் சாட்சி இல்லை என்று  அந்த கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கமலஹாசனும் தனது ஹே ராம் திரைப்படத்தில் காந்தியாரை கொல்ல பணவுதவி செய்யும் மன்னரை ஊரும் பெயரும் சொல்லாமல் மகாராஜா என்று மட்டுமே சொல்லுவார் ஆனால் மராட்டிய மாநிலம் என்று மட்டும் கொடு காட்டுவார்.

சாகேத் ராமனை இரண்டாம் மனைவியுடன் பார்த்த அபயங்கர் தன் பெயரை ராமச்சந்திர பாண்டே என்று மாற்றி சொல்லுவான், ஆனால் சாகேத் ராமனை காந்தியை கொல்லும் பணியில் சேர்க்கும் கடைசி கட்டம் வரை மகாராஜா என்று மட்டுமே சொல்லுவான் ராஜா பெயர் ஊர் சொல்ல மாட்டான் 

(முடிந்தால் காந்தியார் ஏன் கொல்லப் படவேண்டும் என்ற கமலஹாசனின் வாகுமூலத்தை அந்த திரைப்படத்தில், தந்து இரண்டாம் மனைவியுடன் விமானத்தில் பயணிக்கும் காட்சியை பாருங்கள், தனது பார்பனிய கருத்தை அழுத்தம் திருத்தமாக தன் மனைவியிடம் சொல்லுவார்)         

ஆக நாம் முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது, கமலஹாசன் மட்டுமல்ல ரஜினிகாந்தும் பார்பனர் தான் 

அது போகட்டும், உங்களுக்கு அமிதாப்பச்சன் அப்பா அம்மா யார் என்று தெரியுமா என்று கேட்டேன், அவர்கள் உத்தரபிரதேசத்தில் ஒரு ஏழை விவசாயகுடும்பத்தை சேர்ந்தவர் அதனால் அந்த விபரங்கள் அதிகம் யாருக்கும் தெரியாது என்றார்.    

அமிதாப்பச்சன் தாத்தாவின் பெயர் பிரதாப் நாராயன் ஸ்ரீவட்சவ், அவருக்கு இரண்டு பிள்ளைகள், எல்லோரும குடும்பத்தில் மூத்த பிள்ளையை ரஜ்ஜன் என்றும் இளைய பிள்ளையை பச்சன் என்றும் அழைப்பார்கள், அதாவது மூத்தவனே இளையவனே என்று அர்த்தம். இவர்கள் ஸ்ரீவட்சவ் என்ற சாதி பெயரை கொண்ட வங்காள கயஸ்தா பிராமணர்கள்.

இந்த வங்காள கயஸ்தா பிராமணர்கள் தங்களை சத்திரியர்கள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். 
இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று மற்ற  பார்பனர் தொடுத்த வழக்கு, ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் (I.L.R.10 மற்றும் I.L.R.12) 1886 – ல் உள்ளது 

இந்த வழக்கு மற்ற பார்பனருக்கும், வங்காள கயஸ்தா மற்றும் பீகாரின் கயஸ்தா பிரிவினர் இவர்களில் யார் சத்திரியர் என்று கிழக்கிந்திய கம்பெனி கோர்ட்களில் நடைபெறுகிறது   

இந்த வழக்கு தீர்ப்பு வரும் போது கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் ஆட்சி வந்துவிட்டது.

இந்த வழக்கில் வங்காளத்தில் உள்ள கயஸ்தா பிரிவினர் சத்திரியர் தான் என்று தீர்ப்பு கிழக்கிந்திய கம்பெனி வழங்குகிறார்கள் 

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் மீண்டும் தொடுத்த வழக்கு, ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் (1916) 20 Cal. W.N.901 

1916-ல் மறுபடியும் பார்பனர் வழக்கு தொடர்ந்து வங்காளத்தில் உள்ள கயஸ்தா பிரிவினர் சத்திரியர் அல்ல என்று ஆங்கிலேய கோர்டில் தீர்ப்பை பெறுகிறார்கள். இந்த வழக்கு 1926-ல் தான் முடிகிறது.  

இப்படியாக ஸ்ரீவட்சவ் என்ற வங்காள கயஸ்தா சாதியினர் சூத்திரர்கள் என்று பார்பனர்கள் கோர்டில் தீர்ப்பு வாங்கிய காரணத்தால். பிரதாப் நாராயன் ஸ்ரீவட்சவ்-ன் இளையமகன் தன் பெயரை பொதுவெளியில் குறிப்பிடும் பொது ஹரிவன்ஷ் ஸ்ரீவட்சவ், என்பதற்கு பதில் ஹரிவன்ஷ் பச்சன் என்றே மாற்றிக்கொள்கிறார்.

அவர் அந்த காலகட்டத்தில் சோஷியலிஸ்ட் ஆன நேருவுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் ஸ்ரீவட்சவ் என்ற சாதி பெயரை விட்டுவிட்டு (நேரு என்பதும் சாதி பெயர் அல்ல அதை எனது முந்தைய கட்டுரையில் பாருங்கள்) தனது வீட்டில் எல்லோரும் செல்லமாக அழைத்த பச்சன் என்ற பெயரை சாதி பெயர் போல சேர்த்து கொண்டார் என்றும் சொல்லுவார்கள்

இவர் இவரது ஹிந்தி புலமையால் நேருவின் அமைச்சரவையில், வெளிநாடுகளுக்கான ஹிந்தி வித்வான் என்ற பதவி பெற்றார் (சத்தியமாக எனக்கு புரியவில்லை என்ன பதவி என்று)                 
நேருவுடன் இருந்த நெருக்கம் காரணமாக அவரது மனைவி தேஜ் பச்சன் இந்திராவுடன் மிகவும் நெருக்கமானார்.

அதனால் இந்திராவின் மகன் ராஜீவ் மற்றும் தேஜ்-இன் மகன் அமிதாப் இருவரும் டூன் பள்ளியில் ஒன்றாக படித்தனர். இன்று டூன் பள்ளியில் உங்கள் பிள்ளை படிக்க வேண்டும் என்றால் வருடம் ரூ.10 லட்சம் ஆகும். அன்றும் அதற்கு  சமமான ஒருதொகையை கட்டணமாக வருடாவருடம் கட்டும் அளவுக்கு பணக்கார குடும்பம் தான் பச்சன் குடும்பம்

அந்த பள்ளி, பிரிட்டிஷார் காலத்தில் ஆங்கிலேய உயர் அதிகாரிகள் பிள்ளைகள் படிக்க கட்டப் பட்ட பள்ளி.

அது போன்றொதொரு பள்ளி நமது ஊட்டியிலும் உள்ளது, யாராவது உங்கள் பிள்ளைக்கு வருடம் 5 லட்சம் கட்டி சென்னை படிக்கவைத்து கொண்டிருந்தால், உடனே உங்கள் பிள்ளையை அந்த பள்ளியில் இருந்து மாற்றி ஊட்டி லவ்டேல்-ல் இருக்கும் லாரன்ஸ் பள்ளிக்கு மாற்றிவிடுங்கள், வெளியே வரும் பொது உங்கள் மகன் / மகள் ஒரு ஐரோப்பியன் போல மாறியிருப்பார்கள்    

அந்த பள்ளியில் இந்திராவின் மகன் ராஜீவ் மற்றும் தேஜ்-இன் மகன் அமிதாப் இருவரும் வகுப்புத் தோழர்கள்.                    

அந்த நட்பு ராஜீவ் இறக்கும்வரை தொடர்ந்தது.

இந்திரா தன் மூத்த மகன் ஒரு வெளிநாட்டு பெண்ணை மணந்து கொண்டால் பிற்காலத்தில் காங்கிரஸ் தலைமைக்கு வர அது இடைஞ்சலாக இருக்கும் என்று எண்ணி ராஜீவ் சோனியா காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த போது, அவரை சம்மதிக்க வைத்தது தேஜ் பச்சன் தான்.

ஜனவரி 13, 1968-ல் பம்பாய் பாலம் விமானநிலையத்தில் ராஜீவ் சோனியா இருவரையும் வரவேற்று நேராக தனது வீட்டுக்கு அழைத்து சென்றதே அமிதாப் தான்

1969-ல், புதுதில்லியில்,  ராஜீவ் சோனியா திருமணம் நடந்த இடமான 13, வெலிங்கடன் கிரசன்ட் பங்களா பச்சன் குடும்பத்தினருடையது. (உத்தரப்பிரதேசம் சேர்ந்த ஏழை விவசாய குடும்பம்)

ராஜீவ் பிரதமராக இருந்த போது அவர் வெளிநாட்டில் இருக்க, திடீரென ஞாபகம் வந்து அமிதாப்-க்கு போன் செய்கிறார், அமிதாப், அப்போது தான் ஷூட்டிங் முடிந்ததாக சொல்ல, (ஒகே மாப்பி வண்டி அனுப்புறேன் நேரா லீ க்ளப் வந்துரு, என்று நாம் சொல்வது போல) இந்திய விமானபடை ஹெலிகாப்டரை அனுப்ப அதை ஒரு பத்திரிக்கையாளர் போட்டோ எடுத்து நாளிதழில் வெளியிட பெரும் பஞ்சாயத்தாகிவிட்டது.     

1984-ல் அமிதாப் அலகாபாத்தில் காங்கிரஸ் சார்பாக எம்.பி. தேர்தலில் நின்று வென்றபோது. அமிதாப் ராஜீவ் நட்பு புதிய உச்சம் தொட்டது,

அப்போது தில்லியின் காங்கிரஸ் இளைஞர் படை என்று சொல்லப்பட்ட சதீஷ் சர்மா, கமல்நாத், அருண் நேரு, அருண் சிங் மற்றும் அமிதாப் ஆகியோர் ராஜீவின் நேரடி தொடர்பில் இருந்த முக்கியமானவர்கள்.

1986-87-ல் போபார்ஸ் களேபரத்தின் காரணமாக அமிதாப் எம்.பி. பதிவியில் இருந்து விலகினார், அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அமிதாப் சுத்தமானவர் என்று இறுதியில் தீர்ப்பு வழங்கியது.

இந்த போபார்ஸ் விவகாரம் ராஜீவ் அமிதாப் நடப்பில் சிறு இடைவெளியை ஏற்படுத்தினாலும், இரு குடும்ப உறுப்பினர்களும் இணக்கமாகவே பழகி வந்தனர். பிரியங்காவின் திருமணத்தில் அமிதாப் குடும்பம் முன்னின்று எல்லா வேலைகளையும் செய்தது.

1991-ல் வெளியான ஹம் திரைப்படம் பெரிய அளவில் ஊத்திக் கொள்ள, அமிதாப் திரையுலகில் இருந்து கிட்டத்தட்ட ஒய்வு பெற்றுவிட்டார் என்றே சொல்லக் கூடிய ஒரு நிலை வந்தது.

அதே ஆண்டில் ராஜீவின் மரணம் இரு குடும்பத்தாருக்கும் நடுவே பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது.

ராஜீவ் குடும்பத்தினர், அவர் மறைவுக்கு பின் அமிதாப் சரியானபடி உடன் நிற்கவில்லை என்று குற்றம் சொல்ல, ABCL நிறுவனம் மாபெரும் கடன் மற்றும் நஷ்டத்தில் சிக்கியபோது, ராஜீவ் காந்தி குடும்பம் உதவிக்கு வரவில்லை என்று அமிதாப் குடும்பம் குற்றம் சொல்ல என்று இந்த இரண்டு குடும்பத்தின் நட்பு முடிவுக்கு வந்துவிடுகிறது.

அந்த நேரத்தில் பழைய நண்பரான அமர்சிங் ABCL நிறுவனம் சார்ந்த பிரச்சனைக்கு உதவிக்கு வர அதை தொடர்ந்து அந்த நடப்பின் நீட்சியாக ஜெயாபச்சன் இருமுறை சமாஜ்வாடி கட்சியின் சார்பாக ராஜ்யசபா எம்.பி. ஆக்கப்படுகிறார்.

இதன் காரணமாக ஜெயாபச்சன் மற்றும் ராகுல்காந்தி பொதுவெளியில் ஒருவர் குடும்பத்தை ஒருவர் திட்டும் அளவுக்கு செல்ல, நேரம் பார்த்து காத்திருந்த காங்கிரஸ் எதிரி பால்தாக்கரே அமிதாப்-க்கு ஆதரவு கரம் கொடுத்து அவரது சர்கார் படத்தை திரையிட உதவுகிறார்.

இந்த சண்டையின் உச்சகட்டமாக 2005, அமிதாப் குடல் பிரச்சனையால் மருத்துவமனையில் இருக்கும் போது காங்கிரஸ் அரசால், உடனே கட்டும்படி சொல்லி 4.5 கோடிக்கு வருமானவரி நோட்டிஸ் கொடுக்கபடுகிறது. அமிதாப் மருத்துவமனையில் இருந்தபடியே அதற்கு ஏற்பாடு செய்து பணம் கட்டுகிறார்.

இப்படியே தொடர்ந்து முலாயம் சிங் யாதவ், அமர்சிங் மற்றும் சமாஜ்வாடி கட்சிக்கு நெருக்கமாக இருந்த காரணத்தால் சுமார் 2010  வரை காங்கிரஸ் கட்சியால் பல நெருக்கடிகள் கொடுக்கப் பட்டது.

சரி எதோ ஐஸ்வர்யாராய் பற்றி சொல்கிறேன் என்று சொன்னீர்களே என்று கேட்கிறீர்களா. அது ஒன்றும் இல்லை.

ஐஸ்வர்யாராய் என்பவரும் கயஸ்தா பிராமணர் தான் ஆனால், இவர்கள் கர்நாடக மாநிலத்தில் செட்டில் ஆனவர்கள் துளு எனப்படும் திராவிட மொழி குடும்பத்தில் உள்ள மொழியை பேசும் பார்பனர்.  
                   
திருமணத்துக்கு பிறகு தன பெயரை ஐஸ்வர்யாராய் பச்சன் என்று மாற்றி கொண்டவர்.

சொல்ல மறந்துவிட்டேன் அமிதாப்பின் தந்தை பெயர் வெறும் ஹரிவன்ஷ் பச்சன் அல்ல

அவரது முழு பெயர் ஹரிவன்ஷ் ராய் ஸ்ரீவட்சவ் அல்லது ஹரிவன்ஷ் ராய்  பச்சன் என்பதாகும்

இதில் இருந்து அமிதாப், உலக அழகி என்ற காரணத்தால் மட்டுமே  எப்படி வேறு சாதியில் தன் மகனுக்கு பெண் எடுத்தார் என்று புரியும்.

அது தான் நீங்களே ஒத்துகிட்டீங்களே கெய்க்வாட் என்பது பரோடா அரசவம்சம், எனவே ரஜினிகாந்த் ஒரு ஆண்டபரம்பரை பார்பனர் அதனால் அவர்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று உங்களில்  யாராவது சொல்ல நினைத்தாலே,

உங்களுக்கு கங்கைமுதல் குமரிவரை எதெல்லாம் பாவம் என்று சொல்கிறார்களோ அத்தனை பாவங்களும் உங்களை வந்தடையும்.

https://m.facebook.com/story.php?story_fbid=10210877537720591&id=1416623901

சமூக வலைத் தளத்தில் இந்து மதத்தைப்

சமூக வலைத் தளத்தில் இந்து மதத்தைப் பரப்புங்கள் - #இராம.கோபாலன்

பரப்பிட்டா போச்சி ....

மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்"

மேலும் மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"

மனு 9.3 இல், ''பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."

மனு 9.17 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை

மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"

மனு 8.299 இல், ''மனைவி, மகன், அடிமை, மாணவன், இளைய சகோதரன் ஆகியோர் தவறு செய்யின் கயிறு அல்லது மூங்கில் கழியால் அடிக்கலாம்" என்று மனுதர்மம் கோருகின்றது.

பெண்ணை விற்க, அனுபவிக்க, தூக்கி வீச, அடிக்க என எல்லாம் இந்து மதம் ஆணுக்கு அனுமதித்துள்ளது. பெண் இதில் எதையும் ஆணுக்குச் செய்ய முடியாது.

மனு 2.66 இல், ''பெண்.. வேதமந்திரங்களை ஓதக் கூடாது,......." மனு 9.18

மனு 9.36 இல், ''வேதங்களில் சொல்லப்பட்ட தினசரி வேள்வி நியமங்களைப் பெண் ஆற்றுதல் கூடாது...."

மனு 9.36 இல், ''அவள் அவ்வாறு செய்தால், நரகத்திற்குப் போவாள்...."

மனு 4.205 இல் ''ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில், பிராமணன் உண்ணக்கூடாது."

மனு 4.206 இல்,''பெண்கள் இயற்றும் வேள்விகள் அமங்கலமானவை. தெய்வச் சங்கல்பமற்றவை. அவற்றைப் பிராமணர்கள் தவிர்த்தல் வேண்டும்"

மனு 5.151 இல், ''தன் தந்தை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அல்லது தந்தை இசைவுடன் சகோதரன் தன்னை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அக்கணவனுக்கு வாழ்நாள்வரை அவள் கீழ்ப்படிதல் வேண்டும். இறந்த பிறகும் கணவன் நினைவைப் பழித்தலாகாது"

மனு 5.154 இல், ''அறநெறி பிறழ்ந்தவனாயினும், வேறொருத்தியிடம் இன்பம் கொள்பவனாயினும், நல்ல குணங்கள் இல்லாதவனாயினும் விசுவாசமுள்ள மனைவி கணவனை எந்நேரமும் தெய்வமாக வழிபடுதல் வேண்டும்;"

மனு 5.150 இல், ''அவள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும். வீட்டுக் காரியங்களைத் திறம்பட ஆற்றுதல் வேண்டும்;. பாத்திரங்களைக் கவனமாகக் கழுவி வைத்தல் வேண்டும். செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்"

மனு 5.155 இல், ''கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாலே மனைவிக்குச் சொர்க்கத்தில் உயர் பதவி கிடைக்கும்"

மனு 5.153 இல், ''புனித முழக்கங்களிடையே அவளை மணந்த கணவன்தான் எப்பொழுதும் இன்பம் தருபவன். இவ்வுலகிலும் ஏன் அவ்வுலகிலும் கூட அவ்வண்ணமே"

அர்த்த சாஸ்திரம் (3,8) இல், ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்"

''உயர் சாதிக்காரன் ஒரு சூத்திரப் பெண்ணோடு சேர்ந்து உடல் இன்பம் பெறுவானேயானால் அதனை ஒரு குற்றமாகக் கருதக்கூடாது."

``இங்கே உயர் சாதி என்பவன் பிராமணன் மட்டுமே என்று பொருள்.
பிராமணரல்லாத அனைவரும் சூத்திரார்கள். அவர் உடலுறவாட பெண் குடுக்கனுமாம்".

நாபாட்டுக்கு சும்மா இருந்தேன் ....
என்னை உசுப்பி விட்டான்யா...

https://m.facebook.com/story.php?story_fbid=1916518001754513&id=100001889950723