Monday, February 4, 2019

கல்வியும்,வேலையும்தான் பெண்களுக்கு எப்பவுமே நிலையானது,

பனிமலர் பன்னீர்செல்வம்
2019-02-04

Big day in my life ❤️

வாழ்க்கைல எல்லாருக்கும் ஹீரோயிக் மொமண்ட்னு ஒண்ணு இருக்குமானு தெரியாது ஆனா எனக்கு மாஸா ஒண்ணு இருக்குன்னா, அது இன்னைக்கு ஆறு வருசம் முன்னாடி நடந்துச்சு. இப்பயும் நினைக்கும்போது புல்லரிக்கும்.

எல்லாரும் புதிய தலைமுறைல வேலை பாக்கனும்னு ஆசைபட்டபோது அந்த வாய்ப்பு எனக்கு ரொம்ப சுலபமா கிடச்சுது. ஆனா அது நிலைக்கல, கட்டாயபடுத்தி வேலைய விட வேண்டிய சூழல் வந்துச்சு, அதோட வேலைய விட்டு துரத்தப்பட்டேனு யாரால வேலைய விட்டேனோ அவுங்களே சொல்லி சொல்லி சந்தோஷபட்டுடிருந்தாங்க. மொத்தமா எல்லாத்தையும் தூக்கிப் போட்டு வெளிய வந்ததும், மீண்டும் அடைக்கலம் குடுத்தது அதே புதிய தலைமுறைதான். அப்பவும் நான் எந்த கஸ்டமும்படல, சீனிவாசன் சார்க்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல கால் பண்ணிருந்தேன், என்ன பண்றீங்கனு கேட்டாரு ஒன்னும் பண்ணலனு சொன்னேன், திரும்ப வந்துடுங்கனு சொல்லிட்டு போன் வச்சுட்டாரு. அப்பவும் நிறைய பேருக்கு புதிய தலைமுறை  கனவுதான் அதுனால நான் சார் சொன்னத முழுசாகூட நம்பல, நாலு நாள்க்கு பிறகு ஹெச்ஆர் கூப்டு எப்ப ஜாய்ண்ட் பன்றீங்கனு கேட்டாரு, ஆனந்த கண்ணீர் எப்டி இருக்கும், ஒரு பொய்ய திரும்ப திரும்ப சொல்லிடிருக்கும்போது அத இல்லனு நிருபிக்குற மாதிரி தானா ஏதோ ஒன்னு நடக்கும்போது அதெல்லாம் வேறலெவல் சந்தோஷம். சித்ரா அப்பார்ட்மெண்ட் பால்கனில போன்ன கட் பண்ணிட்டு சந்தோஷத்துல குதிச்சது இன்னும் நியாபகம் இருக்கு. அது வாழ்க்கை முழுமைக்குமான சந்தோஷம், பொக்கிஷம். உங்களுக்கு ஒரு வேலைதானேனு இருக்கும், அதுக்கு முன்னாடி ஒரு வருசம் நீங்க பனிமலரா இருந்து பாத்தாதான் புரியும் அதோட அருமை.

ஒரு வேலை, பொருளாதார சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு என்னவெல்லாம் செய்யும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த நாள் இன்று. தனித்துவிடப்பட்டாலும், வெறிபிடித்து உங்களை குதற ஒரு கூட்டமே துரத்தி துரத்தி வந்தாலும், எப்போது விழுவேன், எப்போது அடிக்கலாம் என காத்திருந்தாலும், உங்கள் அறியாமையை அவரவர் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டதன் விளைவாக அதற்கான தண்டனையையும் நீங்க அனுபவிக்க நேரிடும்போதும், தன் சொந்த ஊரிலேயே அடுத்த ஊருக்கு பஸில் போகத்தெரியாத பிள்ளையை, அத்தனையையும் எதிர்த்து நிற்க துணிச்சலை தரும்னும், நமக்குள்ளேயே இவ்ளோ வலிமை இருக்குனு உணர வைத்தது ஒரு நல்ல வேலையும், மரியாதையான சம்பளமும்தான். நாம அழியனும்னு நினைக்குறவுங்க முன்னாடி வாழ்ந்துகாட்றதவிட மிகச்சிறந்த பழிவாங்கல் வேற எதுவும் இல்ல. அப்படி ஒரு நன்னாள் இன்று.

கல்வியும்,வேலையும்தான் பெண்களுக்கு எப்பவுமே நிலையானது, மற்றவை அத்தனையும் மாற்றத்திற்குட்பட்டதே.

https://www.facebook.com/100003203701947/posts/2050995801683857/

மாநில அரசு அனுமதி இல்லாம சி.பி.ஐ உள்ள வர முடியாது

*சங்கி:*
மம்தா பண்றது தப்பு ப்ரோ.

*நான்:*
என்ன தப்பு?.

*சங்கி:*
சி.பி.ஐ-யை வேலை செய்ய விடாம தடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்ல.

*நான்:*
மாநில அரசு அனுமதி இல்லாம சி.பி.ஐ உள்ள வர முடியாதுனு சந்திரபாபு சொன்னாரே. அப்போ ஏன் சும்மா இருந்தீங்க.

*சங்கி:*
ஊழல் பண்ணவங்கள கைது பண்ண போனா ஏன் தடுக்கனும்.

*நான்:*
கைது பண்ண போனா சரி, வாரண்ட் இருக்கா?.

*சங்கி:*
வாரண்ட் இல்லனா என்ன சி.பி.ஐ-யை அரெஸ்ட் பண்ணலாமா?.

*நான்:*
வாரண்ட இல்லனா அதுக்கு பேர் கைது இல்ல கடத்தல். தங்கள் மாநில அரசு அதிகாரியை கடந்த வந்தா கைது பண்ணாம விழா வா எடுப்பாங்க.

*சங்கி:*
🤐🤐🤐🤐🤐

இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதித்தபோது

"ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்பட்டது.

அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை எடுக்குமானால், ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன்.

அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்” 

14.9.49 அன்று அரசியல் நிர்ணய சபை கூடி இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதித்தபோது இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைத்தார் கன்னியமிகு காயிதேமில்லத் அவர்கள்.

வரலாற்றின் பொன்னேட்டில் அன்று அவர் பொறித்துச் சென்ற வைர வரிகள் இவை.

குந்தியின் குத்தாட்டம்


பாண்டு அரசன் அப்பனாகவே முடியாதவன்.

எனவே குழந்தைவேண்டி மனுதர்மநியதிபடி கணவர் விரும்பும் ஆடவரோடு மனைவி சேரலாம்😁😵

இந்த கலாசாரத்தை நாம் ஏற்காதது மனுவுக்கு நாம் செய்யும் துரோகம்😜

தர்மத்தின் தலைவன் யமன் மூலம் யுதிஷ்டிரன் (தர்மன்), மிகுந்த சக்தி படைத்த வாயு பகவான் மூலம் பீமன், தேவர்களின் தலைவனான இந்திரன் மூலம் அருச்சுனன், என மூன்று குழந்தைகளை குந்தி பெற பாண்டு அனுமதித்தான்.

பாண்டு வேறு ஒரு தேவனை அழைக்க சொன்ன போது "மாட்டேன் மூவருடன் இருந்தாயிற்று நான்காவதாக ஒருவருடன் இருந்தால் என்னை வேசி என்று பெசுவார்கள் அப்படித்தான் தர்மம் சொல்கிறது" என மறுத்துவிடுகிறாள்.

"நீ வேறு எந்த ஆணிடமும் செல்ல முடியாது" என்பதால் மாத்ரிக்காக ஒரு தேவனை அழைக்கச் சொன்னான். மாத்ரியிடம் கேட்ட போது காலை, மாலை நட்சத்திரங்களான அஸ்வினி தேவர்களை அழைக்கச் சொன்னாள்.

அஸ்வினி தேவர்கள் எனும் இரட்டையர்கள் மூலம் உலகத்திலேயே மிக அழகான நகுலனும், உலகத்திலேயே எல்லாம் அறிந்த அறிவாளியான சகாதேவனும் பிறந்தார்கள்.

இப்படியாக பிறந்தவர்களை பாண்டவர்கள் என்று அத்தினாபுரத்து மக்கள் அழைத்தனர்.

இவை எல்லாவற்றுக்கும் முன்பே சூர்யபகவானுக்கு கர்ணனை கள்ளத்தனமாய் பெற்றது தனிகதை..😁😁😁

எப்பா மூச்சூ முட்டுது..

Friday, February 1, 2019

அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளின் தரத்தை விட குறைவாக இருக்கிறதா?

The Trojan horse
2019-02-01

*அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளின் தரத்தை விட குறைவாக இருக்கிறதா?*

ஆம்.

*ஏன்?*

தனியார் பள்ளியில் ஒரு மாணவனுக்கு செலவழிக்கும் தொகையை விட அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு செலவழிக்கும் தொகை குறைவு.

*அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு செலவழிக்கப்படும் தொகை எவ்வளவு?*

ஆண்டுக்கு 1300 ரூபாய். மாதத்திற்கு 110 ரூபாய்

இந்தப் பணத்தில் அரசு கல்வி மட்டும் வழங்கவில்லை:

* சத்துணவு
* முட்டை
* புத்தகங்கள்
* சீருடை
* பாடப்புத்தகப்பை
* அட்லஸ்
* அகராதி
* மிதிவண்டி
* பஸ்பாஸ்
* சானிடரி நாப்கின்
* லேப்டாப்

என்று அனைத்தும் இந்த 1300குள் அடக்கம்.

*இந்த அளவு குறைந்த செலவில் எந்தத் தனியாராவது பள்ளி நடத்த முடியுமா?*

கண்டிப்பாக முடியாது

*பிறகு அரசால் எப்படி முடிகிறது?*

அரசு ஆசிரியர்களின் கடின உழைப்பு தான்.

அரசு ஆசிரியர்கள் தான் அங்கு

* ஆசிரியர்
* ஸ்டோர் கீப்பர்
* கிளர்க்

எல்லாம்.

மேலும் ஒரே ஆசிரியர் ஒன்றிற்கு மேற்பட்ட வகுப்புகள் எடுக்க வேண்டும். ஏனென்றால், அரசு நிதி குறைவு.

*தனியார் பள்ளி போல் ஆசிரியர்கள் ஒரு வகுப்பிற்குப் போதிக்கும் பணி மட்டும் செய்வதாக மாற்ற முடியாதா?*

முடியும். அதற்கு நிறைய ஆசிரியர்கள், நிறைய ஊழியர்கள் வேண்டும்.

அதாவது, இன்று ஒதுக்கப்படும் 1300ஐ விட அதிகம் ஒதுக்க வேண்டும். அதற்கு நிதி இல்லை. இந்தியாவிலேயே கல்விக்கு அதிகம் நிதி ஒதுக்கும் மாநிலம் தமிழகம்.

*ஆசிரியர்களின் சம்பளத்திற்கே நிதி சென்றால் மீதி எங்கு நிதி கிடைக்கும்?*

ஐயா, ஆசிரியர்களின் சம்பளமே இந்த 1300ல் இருந்து தான் வழங்கப்படுகிறது.

*அரசு பள்ளிகள் தனியார் பள்ளி போல் மாற என்ன செய்ய வேண்டும்?*

அதிக நிதி வேண்டும்.

*ஆசிரியர்கள் அதிகம் வேலை பார்த்தால் முடியுமா?*

முடியாது. ஏற்கனவே ஆசிரியர்கள் அதிக வேலை தான் பார்க்கிறார்கள். இதற்கு மேலும் அவர்களால் பார்க்க முடியாது

*ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள் என்கிறீர்கள். ஆனால், தனியார் பள்ளி அளவு தேர்ச்சி இல்லையே?*

காரணம் - அரசு பள்ளி, தனியார் பள்ளி நிதி ஒதுக்கீடு தானே தவிர ஆசிரியர்கள் குறைவாக வேலை செய்வது அல்ல.

அரசு பள்ளி - ரிக்‌ஷா
தனியார் பள்ளி - ஆட்டோ

"ரிக்‌ஷாவை விட ஆட்டோ சீக்கிரம் செல்கிறது,
அதற்குக் காரணம் ஆட்டோ ஓட்டுபவரின் திறமை" - என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ,

அதே போன்ற முட்டாள் தனம் தான் "அரசு ஆசிரியர்கள் திறமை குறைவு, அல்லது வேலை குறைவாக செய்வதால் தான் அரசு பள்ளிகள் தனியார் பள்ளி அளவு தேர்ச்சி இல்லை" - என்று கூறுவதும்.

"ரிக்‌ஷா ஓட்டுபவரின் ரிக்‌ஷாவில் அவரது பையன் ஏறினால் அந்த ரிக்‌ஷா ஆட்டோவை விட வேகமாக செல்லும்" - என்று கூறுவது
எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ,

அதே போன்ற முட்டாள் தனம் தான் அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு பள்ளிகளின் தரம் உயரும்" - என்று கூறுவதும்.

அரசு பள்ளி - அம்மா கேண்டீன்.
தனியார் பள்ளி - ஐந்து நட்சத்திர ஹோட்டல்.

"அம்மா கேண்டினில் வேலை செய்பவர்களின் குடும்பம் அம்மா கேண்டினில் சாப்பிட்டால் அம்மா கேண்டின் தாஜ் ஹோட்டல் ஆகிவிடும்" - என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ,

அதே போன்ற முட்டாள் தனம் தான் "அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு பள்ளிகளின் தரம் உயரும்" - என்று கூறுவது.

https://m.facebook.com/story.php?story_fbid=10158286422623569&id=576438568

Wednesday, January 30, 2019

பெண்கள் - மனு

குறிஞ்சி நாதன்
2019-01-30

அதுக்கு இடையிலும் இதையும் படித்துக்கொண்டு....

மனுசாஸ்திரம் என்னதான் சொல்லுது சில துளிகள்....

பெண்களுக்கான ஸ்பெசல் பக்கம்

மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்"

மேலும் மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"

மனு 9.3 இல், ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."

மனு 9.17 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை

மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"

மனு 8.299 இல், ''மனைவி, மகன், அடிமை, மாணவன், இளைய சகோதரன் ஆகியோர் தவறு செய்யின் கயிறு அல்லது மூங்கில் கழியால் அடிக்கலாம்" என்று மனுதர்மம் கோருகின்றது.

பெண்ணை விற்க, அனுபவிக்க, தூக்கி வீச, அடிக்க என எல்லாம் இந்து மதம் ஆணுக்கு அனுமதித்துள்ளது. பெண் இதில் எதையும் ஆணுக்குச் செய்ய முடியாது.

மனு 2.66 இல், ''பெண்.. வேதமந்திரங்களை ஓதக் கூடாது,......." மனு 9.18

மனு 9.36 இல், ''வேதங்களில் சொல்லப்பட்ட தினசரி வேள்வி நியமங்களைப் பெண் ஆற்றுதல் கூடாது...."

மனு 9.36 இல், ''அவள் அவ்வாறு செய்தால், நரகத்திற்குப் போவாள்...."

மனு 4.205 இல் ''ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில், பிராமணன் உண்ணக்கூடாது."

மனு 4.206 இல்,''பெண்கள் இயற்றும் வேள்விகள் அமங்கலமானவை. தெய்வச் சங்கல்பமற்றவை. அவற்றைப் பிராமணர்கள் தவிர்த்தல் வேண்டும்"

மனு 5.151 இல், ''தன் தந்தை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அல்லது தந்தை இசைவுடன் சகோதரன் தன்னை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அக்கணவனுக்கு வாழ்நாள்வரை அவள் கீழ்ப்படிதல் வேண்டும். இறந்த பிறகும் கணவன் நினைவைப் பழித்தலாகாது"

மனு 5.154 இல், ''அறநெறி பிறழ்ந்தவனாயினும், வேறொருத்தியிடம் இன்பம் கொள்பவனாயினும், நல்ல குணங்கள் இல்லாதவனாயினும் விசுவாசமுள்ள மனைவி கணவனை எந்நேரமும் தெய்வமாக வழிபடுதல் வேண்டும்;"

மனு 5.150 இல், ''அவள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும். வீட்டுக் காரியங்களைத் திறம்பட ஆற்றுதல் வேண்டும்;. பாத்திரங்களைக் கவனமாகக் கழுவி வைத்தல் வேண்டும். செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்"

மனு 5.155 இல், ''கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாலே மனைவிக்குச் சொர்க்கத்தில் உயர் பதவி கிடைக்கும்"

மனு 5.153 இல், ''புனித முழக்கங்களிடையே அவளை மணந்த கணவன்தான் எப்பொழுதும் இன்பம் தருபவன். இவ்வுலகிலும் ஏன் அவ்வுலகிலும் கூட அவ்வண்ணமே"

அர்த்த சாஸ்திரம் (3,8) இல், ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்"

''உயர் சாதிக்காரன் ஒரு சூத்திரப் பெண்ணோடு சேர்ந்து உடல் இன்பம் பெறுவானேயானால் அதனை ஒரு குற்றமாகக் கருதக்கூடாது."

https://www.facebook.com/100003209496567/posts/1983322235118074/

Tuesday, January 29, 2019

மார்வாடிகள் தொழில் ரகசியம் - RS Prabhu

RS Prabhu
2019-01-29

வட இந்திய வியாபாரிகள் தமிழகத்தின் பெருவாரியான வியாபாரத்தைப் பிடித்துக்கொண்டு விட்டனர் என்று அவ்வப்போது சிலர் அறச்சீற்றம் அடைவதைக் காண முடிகிறது. உண்மைதான், கணிசமான எண்ணிக்கையில் வடமாநில வியாபாரிகள் தமிழகத்தின் சின்னச்சின்ன ஊர்கள் வரைக்கும் வந்து கடை போட்டிருக்கின்றனர். மேற்கு மாவட்டங்களில் ஒவ்வொரு நான்கு ரோடு சந்திப்பிலும் மலையாளிகள் பத்தாண்டுகளுக்கு முன்னரே பேக்கரி போட்டுவிட்டனர். தின்பண்டங்களில் இன்று சொந்த பிராண்டுகளில் வந்துவிட்டனர்.

தமிழகத்தில் எந்த கட்டிட உரிமையாளரும் சேட்டுபசங்களுக்குத்தான் கடை வாடகைக்குத் தருவேன் என்று சொல்வதில்லை. கம்பெனிகள், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டுகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் யாரும் 'இந்திக்கார கடை ஓனர்களுக்கு மட்டும் சப்ளை செய்யப்படும்' என்று போர்டு மாட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கவும் இல்லை. ஆமை போன பாதையை வைத்து கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்து வாணிபம் செய்த்தாகச் சொல்லப்படும் இந்த தமிழ்குடிக்கு என்னதான் ஆயிற்று?

கணிசமாக படித்து வேலைக்குப் போன பெற்றோர்கள் தங்களது வாரிசுகள் வியாபாரம் என்ற பெயரில் தங்களது பணத்தை ரிஸ்க் எடுக்க அனுமதிப்பதில்லை. எப்படியும் ஒரு வேலை கிடைத்துவிடும் என்ற சூழல் இருப்பதால் வியாபாரம் பண்ணித்தான் பிழைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாததால்  பாதுகாப்பான வருமானத்துக்கு வழி தேடுவது இளைஞர்களின் வழக்கமாகவே ஆகிவிட்டது.

ஓர் ஊழியருக்கான திறன்களை வளர்ப்பதில் நாம் படிக்கும் பள்ளி, கல்லூரிகள் காட்டும் ஆர்வத்தில் 10% கூட தொழில் முனைவோரை உருவாக்க காட்டுவதில்லை. கேம்பஸ் இன்டர்வியூக்களில் வேலை பெற்றவர்களை, அதன்பின்னரும் பிரபல நிறுவனங்களில் சம்பளம் வாங்கும் ஊழியர்களை அடையாளம் கண்டு விளம்பரப்படுத்திக்கொள்ளும் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கங்களுக்கு எத்தனை பேர் தொழில் முனைவோர் ஆனார்கள் என்றே பெரும்பாலும் தெரிவதில்லை.

படித்து முடித்ததும் வேலை கிடைக்கவில்லை என்றால் உயர்கல்வி படிப்பது, திருமணமாகும் வரை உயர்கல்வி கற்பது என பொழுதை  ஓட்ட படிக்கப்போவது தமிழகத்தில் இப்போது ஃபேஷனாகி வருகிறது. இந்தப் பிரிவினர் ஒருபோதும் தொழில் தொடங்குவதில்லை.

ஒருத்தர்கிட்ட கைநீட்டி சம்பளம் வாங்கக்கூடாது, எனக்கு நான்தான் பாஸ், இன்னொருத்தன் எனக்கு வேலை சொல்ற நிலைமைல நான் இருக்ககூடாது என்றெல்லாம் சுயதொழில் செய்வது குறித்து இருக்கும் மாயை. இந்த நினைப்பில் தொழில் ஆரம்பிப்பவர்கள் வெகுசீக்கிரம் மண்ணைக் கவ்வுவதுடன் மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைக்கும் கல்லுக்கட்டு சித்தர்களாகி விடுகின்றனர். ஊரில் எவனாவது தொழில் செய்ய ஆரம்பித்தால் இத்தகைய நபர்களுடைய கதைகளைச் சொல்லி பலரும்  பயமுறுத்துவது வழக்கம்.

வியாபாரத்துக்கு வந்துவிட்டால் நாலு காசு போட்டு நாலு காசு சம்பாதிக்கத்தான் வந்திருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் ஆண்டசாதி பெருமை பேசிக்கொண்டு ஒரு மொக்கையான வட்டத்தை மட்டும்  வைத்துக்கொள்வதும் ஒரு காரணம்.

உள்ளூரில் உள்ள நபரால் தொடங்கி நடத்த முடியாத கடைகளை எப்படி சின்னச்சின்ன சேட்டு பையன்கள் எடுத்து வெற்றிகரமாக நடத்துகின்றனர் என்பதை விரிவாக அலசாமல்  'அவனுங்கள்லாம் ஒற்றுமையாக இருக்கின்றனர்' என்று எளிதாக முடித்துக்கொள்கிறோம். எந்த தொழிலுக்கும் சிக்கனம் என்பது மிக முக்கியமான ஒன்று.

Frugal management என்று எம்பிஏ-க்களில் படிப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு மணிநேரம் முன்னதாக கடை திறக்கும் அவர்கள் ஒரு மணிநேரம் பின்னதாக சாத்துவதில் ஆரம்பித்து, மதிய உணவைக்கூட கல்லாவுக்கு கீழே அமர்ந்து பதினைந்து நிமிடத்தில் முடித்துக்வொள்வது முதல் குறைவான இலாபத்தில் நிறைய விற்கும் கலை வரை பலவற்றை அந்தந்த ஊர் மக்களின் பழக்கவழக்கங்களை, தேவைகளைப் பார்த்து  கற்றுக்கொள்கின்றனர்.

நல்ல அனுபவமிக்க வியாபாரிகளுடன் பழகும்போது அவர்களிடமிருந்து கிடைக்கும் தொழில் நுணுக்கங்கள், அணுகுமுறைகள் விலை மதிப்பற்றவை. கல்லாவில் உட்கார்ந்திருக்கும் நீங்கள் மதிய உணவு சாப்பிடும்போது வாடிக்கையாளர் வந்தால் என்ன செய்வீர்கள்? கொஞ்சம் உட்காருங்கள் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன் என்றுதானே சொல்வீர்கள். அப்படி சொல்லி, சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டுச் சென்று வியாபாரத்தை முடிக்கும்போது அந்த வாடிக்கையாளரையும் கை கழுவுகிறீர்கள்.

சாப்பாட்டைப் பாதியில் மூடி வைத்துவிட்டு வாடிக்கையாளரைக் கவனிக்கையில் உளவியல் ரீதியாக மிகச்சிறந்த பிணைப்பையும், நம்பிக்கையையும் உண்டாக்க முடியும் எனபது அனுபவஸ்தர்களுக்குத் தெரியும்.  போட்டிக்கு ஆள் இல்லாதவரை நமக்காக வாடிக்கையாளர் காத்திருப்பார். நாலு காசு சம்பாதிக்கத்தானே கடை போட்டு/கம்பெனி ஆரம்பித்து உட்கார்ந்திருக்கிறோம் என்று எளிமையாக எடுத்துக்கொண்டு மார்வாடி, சேட்டு பையன்கள் நடத்தும் கடைகளைக் கவனமாகப் பார்த்தால் இவையெல்லாம் ஒவ்வொன்றாக பிடிபடும்.

ஓரளவுக்கு வியாபாரம் சூடு பிடித்து நாலு காசு புரள ஆரம்பித்தவுடன் ஏலச்சீட்டு பிடிக்கிறேன், ரியல் எஸ்டேட், நாட்டுமாடு வளர்க்கிறேன் என்று லினன் சட்டை மடிப்பு கலையாமல் சப்ளையர்களுக்குக் கட்ட வேண்டிய பணத்தை எடுத்து ரொட்டேஷனில் விடுவது. வார இறுதியில் சீமைச் சாராயத்துடன் தோப்புகளில் கேளிக்கை, கோச்சைக் கறி விருந்து, மாதக்கடைசி பில்லிங் முடித்தவுடன்  'ஹேப்பி எண்டிங்' கொண்டாட்டம், சிறப்பு ஸ்கீம் விற்பனைகள் மூலம்  வருடத்துக்கு இரண்டுமுறை  வெளிநாட்டுப் பயணம் என திரிந்து 5-10 வருடங்களில் பெரும் நட்டத்தைச் சந்தித்து அவர்களைச் சுற்றியுள்ள உறவினர்களுக்கு, இளைஞர்களுக்கு சொந்தத்தொழில் என்றாலே பெரும் பீதியை உண்டாக்கிவிடுவது.

ஆனால் மார்வாடிகள் சிறப்பு ஸ்கீம்களில் விற்ற புள்ளிகளை கிரெடிட் நோட் போட்டு சரக்காக எடுத்து காசாக்குவார்களே தவிர தாய்லாந்து பயணம் மேற்கொள்ள மாட்டார்கள். நம்மவர்கள் அவர்களது ஒட்டுமொத்த நடத்தை, சமூகத்தில் இயங்கும் விதம், பணத்தையும் நேரத்தையும் உறவுகளையும் கையாளும் விதம் என எதையுமே பார்க்காமல் அவர்களது கல்லாவில் காசு விழுவதை மட்டுமே பார்ப்பதில்தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

இந்தியாவில் தமிழகமும், குஜராத்தும்தான் பெண்களின் பெயரில் அதிக தொழில்முனைவோர்களைக் கொண்டவை. ஏகப்பட்ட இளைஞர்கள் பணிபுரிந்தவாறே மனைவி பெயரில்  தொழில் நடத்துவது தமிழகத்தில் மிக இயல்பான ஒன்று. அவ்வாறு இல்லையே என்று தோன்றினால் நீங்கள் வேறு தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் பொருள்.

கார்ப்பரேட் எதிர்ப்பு என்றபெயரில் சில லெட்டர் பேடு டம்ளர் கட்சிகள் இளைஞர்களை படுமுட்டாளுக்கும் செயல்களைச் செய்துகொண்டிருக்கின்றன. உரிமையாளர் நிறுவனம், பங்காளி நிறுவனம், பிரைவேட் லிமிடெட் போன்றவை குறித்த எந்த புரிதலும் இல்லாமல் உளறிக்கொண்டிருக்கின்றனர். கஷ்டப்பட்டு தொழில் நடத்தி வெற்றிகரமாக நடத்துகையில் சர்வதேச சூழல் அல்லது உள்ளூர் விதிமுறைகள் காரணமாக தொழில் நொடித்துவிட்டால் சோற்றுக்கு என்ன செய்வது என்ற புரிதல் இல்லாமல் பன்னாட்டு மாஃபியா, பனியா மாஃபியா, கார்ப்பரேட் மாஃபியா என கற்பனை பயங்களை மற்றவர்களுக்கும் பரப்புவது இவர்களது வேலை.

உதாரணமாக பிளாஸ்டிக் கவர் செய்யும் இயந்திரங்களை இரண்டு கோடி ரூபாய்க்கு சொத்தை வங்கியில் அடகு வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். Break even இன்னும் ஒரு வருடத்தில் வந்துவிடும் என்ற சூழலில் அரசாங்கம் பிளாஸ்டிக்கைத் தடை செய்கிறது.  பக்கத்து மாநிலத்துக்கு செல்வது அல்லது இங்கிருந்து விற்பது என எந்த முடிவு எடுத்தாலும் தொழிலை தொடர்வதற்கு மாதம் மூன்று நான்கு இலட்சம் ரூபாயை உள்ளே இறக்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஒருகட்டத்தில் தொழில் நடத்த முடியாது எனும்போது Proprietor எனப்படும் முதலாளியாக பதிவு செய்து தொழில் நடத்தியவர் படிப்படியாக வளர்ந்திருந்தாலும் சொத்து முழுவதும் வங்கிக் கடனுடன் இணைக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்படுவார்.

அதேநேரத்தில் படிப்படியாக வளர்ந்து பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக பதிவு செய்து நடத்தியவரது வீடு வாசலாவது மிஞ்சும். இந்த மாதிரியான விரும்பத்தகாத சூழல்களில் சட்டப்பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணராமல் கார்ப்பரேட் எதிர்ப்பு பேசிக்கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு மத்தியில் சேட்டான்கள் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் பதிவு செய்ய ஆரம்பித்து இன்று அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த வீரமிகு ஒறவுகள் விரைவில் அவர்களது கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்லும் நாள் வரத்தான் போகிறது.

நமது இளைஞர்களின் மிகப்பெரிய பிரச்சினை சோம்பேறித்தனம். எதாச்சும் பண்ணனும் பாஸ் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்களே தவிர எதையும் ஆரம்பிக்கவே மாட்டார்கள்.  மந்திரத்தில் மாங்காய் காய்க்காது. ஆரம்பித்தால்தானே எப்படி இருக்கும் என்று தெரியும். சில பல இலட்சங்களை ஒரு தொழில் ஆரம்பித்து இழந்தால்தான் என்ன? அந்த அனுபவத்தில் கிடைக்கும் புத்திகொள்முதலுக்கு விலையே கிடையாது.

காமசூத்ரா படித்துக்கொண்டும் அதைப்பற்றி நாலு பேர் சொல்லும் கதைகளைப் கேட்டுக்கொண்டே இருந்தால் என்ன பயன் உண்டாகும்? அதே போல்தான் அளவுக்கதிகமான சுய முன்னேற்ற நூல்களைப் படிப்பதும், வருவோர் போவோரிடமெல்லாம் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருப்பதும்.

பணம் இல்லாதது ஒரு பெரிய தடையே அல்ல. மனம் இல்லாததுதான் ஆகச்சிறந்த தடை.

If you don't do it, you won't learn it.

நம் ஊரில் அவ்வளவு வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதைக் கண்ட வடக்கத்தியர்கள் இங்கே கடை விரிக்கும்போது நம்மைத் தடுப்பது எது?

விழித்துக்கொள் தமிழா!!

https://m.facebook.com/story.php?story_fbid=10156383858268773&id=595298772