Saturday, February 16, 2019

இராணுவத்துடன் படுப்பதுதான் தேசபக்தியா?

இராணுவத்துடன் படுப்பதுதான் தேசபக்தியா?
காஷ்மீர்_மாணவி.

*நீங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்கள் என்றல்லவா இங்கே பிரச்சாரம் செய்யப்படுகிறது?*

நாங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்களா? நாங்கள் இந்தியாவை எந்தளவுக்கு வெறுக்கிறோமோ அதே அளவுக்கு பாகிஸ்தானையும் வெறுக்கிறோம். எங்களை சுதந்திரமாக விட்டால் போதும் பிழைத்துக் கொள்வோம்

*இந்திய அரசு உங்களுக்காக நிறைய செலவு செய்கிறது நிறைய சலுகைகள் கொடுத்துள்ளது என்றெல்லாம் வெளியே பிரச்சாரம் செய்யப் படுகிறதே? அவ்வளவையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக பேசுவது நன்றி கெட்டத்தனம் என்றல்லவா ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சொல்கிறார்கள்?*

முதலில் எங்களுக்காக செலவு செய்கிறது என்று சொல்வதே பித்தலாட்டமான வாதம்… எங்களை வைத்து செல்வு செய்கிறது என்று சொல்ல வேண்டும். அப்படி செலவு செய்யப்படும் பணம் எங்கே போகிறது தெரியுமா?

ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரரை நிறுத்தியிருக்கிறது இந்திய அரசு. இராணுவம்தான் அத்தனை காசையும் தின்கிறது.

இவர்களின் வேலை என்ன தெரியுமா? நல்ல வளமான இடத்தை ஆக்கிரமித்து முகாம் போட்டுக் கொள்கிறார்கள்.. அரசு ஒதுக்கும் காசில் நன்றாக குடித்து விட்டு பெண்கள் தனியே எதிர்ப்படும் போது அவர்கள் பார்க்கும் விதமாக தங்கள் ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்…..

உங்கள் குடும்பத்துப் பெண் பிள்ளைகளை அந்த இடத்தில் வைத்து யோசித்துப் பார்த்தால் தான் உங்களுக்கு எங்கள் வலி புரியும்

*இந்த மாதிரியான அத்துமீறல்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கிறதல்லவா?*

அத்துமீறல்கள் என்று ஒரே வார்த்தையில் எங்கள் வாழ்க்கையை நீங்கள் சுருக்க முடியாது. ஒன்றரை லட்சம் மக்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.. சுமார் பத்தாயிரம் பெண்கள் அரை விதவைகளாக இருக்கிறார்கள்…

அரை விதவை என்ற பதத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

*சொல்லுங்கள்,*

இந்தப் பெண்களின் கணவன்மார்களெல்லாம் இராணுவத்தால் ‘விசாரணை’ என்ற பேரிலோ அல்லது வேறு முகாந்திரங்களைச் சொல்லியோ அழைத்துச் செல்லப்பட்டவர்கள்… எத்தனையோ ஆண்டுகளாகியும் அவர்களெல்லாம் திரும்பவில்லை..

கட்டியவன் இருக்கிறானா செத்துப் போய் விட்டானா என்று கூட இவர்களுக்குத் தெரியாது. இறந்து விட்டான் என்று உத்திரவாதமாக தெரிந்தால் கூட மறுமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கலாம்.. அல்லது மனதை சமாதானப்படுத்திக் கொண்டு எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்கலாம்..

தங்கள் கணவன்மார்களுக்கு என்ன நேர்ந்ததென்றே இவர்களுக்குத் தெரியாது… ஆண்டுக்கணக்கில் இப்படி அரை விதவைகளாகவே கழித்து வருகிறார்கள்…

*இதெல்லாம் இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் வந்ததில்லையே…*

எப்படி வரும்? ஜே.என்.யு விவகாரத்தில் பார்க்கிறீர்கள் அல்லவா? வேட்டையாடும் வெறியோடு எங்கள் மீது பாய்ந்து குதறும் வாய்ப்புக்காகத்தானே காத்திருக்கின்றன இந்த ஊடகங்கள்.. அரை விதவைகள் பற்றிச் சொன்னேன் அல்லவா..?

அதே போல் எண்பதினாயிரம் அனாதைகளை உங்கள் இராணுவம் எங்களுக்குப் பரிசளித்துள்ளது தெரியுமா. இப்போது சொல்லுங்கள் இதெல்லாம் எங்களுக்கு உங்கள் அரசாங்கம் கொடுத்த சலுகைகளா?

*ஆனால் இவற்றையெல்லாம் நீங்கள் ஏன் இந்தியாவின் மற்ற பகுதி மக்களிடம் எடுத்துச் செல்லக் கூடாது?*

தோழர்.. புரிந்து கொள்ளுங்கள்.. அங்கே ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரனையோ போலீசையோ உளவாளியையோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.. நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியாது.. நாங்கள் எங்களைச் சுற்றி இருக்கும் யாரையும் நம்ப முடியாது. யாரையும், எதையும் சந்தேகத்தோடு பார்த்தால் தான் பிழைத்துக் கிடக்கவே முடியும்..

ஆள் தெரியாமல் யாரிடமாவது எதையாவது பேசப் போனால் ‘எல்லையைக் கடக்க முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் புகைப்படம் இதோ’ என்று மறுநாள் ரத்தம் தோய்ந்த எங்கள் சடலங்கள் தலைப்புச் செய்தியில் வந்து விடும்.. எப்போதும் யாரோ உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கும் அந்த உளவியல் சித்திரவதையை மற்றவர்கள் உணர்வது கடினம்.

*ஆனால், இது ஒடுக்கப்படும் எல்லா மக்களும் எதிர் கொள்வது தானே? தண்டகாரண்யாவிலும் வட கிழக்கிலும் கூட மக்கள் இதே துயரங்களைத் தானே எதிர் கொள்கிறார்கள்?*

நான் தெளிவாக ஒன்றைச் சொல்லி விடுகிறேன். நாங்கள் புரட்சிக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்திய துணைக்கண்டமெங்கும் ஒடுக்கப்படும் மக்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். அவர்களோடெல்லாம் ஒரு ஐக்கியத்தைக் கட்டமைப்பதன் மூலம் தான் இந்திய ஆளும் வர்க்கத்தை வெல்ல முடியும் என்பதும் எதார்த்தமானது தான்…

ஆனால், அப்படியான ஒரு ஐக்கியம் வரும் வரைக்கும் எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? செத்து மடிய வேண்டுமா? என்றோ ஒரு நாள் வரும் புரட்சிக்காக இன்றைக்கு நாங்கள் பிணங்களை எண்ணி விளையாடிக் கொண்டிருக்க வேண்டுமா?

எங்கள் காஷ்மீரில் மூன்றில் ஒருவர் உளவியல் ரீதியாக மன அழுத்த நோயால் (Dipression) பீடிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? தோழர்… நாங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முதலில் உடனடியாக நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிய வைக்க வேண்டும்..

எங்கள் குரல்கள் நின்று விட்டால் குரல்வளைகள் அறுத்து எரியப்பட்டு விடும். ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்துபட்ட ஒற்றுமைக்காக நாங்கள் என்றுமே நிற்கிறோம்.. ஆனால் அதுவரை சும்மா இருக்க முடியாது.

- நன்றி வினவு

Friday, February 15, 2019

ராணுவத்தின் மீது தாக்குதல்

Umamaheshvaran Panneerselvam
2019-02-16

*Case 1:*

டீமானட்டைசேஷன் மூலம் கருப்பு பணம் ஒழிந்தது என்று ரீல் சுத்திய பாஜக கூடவே எக்ஸ்ட்ரா போனசாக இன்னொரு விஷயத்தையும் சொன்னது.

"தீவிரவாதிகளுக்கு போகும் பணம் எல்லாம் இதனால் ஒழிந்துவிட்டது" - என்று.

அப்படி என்றால் இப்போதைய தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எங்கிருந்து பணம் வந்தது?

*Case 2:*

ஒருவேளை பணம் வெளியிலிருந்து தான் வந்தது என்றால் அதை sense செய்யத் தவறியது Intelligence ன் தோல்வியா?..

Intelligence தோல்வியடையவில்லை என்றால் selective amnesia அல்லது nepotism ஆக பணம் பரிமாற்றம் அடையட்டும், தாக்குதல் நடக்கட்டும் victim game play செய்து நேரு மீது பழி போடலாம் என்று காத்திருந்தார்களா?

அப்படியெனில் "எல்லையில் ராணுவ வீரர்கள்... " - என்று தினுசாக பேசி அவர்களை decoys ஆக பயன்படுத்திக்கொண்டதா இந்த அரசு?

*Case 3:*

கவர்னர் ஆட்சி நடந்துகொண்டிருக்கையில் முந்தைய அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்கள் சங்கிகள்?

அப்படியெனில் கவர்னர் ஒரு செல்லாக்காசு, அதுவும் காஷ்மீர் போன்ற high alert மாநிலத்தில் கவர்னர் ஆட்சியே இருந்தாலும்கூட "முந்தைய அரசு தான் இந்த தாக்குதலுக்கு ஜவாப்தாரி" - எனில் அங்கே Kashmir is an independent state despite a Governor being there என்ற clause பூர்த்தியாகிறதா?

எப்படி பார்த்தாலும் முந்தைய ஆட்சி இந்த சங்கிகளின் கூட்டணி ஆட்சிதான்.

*Case 4:*

இறந்த ராணுவ வீரர்கள் நம்மவர்கள். நம் சகோதரர்கள். தமிழகத்திலிருந்து 2 தமிழர்கள் பலியாகியிருக்கிறார்கள். யாருடை அலட்சியத்தால் இந்த உயிர்பலி ?

முதலில் இறந்த வீரர்களில் எத்தனைப் பேர் உயர்சாதியினர்?

வெளிப்படையாக கேட்பதானால் எத்தனைப் பேர் பார்ப்பனர்கள்?

(உடனே ராணுவ வீரன் என்றால் இந்தியன், அதில் சாதி ஆராய்ச்சி செய்யலாமா என்று தூக்கிக் கொண்டு வரவேண்டாம். சீக் ரெஜிமெண்ட், கோர்க்கா ரெஜிமெண்ட், மதராஸ் ரெஜிமெண்ட் என்று demarcations இருந்தது எந்த அடிப்படையில்? Geological  பிரிவினை மட்டும் தானா?)

சரி அபத்தமான கேள்வியாகவே இருக்கட்டும். உயிர் தியாகம் செய்ததில் பார்ப்பனர்களே இல்லை. ஆனால் வட இந்திய குரூர மீடியா பார்ப்பனர்கள் arm chair critic ஆக அமர்ந்துகொண்டு India wants revenge, India wants war, India needs to kill எனறு பேசுவது எவ்வளவு பெரிய அவல நகைச்சுவை?

இன்னொரு சண்டை வந்தால் எத்தனை பார்ப்பனர்கள் அங்கே போய் சாக தயாராக இருக்கிறார்கள்? ஒருவேளை ராணுவத்தில் பார்ப்பனர்கள் அதிகமாக இருந்தால் "போர் வேண்டும் மீண்டும்... ரிவஞ்ச் வேண்டும்" என்றெல்லாம் வட இந்திய பார்ப்பன லாபி பேசுமா?

*Case 5:*

ரிவஞ்ச் வேண்டும் ... சரி... யார் மீது? அதுவும் எந்த நேரத்தில்?

இந்திய பொருளாதாரம் 50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் இருக்கிறது. பெரும் பணக்கார நிறுவனங்களே திவால் நோட்டீஸ் கொடுக்கும் சூழல் தான் இருக்கிறது. வெளிப்படையாக சொல்வதானால் போலியோ சொட்டு மருந்துகூட வாங்க வக்கு இல்லாமல், காசு இல்லாமல் தான் இருக்கிறது இந்த அரசு. கடன் சுமை ஏறியிருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது.

இந்த சமயத்தில் போர் என்றால் இந்த Burden னை தாங்கப்போவது யார்?

எத்தனை கோடி ஏழைகள் வயிற்றில் மீண்டும் அடி விழும்?

*Case 6:*

இல்லை. இதையெல்லாம் தாண்டி நான் போர்த்தொடுத்தே தீருவேன் என்றால்.

China- Pakistan tie up, Asia Pacific வட்டாரத்தில் அச்சமூட்டும் வகையில் military, economical, strategical, tourism development என இத்யாதி இத்யாதி tie up ல் இருக்கிறது.

டோக்லம் நியாபகத்தில் இருக்கிறதா? அங்கே வந்து சீன பட்டாலியன் நிற்கிறது. ஆனால் அவர்கள் மிரட்டக் கூட நம்மால் முடியவில்லை. சீன பயணம் மேற்கொண்ட பிரதமரோ மறந்தும் அதை குறித்து பேச துணியவில்லை.

அப்படி இருக்கையில் மொத்தமாக all out war with Pak என்பது all out war with China போலத்தான்.

சீனாவுக்கெதிரான போரைத் தாங்க economy and militia strength நம்மிடம் உள்ளதா?

போர் என்று வந்தால் எவ்வளவு economic burden, மொத்தமாக இங்கே cash liquidation எப்படி முடக்கப்படும், எப்படி சேமிப்பை அரசு இறுக்கி வைத்துக்கொள்ளும் என்று புரியாத Generation எல்லாம் ஏதோ age of empires, call of duty, PUBG போல் போர் தொடுக்கலாம், அடித்து தூக்கலாம் என்று பேசுவது அறியாமை மட்டுமல்ல, நம் ஊரின் intellectual மலட்டுத்தன்மையின் வெளிப்பாடு.

*Case 7:*

எல்லாவற்றுக்குமே முந்தைய அரசு தான் காரணம் என்றால், 1999ல் தீவிரவாத தாக்குதல், காந்தஹார் விமான கடத்தல் தீவிரவாதிகளை எல்லாம் ரிலீஸ் செய்தது பாஜக. செய்தவர் பாஜகவின் நல்ல முகம் என்று காட்டப்படும் வாஜ்பாய்.

அப்பொழுது தீவிரவாதிகளை வளரவிட்டது, வளர்த்துவிட்டது பாஜக தான் என்று எடுத்துக்கொள்ளலாமா?

அதே தீவிரவாதிகள் தான் இப்பொழுதும் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால், அவர்களுக்கு உதவுவது யார்?

All is Nehru's fault என்ற கோட்பாட்டிப்படி, All is Vajpaye's fault, All is our fault என்று ஒப்புக்கொள்ள பாஜக தயங்குவது ஏன்?

*Case 8:*

தேர்தலைத் தள்ளிப்போட இன்னும் எத்தனைத் தாக்குதல்களை "எதேச்சையாக" நடக்க அனுமதிக்கப்போகிறீர்கள் மோடி?.

உங்கள் Party gains க்காக இன்னும் எத்தனை எத்தனை ஏழை இந்திய சகோதிரர்கள் , உண்மையான ஏழைத் தாய் மகன்கள் சாக வேண்டும்?

https://m.facebook.com/story.php?story_fbid=10216117542324746&id=1636056806

Saturday, February 9, 2019

முஸ்லீம்கள் எவ்வளவு காலம்தான் சிலுவை சுமப்பது

ஃபாரூக்மீரான்
2019-02-09

...
முஸ்லீம்களை எவ்வளவு காலம்தான் சிலுவை  சுமக்க சொல்வீர்கள்?
...

மறைந்த ஒசாமா பின் லேடனோ, தாவூத் இப்ராஹீமோ இந்திய முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளுமல்ல. நீங்கள் அன்றாட வாழ்வில் காணும் எந்த முஸ்லிமும் இவர்களைப் பிரதிபலிப்பவர்களுமல்ல. இன்றைய நிலையில் எந்த முஸ்லிம்களாலும் ஏதோவொரு சமூகஊறு நிகழ்ந்தாலும் நன்றாகப் பழகியவர்களே "இதற்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்றொரு கேள்வியின் மூலம் கோட்டிற்கு எதிர்புறமாய்க் கொண்டு நிறுத்துகிறார்கள்.

முதலில் நடுநிலை பேசுபவர்களோ அல்லது முற்போக்காளன் என தம்மை அடையாளப் படுத்திக் கொள்பவர்களுக்கோ தோன்றும்  இத்தகைய கேள்விகள் அவர்களின் குற்றவுணர்ச்சியிலிருந்தோ அல்லது இப்போது இஸ்லாமியர்களை விமர்சிதே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே தோன்றுகிறதேயன்றி அறம்சார்ந்தோ, அல்லது சமூகநீதி சார்ந்ததாகவோ இல்லை என்பதே பெரும்பாலும் உண்மை.

ஏனெனில் இந்துத்வத்தின் கோரச் செயல்களை விமர்சிக்கும் போது உடன்படும் சமூகம் அவர்கள் இந்துக்களின் சடங்குகளையோ அல்லது மூடநம்பிக்கைகளையோ விமர்சிக்கும் போது "இதே போன்று மற்ற மதத்தினரை உங்களால் விமர்சிக்க முடியுமா?"  என எதிர்கேள்வி கேட்கிறது. களத்தில் செயல்படுபவர் களானாலும் சரி, அல்லது முகநூலில் எழுதுபவர்களானாலும் சரி ஒவ்வொருவரின் தலையின் மீதும் இக்கேள்வி தொங்கியபடியே இருக்கிறது.

எனவே கிடைத்த வாய்ப்பில் அவர்கள் தங்களை நியாயப்படுத்தும் முயற்சியில் நீதி எதுவென வெளிவரும் முன்பே தீர்ப்பெழுதத்துவங்குகிறார்கள். ஃபாசிஸ்டுகளுடன் சமூகநீதி பேசுபவர்களும் கை கோர்க்கும் புள்ளி இதுதான். இதில் இந்து முஸ்லிமென எந்த பேதமுமில்லை.

---

சரி இதுதான் முதன்முறையா?

இதற்கு முன்  எத்தனையோ இந்துத்வ செயற்பாட்டார்கள் சொந்தக் காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்டபோதும், பழி ஏதோவொரு முஸ்லிமின் மீது விழவில்லையா?

இதே திருப்பூரில் மோடியின் படத்திற்கு பாஜக நிர்வாகியே செருப்பு மாலையணிவித்து ஒரு மதக்கலவரத்திற்கு முயற்சிக்கவில்லையா?

தமிழகத்தில் அல்லது இந்தியாவில் அல்லது உலகின் ஏதோவொரு மூலையில் ஏதோவொரு முஸ்லிம் தவறிழைத்தாலும்கூட தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பாவ மன்னிப்புக் கோரவேண்டுமா?

ஒரு ரத யாத்திரையானாலும் சரி, ஒரு விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானாலும் சரி முஸ்லிம்கள் தங்களின் உயிரைப் பிடித்தபடியேதான் வாழ வேண்டுமா?

ஒரு முஸ்லிம் தன்னுடைய நம்பிக்கையை சிதைத்துத்தான் இங்கு நல்லிணக்கத்தை பேச வேண்டுமா?

"இல்லை, ராமலிங்கம் கொலை தொடர்பாக முஸ்லிம்கள்தானே கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்" - எனில் அனைத்து சம்பவங்களிலும், இதற்கு முன் வந்த இனி வரப்போகும் காவல்துறையின் அறிக்கையே இறுதியானது என நாம் ஏற்றுக் கொண்டு விடுவோமா?

கோத்ரா ரயில் எரிப்பு நடைபெற்ற இரண்டுமணி நேரத்திலேயே "இஸ்லாமியர்கள்தான் இதற்கு காரணம்" என்ற மோடியின் கூற்றையும் நாம் ஏற்றுக் கொள்வோமா, ?

பார்பன தீவிரவாதி கோட்சே காந்தியை கொன்றுவிட்டு அப்பழியை முஸ்லீம்களின் போட்ட வரலாற்று உண்மையை எப்படி பார்க்கின்றீர்கள்?

"இந்தியாவில் நிகழ்ந்த அத்தனை குண்டு வெடிப்புகளையும் இஸ்லாமியர்கள்தான் செய்தார்கள்" - என்ற புரட்டையும் நாம் ஏற்றுக் கொள்வோமா?

தீஸ்தா செதல்வாட், மற்றும் ஹேமந்த் கார்கரேகியோரின் அறிக்கைகளை என்ன செய்வது, குப்பையில் வீசி புறக்கணிப்போமா?

---

சுவாதி கொலையில் பிலால் மாலிக், ஆடிட்டர் ரமேஷ் கொலையில் பன்னா இஸ்மாயில், இப்போது ராமலிங்கம் கொலையில் ஐந்து முஸ்லிம்கள். ஒவ்வொரு பொய்யும் உடைபட உடைபட இந்துத்துவ செயற்பாட்டாளர்களுக்கு இணையாக புதிய புதிய அநீதிகளை கொண்டு எம்முகத்தில் அடிப்பது எந்த அடிப்படையிலான சமூகநீதி.

இங்கு எவனும் குற்றம் செய்துவிட்டு தப்பிக்க உங்களின் ஒத்துழைப்பைக் கோரவில்லையே. முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எனது சகோதரத்துவத்தை, எனது தேசபக்தியை, என நல்லிணக்கத்தை சமூகத்தின் முன் நான் நிரூபித்தே ஆக வேண்டுமென்ற உங்களின் உளவியலே இச்சிறுபான்மை மனநிலையின்  சமநிலையைக் கூறுபோடுகிறது.

இப்படியாக கூறுபோடப்படும் மனநிலையானது நாளடைவில் தன்னைத்தானே இரண்டாம் தரக் குடிமகனாக உணரச் செய்கிறது. இப்படியான தனிமனித உளவியலே ஒன்று சேர்ந்து தேச முஸ்லிம் மாந்தரின் பொது உளவியலாக கட்டமைக்கப்படுகிறது.

பாபர் மஸ்ஜிதோ, தாஜ்மஹாலோ என்ன எழவோ எப்படியேனும் போகட்டும் நாம் உயிர்பிழைத்தால் போதும், கர்ப்பிணி மனைவியின் கரு பிய்த்தெறியப் படாமலிருந்தால் போதும் என நிம்மதியடைய வைக்கிறது.

---

தவிர இங்கு முற்போக்காளரென உணரும் பலருக்கும்  இஸ்லாமிய சமூகம் பலவீனமானது, அவர்கள் வென்றெடுக்கப்பட வேண்டிய மக்கள் என்பதைக் கடந்து தங்களுக்கு இணையாக வைத்துப்பார்ப்பதில் இருக்கும் ஒவ்வாமையானது நாளடைவில் விரிவடைந்து கொண்டேதானிருக்கிறது.

ஏனைய பிற சமூகங்களைப் போலவே குறை நிறைகளோடிருக்கும் ஒரு சமூகத்தை இப்படியான மனநிலையில் அனுகுவதன் மூலம் சிறு தவறும் மத அடிப்படையில் காணப்படுகிறதேயன்றி பரஸ்பர புரிதலின் அடிப்படையில் அல்ல. அதுவே இயல்பாக ஒரு சமூகத்தை கோட்டிற்கு அந்தப்பக்கமாக நிறுத்திவைத்து விமர்சிக்கச் செய்கிறது.

இதுவே ஒரு நிலத்தகறாரோ, கொடுங்கல் வாங்கல் பிரச்சனையோ ஒருவேளை ஒரு முஸ்லிமினால் ஒரு இந்து பாதிக்கப்பட்டு விட்டால்  அங்கு தனிமனித தவறைவிடவும் மத அடிப்படையில் ஒருவன்மீது தீர்ப்புச் செய்யக் காரணமாகிறது. அப்படியானதொரு தனிமனித தவறும் மதக்கலவரமாகிவிடுமோ, இதற்கும் தாங்கள் விளக்கமளிக்க வேண்டுமா என்ற நிலையில் ஒரு சமூகம் பதற்றத்தோடிருப்படு கொடுமையிலும் கொடுமை.

இந்துத்வ கட்சி மற்றும் அமைப்பு சார்ந்தவர்கள்  இப்படியொரு இக்கட்டை முஸ்லிம்களுக்கு தோற்றுவிப்பதன் காரணத்தை ஆதியும் அந்தமுமாய் நாம் புரிந்துகொள்ளவியலும். *ஆனால் களத்தில் உடனிருப்பவர்களின் விரல்கள் நம்மை நோக்கி நீளும் அரசியல்தான் மிக அபாயமானது*

---

இந்தியச்சிறைகளில் தங்களது மக்கள்தொகை விகிதாச்சாரத்தை விடவும் அதிகளவில் இருப்பது இஸ்லாமியர்கள்தானே.

சந்தேகத்தின் அடிப்படையில் ஆயுள் முழுவதும் விசாரணைக் கைதிகளாக இருப்பவார்கள் தங்களின் தவறுகளுக்காக மட்டும்தான் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்களா?

வேறு காரணங்கள் இருக்கிறதா இல்லையா என உண்மையாகவே உங்களின் மனசாட்சிக்குத் தெரியாதா?

அல்லது எல்லாமறிந்தும் உஙகளின் சமூகச் சமநிலையை நீங்கள் நிரூபிக்க நாங்கள் சிலுவை சுமந்தேதான் தீர வேண்டுமா?

இது என்ன அடிப்படையிலான அறம்?

சிறுமி ஆசிஃபாவை வல்லுறவு புரிந்தவர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக பாஜகவின் எம். பி முதலானோர் ஊர்வலமாகவே சென்றார்கள்.

இந்தியாவில் எந்த முஸ்லிம்களோ, அல்லது அமைப்போ அநீதிக்கு ஆதரவாக அப்படிச் செய்திருக்கின்றார்களா? எந்த தவறு நடந்தாலும் "நான் இதைக் கண்டிக்கிறேன்,  குற்றவாளிகளைக் கல்லால் அடித்துக் கொல்லுங்கள், நடுரோட்டில் தூக்கிலிடுங்கள்" என பேயாய் அலரும் ஒரு சமூகத்தை பேரினவாத அடிப்படை வாதிகளுடன் ஒப்பிடுதல் என்னவகையான நீதி?

என் பெயர் ஒரு முஸ்லிமுடையதாக இருக்கிறதென்பதற்காக - ரஹ்மான் மகள் மேடையில் புர்காவுடன் தோன்றினாலும், ராமலிங்கம் கொலை குறித்தும் எனக்குச் சம்பந்தமே இல்லையென்ற போதிலும் நான் பாவமன்னிப்புக் கோரவேண்டுமென நீங்கள் எதிர்பார்ப்பபீர்களானால் பிரச்சினை  என்னிடமல்ல உங்களிடம்தான்.

"நூறு கருத்துக்கள் மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும்" என்றார் தோழர் மாவோ. நூறல்ல பல்லாயிரக்கணக்கான கருத்துகளால் நாம் மோதிக் கொண்டிருக்கும் போது பேரின அடிப்படைவாதமோ நூறு நச்சுப் பூக்களால் நம் சிந்தனையில் விஷக்காற்றை செலுத்திக் கொண்டிருக்கிறது.

Thursday, February 7, 2019

RSS, BJP, இந்து முண்ணனியில் இருக்கும் ரவுடிகளின் கொலைகளுக்கு முஸ்லிம்கள் காரணமா?

இதுவரை தமிழத்தில் கொலை செய்யப்பட்ட RSS, BJP, இந்து முண்ணனியில் இருக்கும் ரவுடிகளின் கொலைகளுக்கு முஸ்லிம்கள் காரணமா? அல்லது அவர்கள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி, வப்பாட்டி இன்னும் பலபல சமூகவிரோத செயல் காரணமா?

கொஞ்சம் சமீபத்திய வரலாற்றை புரட்டி பார்ப்போமா?

1) நாகப்பட்டிணம்_புகழேந்தி கொலை - 05.07.2012
கொலையாளி: முனீஸ்வரன்
காரணம்: நில அபகரிப்பு,கட்டப்பஞ்சாயத்து

2) பரமக்குடி_முருகன் கொலை - 19.03.2013
கொலையாளிகள்: ராஜபாண்டி & மனோகரன்
காரணம்: நில தகராறு

3) சங்கரன்கோவில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் கொலை - 05.07.2014
கொலையாளி: அவரின் முதல் மனைவி அய்யம்மாள்
காரணம்: இரட்டை திருமணம்

4) கோயம்பேடு_விட்டல்
கொலை 27.4.2012
கொலையாளிகள்: சுந்தரபாண்டியன், முருகன், கங்காதரன்
காரணம்: கந்து வட்டி கேட்டு தொல்லை, அபாச பேச்சு.

5) ராமேஸ்வரம்_குட்டநம்பு
கொலை 07.07.2013
கொலையாளிகள்: ராமச்சந்திரன் உட்பட ஆறு பேர்
காரணம்: குடிபோதையில் தகராறு செய்ததால் மக்களிடம் கல்லால் அடிபட்டு மரணம்.

6) தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டு வெடிப்பு 24.01.2007
குண்டு வைத்தவர்: ஆர் எஸ் எஸ் ரவிபாண்டியன்
காரணம்: தன் அண்ணன் குமார் பாண்டியன் மரணத்தால் எந்த கலவரமும் ஏற்படவில்லை எனும் அதிருப்தியில். ஹிந்து முஸ்லிம் கலவரம் ஏற்படுத்த.

7) வேலூர் பாஜக மருத்துவரணி செயளாலர் டாக்டர்_அரவிந்த்_ரெட்டி
கொலை - 23.10.2012
கொளையாளிகள் (உதயா, சந்திரன், ராஜா, தரணி)
காரண்ம்: கள்ளத் தொடர்பு

8) ஆடிட்டர்_ரமேஷ்
கொலை - 19.07.2013
கொளையாளி: இன்னும் பிடிபடவில்லை
காரணம்: கள்ளத் தொடர்பு
பாஜகவைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் அல்லது கொல்லப் பட்டார்,
முருகமணி என்பவர் மாரடைப்பால் இறந்து விட்டார்
(கட்டிய மனைவி நன்றாக திடமாக இருக்கும்பொழுது,
இரு பெண்களும் ரமேஷ் மீது உள்ள மரியாதையால்தான் தற்கொலை/இறந்தார்கள் என்று நம்புவோமாக).

9, சசிகுமார் கொலை 22;8;2016 இந்து முன்னணியின் கோவை மாவட்ட நிர்வாகி
கொலையாளி ; இந்து முன்னனி நிர்வாகி ஆனந்த் படுகொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்  காரணம்; கள்ளக்காதலால் கொல்லப்பட்டார்

7 & 8 கொலையாளிகள் யார் என்று தெரிந்திருந்தும் இந்துத்வவாதிகளை திருப்தி படுத்துவதற்காக  சில முஸ்லிம்களையும் கைது செய்து இன்று வரை போதிய ஆதாரமின்றி விசாரணைக் கைதிகளாகவே தொடர்கின்றனர்.

அது ஏன் எல்லா டிரௌசரும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு படுகொலை செய்யப் படுகின்றனர்?

எல்லோருமே அப்படியா?

அப்படியல்ல. சமூகவிரோதிகள் தம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரு இயக்கமும் தன்னை யாரும் நெருங்காமல் இருக்க ஹிந்து  எனும் போர்வையும் தேவைப் படுகிறது.
அதனால்தான் சமூக விரோதிகள் பெரும்பாலானோர் சங் பரிவார இயக்கங்களில் இணைகின்றனர். அதுவே அவர்களுக்கு சிறந்த புகலிடமாகவும் இருக்கிறது.

இவர்களை ஹிந்துக்கள் எனும் வரம்பில் வைத்து பார்க்கக் கூடாது. இவர்களை ஹிந்து மக்கள்தான் முதலில் புறக்கணிக்க வேண்டும்.

இறந்தவனைப் பற்றி கவலைப் படும் கூட்டமல்ல அவை. இறந்தவனை வைத்து மதக் கலவரம் ஏற்படாதா என்று ஏங்கி ஒவ்வொரு முறையும் ஏமாறும் கூட்டம் அது

-Shared