Saturday, February 16, 2019

தேசப்பற்று (Patriotism) - லுலு

தேசப்பற்று (Patriotism)

மனிதக்கழிவுகளை அகற்ற கூட இன்னும் manual scavenging தான் யூஸ் பண்ணிகிட்டு இருக்கோம் நம்ம நாட்டுல. அதுல ஒவ்வோரு வருஷமும் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை காவு குடுத்திட்டு இருக்கோம். இது ஒரு பக்கம் இருக்க, நாளுக்கு நாள் இப்டி ராணுவ வீரர்களின் மரணச் செய்திகள் வந்து காதில் நாராசமாய் ஒலிக்குது...

ஒரு முன்னாள் ராணுவ வீரனின் வார்த்தைகளில்....

“உலகின் கடும் பாதுகாப்பு வளையத்தில் உள்ள காஷ்மீர் சாலைகள்.!

ராணுவ கான்வாய் (இந்த வார்த்தையை எழுதுறப்பவே புல்லரிக்கும்) நாளை காலை புறப்படுகிறதென்றால் இன்றிரவு ROP எனப்படும் Road Opening Party புறப்படும். நான்கு வாகனங்களில் புறப்படும் வீரர்கள் சாலையை அங்குலம் அங்குலமாக பாதுகாப்புடன் அலசுவார்கள். மறுநாள் காலையில் அவரவர் தெய்வங்களை வேண்டிய பின்னர் கான்வாயின் ரெட் flag வண்டி புறப்படும். அந்த வண்டி சென்றபின்னர் பொதுமக்கள் சாலையை தாண்டக்கூடாது. எனது மேலதிகாரி சொல்வார் "இந்திய பிரதமரே குறுக்கே வந்தாலும் கான்வாய் நிற்காது". கான்வாய் தலைவராக நியமிக்கப்படும் அதிகாரிக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. கான்வாயை பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வார். அனைத்து வீரர்களுக்கும் AK 47 கட்டாயம் உண்டு. உரி செக்டாரில் புறப்பட்டால் அடுத்த ட்ரான்சிஷன் கேம்பில் தான் கான்வாய் நிற்கும். கான்வாய் வாகனங்களை அவ்வளவு சீக்கிரம் அடித்து தூக்கி விட முடியாது. காரணம் கான்வாய் வாகனங்கள் அனைத்துமே ரஷியாவின்(செக்) Tatra ட்ரக்குகள். சாதாரண பாம்க்கு மயிராக்கூட மதிக்காது அந்த வாகனம். ராணுவம் வேற மாதிரி அப்படிப்பட்ட கான்வாயை தீவிரவாதிகள் தூக்கிய வரலாறு உண்டு.

அப்படியிருக்கையில் சம்பவம் நடந்த புல்வாமா உரி - ஸ்ரீநகர் கான்வாய் பாதையில் சிஆர்பிஎப் வீரர்களை ஒரு சாதாரண பேருந்தில் எப்படி கொண்டு சென்றார்கள் என்று இரண்டு நாளாக மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறேன். எனது ராணுவ நண்பர்களிடமும் கேட்டேன் அவர்களும் ஆச்சரியத்தில் தான் இருக்கிறார்கள். ஒரு நண்பன் சொன்னான், "என்னமோ பண்றாய்ங்க மாப்ள" அந்த வார்த்தைகள் என்னமோ செய்கின்றன என்னை.

அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனது பதைக்கிறது. ஒவ்வொரு நாள் காலையிழும் எழுந்து தெய்வங்களை வேண்டுகிறேன். பாவப்பட்ட அந்த ஜென்மங்களுக்கு எந்த கெடுதலும் நடந்து விடக்கூடாது. ராணுவத்தில் இருக்கும் காலத்தில் தான் அவர்களுக்கு குடும்பம் புள்ளக்குட்டின்னு சந்தோஷமான வாழ்க்கை இல்லை, ரிட்டயர்டாகியாச்சும் புள்ளக்குட்டியோட சந்தோஷமா இருக்கட்டும். மனைவிமார்கள் தங்கள் கணவனை இழந்து, குழந்தைகள் தங்கள் தந்தையை இழந்து தாய் தனது மகனை இழந்து வாடும் வலியை யாரும் அனுபவிக்க வேண்டாம். ராணுவ வீரர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவன் வெறும் சரக்கு பாட்டில் வாங்கிவரும் சாராய வியாபாரி அல்ல!” (John Gladson, வாழ்வின் பொன்னான ஐந்தாண்டுகளை ராணுவத்தில் கழித்தவன்)

பொது மக்களின் ஓங்கிய குரலில்:

“காஷ்மீருக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் போரில் தள்ளுவதை இந்திய மக்கள் விரும்பவில்லை. நாடு விடுதலை அடைந்த நாளில் இருந்து காஷ்மீர் பிரச்சினையை உங்களால் தீர்க்க இயலவில்லை. மேலும் மேலும் மோசமாகிக்கொண்டே போகிறது.

முடிந்தால் போர் இல்லாமல் பிரச்சினையத் தீர்க்க முயலுங்கள். இல்லையென்றால் காஷ்மீரை விட்டுவிடுங்கள். அதுவும் இயலாது என்றால் எங்களை விட்டுவிடுங்கள்.

நாங்கள் போருக்குத் தயாராக இல்லை. எங்களது அன்றாட வாழ்வே பெரும் போராட்டமாக இருக்கிறது. எங்களுக்கு எந்தவகையிலும் பயனில்லாத போரில் நாங்கள் ஈடுபட விரும்பவில்லை. உங்களின் தற்பெருமைக்காக நாங்கள் எங்களை இழக்க விரும்பவில்லை.” (க.பா திருப்பத்தூர்)

- இதுக்கு மேல இதுல நாம என்ன சொல்ல இருக்கு?

இனி, One out of 101 reasons, why Modi’s rule shouldn’t continue...

ராணுவ வீரர்களை பாதுகாக்க முடியாத மோடி, பொது மக்களின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் சிதைக்கும் மோடி இனிமே நாட்டுக்கு தேவையான்னு மக்கள் சிந்திக்க தொடங்க வேண்டிய தருணம் இது. மோடியின் ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1250 ராணுவ வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே காங்கிரஸ் ஆட்சியில் 10 வருடங்களில் 171 ராணுவ வீரர்கள் மட்டுமே உயிர் நீத்திருக்கிறார்கள். அதுக்காக நான் காங்கிரஸ் கட்சிய சப்போர்ட் பண்ணல. புள்ளிவிவரங்கள மட்டுமே எடுத்து சொல்றேன்.

இது ஒண்ணும் World War 1, 2ல வெறும் துப்பாக்கிகளை ஏந்திகிட்டு போயி போர் புரிஞ்ச காலகட்டம் இல்ல. அண்டை நாட்டுக்கு போரினால் பதிலடி கொடுப்போம், நாம யார்னு காட்டுவோம்னு சும்மா சவால் உடுறதுக்கு இது கீ போர்ட் யுத்தம்னு நினைச்சுகிட்டானுவ போல சங்கி மங்கிஸ். எல்லா நாட்டுக்காரனும் Nuclear Weapons தயார் பண்ணி வச்சிட்டு காத்திருக்கான். நாமளும் தான் வச்சிருக்கோம். மாத்தி மாத்தி தாக்கிகிட்டோம்னா அப்புறம் எவன் ஜெயிச்சான் தோத்தான்னு கணக்கு போட்டு சொல்ல கூட ஒத்த உயிரு மிஞ்சாது ரெண்டு நாட்டுக்குள்ளயும்...

நான் வாசிச்ச வரையில பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலயும் சரி, இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரிலயும் சரி, மக்கள் யாருமே ரெண்டு நாட்டோட ஆக்கிரமிப்பயும் விரும்பல. சந்தர்ப்பம் கிடைக்கிறப்பவெல்லாம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திட்டு தான் இருக்காங்க. அல்ரெடி தனியாட்சி உரிமை இருக்கிற அந்த மாநிலத்துக்கு தனி நாடு அந்தஸ்த்து குடுக்கிறது ஒண்ணும் பெரிய நிர்வாக வித்தியாசத்தை ஏற்படுத்திர போறதில்ல. அப்புறம் ஏன் இந்த வறட்டு பிடிவாதம்?

எனக்கு ஒரு விஷயம் தான் புரியல... Patriotism நாட்டுப்பற்று அப்டீன்னா நாட்டுக்காக உயிர்துறக்குறது மட்டும் தானா? அதுவும் 1947ல இருந்தே தனி ஆட்சி உரிமை பெற்றுள்ள ஒரு மாநிலத்தை என்னோடது என்னோடதுன்னு புடிச்சு வச்சிட்டு இப்டி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்க் கொலை புரிந்து தான் நாம நம்ம நாட்டுப்பற்றை வெளிப்படுத்தணுமா? நாட்டோட மற்ற பகுதிகள்ள அடிப்படை வசதிகளே இல்லாம 85% பொது மக்களும் அவதிப்படுறப்போ உப்புச்சப்புக்கு பிரயோஜனமில்லாத ஒரு துண்டு நிலத்துக்காக ராணுவம் அமைச்சு செலவு பண்ணுறதும், உயிர்ப்பலி கொடுப்பதும் தேவை தானா?

நாட்டுப்பற்றுன்னா ஒவ்வொரு குடிமகனு(ளு)க்கும் நாட்டில் வாழ தேவையான அடிப்படை வசதிகள் அமைச்சு கொடுக்கிற சரியான அரசை தேர்ந்தெடுப்பதும், அந்த வசதிகளை அமைக்க தேவையான பொருளாதார வசதியை ஏற்படுத்த ஒவ்வொரு குடிமகளு(னு)ம் தவறாது நேர்மையாய் வரி செலுத்துவதின் மூலம் தன் பங்கு கடமையை சரிவர செய்வதும், அரசு தன் கடமைகளை சரிவர நிறைவேற்றுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிப்பதும், கடமைகளில் தவறும் போது எதிர்த்து கேள்வி கேட்பதும், சரியான மாற்று அரசை ஏற்படுத்த முனைவதும் தான்.

அப்ப நம்ம மண்ணை காப்பாத்த வேண்டாமான்னு கேப்பீக... கண்டிப்பா காப்பாத்தணும் தான்... ஆனா மண்ண விட முக்கியம் மனுச உயிருங்கிறத மனசுல வைக்கணும்னு சொல்றேன். Contemporary eraவில எந்த நாடும் இன்னொரு நாட்டுக்கு மேல காரணம் இல்லாம தேவை இல்லாம படையெடுக்க மாட்டான். ஏன்னா எல்லாவனுக்கும் தெரியும் போர்னு வந்துட்டா இழப்பு தன்னோட பக்கத்துலயும் படு பயங்கரமா இருக்கும்னு. அப்போ இங்க primary need என்ன? நான் மேல சொன்ன விஷயங்கள சரிவர செயல்படுத்த முனையும் ஒரு சூழலை உருவாக்கணும். அதுக்கு மக்கள் வரலாறு நிகழ்வுகளை திரும்பி பார்த்து காரண காரியங்களை சரியா அலசி ஆராய்ஞ்சி பேசணும், எழுதணும், அதுக்காக போராடணும்.

இது எதுவுமே பண்ணமாட்டோம் நாம. யாரு செத்தா நமக்கென்னா, பத்து ரூவா கிட்டட்டாம்னு தான் இருப்போம். ஆனா தேவையற்ற மனித உயிர் பலிகளை கண்டு பயந்து போர் வேண்டாம்னு பதறும் பொது மக்களை தேச துரோகிகள்னு முத்திரை குத்தி சமூக வலைத்தளங்கள்ளயும் தெருக்கள்ள போஸ்டர் அடிச்சு ஒட்டியும் கெக்கலிப்போம்... ஏன்னா நாங்க தான் தேசப்பற்றாளர்கள்... ஜெய்ஹிந்த்! மோடி வாழ்க!! பாரத் மாதா கீ ஜே!!!

அன்பில்,
லுலு தேவ ஜம்லா
17/02/2019
Sunday
11:59 am

https://www.facebook.com/100010190820245/posts/824408701242150/

காஷ்மீர் தாக்குதல்

Deva Deva
2019-02-16

*காஸ்மீரில் நடந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது?*

ஜெய்ஷ் இ மொஹமத்

* அந்த அமைப்பை வழிநடத்துபவர் யார்?*

மசூத் அசார்

*இந்த அமைப்பு எப்போது உருவாக்கபட்டது?*

1999ல் காந்தகார் விமான நிலையத்தில் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேற்பார்வையில் மசூத் அசார் பா ஜ க அரசால் விடுதலை செய்யபட்டார். அதன் பிறகு உருவாக்கபட்டது. 2001 பாராளுமன்ற தாக்குதல் நடத்த காரணமாக கருதப்படுபவர் மசூத் அசார்.

*மசூத் அசாருடன் யார் யாருக்கு தொடர்பு?*

2008 மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சையதுடன் தொடர்பு.

*ஹபீஸ் சையதுடன் தொடர்புள்ளவர்கள் யார்?*

ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த வேத் பிரதாப் வைதிக் என்பவர் ஹபீஸ் சையதுடன் நேரில் உரையாடிய ஒரே நபர்.

*பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ க்காக இந்திய ராணுவத்தை உளவு பார்ததவர்கள் யார்?*

பா ஜ க தகவல் தொடர்பு ஒருங்கினைப்பாளர் துருவ் சக்ஸேணா மற்றும் 10 பா ஜ க வினர் பிப்ரவரி 11 2017 அன்று மத்திய பிரதேசத்தில் கைது செய்யபட்டனர்.

*கடந்த 20 ஆண்டுகளாக மசூதை கைது செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?*

அதை காங்கிரசு, பா ஜ க அரசிடம் கேட்க வேண்டும். குறிப்பாக தீவிரவாததை ஒழிப்போம், தாவூதை பிடித்து வருவோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்களிடம் அழுத்தமாக கேட்க வேண்டும்.

*கடந்த 6ம் தேதியன்று எச்சரிக்கை செய்த உளவு தகவல் யாருக்கு கொடுக்கபட்டது?*

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் கொடுக்கபட்டது.

*தகவலை அடுத்து என்ன செய்தார் அஜித் தோவல்?*

தமிழக பா ஜ க கூட்டணி விசயத்தில் ஈடுபட்டிருந்தார்.

*எல்லை பாதுகாப்பு மற்றும் காஷ்மீர் அரசின் அதிகாரம் யாரிடம் உள்ளது?*

கடந்த 2018 டிசம்பர் முதல் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமுலில் உள்ளது.

*கடந்த 4 ஆண்டுகளாக காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்கவில்லை பத்திரிக்கைகளில் கூறப்படுகிறதே?*

கடந்த 4 ஆண்டுகளில் 176% தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது என அரசாங்க தரவுகள் குறிப்பிடுகின்றன.

*கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத மிகபெரிய தாக்குதலா?*

ஆம், காஷ்மீரில் CRPF மீது நடத்தபட்ட மிக பெரிய தாக்குதல் இது. இதற்க்கு முன்பு 2010 சட்டீச்கரில் 76 CRPF கொல்லபட்டனர்.

*இந்த கொடூர தாக்குதலுக்கு அரசை விமர்சிப்பது முறைதானா?*

கார்கில், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கு உரிமை கொண்டாடும் அரசை, ராணுவத்தின் இழப்புக்கும் விமர்சிப்பதே நியாயமாகும். பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்ய இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்ததற்க்கு இந்த அரசை மட்டும் அல்ல எந்த அரசையும் கேள்வி கேட்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. தீவிரவாதிகளை மக்கள் கண்டித்தாலும் அவர்கள் தாக்குதலை நிறுத்திவிட மாட்டார்கள் என்பதே யதார்த்தம்.

*இந்த தாக்குதலை மத ரீதியாக திசைதிருப்ப முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றதா?*

முஸ்லிம் பெயரில் பல போலி ஐடிக்கள் நேற்று இரவே தொடங்கபட்டு காஷ்மீர் தாக்குதலை மகிழ்ந்து கொண்டாடுவது போல் பதிவுகளும் வரத்துவங்கியுள்ளன.

*இதன் மூலம் ஆதாயம் அடைய துடிப்பவர்கள் யார்?*

பார்பன தேசதுரோகிகள்!

இராணுவத்துடன் படுப்பதுதான் தேசபக்தியா?

இராணுவத்துடன் படுப்பதுதான் தேசபக்தியா?
காஷ்மீர்_மாணவி.

*நீங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்கள் என்றல்லவா இங்கே பிரச்சாரம் செய்யப்படுகிறது?*

நாங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்களா? நாங்கள் இந்தியாவை எந்தளவுக்கு வெறுக்கிறோமோ அதே அளவுக்கு பாகிஸ்தானையும் வெறுக்கிறோம். எங்களை சுதந்திரமாக விட்டால் போதும் பிழைத்துக் கொள்வோம்

*இந்திய அரசு உங்களுக்காக நிறைய செலவு செய்கிறது நிறைய சலுகைகள் கொடுத்துள்ளது என்றெல்லாம் வெளியே பிரச்சாரம் செய்யப் படுகிறதே? அவ்வளவையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக பேசுவது நன்றி கெட்டத்தனம் என்றல்லவா ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சொல்கிறார்கள்?*

முதலில் எங்களுக்காக செலவு செய்கிறது என்று சொல்வதே பித்தலாட்டமான வாதம்… எங்களை வைத்து செல்வு செய்கிறது என்று சொல்ல வேண்டும். அப்படி செலவு செய்யப்படும் பணம் எங்கே போகிறது தெரியுமா?

ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரரை நிறுத்தியிருக்கிறது இந்திய அரசு. இராணுவம்தான் அத்தனை காசையும் தின்கிறது.

இவர்களின் வேலை என்ன தெரியுமா? நல்ல வளமான இடத்தை ஆக்கிரமித்து முகாம் போட்டுக் கொள்கிறார்கள்.. அரசு ஒதுக்கும் காசில் நன்றாக குடித்து விட்டு பெண்கள் தனியே எதிர்ப்படும் போது அவர்கள் பார்க்கும் விதமாக தங்கள் ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்…..

உங்கள் குடும்பத்துப் பெண் பிள்ளைகளை அந்த இடத்தில் வைத்து யோசித்துப் பார்த்தால் தான் உங்களுக்கு எங்கள் வலி புரியும்

*இந்த மாதிரியான அத்துமீறல்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கிறதல்லவா?*

அத்துமீறல்கள் என்று ஒரே வார்த்தையில் எங்கள் வாழ்க்கையை நீங்கள் சுருக்க முடியாது. ஒன்றரை லட்சம் மக்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.. சுமார் பத்தாயிரம் பெண்கள் அரை விதவைகளாக இருக்கிறார்கள்…

அரை விதவை என்ற பதத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

*சொல்லுங்கள்,*

இந்தப் பெண்களின் கணவன்மார்களெல்லாம் இராணுவத்தால் ‘விசாரணை’ என்ற பேரிலோ அல்லது வேறு முகாந்திரங்களைச் சொல்லியோ அழைத்துச் செல்லப்பட்டவர்கள்… எத்தனையோ ஆண்டுகளாகியும் அவர்களெல்லாம் திரும்பவில்லை..

கட்டியவன் இருக்கிறானா செத்துப் போய் விட்டானா என்று கூட இவர்களுக்குத் தெரியாது. இறந்து விட்டான் என்று உத்திரவாதமாக தெரிந்தால் கூட மறுமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கலாம்.. அல்லது மனதை சமாதானப்படுத்திக் கொண்டு எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்கலாம்..

தங்கள் கணவன்மார்களுக்கு என்ன நேர்ந்ததென்றே இவர்களுக்குத் தெரியாது… ஆண்டுக்கணக்கில் இப்படி அரை விதவைகளாகவே கழித்து வருகிறார்கள்…

*இதெல்லாம் இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் வந்ததில்லையே…*

எப்படி வரும்? ஜே.என்.யு விவகாரத்தில் பார்க்கிறீர்கள் அல்லவா? வேட்டையாடும் வெறியோடு எங்கள் மீது பாய்ந்து குதறும் வாய்ப்புக்காகத்தானே காத்திருக்கின்றன இந்த ஊடகங்கள்.. அரை விதவைகள் பற்றிச் சொன்னேன் அல்லவா..?

அதே போல் எண்பதினாயிரம் அனாதைகளை உங்கள் இராணுவம் எங்களுக்குப் பரிசளித்துள்ளது தெரியுமா. இப்போது சொல்லுங்கள் இதெல்லாம் எங்களுக்கு உங்கள் அரசாங்கம் கொடுத்த சலுகைகளா?

*ஆனால் இவற்றையெல்லாம் நீங்கள் ஏன் இந்தியாவின் மற்ற பகுதி மக்களிடம் எடுத்துச் செல்லக் கூடாது?*

தோழர்.. புரிந்து கொள்ளுங்கள்.. அங்கே ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரனையோ போலீசையோ உளவாளியையோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.. நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியாது.. நாங்கள் எங்களைச் சுற்றி இருக்கும் யாரையும் நம்ப முடியாது. யாரையும், எதையும் சந்தேகத்தோடு பார்த்தால் தான் பிழைத்துக் கிடக்கவே முடியும்..

ஆள் தெரியாமல் யாரிடமாவது எதையாவது பேசப் போனால் ‘எல்லையைக் கடக்க முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் புகைப்படம் இதோ’ என்று மறுநாள் ரத்தம் தோய்ந்த எங்கள் சடலங்கள் தலைப்புச் செய்தியில் வந்து விடும்.. எப்போதும் யாரோ உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கும் அந்த உளவியல் சித்திரவதையை மற்றவர்கள் உணர்வது கடினம்.

*ஆனால், இது ஒடுக்கப்படும் எல்லா மக்களும் எதிர் கொள்வது தானே? தண்டகாரண்யாவிலும் வட கிழக்கிலும் கூட மக்கள் இதே துயரங்களைத் தானே எதிர் கொள்கிறார்கள்?*

நான் தெளிவாக ஒன்றைச் சொல்லி விடுகிறேன். நாங்கள் புரட்சிக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்திய துணைக்கண்டமெங்கும் ஒடுக்கப்படும் மக்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். அவர்களோடெல்லாம் ஒரு ஐக்கியத்தைக் கட்டமைப்பதன் மூலம் தான் இந்திய ஆளும் வர்க்கத்தை வெல்ல முடியும் என்பதும் எதார்த்தமானது தான்…

ஆனால், அப்படியான ஒரு ஐக்கியம் வரும் வரைக்கும் எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? செத்து மடிய வேண்டுமா? என்றோ ஒரு நாள் வரும் புரட்சிக்காக இன்றைக்கு நாங்கள் பிணங்களை எண்ணி விளையாடிக் கொண்டிருக்க வேண்டுமா?

எங்கள் காஷ்மீரில் மூன்றில் ஒருவர் உளவியல் ரீதியாக மன அழுத்த நோயால் (Dipression) பீடிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? தோழர்… நாங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முதலில் உடனடியாக நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிய வைக்க வேண்டும்..

எங்கள் குரல்கள் நின்று விட்டால் குரல்வளைகள் அறுத்து எரியப்பட்டு விடும். ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்துபட்ட ஒற்றுமைக்காக நாங்கள் என்றுமே நிற்கிறோம்.. ஆனால் அதுவரை சும்மா இருக்க முடியாது.

- நன்றி வினவு

Friday, February 15, 2019

ராணுவத்தின் மீது தாக்குதல்

Umamaheshvaran Panneerselvam
2019-02-16

*Case 1:*

டீமானட்டைசேஷன் மூலம் கருப்பு பணம் ஒழிந்தது என்று ரீல் சுத்திய பாஜக கூடவே எக்ஸ்ட்ரா போனசாக இன்னொரு விஷயத்தையும் சொன்னது.

"தீவிரவாதிகளுக்கு போகும் பணம் எல்லாம் இதனால் ஒழிந்துவிட்டது" - என்று.

அப்படி என்றால் இப்போதைய தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எங்கிருந்து பணம் வந்தது?

*Case 2:*

ஒருவேளை பணம் வெளியிலிருந்து தான் வந்தது என்றால் அதை sense செய்யத் தவறியது Intelligence ன் தோல்வியா?..

Intelligence தோல்வியடையவில்லை என்றால் selective amnesia அல்லது nepotism ஆக பணம் பரிமாற்றம் அடையட்டும், தாக்குதல் நடக்கட்டும் victim game play செய்து நேரு மீது பழி போடலாம் என்று காத்திருந்தார்களா?

அப்படியெனில் "எல்லையில் ராணுவ வீரர்கள்... " - என்று தினுசாக பேசி அவர்களை decoys ஆக பயன்படுத்திக்கொண்டதா இந்த அரசு?

*Case 3:*

கவர்னர் ஆட்சி நடந்துகொண்டிருக்கையில் முந்தைய அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்கள் சங்கிகள்?

அப்படியெனில் கவர்னர் ஒரு செல்லாக்காசு, அதுவும் காஷ்மீர் போன்ற high alert மாநிலத்தில் கவர்னர் ஆட்சியே இருந்தாலும்கூட "முந்தைய அரசு தான் இந்த தாக்குதலுக்கு ஜவாப்தாரி" - எனில் அங்கே Kashmir is an independent state despite a Governor being there என்ற clause பூர்த்தியாகிறதா?

எப்படி பார்த்தாலும் முந்தைய ஆட்சி இந்த சங்கிகளின் கூட்டணி ஆட்சிதான்.

*Case 4:*

இறந்த ராணுவ வீரர்கள் நம்மவர்கள். நம் சகோதரர்கள். தமிழகத்திலிருந்து 2 தமிழர்கள் பலியாகியிருக்கிறார்கள். யாருடை அலட்சியத்தால் இந்த உயிர்பலி ?

முதலில் இறந்த வீரர்களில் எத்தனைப் பேர் உயர்சாதியினர்?

வெளிப்படையாக கேட்பதானால் எத்தனைப் பேர் பார்ப்பனர்கள்?

(உடனே ராணுவ வீரன் என்றால் இந்தியன், அதில் சாதி ஆராய்ச்சி செய்யலாமா என்று தூக்கிக் கொண்டு வரவேண்டாம். சீக் ரெஜிமெண்ட், கோர்க்கா ரெஜிமெண்ட், மதராஸ் ரெஜிமெண்ட் என்று demarcations இருந்தது எந்த அடிப்படையில்? Geological  பிரிவினை மட்டும் தானா?)

சரி அபத்தமான கேள்வியாகவே இருக்கட்டும். உயிர் தியாகம் செய்ததில் பார்ப்பனர்களே இல்லை. ஆனால் வட இந்திய குரூர மீடியா பார்ப்பனர்கள் arm chair critic ஆக அமர்ந்துகொண்டு India wants revenge, India wants war, India needs to kill எனறு பேசுவது எவ்வளவு பெரிய அவல நகைச்சுவை?

இன்னொரு சண்டை வந்தால் எத்தனை பார்ப்பனர்கள் அங்கே போய் சாக தயாராக இருக்கிறார்கள்? ஒருவேளை ராணுவத்தில் பார்ப்பனர்கள் அதிகமாக இருந்தால் "போர் வேண்டும் மீண்டும்... ரிவஞ்ச் வேண்டும்" என்றெல்லாம் வட இந்திய பார்ப்பன லாபி பேசுமா?

*Case 5:*

ரிவஞ்ச் வேண்டும் ... சரி... யார் மீது? அதுவும் எந்த நேரத்தில்?

இந்திய பொருளாதாரம் 50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் இருக்கிறது. பெரும் பணக்கார நிறுவனங்களே திவால் நோட்டீஸ் கொடுக்கும் சூழல் தான் இருக்கிறது. வெளிப்படையாக சொல்வதானால் போலியோ சொட்டு மருந்துகூட வாங்க வக்கு இல்லாமல், காசு இல்லாமல் தான் இருக்கிறது இந்த அரசு. கடன் சுமை ஏறியிருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது.

இந்த சமயத்தில் போர் என்றால் இந்த Burden னை தாங்கப்போவது யார்?

எத்தனை கோடி ஏழைகள் வயிற்றில் மீண்டும் அடி விழும்?

*Case 6:*

இல்லை. இதையெல்லாம் தாண்டி நான் போர்த்தொடுத்தே தீருவேன் என்றால்.

China- Pakistan tie up, Asia Pacific வட்டாரத்தில் அச்சமூட்டும் வகையில் military, economical, strategical, tourism development என இத்யாதி இத்யாதி tie up ல் இருக்கிறது.

டோக்லம் நியாபகத்தில் இருக்கிறதா? அங்கே வந்து சீன பட்டாலியன் நிற்கிறது. ஆனால் அவர்கள் மிரட்டக் கூட நம்மால் முடியவில்லை. சீன பயணம் மேற்கொண்ட பிரதமரோ மறந்தும் அதை குறித்து பேச துணியவில்லை.

அப்படி இருக்கையில் மொத்தமாக all out war with Pak என்பது all out war with China போலத்தான்.

சீனாவுக்கெதிரான போரைத் தாங்க economy and militia strength நம்மிடம் உள்ளதா?

போர் என்று வந்தால் எவ்வளவு economic burden, மொத்தமாக இங்கே cash liquidation எப்படி முடக்கப்படும், எப்படி சேமிப்பை அரசு இறுக்கி வைத்துக்கொள்ளும் என்று புரியாத Generation எல்லாம் ஏதோ age of empires, call of duty, PUBG போல் போர் தொடுக்கலாம், அடித்து தூக்கலாம் என்று பேசுவது அறியாமை மட்டுமல்ல, நம் ஊரின் intellectual மலட்டுத்தன்மையின் வெளிப்பாடு.

*Case 7:*

எல்லாவற்றுக்குமே முந்தைய அரசு தான் காரணம் என்றால், 1999ல் தீவிரவாத தாக்குதல், காந்தஹார் விமான கடத்தல் தீவிரவாதிகளை எல்லாம் ரிலீஸ் செய்தது பாஜக. செய்தவர் பாஜகவின் நல்ல முகம் என்று காட்டப்படும் வாஜ்பாய்.

அப்பொழுது தீவிரவாதிகளை வளரவிட்டது, வளர்த்துவிட்டது பாஜக தான் என்று எடுத்துக்கொள்ளலாமா?

அதே தீவிரவாதிகள் தான் இப்பொழுதும் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால், அவர்களுக்கு உதவுவது யார்?

All is Nehru's fault என்ற கோட்பாட்டிப்படி, All is Vajpaye's fault, All is our fault என்று ஒப்புக்கொள்ள பாஜக தயங்குவது ஏன்?

*Case 8:*

தேர்தலைத் தள்ளிப்போட இன்னும் எத்தனைத் தாக்குதல்களை "எதேச்சையாக" நடக்க அனுமதிக்கப்போகிறீர்கள் மோடி?.

உங்கள் Party gains க்காக இன்னும் எத்தனை எத்தனை ஏழை இந்திய சகோதிரர்கள் , உண்மையான ஏழைத் தாய் மகன்கள் சாக வேண்டும்?

https://m.facebook.com/story.php?story_fbid=10216117542324746&id=1636056806