Thursday, April 11, 2019

நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும், ஐன்ஸ்டைனும்

Raj Siva
2019-04-11

நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும், ஐன்ஸ்டைனும்

உங்களால் இதை நம்ப முடிகிறதா? உங்கள் அப்பாவின் அப்பாவின் அப்பா அதாவது உங்கள் பூட்டன், தன் இளமைக் காலத்தில், அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று சொன்னால், அது எவ்வளவு பழமையானதாக உங்களுக்குத் தோன்றும்.

இன்றைய உலகின் அனைத்து நவீனக் கருவிகளையும் கைக்கொண்டிருக்கும் நீங்கள், இயற்கையை மட்டுமே துணையாகக் கொண்டிருந்த, அந்தப் பூட்டனின் சாதனையை ஒரு ஏளனச் சிரிப்புடனே பார்ப்பீர்கள்.

அவரிடம் என்ன இருந்திருக்கும்? கணணி இல்லை. மொபைல் போன் இல்லை. எதுவுமே இல்லை. இருந்ததெல்லாம் இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் மட்டுமே! அந்தக் காலத்தைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்?

அப்படியான ஒரு காலத்தில், கிட்டத்தட்ட நூற்றி நான்கு வருடத்திற்கு முன்னர், 1915ம் ஆண்டு அல்பேர்ட் ஐன்ஸ்டைன் என்னும் ஒருவர், வெறும் கணிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு, விண்வெளி பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்கினார்.

அப்போது, அவரிடம் கணணி இருக்கவில்லை. கால்குலேட்டர் இருக்கவில்லை தொலைக்காட்சியும் இருக்கவில்லை.  இன்றுபோல உடனுக்குடன் சொல்லி விடக்கூடிய மீடியாக்களும் இல்லை.

தன் மூளையில் விண்வெளிபற்றிய எண்ணங்களைப் படமாகச் சித்தரித்துக் கணிதச் சமன்பாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு அந்தக் கோட்ப்பாட்டை உருவாக்கினார்.

*விண்வெளியிலிருக்கும் அதி எடைகொண்ட ஒரு பொருளானது, அந்த விண்வெளியில் ஒரு குழியை உருவாக்கும். எல்லையில்லா எடை கொண்டதாக அந்தப் பொருள் இருந்து விட்டால், அதனால் ஏற்படும் குழியானது ஒருமைப்புள்ளியொன்றை அடையும் வரை ஆழமாகிச் செல்லும். அந்தக் குழியிலிருந்து ஒளிகூடத் தப்பிச் செல்ல முடியாது* - என்றார்.

இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழியை நாம் உருவாக்க வேண்டுமென்றால், எங்கே உருவாக்க முடியும்? பூமியின் மண் தரையில் ஒரு குழியை உருவாக்க முடியும். எந்தவொரு திடமான பொருளிலும், ஏதோவொரு விதத்தில் நம்மால் குழியை உருவாக்கிவிட முடியும்.

கடல் நீரில் ஒரு குழியை உருவாக்க முடியுமா? முடியாதல்லவா? அதை உங்களால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. ஆனால், ஒரு கப்பலைக் கடலில் விடும்போது, அது நிற்குமிடத்தில், அதன் எடைக்கேற்பத் தண்ணீர் குழிகிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். தண்ணீரில் நம்மால் குழியை உருவாக்க முடியுமா? முடியுமென்றுதானே தோன்றுகிறது. கப்பல்களின் எடை அதிகரிப்புக்கு ஏற்ப அது ஏற்படுத்தும் குழியும் ஆழமாக இருக்கும்.

இதே அடிப்படையில், *விண்வெளியிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் அனைத்தும் விண்வெளியில் குழிகளை ஏற்படுத்துகின்றன* - என்று ஐன்ஸ்டைன் சொன்னார். இப்படி அவர் சொன்னதை எவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

நாம் பார்ப்பது வானம். வானத்தில் நட்சத்திரங்கள். அப்படி இப்படியென்று நினைத்துக் கொண்டிருக்கையில், "அங்கே வானம் என்ற ஒன்று இல்லை. இருப்பது, இரப்பர்பாய் போன்ற ஒன்றுதான். அந்தப் பாயிலேயே, நட்சத்திரம் போன்றவை இருக்கின்றன. அவை, அந்தப் பாயில் பெருங்குழிகளை ஏற்படுத்துகின்றன" - என்று ஐன்ஸ்டைன் சொன்னார்.

"என்ன, விண்வெளியில் குழியா? அது எப்படிச் சாத்தியம்? பூமியில் குழி இருப்பது சரி. ஏன் கடலில் கப்பல் குழி ஏற்படுத்துகிறது என்பதும் சரிதான். ஆனால், விண்வெளியில் குழியை எப்படி ஏற்படுத்த முடியும்? இவரென்ன இரப்பர் பாய், மென் சவ்வு, அது இது என்று சொல்கிறாரே! எந்தப் பாயையும் நாம் காணவில்லையே!” - என்று சொல்லி திகைத்து நின்றது உலகம்.

அத்துடன் ஐன்ஸ்டைன் சொன்ன இன்னொன்றையும் கேட்டு அறிவியல் உலகமே பதைத்துப் போனது. "350 வருடங்களுக்கு மேலாக நம்பிக் கொண்டிருந்த ஒன்றை இல்லையென்று சொல்கிறாரே இவர்" - என்று தடுமாறியது.

1680ம் ஆண்டளவுகளில், ஐசாக் நியூட்டனால் புவியீர்ப்புவிசைக்கான புரட்சிகரக் கருதுகோள் வெளியிடப்பட்டது. அந்தக் கருதுகோளையே மாற்றிச் சொன்னார் ஐன்ஸ்டைன். ஐசாக் நியூட்டன் சொல்லியிருந்த புவியீர்ப்புவிசை பற்றிய கோட்பாட்டையே நம்பிவந்தவர்களுக்கு, ஐன்ஸ்டைன் தடைக்கல் போட்டார்.

மேலே சொன்னதுபோல, அதி எடைகொண்ட ஒவ்வொரு பொருளும் விண்வெளியில் ஏற்படுத்தும் குழிவே, அப்பொருளை நோக்கிய ஈர்ப்பை உருவாக்குகிறது என்றார்.

உதாரணமாகப் பூமியானது, விண்வெளியில் ஏற்படுத்தியிருக்கும் குழிவின் வளைவுக்குள் அகப்பட்டுக்கொண்ட சந்திரன், அந்தக் குழியினுள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இதுவே பூமிக்கும், சந்திரனுக்குமான ஈர்ப்புக்கான காரணம். இதுபோலவே, சூரியன் ஏற்படுத்தியிருக்கும் பெருங்குழியில், பூமி உட்பட ஏனைய ஏழு கோள்களும் அகப்பட்டபடி சூரியனைச் சுற்றுகின்றன.

நியூட்டனின் ஈர்ப்புவிசைக் கொள்கைக்கு மாற்றாக ஐன்ஸ்டைன் முன்வைத்ததை, ஏற்க முடியாமலும், விலக்க முடியாமலும் தவித்தது உலகம். காலம் செல்லச் செல்ல ஐன்ஸ்டைன் கூறிய ஈர்ப்புக் கோட்பாடு சரியெனப் புரிந்துகொண்டது உலகம்.

அதன் நீட்சியாக ஐன்ஸ்டைன் சொல்லியிருந்ததுதான் கருந்துளைகான வித்தாகியது. கருந்துளைக்கு எல்லையில்லா அதியீர்ப்பு உண்டு என்பதால், அது விண்வெளியில் நினைக்கவே முடியாத ஆழம்வரை பெருங்குழியை ஏற்படுத்தும். அந்தக் குழியின் முடிவு, ஒற்றைப் பரிமாணமுள்ள ஒருமைப்புள்ளியாக இருக்கும் என்றார்.

கருந்துளைபற்றி இவ்வளவு விவரமாக விளக்கிச் சொன்னாரேயொழிய, அவர் இருக்கும்வரை அப்படியானதொன்று உண்மையில் இருக்கிறது என்பதை நிறுவவே முடியவில்லை. ஒருகட்டத்தில் கருந்துளை என்ற ஒன்று இல்லையென்ற சந்தேகம்கூட அவருக்குத் தோன்றியது.

ஆனால், இன்று நூற்றுநான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த மாமேதை சொன்ன கருங்குழியை, அவர் சொன்னபடியே கண்டுபிடித்திருக்கிறோம். இதுவரை அப்படியானதொன்று இருக்கிறது என்று அடித்துச் சொன்னாலும், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது அதைக் கண்டுபிடித்து, அதன் உருவத்தையும் படமெடுத்திருக்கிறோம்.

மனித குலத்தின் மாபெரும் சாதனை அது. எப்படி அதைக் கண்டுபிடித்தோம்? அது இன்றைய விஞ்ஞானிகளின் அற்புதமான புரட்சிச் சிந்தனையால் சாத்தியமாயிற்று. எப்படி?

---

உலகிலேயே மிகப்பெரிய காணொளிப்பெட்டியை (Television) துபாய் மோலில் வைத்திருக்கிறார்கள். அது ஒரேயொரு காணொளிப் பெட்டியாக இருந்தாலும். சற்றே உற்று நோக்கினால், ஆயிரம் சிறிய காணொளிப் பெட்டிகளை ஒன்றிணைத்து உருவாக்கியது என்று தெரியவரும். அதாவது ஆயிரம் சிறிய காணொளிப்பெட்டிகள் சேர்ந்து ஒரு மிகப்பெரிய காணொளிப்பெட்டியாக மாறியிருக்கிறது.

இதுபோன்ற பெரிய திரைகளை நீங்களும் விழாக்களில் கண்டிருப்பீர்கள். சமீபத்தில் நீங்கள் பார்த்த ‘சூப்பர் டிலக்ஸ்’ படத்திலும் ஒன்று சொல்வார்கள். பல நுண்ணுயிரிகள் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்கப்பட்டவன்தான் மனிதன் என்னும் ஒரு உயிர் என்பார்கள்.

இவற்றைச் சரியாக நீங்கள் புரிந்துகொண்டால் போதும். கருந்துளையைக் கண்டுபிடிப்பதற்கான அடிப்படையையும் புரிந்துகொள்ளலாம். அதாவது 55 மில்லியன் ஒளி வருட தூரத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு கருந்துளையைப் பார்ப்பதென்றால், நாம் இதுவரை கண்டுபிடித்திருக்கும் எந்தத் தொலைநோக்கியாலும் சாத்தியமேயில்லாதது. அதற்குப் பூமியளவு பெரிய தொலைநோக்கி தேவைப்படும்.

அப்படியொரு தொலைநோக்கியையை நான் மேலே சொன்ன உத்தி முறையால் உருவாக்கியிருக்கிறார்கள். அந்தத் தொலைநோக்கிதான் ‘நிகழ்வு எல்லைத் தொலைநோக்கி’ (Event Horizon Telescope - EHT). இது உலகின் பல இடங்களில் பரந்துபட்டுள்ள எட்டு மிகப்பெரிய தொலைநோக்கிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட மாபெரும் தொலைநோக்கி.

கட்டுரை மிக நீளமாவதால், இரண்டு பகுதிகளாகப் போடுகிறேன். நாளை இதன் அடுத்ததைப் போடுகிறேன். உங்களுக்கும் படிப்பதற்குச் சிரமமில்லாமல் இருக்கும்.

https://m.facebook.com/story.php?story_fbid=2187618357971846&id=100001711084852

Tuesday, April 9, 2019

விதைக்காப்பீடும் வெள்ளாமையும்

RS Prabhu
2019-04-09

*********************

அன்பின் பிரபு,

நலம். நலமறிய ஆவல். உன்னுடைய மடல் கண்டவுடன் பதிலெழுத விழைந்தேன். ஆனால் கொஞ்சம் காப்பீடு தொடர்பான வேலைகளால் தாமதமாகிவிட்டது. இந்த வருட சூரியகாந்தி பயிரை காப்பீடு செய்ய ஏகப்பட்ட முயற்சி செய்தும் இயலாமல் போய்விட்டது. எப்படியாவது இந்த பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள் சகலவிதமான இழப்புகளையும் ஈடுசெய்யுமளவுக்கு வந்தால்தான் நல்லது என்று தோன்றுகிறது. அதைப்பற்றி என்ன நினைக்கிறாய்? தள்ளுபடியில் ஒரு வண்டி வாங்கி, அதை ஓட்டிப் பழகியதில் நம்மாழ்வார் ஐயாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட முடியாமல் போய்விட்டது. அது ஒரு பெரிய கதை, வேறொரு நாள் விரிவாக சொல்லுகிறேன். அப்புறம் உன் வேலை எப்படி போகிறது? கடிதம் கண்டதும் உடன்பதில் எழுதவும்.

உன் மடலை எதிர்பார்க்கும்,
குமுதா.

*********************

எனதருமைக் குமுதா,

கடிதம் கண்டதும் மகிழ்ந்தேன். இவ்விடம் யாவரும் நலம். அங்கே அனைத்தும்  நலம்  என்றறியவே மனம்  விரும்புகிறது. பேனா நண்பர்களாகத் தொடங்கிய நம்  நட்பு, பேஸ்புக் நண்பர்களாகத் தொடர்வது நினைத்து பேருவகை கொள்கிறேன். Kids chat in WhatsApp, Men update status in Facebook, Legends write Letters. நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் அப்படித்தானே?

பயிர்க்காப்பீடு குறித்த உன் சிரமங்கள் எனக்கு புரிகிறது. ஆனால் என்ன செய்ய, வங்கிகளின் கடனுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பாடு என்பதைத் தாண்டி அதில் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லையே. எல்லாவிதமான இழப்புகளுக்கும் காப்பீடு இருந்தால் பரவாயில்லை என்று குறிப்பிட்டிருந்தாய். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.

எல்லாவிதமான இழப்பு என்பதை எப்படி வரையறுப்பது? பயிர்ப்பெருக்கவியலில் GxE அதாவது Genetic Vs Environment என்ற குறுக்கீட்டின்படிதான் பயிரின் expression அமைகிறது. இதற்கிடையில் உள்ள பல நுண்ணிய காரணிகளை அளந்து quantify செய்து, அவற்றை முறையாக பதிவுசெய்து பராமரித்து வருவது விவசாயிகளின் வயல்வெளிச் சூழலில் சாத்தியமே இல்லை.

ஒருவேளை அவையனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும்கூட கடைசியில் அது விதையின் தரம் சரியில்லை என்று ஏதாவதொரு தனியார் விதை நிறுவனத்தை நோக்கி கையை நீட்டுவதைத் தாண்டி சொல்லத்தக்க வகையில் எந்த தீர்வும் கிடைக்காது. அதை நிரூபிக்கவும் முடியாது. கடைசியில் விதை நிறுவனங்கள் மொத்தமாக Liability Insurance எடுத்து வைத்துக்கொண்டு அந்த பிரிமியத்தை ஒவ்வொரு பாக்கெட்டின்மீதும் ஏற்றிவிடுவார்கள். யாரோ ஒருவருக்காக அத்தனை பேரும் அதை சுமக்கவேண்டியிருக்கும்.

உனக்கு ஒன்று தெரியுமா குமுதா. பேஸ்புக்கில் சொல்வது மாதிரி அத்தனை விவசாயிகளும் அப்பழுக்கற்ற தியாகத்  திருவுள்ளம் கிடையாது. உலகத்தின் அத்தனை வக்கிரங்களும் கிராமத்திலும் இருக்கிறது. நகரத்திலாவது பக்கத்து வீட்டில் என்ன நடந்தால் என்ன என்று இருந்துவிடுவார்கள். பக்கத்து தோட்டத்துக்காரர் ரொம்ப நல்லவர் என்று இதுவரை எந்த விவசாயியும் சொல்லிக் கேட்டதில்லை தெரியுமா?  அதேமாதிரி தனியார் விதை நிறுவனங்கள் என்றாலே சில விசைப்பலகை வீரர்கள் விரலை மடக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் நடைமுறையில் சில தொழில்முனைவோர்களின் ஆயுட்கால உழைப்பில்தான் ஒரு நிறுவனம் உண்டாகிறது. ஒரு சீசனில் பெயர் கெட்டுவிட்டால் அடுத்த சீசனுக்கு அந்த ஊருக்குள் போகவே முடியாது என்பதால் கம்பிமீது நடப்பது மாதிரிதான் விதை வணிகம் நடைபெறுகிறது.

சாமர்த்தியமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு சில விவசாயிகள் அவ்வப்போது பெரும் தொந்தரவு தருவார்கள். அவர்களைப் பொறுத்தவரை நல்ல விளைச்சல் வந்தால் அது அவர்களின் அயராத உழைப்பின் பலன் மட்டுமே. மகசூல் இல்லையெனில் அதற்கு முற்றிலும் விதை விற்பனை செய்த நிறுவனம்தான் பொறுப்பு என்று இரகளை செய்வார்கள்.

அவ்வப்போது  சில கோக்குமாக்கான புகார்கள் வரும். ஊருக்குள் விசாரி்த்த வகையில் சம்பந்தப்பட்ட நபர் ஒருமாதிரி என்று தெரியவந்தால் விற்பனைப்பிரிவு அதிகாரிகள் கவனமாக கையாளுவார்கள். சிலநேரங்களில் ஆராய்ச்சிப்பிரிவுக்கு அந்த புகார்கள் வந்துசேரும். அந்த பிரிவின் நிலைய வித்வான் என்ற வகையில் நானே நேரடியாக அதை அணுகவேண்டியிருக்கும்.

இப்படித்தான் ஒருநாள் தர்பூசணியி்ல் செடி நன்றாக இருக்கிறது ஆனால் காய் பிடிக்கவில்லை என்று ஒரு புகார் வந்திருந்தது. அடுத்தநாளே நேரில் சென்று பார்த்தால் சுற்றுவட்டாரத்தில் ஒரு கிலோமீட்டர் அளவுக்கு புல்பூண்டுகூட இல்லாமல் காய்ந்து கிடந்தது. தர்பூசணியில் அயல் மகரந்தச் சேர்க்கை நடக்க தேனீ, குளவிகள் அவசியம் என்பது பள்ளிக்குழந்தைகளுக்குக்கூட தெரியும்தானே குமுதா? ஆனால் அவரோ போனவருடம் இதே இரகம் நன்றாக இருந்தது, இந்த வருடம் விதை சரியில்லை, கார்ப்பரேட் கம்பெனிகள் ஏமாற்றுகின்றன என்று பாட ஆரம்பித்துவிட்டார். தேனீக்கள் இல்லாததற்கு விதை நிறுவனம் என்ன செய்ய முடியும்? இதற்கு விதை விற்பனை செய்யும் நிறுவனம் இழப்பீடு தரவேண்டுமெனில்  காப்பீடு எடுப்பதா  அல்லது விதையுடன் சேர்த்து தேனீ பெட்டியும் விற்பதா?

வேளாண்மை விரிவாக்கக் கல்வியில் ஒரு விவசாயி வீட்டுக்குள் நுழையும்போதே அவருடைய தொழில்நுட்ப adoption level குறித்து கிரகித்துக்கொள்ள பழகவேண்டும் என்று பயிற்றுவிப்பார்கள். அந்தக்காலத்தில் விரிவாக்கவியல் துறை பேராசிரியர் ஒருவரின் காத்திரமான அன்புக்கு பாத்திரமான  செல்லப்பிள்ளை என்பதால் கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே அதை பயின்றுவிட்டேன் குமுதா. ஒரு வீட்டில் வண்டியை விட்டு இறங்கும்போதே வாசலில் எத்தனை ஜோடி செருப்புகள் இருக்கின்றன, உள்ளே எத்தனை பேர் இருக்கிறார்கள், கொடியில் எத்தனை வேட்டி, உள்பாவாடை, பிளவுஸ் காய்கிறது அவர்களது வயது என்ன, அளவு என்ன என்றெல்லாம் கணிக்குமளவுக்கு தொழில் நேர்த்தி இருக்கிறது.

ஒருமுறை மக்காச்சோளத்தில் கதிர் வரவில்லை என்ற ஒரு புகாருக்கு நிலைய வித்வான் என்ற அடிப்படையில் பார்க்கச் சென்றிருந்தேன். பெயரளவுக்குக்கூட உரமோ, சாணமோ, எந்தவித பராமரிப்போ இல்லாத வெள்ளாமை என்பது பார்த்துவுடன் புரிந்துவிட்டது. அந்த விவசாயியை அழைத்துச் சென்று ஏழடி உயரம் இருந்த செடிகளில் கதிர் இருப்பதையும், மூன்றடி உயரம் உடைய செடிகளில் கதிர் இல்லாமல் இருப்பதையும் காட்டி ஊட்டச்சத்து நிர்வாகம், அயல் மகரந்தச்சேர்க்கை அது இது என பலவற்றையும் விளக்கினோம். அதே லாட் நம்பரில் பக்கத்து தோட்டங்களில் உள்ள மக்காச்சோளம் சிறப்பாக வந்திருப்பதையும் காட்டினோம்.

எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டவர் 'ஏழு அடி உயரம் வளந்த செடில அவ்ளோ பெரிய கருது(கதிர்) இருக்குன்னா மூனு அடி இருக்கற செடில அதுக்கு தக்கன கருது இருக்கனும்ல. ஆனா அப்படி இல்ல. அப்படின்னா வெதையில ஃபால்ட் இருக்குன்னுதான அர்த்தம்' என்றார். திரும்பவும் நான் முதலிலிருந்து ஆரம்பிக்க, அவரும் அதையே சொல்ல என வளர்ந்துகொண்டே இருந்தது. கார்கள் ஒரேமாதிரி தயாரிக்கப்பட்டாலும் திண்டுக்கல் சாலைகளில் வரும் பெர்ஃபார்மன்ஸ் கொடைக்கானலில் வராது என்று அடுத்த உதாரணம் சொன்னேன். அவர் புரியாத மாதிரியே நடிக்க ஆரம்பித்தார். காய்ச்சலுக்கு வந்த இரண்டு நோயாளிகளுக்கு மருத்துவர் ஒரே மருந்தைப் பரிந்துரைத்தாலும் இருவருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் குணமாகலாம், அதற்காக மருந்து சரியில்லை என சொல்ல முடியாது என்று புரியவைக்க முற்பட்டேன். அவரோ ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேர்ந்தார். இடையில் அவரது மனைவியும் சேர்ந்துகொண்டு ஜாடிக்கேற்ற மூடியாகப் பேசி வெறுப்பேற்றினார். விதை நிறுவனம் இழப்பீடு தரவேண்டும் என்பதைத் தாண்டி வேறு எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பது தெரிந்து.

குமுதா, தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதால் எனது கடைசி அஸ்திர கேள்வியை எடுத்து வீசினேன். " சரிங்கண்ணா, நீங்க சொல்றது மாதிரியே இருக்கட்டும். என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க.  காண்டம் தயாரிக்கிற கம்பெனி ஊர்ல  இருக்கற எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் காண்டம் தயாரிக்குது. இருந்தாலும் ஊர்ல இருக்கற எல்லாருக்கும் ஒரே மாதிரி பெர்ஃபார்மன்ஸ் இருக்கறதில்லை. அதுக்கு அந்த கம்பெனிகிட்ட இழப்பீடு கேக்கறது நியாயமாங்ணா? அக்கா, நீங்க சொல்லுங்க அது நியாயமா?" என்றதும் அத்தோடு அந்த உரையாடல் முடிவுக்கு வந்தது.

குறைசொல்லிப் பேசுவது மிகவும் எளிதல்லவா குமுது? அண்மையில் BSIII வாகனத்துக்கு விற்பனையாளர்கள் நீதிமன்றத் தடை வருவதால் ஏகத்துக்கும் தள்ளுபடி வழங்கினார்கள். நீ கூட ஒரு வண்டி வாங்கியதாக எழுதியிருந்தாய். அந்த தள்ளுபடியில் வண்டி வாங்கியவர்களை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவர்கள் என்று சமூக ஊடகங்களில் பலர் பரிகசித்ததைப் பார்த்திருப்பாய். 15000 ரூபாய் மாதச்சம்பளம் வாங்குபவர்களுக்கு தவணை முறையில்  ஒரு வண்டி வாங்குவது  பெரிய சாதனை. அவர்களுக்கு 15000-20000 தள்ளுபடி என்பது எவ்வளவு பெரிய விஷயம்? அந்த சூழல் அக்கறையாளர்களின் தோட்டத்தில் உள்ள இலவச மின்சார மோட்டாருக்கு கடைசியாக கிரீஸ் வைத்தது மோட்டார் தயாரித்த கம்பெனியிலாகத்தான் இருக்கும். அதனால் ஏற்படும் பல நூறு யூனிட் மின்னிழப்பும் அதன் மாசும் கணக்கில் வராது.

அரசுக்கு அத்தனை வரிகளையும் செலுத்தி முறையான வெள்ளைப்பணத்தில், சொந்தக்காசில் வண்டி வாங்குபவர்களை ஒரே வார்த்தையில் அவதூறு செய்கிறார்கள். கல்லூரி முடித்துவிட்டு ஏதாவதொரு வேலை கிடைக்காதா என்று தேடுபவர்களுக்கு பைக் இல்லாததால் வேலை மறுக்கப்படுவதையும், அவர்கள் கையறு நிலையில் கலங்கி நிற்பதையும் பார்த்து கனத்த மனதுடன் பலமுறை கடந்து சென்றிருக்கிறேன்.  அரசாங்கத்தின் இலவச மிதிவண்டி, பைக் திட்டங்களையும் அவர்கள் பரிகசிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் யாருமே வாழ்க்கையில் கொஞ்சம் மேலே வந்துவிடக்கூடாது. அத்தகைய கோமான்கள் ட்ரம்பு - விசா சிக்கல் குறித்து கவலை கொள்வதை நாம் எப்படி பார்ப்பது? அதே கோமான்கள்தான் நம்மாழ்வார் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அதனால் நம்மாழ்வார் பிறந்தநாளைக் கொண்டாடவில்லையே என கவலைகொள்ளத் தேவையில்லை. அது உன்னையும், என்னையும் போன்ற உழைக்கும் மக்களுக்கு எந்த வகையிலும் தேவையோ அவசியமோ இல்லாதது.

உண்டு கொழுத்தவர்களுக்கு ஆர்கானிக்/சிறுதானிய/பாரம்பரிய/மரபுசார் உணவுத் திருவிழா என பலவுண்டு. நமக்கெல்லாம் உணவு கிடைப்பதே பெரும் திருவிழாதானே.

பிரியங்களுடன்,
பிரபு.

https://m.facebook.com/story.php?story_fbid=10154739846168773&id=595298772

Saturday, April 6, 2019

சமூக/பொது நலனுக்காக பாடுபடுவதாகச் சொல்லப்படும் எந்தவொரு கொள்கையையும்/இயக்கத்தையும்/கட்சியையும், நம்புவதற்கோ பரப்புவதற்கோ கொண்டாடுவதற்கோ எந்தவொரு நாயும் வேறெந்த பன்றிடமும் அனுமதி வாங்க தேவையில்லை.

அதே போல், சமூக/பொது நலனுக்காக பாடுபடுவதாகச் சொல்லப்படும் எந்தவொரு கொள்கையையும்/இயக்கத்தையும்/கட்சியையும், சந்தேகிப்பதற்கும்/விமர்சிப்பதற்கும்/கேள்விகேட்பதற்கும் எந்தவொரு பன்றிக்கும் உரிமையுண்டு, அதை எந்த நாயும் மறுக்க முடியாது.

யாருக்கும் தன்னை "அறிவிற்சிரந்த மேதையாக" நினத்துக்கொள்ள உரிமையுண்டு என்பது போல, அந்த மேதமையை தக்க தரவுகளோடு நிரூபிக்கும்வரை மறுப்பதற்கு எதிர்தரப்பிற்கும் உரிமையுண்டு.

ஆனால், எல்லா நாய்களும்/பன்றிகளும் தாங்கள் மட்டும்தான் உலகை உய்விக்க வந்த உத்தமர்கள் போல வெறிப்பிடித்து திரிகிறார்கள்.

தன்னை விமர்சிப்பவர்களுக்கு அறிவுநாணயத்தோடு பதிலளிக்க துப்பில்லாமல் தேசவிரோதிகள்/காபிர்கள்/முனாபிக்குகள் என்று கூறி கையடித்து சுகம் கண்டுவிட்டு பிள்ளைக்காக வயிற்றை தடவி கொள்கிறோம்.

கடைசியில் இது முற்றிப்போய் தனது நம்பிக்கைகளை கேள்வி கேட்பவர்களை உயிர்வாழ தகுதியற்றவனாக நினைக்க தொடங்குகிறார்கள்.

------

பிரேமலதா விஜயகாந்தின் தான்தோன்றித்தனமான பேச்சுக்களை கண்டிக்க முற்படும் பலரும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ   விஜயகாந்தை இதனுடன் ஒப்பிட்டு அவரை உயர்த்தி பிடிக்க முற்படுகினறனர்.

நான் சொல்ல வருவது, சமூகத்  தேவை இல்லாமல் தொடங்கப்படும் எந்த ஒரு கட்சியோ இயக்கமோ காலப்போக்கில் நீர்த்துப் போகும். வலுவான தடங்களோ கொள்கை கருத்துக்களோ இல்லாமல் தேர்தல் அரசியலை மட்டுமே இலக்காக கொண்டு இயங்கும் ஒரு கட்சி மற்றும் அதன் தலைமையை முழு முற்றாக நிராகரிப்பதே அரசியலின் இலக்கணம்.

அப்படி சீர்தூக்கி பார்த்தால் இங்கே நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்  பிரேமலதாவும் விஜயகாந்தும் மட்டும் அல்லர். ஒட்டுமொத்த  தே மு தி க வையும்  முழுவதுமாக ஒதுக்கித்  தள்ள வேண்டும். இதனடிப்படையில் இங்கே  அ தி மு க வையும்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மாறாக கருத்தியில் ரீதியாக வலுவான கட்சி அமைப்புகளாக  தி மு க, கம்யூனிஸ்ட், நாம்தமிழர் மற்றும் பா ஜ க வையே கருத வேண்டும். இவற்றின் நன்மை தீமை அலகுகளை கொண்டு யாருக்கு ஆதரவு என்பது நம் அறிவுக்கும் அனுபவத்திற்கும் உட்பட்டது.

இந்த தேர்தல் மக்களின் தாக்கத்தில் ஒருசேர நிகழ்ந்த அலையாக மாறக் கூடிய அனைத்து சாத்தியங்களும் கொண்டதாக இருக்கப் போகிறது.  நிச்சயம் இது விழிப்புணர்வுக்காண ஒர் அழைப்பு.  கடந்த ஐந்து வருடங்களாக பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் வாக்குகளை செலுத்த முற்படுகையில் எந்த தீமையையும் அவர்களால் துடைத்தெறிய முடியும்.