Saturday, August 26, 2023

தாக்குதலை நிகழ்த்தியவர்களை நோக்கி ஏன் எந்த ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படுவதே இல்லை, ஏன்?

Gold king
https://www.facebook.com/thangaarasan.annamalai

கள ஆய்வுகள், அதன் அறிக்கைகள் என்ற செய்தியை கேட்கும் போதெல்லாம் எனக்கு எழும் ஒரு எளிய கேள்வி - 

"பட்டியல் இனத்தரப்பு பாதிக்கப்பட்டிருப்பதால், பட்டியல் இனத்தவர்களை சேர்ந்த சமூகத்துவத்திற்காக நிற்கும் சமூக ஆர்வலர்கள் களப்பணி செய்து பட்டியல் இனத்தவர்களின் மீது ஏன், எதற்கு, எப்படி, யாரால் எங்கு தாக்குதல் நடத்தப்பட்டது அதன் பின்புலம் - என ஒவ்வொன்றாக ஆராய்ந்து அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைக்கான பரிந்துரைகளை பொதுவெளியில் முன்வைக்கின்றனர்." இது பட்டியல் இனத்தவர்களை பொறுத்தளவில்லான அவர்களின் எல்லை அதுவே. 

எனது கேள்வி என்னனா? பட்டியல் இனத்தவர்களின் மீதான சாதிய தாக்குதலை நிகழ்த்தியவர்களை நோக்கி ஏன் எந்த ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படுவதே இல்லை. 

பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தவர்கள் அதனை செய்யமுடியாது. ஆனால், பாதிப்பை ஏற்படுத்திய தரப்பாக இருக்ககூடிய சாதியினரில் "சமூக நீதியை விரும்பும், சமத்துவத்தை விரும்பும் மனித தன்மையுடன் இருக்கும் சோகால்டு முற்போக்காளர்கள்" எல்லாம் பட்டியல் இனத்தவர்களின் மீது தாக்குதலை நிகழ்த்தியவர்களை கண்டு, 

வேங்கைவயல் எனில், பட்டியல் இனத்தவர்களின் குடி நீர் தொட்டியில் மலம் கலக்ககூடிய மன நிலை ஏன் வந்தது என்றும். நாங்குனேரி என்றால், மாணவனை தாக்கியவர்களையும் அவர்களின் உறவினர்களை கண்டு "என்ன பிள்ளை வளர்த்து வைத்திருக்கிறீர்கள், ஏன் அவனை சாதிய மன நிலையில் வளர்த்திருக்கிறார்கள்" என்ற கேள்விகளையெல்லாம் கேட்டு, சாதிய ரீதியாக எவ்வளவு மோசமான மன நிலையை கொண்டிருக்கிறார்கள் என்பதனையும்,  தாக்குதல் நடத்தியவர்களின் சாதிய உறவினர்களின் கருத்து என்ன? சொந்த சாதியினரின் கருத்து என்ன? என்ற கேள்விகளை முன்வைத்து ஏன் எந்த ஆய்வையும் செய்வதில்லை. 

வேங்கைவயலை எடுத்துக்கொண்டால், சாதியபலம் காரணமாகவும், வாக்குவங்கி அரசியலாகவும் பொதுவாக பிம்பபடுத்தப்படுவதால் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு தயக்கம் இருப்பதாக சப்பைகட்டு கட்டப்படுகிறது. 

உண்மையில் வேங்கைவயல் கிராமத்தில் மலத்தை கலந்த சாதியினரை, "உங்கள் சாதியில் சக மனிதன் குடிக்கும் நீரில் மலத்தை கலப்பதை எப்படி பார்க்கிறீர்கள்" என்ற கருத்தை கேட்டு அவர்களின் எண்ணவோட்டம் "சாதிக்கு ஆதரவாக இருக்கிறதா? அல்லது எதிராக இருக்கிறதா?" - என்பதை ஆய்வரிக்கையாக கொண்டு வந்தால்தானே வேங்கைவயல் பிரச்சனையில் சாதி எந்தவித தார்மீக ஆதரவையும் கொடுத்திருக்கிறதா அல்லது கொடுக்கவில்லையா என்பதனை அறிந்து அதனால், வாக்கு வங்கி, சாதி பலம் என மடைமாற்றி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் யோக்கியதையை காணமுடியும். 

இதேபோலத்தான், மாணவரை கொலைவெறிக்கொண்டு தாக்கியது சரியா என தாக்கியவர்களின் சொந்த சாதியினரிடத்தில் கேட்டு ஏதாவது பதில் பெறப்பட்டிருக்கிறதா? அவ்வாறு கள ஆய்வை செய்தால்தானே உரிய பிரச்சனைக்கு சாதிதான் காரணமெனில் "அந்த சாதிய தாக்குதலுக்கு தனிப்பட்ட நபரின் சாதி வெறி மட்டுமே காரணமா அல்லது மறைமுகமாகவோ மவுனமாகவோ உரியவர்களின் சாதி ஆதரவு இருக்கிறதா" - என்பதை கண்டுப்பிடிக்கமுடியும். 

ஆனால், இதனை ஏன் எந்த பட்டியல் இனத்தவர்கள் அல்லாத முற்போக்காளர்கள் யாரும் செய்வதில்லை? 

உரிய ஆய்வுகளை செய்து ஆவணப்படுத்தினால்தானே சாதியவாதிகளின் யோக்கியத்தையை ஆவணத்தோடு கேள்விக்கு உட்படுத்தமுடியும்? 

பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தவர்களை கண்டு பாதிக்கப்பட்டதை அறிக்கையாக தயாரிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட, முக்கியம், பாதிப்பை ஏற்படுத்திய தரப்பை கள ஆய்வு செய்து ஏன் எவ்வித கேள்விக்கு உட்படுத்துவதில்லை. 

ஏன் இதனை சாதிக்கு எதிராக இருக்கும் பட்டியல் இனத்தவர்கள் அல்லாத சாதியை சார்ந்த முற்போக்காளர்கள் செய்யகூடாது?

Saturday, May 20, 2023

தோனியிடம் நான் கற்றுக்கொண்ட மிக முக்கிய 7 பாடங்கள்.

- அரவிந்த ராஜ்

'மகேந்திர சிங் தோனி'

இரண்டு தசாப்தங்களாக கிரிக்கெட் உலகை ஆண்ட மன்னனின் இறுதி கட்டம் இது. எப்போது வேண்டுமென்றாலும் 'நான் இன்றோடு விடைபெறுகிறேன்' என கூறும் மனிதர் அவர். விடைபெறும் நேரத்தில் எழுதுவதை விட மன்னன் அரியாசனத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் போதே துதி பாடிவிடுவது சிறப்பு.

தோனியிடம் நான் கற்றுக்கொண்ட மிக முக்கிய 7 பாடங்கள்.

1.Have control over your emotions. Express them only if needed.

தோனி Calm and Cool பெர்சன் கிடையாது. Dhoni is a man who has control over his emotions. A man who has control over his emotions is very dangerous and lethal. தோனி கோவப்பட்ட தருணங்கள் என்னவென்று கேட்டால் ராஜஸ்தான் உடனான போட்டியில் தோனி நோ பாலுக்காக நடந்து வந்தது, பஞ்சாப் உடனான போட்டியில் இர்பான் பதான் ஓவரில் சிக்ஸர் அடித்து விட்டு ஹெல்மெட்டை ஓங்கி குத்தி கண்ணில் தீ ஜுவாலையை பறக்க விட்ட இவ்விரண்டும் சட்டென்று நினைவுக்கு வரும். கோபத்தை கட்டுப்படுத்துவது கடினம். ஒருவன் அதை கட்டுப்படுத்தி வாழும் வித்தையை கற்றுக்கொண்டால், அவனால் வாழ்க்கையில் எந்த கடின கொடிய தருணத்தையும் கடந்து விட முடியும். Control your emotions. Express your anger when it is necessary and needed என்பதே முதலாம் பாடம்.

2. Be fit Physically

இதை படித்துக்கொண்டிருக்கும் பலரை 40 வயது தோனி அசால்டாக 100 மீட்டர் ஓட்டத்தில் வென்று விடுவார். A sound body is a sound mind. உடல் நன்றாக இருந்தால் உள்ளமும் நன்றாக இருக்கும். எத்தனை வயதானாலும் முடிந்த வரை பிட்னசில் கவனம் செலுத்துங்கள். அது மிக அவசியம் என்பதே பாடம் 2.

3. Look out for people you believe in and never judge someone based on others opinion and views.

விராட் கோலி இந்திய அணியில் நுழைந்த சில மாதங்களிலியே ஸ்டார் ஆகிவிட்டார். ஆனால், ரோஹித் அப்படி இல்லை. நிறைய தோல்விகள். ஆனால், தோனி ரோகித்தை நம்பினார். மீண்டும் மீண்டும் வாய்ப்புகள். நிச்சயம் தோனிக்கு மேலிடத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும். யார் என்ன சொன்னால் என்ன? எனக்கு அவன் மீது நம்பிக்கை உள்ளது என்பதே தோனியின் பதில். அது ரோகித்தை நிச்சயம் மனதளவில் வலுப்படுத்தியிருக்கும். யாரும் அவரை நம்பாத நாட்களில் தோனி அவர் மீது செலுத்திய நம்பிக்கை ரோகித்தை இன்று ஆகச்சிறந்த ஸ்டார் ஆக மாற்றியுள்ளது.

4.Have some passion outside your career

வேலையே கதி என்று கிடைக்காமல் உங்களை மனிதனாக உயிர்ப்புடன் வைக்க உதவும் செயல்களின் மீது ஈடுபாடு செலுத்துங்கள். தோனியின் பைக் மீதான காதல் அப்படியான ஒன்று. சினிமா, இசை, சமைப்பது, எழுதுவது, பாடுவது இப்படி ஏதாவது ஒரு Passion-ஐ பற்றிக்கொண்டு அதற்கு அடிக்கடி உரமிடுங்கள். உயிரோடு இருத்தல் வேறு; வாழ்க்கையை வாழ்தல் வேறு. வாழுங்கள்.

5.Fight till your last breath

உச்சத்தில் இருக்கும் யாராக இருப்பினும், தொப்பென்று கீழே வீழ்வது நடப்பது மானுட விதி. உயரத்தில் இருந்த நான் விழுந்து விட்டேன் என Pessimistic தொனியில் சிந்திக்காமல், மீண்டும் ஏறி உச்சிக்கு போவேன் என்ற Practical Optimism மனநிலையை உருவாக்குங்கள். 2 வருட தடைக்கு பின்பாக 2018-ல் CSK மீண்டு வந்து கோப்பை அடித்ததெல்லாம் விளையாட்டு உலகின் ஆகப்பெரிய மாஸ் 'Thug' மொமெண்ட். 

6. Don't let anyone to intimidate you or never seek someone else's validation

M.S.Dhoni படத்தில் யுவராஜ் சிங் காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு ஸ்டைலாக வரும் போது, தோனியை தவிர மற்ற அனைவரும் யுவராஜை மலைத்து பார்ப்பார்கள். 'நாம எங்க தெரியுமா தோத்தோம்??' என்று தோனி கேட்கும் போது அந்த சீன் ஓடும். யாரை கண்டும் பயப்பட வேண்டாம். நாம் பயந்து ஒடுங்கும் போதே தோல்வியை ஒப்புக்கொண்டதாக அர்த்தம். போராடுங்கள். வெற்றியோ தோல்வியோ உங்களுடைய போராட்டம் எப்படியானது என்பதே அவசியம். 'Lose like a winner'. Process is important than results.

அடுத்தவர்களின் opinion-ஐ பொறுத்து தான் என் வாழ்க்கையை வாழ்வேன் என்றும் இருக்க வேண்டாம். அது ஒருவித இயலாமை நிலைக்கு நம்மை தள்ளிவிடும். எதிரில் எவன் இருந்தால் என்ன?? நீ எதிர்ப்பது என்னை; முடிந்தால் ஜெய்த்துப்பார். Kill me if you can என்ற மனநிலையை கொண்டு வா. 

7.Work on your strengths a lot than on your weakness.

எப்போதுமே நாம் அனைவரும் நாம் weak ஆக உணரும் விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துவோம். அது நமக்கு ஒரு Challenge-ஐ அளிக்கும். அதை சரிசெய்யும் போது நமது Ego விற்கு Satisfaction கிடைக்கும். ஆனால், Weakness ஐ சரிசெய்ய செய்யும் மெனக்கெடலில் நமது Strong zone மீதான ஈடுபாடு குறைந்து அது less strong ஆக மாறிவிடும்.

தோனி பினிஷராக பொறுப்பெடுத்த பின்பு ஸ்பின் பவுலிங்கை பெரிதாக ஆட மாட்டார். தோனிக்கு வேகப்பந்து நன்றாக ஆட வரும். அதுவும் Left hand fast bowler என்றால் அல்வா தின்பது போல. தோனி தன்னை தயார்படுத்திக்கொண்டது எப்படி என்றால்., என்னால் இந்த Spin ஓவரை சமாளித்து அவுட் ஆகாமல் ஆடி விட்டால், இதில் விட்ட ரன்களை நான் fast பவுலர் போடும் போது அடித்து விடுவேன். Spin-ல் அவுட் ஆகாத அளவுக்கு யுக்தியை வளர்த்துக் கொள்கிறேன். அது போதும். அதே நேரம் நான் fast பவுலிங்கில் நிறைய அடிக்க வேண்டும். என்னுடைய Strength அது. அதில் இன்னும் கவனம் செலுத்துகிறேன் என்ற Positive Approach தோனியின் மிகப்பெரிய பலம்.

சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால், அவரை வரையறுக்க 7 என்ற எண் மட்டும் போதுமே !!

சாதாரண குடும்பத்தில் பிறந்து, பணபலம் எதுவும் இல்லாமல், தன்னை ஒவ்வொரு நாளும் மெருக்கேற்றிக்கொண்டு, 20 ஆண்டுகாலம் ராஜாவாக வாழ்ந்து ராஜவாகவே ஓய்வு காணும் தலைவா., உன் 20 வருட வாழ்க்கையை இந்த வரிகள் பறைசாற்றும்.

~"சுற்றி நின்று ஊரே பார்க்க களம் காண்பான்
புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்

உன் பேரை சாய்க்க
பல யானைகள் சேர்ந்த போதே
நீ சிங்கம் தான்"~

❣️

https://www.facebook.com/100042863708639/posts/pfbid02vDRwM7RSuTnvRUubxPhUTmVsNQ2JNv66ozyLGmbuJHN3JCdHnuwRGEzfCb28h4oLl/?mibextid=Nif5oz

Thursday, January 12, 2023

தமிழ்நாடு என்கிற பெயர் எப்படி வந்தது

Raja Rajendran Tamilnadu

தமிழ்நாடு என்கிற பெயர் எப்படி வந்தது என்று எழுத்தாளுமை எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடைய காணொலியைக் கண்டு, கேட்டிருப்பீர்கள். 

எழுத்துவடிவில் சில முக்கியமான ஆனால் 100% உண்மையான செய்திகள் இது 👇

நேற்று, இந்து தமிழ் திசை நாளிதழில், நடுப்பக்கக் கட்டுரையாக, ஆர்.முத்துக்குமார் அவர்கள் எழுதியதிலிருந்து ;

1.) மெட்ராஸ் ஸ்டேட் பிரசிடென்ஸி அதாவது சென்னை ராஜதானி என்கிற மாநிலத்தை இனி தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும் என்று அழுத்தமாக ஓங்கி ஒலித்த முதல் குரல் பெரியாருடையது !

2.) 1956.  75 நாட்களுக்கும் மேலாக, தனித்து தீவிர உண்ணாநோன்பிருந்து இறந்து போனார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கரலிங்கனார்.  ஊர் விருதுநகர்.  ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் அரசு.  முதலமைச்சர் காமராஜர்.  அவருடைய ஊர் ...

சங்கரலிங்கனாரின் பிரதானக் கோரிக்கை தமிழ்நாடு என்கிற பெயரை மெட்ராஸ் பிரசிடென்சிக்கு சூட்ட வேண்டும் என்பதுதான்.

ஆனால் இப்படி விரதம், கிரதம்ன்னு எங்கிட்ட பூச்சாண்டி காட்டமுடியாதுன்னேன் என்று காமராஜர் கறாராக, கல்லாக இருந்துவிட ;

துடி துடித்து செத்துப் போனார் தியாகி சங்கரலிங்கனார்.

காங்கிரஸ் கைவிட்டு விட, அன்று அவருடன் இருந்தது கம்யூனிஸ்ட் & திமுக.

காங்கிரஸ் தலைவர்களைத் தவிர ஏனையக் கட்சிகளின் அனைத்து தலைவர்களும், உண்ணாவிரதப் பந்தலுக்குப் போய் சங்கரலிங்கனாரை பார்த்துவிட்டு வந்தனர்.  அப்படி ஒருமுறை அண்ணா அவர்கள் போனபோது, அவருடையக் கைகளை அழுந்தப் பிடித்துக் கொண்டு சங்கரலிங்கனார், காங்கிரஸ்தான் என்னைக் கை விட்டுடுச்சி, நீயாவது என் ஆசையை நிறைவேத்து என்றிருக்கிறார்.  அண்ணா வெடித்து அழுதிருக்கிறார்.  அந்தளவு அந்த உடல் மோசமாகி இருந்தது !

சங்கரலிங்கனார் இறக்கும் சில நாட்களுக்கு முன்னர் கூட அவர் நாடகமாடுவதாக காங்கிரசார் மீட்டிங்கில் பேசினர்.  அதாவது கம்யூனிஸ்ட்கள் அவருக்கு ரகசியமாக உணவுகளை இரவு வேளையில் கொடுத்து வருவதாக !

நான் செத்துட்டா ஒரு காங்கிரஸ் பய எனக்கு அஞ்சலி செலுத்த வரக் கூடாது.  என் மேல காங்கிரஸ் கொடியைப் போர்த்தக் கூடாது.    என் உடலை கம்யூனிஸ்ட்கள்தான் எடுக்க வேண்டும்.  அவர்கள்தான் இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும்.

பொதுவுடமை கட்சியினர்தான் சங்கரலிங்கனாரின் இறுதி ஊர்வலம், சடங்கு, அஞ்சலியைச் சிறப்புற செய்தனர் !

3.) 1957.  திமுகவின் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் முதன்முறையாக சட்டசபைக்குள் நுழைகின்றனர்.  சங்கரலிங்கனாரின் உயிர் தியாகத்தை மதிப்பதற்காகவாவது காமராஜர் செவிமடுப்பார் என நம்பி, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்கிற தீர்மானத்தை சட்டசபையில் வைத்தனர்.

அதன்மீது தர்க்கங்கள் நடந்தன.  இது ஒருவகையான அட்டென்ஷன் சீக்கிங் என்கிற புது வியாதி.  தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று உணர்ச்சி கொந்தளிக்கப் பேசிவிட்டால் மக்கள் மயங்கிவிடுவார்கள் என ஒரு சிறுகூட்டம் நம்புகிறது அல்லது அப்படி பேசி மக்களை ஏமாற்றுகிறது.  எத்தனை உயிர் போனாலும் பிரிவினைவாதக் கொள்கைகளை ஏற்க முடியாது என்றது காமராஜர் அரசு !

நம்புங்கள்.  அன்றைய காங்கிரஸ் கிட்டத்தட்ட இன்றையச் சங்கிகள்.  சத்தியமூர்த்தி, இராஜகோபால், ஆர் வெங்கட்ராமன்ல்லாம் இருந்த காங்கிரஸ் பின்ன என்னவா இருக்கும் ?

07/05/1957 அன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் 42 (கம்யூனிஸ்ட் & திமுக.  அன்று எதிர்கட்சி கம்யூனிஸ்ட்தான்)

தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் 127.  சங்கரலிங்கனார் இறந்த பின்னரும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது !

ஆச்சா ?

4.) 1961.  சங்கரலிங்கனார் செத்து அஞ்சு வருஷமாச்சு.  திமுக தீர்மானம் கொண்டு வந்து நாலு வருஷமாச்சு.  இம்முறை சோசலிஸ்ட் கட்சிக்காரர் மீண்டும் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, ஆளுங்கட்சியினர் தயைகூர்ந்து ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

காமராஜர் உண்மையிலேயே தீர்க்கதரிசி என்றால், நிச்சயம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மிக எளிதாக, ஆமாம் அந்தளவு அவருக்கு நேருவிடம் செல்வாக்கு இருந்தது, தமிழ்நாடு எனப் பெயர் சூட்டி வரலாற்றில் இடம் பெற்றிருக்கலாம் !

நம்பமாட்டீர்கள்.  காந்தி & காமராஜர்.  இருவருமே பெரும் சர்வாதிகாரிகள்.  முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள்.  இதில் காந்தியார் ஒரு படி மேலே சென்று எதிர்ப்பைக் காட்ட உண்ணாவிரதம் என்கிற ஆயுதத்தை வேறு தூக்கிடுவார்.

பெரிய அக்கப்போரா போச்சே விடுங்க இனி கடிதப் போக்குவரத்தில் வேணா தமிழ்நாடுன்னு எழுதிக்கலாம் என சட்டசபையில் குறிப்பிட்டார்.  எதிர்கட்சிகள் சம்மதிக்கவில்லை.  பிறகென்ன, வழக்கம் போல இந்தத் தீர்மானமும் தோல்வி !

1962.  காங்கிரஸ் மாபெரும் வெற்றி.  மாறாக அண்ணாதுரை தோல்வி.  ஆனால் திமுகவின் பலம் முன்பை விட நான்கு மடங்கு அதிகமானது !

5.) அண்ணாவை மாநிலங்களவைக்கு உறுப்பினராக்கி அனுப்பி வைத்தது திமுக.

அங்குதான் கம்யூனிஸ்ட் தனிநபர் மசோதாவாக தமிழ்நாடு கோரிக்கையை எழுப்புகிறது.

அண்ணா அதை ஆதரித்து அற்புதமான வாதங்களை எடுத்து பேசுகிறார்.

இலக்கியங்களில் தமிழ்நாடு என்று பெயர் வருமிடங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.

அதெல்லாம் சரிங்க, இப்ப தமிழ்நாடுன்னு மாத்திடறதால உங்களுக்கு என்ன லாபம் ? என்று ஒரு காங்கிரஸ் உறுப்பினர் கேட்கிறார்.

பார்லிமெண்ட் ஹவுஸ் என்றிருந்ததை லோக்சபா என்று நீங்கள் மாற்றினீர்களே உங்களுக்கு என்ன லாபம் வந்ததோ அதே லாபம் தமிழ்நாடுக்கும் வரும் என்றார் !

அண்ணா ஆங்கிலத்தில் பெரும்புலமை வாய்ந்தவர் என்பதால் அந்த அவையே வாய்பிளந்து அந்த உரையை ரசித்தது !

ஆனால் தீர்மானம் தோல்வி.

6.) விடாது கருப்பு - சிவப்பு.

23/07/1963.

மீண்டும் திமுகவின் இராம.அரங்கண்ணல் தமிழ்நாடு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வருகிறார்.  முதலமைச்சர் பக்தவச்சலம்.  தொழில் துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன்.

7.) தமிழ்நாடு என்றால் யாருக்குமே புரியாது.  குறிப்பாக வடக்கில் அனைவருக்குமே மெட்ராஸ்ன்னு நல்லா பழகிருச்சி.  ஃபாரின்காரன் வாய்ல தமிழ்நாடு நுழையவே நுழையாது, பெயரை திடுக்குன்னு மாத்தினா அவன் காண்ட்ராக்டை எல்லாம் கேன்சல் பண்ணிடுவான்.
எனவே மதராஸ் பிரசிடென்சி எனத் தொடர்வதே நமக்கு நல்லது என்று பேசினார் வெங்கட்ராமன்.

சங்கரலிங்கனார் இறந்து எட்டு வருடங்கள் ஆன பின்னரும் தீர்மானங்கள் தோற்றுக் கொண்டே இருந்தன !

8.) 1967.  யோசிச்சு பாருங்க.  சொந்த மக்களிடத்திலேயே இவ்வளவு காழ்ப்புடன் ஓர் அரசு நடந்துக்கும்ன்னா, கூடவே அரிசிப்பஞ்சம், இந்தி எதிர்ப்பு போராட்டம், பதுக்கல் கொள்ளையர்கள் பெருக்கம், விளங்குமா ?  அப்ப போன காங்கிரஸ்தான்.  மக்களின் கோபம் காமராஜரையே பலி போட்டது.  ஆனால் இந்தச் சங்கி கூடையான்கள் காமராஜரையே தோற்கடிச்சிட்டானுகளேன்னு கதறுவாய்ங்க.  ஏன்னு இனிமேலாவது புரிஞ்சா சரி.

9.) அண்ணா முதலமைச்சராகிறார்.  மூன்று அதிமுக்கியமான தீர்மானங்களை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்கிறார்.

i) இனி நம் நாடு தமிழ்நாடு என்றழைக்கப்படும் !

ii) தமிழ் & ஆங்கிலம் என்கிற இருமொழிக் கொள்கை மட்டுமே இங்கு இருக்கும்.  மும்மொழி என்கிற போர்வை போர்த்திக் கொண்டு கூட இந்தி நுழைய முடியாது !

iii) சடங்கு, சம்பிரதாயம், அக்னிசாட்சி, இடைத்தரகர் என்கிற எந்த இடையூறுகளுமின்றி நடத்தப்படும் சீர்திருத்த திருமணங்களும் செல்லும் !

10.) 18/07/1967.  தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  சட்டமன்றத்தில் வென்ற தீர்மானம் என்பதால், ஒன்றிய அரசில் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து, அது ஏற்றுக் கொள்ளவும் பட்டது !

சங்கரலிங்கனாருக்கு கொடுத்த வாக்குறுதியை 11 வருடங்கள் கழித்தும் மறவாமல் நிறைவேற்றிச் சாதித்தார் முதலமைச்சர் அண்ணா 🖤❤

எனவே, இனி எங்கள் தமிழ்நாடு மீது கை வைக்கவோ, அகந்தையில் கால் வைக்கவோ முயன்றீர்களெனில் அவ்வளவு அவயங்களும் அ*படும்.  திமிராக பேசிய வா*கள் உ*படும், எலும்புகள் பொ**படும் !

Tuesday, December 27, 2022

இந்துத்துவவாதிகள் ஏன் வால்மிகி ராமாயணத்தை ஏற்ப்பதில்லை ??

#இந்துத்துவவாதிகள் ஏன் #வால்மிகி_ராமாயனத்தை_ஏற்ப்பதில்லை ??

வால்மிகிக்கு பின் 2000 ஆண்டுகள் கழித்து cutting, fitting செய்த #ராமாயனத்தை_ஏற்கிறார்கள் ??

வால்மிகி ராமாயனத்தில் கூறப்பட்ட விசயங்கள் வருமாறு . . .

1. ராமன் ஒரு மது பிரியன்.
2 . ராமன் காட்டு விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்டான்.
3. ராமனுக்கு சீதையுடன் சேர்த்து சில மணைவிகளும், பல வைப்பு பெண்களும் இருந்தனர்.

4. ராமன் ஒரு அரசனுக்கு பிறந்து அரசனானவன் மட்டுமே ஒழிய கடவுள் அவதாரம் இல்லை.
5. ராமனின் மணைவியான சீதை அவனுக்கு தங்கை முறை.
6. ராமன் இலங்கையில் அசோக வணத்தில் சீதையை சந்தித்தபோது, மது அறுந்திக்கொண்டு 3 பெண்களின் மடியில் படுத்துக்கொண்டு ஆடினான்.

7. சீதை ராமனுடனான உறவில் திருப்தியின்றி இருந்தாள்
8. தெரிந்தே தான் ராமன் போட்ட கோட்டை தாண்டினாள்
9. ராவணனின் அழகில் மயங்கினாள்
10. விருப்பபட்டே ராவணனுடன் லங்கை சென்றாள்.
11. அனுமன் லங்கை வந்தபோது வருத்தமடைந்தாள்.

12. ராவணன் ராமனை விட பன்மடங்கு அழகானவன்.
13. அதிகம் படித்ததோடு, அமைதி குணம் கொச்டவன்.
14. சீதையை கடத்தி வர சென்ற போதிலும், காட்டில் அவள் அழகை பார்த்து காதல் கொண்டான்.
15. சீதையின் விருப்பத்தோடே அவளை லங்கை அழைத்து சென்றான்.

16. ராமன் சீதையை நடத்தியதை விட மிக கன்னியமாக ராவணன் நடத்தினான்.
17.ராவணனின் பத்து தலைகள் என்பது அவனது அறவாற்றலை உவமைப்படுத்தவே.
18. ராவணன் ஜாதி கட்டமைப்புகளை (வர்ணாசிரமத்தை) எதிர்த்த ஒரு சிவ பக்தனாக இருந்தான்.

19. ராவணன் ஆட்சியில், லங்கை அழகிலும் வளத்திலும் திலைத்திருந்ததனால், பொறாமையுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
20. ராவணன் மீது சீதைக்கு காதல் இருந்ததால், சீதையை தீயில் இறங்கி கற்பை நிறுபிக்க சொன்னான்.

****** #கம்பராமாயனம், துளசிதாஸ் ராமாயனம், பௌத்த ராமாயனம், ஆதியாத்ம ராமாயனம், வைசித ராமாயனம், ஆணந்த ராமாயனம், அகத்திய ராமாயனம், அத்புத ராமாயனம், ரங்கநாத ராமாயனம், குமுன்டெண்டு ராமாயனம், கொத்த ராமாயனம், கிரித்திவாசி ராமாயனம், கன்னாச ராமாயனம், டன்டி ராமயனம், பவர்த்த ராமாயனம், மந்தனி ராமாயனம் . . . .

இவைகள் எல்லாம் 12 ம் நூற்றாண்டுக்கு பின் திரித்து, புதுப்பித்து எழுதப்பட்டவை !!!

original version என்பது 5 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட #வால்மிகி_ராமாயனம்" தான் !!!

அதை படித்தால் . . .

 ராவணன் நல்லவனாகவும், ராமன் அயோக்கியனாகவும், சீதை பாவப்பட்ட பெண்ணாகவும் உணரப்படும் !!!

Sunday, November 13, 2022

பெரியார் திருமணம்

ஆறுமுகம் பேச்சியப்பன்

மகள் வயதுடைய பெண்ணை பெரியார் 70 வயதில் திருமணம் செய்து கொண்டது ஏன்? மகளாய்த் தத்தெடுக்காமல் ஏன் திருமணம்?

முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அன்றைய இந்துத் திருமணச் சட்டப்படி ஒருவரைத் தத்தெடுக்க, தத்து எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் ஒரே சாதியாய் இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படித் தத்தெடுக்க முடியாது. இது அம்பத்கரின் இந்து சட்டத் திருத்தங்கள் 1956-ல் அமலுக்கு வந்த பின்னே இந்த விதி நீக்கப்பட்டது.

பெரியாரை விமர்சிக்க ஏதும் காரணம் கிடைக்காத போது சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்வை/மணியம்மையார் திருமணம் குறித்தே விமர்சிப்பர். பெரியார்-மணியம்மை திருமணம் 9.7.1949 அன்று பதிவு செய்யப்பட்டது. அப்போது பெரியாருக்கு வயது 70;
(பிறப்பு:17.09.1879) 
மணியம்மையின் வயது 32
(பிறப்பு :10.03.1917) 
இத்திருமணம் மணியம்மையாரின் சொந்த விருப்பத்தின் பேரில் சுயமாய்ச் சிந்தித்து, விரும்பி எடுக்கப்பட்ட முடிவே. இதில் யாருடையக் கட்டாயமும் இருக்க வில்லை. 

பெரியாரிடம் வருவதற்கு முன்பே மணியம்மையார் தன் வீட்டில் தனக்குத் திருமணமே வேண்டாம் என்று முடிவுடன்தான் இருந்திருக்கிறார். பெரியாரிடம் வந்து சேர்ந்தப் பின்பும் அவருக்கு மணம் முடிக்க முயற்சிகள் செய்யப்பட்ட போது இயக்கப் பணியே வேண்டும் திருமணம் வேண்டாம் என்ற முடிவையே முன் வைத்தார்.

பழைய இந்துச் சட்டத்தின் படி பெண் மகள்களுக்குச் சட்டப்படிச் சொத்துரிமை இல்லை. 1956-க்கு முன் பழைய இந்து சட்டத்தின் படி பெண்ணுக்குத் தகப்பன் வீட்டில் தங்கும் உரிமை + சீதனம் மட்டுமே !. எனவே மணியம்மையை மகளாய்த் தத்தெடுத்தாலும் பெரியாரின் எண்ணம் நிறைவேற வாய்ப்பில்லை. பெரியார் 28.6.1949 அன்று திராவிடர் கழகத்தின் சொத்துக்கள் பற்றி ஒரு அறிக்கை எழுதுகிறார். 

"எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படியான  வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமுமாகையால் நான் 5,6 வருஷ காலமாகப் பழகி நம்பிக்கைக் கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் பற்றும், கவலையும் கொண்டு நடந்தது வந்திருக்கிறதுமான மணியம்மையை எப்பிடியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு அந்த உரிமையையும், தனிப்பட்டத் தன்மையையும் சேர்த்து மற்றும் 4,5 பேர்களையும் சேர்த்து  இயக்க நடப்புக்கும், பொருள் பாதுக்காப்புக்  குமாகச் சேர்த்து ஒரு ட்ரஸ்ட்டு பத்திரம்  எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன். அப்பத்திரமும்  எழுதப்பட்டு வருகிறது." 
(28.6.1949  - விடுதலை) 
ஆக, மணியம்மையை சட்டப்படி  வாரிசாக்க மட்டுமே பெரியார் முடிவு செய்கிறார். இந்தத் திருமணம் ஒரு சட்டப் பாதுக்காப்பு மட்டுமே   என்பதைத்  தெளிவாகக் காட்டுகிறார். 
     "மணியம்மை வாரிசு என்பது, டிரஸ்ட்டு சம்பந்த உரிமை   என்பதும், மணியம்மைக்கு சுதந்திர பாத்தியமுடையதல்ல. பரம்பரை பாத்தியமுடையதுமல்ல! ஆதனால்  இந்தத் திருமணம், பொருத்தத்தை அல்லது  மணியம்மையை ஏமாற்றும் திருமணமும் அல்ல. ஏன் ? பொருந்தாதத் திருமணமும் அல்ல, மணியம்மை உள்பட யாருக்கும் எந்தவிதமான  நிர்பந்தமோ, அவருக்கு இஷ்டமில்லாத துன்பங்களைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அதாவது வாழ்நாள் அடிமைத்தன்மைக்கு ஆளானதோ ஆனத் திருமணம் அல்ல." 
(7.7. 1949 - விடுதலை) 

இதிலிருந்து பெரியார் மணியம்மைக்கு இயக்கத்தைத் தாரை வார்க்கவில்லை என்பது நன்கு தெரிகிறது. அன்றைய/இன்றைய  விமர்சனங்கள் மணியம்மையைத் தலைவராக ஏற்கவேண்டி வரும் என்றும் பெரியார் மணியம்மையைத்  தவிர வேறு யாரையும் நம்பவில்லை என்று புகார் கூறினார். பெரியார் எந்த இடத்திலும் மணியம்மையாரை இயக்கத் தலைமைக்குக் கொண்டு வருவதாகச் சொல்லவில்லை.அத்தோடு அவர் மணியம்மை + 4/5 பேர் கொண்டு குழுவை டிரஸ்ட்டாக அமைப்பது பற்றியே சொல்கிறார். வேறு யாரையும் நம்பாதவர் எப்படி இதைச் செய்ய முடியும்? அத்தோடு பெரியார்-மணியம்மை திருமணம் என்ற தலைப்பில் 16.7.1949 அன்று குடி அரசில் எழுதிய அறிக்கையில் பெரியார் கூறுகிறார், " பெரியார் தலைமைப் பதவியை மனியம்மைக்குச் சூட்டுவதற்கு மணியம்மையை   மனைவியாகவோ, வாரிசாகவோ பெற வேண்டிய அவசியம் என்ன?" 

(16.7.1949 - குடி அரசு)

அன்று பெரியாருடன் இருந்தவர்களில் ஒருவரான 
தி.பொ.வேதாசலம் பெரியாரின் திருமணம் பற்றிக் கூறுவது இந்தக் கேள்விக்கு ஒரு நல்ல பதிலைத் தரும். 

"ஒரு மனிதன் எதற்காக மணம் செய்கிறான்?
1. தனக்கு வாழ்க்கைத் துணைவியைத் தேடிக் கொள்ளவும், மற்ற உதவிகள் புரியவும்,
2. பிள்ளைப் பேறு கருதி,
3. தன் காம இச்சைக்கு உதவியாக 

மேற்சொன்ன காரணங்கள் பெரியார் செய்து கொள்ளும் திருமனத்திற்குக் கொஞ்சமும் பொருந்தாது. மணியம்மை கடந்த 6 வருடங்களாக உணவு சமைத்தும், மற்ற பணிகள் ஆற்றியும் வருகிறார். பிள்ளைப் பேறு கருதியிருக்க முடியாது. காம இச்சைக்கு மணப் பதிவு முக்கியமல்ல. "

(9.7.1949 - விடுதலை) 

நாகம்மையார் மறைந்தது 1933-ல். அப்போது பெரியார்க்கு வயது 55. அப்போதே பெரியாரை இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அவரின் தாயார் உட்படப் பலரும் வலியிறுத்தினர். பெரியார் அதை மறுத்துவிட்டார். தன் வாழ்நாள் முழுவதும் சமூக நீதி காணத் தொண்டு செய்ய அதுத் தடையாய் இருக்குமென எண்ணினார். பெரியார் அதைக் கேட்டு திருமணம் செய்திருந்தாலோ, மணியம்மை அப்போதே இருந்து பெரியாரை  திருமணம் செய்து இருந்தால் இத்தனை விமர்சனம் வந்திருக்காது. வேதாசலம் கூறுவது போல இது வெறும் உடல் இச்சையைத் தணிக்கச் செய்தத் திருமணமும் அல்ல. அந்நாளைய பெரிய மனிதர்கள் மத்தியில் பலதாரமணம் பெரிய விசயமே இல்லை. அத்தோடு மணியம்மையாரே பெரியாருடன் தனிப் பயணங்கள் பல சென்றிருக்கிறார். அது பற்றிய அறிக்கைகள் விடுதலையில் காணக் கிடைக்கிறது. 
எப்படிப் பார்த்தாலும் இது உடல் இச்சையைத் தீர்க்கும் திருமணம் இல்லை என்பதும், மணியம்மையார்க்கு இயக்கத்தைக் கொடுக்கவில்லை என்பதும், பெரியாரின் சொத்துக்களை, இன்னபிற விசயங்களை சட்டப்படிப் பாதுக்காக்க ஒரு வாரிசு ஏற்படுத்த மட்டுமே என்பது உறுதியாகிறது.

இதைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா தலைமையில் பலர் கழகத்தை விட்டு வெளியேறி தி.மு.க கண்டது வரலாறு. 

பின்னர் ஒருநாள் க.அன்பழகன் அவர்கள் மணியம்மையார் முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது,
 " நாங்கள் கட்சி அரசியலுக்கு வர விரும்பினோம். அதை பெரியார்-மணியம்மை திருமணத்தை ஒரு சாக்காகக் காட்டி வெளியேறினோம்" 
என்று உண்மையைப் போட்டு உடைத்தார். 

1967 தேர்தல்  வெற்றிக்குப் பிறகு பெரியாரைச் சந்தித்த அண்ணா மணியம்மையாரை விமர்சித்தற்கு மன்னிப்புக் கேட்டு அவரின் அருந்தொண்டை பாராட்டினார். பெரியாரின் நீண்ட ஆயுளுக்கு   
மணியம்மையாரின் தொண்டே காரணம்  என்றார்.

மணியம்மையார் குறித்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குயில் இதழில் எழுதிய தலையங்கமே மணியம்மையாரின் தொண்டுக்குச் சாட்சி. 

"பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால், பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.
ஆயினும்,
காற்றிறங்கிய பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக்காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது; அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை. அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?

பெரியார் மேடை மேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஒரே ஒரு மாலையை எந்துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை. எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி _ அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தலையில் வைத்தார் என்பதுமில்லை." - 
(‘குயில்’ இதழ், 10.04.1960)

அனைவரையும் சுய மரியாதைத் திருமணம் செய்யச் சொன்ன பெரியார், மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்தது ஏன்?

மேலே சொன்னது போல பெரியார் - மணியம்மை திருமணமே ஒரு சட்டப் பாதுக்காப்பிற்குத்தான். 
1967-ல் தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே அண்ணா 
சுய மரியாதைத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்கினார். அதற்கு முன் வரை இந்துத் திருமணச் சட்டத்தின் படி சுய மரியாதைத் திருமணங்கள் செல்லாது. பெரியார் சட்டப்படி ஒரு வாரிசு அறிவிக்க வேண்டியதிருந்த காரணத்தால், ஞானம் அம்மையார் சாட்சிக் கையெழுத்துப் போட, பதிவாளர் முன்னிலையில் பார்ப்பனச் சடங்கு இன்றி மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

அறைக்குறையாகச் சில புரளிகளை நம்பிப் பெரியார் வெறும் காமத்திற்காகத் தான் தன்னை விட பல வயது குறைந்த இளம் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் என விமர்சிப்போர் ஒன்றை மட்டும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். காமத்துக்காக மட்டும் தான்   என்றால் எதற்காக இந்த திருமணத்தை பெரியார் செய்ய வேண்டும் ? யாருக்கும் தெரியாமல் இன்றைய சாமியார்களை போல் பகலுக்கு ஒரு வாழ்க்கை இரவிற்கு ஒரு வாழ்க்கை என வாழ்ந்து யார் விமர்சனத்துக்கும் ஆளாகாமல் இருந்துருக்கலாமே.?
சிந்தித்து தெளிவடையுங்கள்!.

நன்றி  vettri venthan  k

பெரியார்:
பிறப்பு :17.09.1879
இறப்பு :24.12.1973
திருமணம் :09.07.1949. 

மணியம்மை:
இயற்பெயர் : காந்திமதி
பிறப்பு :10.03.1917
தந்தை :கனகசபை
தாய்      :பத்மாவதி
இடம் : வேலூர் , தென்னார்காடு
பதிவுத் திருமணம் :09.07.1949
32 ஆண்டுகள் 4 மாதங்கள்
இறப்பு :16.03.1978


https://www.facebook.com/100012978276863/posts/pfbid08XzrtQMJSm7qZJmoyxiihABiAmU4KgKecDCZuXY5qrXnXFjb85jkuATydJYR311zl/

Friday, September 23, 2022

பயிற்சிபெற்ற தொழில்முறை ஓட்டுனராக இருந்தாலும்

RS பிரபு

ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் வரும் வழியில் நேற்று நம் வாகனத்துக்கு 30 மீட்டர் முன்பு சென்று கொண்டிருந்த மினிலாரியின் வலதுபுற டயர் வெடித்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் செல்லத் தொடங்கியது. 60 கி.மீ வேகத்தில் சீராகச்சென்ற  வண்டியை ஓட்டுனர் மிகவும் திறமையாக கையாண்டு கிட்டத்தட்ட நிறுத்திய பின்பும் அதன் தொடர் உந்தம் காரணமாக மெதுவாக கவிழ்ந்து விழுந்தது. 

அந்த ஓட்டுனருக்கு என்ன ஆனதோ என்ற பதைபதைப்பில் ஓடிச்சென்று பார்ப்பதற்குள் அவராகவே மேலே ஏறி வந்தார். எந்த காயமும் இல்லாமல் வெளியே வந்தாலும் மரணபயமும், பதட்டமும் அவரிடம் இருந்தது. குடிக்க தண்ணீர் கொடுத்து சமாதானப்படுத்தியபின் அவர் சொன்ன முதல் வாக்கியம். "நாலு நடையா இந்த ரீபில்ட்டு டயர போட்டுட்டு, கம்பெனி டயர் மாட்டச்சொல்லி அந்த தாயோலிகிட்ட சொன்னேன். கேக்க மாட்டேனுட்டான்".  

டயர் வெடித்து விபத்துக்குள்ளாகும் வாகனங்களை ஆராய்ந்தால் கண்டிப்பாக அது பாடாவதி டயராகத்தான் இருக்கும். ஒருவேளை எதிரில் ஒரு பேருந்து வந்திருந்தால் அது மிகப்பெரிய விபத்தாக இருந்திருக்கும். அங்கிருக்கும் புளியமரத்தில் மோதியிருந்தாலும் ஓட்டுனர் கடுமையாக காயமுற்றிருப்பார். 

தனியார் நிர்வாகம், efficiency, திறமை, உழைப்பு, முதலாளித்துவம், லாபம், சுரண்டல், வர்க்க சிக்கல்கள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் "நீ கம்யூனிஸ்ட்டா?" என்று அறிவாளித்தனமாக கேட்டு வைப்பார்கள். 

*அதனால் சொல்லவந்ததை சொல்லிவிடுகிறேன்:*

1) நீங்கள் எவ்வளவுதான் பயிற்சிபெற்ற தொழில்முறை ஓட்டுனராக இருந்தாலும், சாலையில் கண்டிப்பாக கவனம் தேவை. 

2) கண்டிப்பாக சீட் பெல்ட் அணியுங்கள். பலத்த காயமென்றாலும் உயிர்பிழைக்க நிறைய வாய்ப்பை அது தரும். பல அனுபவஸ்தர்கள் சொன்ன உண்மை இது.

3) வேகத்தை கட்டுபாட்டுக்குள் வையுங்கள். 80 கி.மீ. மேல் செல்லுமளவுக்கு நமது நெடுஞ்சாலைகளும் தரமானது அல்ல என்பதே உண்மை.

4) வாகனத்தை நல்ல பணிமனையில் விட்டு முறையாக பராமரியுங்கள். வாகன அலங்கார செலவுகளில் சிக்கனம் செய்யலாமே தவிர, Core maintenance என்பதில் compromise செய்யவேண்டாம்.  

5) நல்ல ஓட்டுனரின் முதல் ப்ரேக் என்பது ஆக்சிலரேட்டர்தான். சரியான கணிப்பு பயணத்தை இனிமையாக்குவதோடு எரிபொருளையும் மிச்சபடுத்தும். 

6) நீங்கள் மாதம் 3000 கிலோமீட்டருக்கு குறைவாக வாகனம் ஒட்டுபவரெனில் இரவு 10 முதல் காலை 6 வரை வாகனம் ஓட்டுவதை தவிருங்கள். பேருந்து/ரயில் பயணம் சிறப்பு. வாடகைக்கு எடுத்தாலும் கவனம் தேவை. 

7) குடித்துவிட்டு ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவுக்கு அக்கம்பத்தில் உள்ள நண்டுசிண்டுகளை தற்காலிக ஓட்டுனராக அமர்த்துவதும் ஆபத்தானது.

8)  எல்லாவற்றுக்கும் மேலாக, சாலை உங்கள் திறமையை காட்டும் இடமன்று. உங்கள் குடும்பம் உங்களை எதிர்பார்ப்பதைப்போல, சாலையில் செல்லும் அனைவருக்கும் கடமைகள் இருக்கிறது. 

Tuesday, September 13, 2022

உலகில் மதங்கள் விகிதாச்சாரம்

சூரியா சேவியர்


உலகில் மதங்கள்

1. கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி)
2. இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி)
3. நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி)
4. இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி)
5. சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி)

6. புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி)
7. பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி)
8. ஆப்பிரிக்காவின் பழைமையான மதங்கள்: 100 மில்லியன் (10 கோடி)
9. சீக்கியர்கள்: 23 மில்லியன் (2.3 கோடி)
10. ஜுக்: 19 மில்லியன் (1.9 கோடி)

11. ஸ்பிரிடிசம்: 15 மில்லியன் (1.5 கோடி)
12. ஜுடாய்சம்: 14 மில்லியன் (1.4 கோடி)
13. பஹாய்: 7 மில்லியன் (70 லட்சம்)
14. ஜைனமதம்: 4.2 மில்லியன் (42 லட்சம்)
15. ஷின்டோ: 4 மில்லியன் (40 லட்சம்)

16. கா டோய்: 4 மில்லியன் (40 லட்சம்)
17. ஜோரோஸ்டிரினிசம்: 2.6 மில்லியன் (26 லட்சம்)
18. டென்ரிக்யோ: 2 மில்லியன் (20 லட்சம்)
19. நியோ-பக்னிசம்: 1 மில்லியன் (10 லட்சம்)
20. யுனிட்ரியன்-யுனிவர்சலிசம்: 8 லட்சம் பேர்
21. ராஸ்டாஃபாரினிசம்: 6 லட்சம் பேர்
22. சயின்டாலஜி: 5 லட்சம் பேர்

இந்த ஆய்வின்படி உலகில் நாத்திகம் பேசுபவர்கள் 110கோடி பேர் உள்ளனர், உலகளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

நாத்திகர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள். இந்துக்களை விமர்சனம் செய்பவர்கள்தான் நாத்திகர் என்றில்லை. 
மற்ற மதங்களில் நடைபெறும் மூடநம்பிக்கைகளையும் மற்ற நாட்டினர் விமர்சித்தே வருகிறார்கள் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். எங்கு எது பெரும்பான்மை மக்களின் வாழ்வியலைத் தீர்மானிக்கிறதோ,
அங்கு அந்த மதம் விமர்சிக்கப்பட்டே வந்துள்ளது.

ஐரோப்பாவில் கிறிஸ்தவமும்,
அரேபியாவில் இஸ்லாமும்,
ஆசியாவில் பௌத்தமும்
விமர்சிக்கப்பட்டே வந்துள்ளது.

எங்கு ஒரு சமூகம், 
அரசையும், மதத்தையும் விமர்சிக்கத் தொடங்குகிறதோ, அச்சமூகம் முன்னேறத் துடிக்கிறது என்று பொருள்.