Monday, June 26, 2017

ஃபாசிஸத்தின் 14 தன்மைகள்

ஃபாசிஸத்தின் 14 தன்மைகள்
(தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்)

உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான உம்பேர்ட்டொ ஈக்கோ முசோலியின் ஃபாசிஸம் ஆட்சிக்காலத்தில் இத்தாலியில் வாழ்ந்தவர். ‘ஃபாசிஸ விளையாட்டு பல வடிவங்களை எடுக்கும். ஆனால் அதன் பெயர் மட்டும் மாறாது,” என்று சொன்னவர். அவர் அதனை ஊர் ஃபாசிஸம் அல்லது நிரந்தர ஃபாசிஸம் என்று அழைத்தார். அதன் 14 “பிரத்யேக” தன்மைகளைப் பட்டியலிட்டார். “இந்த தன்மைகளை ஒரு அமைப்புக்குள் ஒழுங்குபடுத்திட முடியாது. அவற்றுள் ஒன்றுக்கொன்று முரணானவை; வேறு விதமான சர்வாதிகாரத்திற்கும் வெறித்தனத்திற்கும் இதே தன்மைகள் உண்டு. ஆனால் இவற்றில் ஒரு தன்மை இருந்தால் கூடப் போதும்; அதைச் சுற்றி ஃபாசிஸம் உறைந்துவிடும்,” என்றார்.
அவர் பட்டியலிட்ட் 14 தன்மைகள்:

1. பாரம்பரியத்தை வழிபடுவது. “எந்த ஒரு ஃபாசிஸ இயக்கத்தின் பாடத்திட்டத்தை எடுத்துப் பார்த்தாலும் அதில் பாரம்பரியவாத சிந்தனையாளர்கள் இருப்பது தெரியும்.
2. பாரம்பரிய வாதம், பல்சமய நம்பிக்கைகள், நடைமுறைகளின் இணைப்பு, அமானுஷ்யம் ஆகியவற்றால் ஊட்டம் பெற்றதுதான் நாஜி ஆன்மிக அறிவு
3. நவீனத்தை மறுதலிப்பது. “அறிவொளி யுகத்தை, பகுத்தறிவு காலத்தை நவீனகால ஒழுக்கக்கேட்டின் துவக்கமாகக் காண்பது. இந்தப் பொருளை வைத்துப் பார்க்கும்போது ஊர் ஃபாசிஸம் என்பதை பகுத்தறிவுவிரோத வாதமாகப் பார்க்கலாம்.
4. ஏதாவது செய்யவேண்டுமென்பதற்காக ஒரு செயலை வழிபாடு போல் செய்வது. “செயல்பாடு என்பதே அழகுதான். அதைப் பற்றி முன்னரே யோசிக்காமல் அல்லது யோசனையே தேவையில்லையென்று செயல்படுவது. சிந்தனையென்பதே ஒருவித ஆண்மை நீக்கம் என்று நினைப்பது.
5. கருத்து வேறுபாடு என்பது துரோகம். “விமரிசனரீதியான அணுகுமுறை விஷயங்களைப் பகுத்துப் பார்க்கும். அது நவீனத்துவத்தின் அடையாளம். நவீன கலாச்சாரத்தில் கருத்து வேறுபாடு அறிவை வளர்க்கும் ஒரு வழிமுறை என்று அறிவியலாளர் சமூகம் அதனை வரவேற்கிறது.
6. வேறுபாட்டைக் கண்டு அஞ்சுவது. “ஃபாசிஸ அல்லது ஆரம்பகால ஃபாசிஸ சிந்தைனையாளர்களின் முதல் முறையீடே அழைப்பின்றி நுழைபவர்களுக்கு எதிராகத்தான். அதானல்தான் ஃபாசிஸம் என்பது இனவெறி என்று வரையறுக்கப்படுகிறது.\
7. சமூக ஏமாற்றங்களைப் பயன்படுத்திக்கொள்வது. “பொருளாதார நெருக்கடியினாலோ, அரசியல்ரீதியாக சிறுமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்கிற உணர்வுகளாலோ, சமுதாயத்தின் அடித்தட்டிலிருக்கும் மக்கள் கொடுக்கும் அழுத்தத்தை எதிர் கொள்வதினால் எழும் பயத்தாலோ வெறுப்புற்றிருக்கும் மத்தியதர வர்க்கத்தின் உணர்வுகளைத் தூண்டிவிடுவதுதான் ஃபாசிஸ வரலாற்றின் ஒரு உள்ளார்ந்த தன்மையாக இருக்கிறது.”
8. சதி நடக்கிறது என்கிற உணர்வினால் ஆட்டிப்படைக்கப்படுவது. “ஃபாசிஸத்தின் ஆதராவளர்கள் எப்போதுமே தாங்கள் ஆக்கிரமிப்பிற்குள்ளாயிருப்பது போன்ற உணர்வில் வைத்திருப்பது. இந்த சதியை வெல்லும் ஒரே எளிய வழி அன்னியர்களுக்கு எதிரான வெறி.
9. எதிரி ஒரு சேர வலுவானவானகவும், வலுவற்றவனாகவும் இருக்கிறான். “எதிரிகள் வலுவானவர்கள் என்றும் அதே நேரத்தில் பலவீனமானவர்கள் என்றும் உரையை மாற்றி மாற்றிப் பேசுவது”
அமைதி வழி என்பது எதிரியுடன் வியாபாரம் செய்வது போன்றது. “ஃபாசிஸத்திற்கு வாழ்க்கைக்கான போராட்டம் என்பது இல்லை. போராடுவதற்கென்பதே வாழ்க்கை.”
10. எளிய பிரிவினரை இகழ்ச்சியாகப் பார்ப்பது. “மேட்டிமைத்தனம்: என்பது அனைத்துப் பிற்போக்குத் தத்துவங்களின் உள்ளார்ந்த அம்சம்.”
11. எல்லோரும் சூரர்களாக (ஹீரோவாக) வேண்டும் என்று போதிப்பது. “சூரத்தனம் என்பது ஃபாசிஸத்தின் அடிப்படை விதிமுறை. சூரத்தன வழிபாடு என்பது மரண வழிபாட்டுடன் கறாரான தொடர்புள்ளது.
12. அதிதீவிர ஆண்மை மற்றும் ஆயூத விளையாட்டு. “அதிதீவிர ஆண்மை என்பது பெண்கள் மீதான் கடும் வெறுப்பு; ஓரினச் சேர்க்கை போன்ற வேறு பட்ட பாலியல் முறைகளை ஏற்றுக் கொள்ளமல் கண்டிப்பது.” நிரந்தரப் போரையும் சூரத்தனத்தையும் தொடர்ந்து நடத்துவது கடினம். அதனால்தான் ஊர் ஃபாசிஸ்டு பாலியல் விஷயங்களுக்குத் தன் மனோசக்தியைத் திருப்பிக்கொள்கிறான். ஆனால் பாலியல் என்பதும் ஒரு கடினமான விளையாட்டாக இருப்பதால் ஆயுதங்களைக் கொண்டு விளையாடுகிறான்.
13. தேவைக்கேற்ற படி மக்கள் ஆதரவு நிலை. ”எதிர்காலத்தில் தொலைக்காட்சியிலும் இணையதளத்திலும் இது நடக்கும். (இது 1995இல் எழுதப்பட்டது). ஒரு குறிப்பிட்ட பிரிவு குடிமக்களின் உணர்வுகளை ஒட்டு மொத்த மக்களின் குரலாக பிரதிநிதித்துவம் செய்வது.
14. ஊர் ஃபாசிஸம் நியூஸ்பீக் மொழி பேசுகிறது. “சிக்கலான விமரிசனப்பூர்வமான பகுத்தறிவுக் கருவிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் சொற்களின் வறுமையும் பாமரத்தனமான தொடக்கநிலை சொற்றடொர்களையும் அனைத்து நாஜி, ஃபாசிஸ்டுப் பாடப்புத்தகங்கள் பயன்படுத்துகின்றன.

(நீண்டதொரு கட்டுரையின் மிகச் சுருக்கமான வடிவமே இது. கருத்துக்களை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள அக்கட்டுரையைப் படிப்பது நல்லது. அதன் சுட்டி:
http://www.nybooks.com/articles/1995/06/22/ur-fascism/)

புலிகளை திட்டி பேட்டி கொடுத்தார் எம்.ஜி.ஆர

Don Ashok
Via Facebook
2017-06-26

கேள்வி:  டெல்லி ஆட்சியாளர்களுக்கு அதிமுகவின் மூன்று அணிகளும் இப்படி பல்லக்கு தூக்குகின்றார்களே கொஞ்சம் கூட வெட்கம் இருக்காதா? 

பதில்: இந்த மாதிரி கேள்விகளெல்லாம் அதிமுகவின் வரலாறு தெரியாததால்தான் கேட்கத் தோன்றுகிறது.  மிசா சட்டத்தை ஆதரித்து கட்சிப் பொதுக்குழுவில் தீர்மானம் போட்ட ஒரே வீராதிவீரர் இந்தியாவிலேயே எம்.ஜி.ஆர் மட்டும்தான்.  இந்திராகாந்தி புலிகளுக்கு பிஸ்கட் போட்டுக் கொண்டிருந்தவரைக்கும் அதே புலிகளுக்கு தண்ணி வைத்துக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். புலிகளுக்கு எதிரான நிலைப்பாடுள்ள ராஜீவ் வந்ததும் அமெரிக்க ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பார்த்தசாரதிக்கு புலிகளை திட்டி பேட்டி கொடுத்தார் எம்.ஜி.ஆர். பாஜகவின் கரசேவைக்கு ஆள் அனுப்பியவர் தான் ஜெயலலிதா. இன்று அந்த பாரம்பரியம் அதிமுகவில் தொடர்கிறது.
என்ன ஜெ நீட் போன்ற தமிழகத்தில் அவர் செல்வாக்கை பாதிக்கும் விஷயங்களிலாவது கொஞ்சம் இறுக்கமாக இருந்தார். இப்போதிருக்கும் அடிமைகள் ஒட்டுமொத்தமாக படுத்தே விட்டார்கள்.

மற்றபடி அதிமுக என்பதே டெல்லி முதலாளிகளால் திமுகவை காலி செய்ய ஆரம்பிக்க வைக்கப்பட்டதுதான். ஆனால் அந்தக் கணக்கு தப்பாகப் போய் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது என்பதால் அதிமுக எனும் அடியாள் இங்கு முதலாளி ஆகிவிட்டார். மற்றபடி அதிமுக தலைமை யார் மாறினாலும் டெல்லியிடம் இருக்கும் பழைய பயமும், விசுவாசமும் அப்படியேதான் இருக்கும்.

Sunday, June 25, 2017

இடஒதுக்கீடு - எங்களை மட்டும் 1000 மீட்டர் ஓடச் சொல்றீங்க

Aj Nirmal
Via Facebook
2017-06-25

சார் எங்களை மட்டும் 1000 மீட்டர் ஓடச் சொல்றீங்க .

ஆனா அவன் SC ங்குறதால அவன மட்டும் 800 மீட்டர் ஓடுனா போதும்னு சொல்றீங்க?

என்ன சார் நியாயம் இது ?

நியாயம் இருக்கட்டும் . அவன் கால்ல கட்டு போட்டுருக்கானே என்ன ஆச்சு?

போன வாரம் டீக்கடையில் எங்களுக்கு சமமா சேர்ல உட்கார்ந்துட்டான் சார் .

அதான் அவன் காலை உடைச்சி விட்டுட்டேன்.

ஏன்டா நாயே உனக்கு சமமா உட்கார்ந்துட்டான்னு காலை உடைச்சி விட்டுட்டு இப்ப உனக்கு சமமா ஓடச் சொல்றீயே ?

எப்படி ஓடுவான் ?

நீ என்ன காரணத்தை சொல்லி அவன் காலை உடைச்சி விட்டியோ ,,

அதே காரணத்தின் அடிப்படையில் தான் அவனுக்கு இந்த நீதி வழங்கப்பட்டிருக்கு புரிஞ்சதா?

15,00,000 பணத்தை உடனடியாக எனது வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி வேண்டுதல்

அனுப்புநர்.        
இந்திய குடிமக்கள்

பெறுநர்
மாண்புமிகு மோடி அவர்கள்,
இந்தியப் பிரதமர்
புதுதில்லி.

நாள் - 14.06.2017

*பொருள் -*
தாங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த ரூ 15,00,000 பணத்தை உடனடியாக
எனது வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி வேண்டுதல்:-

அய்யா வணக்கம்,
இப்பவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் பிரதமராகப் போட்டியிட்டுப் பெருமைக்குரிய வெற்றியை ஈட்டினீர்கள்..

மூன்று முறை சென்னையில் அப்போது பரப்புரை செய்தீர்கள்.

அந்த மூன்று கூட்டத்திலும் ,
*"நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடிக் கறுப்புப் பணத்தை மீட்பேன் !*

மீட்டவுடன் *ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கில் ரூபாய் பதினைந்து லட்சம் செலுத்துவேன்* என்றீர்கள் !

அதையும் *நூறே நாளில் தருவதாக*ப் பொது மேடையில் வாக்குறுதி அளித்தீர்கள் !

உங்களைத் தொடர்ந்து பேசியவர்களும் அதை ஆமோதித்தார்கள் !

இந்தியா முழுவதும் இதைச்சொல்லியே பரப்புரை செய்தீர்கள் !

பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி செய்கிறீர்கள் !

நீங்கள் *வாக்குத்தவறாத பிரம்மச்சாரி* என்று எங்கள் ஊர் எச்.ராஜா அவர்களும் பலமுறை கூறியுள்ளார்.

ஐயா ,

நீங்கள் பிரச்சார மேடையில் இருந்து கீழே இறங்கிய அடுத்த நொடி ,

உங்கள் வாக்குறுதியை நம்பி *பதினைந்து இலட்சம் கடனாகப் பெற்றுவிட்டேன் !*

வட்டி கொடுத்து என்னால் சமாளிக்க முடியவில்லை.

நூறுநாளில் தருவதாக,
தங்கள் வாக்குறுதியை நம்பிக்
கடன் வாங்கி விட்டேன்.

100 நாள் இப்போது 1000நாளாகி விட்டது !

ஐயா நீங்கள் மானஸ்தன் !

பலமுறை உங்களைத் தொடர்பு கொண்டேன்.
நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள் !

*நீங்கள் கறுப்புப் பண மீட்பில் இருந்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் !*

எனக்குக்
கடன் தந்தவர்களும் அதை நம்பினார்கள் !

ஆனால்,
கடந்த சில மாதங்களாகக் கறுப்புப் பண விவகாரம் குறித்துப் பேச மறுக்கிறீர்கள்.

உங்கள்
*மன் கீ பாத்திலும் பதினைந்து லட்சம் பற்றிப் பேச மறுக்கிறீர்கள்!*

உங்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் ,
எனக்குப் பணம் கொடுத்தவர்களைச் சமாளிக்க இயலவில்லை .

அதில் பல வங்கிகளும் அடக்கம்.

உங்கள் *அருண்ஜெட்லி , வாராக் கடன் வசூல்களை வேறு தீவிரப்படுத்தி உள்ளார் !*

ஜி...
விஜயமல்லய்யாவைப் போல் நான் ஓடி ஒளிபவன் அல்ல !

என் நேர்மையை வங்கிகள் சந்தேகிப்பதில் எனக்குக் கவலை இல்லை !

அதன் மூலம் உங்கள் *நேர்மையையும் அவர்கள் சந்தேகிப்பதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை !*

எங்கள் வீட்டில் மொத்தம் 4 பேர்.

நாங்கள் அனைவரும் உங்களுக்கே வாக்களித்தோம்.

மொத்தம் *நீங்கள் எமக்குத் தரவேண்டிய தொகை 60 லட்சம் !*

வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்கே

வாக்களிப்போம். இது உறுதி !

உடனடியாகக் கீழ்க்காணும்
எனது
*வங்கிக் கணக்கில் ரூபாய் அறுபது லட்சத்தை சேர்க்கவும் !*

இது அவசர வேண்டுகோள் ஐயா !

*நல்லவேளை நான் விவசாயி இல்லை..*

பத்திரிகையாளன் . இந்நேரம் கடனுக்காக என்
*கை காலை முறித்திருப்பான்  வங்கி அடியாள் !*

ஐயா..

ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த இந்தியர்களும் பணத்தைக் கேட்டால் என்ன செய்வீர்கள் ?

தயவுசெய்து
*உடனே பணத்தைப் பட்டுவாடா செய்யுங்கள் !*

வரும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நீங்கள் சென்னை வரும்போது *நமக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே இருக்கக்கூடாது !*

ஜெய்ஹிந்த்..

ஸ்வச் பாரத்...

ஆப் கி மோடி சர்கார்
நமஸ்கார்...

*இணைப்பு -*
தலைக்குப் பதினைந்து இலட்சத்தை
100 நாளில் தாங்கள் தருவதாக உறுதி அளிக்கும் காணொலி.

*குறிப்பு -*
ஜி ...
இதுகுறித்து ப் பலமுறை உங்கள் முகநூல் இன்பாக்சில் தகவல் அனுப்பியுள்ளேன்..

*முக்கியக் குறிப்பு -*

ஐயா இக்கடிதத்தைப் பகிரும் *என் நண்பர்கள் வங்கிக் கணக்கிலும்* 15,00,000 செலுத்தவும் .

அதன் மூலம் இரண்டு இலாபம் !

ஒன்று...
எனக்கு கமிசன் கிடைக்கும் !

இரண்டு...
உங்க கட்சிக்கு டெபாசிட்டாவது கிடைக்கும்..!

நன்றி

பார்ப்பண மதம் ஒரு பார்வை

Chidambaram Periyasamy
Via Facebook
2017-06-25

பார்ப்பண மதம் ஒரு பார்வை

1.யார் அதிக அதிகாரம் படைத்தவர்கள் என்கிற கேள்விக்கு ராமாயணம் சொல்லும் பதில் பிராமணர்கள்

அதாவது பிராமணர்களின் அதிகாரம் என்பது மன்னர்களை விட அதிகமானது என்கிறது அயோத்தியா காண்டம் 111/17

2.சரி அந்த அதிகாரத்தை பெற அவர்கள் போர் செய்யலாமா என்றால் தேவையில்லை

பசு பெண் பார்ப்பணர்கள் மூவரையும் போரில் தாக்கக் கூடாது என்கிறது புறநானூறு 9 ( ரொம்ப சரியான நம்பர் தான்)

சுருக்கமாக சொன்னால் அதிகாரம் வேண்டும் ஆனால் போர் என்று வந்தால் பாவாடைக்குள் ஒளிந்து கொள்ளும் சிறப்பு சலுகையை அவாளுக்கு கொடுக்கிறது சாஸ்த்திரங்கள்

3.திருவிளையாடல் புராணத்தில் ஒரு காட்சி வரும் ஒரு பார்ப்பணர் தன் தாயை புணர்ந்து தந்தையையும் கொலை செய்து விடுவார்

அவருக்கு சிவபெருமான் நேரடியாக காட்சி தந்து கொடுக்கும் தண்டனை சில நாட்கள் பிச்சை எடுத்து உண்ணுவது

தாயை புணர்ந்து தந்தையை கொன்ற பாவமே மூன்று மாத பிச்சையில் முடிவுக்கு வருகிறது

பார்ப்பணருக்கு இது போன்ற கொலைக்கு பாவம் தீர்க்க பிச்சை எடுக்க வேண்டும் என்கிறது மனு 11/72

4.அசுவத்தாமன் பாண்டவர்களின் குழந்தைகளை கொன்றதற்கு அவனை கொலை செய்ய வேண்டுமென்று துடிக்கும் பாண்டவர்களுக்கு

தர்மப்படி அவருக்கு தண்டனை வழங்க வேண்டுமென்று சொல்கிறார் கிருஷ்ணன் பாகவதத்தில்

தர்மப்படி மற்றவர்களுக்கு மரண தண்டனை என்றால் பார்ப்பணர்களுக்கு தலைமுடியை எடுத்தால் போதும் என்கிறார் பகவான் கிருஷ்ணன் ஸ்ரீமத் பாகவதம் 1/7/57

அதிகபட்ச தண்டணை என்பது மற்றவர்களுக்கு உயிரை எடுப்பது பார்ப்பணர்களுக்கு மயிரை எடுப்பது என்கிறது மனு 8-379

5.ராமன் சம்பூகனை கொலை செய்வதற்கு
காரணம் அவன் சூத்திரன் என்பதே போதுமானதாக இருந்தது இராமாயணம் உத்திர காண்டம் 75-4

மனு கூட மேல் குலத்தான் தொழிலை கீழ் குலத்தான் செய்தால் அவன் பொருளை தான் பிடுங்க சொல்கிறது மனு 10-85

ஆனால் ராமன் ஒரு படி மேலே போய் சூத்திரன் உயிரையே எடுக்கிறான்

அதாவது தாயை புணர்ந்தவனுக்கு தண்டனை மூன்று மாதம் பிச்சை எடுப்பது

கொலை செய்தவனுக்கு தண்டனை மயிரை புடுங்குவது

ஆனால் கோவிலுக்குள் நுழைந்தவனுக்கு தண்டனை உயிரை எடுப்பது

காரணம் முன்னது கொடிய குற்றம் என்றாலும் செய்தது பார்ப்பணர் பின்னது குற்றமேயில்லை என்றாலும் செய்தது சூத்திரன் அதாவது இன்று பூனுல் போடாத சமூக பிரிவினர்

இதற்கு எல்லாம் மகுடம் வைத்தது போல் மகா பெரியவர் தன் தெய்வத்தின் குரலில் ஒரு தந்தை தன் குலம் மேன்மை அடைய வேண்டுமானால் தன் மகளை பருவம் அடைந்தவுடன் பார்ப்பனருக்கு கூட்டிக் கொடுக்க வேண்டும் என்பார்

இதையே தான் மனுவும் சொல்கிறது அதாவது சூத்திரன் பார்ப்பனரின் வைப்பாட்டி மகன் என்கிறது மனு 8-415

இத்தனைக்கும் பிறகும் ஒருவன் இந்த மதத்தை பார்ப்பண மதம் என்று சொல்லாமல் இந்து மதம் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வானேயாயின்

மகாத்மா ஜோதிராவ் பூலேயின் இந்த வரிகளை சமர்ப்பணம் செய்கிறேன்

சூத்திரன் தன் அறியாமையால் பார்ப்பனர்களின் காலை நக்கி நன்மை பெற முயல்கிறான்

நல்ல பட்டம்-- பார்ப்பண கால் நக்கி

Wednesday, June 21, 2017

பெயரில் சாதிய பின்னொட்டுக்களைத் தவிர்ப்பதைப் பற்றி இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் இப்போதாவது பரிசீலிக்க வேண்டும

Kanakaraaj karuppaiyaa
Via Facebook
2017-06-21

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் ரவிக்குமார் Ravi Kumar தன்னுடைய டிவிட்டரில் “பெயரில் சாதிய பின்னொட்டுக்களைத் தவிர்ப்பதைப் பற்றி இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் இப்போதாவது பரிசீலிக்க வேண்டும்” என்று தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.

கம்யூனிஸ்ட்டுகளுக்கு பல அடையாளங்கள் இருக்கிறது. இதோ இந்த கீழே உள்ள படத்தில் ஆண்களும், பெண்களுமாய் அணிதிரண்டு கடந்த 9-ந் தேதி சேலத்தில் தொடங்கி இன்று வரை ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் கொண்டு வா  என்ற ஒற்றைக் கோரிக்கையோடு 350 கி.மீ. நடந்தே வந்திருக்கிறார்கள். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, இன்றோடு 13 நாட்கள். இவர்களில் தமிழகத்தில் உள்ள பல சாதிகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் தீண்டாமைக்கு எதிராக, ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக, சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடந்து வருகிறார்கள். இது தான் எங்கள் அடையாளம்.

ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி ஆண்களும், பெண்களும் தங்களது வாரிசுகளோடு சாதி பேதமில்லாமல் குலசாமி கோவிலுக்கு போவது போல வெண்மணிக்கு காவடி எடுத்துக் கொண்டும், பொங்கல் வைத்தும் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்ததை போல எல்லா சாதியினரும் வருகிறார்களே அது எங்கள் அடையாளம்.
கட்சி தலைவர்களில் பலரும் அவர்களின் குடும்பத்தின் வாரிசுகளும் சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் எல்லாவிதமான சடங்குகளையும் தாண்டி திருமணம் செய்து கொள்கிறார்களே அது எங்கள் அடையாளம்.

இளவரசனோ, கோகுல் ராஜோ, சங்கரோ இன்னும் இன்னுமாய் சாதி ஆதிக்கத்தால் வீழ்த்தப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் துடிக்கிற கட்சியிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்காமல் தானே ஓடிப்போய் முன்நிற்கிற படித்த, படிக்காத கைநாட்டுகளாக இருக்கிற கிராமத்து ஏழை, எளிய மனிதர்கள் எங்கள் அடையாளம்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஏதோ ஒரு ஊரில் அவருடைய தாய் தந்தையர்கள்  வைத்த பெயரை மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்காக கம்யூனிஸ்ட் கற்பு கெட்டுப்போய்விட்டதாய் சொல்லிக் கொண்டிருப்பதை தோழர் ரவிக்குமார் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரபலபடுத்திக் கொண்டேயிருக்கிறார்.

ரவிக்குமார் என்கிற பெயருக்கு சூரியனின் மகன் என்று பொருள். திருமாவளவன் என்பதற்கு நான் பொருள் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கனகராஜ் என்பதும் மதம் கடந்த பெயரல்ல. ஈ.வெ.ரா. பெரியாரின் பெயர் ராமசாமி நாயக்கர் என்று ஒருவர் சொல்லிக்கொண்டு அவர் ஏன் ராமசாமி என்கிற கடவுள் பெயரை மாற்றவில்லை, நாயக்கர் என்ற சாதிப் பெயரை தூக்கிப்போடவில்லை என்று கேட்பது எத்தனை பொருள் உடையது என்பதை தோழர் ரவிக்குமாரின் பரிசீலனைக்கே விட்டுவிடுகிறேன்.
சிறிது காலமாய் யெச்சூரி என்பது சாதிப் பெயர் என்று வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் சொல்லி வந்த பல பேர்கள் இருக்கிறார்கள். அது ஊர்ப்பெயர் என்று தெரியாது கம்யூனிஸ்ட்டுகள் மீதான குரோதத்தால் மட்டும் புனையப்பட்ட கதைகள் அவை.

சில மாதங்களுக்கு முன்பு அதாவது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சில தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு இவர் அந்த சாதி, அவர் இந்த சாதி என்று எழுதியிருந்தார்கள். அவற்றில் சில உண்மையும், பொய்யும் கலந்திருந்தது. ஒரு பத்திரிகையாளரிடம் அழைத்துச் சொன்னேன். தோழர் ஜி. ராமகிருஷ்ணன் நீங்கள் எழுதியிருப்பது போல நாயுடு சமூகத்தைச் சார்ந்தவர் அல்ல அவர் திருமணம் செய்திருப்பது அவர் எந்த சாதியில் பிறந்தாரோ அந்த சாதியைச் சார்ந்தவரல்ல. அவருடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்திருப்பது ஜி.ஆர். அவருடைய மனைவி இவர்களின் இருவரின் சாதியோடும் சம்பந்தப்பட்டதல்ல என்றெல்லாம் சொன்ன பிறகு கூட அவர் அதை மாற்ற அருள்பாலிக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு அப்போது வைகோ, விஜயகாந்த் இவர்களின் தாய்மொழி எதுவோ அது தான் தோழர் ஜி.ஆர்.ன் தாய்மொழி என்று எப்படியாவது நிரூபிக்க வேண்டுமென்பது நோக்கமாக இருந்தது.

தோழர். அ. மார்க்ஸ் அந்த பதிவைச் சுட்டிக்காட்டி அவர் அந்த சாதியாக இருந்தாலும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு சாதியில்லை என்று எழுதியிருந்தார். அவரிடம் நான் சொன்னேன் தோழர் ஜி.ஆர். மீது சாட்டப்பட்டுள்ள சாதிக்கும், அவருக்கும் சம்பந்தமில்லை என்று. அவருடைய தாய் மொழி தமிழ் தான் என்று தான் கூறினேன். அப்புறம் எதற்கு இப்படி எழுதுகிறார் என்கிற கவலையை பகிர்ந்து கொண்டார்.

தோழர் சுர்ஜித் தாடி வைத்திருப்பதையும், தலைப்பாகை கட்டியிருப்பதையும் கூட கேள்வி கேட்டவர்கள் உண்டு. மழித்தலோ நீட்டலோ ஒரு அடையாளம் தான். அப்படியென்றால் யாருடைய அடையாளத்தை வைத்துக் கொள்வது. என்னைப் போல் நீ இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பெயர் என்ன. நான் என் வழக்கப்படி முடிவெட்டிக் கொண்டால் அதே வழக்கப்படி நீ முடிவெட்டிக் கொள்ளவில்லையென்றால் உனக்கு நான் இன அடையாளம் பூசுவேன் என்றால் பகத்சிங்கும் சீக்கியன் தான். நான் ஏன் நாத்தீகன் ஆனேன் என்று அவன் எழுதியது லட்சோப லட்ச இளைஞர்களை சென்றடைந்திருக்கிறது. அவனை உங்களைப் போல் கிராப் வெட்டிக் கொள்ள நீங்கள் கட்டாயப்படுத்துவது என்ன நியாயம் என்று புரியவில்லை.

தோழர் சுர்ஜித்தின் அடையாளம் சிறுவனாக இருந்த போது அரசு அலுவலகத்திலிருந்த யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு துப்பாக்கி குண்டும் சுற்றிலும் பாய்ந்து கொண்டிருக்கும் போது மூவர்ணக் கொடியை ஏற்றி விட்டு வந்த அடையாளம் தான். தோழர் சுர்ஜித்தின் அடையாளம் என்பது திருமணமான அன்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டு இருட்டுக் கொட்டடியில் அடைக்கப்பட்டு வெளியே வரும் போது பார்வை இழந்து, மனைவியை கூட இவர்தான் உன் மனைவி என்று அடையாளம் காட்டும் வகையில் அமைந்தது தான் எங்கள் அடையாளம்.

பள்ளிப்பாளையம் வேலுச்சாமியை தெரியுமா? அவர் வெட்டிக் கொல்லப்பட்டு விட்டார். ஏன் தெரியுமா? ஒரு அருந்ததிய பெண்ணுக்கு திருமணம் நடத்துவதற்காக அந்த பெண்ணின் தந்தை ஒருவனிடம் வட்டிக்கு பணம் வாங்குகிறார். அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை அதற்காக கர்ப்பிணியாக இருந்த பெண்ணை நிர்வாணமாக்கி மிக மோசமாக படமெடுத்து இனைய தளத்தில் பிரசுரித்தான் ஒரு கயவன். அவன் வேலுச்சாமியின் சாதிக்காரன். இன்னும் சொல்லப்போனால் சொந்தக்காரன். ஆனால் வேலுச்சாமி என்கிற அந்த செங்கொடிக்காரன் அந்த பெண்ணுக்கு நியாயம் கேட்டதால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டான். இது தான் எங்கள் அடையாளம். அவன் செத்த பிறகு அவன் குழந்தையின் பெயர் என்ன, அவன் இருக்கும் போது என்ன சாப்பாடு சாப்பிட்டான் அசைவமா, சைவமா என்பதையெல்லாம் வைத்துக் கொண்டு அவனுக்கு ஒரு அடையாளம் பூசாதீர்கள். செயல்பாடுகளை கொண்டு தான் தீர்மானிக்க முடியுமே தவிர ஏழை பங்காளன் என்று பெயர் வைத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று தோழர் ரவிக்குமார் நினைக்கிறாரா என்று தெரியவில்லை.

ஏறத்தாழ 350 கிலோ மீட்டர் நடந்து வந்து வருகிற வழியெல்லாம் விசிக, ஆதிதமிழர் கட்சி, பல்வேறு தலித் இயக்கங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் பொங்கி அளித்த உணவுகளை அருந்திக் கொண்டே இதோ எங்கள் தோழர்கள் தாம்பரம் வந்தடைகிறார்கள். இது போன்ற தருணங்களில் எல்லாம் தோழர் ரவிக்குமாரின் முன்னொட்டு, பின்னொட்டு விவாதங்கள் முன்னுக்கு வருவது வழக்கமாய் இருப்பதை சற்று கவலையோடு பார்க்க வேண்டியிருக்கிறது.