Saturday, November 10, 2018

நீதிபதி ராஜ மன்னார் குழு மத்திய மாநில அரசு உறுவுகள் குறிந்து பரிந்துரைகளி

பழூரான்
2018-11-10

நீதிபதி ராஜ மன்னார் குழு மத்திய மாநில அரசு உறுவுகள் குறிந்து பரிந்துரைகளில் என் பார்வையில் மிக முக்கியமானவை:

* 304 (பி) நீக்கப்பட வேண்டும் அது என்ன 304(பி) மாநில அரசு இயற்றும் அதாவது மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டவரைகளுக்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற பிரிவு  நீக்கப்பட வேண்டும்.

* பொதுப்பட்டியலின் வரம்புக்குள் உள்ள விவகாரங்களுக்கு மத்திய அரசு இயற்றும் சட்டத்தைவிட மாநில அரசு இயற்றும் சட்டமே மேலோங்கி இருக்கவேண்டும் .. அதற்கு 254 ஆ பிரிவு திருத்தப்பட வேண்டும்.

* மாநில அரசுகளுக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரங்களான 256.,257 , 339(2),334(6) போன்ற பிரிவுகள் நீக்கப்பட வேண்டும் .. அத்தகைய அதிகாரம் எதுவும் மத்திய அரசிடம் இருக்க கூடாது .

* இதற்கு மாற்று ,,? அனைத்து மாநிலக் குழு (Inter state council )  எல்லா முதல் அமைச்சர்களும் அல்லது முதல்வரின் பரிதிநிதிகள் கொண்டு அனைத்து மாநில குழு உருவாக்கப்பட வேண்டும் அதன் தலைமை பிரதமராக இருக்க வேண்டும் . மத்திய அமைச்சர்கள் யாரும் அந்த குழுவில் இடம் பெற கூடாது .  நாட்டின் பாதுகாப்பு , அயல்நாட்டு ஒப்பந்தம் , நாணய செல்வானி, பொதுப்பட்டியில் இருக்கும் விவகாரங்கள் அனைத்தும் அனைத்து மாநில குழுவில் விவாதிக்க படவேண்டும் .. Inter state will council  மாநில அரசையும் மத்திய அரசையும் கட்டுபடுத்துவதாய் இருக்க வேண்டும்.

* தற்போது உள்ள 263 வது பிரிவில் சொல்லப்பட்டுள்ள அனைத்து மாநில குழு பயன்ற்றது .அதனால் எந்தவித பலனும் கிட்டாது .

* நிதி ஆணைக்குழு : அரசியல் அமைப்பில். உத்தேசிக்கப்பட்டுள்ள நிதி ஆணைக்குழு என்பது மாநிலங்களின் நிதி வாயில்களையும் தேவைகளை மட்டுமே பரிசளிக்கிறது .. ஆனால் மத்திய மாநில அரசின் நிதி தேவைகளை பரசிளிக்க வேண்டும் .  நிதி ஆணைக்குழு என்பது நிலையான அமைப்பாக செயல்படவேண்டும்.. அனைத்து மாநில குழுவின் பரிந்துரையின் பெயரில் நிதி அணைக்குழுவில் உறுப்பினர்கள் நியமிக்க பட வேண்டும். நிதி ஆணைக்குழுவின் பரிந்துரையை மத்திய மாநில அரசுகளை கட்டுபடுத்தும் அதிகாரம் இருக்கும் படி சட்டதிருத்தம் செய்ய வேண்டும் .

* திட்டக்குழு : தற்போது மாநில அரசிற்கு நிதி எப்படி வருகிறது ? இந்த திட்டகுழுவின் வரலாறு என்ன? 1917 சோவியத் யூனியன் வேளான் துறையில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது .இந்த குறைகளை சீர் செய்ய சமதர்ம சிற்பியான லெனின் தான் திட்டமிடுதலுக்கு ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்தார் . திட்டகுழுவை உறுவாக்கினார் . குறுகிய காலகட்டத்திற்குள் சோவியத் யூனியன் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை சந்தித்து .

* தற்போது மாநில அரசிற்கு நிதி எப்படி வருகிறது ? 12 வது நிதி குழுவிற்கு முன்பு வரை 70 % கடனாகவும். 30% மானியமாகவும் தரப்பட்டது .  12 வது நிதி குழுவிற்கு பின்பு மத்திய அரசு மாநில அரசிற்கு கடன் தரும் முறையை நிறுத்துக் கொண்டது . கடனை வெளி சந்தையில் பெற்றுக்கொள்ளலாம் என்ற நடைமுறைக்கு வந்தது . ஆனாலும் ஏற்கனவே மத்திய அரசிடம் பெற்ற நிதி சுமை இன்னும் உள்ளது .

* 12 வது நிதி குழுவின் விதி Fiscal Responsibility and Budget Management Act  என்ன என்றால் மாநிலத்தின் ஒட்டு மொத்த வருமானத்தில் (gsdp - Gross State Domestic Product) 3 விழுகாட்டிற்கு மேல் இருக்கக்கூடாது என்ற விதி பிறப்பித்தது .

* தற்போது தமிழ்நாட்டில் உள்ள fiscal deficit எவ்வளவு 40,530 .. கிட்டதட்ட 3% தாண்டிட்டுட்டோம்.. இந்தாயவிலே நிதி பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழ் நாடு மூன்றாவது இடம்.

* சட்டப்படி அமைக்கப்படும்  திட்ட குழு என்பது மத்திய அரசு கட்டுபாட்டிலோ,அரசியல் கட்சி சார்புள்ளதாகவோ இருக்கக்கூடாது . அமைச்சர்கள் யாரும் திட்டகுழுவில் உறுப்பினராக இருக்க கூடாது .. யார் இருக்கலாம் வல்லுனர்கள் மட்டுமே இருக்க வேண்டும். பொருளாதார , அறிவியல் , தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமே இருக்க வேண்டும் .. திட்ட குழுவினர் பணி மாநில அரசில் தொடங்கும் திட்டங்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் . நிதி ஆணைக்குழு மானியங்களுக்கு பரிந்துரையை செய்யும் போது திட்டக் குழுவின் பரிந்துரையையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ராஜமன்னார் குழு பரிந்துரைத்த மாநில சுயாட்சி கோட்பாடுகள் மறுமொழியில். படித்துவிட்டு தங்கள் பார்வையில் மிக முக்கியமான பரிந்துரைகளை என்ன என்று பதிவிடலாம்.

https://m.facebook.com/story.php?story_fbid=2487739547919956&id=100000518043474

Thursday, November 8, 2018

அறிஞர் அண்ணாவின் 24 உரைகள். ஒலிப்பதிவாக.

அறிஞர் அண்ணாவின் 24 உரைகள். ஒலிப்பதிவாக. இது ஒரு தங்கப் புதையல். பகிர்வுக்கு நன்றி.  Fuzail Ahmad

பெரியார், கலைஞர், அண்ணா உரைகள் மிக அரிதாகவே இணையத்தில் கிடைக்கின்றன. வாழ்நாள் முழுதும் பேசித் தீர்த்தவர்களுக்கு இது மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம். உங்களிடம் இவர்கள் உரைகள் இருந்தால் தயவு செய்து இணையத்தில் பதிவேற்றுங்கள்.

https://drive.google.com/drive/mobile/folders/1_p_EQhOY9owoKpRLK7tLaiakMEdRhfW1?usp=sharing

https://m.facebook.com/story.php?story_fbid=10158054568773569&id=576438568

காந்தியைப்பற்றி ஏழு அவதூறுகள்: பூ. கோ. சரவணன்

பூ. கோ. சரவணன்
Via facebook
2018-01-30

https://m.facebook.com/story.php?story_fbid=1385071061523966&id=100000632559754

காந்தியைப்பற்றி ஏழு அவதூறுகள்:

காந்தி என்றதும் என்ன ஞாபகம் வருகிறது உங்களுக்கு ? அவர் ஜாதியை வாழ்நாள் முழுக்க ஆதரித்தார்,அவர் போஸ், பகத் சிங்குக்கு துரோகம் செய்துவிட்டார். அவர் பழமைவாதி, அவர் சிந்தனைகள் இன்றைக்கு பொருந்தாது, காந்தி தான் இந்தியப்பிரிவிணைக்கு காரணம். எல்லாம் இருக்கட்டும். இதில் எவை உண்மை என்று தேடியிருக்கிறீர்களா? ஒரு பத்து நிமிடங்கள் மனதைத்திறந்து வைத்துக்கொண்டு தேடலாம் வாங்கள்.

காந்தி ஒரு தீவிர இந்து :

காந்தி இந்து மதக்கோட்பாடுகளால் மட்டும் கவரப்பட்டவர் அல்ல. அவர் சமண மதத்தின் கருத்துக்கள், கிறிஸ்துவத்தின் அன்புநெறிகள், இஸ்லாமின் கருத்துக்கள் ஆகியவற்றாலும் செதுக்கப்பட்டவர். எல்லா மதத்தில் உள்ள தீயனவற்றை நிராகரிப்பது நம்முடைய கடமை என்று அவர் கருதினார். கோயில்களுக்கு இவ்வளவு செலவு செய்வது ஏன் ? அவை வேசியர் விடுதிகள் போலத்தான் இருக்கின்றன என்றார் அவர்.

தேவதாசி முறை ஒழிப்புக்கு அவர் குரல் கொடுத்தார். தன்னுடைய ராமன் அயோத்தி ராமனில்லை என்று தெளிவுபடச்சொன்னார். குதாயீத் ராஜ்ஜியம் என்று இஸ்லாமியர்கள் முன்னரும்,கர்த்தரின் ராஜ்ஜியம் என்று கிறிஸ்துவர்கள் மத்தியில் இருக்கும் பொழுதும் சொல்வேன் என்றும் காந்தி குறிப்பிட்டார்.

காந்தி வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடித்தவர்:

காந்திக்கு ஜாதி அமைப்பு பற்றிய புரிதல் படிப்படியாக மாறியது என்பதே உண்மை. அவர் ஆரம்பக்காலங்களில் வர்ணாசிரமம் இத்தனை காலம் உயிர்த்திருக்க எதோ காரணம் இருக்க வேண்டும் என்று நம்பினார். காலப்போக்கில் தன்னுடைய கருத்துக்களை மாற்றிக்கொண்டார். "அம்பேத்கர் இந்துமதத்தை விட்டுப்போனால் அதற்கு நாமே காரணம். அவ்வளவு அநியாயங்களை நாம் செய்திருக்கிறோம். அவர் செருப்பால் நம்மை அடித்தாலும் திருப்பித்தாக்காமல் வாங்கிக்'கொள்ள வேண்டும்." என்று அவர் சொல்கிறார். பத்தாண்டுகள் விடுதலைப்போரை நிறுத்தி வைத்துவிட்டு ஹரிஜன சேவையில் அவர் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

ஆலய நுழைவு போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்தார். குற்றாலத்தில் தீண்டாமையை பின்பற்றுவதால் குளிக்க மாட்டேன் என்று கிளம்பினார்.  கோவிலுக்குள் அரிசனங்களை அனுமதித்தால் மட்டுமே தானும் கோவிலுக்குள் காலடி எடுத்துவைப்பேன் என்று சொல்லி மதுரை கோவிலுக்குச் செல்வதை புறக்கணித்தார்.அரிசனங்களை அனுமதிக்காத பூரி ஜகநாதர் ஆலயத்துக்கு போய் வந்த மனைவியிடம் சண்டை பிடித்தார். 

பீகாரில் நிலநடுக்கத்தில் எண்ணற்ற மக்கள் இறந்த பொழுது தீண்டாமையை பின்பற்றியதால் கடவுள் கொடுத்த தண்டனை என்று அறிவித்தார். அவரின் வார்த்தைகளில் அந்த வரிகள் இவை

:"பீஹார் பூகம்பப் பேரழிவைப் பொருத்தமட்டில் அது, தீண்டத்தகாதவர்கள் எனச் சொல்கிறோமே, அவர்களுக்கு எதிராக நாம்இதுவரை செய்து வந்ததும், இன்னும் செய்துகொண்டிருப்பதுமான மா பாவத்திற்கான இறைத் தண்டனை என்றே நான்நம்புகிறேன். நீங்களும் இந்த விஷயத்தில் என்னைப்போல “மூடநம்பிக்கை” உள்ளவராக இருக்கவேண்டுமெனவே விரும்புகிறேன்."

அவரை இந்து சனதானிகள் ஐந்து முறை கொல்ல முயற்சி செய்தார்கள். காஞ்சி சங்கராச்சாரியார் ஆதரவில் அவருக்கு எதிராக பத்திரிக்கை வெளியிடப்பட்டது. இந்து மதத்தின் எதிரி என்று காந்தியை எதிர்த்தார்கள்.
"எல்லாரும் ஒரே வர்ணம். யார் என்ன வர்ணம் என்று தீர்மானிக்க நான் யார். " என்று 1936 இல் காந்தி பதிகிறார்.

கலப்புத்திருமணம் செய்து கொள்ளாதவர்கள் என்னைப்பார்க்க வராதீர்கள் என்றும் அவர் அறிவித்தார். அண்ணல் அம்பேத்கரை சட்ட வரைவுக்குழுவில் சேர்ப்பதில் முக்கிய பங்காற்றினார் அவர். ஜெயகரை தேர்தலில் நிற்பதில் இருந்து காந்தியின் காங்கிரஸ் விலக்கி அம்பேத்கர் உறுப்பினர் ஆவதையும்,வரைவுக்குழு தலைவர் ஆவதையும் உறுதி செய்ததை நோக்க வேண்டும்.

காந்தியை கோட்சே கொன்றது சரி;
பாகிஸ்தான் உருவாக அவரே காரணம் :

பாகிஸ்தான் ஆறே வருடங்களில் பெறப்பட்டது என்றால் அப்பொழுது பெரும்பாலும் காந்தி சிறையில் இருந்தார் என்பதையும் இணைத்தே பேச வேண்டும். வெள்ளையர்கள் பிரிவினைக்கான விதைகளை மின்டோ மார்லி சீர்திருத்தங்களின் பொழுதே ஊன்றி இருந்தார்கள். காங்கிரசும் இஸ்லாமியர்களை உள்ளுக்குள் சேர்க்க முயற்சிகளை கைவிட்டது. கட்சியில் இருந்த வலதுசாரிகளும் ஒரு காரணம்.

பசுவதையை காந்தி எதிர்த்தார் என்றாலும் அதைத் திணிக்க கூடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது. மதம் மாறுவதில் அவருக்கு ஒப்புமை இல்லையென்றாலும் மதமாற்றத்தை தடை செய்ய சட்டம் வந்த பொழுது அதை அவர் எதிர்த்தார். கீதையை அகிம்சையை போதிக்கும் நூலாகவே அவர் கட்டமைத்தார். இவற்றையெல்லாம் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷத்துக்கு ஜின்னா திருப்பிக்கொண்டார்.

சோசியலிசம் மக்களைக் காத்துவிடும் மதமெல்லாம் பெரிய சிக்கலில்லை என்று நேரு முதலியோர் நினைத்தார்கள். ஜின்னா இந்து இந்தியாவில் வாழ முடியாது என்கிற எண்ணத்தை உண்டு செய்து வென்றார்
இந்துத்வாவுக்கு எதிராக காந்தி தொடர்ந்து குரல் கொடுத்தார். அவர்களை பாசிஸ்ட்கள் என்றே அழைத்தார். அவர்களால் பலமுறை கொலை செய்யப்படுவதில் இருந்து தப்பினார். அவர்கள் வலியுறுத்திய வன்முறை சார்ந்த இந்து மதத்தை தீவிரமாக நிராகரித்தார்.

"என் குரலை கேட்பவர் யாருமில்லை. நான் இருளில் உழல்கிறேன் என்று காந்தி பிரிவினையை நோக்கி தேசம் நகர்ந்த பொழுது கண்ணீரோடு பதிவு செய்தார்." ,"என் பிணத்தின் மீது பிரிவினை நிகழட்டும் என்ற காந்தி அதற்கு ஒப்புக்கொள்ளும் சூழலுக்கு கடுமையான வன்முறை மற்றும் கொலைகளால் தள்ளப்பட்டார். ஆனால்,மதக்கலவரத்தின் காயங்களை ஆற்ற ஒரே ஆளாக அவரே டெல்லி,வங்கம் என்று எங்கெங்கும் முயன்றார். இறுதியில் இந்துத்துவ வெறியனால் அவர் கொல்லப்பட்டார் என்பதும் வரலாறு
மதச்சார்பின்மைக்கும்,காந்திக்கும் சம்பந்தமில்லை :

முப்பத்தி மூன்றில் இருந்து தன்னுடைய இறப்பு வரை மதச்சார்பின்மை என்கிற வார்த்தையை தொடர்ந்து காந்தி பயன்படுத்தியவாறே இருந்தார். மதத்தைக் கொண்டு அதன் தவறுகளை நீக்கி தன்னுடைய அரசியலை கட்டமைக்க முயன்ற காந்தி அதே மதம் வெறுப்புக்கான காரணமாக ஆனதை பார்த்து வெறுத்துப்போனார். "என் மதத்துக்காக நான் உயிரையும் கொடுப்பேன். அதே சமயம் இந்த நாட்டின் சர்வாதிகாரி ஆனால் அரசியலும் மதமும் பிரிந்தே இருக்கும். ஒன்றில் இன்னொன்றுக்கு வேலையில்லை !" என்று அவர் அறிவித்தார்.

படேல் சோம்நாத் ஆலயத்துக்கு நிதி திரட்டிய பொழுது அதை பழைய காயங்களை கிளறிவிடும் என்று கண்டித்தார். அந்த நிதி பிரிவினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ பயன்படட்டும் என்று சொன்னார். கொல்கத்தாவில் கிறிஸ்துவ மிஷினரி நபர்களை பார்த்த பொழுது அரசாங்கம் எந்த மத அமைப்புக்கும் உதவி செய்யாது என்று தெளிவுபடுத்தினார். மதங்களுக்கு இடையேயான உரையாடல் தொடர்ந்து நிகழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர் மதச்சார்பின்மை கொண்ட தேசமாகவே இந்தியா இருக்கும் என்றார். அதை நேரு சாதித்துக்காட்டினார்

காந்தி ஒரு பழமைவாதி, நடைமுறை அறிவற்றவர் :

பெண்கள் இல்லாத சட்டசபையை புறக்கணிப்பேன் என்றார் காந்தி. பெண்களை அரசியலில் ஈடுபடுத்தியதில் மிகப்பெரிய பங்கு அவருடையது. ஒத்துழையாமை இயக்கம் தோற்றதும் மக்கள் இன்னமும் கருத்தியல் ரீதியாக தயாரில்லை என்று உணர்ந்து அவர்களை தயார்ப் படுத்தினார். ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் உரிமை மீண்டும் வேண்டுமென்று ஆங்கிலேய அரசுக்கு உப்பு சத்தியாகிரக போரின் பொழுது கோரிக்கை வைத்தார். மக்களை முதன் முதலில் திரட்டுகிற அற்புதத்தை காந்தியே நிகழ்த்தினார் என்று ஜோதி பாசுவே புகழாரம் சூட்டியிருக்கிறார். பெண்கள் ஆண் யாரேனும் வன்புணர்வு செய்ய முயலும் பொழுது தன்னுடைய நகங்கள் முதலியவற்றால் அவனைத்தாக்கி தப்பிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நாட்டின் இறையாண்மைக்கு ஒரு கேடு வருமென்றால் ஆயுதம் ஏந்துவதை ஆதரிக்கும் முதல் ஆளாக நானிருப்பேன் என்று அவர் பதிவு செய்தார்.

வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தில் அவர் அரச வன்முறைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த பொழுது "மக்களின் வன்முறையை கண்டிக்க மாட்டீர்களா " என்று கேட்கப்பட்டது ,"மிகப்பெரிய வன்முறை எதுவோ அதைத்தான் கண்டிக்கிறேன். மக்கள் வேறு வழியில்லாமல் இப்படி செயல்பட்டார்கள். அவர்களை கண்டிக்க மாட்டேன்" என்று அவர் தெளிவுபடுத்தினார். லூயிஸ் பிஷருக்கு தந்த பேட்டியில் நில சீர்திருத்தத்தின் பொழுது முதலாளிகளுக்கு இழப்பீடு தரப்பட மாட்டாது. காவல்துறையை கொண்டே அவற்றை மீட்போம் என்றார். தொழில்நுட்பத்தின் மீது தீவிரமான விமர்சனத்தை வைத்தாலும் அதைப் பயன்படுத்தி மக்களை சென்றடையும் நடைமுறை யதார்த்தத்தை தான் விடமாட்டேன் என்றவர் அவர்.

காந்தி பகத் சிங்கை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை :

காந்தி கறாரானவர். அவர் சொல்லி பகத் சிங் ஆயுதம் ஏந்தாத பொழுது அந்த செயலைத் தான் ஆதரிக்க முடியாது என்பதில் தெளிவாக இருந்தார். காந்தி இறுதிவரை பகத் சிங்கை காக்க முயன்றதற்கான கடித ஆதாரங்கள் இருக்கின்றன. பகத் சிங்கை தன்னுடைய வழிதவறிப்போன மகன் போலத்தான் காந்தி பாவித்தார். பகத் சிங் ஒரு வீரனின் மரணத்தையே விரும்பினார். கருணை மனு அனுப்பிய தந்தையை கடுமையாக அவர் கண்டித்தார் என்பதைக்காணவேண்டும். அதே சமயம் பகத் சிங்குக்கான கருணை மனுவின் இறுதி வடிவத்தை காங்கிரஸ்காரரான பகத்சிங்கின் வக்கீல்ஆசப் அலி உருவாக்கிய பொழுது அதை சீர்திருத்தி சமர்ப்பிக்க செய்தவரே காந்தியடிகள் தான்.

காந்தி நேதாஜிக்கு துரோகம் செய்துவிட்டார் :

நேதாஜி காங்கிரஸ் தலைவராக பர்மாவில் இருந்த பொழுது ஆக்க முயற்சி முன்னெடுப்பை துவங்கியவரே காந்தியடிகள் தான். தீவிரவாதப்போக்கை நோக்கி கட்சியை போஸ் நகர்த்திய போது அவருக்கு எதிராக காந்தியை திருப்பியிருந்தது . அவர் ஆக்கிய கட்சி அது. தேர்தலில் போஸ் வென்றதும் அது தன்னுடைய தோல்வி என்று காந்தி சொன்னதற்கு பிறகு போஸ் தன்னுடைய வழியில் கட்சியை நடத்த முயன்றார். "என்னை ஏற்காதவர்கள் எல்லாரும் வலதுசாரிகள் !" என்று அவர் சொன்னது எதிரிகளை அதிகப்படுத்தியது. கட்சியை காந்தி தலைமையேற்கட்டும்,என் வழியில் போராட்டம் நடக்கட்டும் என்று போஸ் சொன்னதை காந்தி ஏற்கவில்லை. அவர் வழியில் நடக்கட்டும் என்று விட்டுவிட்டார். ஏற்கனவே சில ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியை விட்டு காந்தி விலகியிருந்ததை கவனிக்க வேண்டும். போதுமான ஒத்துழைப்பை காங்கிரஸ் குழு தரவில்லை. போஸ் பதவி விலகினார்.

ஆனால்,போரைத்துவங்க தயாரான பொழுது சிங்கப்பூரில் இருந்து "தேசப்பிதா காந்தியின் ஆசிகளைக் கோருகிறேன் !" என்று போஸ் சொன்னார். காந்தியும் விடுதலைப் போராட்ட வீரர்களில் இளவரசர் என்று போஸ் அவர்களைப் புகழ்ந்தார். தன்னுடைய படைப்பிரிவுகளுக்கு காந்தி,நேரு,ஆசாத பெயரை போஸ் சூட்டினார். இந்திய ராணுவப்படை போரில் தோற்றதும் அதன் கைதிகளை காக்கும் பொறுப்பை காங்கிரஸ் கட்சியின் வக்கீல்கள் டெல்லி செங்கோட்டையில் முன்னின்று செய்தார்கள் என்பது வரலாறு.

-------------------------------
தரவுகள்
-------------------------------

தேவதாசி ஒழிப்பும் காந்தியும் http://on.fb.me/1cIm5JO
"My Rama, the Rama of our prayers, is not the historical Rama, the son of Dasharatha — the King of Ayodhya. He is the eternal, the unborn, the one without a second. Him alone I worship, His aid alone I seek, and so should you."
Harijan,28-4-1946 Ramanama - Gandhi
https://www.facebook.com/raattai/posts/220007281509208
காந்தியின் ராமராஜ்ஜியம் - பிபன் சந்திரா
https://www.facebook.com/raattai/posts/345663912276877
காந்தியை அறிய முயற்சிப்போம். அ.மார்க்ஸ் https://www.facebook.com/raattai/posts/346147192228549
Gandhiji’s anguish at Kasturba’s and DurgaDesai’s visit to the Puri Temple which was not open to the Harijans https://www.facebook.com/raattai/posts/279530962223506
பீகார் பூகம்பமும் காந்தியும் https://www.facebook.com/raattai/posts/195117803998156
காந்தி மீதான முதல் கொலை முயற்சி https://www.facebook.com/raattai/posts/322078287968773
அ.மார்க்ஸ் எழுதிய காந்தியும் தமிழ் சனாதனிகளும்
“If he really hits us with shoes, we must bear even that” https://www.facebook.com/permalink.php?story_fbid=291319651051792&id=100005212780064
March 27, 1936 >>
Q:When untouchability is no more, Mahatmaji, what varna will you assign to us?
Who am I to assign a varna to you? But if I had the power, I should declare that we are Hindus, all of the same varna. As I have made it clear over and over again there is no real varna
https://www.facebook.com/permalink.php?story_fbid=291319751051782&id=100005212780064
Changes in Mahatma
Gandhi’s views on caste and intermarriage on.fb.me/1b8YG2r
http://wp.me/p2KPWo-cz (கோட்சே மட்டுமா காந்தியைக் கொன்றான் ?)
Gandhi on "secular" law and state on.fb.me/19zsVwn
Somnath temple issue https://www.facebook.com/raattai/posts/215549085288361
"பெண்கள் பங்குபெறாத சட்டசபையை பகிஷ்கரிப்பேன்' http://on.fb.me/186lX13
"சுய பாதுகாப்புக்குத் தேவையான வெடிப்பொருட்களையும்,ஆயுதங்களையும் தயாரித்துக் கொள்வதற்கானஉரிமம் வழங்குதல்" https://www.facebook.com/raattai/posts/224628711047065
In 1927 Asif Ali (lawyer of Bhagat Singh) was made the Secretary-General of the Congress Party and three years later, in 1930, a member of the Congress Working Committee
.http://www.vandemataram.com/biographies/patriots/asafali.htm
March 21, 1931 : Gandhi put aside Asaf Ali’s draft petition as from Bhagat Singh to the Punjab Government and prepared a fresh draft in keeping with the self-respect of Bhagat Singh. Asaf Muhammad Ali took this draft to Lahore.[Mahadev Desai Diary (Gujarati series) Vol 14, p. 166]
https://www.academia.edu/4888156/The_Clemency_Effort_for_Bhagat_Singh_Sukhdev_and_Rajguru
Gandhi amended Asif Ali's Draft (Gandhi and Bhagat Singh By Vishwa Nath Datta)
http://bit.ly/1eEhzwi
The Punjab Archives in Lahore has 135 files of the Bhagat Singh case.
These are not accessible even to Pakistani scholars; Kuldip Nayar is now trying to get access to them http://www.thehindu.com/opinion/op-ed/rare-documents-on-bhagat-singhs-trial-and-life-in-jail/article2356959.ece
காந்தியின் 75வது பிறந்தநாளை (Oct 2 1943) ரங்கூனில் போஸ் படை கொண்டாடியது.இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது என முழங்கியவர் போஸ்.ஆதாரம் பக் : 332 ஜூலை 6,1944
இல்ரேடியோவில் உரையாற்றிய போஸ் "வெள்ளையெனே வெளியேறு" இயக்கத்தை வெகுவாக பாராட்டியதோடில்லாமல் காந்திக்கு"தேசத்தந்தை" என பெயர் சூட்டினார் ஆதாரம் பக் : 354
https://www.facebook.com/permalink.php?story_fbid=156544617855475&id=137250963118174
Netaji sent the following message to the Mahatma on Azad Hind Radio, Rangoon on 4th June, 1944.
"...........Nobody would be more happy than ourselves if by any chance our countrymen at home should succeed in liberating themselves through their own efforts or by any chance, the British Government accepts your `Quit India' resolution and gives effect to it. We are, however proceeding on the assumption that neither of the above is possible and that a struggle is inevitable.
Father of our Nation in this holy war for India's liberation, we ask for your blessings and good wishes".
The above message also proves beyond any doubt Netaji's reverence and warm feelings towards Gandhiji whom he had addressed as 'The Father of the Nation'
http://www.mkgandhi.org/faq/q1.htm"
INA படைப்பிரிவுகளில் சில- Gandhi Brigade, Azad Brigade, Nehru Brigade http://en.wikipedia.org/wiki/Indian_National_Army#Order_of_Battle
At the conclusion of the war, the government of British India brought some of the captured INA soldiers to trial on treason charges. The prisoners would potentially face the death penalty, life imprisonment or a fine as punishment if found guilty.. INA Defence Committee saved them
http://en.wikipedia.org/wiki/INA_Defence_Committee

பார்ப்பனர்கள் கொடூரமானவர்களாக இருப்பது ஏன் ?

பார்ப்பனர்கள் கொடூரமானவர்களாக இருப்பது ஏன் ?

8000 சமண துறவிகளை கூண்டோடு கழுவில் ஏற்றி கொன்ற காலத்திலிருந்து, குசராத்தில் இசுலாமியர்கள் மீது வன்முறை ஏவி ஆயிரக்கணக்காணோரை கொன்ற காலம் வரை பார்ப்பனர்கள் கொடூர சிந்தனை உடையோராகவே உள்ளனர். இன்று தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் கொலை வரை அது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது:

1. புலால் உண்ணாமை
2. விட்டமின் B12 பற்றாக்குறை

புலால் உண்பது என்பது மனிதனின் இயல்பான சுய விருப்பம் ஆகும். நாம்  கூட ஒரு வாரம் கறி உண்ணவில்லை எனில் மனசோர்வாகவும் டிப்ரசனாவுகவும் உணர்கிறோம். ஆனால் பிறந்தது முதல் இந்த உணர்வை அவர்கள் எதிர்மறையாக அடக்கி வைக்கின்றனர்.

இதுவே பிறகு வெறுப்பாகி, கோபமாகி பிறகு கொடூர மனம் கொண்டவர்களாக அவர்களை ஆக்கி விடுகிறது. குறிப்பாக பிராமண குழந்தைகள் அவர்கள் சிறுபிள்ளைகளாக இருந்த போது பிற குழந்தைகள் சுவையான கறி உண்பதை கண்டு அதனை அவர்கள் சுவைக்க இயலாமையால், மனசோர்வுக்கு ஆளாகி அது தனக்கு கிடைக்கவில்லை என்ற  வெறுப்பினால் பிறகு கொடூரமனம் கொண்ட தன்மைக்கும் மாறுவதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாவது விட்டமின் B12 பற்றாக்குறை ஆகும். இந்த விட்டமின் B12 ஆனது 100% விலங்கு உணவில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. பிராமணர்களுக்கு இந்த விட்டமின் கிடைக்காமையால் மூளையின் லிம்பிக் பகுதிகள் சரிவர வளர்வதில்லை. இந்த பகுதி தான் உணர்ச்சி, பாசம் ஆகியவற்றுக்கு அடிப்படையாக இருக்கும் பகுதியாகும். அர்ஜெண்டினாவில் நடைபெற்ற ஆராய்ச்சி ஒன்றில் சைவ உணவு உண்ணுவோர் இவ்வகை 'உணர்வு குறைபாடு' கொண்டோர் என தெரியவந்துள்ளது. அதே சமயத்தில் புலால் உணவு உண்ணுவோர் மிகுந்த உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பதும் கவனிக்க தக்கது. மேற்சொன்ன இரண்டு காரணங்களால் தான் பிராமணர்கள் கொடூர மனம் கொண்டவர்களாக உள்ளனர்.

ஹிட்லரும் சைவ உணவுப் பழக்கம் உடையவன்தான்

தோழர்_முத்துக்குமாரின்_கடிதம்!

தோழர்_முத்துக்குமாரின்_கடிதம்!

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் விநியோகித்த துண்டுப்பிரசுரம் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம்.

வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை.
என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.

இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்? ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.
ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?

ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா?

பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்? கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?

ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான்.

இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள்.
போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது.

சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்!

போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!,

ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம்.

எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.

எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்?

எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்?

எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது.

அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான்.

இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா...

இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். 

ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...
அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம். அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள்.

1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.

இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மௌனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள்.

'அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை' என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை.

ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை.

இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும்.

கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!
இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மௌனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

*என்றும் அன்புடன்,*
_*அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,*_
*கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

ஆண்டாள், எம். எஸ், கலாம்

Poovannan Ganapathy
Via facebook
2018-01-28

ஆண்டாள், எம். எஸ், கலாம்

  சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக சங்கீதம்,எம் எஸ் என்று பேச்சு வந்த போது எம் எஸ் அவர்கள் தேவதாசி குலத்தை சார்ந்தவர்.ஆனால் அதனை மறைத்து அவரை சாதிமாற்றம் செய்கிறார்கள் என்றேன்.முற்போக்கு நண்பர்களும் கொதித்து எழுந்து உனக்கு ஏன் இவ்வளவு வக்கிரம் என்று பொங்கி விட்டார்கள்.

  அவர் விரும்பி பார்ப்பனர் போல் வாழ்ந்தார்.பார்ப்பனர்கள் அவரை ஒருவராக ஏற்று கொண்டு விட்டார்கள்.அவர்கள் மேன்மையானவர்கள்.எம் எஸ் அவர்களின் சாதி என்று அவரின் தாய் மதுரை ஷண்முக வடிவு,பாட்டி அக்கம்மாள்,சகோதரர் சக்திவேல் ,தேவதாசி வழக்கம்,அவர்களோடு இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை என்று பேசும் தாழ்வு மனப்பா்ன்மையை ,வக்கிரத்தை கைவிடு என்று ஏகப்பட்ட அறிவுரைகள்.இன்று ஆண்டாள் விஷயத்திலும் இதே தான் அச்சு பிசகாமல் நடக்கிறது.

   கடந்த பல நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல தேவதாசிகளை பற்றி பல கோவில்களில் குறிப்புகள் உள்ளன.இதில் திருவரங்கம் கோவிலில் கோவில் மூலவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த தேவதாசியான ஆண்டாள் அவர்கள் மீது மட்டும் ஏன் அளவுகடந்த பாசம் என்பது முதலில் விளங்கவில்லை.ஆண்டாள் ஒரு சாதனையாளர்.வரலாற்றில் இன்றுவரை நிற்கும் திருப்பாவை,நாச்சியார் மொழி எழுதியவர்.

  சாதனையாளர் யாரும் வேறு சமூகங்களில் இருந்து உருவாக மாட்டார்கள் எனும் பிம்பம் தொடர நடக்கும் போராட்டம் தான் இந்த போராட்டம்.முதலில் ராஜாஜி ஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்ற கதையை உருவாக்க முயற்சித்தார்.தேவதாசிகளுக்கு ஆதரவான போராட்டங்கள்,சூழல் ,அந்த முறையின் ஒடுக்குமுறையை எதிர்த்து கேள்விகள் வந்த காலகட்டம் அது.

  தேவதாசி ஒருவரால் இயற்றப்பட்ட திருப்பாவை கோவில்களில் வைஷ்ணவர்களால் பாடுபடுவதை சுட்டி காட்டினால் தீட்டு,தீண்டாமை,உயர் குலம்,கோத்திரம் எல்லாம் கேள்விக்குள்ளாகுமே என்று புத்திசாலித்தனமாக ராஜாஜி ஆண்டாள் ஒரு புனைவு என்ற வாதத்தை முன் வைத்தார்.

  அவர் புத்திசாலி.இறைவனை மணந்து கொண்டு நித்யசுமங்கலியாக வாழ்ந்து மறைந்த ஒருவரை தேவதாசி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பார்கள் என்ற கேள்விக்கு விடை கிடையாது என்பதால் இதனை முன் வைத்தார்.சோடா பாட்டில் புகழ் ஜீயர்களுக்கு தீவிர மத பற்று காரணமாக அறிவு வெகு குறைவு என்பதால் மேலும் மேலும் உளறி கொண்டு  அனைவருக்கும் மிக தெளிவாக ஆண்டாள் ஒரு தேவதாசி என்று நிரூபணம் ஆகும் சூழலை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.

   கலாம் விஞ்ஞானியாக பல உயர் பொறுப்புகளை வகித்து குடியரசு தலைவர் பதவி வரை சென்றவர்.அவர் மாமிசம் உண்ண மாட்டார் என்று நாட்டின் கடைக்கோடி சிறுவன் வரை தெரியும்.ஊடகங்கள் எ்தனை எழுத மறந்தாலும் கலாம் ஐயர் என்று பணியில் இருந்த காலத்தில் ,மாமிசத்தை தவிர்த்ததால் அழைக்கப்பட்டார் என்பதனை எழுத மறக்க மாட்டார்கள்.

  நல்ல மனிதராக ,விஞ்ஞானியாக ,சாதனையாளராக இருக்க வேண்டும் என்றால் மாமிசம் தவிர்த்தவராக இருக்க வேண்டும் என்ற உளவியல் அது.இன்றும் தினமும் பல நோயாளிகள் மாமிசத்தை சுத்தமாக விட்டு விட்டேன்.இருந்தும் ஏன் ரத்த கொதிப்பு குறையவில்லை,உடல் நோய்கள் நீங்கவில்லை என்று சோகமாக கேட்பார்கள்.பெரும்பான்மை மக்கள் மாமிசம் உண்ணும் கூட்டமாக இருந்தும் மாமிசம் கெடுதி,தவறு எனும் கருத்தாக்கம் ஆழ ஊன்றி இருக்கிறது

   இதே தான் ஆண்டாள் அவர்களின் விஷயத்திலும் நடக்கிறது.திருப்பாவை,நாச்சியார் மொழி எழுதிய ஒருவர் கண்டிப்பாக தேவதாசியாக இருக்க முடியாது. இருக்க கூடாது என்பதே இதன் பின் உள்ள உளவியல் காரணம்.

   உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வெளிநாடுகளுக்கு சென்றால் ஆடு,மாடு,பன்றி அனைத்தையும் சாப்பிடுவார்.அவருடன் உடன் செல்லும் போது உணவு தான் எனக்கு பெரிய பிரச்சினை என்று அவர் மனைவி ஒரு பேட்டியில் சொன்னது எப்படியோ வெளிவந்து விட்டது.

  ஆனால் கலாம் ஐயர் போல இதனை வைத்து ஆனந்த் பஞ்சமன்,ஆனந்த் சூத்திரன் என்று எந்த பத்திரிக்கையாவது எழுதுமா?

தோழர் அனந்தகிருஷ்ணன் அவர்களோடு நடந்த ஒரு விவாதத்தில் எந்தெந்த மாநிலங்களில் மாட்டு கறி அதிகம் உண்ணப்படுகிறது,மாட்டு கறி உண்பவர்கள் அதிகமோ அங்கு முன்னேற்றம் அதிகம் என்றேன்.அதற்கு பதிலாக உன் வாதம் தவறு,இந்தியாவில் இருந்து அதிக நோபல் விருது பெற்றவர்கள் பார்ப்பனர்கள் தான்.அதனால் சைவமே அறிவு என்று சொல்லலாமே.ஆனால் நான் சொல்ல மாட்டேன் என்றார்.

என் பதில்.இந்தியாவை சேர்ந்த  நோபல் பரிசு பெற்றவர்களில் ஹர்கோபிந்த் கொரானா,அமர்த்தியா சென்,வெங்கடராமன் ராமகிருஷ்ணன் ஆகிய மூவரின்  மனைவிகளும் மாட்டுக்கறியை விரும்பி உண்ணும் வெளிநாட்டவர்கள் .இவர்களும் அதனை விரும்பி உண்ணுபவர்களாக இருக்க தான் வாய்ப்புகள் அதிகம்.மற்றொருவரான சுப்பிரமணியம் சந்தசேகர் ஐம்பது ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவர்.கடவுள் நம்பிக்கை அற்றவர்.அவரும் மாமிசம் தவிர்த்திருக்க வாய்ப்புகள் குறைவு.மீதமுள்ளது சி வி ராமன் மட்டுமே.அவர் மருமகளும் ஜெர்மானியர் என்று சொன்னேன்.

நீ எப்படி ஆண்டாள் அவர்களை தேவதாசி என்று சொல்லலாம் என்று கொதிப்பதன் பின் உள்ள உளவியல் இது தான்.இன்னார் இதனை செய்திருக்க முடியாது என்பதே இந்து மதத்தின் ஆணிவேர்.இப்படி இருந்தால் தான்,இந்த கோத்திரமாக இருந்தால் தான். இந்த உணவை தவிர்த்தால் தான்,இந்த ஆடைகளை மட்டுமே உடுத்தி கொண்டு வாழ்ந்தால் தான் இது சாத்தியம் எனும் மூடநம்பிக்கையே, சாதிவெறியே இந்த போராட்டங்களுக்கான காரணம் .
https://m.facebook.com/story.php?story_fbid=1790791837599268&id=100000054060235

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்?

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்?

ஏனெனில்

1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது
2) அதுதான் என்னை சூத்திரன் என்றது
3) அதுதான் என்னை வேசிமகன் என்றது
4) அதுதான் என் தாயை வேசி என்றது
5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது
6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது
7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது
 அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது
9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது
10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது
11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது
12) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது
13) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது
14) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது
15) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது
16) அதுதான் என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது
17) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது
18) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது
19) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது
20) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது
21) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது
22) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது
23) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது
24) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது
25) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது
26) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது
27) அதுதான் என் பாட்டன் முடி வளர்க்காதே என்றது
28) அதுதான் என் பாட்டன் அணிந்த முடிக்கும் வரி போட்டது
29) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது
30) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது
31) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது
32) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது
33) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது
34) அதுதான்; அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப் போக்கியது
35) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது
36) அதுதான் என் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது
37) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது
38) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது
39) அதுதான் என்னைப் படிக்காதே என்றது
40) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது
41) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது
42) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது
43) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது
44) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது
45) அதுதான் என்னை ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது
46) அதுதான் என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது
47) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது
48) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது
49) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது
50) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது
51) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது
52) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது
53) அதுதான் விவசாயம் பாவத் தொழில் என்றது
இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. அந்த இந்து மதத்தை நான் எதிர்க்க எத்தனையோ காரணங்கள் இருக்க நான் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன் ஆபாசவசவுகள் வேண்டாம் பொது தளம் நாகரிகமாக பதில் அளியுங்கள்