Monday, April 26, 2021

இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு*

நன்றி: Rana - "Time"
தமிழில்: கை.அறிவழகன்
**இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு**

டாக்டர்.ஜலீல் பார்க்கர், இந்தியாவின் தலைசிறந்த நுரையீரல் நிபுணர்களில் ஒருவர், முகத்தில் கடுமையான சோர்வு தெரிகிறது, மும்பை மாநகரத்தின் லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைக் கவனித்தபடி தொலைக்காட்சிகளிலும் தோன்றி கோரமான கோவிட் இரண்டாம் அலை எப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்களை தினமும் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.

கடந்த ஆண்டில் அவருக்கே கொரோனா தோற்று ஏற்பட்டு ஏறத்தாழ இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தார், இப்போது அமைதியிழந்தவராக நாம் அறிந்திராத பல உண்மைகளை போட்டு உடைக்கிறார். 

"நம்முடைய சுகாதாரத்துறை முற்றிலுமாக செயல் இழந்து விட்டது, நாம் நமது சொந்த தேசத்தின் மக்களைக் கைகழுவி விட்டோம், நம்முடைய மருத்துவ உள்கட்டுமான அமைப்பு மிக மோசமான நிலையில் இருக்கும் போது மருத்துவர்களால் என்ன செய்ய முடியும்? படுக்கைகளும், ஆக்சிஜன் சிலிண்டர்களும் இல்லாத போது மருத்துவர்கள் என்ன செய்ய முடியும்?" 

நேற்று (23rd April), இந்தியாவில் ஒரே நாளில் 3,32,730 பேர் கொரானா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், உலகம் முழுவதும் இதுவரை பதிவான மிகப்பெரிய ஒருநாள் தொற்று இதுதான், நேற்று முன்தினத்தின் அளவை நாமே நேற்று முறியடித்திருக்கிறோம் என்பதுதான் கொடுமை. 

பெருந்தொற்றுக் காலம் துவங்கிய நாளில் இருந்து இன்றுவரை, 1 கோடியே 60 லட்சம் பேர் நோய்த்தொற்றை அடைந்திருக்கிறார்கள், 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள், உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாதான் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளான நாடக இருக்கிறது, அன்றாட தொற்றின் அளவும், மரணங்களின் அளவும் அமெரிக்காவை மிஞ்சும் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. 

ஒவ்வொருநாளும் 2000 இந்தியர்கள் கொரானாவால் இறந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால், இது குறைத்து மதிப்பிடப்படுகிற ஒன்று என்றும், இந்தியாவின் ஒருநாள் மரணம் 10000 த்தை தாண்டிக் கொண்டிருப்பதாகப் பெயர் சொல்ல விரும்பாத சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். 

எனது வாழ்க்கையில் நான்கு மிக நெருக்கமான மனிதர்களை நான் இழந்திருக்கிறேன், ஒரு தூரத்து உறவினர், பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் எனது நெருங்கிய நண்பர்கள் இருவர், அவர்கள் இருவருமே 30 முப்பது வயதுகளில் மத்தியில் இருப்பவர்கள்.

இறப்பு மிக சாதாரணமாக நிகழ்கிறது, வெள்ளிக்கிழமை டெல்லியின் கங்காராம் மருத்துவமனை ஒரு அவசர செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது, அதில் இன்னும் இரண்டு மணி நேரத்துக்கான ஆக்சிஜன் மட்டுமே எங்களிடம் இருக்கிறது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்கனவே 25 பேர் இறந்து விட்டார்கள் என்று அச்சமூட்டும் அறிவிப்பாக அது இருக்கிறது, தங்கள் உறவினர்களுக்காக ஆக்சிஜன் சிலிண்டர்களைத் திருடும் காணொளிக்  காட்சிகள் மேலும் அச்சமூட்டுவதாக இருக்கிறது.

BBC யின் செய்தித் தொகுப்பொன்றில் வரும் காட்சியில் பெண்ணொருவர் இறந்து கொண்டிருக்கும் தனது தம்பியை சுயநினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறார், "பாலாஜி, நீ ஏன் விழித்துக் கொள்ளக்கூடாது?" என்று தனது தம்பியைத் தட்டி எழுப்ப முயற்சி செய்தபடி அழுகிறார். 

மஹாராஷ்டிராவில் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் ஆக்சிஜன் குழாய்களில் தடை ஏற்பட்டு ஏறத்தாழ 25 பேர் இறந்து விட்டார்கள், இவர்கள் அனைவரும் கொரானா தொற்றால் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்கள். பல்வேறு மருத்துவமனைகள் தங்கள் மாநில உயர்நீதிமன்றங்களில் எங்களுக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று முறையீடு செய்திருக்கின்றன, கடவுளின் கரங்கள் எங்கே என்றால் அவை இந்தியாவின் மருத்துவமனைகளில் தான் இப்போது இருக்கிறது.

இத்தகைய ஒரு கொடிய சூழல் நிலவும் போது, இந்தியாவின் மற்றொரு பக்கம் கொரானா பெருந்தொற்று குறித்த எந்த அச்சமும் இல்லாமல், விழிப்புணர்வும் இல்லாமல் "மோடியின் தட்டு தட்டி, விளக்கேற்றி கோரானவை விரட்டும்" மூடத்தளைக்குள் சிக்குண்டு சீரழிகிறது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் கும்பமேளா என்கிற பெயரில் கங்கை ஆற்றில் மூழ்கித் திளைக்கிறார்கள். 

குறிப்பிட்ட சில நூறு இஸ்லாமிய மனிதர்கள் கடந்த ஆண்டில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு வந்தபோது மோடியின் தேசபக்த ஊடகங்களும், அவரைப் பின்பற்றும் மடையர்களும் அவர்களைக் குற்றவாளிகளாக்கி ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள். 

மார்ச் 11 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து குளியல் போட்டு வருகிற இந்த பக்தர்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரானா தொற்று உறுதியாகி இருக்கிறது, மெல்ல மெல்ல இவர்கள் வீடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள், இவர்கள் மூலமாகப் பரவ இருக்கும் இந்தப் பெருந்தொற்று மிகப்பெரிய சோகங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதில் எந்த மாற்றுக கருத்தும் இல்லை.

மார்ச் மாதத்தில் ஏறத்தாழ கொரானாவின் இரண்டாம் அலை துவங்கி இருந்தபோது, உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் ஆளும் பாரதீய ஜனதாக கட்சியின் தலைவர்கள் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்திருந்தார்கள், கும்பமேளா குளியல் இடம் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக அவர்கள் மக்களுக்கு அறிவித்தார்கள், 

இதைவிடக் கொடுமை மார்ச் 20 ஆம் நாள், உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஒருபடி மேலே சென்று "யாராலும் கோவிட் -19 ன் பெயரால் எங்களைத் தடுத்து விட முடியாது, நாங்கள் நம்புகிற கடவுள் கிருமிகளிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுவார்" என்று கொக்கரித்தார். ஏப்ரல் மாதத்தின் மத்தியப் பகுதி வரையில் இந்து ராஜ்யத்தின் தலைவரான நரேந்திர மோடி ஒரு துரும்பையும் அசைக்காமல் தேர்தல் நாடகங்களில் மும்முரமாய் இருந்தார். 

பிறகு திடீரென விழித்து பன்னாட்டு சமூகத்துக்கு அஞ்சி "மத விழாக்களில் கலந்து கொள்வதை நாம் ஒரு அடையாளமாக வைத்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான் நம்மால் பெருந்தொற்றை எதிர்க்க முடியும்" என்று திருவாய் மலர்ந்தார். இப்படி ஒரு பிரதமர் இருக்கும் நாட்டில் கும்பமேளாக்கள் அப்பாவி இந்தியர்களின் உயிரைக் குடிக்கும் ஒரு மரணக்குழியாக இருக்கும் என்பதில் என்ன பெரிய வியப்பு இருக்க முடியும்.

மார்ச் 2020 துவங்கி இந்தியாவின் கோவிட் - 19 குறித்து நான் தொடர்ந்து கவனித்தும், பேசியும் வருகிறேன், ஆனால், இந்த இரண்டாம் அலையின் தீவிரம் என்பது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்குகிறது, சுகாதாரத்துறைப் பணியாளர்கள் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள், மும்பை மாநகராட்சி மருத்துவமனைக்கு நான் கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்ற போது அங்கே மாடிப்படிகளில் அமர்ந்திருந்த ஒரு செவிலியரைப் பார்த்தேன். 

அவர் தனக்குக் குமட்டிக்கொண்டு வருவதாக என்னிடம் கூறினார், இங்கிருக்கும் கழிவறைகள் மிகுந்த அசுத்தமாக உள்ளது, ஒவ்வொரு 20 கோவிட் நோயாளிகளுக்கும் 1 கழிவறைதான் இங்கே இருக்கிறது, நானே பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் குணமடைந்து வருகிறேன். மூன்றுமுறை நான் அளித்த விடுப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது, இப்போது நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன். 

ஆனால், என் குடும்பம் என்னை நம்பி இருக்கிறது, மருத்துவப் பணியாளர்களை நாங்கள் மலர் கொண்டு ஆராதிக்கிறோம் என்று விமானங்களை வைத்து மோடியின் அரசு வித்தை காட்டியது, ஆனால், மருத்துவப் பணியாளர்களின் உண்மையான நிலை இதுதான், நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறோம்.

இரண்டாம் அலையில் நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மிகுந்த துயரத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள், scroll.in என்கிற ஒரு செய்தி நிறுவனம் அதிர்ச்சி தரக்கூடிய உண்மை ஒன்றை வெளியிட்டிருக்கிறது, அக்டோபர் 2020 வரை, உலகைக் காக்கும் வல்லமை பொருந்திய இந்துக்களைக் காக்கும் மாமன்னர் மோடி அரசு கண்களை மூடிக் கொண்டு ஏகாந்தத்தில் இருந்தது.

பெருந்தொற்று துவங்கி 8 மாதங்கள் வரை ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த எந்த சுய உணர்வும் இல்லாமல் வாயால் வடை சுட்டுக் கொண்டே இருந்தார்கள் பாரதீய ஜனதாவின் மக்கள் விரோதத் தலைவர்கள். அக்டோபரில் தான், அதுவும் வெறும் 150 மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வேண்டும் என்று 2.7 கோடி டெண்டர் கோரி இருந்தார்கள். ஹரியானா, மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் தான் நிலைமை மிகமோசமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் யாகம் செய்வது, பசு மூத்திரம் குடிப்பது என்று குரங்காட்டிகளின் தலைவராக யோகி ஆதித்யநாத் போன்ற பாரதீய ஜனதாவின் தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

மாநிலங்களுக்கு இடையே ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான சண்டை துவங்கி இருக்கிறது, ஹரியானாவின் அமைச்சர் திரு.அனில் விஜ், டெல்லி அரசு ஆக்சிஜன் கொண்டு வருகிற வாகனங்களைக் கடத்துவதாகவும், ஆகவே ஆக்சிஜன் கொண்டுவரும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் Economic Times செய்தித் தாளுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.
 
உத்திரப் பிரதேசத்தில் இடுகாடுகளை பெரிய டின் ஷீட்டுகளைக் கொண்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சாமியார் யோகி ஆதித்யநாத். 12 ஆவது அவதாரமான பிரதமர் மோடியின் குஜராத்தில் ஓய்வின்றி இரவு பகலாக இடுகாடுகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கிறது. உண்மையான மரண எண்ணிக்கைகளை மறைக்கும் வேலைகளில் அமைச்சர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். 

குஜராத் உயர்நீதிமன்றம் உண்மையான கோவிட் -19 நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கையைத் தருமாறு அரசைக் கேட்டிருக்கிறது, ஏனைய மாநிலங்களில் நடக்கும் போலியான எண்ணிக்கைக் கணக்குகளும் நெஞ்சைப் பதற வைப்பதாக இருக்கிறது, மத்தியப்பிரதேசத்தில் ஒருநாளில் எரியூட்டப்பட்ட பிணங்களின் எண்ணிக்கை 97 ஆக இருக்கிற போது அரசு அது வெறும் 3 என்று கணக்குக் காட்டுகிறது என்று "டைம்ஸ் நௌ" செய்தித்தாள் குறிப்பிடுகிறது. 

மிகப்பெரிய அவலம் நடந்து கொண்டிருக்கும் போது ஒன்றுமே நிகழாததைப் போல அரசுகள் நாடகமாடுகின்றன, பிரதமர் ஏதுமறியாதவரைப் போல "நாம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவோம், இது புதிய இந்தியா" என்று தேர்தல் மேடைகளில் புளுகிக் கொண்டு திரிகிறார்.

இந்த வாரத்தில் உலகிலேயே மிக அதிகமான கொரானா தோற்று இந்தியாவில் நிகழ்ந்திருக்கும் சூழலில், ஆளும் இந்துத்துவ அரசானது ட்விட்டரில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறது, அதில் உள்துறை அமைச்சரும், பிரதமரும் கூடிக்குலாவியபடி தேர்தல் ஊர்வலங்களில் கலந்து கொள்கிறார்கள், உள்துறை அமைச்சர் முறைப்படி அவசர காலமாகக் கருதி தலைநகரில் இருந்தபடி பல்வேறு மாநிலங்களின் தேவைகளைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். 

ஆனால், அவரோ பல லட்சக்கணக்கான தொண்டர்களை ஓரிடத்தில் கூட்டி தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாகி இருக்கிறார், இறுதியாக மீண்டும் பன்னாட்டு அழுத்தங்களுக்கு அஞ்சி நடுங்கி பிரதமர் கடைசி தேர்தல் கூட்டங்களை மட்டும் ரத்து செய்வதாக அறிவித்தார், அடிப்படையான அறிவும் இல்லாத, மக்களைப் பற்றிய எந்த சிந்தனைகளும் இல்லாத ஒரு மூடரின் கீழாக இந்த இக்கட்டான சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறது இந்தியா. 

ஆனால், மூட பக்தர்களோ இன்னும் திருந்திய பாடில்லை, "பாகிஸ்தான் தான் கிருமியைப் பரப்பியது, சீனாதான் கிருமியைப் பரப்பியது" என்று கிளப்பியபடி மோடியைப் புகழ்ந்து நாடு முழுவதும் ராஜஸ்தானியர்களும், குஜராத்திகளும் பாட்டுப் பாடுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானும், அதன் மக்களும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  

மருத்துவ நிபுணர்களும், உலகநாடுகளின் மருத்துவ அமைப்புகளும் பல்வேறு எச்சரிக்கைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது இந்தியாவின் பிரதமர் சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்வதில் மும்முரமாய் இருந்தார், மக்களின் மீது எந்த அக்கறையும் இல்லாத சென் நிலைக்கு அவர் மாறி இருந்தார்.

அவரது சகாக்களும், பக்தர்களும் அவர் கோவிட் -19 க்கு எதிராக ஒரு சூப்பர் மேனைப் போல அவரை சித்தரித்தார்கள், இந்தியாவில் கொரானா சோதனைகள் கூட நிறுத்தப்பட்டு விட்டது, உழைக்கும் மக்களின் பணத்தைச் சுரண்டிக் கொழுக்கும் பணக்கார, அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தினர் கடந்த முறை தட்டுகளை அடித்தும் உடைத்தும் மோடியின் வைரசுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். 

விளக்கேற்றி கொரானாவை ஓட்டினார்கள், "பாக் கொரானா பாக்" (ஓடு கொரோனா, ஓடு") என்று புத்தி பேதலித்தவர்களைப் போல அவர்கள் வீதிகளில் அலைந்தார்கள். ஆனால், ஏழை கூலித் தொழிலாளிகளோ தங்கள் வேலைகளை இழந்து உணவுக்கும் வழியின்றி வாழ்ந்த நகரங்களில் இருந்து வெளியேறி நடந்தார்கள். அதுனால் அவரை தங்களிடம் வேலை பார்த்த அந்த கூலித்தொழிலாளிகள் மீது இந்துராஜ்யத்தின் நீதிமான்கள் யாருக்கும் கருணை பிறக்கவில்லை. 12 ஆவது அவதாரமான கடவுள் மோடிக்கும் கூட இந்த ஏழைத் தொழிலாளிகள் மீது சிறிதளவும் கருணை தோன்றவில்லை. 

இவர்கள் தான் கடவுள் மோடியை இந்த தேசத்தின் பிரதமராகத் தேர்தெடுக்க வாக்களித்தவர்கள், இப்போதும் அவர்கள் மோடி தங்களைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறார்கள், அவரது உண்மையான கோர முகத்தை அறியாதவர்களாக.....

எல்லாவற்றையும் தாண்டி இந்த தேசத்தின் 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு நான் வேலைக்காரன் என்று சுய விளம்பரம் செய்துகொண்ட மோடி, இந்த அவசர காலத்தை ஒரு தேர்ந்த குற்றவாளியைப் போல கை கழுவி விட்டார், அவருக்கு அம்பானியையும், அதானியையும் உலகப்பணக்காரர்கள் வரிசையில் முன்னேற வைக்கக்கூடிய மிகமுக்கியமான பணி இருக்கிறது, 

இந்தியாவின் விற்பனையை துரிதப்படுத்தும் நிர்மலா சீதாராமன் கையில் மிக நீண்ட பட்டியலோடு பிரதமரின் கண்ணசைவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளும் இல்லை, "Make in India" என்று போலிக்குரல் எழுப்பியபடி அலைந்த இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த கோரமுகம் கொண்ட நரேந்திர மோடி, இந்திய அரசின் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களை ஏன் ஊக்குவிக்கவில்லை? 

இந்திய மருத்துவக் கவுன்சிலின் தற்காப்பு நடவடிக்கைகளை ஏன் துரிதப்படுத்தவில்லை என்கிற இந்தக் கேள்விக்கும் பிரதமரும் பதில் சொல்ல மாட்டார், பக்தர்களும் பதில் சொல்ல மாட்டார்கள். மேற்கு வங்கத்தில் பிரதமர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திலேயே மாநில பாரதீய ஜனதாக கட்சித் தலைவர் "கோவிட் வந்தால் நாம் பசு மூத்திரத்தை குடிக்க வேண்டும்" என்று வெட்கமே இல்லாமல் பேசினார், கேட்டுக்கொண்டு மண்டையை மண்டையை ஆட்டினார் பிரதமர். இப்படி ஒரு முட்டாள் பிரதமரை இந்தியா இதுவரை சந்திக்கவே இல்லை. 
 
உலகம் முழுவதும் பல நாடுகளின் தலைவர்கள் கொரோனா காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திப்பதிலும், இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும், ஊடகங்களை சந்தித்து என்ன மாதிரியான மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று வெளிப்படையாகப் பேசும்போது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின்  மோசடியான பிரதமர் இதுவரை ஒருமுறை கூட ஊடகங்களை சந்திக்கவில்லை.

உலகெங்கும் நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு நேரடியாக பணத்தை நிவாரணமாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது குரூர மனமும், மூடத்தனமும் கொண்ட ஒரு பிரதமர் இதுவரை இந்த தேசத்தின் ஏழை உழைக்கும் மக்களுக்கும் கூட நேரடியான எந்த உதவிகளையும் செய்யவில்லை என்பதுதான் முகத்தில் அறைகிற உண்மை.

நன்றி: Rana - "Time"

தமிழில்: கை.அறிவழகன்

Tuesday, March 30, 2021

அதிக சம்பளம் பெறுவது எப்படி

#19961

#Just_My_Thoughts

Long post but I'll try to keep it crisp and fast. 
Non IT ppl. Sorry, you can skip the post. 
Lots of posts and comments about CTC these days. 

Some jealous, some surprised. 

Are they real? Yes definitely. But depends on so many things. 

1. MNC/Product based - excellent pkg, but unless you have proper skill, you can't cross 45 yrs of age here.

Services /Other indian IT has comparatively better job security but even there, max 45-50 yrs. Adhukku mela la its going to cost blood and soul. 

2. Technology/Skill. Big deal seriously. 100% hike possible. Yes, I was jealous too. It happened. Happens. Someone I knew, SAP specialist, 10 yr exp, from Chennai. Got 44 from 20. No point in getting jealous. If you're in everybody-knows-technology (DB/Java/Testing etc), standard 30% hike thaan max. Specialize in new technologies, niche products, and sell your skill at the right place. 

3. Domain/Industry knowledge. This is more important than technical knowledge. You'll realise it after 10+ years where writing code won't help. A fresher will do that for quarter of the cost. 

4. IIT/IIM/Google/Microsoft. Etc. Enough said. Last day fresher package will be 15+. 50 CTC in 5 years. 

5. First 8 years. You need to jump every two years. Next 6 years, jump once every 3 years. If you didn't do that, you've lost your golden time in IT. Sentiment, team, location, project, mannangatti... If you were waiting for these, your loss. Do some company jumps now, make use of whatever comes. 

6. Very important. Don't reveal your current pkg. Don't accept for current + 30%. Dont mention expected CTC before the final round to anybody, HR or consultancy. Ask for interview shot, finish all of the 2/3/4+ rounds. And then drop your bomb. Ask 100% hike. You'll at least get 50%. If they don't accept, don't kneel down and beg for 40%. Simply reject and come out. If you're really good and did your interview well, they will come back for sure. 

7. Certifications are only fancy cards. Helps in showing off. Especially after 8-10 years. Knowledge matters. 

8. Dont expect much hike if you're attending mass recruits on a saturday. Fish for interviews separately on your own / consultancies. Mass recruitments will 99% give you standard 30% hike only. Simply because, according to company, trisha illana divya. 

Now, if you've missed all these, what to do? Depends on your experience. 

College students, freshers. Don't go into java, db, testing, etc. Wait for the right project. Don't let HR push you into dump. Argue, fight and get new tech projects only. Do RPA, AI, Machine learning, big data, data analysis, Cloud, SAP etc. 

10± exp: concentrate on gaining domain knowledge. And the next time, go for MNC/Product based companies only. 

Experienced Below 8: Simply jump 1/2 times. Preferably to MNC/Product companies. 

Sit and prepare like an exam a day before interview. If there were marks, it's like trying to score 100 instead of 70. The difference is not during the interview. When you do exceptionally good, at last round ask 100% hike, HR offers only 35%, you reject and come out, panel asks HR why they let you go, HR comes back to you, appo theriyum. 

Take leave from current work for both prev day and interview day. Or at least two half days - prev day second half and interview day whichever half you need. Don't do interview from middle of office day. 

Make sure you bargain at the last round. 
Always ask for 100% hike. With a serious face. Justify yourself reasonably. Argue for it, ask for it. Nobody will behead you. Take whatever comes at the end. 

Good luck. 
"

Saturday, March 20, 2021

CAA க்கு ஆதரவாக ஓட்டளித்தவர்கள்

புலியூர் முருகேசன்

அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தரும் இஸ்லாமிய நண்பர்களின் கவனத்திற்கு... 

*மாநிலங்களவையில் CAAவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:*

*அதிமுக எம்பிக்கள்:*
  01. SR பாலசுப்பிரமணியன்
  02. N சந்திரசேகரன்
  03. A முகமது ஜான்
  04. AK முத்துக்கருப்பன்
  05. A நவநீதகிருஷ்ணன்
  06. R சசிகலா புஷ்பா
  07. AK செல்வராஜ்
  08. R. வைத்திலிங்கம்
  09. A. விஜயகுமார்
  10. விஜிலா சத்யநாத்

*பாமக எம்பி:*
  11. அன்புமணி ராமதாஸ்

*மாநிலங்களவையில் CAAவுக்கு எதிர்த்து வாக்களித்தவர்கள்:*

*திமுக எம்பிக்கள்:*
  01. R.S. பாரதி
  02. TKS இளங்கோவன்
  03. M சண்முகம்
  04. திருச்சி சிவா
  05. P வில்சன்

*மதிமுக எம்பி:*
  06. வைகோ

*காங்கிரஸ் எம்பி:*
  07. P சிதம்பரம்

*மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி:*
  08. TK ரங்கராஜன்

ஆதரவு = 125
எதிர்ப்பு = 105

இதனால்தான் அந்த மசோதா சட்டமானது. அதிமுக, பாமக வின் -11 பேரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தால், 

ஆதரவு = 114
எதிர்ப்பு = 116
என மாறியிருக்கும்

116-114 என்ற கணக்கில் CAA சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இப்போது எடப்பாடி, இஸ்லாமிய வேடம் புனைந்து, சிறுபான்மையினக் காவலனாய்க் காட்டிக் கொள்கிறார். நம்பாதீர் மக்களே!

Friday, March 19, 2021

ஒருத்தன் கூட *தலைவா் கருணாநிதி* போல ஆட்சி செய்வேனு சொல்லல.

#Shared

*செருப்படி சிந்தனைகள்* 

MGR ஆட்சியை தருவேன் 
- ரஜினிகாந்த்

 MGR போல ஆட்சி செய்வேன் 
- கமல்ஹாசன்

நான் கருப்பு MGR 
- விஜயகாந்த்

 MGR போல ஏழைகளுக்காக பாடுபடுவேன் 
- விஜய் 

 MGR போல ஆட்சி ஆள என்னாலும் முடியும் 
- T. ராஜேந்தர்

ஒருத்தன் கூட *தலைவா் கருணாநிதி* போல ஆட்சி செய்வேனு சொல்லல...

ஏன்னா அது எவராலும் முடியாது...

* கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை, 

* மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை, 

* வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை,

* கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை.

* தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை,

* பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை இலவசமாகவே பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை, 

* தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே இலவச மின்சாரம் தரும் என விவசாயி கனவு கண்டதில்லை. தம் பொருளை தானே விற்க உழவர் சந்தை வரும் என்பதையும். 

* பட்டிக்காட்டிற்கும் மினிபஸ் வரும், நாமும் படித்து அமெரிக்காவில் வேலை பார்ப்போம் என எந்த கிராம மாணவனும் கனவு காணவில்லை, 

* கிராம மாணவனுக்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்து தம் பிள்ளைகளும் மருத்துவராகும் என எந்த கிராம பெற்றோரும் கனவு கண்டதில்லை. 

ஆனால் இது அத்தனையும் நடந்தது, அதன் பின்னே தமிழகத்தின் வளர்ச்சி குறித்து கனவு காணும் பிதாமகன் ஒருவர் இருந்தார். சான்றோர்களும், கலைஞர்களும் அவர் பின்னே இருந்தனர்.

எந்த உயரிய தொழில்நுட்பமும் முதலில் தமிழ்நாட்டில்-தான் அறிமுகப் படுத்தப்பட்டது. 

* சென்னை ஆட்டோ மொபைல் நகரமாக மாற்றப்பட்டது. 

* சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. 

* குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது, 

* நீர்நிலைகள் தவறாமல் தூர்வாரப்பட்டது, 

* காவிரி நீர் பாசனத்திற்கு குறித்த நாளில் திறக்கப்பட்டது. 

* பெண்கள் முன்னேற்றத்திற்கு, சொத்துரிமை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் முதல் மகளிர் குழுக்கள் வரை அமைக்கப்பட்டது.   

இதையெல்லாம் தாண்டி சாதிக்கக் கூடிய ஒரு கட்சி ஆட்சி தமிழகத்தில் அமையும் என சொல்லுங்கள், உங்களுடன் அந்தக் கட்சிக்காக கொடி பிடிக்கிறேன், கோஷம் போடுகிறேன்.

அதுவரை எம் தலைவர் கலைஞரின் புகழ் பாடுவதும், அவரை கொண்டாடுவதும்தான் எனக்கு வேலை. எங்கள் பிள்ளைகளுக்கு முதலில் நாங்கள்  காட்டி மகிழ்வது உதயசூரியனையும் தலைவர் கலைஞரையும்தான்.   

வாழ்க கலைஞர், 
வளர்க தமிழ் நாடு

ஏன் வேண்டும் இந்து அறநிலைத்துறை

*முட்டாள் சங்கி:* 
கோயில்களை மீட்க வேண்டும். 

*நாம்:*
யாரிடம் இருந்து? 

*முட்டாள் சங்கி:* 
அரசிடம் இருந்து. 

*நாம்:*
அரசு யாரை வைத்து கோயிலை நிர்வகிக்கிறது? 

*முட்டாள் சங்கி:* 
அறநிலையத் துறையை வைத்து. 

*நாம்:*
அறநிலையத் துறையில் யார் வேலை செய்கிறார்கள்? 

*முட்டாள் சங்கி:* 
இந்துக்கள்.

*நாம்:*
இந்துக்களில் எந்த சாதி? 

*முட்டாள் சங்கி:* 
அனைத்து சாதி இந்துக்களும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை செய்கிறார்கள். 

*நாம்:*
அப்போ, நாடார்கள்? 

*முட்டாள் சங்கி:* 
ஆமாம். வேலை செய்கிறார்கள். 

*நாம்:*
வன்னியர், தேவர், கவுண்டர்கள்? 

*முட்டாள் சங்கி:* 
ஆமாம். வேலை செய்கிறார்கள். 

*நாம்:*
பள்ளர், பறையர், அருந்ததியர்? 

*முட்டாள் சங்கி:* 
அவர்களும் வேலை செய்கிறார்கள். 

*நாம்:*
அறநிலையத் துறை வருவதற்கு முன் யார் கோயில்களை நிர்வகித்தார்கள்? 

*முட்டாள் சங்கி:*
பிராமணர்களும், ஊரில் பணக்காரர்களாக இருந்த தர்மகர்த்தாக்களும் மற்றும் ஜமீன்தார்களும். 

*நாம்:*
அறநிலையத் துறை வருவதற்கு முன் கோயில்களில் நாடார்கள் மற்றும் இன்றைய தலித் மக்களின் நிலை என்ன? 

*முட்டாள் சங்கி:*
கோபுர தரிசனம் தான். கோயிலுக்கு உள்ள விடுங்க; கோயில் இருக்கும் தெருக்களுக்குள் கூட இன்றைய தலித் மக்களுக்கு அனுமதி இல்லாமல் தானே இருந்தது. 

*நாம்:*
அப்போ, ஜக்கி வாசுதேவ் என்னும் இந்த மலைமுழுங்கி சொல்லுவதைப் போல, இந்துக்கள் நிர்வகித்த கோயில்களில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் இந்துக்களே போக முடியாத சூழல் இருந்துச்சு, அப்படித் தானே? 

*முட்டாள் சங்கி:*
ஆமாம்.. ஆமாம். 

*நாம்:*
இப்போ, எந்த இந்துக்களை கோயில்களுக்குள் அனுமதிக்காமல் தூரமா வைச்சிருந்தாங்களோ, அந்த இந்துக்களில் ஒருத்தர் நிர்வாக அதிகாரியாக இருந்து கோயிலை நிர்வகிக்கிறார், அப்படித் தானே? 

*முட்டாள் சங்கி:*
ஆமாம்.. ஆமாம்! 

*நாம்:*
இப்போ சொல்லு, அறநிலையத் துறை இந்துக்களுக்கு நன்மை செய்ஞ்சிருக்கா? இல்லையா? 

*முட்டாள் சங்கி:*
நன்மை செய்ஞ்சிருக்க மாதிரி தான் தெரியுது! 

*நாம்:*
கோயில்களை மீட்போம்னு பாஜகவும், ஜக்கி வாசுதேவ் மாதிரி திருட்டு சாமியார்களும் கதறுவது எதுக்குன்னு புரியுதா? 

*முட்டாள் சங்கி:*
புரியுறா மாதிரித் தான் தெரியுது! 

*நாம்:*
என்ன புரியுது? 

*தெளிவடைஞ்ச முன்னாள் சங்கி*:
எந்த சாதி மக்களை எல்லாம் தீண்டத்தகாதவர்கள், கோயிலுக்குள் வந்தால் கோயில் தீட்டாகிவிடும்னு ஒதுக்கி வைத்திருந்தோமோ, அதே சாதிகளில் இருந்து இடஒதுக்கீட்டின் மூலம் அறநிலையத்துறையில் தேர்வாகிப் பணியாற்றும் அதிகாரிகள் முன், உத்தரவுக்காக உயர்சாதிகளும், மிக மிக உயர்ந்த சாதிகளும் நிற்க வேண்டி இருக்கே என்கிற வயிற்றெரிச்சல் தான்னு புரியுது. 

*நாம்:*
இப்போ சொல்லு, கோயில்களை யாரிடம் இருந்து மீட்க வேண்டும்? 

*தெளிவடைஞ்ச முன்னாள் சங்கி:*
சாதிவெறி பிடிச்சு, ஆகம விதிகள்னு சொல்லிக்கிட்டு, முறையாக வேத சாத்திரங்களைப் படிச்சு தேர்வாகி இருக்கும் அனைத்து சாதிகளில் இருந்தும் அர்ச்சகராகத் தகுதி அடைந்த இந்துக்களை அர்ச்சகர் பணியில் சேர விடாமல் வழக்குப் போட்டு தடுத்து வைத்திருக்கும் அந்த கூட்டத்திடமிருந்தும், ஆகம விதிகளை நாங்கள் மதிக்கிறோம் என்று அனைத்து சாதிகளும் அர்ச்சகர்கள் ஆவதைத் தடுப்போம் என சொல்லாமல் சொல்லும் திருட்டு பாஜகவிடம் இருந்தும் மீட்க வேண்டும்.

*நாம்:*
போ, போய் அந்த திருட்டு மலைமுழுங்கி கிட்ட சொல்லு.


Thursday, March 18, 2021

The 7 Habits of Highly Effective People

The 7 Habits of Highly Effective People புக் படித்திருக்கிறீர்களா..?? One of the all time best sellers on Management. அதை அப்பிடியே இன்றைய தமிழக அரசியல் களத்தில் பொருத்தி பார்க்க முடிகிறது. அதில் சொல்லப்பட்ட வெற்றிகரமான ஆளுமைக்கான பழக்கவக்கங்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் பொருந்தி வருகிறது    

Habit 1: Be Proactive (You’re in Charge) 
Habit 2: Begin With the End in Mind (Have a Plan)
Habit 3: Put First Things First (Work First, Then Play)
Habit 4: Think Win-Win (Everyone Can Win)
Habit 5: Seek First to Understand, Then to Be Understood(Listen Before You Talk)
Habit 6: Synergize (Together Is Better)
Habit 7: Sharpen the Saw (Balance Feels Best)

H1 - தேர்தல்களமும் காலமும் எந்த நிமிடமும் வரலாம் என்பதை முன்னமே சிந்தித்து தேர்தலுக்கான அறிவிப்புகளுக்காக காத்திராமல் முதல் ஆளாக அனைவருக்கும் சிலமாதங்கள் முன்பே பரப்புரையை ஆரம்பித்தது 
H2 - தேர்தல் கூட்டணி இப்பிடி இருக்கவேண்டும், இன்னாரெல்லாம் இருக்க வேண்டும், யார் யாருக்கு எத்தனை தொகுதிகள், எந்த தொகுதிக்கு யார் வேட்பாளர் என்கிற clear picture கொண்ட தலைவராக அவர் மட்டுமே தென்படுகிறார்
H3 -  "வெற்றி என்பது எளிதாக கிடைக்காது, கிடைக்கவும் விடமாட்டார்கள்" "என் சக்திக்கு மீறி உழைக்கிறேன். உங்களிடமும் அதையே எதிர்பார்க்கிறேன்" என்று திரும்ப திரும்ப மூன்று ஆண்டுகளாக சொல்லி கட்சி அமைப்பினரை தேர்தலைதவிர வேறு எதையும் சிந்தக்கவிடாமல் பார்த்துக்கொண்டது 
H4 - தன்னுடைய கட்சி மட்டும் பயனடைந்தால் பத்தாது என்று கூட்டணி கட்சியினருக்கும் சரியான அளவிலான அதிகப்படியான வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை கொடுத்து அனைவரையும் வெற்றியாளராக மாற்றுவது 
H5 - மக்கள் சபை கூட்டங்கள் மூலம் மாநிலத்தின் அணைத்துவிதமான மக்களின் குறைகளை முதலில் கேட்டறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கை தயாரித்து அறிவித்தது  
H6 - முரண்டுபிடித்த கூட்டணியினரையும் வாய்ப்புக்கிடைக்காமல் முறுக்கிக்கொண்ட  சொந்த கட்சியினர் சிலரையும் பக்குவமாக அரவணைத்து ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரியவைத்து ஒரே தேரில் ஏற்றியது 
H7 - இது எல்லாம் பத்தாது என்று காலஓட்டத்திற்க்கேற்ப IPAC போன்றவர்களை பணியமர்த்தி, data analysis, demographic study  போன்ற நவீன யுக்திகள் மூலம் முடிவுகளை கூராக்கி கொண்டது

திமுக கூட்டணியின் தேர்தல் வெற்றி இது அத்தனைக்கும் பட்டையம் கூறும்..!

Tuesday, March 16, 2021

HAM RADIO

ஹாம் ரேடியோ குறித்து அறிந்துகொள்வோம். 

ஹாம் வானொலியை (HAM radio) அமெச்சூர் ரேடியோ (Amateur radio) என்றும் சொல்லுவார்கள். நாம் பாடல்கள் கேட்கும் FM வானொலி ஒருவழி ஒலிபரப்பு. அதாவது வானொலி நிலையம் ஒலிபரப்புவதை நாம் கேட்க மட்டுமே முடியும். அதனால் ஒலிபரப்பு செய்யுமிடம் நிலையம் என்றும் அதைக் கேட்கும் பயனாளர்களை நேயர்கள் என்றும் அழைப்பர். 

ஹாம் வானொலி என்பது இருவழி ஒலிபரப்பு. அதாவது நாம் பேசி முடித்த பிறகு அடுத்த முனையில் இருப்பவர் பேச முடியும். அதை அந்த அலைவரிசையில் இருக்கும் அனைவரும் கேட்க முடியும். செல்போன் போல அல்லாமல் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே ஒலிபரப்ப முடியும். அதனால் ஒலிபரப்புபவரும், அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் ஸ்டேஷன் என்றே அழைக்கப்படுவர். 

ஒவ்வொரு ஒலிபரப்பாளருக்கும் அதாவது ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஒரு அழைப்புக்குறி (Call Sign) உண்டு. ஒவ்வொரு முறை பேசும்போதும், பேசி முடிக்கும்போதும் தங்களது அழைப்புக்குறியையும், அடுத்த முனையில் இருக்கும் நிலையத்தாரது அழைப்புக்குறியையும் சொல்லியே பேசுவர். 

உதாரணமாக VU3WWD என்ற நிலையத்தார் VU3ZRF என்ற நிலையத்தை அழைக்கையில் This is Victor Uniform number three Whisky Whisky Delta calling Victor Uniform number three Zulu Romeo Foxtrot, and standing by என்று சொல்லிவிட்டு பத்து வினாடிகள் காத்திருந்து பதில் இல்லையெனில் மறுபடியும் அழைப்பர். மூன்று முறைக்கு மேல் பதில் இல்லையெனில் அழைப்பதை நிறுத்திக்கொள்வர். அந்த நிலையத்தார் Victor Uniform number three Whisky Whisky Delta, this is Victor Uniform number three Zulu Romeo Foxtrot. Go ahead என்று பதில் தருவார். உரையாடல் முடிந்தபின் இரு ஸ்டேஷன்களும் அதேபோல் அழைப்புகுறியைச் சொல்லி Signing Clear என்று முடித்துக்கொள்வர். 

அழைப்புக்குறியைப் பெற மத்தியத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் Wireless Planning Coordination and Monitoring Wing நடத்தும் Amateur Station Operator Certificate (ASOC) தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அழைப்புக்குறி இல்லாத நபர்கள் வயர்லெஸ் ரேடியோவில் பேசுவது சட்டப்படி தவறு என்பதோடு எந்த நிலையமும் அத்தகைய அந்நிய நபர்களுடன் உரையாட முன்வர மாட்டார்கள். Radio language தெரியவில்லையெனில் பெரும்பாலும் ஹாம் ஸ்டேஷன்கள் பேசிக்கொள்வது மற்றவர்களுக்குப் புரியாது. 

ASOC தேர்வில் இரண்டு வகை உண்டு. Restricted grade தேர்வில் மின்னியல், காந்தவியல், மின்னணுவியல், வானொலி அலைவரிசைகள், சட்ட திட்டங்கள் குறித்த அடிப்படை கேள்விகள் இருக்கும். இதற்கென பிரத்தியேக குறிப்புகள், மாதிரி வினா விடைகள் கொண்ட புத்தகத்தை உங்களுக்குத் தெரிந்த ஹாம் எவரிடம் கேட்டாலும் தருவார்கள். இணையத்திலும் இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு வார படிப்பே தேர்ச்சி பெறப் போதுமானது. 

General grade தேர்வில் restricted grade தேர்வில் வரும் பாடத்திட்டததுடன் கொஞ்சம் கூடுதலான பகுதிகள் இருப்பதோடு மோர்ஸ் குறியீடு (Morse Code) தேர்வும் உண்டு. நிமிடத்துக்கு ஆறு வார்த்தைகள் அனுப்பவும் எட்டு வார்த்தைகளைக் கேட்டு, தாளில் எழுதவும் தெரியுமளவுக்கு புலமை வேண்டும். 

மோர்ஸ் குறியீடு என்பது ஆங்கில எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறியீடுகள் ஒவ்வொன்றுக்கும் பிப், பீப் என்ற ஒலியாக மாற்றி ஒலிபரப்புவதாகும். மிகக்குறைந்த சக்தியில் நீண்டதூரம் தகவல்களை அனுப்ப தந்தி சேவையில் பயன்படுத்தப்பட்ட மோர்ஸ் குறியீடு இன்னமும் பல இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. பழைய நோக்கியா அலைபேசிகளில் குறுந்தகவல் வந்தால் பிப்பிப்பிப் பீப்பீப் பிப்பிப்பிப் என்ற சத்தம் வருவதைக் கேட்டிருப்பீர்கள். அது SMS என்ற வார்த்தையின் மோர்ஸ் குறியீட்டு ஒலியே. 

Restricted grade தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது அழைப்புக்குறி VU3 என்று ஆரம்பிக்கும். General grade தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது அழைப்புக்குறி VU2 என்று ஆரம்பிக்கும். VU என்பது இந்தியாவுக்கான சர்வதேச வானொலி அடையாளக் குறி. Victoria's Union என்று அந்தக்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டது இன்றும் அப்படியே உள்ளது. 

கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தைப் படித்தவர்களுக்கு தேர்வின் முதல் பகுதியில் விலக்கு உண்டு. யார் வேண்டுமானாலும் general grade தேர்வை நேரடியாக எழுதலாம். Restricted grade எழுதியே general grade எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் மோர்ஸ் கோடு சரளமாக அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் பெற்றோர் ஒப்புதலுடன் ஹாம் ரேடியோ தேர்வு எழுதி அழைப்புக்குறி பெற்று வானொலியில் பேசலாம். நீச்சல், மிதிவண்டி, இருசக்கர, நான்குசக்கர வாகனம் ஓட்டுதல் போல   குழந்தைகளுக்குக் அவசியம் கற்றுத்தர வேண்டிய விசயங்களுள் வயர்லெஸ் தகவல் தொடர்பும் ஒன்று. வானொலி அலைகள், ஆன்டெனா, ரிப்பீட்டர், அயன மண்டல வானிலை, சேட்டிலைட் தகவல் தொடர்பு என கற்றுக்கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் இருப்பதோடு பல புதிய நபர்களை உட்கார்ந்த இடத்திலேயே அறிமுகப்படுத்திக்கொண்டு தொடர்ந்து தீவிரமாகப் பயணிக்க, கவனச்சிதறலைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட விசயத்தில் Mastery-க்கு முயற்சிக்க பதின்ம வயது மாணாக்கர்களுக்கு ஹாம் ரேடியோ ஓர் அற்புதமான கருவி. 

உங்களது மகன்/மகளுடன் சேர்ந்து மோர்ஸ் கோடு பழகுவது அதைக்  கற்றுக்கொள்ளுவதின் வேகத்தை நிச்சயமாக அதிகரிக்கும். அதற்கென ஏகப்பட்ட app-கள் உள்ளன. அதில் ஈடுபாடு இல்லையென்றாலோ, பொறுமை இல்லையென்றாலோ restricted grade தேர்வு எழுதலாம். Choose the best அடிப்படையில் ஒரு மணி நேரத் தேர்வு. இதில் தேர்ச்சிக்கு நாற்பது மதிப்பெண் எடுத்தால் போதுமானது. 

Restricted grade-க்கும் General grade-க்கும் என்ன வித்தியாசம் என்றால் ஒலிபரப்பும் கருவியில் உள்ள Watt அளவு அனுமதியில் உள்ள உச்சவரம்பு மட்டுமே. அஃது ஒரு அதரப்பழசான சட்ட நடைமுறை என்பதால் யதார்த்தத்தில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. 

சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத் போன்ற நகரங்களில் WPC,  தேர்வுகளை அவ்வப்போது நடத்துகிறது. தேர்வுக்கட்டணம் 100 ரூபாய் மட்டுமே. தேர்ச்சி பெற்ற பின் அழைப்புக்குறி பெற one time கட்டணமாக 20 ஆண்டுகளுக்கு 1000 ரூபாய், 40 ஆண்டுகள் அல்லது உங்களது 75 வயது வரைக்கும் 2000 ரூபாய் மட்டுமே. இடையில் வேறு எந்த கட்டணமும் கிடையாது. 

விண்ணப்பித்த பின் தேர்வு எழுதி, முடிவு வெளியிடப்பட்டு, பின்னர் டெல்லிக்கு விண்ணப்பித்து அழைப்புக்குறி பெற குறைந்தது 9 - 12 மாதங்களாகும். அதனால் ஹாம் வானொலி உங்களது படிப்பையோ, அலுவலகப் பணிகளிலோ இடையூறு செய்யாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். 

அழைப்புக்குறி பெற்ற பின் வயர்லெஸ் சாதனங்கள் வாங்கினால் போதுமானது. காவல்துறையினர் பயன்படுத்தும் வாக்கி  டாக்கி போன்ற கருவியை Handy என்றும் அவர்களது வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய பெட்டி போன்ற தனியாக மைக் உடன் கூடிய கருவி Base என்றும் சொல்லுவார்கள். Handy  3000 ரூபாயிலிருந்தும், ஆன்டெனாவுடன் கூடிய Base 6000 ரூபாயிலிருந்தும் கிடைக்கிறது. சீனத் தயாரிப்புகள் வழக்கம்போல் ஹாம் சந்தையிலும் புதிய பாய்ச்சலை உண்டாக்கியிருக்கிறது. மகிழ்வுந்திலும் ஆன்டெனா வைத்து Base கருவியை வைத்துக்கொள்ளலாம். 

ரெட்மி, சாம்சங், ஐபோன் என்று செல்போனில் பல்வேறு range இருப்பதைப்போல விலையுயர்ந்த பிராண்டு கருவிகளும் ஹாம் வானொலிப்  பயன்பாட்டில் உண்டு. உங்களுடைய தேவை, பொருளாதார வசதி போன்றவற்றைப் பொறுத்து கருவிகளை வாங்கலாம். மற்றபடி, இது வரவேற்பறையில் வைக்கக்கூடிய பொருள் அல்ல என்பதால் விலையுயர்ந்த சமாச்சாரமாக இருக்குமோ என்று அச்சப்படத் தேவையில்லை. 

VHF (Very High Frequency, 30 - 300 MHz) அலைவரிசைக்கு Repeaters உண்டு. ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒலி அலைகளைப் பெற்று amplify செய்து வேறு ஒரு அலைவரிசையில் அதிக சக்தியுடன் ஒலிபரப்பு செய்யக்கூடிய தானியங்கி கருவியை ரிப்பீட்டர் என்பார்கள்.  கோயமுத்தூர், உடுமலைப்பேட்டை, கொடைக்கானல், இராஜபாளையம், ஏற்காடு, சென்னை என பல இடங்களில் தன்னார்வலர் குழுக்களால் ரிப்பீட்டர்-கள் நிறுவப்பட்டு தினசரி காலையும் மாலையும் வருகைப்பதிவுகள் நடத்தப்படுகின்றன. 

புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் நமது செல்போன் நெட்வொர்க்குகள் டவர் சாய்ந்தோ, வெள்ளத்தில் மூழ்கியோ, கேபிள்கள் அறுந்தோ, மின் இணைப்பு இல்லாமலோ செயல்படாமல் நின்றுவிடும். ஆனால் ஹாம் ரேடியோவில் பேசுவது நேரடியாக  ரிப்பீட்டரை அடைந்து காற்றில் பயணித்து அடுத்த ஹாம் கருவியை அடைவதால் நடுவில் எத்தகைய உபகரண உதவியும் தேவையில்லை. அதனால் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் தகவல் தொடர்பை மீட்டு, உதவி புரிவது ஹாம் நெட்வொர்க் மட்டுமே. 

காவல்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, போக்குவரத்துக் கழகம், மாநகராட்சிகள், தீயணைப்புத் துறை போன்றவற்றின் வயர்லெஸ் நெட்வொர்க் அலைவரிசை அந்தந்தத் துறை பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதோடு பேரிடர் காலங்களில் அவர்களது துறை சார்ந்த தேவைகளுக்கே அந்த அலைவரிசை போதாது என்பதால் பொதுமக்களின் அவசரகால தகவல் தொடர்புக்கு ஹாம் ரேடியோ ஆர்வலர்களின் சேவை மிகவும் முக்கியமானது. 

ஹாம் ரேடியோ பயனாளர்களுடன் காடுகளில் ட்ரெக்கிங் செல்லும் குழுக்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள ஒரு குறிப்பிட்ட Simplex mode அலைவரிசையிலும் (3 - 10 கிமீ தொலைவுக்குள்), நகரப் பகுதிகளுக்குத் தொடர்புகொள்ள ஒரு ரிப்பீட்டருடனும் இணைந்திருப்பர். அதனால் காட்டுக்குள் காணாமல் போவதோ, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிக்குவதையோ தவிர்க்கப்படும். மேலை நாடுகளில் இத்தகைய நடைமுறைகள் பரவலாக புழக்கத்தில் உண்டு. சுனாமி, கஜா, ஒக்கி புயல் காலத்தில் ஹாம் வானொலியாளர்கள் மிக முக்கிய களப்பணியாளர்களாக இருந்தனர். தேனி குரங்காணி காட்டுத்தீ விபத்தில் சிக்கிய குழுவில் வயர்லெஸ் கருவிகள் யாரிடமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கும்போது May day, May day, May day என்று சொல்லி தங்களது பெயர், இடம், ஆபத்தின் தன்மை, என்ன மாதிரியான உதவி தேவை என்பதை சொல்லுவது ரேடியோ ஒலிபரப்பில் அனைத்து அலைவரிசைகளிலும் உள்ள நடைமுறை.  வயர்லெஸ் ரேடியோவை அருகிலுள்ள ரிப்பீட்டர் அலைவரிசையில் stand by-இல் வைத்துவிட்டு தங்களது அலுவல்களைப் பார்ப்பது ஹாம் பயனாளர்களின் பழக்கம். அதனால் ரிப்பீட்டர்களில் May day அழைப்பு வந்தால் யாரோ ஒருவர் உடனடியாக பதில் சொல்லுவதோடு உடனடியாக அடுத்தகட்ட உதவி நடவடிக்கைகளுக்கு ஆவண செய்வர். அதாவது யாரோ ஒருவர் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நமக்காக உதவக் காத்திருப்பார். 

One world, one language என்ற வாசகத்துடன் Hobby என்றே அறியப்படும்  ஹாம் வானொலி மிகவும் இயல்பாக அன்றாடம் பயன்படுத்தப்பட்டாலும் அவசர காலங்களில் மிக முக்கியமானது. வரும் ஆண்டில் எதையாவது புதிதாகக் கற்கவேண்டும் என்று நினைத்திருந்தால் ஹாம் ரேடியோ பயன்பாட்டைக் கற்றுக்கொள்ளுங்கள். என்றாவது ஒருநாள் அஃது உங்களைப்  பெருமைப்படச் செய்யும். 

73,
பிரபு
VU3WWD