Showing posts with label இடஒதுக்கீடு. Show all posts
Showing posts with label இடஒதுக்கீடு. Show all posts

Tuesday, June 16, 2015

இட ஒதுக்கீடும் பார்ப்பனர்களின் அங்கலாய்ப்பும்


  • இட ஒதுக்கீடு என்றால் என்ன? 
  • ஏன் இட ஒதுக்கீடு?
  • யாருக்காக இட ஒதுக்கீடு? 
  • எதுவரையில் இட ஒதுக்கீடு? 

இந்த கேள்விகளுக்கெல்லாம் முதலில் பதிலை அலசிவிட்டு பிறகு இந்த பதிவின் பிரதான கருத்தை தொடர்ந்தால் புரிதலுக்குகூடுதல் துணை புரியும் என்று கருதுகிறேன்.

ஒரு குறிப்பிட்ட பொருளை ஆண்டாண்டு காலமாக ஒரேபிரிவினரே முழுவதுமாக ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள்உண்மையிலேயே நடுநிலையாளர் என்றால் என்னசெய்வீர்கள்? அல்லது என்ன செய்ய வேண்டும்?

மற்றெவரும் அருகிலும் நெருங்கிவிடாதபடி எல்லோரையும் விரட்டியடித்து முழு அராஜகப் போக்கோடு அனைத்தையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற நிலைப்பாடுடைய பிரிவினரிடமிருந்து அந்த குறிப்பிட்ட பொருளை மீட்டு, எல்லோருக்கும் அந்த பொருள் கிடைப்பதற்கான வழியை ஏற்படுத்துவீர்கள் அல்லவா? 

இத்தனை காலமும் தங்களுக்கும் முழு உரிமையான ஒரு பொருளை தூர நின்றுபார்த்து ஏக்க பெருமூச்சுவிடவும் மீறி அந்தப்பொருளை கைக்கொள்ள முனைந்தோரின் உயிரும் பறிக்கப்பட்டதையும் கருத்தில் கொண்டு நீங்கள் ஒருவிதிமுறையை உருவாக்குகிறீர்கள். 

அதன்படி ஒருபிரிவினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த பொருளைமுழு சொந்தம் கொண்டாடி அனுபவித்ததையும் மற்றொரு பிரிவினர் ஒடுக்கி நசுக்கப்பட்டதையும் கண்ணுறும் நீங்கள் இனியும் இவ்வாறு இவர்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுதல் மனிதத்தன்மைக்கு உகந்தவிஷயமல்ல என்று கருதி, இனிஅந்த பொருளின் குறிப்பிட்ட சதவீதத்தை இப்படியாக ஒடுக்கி ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு முதலில் வழங்கிவிட்டு மீதமுள்ளதை பொதுவில் அனைவரும் பங்கீட்டுக்கொள்ளலாம் என்ற நியாயமான ஏற்பாட்டைமுன்வைக்கிறீர்கள்.

இந்த ஏற்பாட்டின் மூலம் இத்தனை காலமாய் முற்றிலுமாய் அந்த பொருளை அடைவதற்கே தகுதியற்றவர்கள் என்று விரட்டப்பட்ட பிரிவினரில் சிலருக்கேனும் அந்த பொருளை அடைவதற்கான வழி பிறக்கிறது. அதே சமயம் தாங்களே முழுதுமாய் அனுபவித்த ஒரு பிரிவினரில் வெகு சிலருக்கு இந்த பொருள் இப்போது கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படுகிறது. இதுதான் இன்று இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பலருடைய ஆதங்கமும் ஆவேசமுமாக இருக்கிறது. 

இந்த பதிவில் இவ்வளவு நேரமாய் நான் குறிப்பிட்ட அந்த பொருள் என்ன தெரியுமா? மனிதனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் ஜனநாயக நாட்டின் அரசு வழங்கியுள்ள உரிமைகளும் வாய்ப்புகளும் தான். அந்தஉரிமைகளும் வாய்ப்புகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டியதற்கான தளத்தை உருவாக்குகிற ஏற்பாடே இடஒதுக்கீடு. தொடக்கத்தில் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் விடை தேடவில்லையே? மனதுக்குள் மீண்டுமொரு முறை அந்த கேள்விகளை படித்துப் பாருங்கள். தொடர்ந்துபேசலாம்..

இட ஒதுக்கீடு என்பது அனைவருக்கும் சம உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைப்பதற்கான தளத்தை உறுதிப்படுத்தும் ஒரு ஏற்பாடாகும். அறிவு கொண்டு சிந்திக்கும் எவரும் பிறப்பினாலேயே ஒருவன் உயர்ந்தவன் என்றும் அதன் பொருட்டு பல சிறப்புரிமைகளையும் வாய்ப்புகளையும் பெறுவதற்கு தகுதியானவன் என்றும், மற்றொருவன் அதே பிறப்பின் பொருட்டு தாழ்ந்தவன் என்றும் எத்தகைய உரிமைகளும் வாய்ப்புகளும் பெறுவதற்கு அருகதையற்றவன் என்றும் யாரேனும் சொல்வாராகில் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? 

அல்லது அதை நாங்கள் ஏற்படுத்தவில்லை, அதுமுன்னோர்களின் ஏற்பாடு, கடவுளின் சித்தப்படியான செயல், அதை மாற்றுவதோ, எதிர்ப்பதோ கடவுளுக்கும் மதத்திற்கும் நமது பாரம்பரியத்திற்கும் முற்றிலும் முரணான செயல் என்று சாக்குப்போக்கு சொல்பவர்களைத்தான் சகித்துக்கொள்ள முடியுமா? 

ஆக, மனிதனாகப்பட்டவர்கள் அனைவரும் சமமே, எனவே அனைவரும் சம உரிமையும் வாய்ப்பும் பெறுவதற்கான தளத்தை அமைத்து தருவதே அறிவுடைய செயலாகுமல்லவா? அதற்காகவே இடஒதுக்கீடு.

சரி, அது என்ன அனைவரும் சம உரிமையும் வாய்ப்பும் பெறவதற்கான 'தளத்தை' உருவாக்குவது? அது என்னதளம்? 

நீங்கள் எல்லோரும் அல்லது பெரும்பாலானவர்கள் கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த மைதானத்தை வடிவமைப்பவர் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தை வடிவமைத்துவிட்டு பந்து வீச்சாளர்களின் செயல்பாடு திருப்திகரமாகவே இல்லை என்று மற்றவர்கள் குற்றம் சாட்டினால் அது எப்படி தகு செயலாக இருக்கமுடியும்? 

முதலில் பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் என இரு தரப்பினரும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ஆடுகளன் அமைக்கப்பட வேண்டுமில்லையா? இதில் ஏதேனும் ஒருபிரிவினருக்கு மட்டும் ஆடுகளத்தை சாதகமாக அமைத்துவிட்டு ஆட்டத்தை நடத்தினால், ஒருவேளை பார்ப்பதற்கு சுவராஸ்யமாக இருக்கலாம், ஆனால்ஒருபோதும் அது நியாயமான ஏற்பாடாகாது என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் தானே?

ஒவ்வொரு தனிமனிதனும் விரும்புவது 

  • சமூகத்தில் தனக்கு சமஅந்தஸ்து, 
  • பொருளாதார நிறைவு 
  • மற்றும் நட்புடன் கூடிய சமூக கூட்டுறவு தான். 

இந்த சமூக அந்தஸ்தை, பொருளாதார நிறைவை அடைய வேண்டுமெனில் ஒருவனுக்கு வேலை அவசியம். அந்த வேலையை யாரும் இலவசமாக தருவார்களா? அதற்கு தக்க கல்வி அவசியம். ஆக மற்ற யாவரையும் போல ஒருவன் பொருளாதார நிறைவை அடைய வேண்டுமானால் அவனுக்கு வேலை அவசியம். அதுவும் அவன் பிறப்பின் பொருட்டு ஒதுக்கப்படுகிற கீழ்நிலை தொழில்களாக மட்டுமல்லாமல் சமூக அந்தஸ்தை பெற்று தரக்கூடிய பணியாகவும் இருக்கவேண்டும். 

ஆனால் இந்த கல்வியும் வேலைவாய்ப்பும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு பிரிவினருக்கு மட்டுமே பாத்தியப்பட்ட பொருளாகி, மற்றெவருக்கும் கைக்கூடாத பொருளாக மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆக ஒருவன் மற்றவர்களைப் போலவே சம உரிமையும் வாய்ப்பும் பெறுவதற்கான அடிப்படைத் தளங்களான கல்விமற்றும் வேலைவாய்ப்பில் எல்லோருக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதே இட ஒதுக்கீட்டின் நோக்கமாகும்.

அப்படி எனில் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இடஒதுக்கீடு? இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கும்மேலாகிவிட்டதே, இப்போது தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட எவ்வளவோ பேர் பொருளாதார நிலையில்உயர்ந்துவிட்டார்கள், அரசு பதவிகளை பெற்றுவிட்டார்கள்.இப்போது எல்லோருக்கும் விழிப்புணர்வு இருக்கிறது.எல்லோரும் கல்வியடைய வாய்ப்பிருக்கிறது. ஆனால்இன்னும் எத்தனை காலம் இட ஒதுக்கீடு என்ற பெயரில்பார்ப்பனர்களை வஞ்சிக்கப்போகிறீர்கள்? இதுவும் சாதிஆதிக்கம் தானே என்பவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த ஒதுக்கீடு நீடிக்கவேண்டும் என்பதை பார்ப்பதற்கு முன் இந்த பதிவின்பிரதான நோக்கத்திற்கு வருகிறேன். இன்று இட ஒதுக்கீட்டைஎதிர்ப்பவர்கள் ஓயாமல் சில கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

  • பின்தங்கியவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்குத்தான் இடஒதுக்கீடு எனில் பார்ப்பனர்களில் ஏழைகளில்லையா? எத்தனையோ பேர் நன்கு படித்தும்கூட உயர்கல்வியில், வேலைவாய்ப்பில் இடம் கிடைக்காமல் அல்லலுறுகிறார்களே, இது அநீதி இல்லையா? இப்படி இடஒதுக்கீட்டினால் பார்ப்பனர்கள் பாதிக்கப்படுவதற்கு உங்கள் பதில் என்ன? 
  • பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு எவ்வகையில் சரியில்லையென மறுக்கிறீர்கள்? அது உண்மையிலேயே சமூகத்தில் பின்தங்கிய அனைவருக்கும் முன்னேறுவதற்கான வாய்ப்பை அளிக்கிறதல்லவா? அதை நீங்கள் மறுப்பதன் மூலம் பார்ப்பன விரோதத்தையல்லவா வெளிப்படுத்துகிறீர்கள்?
  • இட ஒதுக்கீடு என்ற பெயரில் மதிப்பெண்களை குறைத்து தேர்ந்தெடுப்பதால் தகுதியற்றவர்கள் பதவிக்கு வரக்கூடிய ஆபத்து உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? மருத்துவம், கல்வி, நிர்வாகம் போன்றவற்றில் இட ஒதுக்கீடை பின்பற்றுவதால் தகுதியற்றவர்கள் அந்த பொறுப்பிற்கு வரக்கூடிய சூழல் ஏற்படுகிறதென்பதை ஏற்கிறீர்களா, மறுக்கிறீர்களா?

சரி, கேள்விகள் போதும். இனி விடைகளை அலசலாம்.

முதல் கேள்வி பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி. உண்மையாகவே பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுகிறார்களா? இன்றும் அரசின் பெரும்பாலான பதவிகளை பார்ப்பனர்களே ஆக்கிரமித்திருக்கிறார்கள். 2012 ஆம் ஆண்டு வெளியான தேசிய புள்ளி விவரப்பட்டியலின் படி மத்திய அரசின் செயலாளர் பதவிகளில் ஒரு தாழ்த்தப்பட்டவர் கூட இல்லை. 

அரசின் அதிகாரமிக்க பதவிகள் அனைத்தும் பார்ப்பனர்கள் மற்றும் ஆதிக்க இடைநிலைச் சாதியினராலேயே ஆக்கிரமிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களோ இடஒதுக்கீடு இருந்தும் இன்னும் அதிஉயர் பதவிகள் ஏதும் அடையப்படாமலே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம்?

இன்று அரசு பணியில் ஆசிரியனாக இருக்கும் நான் என் ஊரிலேயே முதல் நபராய் கல்லூரிப் படிகளில் காலெடுத்து வைத்தவன். அப்படியானால் எனக்கு முன் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? எனக்கே இரண்டு அண்ணன்கள் உண்டு. அவர்களின் கதி? முறையான வழிகாட்டுதலும் பயிற்சியும் பொருளாதார பின்புலமும் இல்லாமல், உங்களுக்கெல்லாம் படிப்பு ஒரு கேடா என்று பெங்களூர், சென்னை, மும்பை என கூலித் தொழிலாளிகளாகி கண்ணீரோடு வாழ்வை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

ஏனென்றால் எங்கள் பெற்றோர்கள் படிப்பு வாசமே அறியாதவர்கள், ஆண்டைகளின் அடிமைகளாகவே தங்கள் ஆயுளை கரைத்தவர்கள். தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கவோ, கல்வியை கண்காணிக்கவோ, மேல்படிப்பு குறித்த விவரமேதும் அறியாதவர்களாகவே இருந்தார்கள். 

ஆனால் பார்ப்பனர்கள் மற்றும் ஆதிக்க இடைநிலை சாதிகளின் நிலை அப்படியில்லை. அவர்களின் பெற்றோர்கள் படித்தவர்களாக, பொருளாதார பின்புலம் உடையவர்களாக, மேற்படிப்புகள் குறித்த உலக அறிவு உடையவர்களாக இருந்தார்கள். அதனால்தான் அவர்களின் பிள்ளைகள் எளிதில் வேலைவாய்ப்புகளை கைப்பற்றுகிறார்கள். 

ஆனால் மறுபுறமோ கல்லூரியை எட்டிப்பிடிக்கவே சுதந்திர ஜனநாயக நாட்டில் என் போன்றோருக்கு அறுபது ஆண்டுகள் தேவைப்படுகிறது. காரணம் வாய்ப்புகளும் உரிமைகளும் மறுக்கப்பட்ட பின்னனியுடைய தலைமுறைதான் காரணம். ஆனால் என்போன்று ஒன்றிரண்டு பேர் இன்று அரசுப் பணியில் இருப்பதாலேயே, தாழ்த்த்தப்பட்டவர்கள் முன்னேறிவிட்டார்கள், பார்ப்பனர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது. 

உண்மைதான், பார்ப்பனர்களிலும் ஏழைகள் இருக்கிறார்கள். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இட ஒதுக்கீட்டின் நோக்கம் பொருளாதார ஏற்ற தாழ்வை சமன்படுத்துவது மட்டுமல்லவே! இப்போதுதான் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து என்னைப் போன்று துளிர்விடவே ஆரம்பிக்கிறோம். ஆனால் ஒன்றிரண்டு பார்ப்பனர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக உங்கள் ரத்தம் கொதிக்கிறதே! ஓ, இதற்கு பெயர்தான் மனுநீதியா?

பார்ப்பனர்களில் ஏழைகளில்லையா, அவர்கள் இடஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதானே நிஜம் என்ற வாதம் இங்கே முன்வைக்கப்படுகிறது. ஆனால் 3 சதவீதமே உள்ள பார்ப்பனர்கள் இன்று பெற்றுள்ள வேலைவாய்ப்பு சதவிகிதத்தையும் மற்ற பிரிவினர்களின் வேலைவாய்ப்பு சதவீதத்தையும் உற்று நோக்கினாலே உண்மை விளங்கிவிடும். ஆனால் இதையெல்லாம் கவனமாக மூடி மறைத்துவிட்டு எங்கள் ஏழைப் பார்ப்பனர்களை காக்க யாருமேயில்லையா என்று குடம்குடமாய் கண்ணீர் வடிக்கிறார்கள். 

இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டதே எல்லாவற்றையும் நீயே அபகரித்துக் கொள்ளாதே, மற்றவர்களுக்கும் கொஞ்சம் கொடுப்பதே முறை என்று பகிர்ந்தளிப்பதற்காகத்தானே. அப்படி உரிமைகளும் வாய்ப்புகளும் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் போது, ஏற்கனவே அதை முழுபோகமாய் அனுபவித்தவர்களில் ஒரு சிலர் பாதிக்கப்படலாம். ஆனால் இந்த இட ஒதுக்கீட்டினால்தான் இதுகாறும் வாய்ப்புகளே மறுக்கப்பட்ட தலைமுறைகளில் ஒரு சிலர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் வாசத்தையே நுகர ஆரம்பித்திருக்கிறார்கள் எனும்போது இந்த மீச்சிறுபாதிப்பின் அளவு கண்டுகொள்ள தக்கது அல்ல.

அப்படியே நோக்கினும் அவர்கள் பார்ப்பனர்கள் என்பதற்காக பாதிக்கப்படுகிறார்கள் என்பது பொய்யினும் கீழான பொய். அவர்கள் பொதுப் பிரிவினராக வைக்கப் பட்டிருக்கிறார்கள், அவ்வளவே. இன்று தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்ட சதவிகிதம் 18+1 என்ற அளவிலிருக்கிறது. 100 சதவீதத்தில் அவர்களின் மக்கள்தொகை அளவைவிட குறைந்த அளவான 19 சதவிகித இடஒதுக்கீட்டினால் மற்ற பிரிவினர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதில் எந்தளவு உண்மையிருக்கிறது? 

ஆனால் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, ஆதிக்க இடைநிலைச் சாதியினரும் ஒரு கருத்தை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இட ஒதுக்கீட்டின் மொத்தபலனையும் அனுபவிப்பவர்கள் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்தான் என்ற பிம்பமானது வலிய திணிக்கப்படுகிறது. ஆனால் மொத்த விழுக்காட்டில் 19 சதவீதமே இப்பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது என்பதை கூர்நோக்கவேண்டும்.

அடுத்ததாக, இட ஒதுக்கீட்டினால் 'தரமற்றவர்கள்' உருவாகிறார்கள் என்பது பற்றி. ஒரு ஓட்டப்பந்தயப் போட்டி நடக்கிறதென வைத்துக்கொள்வோம். அங்கே தொழில்முறை பயிற்சிப் பெற்ற பலர் போட்டியில் பங்கேற்கிறார்கள். அவர்கள் மிகுந்த தெம்போடு காணப்படுகிறார்கள். காரணம் அந்த போட்டியில் ஏற்கனவே அவர்களின் மூதாதையர்கள் பலர் பட்டம் வென்றவர்கள். எனவே வெல்வோமா, மாட்டோமா என்ற அச்சமேயில்லை.

இந்த போட்டியை ஒரு மாற்று திறனாளி அருகே நின்று வேடிக்கைப் பார்க்கிறான். அவனுக்கும் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள ஆசை. ஆனால் நீயெல்லாம் இதற்கு தகுதியானவனல்ல, இந்த பக்கமே வரக்கூடாது என்று ஒவ்வொரு போட்டியின் போதும் விரட்டியடிக்கப்படுகிறான். 

காலங்கள் கடந்தோடுகின்றன. இனி குறிப்பிட்ட பிரிவினர் மட்டும்தான் போட்டியில் பங்கேற்கலாம் என்பது மாறி எல்லோரும் போட்டியில் பங்கேற்கலாம் என விதிகள் திருத்தியமைக்கப்படுகின்றன. இதுகாறும் வேடிக்கைப் பார்த்துக் கிடந்தவர்களில் சிலர் நல்லஉடல்நிலையோடும் முழு உடல் தகுதியோடுமிருந்தார்கள். அவர்கள் இனி ஏற்கனவே போட்டியில் பங்கேற்பவர்களுடன் சேர்ந்து தகுதி ஓட்டப் போட்டியில் பங்கேற்கலாம் என முடிவுசெய்யப்பட்டது.

ஆனால் சில மாற்றுத் திறனாளிகளும் இருந்தார்களல்லவா? அவர்கள் இந்த போட்டியாளர்களால் விரட்டியடிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தங்கள் உடல் உறுப்புகளை இழந்தவர்கள். அவர்களையும் மற்றெல்லாரையும் போல ஓடி, முடிந்தால் வெற்றிப் பெறுங்கள் என தட்டிக்கழிப்பது அறிவுடைய செயலாகுமா? ஆகாதல்லவா, அதனால்தான் இந்த தகுதி ஓட்டப்பந்தயத்தில் சிறப்புவிதியொன்று உருவாக்கப்படுகிறது. 

அதன்படி இவர்களின் உடல்அங்க இழப்புகளுக்கேற்ப சில பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள். நீங்கள் முழு தூரத்தையும் ஓடி கடக்க வேண்டாம், இந்தளவிற்கான தூரத்தை கடந்தாலே போதுமென பிரிவினருக்கு ஏற்றபடி கடக்க வேண்டிய தூரத்தில் சில சலூகைகள் காட்டப்படுகின்றன. இது முழு உடல்நலன் மற்றும் தகுதியோடிருப்பவரும் மாற்றுத் திறனாளியும் ஒரே அளவுகோலில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்று அறிவுடையோர் சிந்தித்து எடுத்த முடிவு. இதில் என்ன தவறிருக்கிறது?

சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, முடக்கப்பட்டவர்களுக்கு அரசியல் சட்டப்படி தகுதி மதிப்பெண்கள் மற்றும் வயதுவரம்பில் சில சலூகைகள் காட்டப்படுகின்றன. அவர்களின் முடக்கப்பட்ட நிலையையும் அவர்களால் மற்ற பிரிவினரோடு பொதுப் பிரிவில் போட்டியிட்டு வெற்றிப்பெறுவது இயலாத விஷய மென்பதால் அவர்களும் போட்டியில் பங்கேற்க ஏற்ற வகையில் இந்த ஏற்பாடு துணை செய்கிறது. 

ஆனால் இதை தவறு என்பவர்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இன்று தகுதியான, திறமையான அனைவரும் பொதுப் பிரிவில் தேர்வெழுதி வென்றவர்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதற்கு ஏதேனும் சான்று இருக்கிறதா? அப்படி ஏதேனும் இதுவரை நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? ஓரிரு மதிப்பெண்களில் சலூகை காட்டப் படுவதாலேயே தகுதி காணாமல் போய்விடுமெனில் அரசு இடஒதுக்கீட்டின்படி உயர் கல்வியில் இடம் கிடைக்காமல் பணக்கட்டுகளை வீசி நிர்வாக ஒதுக்கீட்டில் இடம்பெற்று படிப்பவர்களின் தகுதியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தகுதி பற்றி கொதித்தெழும் பலரும் இப்படியான பண தகுதியினால் தான்இடம் பெற்று படித்தவர்களாக இருக்கிறார்கள், என்ன ஒருமுரண் இது!

உண்மை தெளிவோம்.

http://dleojoseph.blogspot.in/2014/12/blog-post_90.html

பொருளாதார‬ ரிதியான இடஒதுக்கீடு

பொருளாதார‬ ரிதியான இடஒதுக்கீடை ஏறகவேணடியது தானே?
அதைகண்டு ஏனதொடைநடுஙகுகிறீர்கள்?

உலகெஙகும் மத-நிற-மொழி-பண வேறுபாட்டால் ஏறறதாழவுகள் இருக்கினறன. அதறகேற்ப பலநாடுகளில் இடஒதுக்கீடும் இருக்கினறன.

க்ரிமிலேயரை பற்றி நா கூசாமல் பேசும் விசக்கிருமிகளே! கேடகும் கேள்விகளுக்கு அறிவிருந்தால சுய புத்தியிருநதால பதிலதாருஙகள்!

  1. மதத்தால ஏறபடும் ஏறற தாழ்வை மதம மாறி தீர்ககலாம் - ஆனால் இநதியாவில சாதி மாற முடியுமா?
  2. கறுப்பநிறமான மைக்கேல்ஜாகசன் பிளாஸ்டிகசர்ஜரிமுலம் வௌளையாக மாறமுடிநதது - இநதியாவில் சாதி மாற முடியுமா?
  3. ஒரு மொழியிலிருநது இனனொரு மொழிக்கு மாற முடியும் அதை படித்தால - இநதியாவில சாதிமாறமுடியுமா??
  4. ஏழையாகயிருப்பவன் பணக்காரனாகலாம் உழைத்தால், பொருளாதாரம் மாறக்கூடியது! இனறைய ஏழை நாளைய பணக்காரன, நாளைய ஏழை இனறைய பணக்காரன. பணம் மாறக்கூடியதே! இநதியாவில சாதி மாற முடியுமா?
  5. நாஙகள் சேரியில் அடைபட காரணம் சாதியா?ஃபணமா??
  6. காலில செருபபிடாதே! இட்டால் உன் உறுப்பறுப்போம் எனறு பெரிய பருப்பாய் ஆதிக்கசாதி வெறியர்கள் கிராமத்தில சில இடஙகளில் துடிக்க காரணம், சாதியா? பணமா?
  7. காஞசிபுர வரதராஜ பெருமாள கோவில தேர் சேரிக்கு வர மறுத்தது எதனால் பணத்தாலா? சாதியாலா?
  8. திருமண விளம்பரத்தில எல்லா சாதியும் மதமும் சம்மதம் EXCEPT SC ST என்று எழுத காரணம் சாதியாலா? பணத்தாலா?
  9. அனறு (இனறும்சில இடஙகளில்) 8வயது ஆதிக்கசாதி சிறுவன் 80 வயது பட்டியலின் பெரியவரை தன தாத்தா வயதிலுளளவரை "டேய்! அவனே! இவனே!" என்று ஒருமையில அழைத்ததும், பெயர் சொலலி அழைத்ததும் சாதியாலா? பணத்தாலா?
  10. திண்ணியத்தில் பட்டியலின் மக்கள் ஒருவர் வாயில மலத்தை திணித்த கோடூரம் நடநதது, சாதியாலா? பணத்தாலா?
  11. கண்ணகி & முருகேசன் காதலால நட்நத கௌரவ கொலைகளுக்கு காரணம், சாதியா? பணமா??
  12. எங்கள் மேலவளவு முருகேசன, தனிதொகுதியில் நினறு வெனறு பஞ்சாயத்து தலைவரானதால் வெட்டிகொனறாாகளே? அது சாதியாலா பணத்தாலா?
  13. கிராமஙகளில ஆதிக்கசாதி தெருக்களில் ஒரே சாதியை சேர்நத ஏழையும் பணக்காரனும் வாழகிறார்கள், ஆனால் பட்டியலினக்காரன பணமுள்ளவனாகயிருநதாலும் ஒருவீடு வாஙகவும் முடியாது, வாழவும் முடியாது. இதறகு காரணம் சாதியா? பணமா?
  14. பட்டியலின மக்களுக்கு120 வகையான தீணடாமை தடைகளை போட்டீாகளே இதறகு காரணம் சாதியா பணமா??
  15. தலிததல்லாதார் இயக்கம்க ணடார்களே தமிழ்நாட்டில்! அதறகு காரணம் சாதியா, பணமா?

இபபடி கேளவிகள் ஏராளமாய இருககினறன! இதறகெல்லாம் பணம் தான காரண மெனறால் பண ரீதியான (பொருளாதார) இடஒதுக்கீடை ஏறகிறோம்.
சாதிதான காரணமெனறால் மூலத்தைமுடிவிட்டு மூலையில் போய முக்காடிட்டு பொத்திக கொணடு இருஙகள்!!!

கிருமியை அழிக்க கிருமியை பயனபடுத்துவது போல முளளை முளால் எடு்ப்பது போலத்தான் எநத சாதியால நாஙகள் ஒடுக்கபட்டோமோ அநத சாதியால் மறுக்கபட்ட எஙகள் உரிமைகளை பெறுகிறோம் விசக்கிருமிகளே!
நாஙகள் மட்டுமல்ல பிசியும்-எம்பிசியும் தான்.

தொடை நடுக்கம் யாருக்கு எஙகளுக்கா? தொடைநடுக்கம் வநததால்தான் சம்ததுவ “மயிரு“பேசுகிறீாகள் படிப்பிலும் வேலைவாயப்பிலும்! பொதுவில இருக்கும் அத்தனை காரியஙகளிலும் முழுபலன் அடைவது ஆதிக்கசாதியே!!இடஒது்க்கீடில்லாத அத்தனையிலும் பெரும்பானமை பலத்தை வைத்து பட்டியலின மக்களை மிரட்டி முற்றிலுமாக வஞ்சித்து வைத்திரு்க்கிறீாகள்!!

  1. இடஒது்கீடில்லாத அரசு கோயிலகளின் நிலகுத்தகை பட்யிலினமக்கள கைகளில்இருக்கிறதா? 
  2. அரசு அலுவலகஙகள் ஒன்றாவது சேரிகளில்இயஙகுகிறதா?பொருளாதாரத்தை துாககி வர காரணம்என்ன?மொத்தமாகஆட்டையைபோடத்தானே???யாருக்கு தொடைநடுக்கம்!!

தொடைநடுஙகிகளே! இடஒதுக்கீ்டடின மூலமாக பட்யிலினமக்கள படித்து உஙகளுக்கு இணையாக சிறுக சிறுக வருவதால்- பட்டியலினமக்களின வாயபபுகளை நரிதநதிரமாக பறிக்க நவீன விஞ்ஞானம் ஆப பு வைத்துவிட்டதால் நாளடைவில் நமக்கு இணையாக வநது விடுவாாகளோ, அல்லது நம்மை மிஞ்சி விடுவார்களோ எனறு பொறாமையில் புழுத்து தொடை்நடுஙகித்தானே பொருளாதார இடஒது்க்கீடை்துாக்கி கொணடுவருகிறீாகள்?

உணமையிலேயே நீஙகள் தொடைநடுஙகிகள் இல்லை எனறால் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒது்கீடிருப்பது, போல நீா-நில-கனிம-அரசியல வளஙகளில் உலக வஙகி கடனில், அரசு பெரும் காணட்ராக்டுகளில், அரசு மநதிரிபதவிகளில், அரசு உயர்பதவிகளில், அரசு நிலகுத்தகைகளில், அரசு வாடகை கடைகளில் 20 சதம் கொணடு வர தயாரா?

பதிலசொலலுஙகள் தொடைநடுஙகிகளே?

https://www.facebook.com/kalai.mathi.982/posts/622354791228815

எதன்‬ அடிபபடையில் இடஒதுக்கீடு இருக்க வேணடும்

எதன்‬ அடிபபடையில் இடஒதுக்கீடு இருக்க வேணடும்:
  1. சாதியாலா?
  2. பொருளாதாரத்தாலா?
  3. இரணடுமா??
ஆயுத எழுத்து விவாதத்தில மக்கள் கருத்து:
  1. சாதி 26 %
  2. பொருள் 64 %
  3. இரணடும்10 %
சுருக்கமான கேள்விகள் 10, முடிநதால் பதில தரவும்.
(பதில தர முடியாது எனபதால் தானே இநத இடஒதுக்கீடு சம்பநதமான விவாதஙகளில் பட்டி யலின மக்களை அனைவருக்கும் சமவாயப்பு தரும் சமத்துவ "டி-வி" புலிகள் புறக்கணிக்கிறாாகள்! காலம் மாறும், மாறறுவோம்)
  1. கோயில தேர்கள் ஏழை ஆதிக்க சாதி தெருக்களுக்கு போகிறதே!!ஏன ஏழை சேரிமக்கள தெருக்களுக்கு பல இடஙகளில் போவதிலலை? சாதியாலா? பணத்தாலா?
  2. ஏழை ஆதிக்க சாதி அனைத்து கோயிலகளிலும் நுழைய வழி பட எந்த தடையுமிலலையே! ஆனால்ஏழை பட்டியலின மக்கள் நுழைய தடையிருக்கிறதே! அதறகு என்ன காரணம்? சாதியாலா? பணத்தாலா?
  3. எஙகள் சேரிக்குள் கோயில் தேர் நுழையவிலலை யென்றால் உங்களை விட்டு நழுவி இஸலாம் தழுவுவோம், சாதி கூட்டணி மத்ததை கை கழவுவோம், எனறு மிரட்டியவுட்ன - தேரை கொணடு வருகிறோம் என படியிறஙகி பணிந்தது எதனால்? சாதியாலா? பணத்தாலா?
  4. ஏழை ஆதிக்கசாதி தெருக்களில் ரேசன கடை மற்றும் அரசு சம்பநதமான அலுவலகஙகள் இயங்குகினறனவே! ஆனால் ஏழை சேரி மக்கள தெருக்களில்அது ஏன் இயஙக வில்லை? சாதியாலா? பணத்தாலா?
  5. மணம்க்கள் தேவை விளம்பரஙகளில் எநத சாதியானாலும் பரவாயிலலை SC/ST மட்டும் வேணடாம் எனகிறீர்களே! ஏன எந்தசாதியானாலும் பரவாயில்லை ஏழை மட்டும் வேணடாம் என- ஏனஅப்படி விளம்பரம் தருவதிலலை? வாழ்க்கையை ஆரம்பிக்கிற திருமணத்தில முதல் தொடக்கபுள்ளி சாதியா? பணமா?
  6. இருசாதியினர் காதலிக்கிறார்கள், ஒத்த பொருளாதார வசதியுள்ளவாகளாகயிருநதும் அல்லது பட்டியலினத்தை சேர்நதவன் பணக்காரனாகயிருந்தும், அநத காதல்அழிக்கபடுகிறது (கௌரவ கொலை கூடசெயயபடுகிறதே) இது சாதியாலா? பணத்தாலா?
  7. கிராமத்திலஆதிக்கசாதி கல்லறையில் அல்லது சுடுகாட்டில ஆதிக்கசாதி ஏழைக்கும் இட்மஉண்டு ஏழைபணகாரன பேதமில்லைஅஙகே! ஆனால் பட்டியலின்காரன ஏழையாகயிருநதாலும் பணக்காரனாகயிருநதாலும் இஙகு இடமிலலையே! இது ஏன? சாதியாலா? பணத்தாலா?
  8. தனிததொகுதி தவிர பொதுததொகுதியில் பட்டியலின மக்கள் போட்டியிடடால அவர்கள தோறகடிக்ககபடுகிறாாகளே! ஆதிக்கசாதி ஏழையால் கூட வெல்லமுடிகிறது, பொது தொகுதியில் பட்டியலின மக்கள பணமிருநதும் வெல்லமுடியாதது ஏன்? சாதியாலா? பணத்தாலா?
  9. எஙகள் மேலவளவு முருகேசன் தனித தொகுதியல் நினறு பஞ்சாயத்து தலைவர்ஆகிவிட்டாா எனபதற்காக வெட்டி கொல்லபட்டாரே! எத்தனையோ ஏழைஆதிக்க சாதி பஞ்சாயத்து தலைவர்கள வெட்டி கொல்ல படாமல் உயிரோடு திரிய எஙகள் மேலவளவு முருகேசனை நாஙகள் இழந்தது சாதியாலா? பணத்தாலா?
  10. ஆதிக்கசாதி தன சாதியிலுள்ள ஏழையை திட்ட வேணடுமானால இழிவு படுத்த வேணடுமனால "பிசசைகார தே்-டியா மகனே, கஞ்சிககுவழியற்ற கபோதியே என்று திட்டாமல், பற தே-டியா மகனே- பற க்ண்டார -ளி மகனே: - என்று சாதியை வைத்து இழிவுபடுத்த காரணம் பணமா? சாதியா?
இபபடி பல கேளவிகள் கேட்டால் எவனும் பதில தரமாட்டான்!
பிறப்பிலிருநது இறப்பு வரை எல்லாவற்றிலும் சாதி பாாப்பாாகள்.

இபபடிபட்டஅயோக்கிய இனம் உலகத்தில
எஙகாவது உண்டா? உண்டா? உண்டா?

https://www.facebook.com/kalai.mathi.982/posts/629635910500703

இடஒதுக்கீடு முறைக்கு எதிராக பேசுபவர்கள்

இந்தியாவில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக பேசுபவர்களை மூன்றாக பிரிக்க இயலும்:
Group A:இவர்கள் 'இட ஒதுக்கீட்டை' மட்டும் (மட்டும் என்பது இருமுறை ஒலிக்கின்றது) எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென நினைப்பவர்கள். உண்மையில் ஜாதியை ஒழிக்க விருப்பம் இல்லாதவர்கள். இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்துவிடுமென பொய் பிரச்சாரம் செய்பவர்கள்.
Group B:மேற்கண்ட முதல் குரூப்பின் பொய் பிரச்சரத்திற்கு பலியாகி இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்துவிடுமென நினைப்பவர்கள்.
Group C:இவர்கள் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மட்டும் எப்படியாவது காலி செய்துவிடவேண்டுமென நினைப்பவர்கள்.
முதலில் முதல் குரூப்பை பற்றி காண்போம்

--------------------------------------------------------------------------------------------------------------------------
Group A:
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த முதல் வகை மனிதர்கள் நேர்மையற்ற இந்துக்கள். பெரும்பாலும் அறிவுஜீவிகளாக தங்களை காட்டி கொள்பவர்கள்.பத்திரிக்கை, சினிமா போன்ற துறைகளிலும் இருப்பார்கள். மேலும் தங்களை மிகுந்த நல்லவர்கள் போலவும் தேசபக்தி மிகுந்தவர்கள் போலவும் காட்டி கொள்வார்கள். அநீதிகளை கண்டு கொதிக்கும் மனிதர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள். பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும் அல்லது பார்ப்பனர்களை அண்டி பிழைக்கும் ஜெயமேகன் போன்றவர்களாகவும் இருப்பர்.

எடுத்துக்காட்டாக டைரக்டர் சங்கர், முருகதாஸ், மறைந்த எழுத்தாளர் சுஜாதா, தினமணி மற்றும் தினமலர் போன்றவற்றில் கட்டுரைகள் எழுதும் பூணூல் அணியும் இந்துக்களும் இந்த வகை என கூறலாம்.

இவர்கள் யாரும் ஜாதியை ஒழிக்க விருப்பம் இல்லாதவர்கள். சரியாக சொல்வோமேயானால் தங்கள் ஜாதி மூலம் சுய பெருமைகளை தேடிக்கொள்பவர்கள். ஜாதிய அடையாளங்களை விரும்பி சுமந்து கொண்டு திரிபவர்கள். நெற்றியிலும், நடுமண்டை வரையிலும் கலர் கலராக கோடு போட்டுக்கொண்டு நேர்மை இல்லாமல் சமத்துவம் பேசுபவர்கள்.

இவர்களின் உண்மையான விருப்பம் ஜாதியை ஒழிப்பதல்ல. மாறாக சூத்திரன் மற்றும் பஞ்சமர்களுக்கு கல்வியை கொடுக்கும் இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை மட்டும் எப்படியாவது கி.பி 2050 குள்ளாவது ஒழித்துவிட வேண்டுமென நினைப்பவர்கள்.

இதற்காக சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் பொய்பிரச்சாரங்களை கிளப்பிவிடுபவர்கள். இவர்களின் பொய் பிரச்சாரங்களின் படி இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்து விடும்.

இவர்களின் சுயஜாதி அடையாளங்களை கொஞ்சம் கூட மாற்றி கொள்ள விரும்பாமல், பூணூல் உள்ளிட்ட தங்கள் ஜாதி அடையாளங்களை தங்கள் உரிமையாக கருதும் கீழ்த்தரமானவர்கள்.

உண்மையில் ஜாதி எவ்வாறு தொடர்கிறது? அல்லது ஜாதி இத்தனை ஆண்டுகளாக எவ்வாறு தொடர்ந்து வந்துள்ளது?

ஜாதி இட ஒதுக்கீட்டின் காரணமாகவா தொடர்ந்து வந்தது? ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஜாதி சான்றிதழ் இருந்ததா? அல்லது பல நூற்றாண்டுகளாக இட ஒதுக்ககீடு மற்றும் சலுகைகள் ஏதும் இருந்ததா? இல்லை

ஆக, பல்லாயிரம் வருடங்களாக இட ஒதுக்கீடு இல்லை, சாதி சான்றிதழ் இல்லை, சலுகைகளும் இல்லை, பின்பு எப்படி ஜாதி தொடர்ந்து வந்துள்ளது?

இதனையே வேறுவிதமாக கேட்போமேயானால் ஜாதிய கொடுமைகள் எதனால் நடக்கின்றது? கோட்டா முறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா?
  • சேலத்தில் உள்ள சிவன் கோவிலுக்குள் தலித் மக்கள் நுழையகூடாதென சூத்திர சாதி மக்கள் தடுக்க காரணம் கோட்டாவா?
  • பரவலாக நடக்கும் போலி கவுரவ கொலைக்கு காரணம் இடஒதுக்கீடா?
  • தின்னியத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரின் வாயில் மலத்தை திணித்தார்களே அதற்கு காரணம் இடஒதுக்கீடா?
  • இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் பூணூல் அணிவது இழிவானது என்று உணர்ந்து பாரப்பனர்கள் பூணூலை துறப்பார்களா?
  • இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் இந்துக்கள் தீண்டாமையை கைவிடுவாரகளா?
  • இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் சங்கராச்சாரி அனைவரையும் தொடுவாரா?இந்துக்கள் அனைவரும் சமம் என சங்கர மடம் ஒப்புக்கொள்ளுமா?
  • இந்தியவில் இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் ராமதாஸ் & குரு போன்றோர் தலைமையில் காதல் திருமணங்கள் நடக்குமா?
  • வெகு சிலர் மட்டுமே பயன் பெறும் இடஒதுக்கீட்டை நீக்கிவிட்டால் மயிலாப்பூர் கபாலி கோவிலுக்கு, 'ஆகமம் 'பயின்ற முக்குலத்தோர் ஜாதியை சேர்ந்த யாரையாவது அர்ச்சகராக்க விடுவார்களா?
  • இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டதிற்கு உச்சகுடுமி மன்றம் அனுமதி தான் வழங்குமா?
இப்படி பல கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம். இதற்கான பதில் ஒன்றே ஒன்று தான் "இட ஒதுக்கீட்டுக்கும், சாதி தொடர்வதற்கும் (persistence of caste) எந்த சம்பந்தமும் இல்லை. இல்லை.. இல்லை...

இடஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது, ஆனால் சாதி தொடர இட ஒதுக்கீடு காரணம் அல்ல.

உண்மையில் இந்து சமூகத்தின் அகமண முறையின் வழியே அதாவது, ஒரே சாதிக்குள்ளே மட்டும் திருமணம் செய்வதால் அல்லது சாதி மாறி திருமணம் நடந்தால் ஊரை கொளுத்துவதால், கொலை செய்வதால் மட்டுமே சாதி தொடர்கிறது.

ஒரு குழந்தையின் சாதி அதன் (இந்து)பெற்றோர் திருமணத்தில் முடிவு செய்யப்படுகிறது. சாதி சான்றிதழ் விண்ணப்பத்தின் போது தாசில்தார் அந்த குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரித்து அதற்கு காகிதத்தால் ஆன சான்றிதழ் மட்டுமே தருகின்றார்.

ஆனால் இந்த குரூப் தாசில்தார் தரும் சான்றிதழை ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடுமென மோசடி பிராச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த பிரச்சாரம் ஒரு சுய நல பிரச்சாரம் ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளாக பதவி படிப்பு ஆகியவற்றை அனுபவித்து வந்த இவர் கள் இடஒதுக்கீட்டினை ஒழித்துவிட்டு மீண்டும் அதனை முழுவதும் அனுபவிக்க எத்தனித்து அந்த சுயநலத்தினால் செய்யும் தவறான பிரச்சாரமே இடஒதுக்கீட்டை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடுமென்பதாகும்.

இன்னும் தெளிவாக கூறுவோமேயானல், இந்தியாவில் சாதி வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் பலரிடம் ஜாதி சான்றிதழே இல்லை.

இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாத கோடிக்கணக்கான மக்கள் தீண்டாமைக்கு உள்ளாகின்றனர். அதற்கு காரணம் இந்து மதமும் அதன் கோட்பாடுகளே ஆகும். ஒருவன் இந்துவாக இருக்கும் வரை அவனிடம் அவன் சாதி ஒட்டிக்கொண்டு இருக்கும்.

ஆக, இவ்வாறு சம்பந்தமில்லாமல் சாதி தொடர்வதற்கு காரணம் இடஒதுக்கீடு தான் என்று மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் வில்லங்கமானவர்கள் இந்த குரூப் A வை சார்ந்தவர்கள்.
  • சாதி என்பது ஒரு தீராத நோய்
  • நோய்க்கான காரணம் இந்துமதம்(pathology)
  • இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமாக சிகிச்சை வழங்கும் இடம்(Temprorary shelter)
  • சாதி சான்றிதழ் என்பது நோயால் பாதிக்கப்பட்டவரின் கேஸ் ஷீட்(case sheet)
ஆனால் இந்த வில்லங்கம பிடித்தோர் நோய்க்கான காரணத்தை நீக்காமல், அல்லது நீக்க விருப்பம் இல்லாமல் மருத்துவமனைகள் இருப்பதால் தான் நோய்கள் உள்ளன.

ஆகவே மருத்துவமனைகளை மூடிவிட்டு கேஸ் ஷீட்டுகளை மட்டும் கிழித்துப்போட்டுவிட்டால் நோயாளிகளே இருக்கமாட்டார்கள் என்பது போன்ற பிரச்சாரமே செய்பவர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
Group B:
--------------------------------------------------------------------------------------------------------------------------
இவர்களை பற்றி பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. குரூப் A வின் வன்மமான பிரச்சாரத்திற்கு பலியானவர்கள். உண்மையில் விடயம் புரியாதவர்கள். இயக்குனர் சங்கரின் படங்கள் அனைத்தும் அவர்களுக்கு எதிரானது என்று தெரியாமலே அதனை ரசித்து பார்த்து புல்லரிப்பவர்கள்.

அந்நியன் அம்பி சூத்திர்ர்களை பந்தாடியபோது கைதட்டி மகிழ்ந்தவர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
Group C:
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் மிக அதிக சலுகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு பணிகள் மூலம் பெறுபவர்கள் உயர்சாதி பார்ப்பன மற்றும் பனியா இனத்தை சேர்ந்தவர்கள். வரிசலுகைகள், மற்றும் ஊதிய சலுகை மற்றும் சமூக மதிப்பு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட சலுகைகள் மூலம் சொகுசான நிலையில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 26,000 கோடி ரூபாயை பணமாக மட்டும் வரிசலுகையாக பெற்றுள்ளனர். இலவச நிலம், இலவச மின்சாரம், இலவச தண்ணீர் போன்றவை தனிக்கதை.

அடுத்ததாக இட ஒதுக்கீடுகள் மற்றும் சமூக நல திட்டங்களை பொருத்தவரை மிகமிக அதிக சலுகைகளை அனுபவிப்பவர்கள் இடைநிலை சாதியை சேர்நதவர்கள்.

பிற்படுத்தப்பட்ட (OBC)மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் தான் இட ஒதுக்கீட்டை எதிரக்கும் மூன்றாவது வகையினர்.

இந்திய அளவில் 27% இட ஒதுக்கீட்டையும் தமிழக அளவில் 50% சதவீத இட ஒதுக்கீட்டையும் இந்த பிற்படுத்தப்பட்டவர்கள் பெறுகின்றனர். மேலும் சமூக நலதிட்டங்களை எடுத்துக்கொண்டால் மிக அதிக அளவிலான சலுகைகள் இவர்களை சென்று அடைகின்றது.

தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். இதில் அதிக எண்ணிக்கையிலான கணினிகளை பெற்றது யார்? என்று ஆராய்ந்தால் அது பிற்படுத்தப்பட்டவர்கள் தான் என்பது தெளிவாக தெரியும்.

இதேபோலவே சைக்கிள் வழங்கும் திட்டம், ரேசன் கடைகள், அரசின் பிற மானியங்கள், மகப்பேறு உதவி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும் இவர்களுக்கே அதிக அளவு சென்றடைகிறது. பட்ஜட்டில் ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு பிற்படுத்தப்பட்டவர்களுக்கே சென்றடைகிறது.

எனினும் ஒப்பிட்டு அளவில் இந்த சலுகைகள் இன்னும் கூடுதலாக வழங்கப்படவேண்டும் என்பதே உண்மை.

எனினும் இவ்வளவு சலுகைகளையும் பெற்றுக்கொண்டு இதில் ஒரு சிலர் (பலர்)SC /ST இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் எதிராக பேசுகின்றனர். எழுதுகின்றனர்.

முதல்நாள் எங்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்தது எங்கள் தலைவர் தான் என்று பெருமை பேசுவது , பிறகு ஒரு நாள் எல்லா இட ஒதுக்கீட்டையும் எடுக்கனும் அப்ப தான் இந்த நாடே உருப்படும்! என்று ஜல்லி அடிப்பது.

சலுகைகள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு, சலுகைகள் கூடுதலாக வேண்டுமென போராட்டமும் செய்து கொண்டு 'கோட்டாவை எல்லாம் எடுக்க வேண்டுமென இவர்கள் கூற காரணம் என்ன? இவர்களுக்கு என்னதான் பிரச்சினை?

இதனை ஆராய்ந்தால் இந்து சமூகத்தில் தனக்கு கீழ் உள்ள தலித்துகளின் மீதான வன்மமே இவர்களை இப்படி நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஒரு மிடுக்கான உடை அணிந்த தாழ்த்தப்படவரை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. உயர் அதிகாரியாக ஒரு தலித்தை இவர்களால் பொருத்துக் கொள்ள முடிவதில்லை.

தலித்துகளின் வளர்ச்சி இவர்களை மனதளவில் பாதிக்கின்றது, அந்த வளர்ச்சிக்கு காரணம் இட ஒதுக்கீடு தான் என்று இவர்கள் மனம் முடிவு செய்கிறது. ஆக தனக்கு எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. தலித் மக்களுக்கு எதுவும் கிடைக்க கூடாதென முடிவு செய்கின்றனர்.

ஆனால் உண்மையில் அரசின் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து திங்கட்கிழமைகளில் கலெக்டர் ஆபிசில் மனு கொடுக்க வரிசையில் நிற்கும் போது கூட இவர்களுக்கு உண்மை புரிவதில்லை என்பது வேதனையான விடயமாகும்.

கடைசியாக டாக்டர்.அம்பேத்கரின் பொன்மொழியோடு இதனை முடிக்கின்றேன்:
Breaking up the Caste System was not to bring about inter-caste dinners and inter-caste marriages but to destroy the religious notions on which Caste was founded
ஜாதி ஒழிப்பு என்பது சம்பந்தி விருந்து நடத்துவதோ அல்லது சாதி மறுப்பு திருமணங்கள் புரிவதோ அல்ல. மாறாக ஜாதி கட்டமைக்கப்பட்டுள்ள அதன் 'மத அடிப்படைகளை' வீழ்ததுவதே ஆகும்.
எனவே பொது மக்கள் இந்த மேற்கண்ட மூன்று பிரிவினரை சரியாக இனம் பிரித்து அடையாளம் கண்டு அனுகுவது நலம்.

https://www.facebook.com/wisdomram/posts/924784540898961