உறவுமுறை என்பது தனிமைப்படுத்துதலுக்கு நேர் எதிரானது. மற்றொரு சமூகக் குழுவுடன் தாழ்த்தப்பட்டவர்கள் உறவுமுறையை நிறுவிக் கொள்வது என்பது, தங்களுடைய தற்போதைய தனிமைபடுத்தலுக்கு முடிவு கட்டுவது என்பதையே குறிக்கும். அவர்கள் இந்துக்களாக இருக்கும் வரை, அவர்களுடைய தனிமைப்படுத்துதல் என்பது ஒருபோதும் முடிவடையாது. இந்துக்கள் என்ற முறையில் அவர்களுடைய தனிமைப்படுத்துதலானது, அவர்களை முன்னாலும் தாக்குகிறது; பின்னாலும் தாக்குகிறது.
Showing posts with label பாபாசாகேப் நூல் தொகுப்பு. Show all posts
Showing posts with label பாபாசாகேப் நூல் தொகுப்பு. Show all posts
Tuesday, October 4, 2016
பெண்களும் (சூத்திரர்களும்) துறவறத்திற்கு தகுதியுள்ளவர்கள் அல்லர்
வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, வேதங்களைத் தொழும் பார்ப்பனர்களுக்கு துறவறம் ஒரு லட்சியமல்ல; அவர்கள் உபநிடதங்களைப் புனித இலக்கியம் என்று அங்கீகரிப்பதற்கு நீண்ட காலமாக மறுத்து வந்தனர். துறவறம் கொள்வது உபநிடதங்களின் லட்சியமாகும். துறவறத்தின் முடிவு ஆத்ம பிரம்மம் என்ற உபநிடதத் தத்துவத்தை எய்துவதாகும். பார்ப்பனர்கள் துறவற வாழ்க்கையைக் கடுமையாக எதிர்த்தனர். இறுதியாக, அவர்கள் சில நிபந்தனைகளின் பேரில் இறங்கி வந்தனர். அந்த நிபந்தனைகளில் ஒன்று, பெண்களும் (சூத்திரர்களும்) துறவறத்திற்கு தகுதியுள்ளவர்கள் அல்லர் என்பதாகும்.
Subscribe to:
Posts (Atom)