6) ஈவேரா சமஸ்கிருதம் பயின்றவரா? பின்பு எதை வைத்து இந்து வேதங்களுக்கு அர்த்தம் கூறினார்?
பெரியார் சமஸ்கிருதம் பயிலாதவர் தான். ஆனால் அவர் சொல்லியதில் எது தவறென உங்களால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா? அண்ணல் அம்பேத்கர் சமஸ்கிருதம் பயின்றவர் என்பது மட்டுமல்ல, இந்து மதம் சார்ந்த சமஸ்கிருத அறிவுஜீவிகளின் விளக்கங்களையே மேற்கோள் காட்டி இந்து மதத்தை நார்நாராக கிழித்து தொங்க விட்டார். எதை மறுக்க முடிந்தது உங்களால்? வேதம் என்ன சொல்லுகிறது? யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்றா? எல்லோருக்கும் சாமியை தொட பாத்யதை உண்டு என்றா? பார்ப்பனன் தலையிலும் பிறக்கவில்லை, சூத்திரன் காலிலும் பிறக்க வில்லை, எல்லோரும் சமமென்றா? எதை பெரியார் திரித்துவிட்டார்? இந்து மத வேதங்களும் புராணங்களும் ஆபாச கதைகளின் தொகுப்பன்றி வேறென்ன?