Showing posts with label லபீஸ். Show all posts
Showing posts with label லபீஸ். Show all posts

Saturday, May 26, 2018

இஸ்லாம் வேறு,இஸ்லாமிய சிந்தனை என்பது வேறு

லபீஸ் ஸஹீத்
2015-03-27

மார்க்கத்தை நிராகரிப்பதும், மார்கத்துக்கு கொடுக்கப்படும் ''விளக்கங்களை'' நிராகரிப்பது வெவ்வேறான விடயங்கள். இரண்டையும் நாம் ஒரே தராசில் நிறுத்திட முடியாது.

ஹனபி, ஷாபிஈ, மாலிகி போன்ற பிக்ஹு சிந்தனைப் பள்ளிகளும், காதிரிய்யா, ஷாதுலிய்யா, நக்ஷ்பந்தியா போன்ற ஆன்மீக மரபுகளும், இஹ்வான், தப்லீக், சலபி அமைப்புகள் போன்ற இயக்கங்களும், இந்த மார்கத்துக்கு அளிக்கப்பட்ட வெவ்வேறான, பன்முகப்பட்ட வியாக்யானங்களே.

இஸ்லாம் என்பது அல் குர்-ஆன், முதவாதிரான சுன்னாவின் மூலமும் வந்துள்ள கருத்து வேறுபாடுகளுக்கு இடம்பாடற்ற நம்பிக்கை கோட்பாடுகளும், அடிப்படை சட்டங்களும், ஒழுக்க பெறுமானங்களே.

ஆஹாதான, கருத்து வேறுபாடுகளுக்கு உட்பட்ட ஒரு விடயத்தை மட்டும் வைத்து, ஒருவரை நாம் இஸ்லாத்துக்கு உள்ளானவர் அல்லது இந்த மார்க்கத்தை விட்டு வெளியேறியவர் என்று கூறிட முடியாது.

இதனால்தான் எமது ஆசிரியர் ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி அவர்கள் ''இஸ்லாம் வேறு, இஸ்லாமிய சிந்தனை என்பது வேறு'' என்றார்.

மக்கள் நடைமுறைபடுத்துவது இஸ்லாத்தின் புனித பிரதிகளில் இருந்து தாம் ''புரிந்து கொண்டவற்றையே'' அன்றி வேறில்லை...!

https://m.facebook.com/story.php?story_fbid=447623205416447&id=100005063134008