Tuesday, June 16, 2015

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது.

தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார்.

நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்

ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.

நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.

இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

1-வது நாள் 1, 1, 1, = 3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள்.

தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும்.

செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

-Jiya Dil
https://www.facebook.com/ziyadil/posts/848050151920546

மொகலாய மாமன்னர் ஜஹாங்கிர் அவை

மொகலாய மாமன்னர் ஜஹாங்கிர் அவையிலே இருந்தார். அவையில் முக்கியமான பிரச்சினை மீது விவாதம் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்பொழுது கதறி அழுதவளாக தன் கணவனின் பிணத்தை சுமந்து வந்து நீதி கேட்டு நின்றாள் சலவை தொழிலாளியின் மனைவி யசோதாபாய்!

ஜஹாங்கிர்:
யாரம்மா நீ, என்ன நேர்ந்தது உனக்கு?

யசோதாபாய்:
பேரரசே, நானும் என் கணவரும் சலவைதொழில் புரியும் கூலிகள். சற்று நேரத்திற்கு முன்பு நாம் இருவரும் ஆற்றங்கரையில் வேலையில் இருந்தபோது திடீரென வந்த அம்பொன்று என் கணவனின் கழுத்தில் பாய்ந்து அவர் உயிரை குடித்து விட்டது. தாங்கள்தான் எனக்கு நீதி வழங்கிட வேண்டும்.

ஜஹாங்கிர்:
உன் சோகம் புரிகிறதம்மா, அதற்கு நீ இங்கே வரவேண்டாமே, தாரோகா(காவல்துறை ஆணையர்)விடம் சென்று முறையிடு. அவர் தீரவிசாரித்து உனக்கு நீதி வழங்குவார்.

யசோதாபாய்:
மன்னிக்க வேண்டும் பேரரசே. அந்த நடைமுறை எனக்கு தெரியும்.
ஆனால் என் கணவரின் உயிரை பறித்த அம்பு அரண்மனையில் இருந்து பாய்ந்து வந்துள்ளது, அதில் அரசமுத்திரை உள்ளது மன்னா. நான் இங்கே வராமல் வேறெங்கு செல்வேன்?

ஜஹாங்கிர்:
(கடும் கோபத்துடன்) யார் அங்கே, அரண்மனையில் இருந்து அம்பெய்த நபரை இழத்து வாருங்கள்.

அப்போது அங்கு மயான அமைதி நிலவ மேலரங்கிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. "அது நான் செலுத்திய அம்புதான்" என்று.

ஜஹாங்கிர்:
யாரது?

அந்த குரல்:
நான் தான் பேரரசி நூர்ஜஹான்.

ஜஹாங்கிர்:
ஓஹ் நீங்கள்தான் இதற்கு காரணமோ?

நூர்ஜஹான்:
ஆம்.

ஜஹாங்கிர்:
அப்படியானால் நீங்கள் குற்றவாளிகள் பகுதிக்கு வந்து கூண்டிலல்வா நிற்க வேண்டும்.? வாருங்கள் கீழே.

அப்போது அவை முழுவதும் சலசலப்பும் பரபரப்பும் நிலவ பேரரசி குற்றவாளி கூண்டில் நிற்கிறாள்.

ஜஹாங்கிர்:
(ஆழ்ந்த யோசனைக்கு பிரகு) ஓ ஏழை குடிமகளே, உனக்கு நேர்ந்தது ஈடுசெய்ய முடியாத ஒன்று. இருந்தும் இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை உன்னிடமே வழங்குகிறேன். இதோ இந்த வில் அம்பை எடுத்துக்கொள், எப்படி இவள் உன்னை விதவையாக்கினாளோ,
அதேபோன்று நீயும் இவளை விதவையாக்கிடுவாயாக. இதுவே எனது தீர்ப்பாகும். ஹிந்துஸ்தானை ஆண்ட மன்னன் ஒருவன் தன் குடும்பத்திற்க்காக நீதியை புதைத்தான் என்கிற வரலாறு வேண்டாம்.

யசோதா:
(அம்பெடுத்து குறி பார்க்கிறாள்,அவையே பதறுகிறது. திடீரென மனம் மாறி அழுதவளாக ஓடி சென்று மன்னனின் கால்களை பிடித்து கொண்டு) மன்னா,,,, மன்னா,,,, தாங்கள் வாழ்க மன்னா. தாங்களின் நீதிக்கு ஈடு எதுவுமே இல்லை மன்னா. என்னை மன்னித்து விடுங்கள் மன்னா. போரரசி நூர்ஜஹானை நான் மன்னிக்கிறேன் மன்னா.

மன்னனின் நீதியைகண்டு அவையே கலங்கி நிற்கிறது. பிறகு மாமன்னன் ஜஹாங்கிர் அவர்கள் அப்பெண்ணுக்கு 300 பிகாசு நிலத்தையும் 50 கழுதைகளையும் வழங்கி வழக்கை முடித்து நீதியை நிலைநாட்ட செய்கிறார்.

-Jahangir Naamah.
by Lawrence anderson. 
page 676,

இப்பதிவை குஜராத் கலவர வழக்கில் இருந்து 70 பேரை விடுவித்த நீதிபதிக்கு சமற்ப்பிக்கிறேன்.

https://www.facebook.com/photo.php?fbid=1419084895051832

அஷ்டகா விதானம்: மாயமந்திரமல்ல, மாடறுக்கும் வித்தை

"மார்பில் இருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுதெடுக்க வேண்டும்.  
பின் கால்களில் இருந்து இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும்,  
முன் கால்களில் இருந்து கும்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும், 
தோளில் இருந்து ஆமையின் வடிவாக இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும்.  
இவ்வாறு அந்த அந்த அவயங்களில் இருந்து இருபத்தி ஆறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்து எடுக்க வேண்டும்!"
அஷ்டகா விதானம் தெரியுமா? ஏதோ மாயமந்திரமல்ல, மாடறுக்கும் வித்தை.
பசுவை எப்படி கொல்ல வேண்டும்? எந்த மந்திரத்தைச் சொல்லி அறுக்கவேண்டும் வேண்டும்?" - என இப்படி அஷ்டகா விதானம் மூலம் விலாவரியாக வகுப்பெடுக்கிறது கிருஹஜ்ய சூத்திரம்.

இந்த சூத்திரதாரிகள் யார் தெரியமா? சாட்சாத் பிராமணர்கள்! மாட்டு கறியை முதன்முதலில் சாப்பிட்டவர்கள், குறிப்பாக இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தியவர்கள் - அவர்கள்தான்.
"அத்ரிகோ சமீத்வம் ஹுசமீ சமீத்வம்; சமீத்வமத்ரிகா அத்ரிகா உர் இதித்ரிப் ரூயாத்" - படிக்க வரலைனா விட்டுடுங்க smile உணர்ச்சிலை
"நன்றாக அடித்துக் கொல்! கொல்! கொல்! அடிப்பதை நிறுத்தாதே!"
- என்று கோ கொன்று தின்றதை தான் அவர்களின் மொழியில் சொல்கின்றனர்.
"மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப்பட்டிருக்கின்றன, மதச் சடங்குகளை முறையாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ணவில்லையெனில் - இறப்பிற்கு பின்னர், தனது இருபத்தி ஒன்றாவது மறுபிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்" 
- என்கிறது மனு!

"தன் மகன் புலவனாகவும், புகழ்பெற்றவனாகவும், நல்ல பேச்சாளனாகவும், எல்லா வேதங்களையும் படித்தவனாகவும், முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால், தாயானவள் நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் கலந்த சாதம் சாப்பிட வேண்டும்'' 
- என பிரகடனப்படுத்துகிறது பிரகதாரண்ய உபநிடதம்.

"பெண்ணின் மண விழாவில் காளையும், பசுவும் வெட்டப்படுகின்றன"
- என்று குறிப்பிடுகிற ரிக்வேத்தின் நீர்த்துப்போன வடிவம் தான் இன்றைக்கும் ஒவ்வொரு திருமண விழாக்களின் பொழுதும் மாடறுத்து தின்னும் மந்திரம் சொல்லப்பட்டு கறிக்கு பதில் வாழைப்பழம் கொடுக்கும் வழக்கம்.

மாட்டிறைச்சி சாப்பிடுவது சாதிகளுடன் அடையாளம் காட்டப்பட்ட பிம்பத்தை அடித்து நொறுக்கியவர்கள் அம்பேத்கரும், பெரியாரும் தான்.

பாகுபாடுகளின்றி எல்லோருமே அசைவர்களாகவே, அதிலும் மாட்டிறைச்சி உண்ணுகின்றவர்களாகவே இருந்திருக்கிறோம்.

அதுவே இயற்கை! உலகில் சைவம் என்று எதுவுமில்லை; அப்படி ஒன்றிருந்தால் அது இயற்கை முரண்!

மாட்டுக்கறி தின்போம்! மானத்தோடு வாழ்வோம்!

Samaran Nagan.

இளங்கன்று தந்தூரி ரோஸ்ட் வித் ஹனி - வால்மீகி, வியாசர்

வால்மீகி, வியாசர் எல்லாம் ஒரே ‘கலீஜ்’ பார்ட்டிகள் போல.

தேனில், தீயில், மாவில், பழசாறு துணையாக இறைச்சி எப்படி சாப்பிட வேண்டுமென்று இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் எழுதி வைத்திருக்கிறார்கள். நீங்கள் ராமரும், கிருஷ்ணரும் உண்மையாக வந்துப் போனார்கள் என்று நம்பும் பட்சத்தில் இதையும் உண்மையாக நம்புங்கள். இல்லையென்றால் வெளிப்படையாக இது ஒரு கற்பனை கதை என்று பகிரங்கமாக ஒத்துக் கொள்ளுங்கள்.

காமசூத்திரத்தில் வாத்சாயனார் சும்மா இல்லாமல் சும்மா ‘கிண்ணென்று நிற்க’ நாய் கறி சாப்பிடவேண்டும் என்று போகிறப் போக்கில் ஒரு பிட்டு போடுகிறார்.

வேதங்களில் சொல்லப்பட்டதாக சொல்லி, நடைப்பெற்ற விலங்குகளின் உயிர்பலி, இளங்கன்று தந்தூரி ரோஸ்ட் வித் ஹனி போன்றவற்றை கண்டு தானே புத்தர் என்றொரு ஜீவன், விலங்குகளைக் கொல்லுதல் பாவம் என்று ஒட்டமாய் ஓடினார்.

So, as per RSS law, aren't they also anti-hindus, anti-nationals and anti-human values? Get them first in line and acknowledge that your entire mythological or otherwise history is full of non-vegetarians before putting a bloody ‪#‎BeefBan‬

ஆனால் ஒன்று, இந்த காமதேனு என்றொரு பசு படம் போட்டு மூக்கில் இவர், மடியில் அவர், இடுப்பில் எவர் என்று கடவுளர் படங்களாக போட்டது தான் உலகின் முதல் infographic. அந்த பெருமையை தாராளமாக ஹிந்து சனாதனி கூட்டம் பரப்பட்டும்.

-Narain Rajagopalan

பசுவின் புனிதம்: டி.என்.ஜா விளக்கம்

"பண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பானதாக இருந்தது" -டி என் ஜா. 

பண்டைய இந்திய வரலாற்று நிபுணரும் “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” புத்தகத்தின் ஆசிரியருமான டி. என். ஜா உடனான நேர்காணல்.

புகழ் பெற்ற பண்டைய இந்திய வரலாற்று நிபுணர் த்விஜேந்திர நாராயண் ஜா தனது 25 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி வாழ்க்கையில் பல கட்டுக் கதைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். பண்டைய இந்திய இலக்கியங்களையும் தொல்லியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி, “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” என்ற அவரது புத்தகம் மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவு பழக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை காட்டுகிறது. அவர் பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி விரிவான ஆய்வுகளை செய்திருக்கிறார்.

பசுக் கொலை பற்றிய சட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை செயல்படுத்துவதாக மத்திய பிரதேச அரசு முடிவு எடுத்துள்ளது. அந்த சட்டம் கொடுமையானது என்று பல பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த நேரத்தில் இந்திய பாரம்பரியத்தில் ‘புனித’ பசு எனும் கட்டுக்கதையைப் பற்றியும் சங்க பரிவார் அதனைப் பயன்படுத்தி நாட்டை மத ரீதியில் பிளவு படுத்துவதைப் பற்றியும் ஜா விளக்குகிறார். நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி :
--------------------------------------------------------------------------------------------------------------------------

‘இந்திய துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கத்தை முஸ்லீம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்’ என்ற கருத்தாக்கத்தை உங்கள் புத்தகம் “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” உடைக்கிறது. இந்த முடிவுக்கு வருவதற்கு நீங்கள் பயன்படுத்திய முக்கிய ஆதாரங்கள் என்ன?

பதில்:

கடந்து நூறு ஆண்டுகளாக பசுவின் புனிதம் என்பது இந்தியாவில் ஆய்வுக்கான விவாதமாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து மதவாதிகளும் அடிப்படைவாத நிறுவனங்களும் ‘பசுவைக் கொல்வதும் அதன் இறைச்சியை சாப்பிடுவதும் இஸ்லாமை பின்பற்றுபவர்களால்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் முஸ்லீம்களை மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். இந்திய சமய இலக்கியங்களிலிருந்து உணவுப் பழக்கங்கள் குறித்த தரவுகளை திரட்டி தருவதுதான் இந்த கட்டுக்கதையை உடைப்பதற்கான மிகச் சிறந்த வழி. அதன்படி, நான் பார்ப்பன, புத்த மத மற்றும் ஜைன மத நூல்களிலிருந்து பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ‘இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலம் முன்பிருந்தே நமது முன்னோர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தார்கள்’ என்பதை நிரூபித்திருக்கிறேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி :
--------------------------------------------------------------------------------------------------------------------------

பண்டைய இந்தியாவில் பசுக்கள் உணவுக்காகவும் பலியாகவும் பயன்பட்டதற்கான சில உதாரணங்களை கொடுக்க முடியுமா?

பதில்:

வேத காலத்தில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. ‘எந்த பொது யாகத்துக்கும் முன்பு நடத்தப்படும் அக்னதேயா என்ற சடங்கில் ஒரு பசு கொல்லப்பட வேண்டும்’ என்பது விதிமுறையாக இருந்தது. மிக முக்கியமான பொது யாகமான அஸ்வமேதாவில் 600க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன. அதன் நிறைவு 21 பசுக்களின் பலியால் குறிக்கப்பட்டது. ராஜசூயா, வாஜ்பேயா போன்ற யாகங்களின் முக்கிய பகுதியான கொசாவாவில் மாருதுகளுக்கு ஒரு பசு பலி கொடுக்கப்பட்டது. கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளை கொல்வது இன்னும் பல யாகங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது.

வேத நூல்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களில் உணவுக்காக பசுக்கள் கொல்லப்படுவது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மாட்டிறைச்சி சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு பிற்கால வேத நூல் “பசு நிச்சயமாக ஒரு உணவுதான்” என்று எந்த ஐயத்துக்கும் இடமில்லாமல் சொல்கிறது. இன்னொரு வேத நூலில் யாக்ஞவல்க்யர் பிடிவாதமாக பசுவின் மென்மையான இறைச்சியை சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேதகால மற்றும் வேத காலத்துக்கு பிந்தைய நெறிமுறை நூல்களின் படி, விருந்தாளிக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு பசுவை கொல்வது அவசியமானதாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதி ஊர்வல சடங்குகளின் ஒரு பகுதியாக பார்ப்பனர்கள் உண்பதற்கு பசுவின் இறைச்சி வழங்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. கிடைக்கும் ஆதாரங்களில் சிலவற்றை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். பண்டைய இந்திய நூல்கள், பசுவை பலிக்காகவும், உணவுக்காகவும் கொல்வது பற்றி ஏராளமான குறிப்புகளை தருகின்றன.

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி:
--------------------------------------------------------------------------------------------------------------------------

நீங்கள் இந்தக் கருத்தை விளக்குவதற்கு பழங்கால இந்திய ஆதாரங்கள் பலவற்றை பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால், இடைக்கால அல்லது நவீன இந்தியாவில் பசுவை உணவுப்பொருளாக பயன்படுத்துவது குறித்த மற்ற “இந்து ஆதாரங்கள்” இருக்கின்றனவா?

பதில்:

வேதத்துக்கு பிந்தைய காலத்திலும் மாட்டிறைச்சி உண்ணும் பாரம்பரியம் தொடர்ந்தது குறித்து கணிசமான ஆதாரங்கள் இருக்கின்றன. தர்மசாஸ்திர நூல்களில் மிகவும் செல்வாக்கு படைத்த மனுஸ்மிரிதி (200 கிமு-கி.பி. 200), பட்டினியிலிருந்து தப்பிக்க மாட்டிறைச்சியையும் நாய் இறைச்சியையும் சாப்பிட்ட மிகவும் ஒழுக்கமான பார்ப்பனர்கள் பற்றிய உதாரணங்களை தருகிறது. யக்ஞவல்க்யரின் ஸ்மிரிதி (கி.பி. 100-300) கற்றறிந்த பார்ப்பனர்களை (ஷ்ரோத்ரயா) பெரிய மாடு அல்லது ஆடு அடித்து வரவேற்க வேண்டும் என்று விதித்துள்ளது. மகாபாரத பாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் என்பதை நினைவு கூரலாம். தினமும் 2,000 பசுக்கள் வெட்டப்பட்டு அவற்றின் இறைச்சி தானியங்களுடன் பார்ப்பனர்களுக்கு வினியோகிக்கப்பட்டதை அது குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லைதான்.

‘பரத்வாஜ முனிவர் ஒரு கொழுத்த கன்றுக்குட்டியை கொன்று ராமனை வரவேற்றார்’ என்று சொல்லப்படுகிறது. மத நூல்களிலும் தர்மசாஸ்திர நூல்களிலும் காணப்படும் இந்த குறிப்புகள் மதசார்பற்ற இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன. ஆரம்பகால இந்திய மருத்துவ நூல்கள் மாட்டிறைச்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசுகின்றன. பல இலக்கிய படைப்புகளிள் (காளிதாசர், பாவபுத்தி, ராஜஷேகரா, ஸ்ரீஹர்ஷா போன்ற பெயர்களை குறிப்பிட வேண்டும்) மாட்டிறைச்சி சாப்பிடுவது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி:
--------------------------------------------------------------------------------------------------------------------------

பசுவின் புனிதம் என்ற தொன்மம் இந்துக்களின் மனத்தில் எப்படி தோன்றியது? உணவுப் பொருளாக பயன்படுத்துவதற்கு எதிராக பசுவின் புனிதம் பற்றிய கருத்துக்கள் நிலவிய நிகழ்வுகளும் கால கட்டங்களும் இந்திய வரலாற்றில் இருக்கின்றனவா? பழங்கால இந்தியாவில் பசுவை மத ரீதியாகவும் இந்து மதத்தின் புனித சின்னமாகவும் பார்க்கும் பாரம்பரியங்கள் இருந்தனவா?

பதில்:

வேத காலத்தில் பசு புனிதமானதாக இருந்தது என்று பல அறிஞர்கள் நம்புகிறார்கள். அத்தகைய வலியுறுத்தல்கள் அதர்வ வேதத்தில் வரும் அக்ன்யா (கொல்லப்படக் கூடாது என்று பொருள்) என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டவை. வேதப்பசு தொடப்படக்கூடாது என்று இருந்தால் அது யாகத்துக்கான கட்டணமாக (தக்ஷிணை) பார்ப்பனர் பெற்ற பசுவுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. புத்தமும் சமணமும் விலங்கு பலியையும் கால்நடைகளை கொல்வதையும் எதிர்த்தன. ஆனால் அவர்களின் அதிகார பூர்வ இலக்கியங்கள் கூட பசுவை ஒரு புனித விலங்காக குறிப்பிடவில்லை.

புனிதப்பசு என்ற கருத்தாக்கம் மிகவும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. முதல் ஆயிரமாண்டின் தொடக்கத்தில் இந்திய சமூகம் படிப்படியாக நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு மாறும் போது சட்டம் இயற்றுபவர்கள் மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தடை செய்ய ஆரம்பித்தார்கள். அது மிகப்பெரிய சமூக கலாச்சார மாற்றத்துக்கு வழி வகுத்தது. இதிகாசங்களிலும், புராணங்களிலும் கலியுகம் என்று விவரிக்கப்படும் மாற்றத்தின் இந்தக் கட்டம் சமூக மரபுகளிலும் பழக்கங்களிலும் பல மாற்றங்களையும் மாறுதல்களையும் கண்டது. முந்தைய பல பழக்கங்கள் கலியுகத்தில் தடை செய்யப்பட்டவையாக பார்ப்பன மத நூல்கள் பேச ஆரம்பித்தன. இந்த பழக்கங்கள் கலிவர்ஜ்யாக்கள் என்று அழைக்கப்பட்டன. இது தொடர்பான நூல்கள் கலியுகத்தில் பசுக்கொலை தடை செய்யப்பட்டது என்று குறிப்பிடுகின்றன.

பசு கொல்லப்படுவதும் மாட்டிறைச்சி சாப்பிடுவதும் ‘தீண்டத்தகாத’ சாதிகளுடன் அடையாளம் காட்டப்படுகின்றன. ஆனால், சில தர்மசாஸ்திர நூல்கள் இந்த செயல்களை மாறுபட்ட நடத்தைகள் என்ற அளவிலேயே பார்க்கின்றன என்பது கவனத்துக்குரியதாகும். தர்மசாஸ்திரங்கள் என்ன சொல்லியிருந்தாலும், மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்ததை ஒதுக்கி விட முடியாது. 19ம் நூற்றாண்டில் கூட சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. இதேபோல், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் “உடல் நிலை சரியில்லாத போது மருத்துவர் மாட்டிறைச்சி சூப்பை பரிந்துரைத்தால் அதை சாப்பிடுவதற்கு தயங்கவோ அதைப் பற்றி கேள்வி எழுப்பவோ செய்யாத” ஆச்சார இந்துக்களின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து மகாத்மா காந்தி பேசியிருக்கிறார். இன்று கூட, கேரளாவில் 72 சமூகங்கள் செலவு அதிகமாகும் ஆட்டிறைச்சியை விட மாட்டிறைச்சி சாப்பிடுவதை விரும்புகிறார்கள். அவர்கள் அனைவரும் தீண்டத் தகாதவர்கள் என்று சொல்லப்படும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்துத்துவா சக்திகள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளும்படி அவர்களிடம் பிரச்சாரம் செய்கின்றன.

இவ்வளவு இருந்தும், உபனிஷத சிந்தனைகளில் வளர்ந்த அகிம்சை தத்துவம், புத்த ஜைன உலகப் பார்வைகளில் அதன் முனைப்பான தாக்கம், வைணவ மதத்தில் அதற்கு இருந்த மையப் பங்கு ஆகியவை கொல்லாமை பற்றிய கருத்துக்களை வளர்த்தன. விவசாய சமூகத்தில் அதற்கு இருந்த பொருளாதார மதிப்பின் காரணத்தால் பசு சிறப்பான முக்கியத்துவம் பெற்றது. பசுக்களை பார்ப்பனர்கள் தக்ஷிணையாக பெறுவதால் அவை கொல்லப்படுவதை விரும்பவில்லை.

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி:
--------------------------------------------------------------------------------------------------------------------------

பசுக்கொலை இந்தியாவில் எப்போதிருந்து அரசியல் பிரச்சனையாக மாறியது? இந்த விஷயம் தொடர்பாக ஏதாவது வரலாற்று இயக்கம் இருந்திருக்கிறதா? பசுவின் “உற்பத்தி செய்யப்பட்ட புனிதம்” அரசியல் ஆள் சேர்ப்புக்காக பயன்படுத்தப்பட்டதற்கான உதாரணங்களை நீங்கள் சொல்ல முடியுமா?

பதில்:

காலப்போக்கில் பசு ஆட்சியாளர்களின் கையில் ஒரு அரசியல் கருவியாக மாறியது. முகலாய பேரரசர்கள் (எடுத்துக்காட்டாக, பாபர், அக்பர், ஜஹாங்கிர் மற்றும் அவுரங்கசீப்) ஜைன அல்லது பார்ப்பனர்களின் பசுவின் மீதான மரியாதை, வழிபாடு போன்ற உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பசுக் கொலையின் மீது அளவான தடையை விதித்தனர். ‘பசுவையும் பார்ப்பனரையும் பாதுகாப்பதற்காக மண்ணில் அவதரித்த கடவுளாக’ கருதப்படும் ஷிவாஜி, “நாங்கள் இந்துக்கள், இந்த நாட்டின் முறையான உரிமையாளர்கள். பசுக் கொலையையும் பார்ப்பனர்கள் அடக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டிருப்பது எங்களுக்கு ஏற்பில்லாத ஒன்று” என்று அறிவித்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால், 18ம் நூற்றாண்டின் இறுதியில் பசு அரசியல் ஆள் திரட்டும் கருவியாக பயன்பட ஆரம்பித்தது. முறையான பசு பாதுகாப்பு இயக்கம், பஞ்சாபில் சுமார் 1870ல் சீக்கிய குக்கா (அல்லது நாம்தாரி) பிரிவினரால் தொடங்கப்பட்டு, 1882ல் தயானந்த சரஸ்வதி முதல் கோரக்ஷினி (பசு பாதுகாப்பு) சபையை ஆரம்பித்த போது வலுவாக்கப்பட்டது. பலதரப்பட்ட மக்களை முஸ்லீம்களின் பசுக் கொலை பழக்கத்தை எதிர்த்து ஒன்று திரட்டுவதற்கு பசு ஒரு குறியீடாக பயன்படுத்தப்பட்டது.

இது 1880களிலும் 1890களிலும் பல மதக் கலவரங்களுக்கு வழி வகுத்தது. அதற்கு முன்பே பசுக் கொலை பற்றிய கருத்துக்கள் வலுவாகி வந்திருந்தாலும், 1888ல் வடமேற்கு மாநிலங்களுக்கான உயர் நீதி மன்றம் ‘பசு ஒரு புனிதமான விலங்கு இல்லை’ என்று தீர்ப்பு சொன்ன பிறகு பசு பாதுகாப்பு இயக்கம் தீவிரமடைந்தது. பசுக் கொலை பல இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு காரணமாக இருந்தது. குறிப்பாக அசம்கர்க் மாவட்டத்தில் 1893ல் நடந்த கலவரங்கள். இந்த கலவரங்களில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதேபோல், 1912-1913ல் அயோத்தியை வன்முறை உலுக்கியது. சில ஆண்டுகள் கழித்து 1917ல் ஷாஹாபாத் பேரழிவு ஏற்படுத்திய மத பெருந்தீயை எதிர் கொண்டது.

சுதந்திர இந்தியாவில் கூட பசுக் கொலை மீண்டும் மீண்டும் பிரச்சனைக்குரிய விஷயமாக அரசியல் வானில் உருவெடுத்தது. 1966 இல், சுதந்திரம் அடைந்து சுமார் இரண்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லா இந்திய மதவாத அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தேசிய அளவில் பசுக் கொலையை தடை செய்யும் படி லட்சக்கணக்கான மக்களை திரட்டி பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அது இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு வன்முறையில் முடிந்தது, குறைந்தது எட்டு பேரின் இறப்புக்கும் இன்னும் பல பேர் காயமடையவும் வழி வகுத்தது. ஏப்ரல் 1979 இல், மகாத்மா காந்தியின் ஆன்மீக சீடர் என்று கருதப்படும் ஆச்சார்ய வினோபா பாவே பசுக் கொலையை தடை செய்ய மத்திய அரசை கோரி உண்ணா விரதம் இருந்தார்.

குழப்பவாத மற்றும் அடிப்படைவாத சக்திகள் பசுவை இந்துக்களின் மத அடையாளமாக மாற்றியிருக்கின்றனர். வேத காலத்திலும் சரி, அதைத் தொடர்ந்த பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாத மரபுகளின் அடிப்படையிலும் சரி “புனித” பசு எல்லா காலங்களிலும் புனிதமாக இருக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். ஆரம்ப கால இந்தியாவில் அதன் இறைச்சியும் மற்ற இறைச்சி வகைகளும் வழக்கமான உயர்தர உணவின் ஒரு பகுதியாக இருந்தன.

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி:
--------------------------------------------------------------------------------------------------------------------------

மாட்டிறைச்சி சாப்பிடுவது வட இந்தியாவை விட தென் இந்தியாவில் அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பழக்கமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்? அத்தகைய அங்கீகரிப்புகளும் எதிர்ப்புகளும் வரலாற்று ரீதியாகவே வளர்ந்திருக்க வேண்டும்.

பதில்:

தென் இந்தியாவில் சில பகுதிகளில் மாட்டிறைச்சி-உண்ணுவது வழக்கமாக இருக்கிறது, ஆனால் அதை பொதுமைப்படுத்த முடியாது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பழங்குடியினரும் தலித்துகளும் முஸ்லீம்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். வட கிழக்கு இந்தியாவின் மலை சமூகங்களும் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள். ஆனால் இதையும் நாம் பொதுமைப்படுத்த முடியாது. முன்னாள் தெற்கு பீகாரின் பெரும்பான்மை பழங்குடியினர் பசு இறைச்சி சாப்பிடுவதில்லை.

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி:
--------------------------------------------------------------------------------------------------------------------------

நாம் பழங்குடி மக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்துவர்களை விட்டு விட்டால் கூட ஒரு கணக்கீட்டின் படி இந்துக்களில் 40 சதவீதம் பேர் இன்று மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். இந்தியா முழுவதும் வசிக்கும் தலித்துகள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். இது மிகவும் செலவு குறைவாக கிடைக்கும் இறைச்சி. மத்திய பிரதேச அரசு சமீபத்தில் பசுக் கொலையை மட்டுமின்றி மாட்டிறைச்சி சாப்பிடுவதையும் தடை செய்துள்ளது. அந்த தடை கொடுமையானது என்று பலர் கருதுகிறார்கள் அந்த சட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:

எந்த புத்திசாலி இந்தியனும் தனது கால்நடையை கொல்ல மாட்டான் என்பதே எனது கருத்து. அப்படி அவன் கொன்றால் அந்த சட்டத்தின் கீழ் அவன் தண்டிக்கப்படலாம். விலங்கு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் பசுவுக்கு மட்டும் ஏன் சிறப்பு நிலைமை? சங்க பரிவார் உண்மையிலேயே பசுக் கொலையை தடுத்து நிறுத்துவதில் உறுதியாக இருந்தால், பிஜேபி ஆளும் மாநிலங்களில் பசுக்களை பாதுகாக்க என்ன செய்திருக்கிறது? பெருநகரங்களில் பசுக்கள் பணக்காரர்களின் ஆடம்பர கார்களுக்கும் ஏழைகளின் தள்ளு வண்டிகளுக்கும் இடையில் தடுமாறிக் கொண்டு போக்குவரத்து தடைகளை ஏற்படுத்துகின்றன. தூக்கி எறியப்பட்ட சாப்பிட தகுதியற்ற உணவுப் பொருட்களையும், நாற்றமெடுக்கும் பிணங்களையும் கொண்ட குப்பை குவியல்களில் அவை மேய்கின்றன.

வயதான, பலவீனமான, பட்டினி கிடக்கும் பசுக்களை கொல்வதையும், ஏழைகளின் புரதமான அவற்றின் இறைச்சியை சாப்பிடுவதையும் தடை செய்வது இயற்கைக்கு எதிரானது. உணவு தேர்வுகளை நெறிப்படுத்தும் சட்டம் தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானதும் கொடுமையானதும் ஆகும். ஜன சங்க (இப்போதைய பிஜேபி) தத்துவார்த்த தலைவர் கே ஆர் மல்கானி இயற்கையாக இறந்த மாட்டின் இறைச்சியை சாப்பிடுவதை எந்த தயக்கமும் இல்லாமல் ஆதரித்தார் என்பதை சங்க பரிவாரத்துக்கு நினைவு படுத்த வேண்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி:
--------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவில் பசுக் கொலை எதிர்ப்பு பற்றிய கருத்தாக்கத்தின் புத்துயிர்ப்பு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? பெரும்பாலான பிஜேபி ஆட்சி புரியும் மாநிலங்களில் இந்த பிரச்சனை அரசியல் அணி திரட்டலுக்கு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அதிகாரத்துக்கு வந்தவுடனேயே பசுக் கொலை தடைச் சட்டத்தை கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக அந்த அரசாங்கங்கள் வைத்திருக்கின்றன.

பதில்:

சங் பரிவார் நாட்டின் அரசியலை மத ரீதியிலானதாக்கியிருக்கிறது. பசுக் கொலை எதிர்ப்பு இயக்கத்தின் புத்துயிர்ப்பு இந்த நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்றதாகும்.

http://indru.todayindia.info/the-myth-of-the-holy-cow/

எதன்‬ அடிபபடையில் இடஒதுக்கீடு இருக்க வேணடும்

எதன்‬ அடிபபடையில் இடஒதுக்கீடு இருக்க வேணடும்:
  1. சாதியாலா?
  2. பொருளாதாரத்தாலா?
  3. இரணடுமா??
ஆயுத எழுத்து விவாதத்தில மக்கள் கருத்து:
  1. சாதி 26 %
  2. பொருள் 64 %
  3. இரணடும்10 %
சுருக்கமான கேள்விகள் 10, முடிநதால் பதில தரவும்.
(பதில தர முடியாது எனபதால் தானே இநத இடஒதுக்கீடு சம்பநதமான விவாதஙகளில் பட்டி யலின மக்களை அனைவருக்கும் சமவாயப்பு தரும் சமத்துவ "டி-வி" புலிகள் புறக்கணிக்கிறாாகள்! காலம் மாறும், மாறறுவோம்)
  1. கோயில தேர்கள் ஏழை ஆதிக்க சாதி தெருக்களுக்கு போகிறதே!!ஏன ஏழை சேரிமக்கள தெருக்களுக்கு பல இடஙகளில் போவதிலலை? சாதியாலா? பணத்தாலா?
  2. ஏழை ஆதிக்க சாதி அனைத்து கோயிலகளிலும் நுழைய வழி பட எந்த தடையுமிலலையே! ஆனால்ஏழை பட்டியலின மக்கள் நுழைய தடையிருக்கிறதே! அதறகு என்ன காரணம்? சாதியாலா? பணத்தாலா?
  3. எஙகள் சேரிக்குள் கோயில் தேர் நுழையவிலலை யென்றால் உங்களை விட்டு நழுவி இஸலாம் தழுவுவோம், சாதி கூட்டணி மத்ததை கை கழவுவோம், எனறு மிரட்டியவுட்ன - தேரை கொணடு வருகிறோம் என படியிறஙகி பணிந்தது எதனால்? சாதியாலா? பணத்தாலா?
  4. ஏழை ஆதிக்கசாதி தெருக்களில் ரேசன கடை மற்றும் அரசு சம்பநதமான அலுவலகஙகள் இயங்குகினறனவே! ஆனால் ஏழை சேரி மக்கள தெருக்களில்அது ஏன் இயஙக வில்லை? சாதியாலா? பணத்தாலா?
  5. மணம்க்கள் தேவை விளம்பரஙகளில் எநத சாதியானாலும் பரவாயிலலை SC/ST மட்டும் வேணடாம் எனகிறீர்களே! ஏன எந்தசாதியானாலும் பரவாயில்லை ஏழை மட்டும் வேணடாம் என- ஏனஅப்படி விளம்பரம் தருவதிலலை? வாழ்க்கையை ஆரம்பிக்கிற திருமணத்தில முதல் தொடக்கபுள்ளி சாதியா? பணமா?
  6. இருசாதியினர் காதலிக்கிறார்கள், ஒத்த பொருளாதார வசதியுள்ளவாகளாகயிருநதும் அல்லது பட்டியலினத்தை சேர்நதவன் பணக்காரனாகயிருந்தும், அநத காதல்அழிக்கபடுகிறது (கௌரவ கொலை கூடசெயயபடுகிறதே) இது சாதியாலா? பணத்தாலா?
  7. கிராமத்திலஆதிக்கசாதி கல்லறையில் அல்லது சுடுகாட்டில ஆதிக்கசாதி ஏழைக்கும் இட்மஉண்டு ஏழைபணகாரன பேதமில்லைஅஙகே! ஆனால் பட்டியலின்காரன ஏழையாகயிருநதாலும் பணக்காரனாகயிருநதாலும் இஙகு இடமிலலையே! இது ஏன? சாதியாலா? பணத்தாலா?
  8. தனிததொகுதி தவிர பொதுததொகுதியில் பட்டியலின மக்கள் போட்டியிடடால அவர்கள தோறகடிக்ககபடுகிறாாகளே! ஆதிக்கசாதி ஏழையால் கூட வெல்லமுடிகிறது, பொது தொகுதியில் பட்டியலின மக்கள பணமிருநதும் வெல்லமுடியாதது ஏன்? சாதியாலா? பணத்தாலா?
  9. எஙகள் மேலவளவு முருகேசன் தனித தொகுதியல் நினறு பஞ்சாயத்து தலைவர்ஆகிவிட்டாா எனபதற்காக வெட்டி கொல்லபட்டாரே! எத்தனையோ ஏழைஆதிக்க சாதி பஞ்சாயத்து தலைவர்கள வெட்டி கொல்ல படாமல் உயிரோடு திரிய எஙகள் மேலவளவு முருகேசனை நாஙகள் இழந்தது சாதியாலா? பணத்தாலா?
  10. ஆதிக்கசாதி தன சாதியிலுள்ள ஏழையை திட்ட வேணடுமானால இழிவு படுத்த வேணடுமனால "பிசசைகார தே்-டியா மகனே, கஞ்சிககுவழியற்ற கபோதியே என்று திட்டாமல், பற தே-டியா மகனே- பற க்ண்டார -ளி மகனே: - என்று சாதியை வைத்து இழிவுபடுத்த காரணம் பணமா? சாதியா?
இபபடி பல கேளவிகள் கேட்டால் எவனும் பதில தரமாட்டான்!
பிறப்பிலிருநது இறப்பு வரை எல்லாவற்றிலும் சாதி பாாப்பாாகள்.

இபபடிபட்டஅயோக்கிய இனம் உலகத்தில
எஙகாவது உண்டா? உண்டா? உண்டா?

https://www.facebook.com/kalai.mathi.982/posts/629635910500703

இடஒதுக்கீடு முறைக்கு எதிராக பேசுபவர்கள்

இந்தியாவில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக பேசுபவர்களை மூன்றாக பிரிக்க இயலும்:
Group A:இவர்கள் 'இட ஒதுக்கீட்டை' மட்டும் (மட்டும் என்பது இருமுறை ஒலிக்கின்றது) எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென நினைப்பவர்கள். உண்மையில் ஜாதியை ஒழிக்க விருப்பம் இல்லாதவர்கள். இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்துவிடுமென பொய் பிரச்சாரம் செய்பவர்கள்.
Group B:மேற்கண்ட முதல் குரூப்பின் பொய் பிரச்சரத்திற்கு பலியாகி இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்துவிடுமென நினைப்பவர்கள்.
Group C:இவர்கள் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மட்டும் எப்படியாவது காலி செய்துவிடவேண்டுமென நினைப்பவர்கள்.
முதலில் முதல் குரூப்பை பற்றி காண்போம்

--------------------------------------------------------------------------------------------------------------------------
Group A:
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த முதல் வகை மனிதர்கள் நேர்மையற்ற இந்துக்கள். பெரும்பாலும் அறிவுஜீவிகளாக தங்களை காட்டி கொள்பவர்கள்.பத்திரிக்கை, சினிமா போன்ற துறைகளிலும் இருப்பார்கள். மேலும் தங்களை மிகுந்த நல்லவர்கள் போலவும் தேசபக்தி மிகுந்தவர்கள் போலவும் காட்டி கொள்வார்கள். அநீதிகளை கண்டு கொதிக்கும் மனிதர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள். பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும் அல்லது பார்ப்பனர்களை அண்டி பிழைக்கும் ஜெயமேகன் போன்றவர்களாகவும் இருப்பர்.

எடுத்துக்காட்டாக டைரக்டர் சங்கர், முருகதாஸ், மறைந்த எழுத்தாளர் சுஜாதா, தினமணி மற்றும் தினமலர் போன்றவற்றில் கட்டுரைகள் எழுதும் பூணூல் அணியும் இந்துக்களும் இந்த வகை என கூறலாம்.

இவர்கள் யாரும் ஜாதியை ஒழிக்க விருப்பம் இல்லாதவர்கள். சரியாக சொல்வோமேயானால் தங்கள் ஜாதி மூலம் சுய பெருமைகளை தேடிக்கொள்பவர்கள். ஜாதிய அடையாளங்களை விரும்பி சுமந்து கொண்டு திரிபவர்கள். நெற்றியிலும், நடுமண்டை வரையிலும் கலர் கலராக கோடு போட்டுக்கொண்டு நேர்மை இல்லாமல் சமத்துவம் பேசுபவர்கள்.

இவர்களின் உண்மையான விருப்பம் ஜாதியை ஒழிப்பதல்ல. மாறாக சூத்திரன் மற்றும் பஞ்சமர்களுக்கு கல்வியை கொடுக்கும் இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை மட்டும் எப்படியாவது கி.பி 2050 குள்ளாவது ஒழித்துவிட வேண்டுமென நினைப்பவர்கள்.

இதற்காக சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் பொய்பிரச்சாரங்களை கிளப்பிவிடுபவர்கள். இவர்களின் பொய் பிரச்சாரங்களின் படி இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்து விடும்.

இவர்களின் சுயஜாதி அடையாளங்களை கொஞ்சம் கூட மாற்றி கொள்ள விரும்பாமல், பூணூல் உள்ளிட்ட தங்கள் ஜாதி அடையாளங்களை தங்கள் உரிமையாக கருதும் கீழ்த்தரமானவர்கள்.

உண்மையில் ஜாதி எவ்வாறு தொடர்கிறது? அல்லது ஜாதி இத்தனை ஆண்டுகளாக எவ்வாறு தொடர்ந்து வந்துள்ளது?

ஜாதி இட ஒதுக்கீட்டின் காரணமாகவா தொடர்ந்து வந்தது? ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஜாதி சான்றிதழ் இருந்ததா? அல்லது பல நூற்றாண்டுகளாக இட ஒதுக்ககீடு மற்றும் சலுகைகள் ஏதும் இருந்ததா? இல்லை

ஆக, பல்லாயிரம் வருடங்களாக இட ஒதுக்கீடு இல்லை, சாதி சான்றிதழ் இல்லை, சலுகைகளும் இல்லை, பின்பு எப்படி ஜாதி தொடர்ந்து வந்துள்ளது?

இதனையே வேறுவிதமாக கேட்போமேயானால் ஜாதிய கொடுமைகள் எதனால் நடக்கின்றது? கோட்டா முறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா?
  • சேலத்தில் உள்ள சிவன் கோவிலுக்குள் தலித் மக்கள் நுழையகூடாதென சூத்திர சாதி மக்கள் தடுக்க காரணம் கோட்டாவா?
  • பரவலாக நடக்கும் போலி கவுரவ கொலைக்கு காரணம் இடஒதுக்கீடா?
  • தின்னியத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரின் வாயில் மலத்தை திணித்தார்களே அதற்கு காரணம் இடஒதுக்கீடா?
  • இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் பூணூல் அணிவது இழிவானது என்று உணர்ந்து பாரப்பனர்கள் பூணூலை துறப்பார்களா?
  • இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் இந்துக்கள் தீண்டாமையை கைவிடுவாரகளா?
  • இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் சங்கராச்சாரி அனைவரையும் தொடுவாரா?இந்துக்கள் அனைவரும் சமம் என சங்கர மடம் ஒப்புக்கொள்ளுமா?
  • இந்தியவில் இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் ராமதாஸ் & குரு போன்றோர் தலைமையில் காதல் திருமணங்கள் நடக்குமா?
  • வெகு சிலர் மட்டுமே பயன் பெறும் இடஒதுக்கீட்டை நீக்கிவிட்டால் மயிலாப்பூர் கபாலி கோவிலுக்கு, 'ஆகமம் 'பயின்ற முக்குலத்தோர் ஜாதியை சேர்ந்த யாரையாவது அர்ச்சகராக்க விடுவார்களா?
  • இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டதிற்கு உச்சகுடுமி மன்றம் அனுமதி தான் வழங்குமா?
இப்படி பல கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம். இதற்கான பதில் ஒன்றே ஒன்று தான் "இட ஒதுக்கீட்டுக்கும், சாதி தொடர்வதற்கும் (persistence of caste) எந்த சம்பந்தமும் இல்லை. இல்லை.. இல்லை...

இடஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது, ஆனால் சாதி தொடர இட ஒதுக்கீடு காரணம் அல்ல.

உண்மையில் இந்து சமூகத்தின் அகமண முறையின் வழியே அதாவது, ஒரே சாதிக்குள்ளே மட்டும் திருமணம் செய்வதால் அல்லது சாதி மாறி திருமணம் நடந்தால் ஊரை கொளுத்துவதால், கொலை செய்வதால் மட்டுமே சாதி தொடர்கிறது.

ஒரு குழந்தையின் சாதி அதன் (இந்து)பெற்றோர் திருமணத்தில் முடிவு செய்யப்படுகிறது. சாதி சான்றிதழ் விண்ணப்பத்தின் போது தாசில்தார் அந்த குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரித்து அதற்கு காகிதத்தால் ஆன சான்றிதழ் மட்டுமே தருகின்றார்.

ஆனால் இந்த குரூப் தாசில்தார் தரும் சான்றிதழை ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடுமென மோசடி பிராச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த பிரச்சாரம் ஒரு சுய நல பிரச்சாரம் ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளாக பதவி படிப்பு ஆகியவற்றை அனுபவித்து வந்த இவர் கள் இடஒதுக்கீட்டினை ஒழித்துவிட்டு மீண்டும் அதனை முழுவதும் அனுபவிக்க எத்தனித்து அந்த சுயநலத்தினால் செய்யும் தவறான பிரச்சாரமே இடஒதுக்கீட்டை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடுமென்பதாகும்.

இன்னும் தெளிவாக கூறுவோமேயானல், இந்தியாவில் சாதி வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் பலரிடம் ஜாதி சான்றிதழே இல்லை.

இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாத கோடிக்கணக்கான மக்கள் தீண்டாமைக்கு உள்ளாகின்றனர். அதற்கு காரணம் இந்து மதமும் அதன் கோட்பாடுகளே ஆகும். ஒருவன் இந்துவாக இருக்கும் வரை அவனிடம் அவன் சாதி ஒட்டிக்கொண்டு இருக்கும்.

ஆக, இவ்வாறு சம்பந்தமில்லாமல் சாதி தொடர்வதற்கு காரணம் இடஒதுக்கீடு தான் என்று மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் வில்லங்கமானவர்கள் இந்த குரூப் A வை சார்ந்தவர்கள்.
  • சாதி என்பது ஒரு தீராத நோய்
  • நோய்க்கான காரணம் இந்துமதம்(pathology)
  • இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமாக சிகிச்சை வழங்கும் இடம்(Temprorary shelter)
  • சாதி சான்றிதழ் என்பது நோயால் பாதிக்கப்பட்டவரின் கேஸ் ஷீட்(case sheet)
ஆனால் இந்த வில்லங்கம பிடித்தோர் நோய்க்கான காரணத்தை நீக்காமல், அல்லது நீக்க விருப்பம் இல்லாமல் மருத்துவமனைகள் இருப்பதால் தான் நோய்கள் உள்ளன.

ஆகவே மருத்துவமனைகளை மூடிவிட்டு கேஸ் ஷீட்டுகளை மட்டும் கிழித்துப்போட்டுவிட்டால் நோயாளிகளே இருக்கமாட்டார்கள் என்பது போன்ற பிரச்சாரமே செய்பவர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
Group B:
--------------------------------------------------------------------------------------------------------------------------
இவர்களை பற்றி பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. குரூப் A வின் வன்மமான பிரச்சாரத்திற்கு பலியானவர்கள். உண்மையில் விடயம் புரியாதவர்கள். இயக்குனர் சங்கரின் படங்கள் அனைத்தும் அவர்களுக்கு எதிரானது என்று தெரியாமலே அதனை ரசித்து பார்த்து புல்லரிப்பவர்கள்.

அந்நியன் அம்பி சூத்திர்ர்களை பந்தாடியபோது கைதட்டி மகிழ்ந்தவர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
Group C:
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் மிக அதிக சலுகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு பணிகள் மூலம் பெறுபவர்கள் உயர்சாதி பார்ப்பன மற்றும் பனியா இனத்தை சேர்ந்தவர்கள். வரிசலுகைகள், மற்றும் ஊதிய சலுகை மற்றும் சமூக மதிப்பு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட சலுகைகள் மூலம் சொகுசான நிலையில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 26,000 கோடி ரூபாயை பணமாக மட்டும் வரிசலுகையாக பெற்றுள்ளனர். இலவச நிலம், இலவச மின்சாரம், இலவச தண்ணீர் போன்றவை தனிக்கதை.

அடுத்ததாக இட ஒதுக்கீடுகள் மற்றும் சமூக நல திட்டங்களை பொருத்தவரை மிகமிக அதிக சலுகைகளை அனுபவிப்பவர்கள் இடைநிலை சாதியை சேர்நதவர்கள்.

பிற்படுத்தப்பட்ட (OBC)மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் தான் இட ஒதுக்கீட்டை எதிரக்கும் மூன்றாவது வகையினர்.

இந்திய அளவில் 27% இட ஒதுக்கீட்டையும் தமிழக அளவில் 50% சதவீத இட ஒதுக்கீட்டையும் இந்த பிற்படுத்தப்பட்டவர்கள் பெறுகின்றனர். மேலும் சமூக நலதிட்டங்களை எடுத்துக்கொண்டால் மிக அதிக அளவிலான சலுகைகள் இவர்களை சென்று அடைகின்றது.

தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். இதில் அதிக எண்ணிக்கையிலான கணினிகளை பெற்றது யார்? என்று ஆராய்ந்தால் அது பிற்படுத்தப்பட்டவர்கள் தான் என்பது தெளிவாக தெரியும்.

இதேபோலவே சைக்கிள் வழங்கும் திட்டம், ரேசன் கடைகள், அரசின் பிற மானியங்கள், மகப்பேறு உதவி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும் இவர்களுக்கே அதிக அளவு சென்றடைகிறது. பட்ஜட்டில் ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு பிற்படுத்தப்பட்டவர்களுக்கே சென்றடைகிறது.

எனினும் ஒப்பிட்டு அளவில் இந்த சலுகைகள் இன்னும் கூடுதலாக வழங்கப்படவேண்டும் என்பதே உண்மை.

எனினும் இவ்வளவு சலுகைகளையும் பெற்றுக்கொண்டு இதில் ஒரு சிலர் (பலர்)SC /ST இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் எதிராக பேசுகின்றனர். எழுதுகின்றனர்.

முதல்நாள் எங்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்தது எங்கள் தலைவர் தான் என்று பெருமை பேசுவது , பிறகு ஒரு நாள் எல்லா இட ஒதுக்கீட்டையும் எடுக்கனும் அப்ப தான் இந்த நாடே உருப்படும்! என்று ஜல்லி அடிப்பது.

சலுகைகள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு, சலுகைகள் கூடுதலாக வேண்டுமென போராட்டமும் செய்து கொண்டு 'கோட்டாவை எல்லாம் எடுக்க வேண்டுமென இவர்கள் கூற காரணம் என்ன? இவர்களுக்கு என்னதான் பிரச்சினை?

இதனை ஆராய்ந்தால் இந்து சமூகத்தில் தனக்கு கீழ் உள்ள தலித்துகளின் மீதான வன்மமே இவர்களை இப்படி நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஒரு மிடுக்கான உடை அணிந்த தாழ்த்தப்படவரை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. உயர் அதிகாரியாக ஒரு தலித்தை இவர்களால் பொருத்துக் கொள்ள முடிவதில்லை.

தலித்துகளின் வளர்ச்சி இவர்களை மனதளவில் பாதிக்கின்றது, அந்த வளர்ச்சிக்கு காரணம் இட ஒதுக்கீடு தான் என்று இவர்கள் மனம் முடிவு செய்கிறது. ஆக தனக்கு எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. தலித் மக்களுக்கு எதுவும் கிடைக்க கூடாதென முடிவு செய்கின்றனர்.

ஆனால் உண்மையில் அரசின் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து திங்கட்கிழமைகளில் கலெக்டர் ஆபிசில் மனு கொடுக்க வரிசையில் நிற்கும் போது கூட இவர்களுக்கு உண்மை புரிவதில்லை என்பது வேதனையான விடயமாகும்.

கடைசியாக டாக்டர்.அம்பேத்கரின் பொன்மொழியோடு இதனை முடிக்கின்றேன்:
Breaking up the Caste System was not to bring about inter-caste dinners and inter-caste marriages but to destroy the religious notions on which Caste was founded
ஜாதி ஒழிப்பு என்பது சம்பந்தி விருந்து நடத்துவதோ அல்லது சாதி மறுப்பு திருமணங்கள் புரிவதோ அல்ல. மாறாக ஜாதி கட்டமைக்கப்பட்டுள்ள அதன் 'மத அடிப்படைகளை' வீழ்ததுவதே ஆகும்.
எனவே பொது மக்கள் இந்த மேற்கண்ட மூன்று பிரிவினரை சரியாக இனம் பிரித்து அடையாளம் கண்டு அனுகுவது நலம்.

https://www.facebook.com/wisdomram/posts/924784540898961