Saturday, June 16, 2018

பார்ப்பனீயம்_கற்பித்த_மனுதர்மமும்_அதனால்_பாதிக்கப்பட்ட_பெண்களும்.

Perior thondan
2018-06-16

சற்றே நீண்ட பதிவு!
தோழர்கள் முழுமையாக படியுங்கள்!!
பெண்களை எவ்வளவு கீழ்த்தரமாக கற்பித்திருக்கிறது #இந்துமதம்

#பார்ப்பனீயம்_கற்பித்த_மனுதர்மமும்_அதனால்_பாதிக்கப்பட்ட_பெண்களும்.

இந்து எனும் எமது பெண்களுக்கு; இந்த பார்ப்பனீய இந்துமதம் எவ்வாறு அவர்களைபற்றி கூறுகிறது என்று தெரிய வேண்டாமா? அதற்காகவே இந்த பதிவு.

மனுநீதி பெண்களைப்பற்றி என்ன கூறுகிறது என்பதை பார்ப்பதற்குமுன் சில வரலாற்று தகவல்களை தருகிறேன்.

உயர்சாதிப் பார்ப்பனர்கள் கீழ்சாதிப் பெண்களை அனுபவிக்கும் உரிமையை கொண்டிருந்தனர்.

''தேவர்கள் என்றும் மண்ணின் கடவுள்கள் என்றும் தம்மை கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களும், ஆளும் வர்க்கமான சத்திரியர்களும் தங்களுக்குக் கீழ்ப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களுடன் முதல் முதலில் உறவு கொள்ளும் உரிமையைக் கொண்டிருந்தனர்.

கி.பி. 1502 இல், இந்தியாவுக்கு வந்திருந்த லூடோவிக்கோல்டி வர்த்தமா கள்ளிக் கோட்டை பார்ப்பனர்கள் பற்றி கூறியது.

''அரசன் திருமணம் செய்யும் போது மிகவும் மதிப்பும் மரியாதையும் உள்ள இந்தப் பார்ப்பனர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, தன் மனைவியுடன் முதலிரவைக் கழிக்க அவரை அனுப்பிவிடுவர்."

இது போல் ஹாமில்டன் என்ற எழுத்தாளர் எழுதியதில் ''சமோரின் (ஒரு சமூகப் பிரிவு) திருமணம் செய்யும்போது நம்பூதிரியோ அல்லது முதன்மை மதக்குருவோ மணப்பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. இவர் (மதக்குரு) விரும்பினால் மூன்று இரவுகள் கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனின் அப்பெண்ணின் திருமண இரவில் முதல் கனிகள் அவள் வணங்கும் கடவுளுக்கு நைவேத்தியம் செய்யப்படவேண்டும்."

''அரசக் குடும்பங்களிலும் பிரபு குடும்பங்களிலும் பெண்கள் பார்ப்பனர்கள் மூலம் கருவுறுவதைப் புண்ணியமாகக் கருதினர். பார்ப்பனர்களுக்கு உடல், மன, காம வேட்கைகளில் சுகமளிப்பது சொர்க்கத்தை அடைவதற்கான வழியென பெண்கள் நம்பினர். பார்ப்பனர்கள் விருந்தினனாக வீட்டிற்கு வந்தால், அவன் முதியவனாக இருந்தபோதும், கன்னிகைகளான இளம் பெண்களை அவனுடைய படுக்கையறைக்கு அனுப்ப குடும்பத் தலைவர்கள் ஆர்வம் காட்டினர்.
கன்னிப் பெண்கள் இல்லையென்றால், அந்த வீட்டிலுள்ள மிகவும் வயது குறைந்த பெண், பார்ப்பனனின் பணிவிடைக்காக நியமிக்கப்பட்டாள். அந்தப் பெண்ணுக்குக் கணவன் இருந்தால், அவன் இந்தச் சமயம் அறைக்கு வெளியே படுப்பது வழக்கம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய ஒரு சமுதாய முறை இருந்தது..." பார்ப்பனிய மதம் மற்றைய மதங்கள் மீதான வெற்றிகளின் மீது பக்தியின் பின்னால்  அரங்கேறிய வடிவமிது.

இவை எவ்வாறு சாத்தியமாகியது?

ஏனெனில்; பார்ப்பான் வகுத்த மனு சட்டத்தை கடவுளின் சட்டம் என்று அப்பாவிகள் நம்பவைக்கப்பட்டு இருந்தார்கள். இப்போது மனுநீதியில் பெண்களைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ள சில வசனங்களை தரலாம் என்று எண்ணுகிறேன்.

மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"

மனு 2.214 இல், ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்"

மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"

மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்"

மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"

மனு 9.16 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்"

மனு 9.17 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை"

மனு 9.2 இல், ''இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்;. உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்."

மனு 9.3 இல், ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."

மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"

மனு 11.45 இல், ''கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது."

மனு 9.46 இல், ''விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது."

மனு 5.149 இல், ''தந்தையிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள். விவாகரத்து உரிமை கிடையாது"

மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்"

மனு 8.299 இல், ''மனைவி, மகன், அடிமை, மாணவன், இளைய சகோதரன் ஆகியோர் தவறு செய்யின் கயிறு அல்லது மூங்கில் கழியால் அடிக்கலாம்"

பெண்ணை விற்க, அனுபவிக்க, தூக்கி வீச, அடிக்க என எல்லாம் இந்து மதம் ஆணுக்கு அனுமதித்துள்ளது. பெண் இதில் எதையும் ஆணுக்குச் செய்ய முடியாது.

மனு 2.66 இல், ''பெண்.. வேதமந்திரங்களை ஓதக் கூடாது,......."

மனு 9.36 இல், ''வேதங்களில் சொல்லப்பட்ட தினசரி வேள்வி நியமங்களைப் பெண் ஆற்றுதல் கூடாது...."

மனு 9.36 இல், ''அவள் அவ்வாறு செய்தால், நரகத்திற்குப் போவாள்...."

மனு 4.205 இல் ''ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில், பிராமணன் உண்ணக்கூடாது."

மனு 4.206 இல்,''பெண்கள் இயற்றும் வேள்விகள் அமங்கலமானவை. தெய்வச் சங்கல்பமற்றவை. அவற்றைப் பிராமணர்கள் தவிர்த்தல் வேண்டும்"

மனு 5.151 இல், ''தன் தந்தை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அல்லது தந்தை இசைவுடன் சகோதரன் தன்னை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அக்கணவனுக்கு வாழ்நாள்வரை அவள் கீழ்ப்படிதல் வேண்டும். இறந்த பிறகும் கணவன் நினைவைப் பழித்தலாகாது"

மனு 5.154 இல், ''அறநெறி பிறழ்ந்தவனாயினும், வேறொருத்தியிடம் இன்பம் கொள்பவனாயினும், நல்ல குணங்கள் இல்லாதவனாயினும் விசுவாசமுள்ள மனைவி கணவனை எந்நேரமும் தெய்வமாக வழிபடுதல் வேண்டும்;"

இதனுடன் சில புராண இதிகாசங்களையும் ஆரிய இந்துமத சடங்குகளையும் பார்ப்போம்.

அர்த்த சாஸ்திரம் (3,8) இல், ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்"
''உயர் சாதிக்காரன் ஒரு சூத்திரப் பெண்ணோடு சேர்ந்து உடல் இன்பம் பெறுவானேயானால் அதனை ஒரு குற்றமாகக் கருதக்கூடாது."

கேரளத்தில் இரு நூற்றாண்டுகளிற்கு முன்பு கூட ஈழவர் சாதிப் பெண்கள் தலைவரி கட்டியதுடன், முலைவரியும் கட்ட ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை கோரியது. இந்த அவமானத்தை தாங்க முடியாது ''சேர்த்தலை" என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஈழவர் பெண் தன் இரு முலைகளையும் அறுத்து வாழை இலையில் வைத்து அதிகாரிகளிடம் கொடுத்தாள். (அந்த இடம் இன்றும் முலைச்சிப் பறம்பு என்று அழைக்கப்படுகின்றது)... கிறிஸ்தவச் சாணார் பெண்கள் முலை மறைத்து உடை அணிந்ததால் ஆடை களைந்து அவர்களது முலைகள் அறுக்கப்பட்டன..."

தேவதாசி பிரதா என்ற சடங்கின் மூலம் கடவுளுக்குப் பெண்களைத் திருமணம் செய்து வைப்பதன் மூலம்;, கோயில் விபச்சாரிகளை உருவாக்கியது.

சதிபிராரா என்ற சடங்கின் மூலம் கணவனின் சிதையில் பெண் ஏற வைக்கப்பட்டாள். பெண் மறுத்தபோது பலாத்காரமாகத் தள்ளி எரியூட்டினர்.

கங்கா பிரவர் என்ற சடங்கின் மூலம் குழந்தை இல்லாத பெண்கள் கங்கையில் நீராடியதுடன், முதல் குழந்தையைக் கங்கை நீருக்குப் பலிகொடுத்தனர்.

நரவதா என்ற சடங்கின் மூலம் ஒரு குழந்தையின் நலனுக்காக, ஏழைக் குழந்தைகள் அல்லது அநாதைக் குழந்தைகளைப் பிடித்து வந்து தேவதைக்குப் பலி கொடுத்தனர்.

கன்யவதா என்ற சடங்கில் இராஜபுத்திரர்கள் தமது பெண் குழந்தைக்குத் திருமணம் செய்யும் போது, உறவினர்க்கு முன் மண்டியிட்டு வணங்கவேண்டும் என்பதால், இராஜபுத்திரர்கள் தமது பெண் குழந்தைகளைக் கொன்றனர்.

இது போன்று காலத்தால் அழிந்தும், அழியாததுமான பல நூறு காட்டுமிராண்டிச் சடங்குகள், 2000 விரதங்கள், அது சார்ந்த தானங்கள் பரிகாரங்கள் சுரண்டல்கள் என நீண்டு, இந்துமதம் இன்றும் மூடநம்பிக்கைகளின் ஊற்றாகவே உள்ளது.

போர் வீரர்களின் வெற்றியைப் பறைசாற்ற ரிக்வேதத்தில் 8.48.88 இல், ''ஸ்திரீகள் அலங்காரம் செய்யப்பட்டு வெற்றி வீரர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்"

மகாபாரதம் அனுஷானம் 28,12,25,29 இல், ''பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்டபிறப்பு வேறு எதுவுமில்லை. - எல்லா கேடுகளுக்கும் வேர் பெண்களே! -

எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை. ஆறுகள் கொண்டுவரும் எந்த அளவு நீரினாலும் கடலுக்கு ஆசை தீருவதில்லை. எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைகாரன் சமாதானம் அடைவதில்லை. இதுபோல் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விடமாட்டார்கள்.

- நாச காலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினி, ஊற்றுவாய், சவரக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்புகள், நெருப்பு ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால் எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடியதாகுமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள்" என்று மகாபாரதம் பெண்கள் பற்றிக் கூறுகின்றது.

49.22 இல், ''பெண்ணை விட பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகின்ற நெருப்பு போன்றவள். பெண் மாய்கை, வஞ்சகக் குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.

43.23 இல், பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள்;. தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்க மாட்டார்கள், விரும்ப மாட்டார்கள்.

43.24 இல், உயிரைக் கொல்லும் அதர்வன மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள். ஒருவனுடன் கூடி வாழ ஒத்துக்கொண்டாலும் பின்னர் மற்றவர்களுடன் கூடிக்கொண்டு, முன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவுமிருப்பார்கள்.

43.24 இல், அவர்கள் ஒரு ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள்.

43.24 இல், ''ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக்கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக் கூடிய நல்ல தன்மை ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே, உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களின் சம்பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப்படிக்கு இல்லாமல் வேறுவிதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண்டால் அவன் நிச்சயமாக அழிந்து போவான்."

இராமாயணம் ஆரண்ய காண்டம் 13.5.6 இல், ''உலகம் தோன்றுவது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலையில் தண்ணீர்போல் சலனப் புத்தியுடையவர்கள். வாள்போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள்." பெண் உறுதியற்ற சலனத்தன்மை கொண்டவள். ஒன்றுக்குள் நிலை நிறுத்த முடியாதவள், எனவே, அடக்குங்கள் என்ற இராமனின் புகழ் பாடும் இராமாயணம் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்தது.

பாகவத ஸ்கந்தம் 4-14,42.8-4-36 இல், ''ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது. ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்."

சுக்ரா 3.163 இல், ''பெண் இனத்திற்கே கீழ்க்கண்ட 8 கணங்களும் உரிமையானவைகள். 1.பொய், 2.நிலையில்லாமை, 3.வஞ்சகம், 4.மூடத்தனம், 5.பேராசை, 6.மாசு, 7.கொடுமை, 8.துடுக்குத்தனம்"

அர்த்த சாத்திரம் 3-3-59 இல், ''பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற்றினாலோ, கையினாலோ, பெண்களின் வாயின் உதட்டில் மீது அடிகள் கொடுக்கலாம்;."

பார்ப்பனிய முட்டாள்த்தனம், மூடநம்பிக்கை, அடிமைப்படுத்துதல், அவதூறுகள், வன்முறை ஆகியவை மீது கேள்வி எழுப்பிய பெண்கள் கொல்லப்பட்டனர்.

அதர்வண வேதத்தில் 6-2-3 இல், ''குடும்பத்தில் பெண் பிறந்தால் அச்சம்பவம் மகிழ்ச்சிக்குரியதல்ல, வருந்துவதற்குரியது, வியாகூலப்பட வேண்டியது. ஆண் மகவை விரும்புகிறதேயல்லாது, பெண் மகவை விரும்புகிறதில்லை. பெண் மகவு வேறு எங்காவது பிறக்கட்டும்; இங்கே ஆண் மகவு பிறக்கட்டும். புக்கா கடவுளை வணங்குவதில் ஆண் மகவே பிறக்கட்டும், பெண் மகவு பிறக்க வேண்டாம்."

அரிச்சந்திர மயானகாண்டம் எந்தக் கட்டத்திலும் சந்திரமதியை விற்றதைக் கண்டிக்கவில்லை.

இந்த இந்துப் புராணங்கள் இன்று மீண்டும் முன்னணிக்குக் கொண்டுவரப்படும் நிலையில், இராமனின் ஆணாதிக்கக் கற்பு நோக்கு சீதையை இழிவுபடுத்திய வக்கிரத்தைப் பார்ப்போம்.

யாரோ ஒருவன் சந்தேகப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இறை அவதாரமாகக் கருதப்படும் இந்து நாயகன் இராமன், தனது மனைவி சீதையை, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த போதும் காட்டுக்குத் துரத்திவிட்டான்.

இறை அவதாரம் பெற்ற இராமனாகப் புராணங்கள் புளுகிய போதும், இராவணன் இடம் இருந்து சீதையை மீட்டபோது, சீதை தனது கற்பை நிலை நாட்ட தீ மிதித்து  ஒழுக்கத்தை நிறுவ வேண்டி ஏற்பட்டது.

இயற்பகை நாயனாரிடம் ஒரு பக்தன் பெயரில் சிவபெருமான் அவரின் மனைவியைப் பிச்சையாகக் கேட்டாராம். உடனே மனைவியை அவர் கொடுத்தார். பெண்ணின் பெற்றோர்கள் இதைத் தட்டிக் கேட்க, தனது உறவினர்களையே வெட்டிச் சாய்த்தார். உடனே பரமசிவன் கேட்ட உடனே கூட்டிக் கொடுத்ததுக்கும், மனைவி மறுபேச்சு இன்றி விபச்சாரம் செய்ததற்கும் அங்கீகாரம் வழங்கி, அவரை முதல்தரப் பக்தன் ஆக்கி மோட்சத்துக்கு அழைத்துப் போனாராம் சிவன்.

எவ்வளவு கேவலமான வகையில் பெண்களைப் பக்தியின் பின்னால் படுக்கைக்குப் பயன்படுத்தியுள்ளனர். இன்றும் கேடிகள், சாமியார்கள் இப்படித்தான் பெண்ணைப் பயன்படுத்துகின்றனர்.

மேலே குறிப்பிட்ட விடையங்கள் எல்லாமே எத்தனை பெண்களுக்கு தெரியும்?

மேலே இருப்பது பேராசிரியர் பி.இரயாகரன் அவர்களின் "ஆணாதிக்கமும் பெண்ணியமும்"
என்ற நூலிலிருந்து சில சுருக்கங்கள்.

#பகிருங்கள்

https://m.facebook.com/story.php?story_fbid=908177026049737&id=100005723441988

Sunday, June 10, 2018

NEET vs Akasha coaching center

A. Sivaraman
2018-06-10

Ingersol Norway

தமிழ்நாட்டிற்கு நாம் ஏன் NEET வேண்டாம் என்கிறோம்?

இந்த வருட Results கொண்டே எளிதில் விளக்குகிறேன்.

Medical Council of India (MCI) கணக்குப்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 63835

இந்திய முழுவதும் கடை விரித்திருக்கும் Aakash Foundations என்ற தனியார் கோச்சிங் சென்டரில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை : 61649

அதாவது 63835 மருத்துவ கல்லூரி இடங்களில் 96% இடங்களை இந்த ஒரு தனியார் நீட் கோச்சிங் சென்டரில் பயின்ற மாணவ மாணவிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களிடம் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை.

இந்த Aakash Foundations என்ற தனியார் கோச்சிங் சென்டரில் கட்டணம் என்ன என்று பாருங்கள்...

Aakash – One year Regular Course for NEET
INR 1,36,526

Aakash – Two Years Integrated Course for NEET
INR 3,33,350

Aakash – Crash Course for NEET
INR 32,804

நல்லா கண்ணை விரிய திறந்து பார்த்துக்கொள்ளுங்கள்.

+2 முடித்துவிட்டு விடுமுறையில் 1 மாதம் நடத்தக்கூடிய Crash Course Fees மட்டுமே INR 32,804.

குறைந்தபட்சம் ரூ.32804/- இருந்தால் மட்டுமே உங்க குழந்தையும் என் குழந்தையும் நீட் தேர்வு பயிற்சிக்கு போய், படிச்சு, நீட் தேர்வு எழுதி பாஸாகி டாக்டர் ஆக முடியும்.

இதற்கும் இந்தியாவில் இருக்கும் CBSE, ICSE, State Board போன்ற எந்தவிதமான Syllabus-க்கும் எந்த தொடர்பும் இல்லை. நன்னா விளங்கிக்கோங்க

இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12-ஆம் இடமும் பெற்ற கீர்த்தனா படித்தது சென்னையின் பெரிய பள்ளிகளில் ஒன்றான PSBB. பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். CBSE Syllabus தான். ஆனாலும் கீர்த்தனா இந்த ஆண்டு +2 முடித்துவிட்டு  நேரடியாக நீட் தேர்வு எழுதி இந்த வெற்றியை அடையவில்லை. அவள் +2 முடித்த ஆண்டு 2016.

அதாவது சென்னையில் பெரிய பள்ளிகளில் ஒன்றான PSBBயில், CBSE Syllabus-ல் +2 முடித்த ஒருவர் 2 ஆண்டு தனியார் கோச்சிங் சென்டரில் லட்சக்கணக்கான பணம் செலவு செய்து இந்த வெற்றியை அடைந்திருக்கிறார். அவருடைய பேட்டி இணையத்தில் இருக்கு, பேட்டியின் போது அவரை சுற்றி கோச்சிங் சென்டர் ஆசிரியர்கள் குழுமியுள்ளனர். அவர்கள் கழுத்தில் தொங்கும் tag களே அதற்கு சான்று.

இதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.

நம்ம தமிழ்நாட்டில்,
1. Madras Medical College
2. Stanley Medical College
3. Madurai Medical College Madurai
4. Thanjavur Medical College
5. Government Kilpauk Medical College
6. Chengalpattu Medical College
7. Kanyakumari Government Medical College
8. Coimbatore Medical College
9. Tirunelveli Medical College
10. Salem Mohan Kumaramangalam Medical College
11. IRT Perundurai Medical College
12. Trichy K.A.P.Viswanatham Government Medical College
13. Thoothukudi Government Medical College
14. Theni Government Theni Medical College
15. Vellore Government Vellore Medical College
16. Thiruvarur Government Thiruvarur Medical College
17. Dharmapuri Government Dharmapuri Medical College
18. Villupuram Government Villupuram Medical College
19. Sivagangai Government Sivagangai Medical College
20. Tiruvannamalai Government Tiruvannamalai Medical College
21. Chenai Oamndurar Government Medical College
22. Pudukkottai Government Medical College
23. Annamalai University Rajah Muthaiah Medical College

என்று 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.

இந்த 23 மருத்துவக்கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் கூட MBBS படிக்க ஆண்டு கட்டணம் ரூ.32000 கிடையாது.

ஆனால் Aakash Crash Course for NEET மட்டுமே ரூ.32000/-. வித்தியாசத்தை உணர்த்துக்கொள்ளுங்கள்.

அனிதாவும் பிரதீபாவும் இந்த 23 அரசு கல்லூரிகளில் இருந்த மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு தான் போட்டியிட்டார்கள்.

அதற்கான தகுதியும் அவர்கள் இருவருக்கும் இருந்தது,
அனிதா 1175/1200,
பிரதீபா 1125/1200
ஆனால் நீட் என்ற ஒரு தடுப்பை வைத்து அவர்களை பரலோகம் அனுப்பியாச்சு.

நாங்களும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இந்த 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 2500+ இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம். போரூரில் இருக்கும் Sri Ramachandra Medical University போன்ற தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அல்ல. தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டமும் இதை தெளிவாக சொல்லியிருக்கிறது.

இதை தான் தரம் என்று நம் மீது திணித்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பல தமிழக மாணவர்கள் கனவு பலியாக்கப்பட்டு வருகிறது.

இங்கு அவர்கள் நோக்கம் தரத்தை கொண்டு வருவதல்ல. பணக்காரர்களை தவிர வேறு யாரும் மருத்துவர் ஆக கூடாது என்பதுதான்.

ஏதோ தமிழ்நாடு மட்டுமே நீட் தேர்வை எதிர்ப்பதாக ஒரு பொய்யான பிம்பத்தை காவி பக்தர்கள் கூட்டம் கட்டமைக்கிறது. இவர்களின் பிதாமகர் உத்தமசீலர் மோடியே குஜராத் முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எதிர்த்தவர் தான்.

முதல்வராக இருந்த காலத்தில் ஒன்றை எதிர்ப்பதும்
பிரதமரான பின் அதை ஆதரிப்பதும் உத்தமசீலருக்கு ஒன்றும் புதிதல்ல.

ஆதார் அட்டை
ஜிஎஸ்டி
நீட்
இது மூன்றுமே குஜராத் முதல்வராக அய்யா எதிர்த்து தான்.

எங்கள் வீட்டில் யாரும் 1200க்கு +2 தேர்வில் 1000 மார்க்கை தாண்டியதில்லை. அதனால் 1175 மார்க் வாங்கிய அனிதாவும், 1125 மார்க் வாங்கிய ப்ரதீபாவும் எங்களுக்கு பெரிதாக தெரிகிறார்கள். அந்த குழந்தைகளின் மரணங்கள் எங்களுக்கு உயிர் வலியை தருகிறது. அதற்காக இந்த தேர்வு முறையை எதிர்க்கிறோம்.

பரம்பரை பரம்பரையாக கல்வியை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக கொண்டிருப்போர்களுக்கு இது சாதாரணமாக தெரிவதில் வியப்பேதுமில்லை. ஏனென்றால் 1200க்கு 1000 மார்க் என்பது அவர்களுக்கு சர்வ சாதாரணம்.

Capitalism+Casteism=NEET

நீட் ஒரு நவீன தீண்டாமை!

- A sivaraman

https://www.facebook.com/532853256/posts/10156261205173257/

Saturday, June 9, 2018

1950 ஆம் ஆண்டு Union Public Service Commission

Vijay bashkarvijay
2018-06-10

1950 ஆம் ஆண்டு Union Public Service Commission

நடத்திய முதல் தேர்வில் அச்சுதானந்த தாஸ் என்னும் பட்டியல் இனத்தாரை சேர்ந்தவர் எழுத்துத் தேர்வில் முதல் மார்க் எடுக்கிறார்.

அதாவது 613/1050 மார்க் எழுத்துத் தேர்வில் எடுக்கிறார். அவர்தான் எழுத்துத் தேர்வில் டாப் ரேங்கில் வருகிறார்.

ஆனால் நேர்முக தேர்வில் இண்டர்வியூவில் அவர் மார்க்கை குறைக்கிறார்கள். அங்கு முன்னூறு மார்க்குக்கு 110 மார்க்கே தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முதல் ஐ.ஏ.எஸ் ஆன அச்சுதானந்த தாஸுக்கு வழங்கப்படுகிறது.

அதே சமயம் மதராஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் எழுத்துத் தேர்வில் அச்சுதானந்த தாஸை விட குறைவாக இருந்தாலும் நேர்முக தேர்வில் அதிக மதிப்பெண்ணை பெற்று  அச்சுதானந்த தாஸ் என்னும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவரை விட முந்த வைக்கப்படுகிறார்.

சரியா அச்சுதானந்த தாஸ் எழுத்துத் தேர்வில் நன்றாக எழுதி இருந்தாலும் எப்படி கிருஷ்ணனை நேர்முகத் தேர்வில் அதிக மார்க் எடுக்க வைத்து முன்னேற வைத்தார்கள் என்பதைப் பார்த்தோம்.

அடுத்து இவர்களுக்கு நடுவே அனிருத்த தாஸ் குப்தா என்னும் தேர்வு எழுதியவரைப் பார்ப்போம்.

இவர் எழுத்துத் தேர்வில் -  494 மார்க்தான்
ஆனால் நேர்முகத்தேர்வில் - 265 மார்க்
ஆக இவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அச்சுதானந்த தாஸை விட மார்க் அதிகம் எடுக்க வைக்க்ப்படுகிறார்.

அச்சுதானந்ததாஸ் பொது அறிவில் இவர்கள் இருவரை விட அதிக மார்க் எடுத்திருக்கிறார். ஆங்கிலத்திலும் குறைவாக எல்லாம் எடுக்கவில்லை.

பொது அறிவில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் நன்றாக செய்வார்கள் என்பதுதான் உண்மை, ஆனால் இங்கே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அச்சுதானந்ததாஸ் எப்படி மார்க் குறைவாக எடுக்க வைப்பட்டார்?

சரி அச்சுதானந்ததாஸை விடுங்கள்.

கிருஷ்ணனுக்கும், அனிருத்த தாஸ் குப்தாவுக்கும் உள்ள கணக்குக்கு வாருங்கள். அனிருத்த தாஸ் குப்தா பொது அறிவில் வெறும் நாற்பது மார்க் பெற்றிருக்கிறார். ஆங்கிலத்தில் 75 மார்க் பெற்றிருக்கிறார்.

கிருஷ்ணனோ பொது அறிவில் 69 மார்க் ( இங்கே தாழ்த்ப்பட்ட சமூகத்தை சேர்ந்த அச்சுதானந்த தாஸ் 79 மார்க் என்பதை நினைவில் கொள்ளுங்கள்). பொது அறிவிலும் ஆங்கிலத்திலும் மிகக் குறைவாக எழுத்து தேர்வில் எழுதிய அனிருத் தாஸ் குப்தா எப்படி நேர்முகத்தேர்வில் கிருஷ்ணனை விட மார்க் அதிகம் எடுத்தார்.

மொத்ததில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அச்சுதானந்ததாஸ் ஐ.ஏ.எஸ் தேர்வில் கடைசி ரேங்குக்கு தள்ளப்படுகிறார். எப்படி எப்படி ? எழுத்துத் தேர்வில் முதல் இடம் வாங்கியவரை கடைசி ரேங்குக்கு தள்ளுகிறார்கள்.

கிருஷ்ணன் முதல் ரேங்காம்.
அனிருத்த தாஸ் குப்தா 22 ரேங்காம்.
அச்சுதானந்த தாஸ் 48 ரேங்க் ( இதுதான் லாஸ்ட் ரேங்க்)

பிராமண ஷத்திரிய சூத்திரர் என்ற படிநிலை மனுவின் விதியாம்.

இதுதான் இந்தியாவில் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் கதை.

அடுத்து  இந்தியாவில் முதல் பழங்குடியின சமூக ஐ.ஏ.எஸ் கதையைக்கு வாருங்கள்.

இவர் பெயர் நாம்பய் ஜம் சோங்கா. இவர் 1954 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில், எழுத்து தேர்வில் 747 மார்க் எடுக்கிறார். ரதின் திர நாத் சென்குப்தா என்பவரோ சோங்காவை விட குறைவாக எழுத்து தேர்வில் 694 மார்க் எடுக்கிறார்.

கவனியுங்கள் பழங்குடின சோங்காவை விட சென் குப்தா பொது அறிவு மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் மார்க் குறைவு. அதிலும் ஆங்கிலத்தில் சென் குப்தா 50 மார்க். அதுதான் எழுதியவர்களில் மிகக்குறைவான மார்க்.

ஆனால் நேர்முகத்தேர்வில் சென்குப்தா 240 மார்க் எடுக்கிறார். பழங்குடியின சோங்காவுக்கோ 160 மார்க்தான் கொடுக்கிறார்கள். இதிலும் மெரிட் லிஸ்டில் பழங்குடியின சோங்காவை திட்டமிட்டே கடைசி ரேங்குக்கு தள்ளிவிடுகிறார்கள்.

ஆக இந்தியாவின் முதல் பட்டியலின மற்றும் பழங்குடி ஐ.ஏ.எஸ்களை திட்டமிட்டே  கடைசி ரேங்குக்கு தள்ளி விட்டிருக்கிறார்கள்.

அதற்காக இந்திய பார்ப்பனிய அதிகார வர்க்கம் கையில் எடுத்த யுத்திதான் நேர்முக தேர்வு.

இந்த கட்டுரையை முழுமையாக படிக்க முதல் கமெண்ட் லின்க்கில் சுட்டுக. (Untold Story of Achyutananda Das and Nampui Jam Chonga – First SC and First ST IAS Officer )

I Thank my friend Pardeep Singh for running this wonderful social justice website velivada.com. Thru this website i learned lot in social Justice. Pradeep i just summarise the "untold story of first  sc/st Ias" in Tamil and it really enlight all of us.

https://m.facebook.com/story.php?story_fbid=1732584246833910&id=100002470551465