Tuesday, February 23, 2016

ஒரு ஊடகவியலாளரின் ராஜினாமா கடிதம்!

ஒரு ஊடகவியலாளரின் ராஜினாமா கடிதம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் பல்கலை மாணவர்களின் கனவுகள், படிப்பு மற்றும் குடும்பங்களை அச்சுறுத்தும் விதமாக செய்திகளை தொடர்ந்து வெளியிட்ட ஜீ (zee news) செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் ஊடகவியலாளர் விஷ்வா தீபக். அவருடைய ராஜினாமா கடிதம் தமிழில்,

Monday, February 22, 2016

நான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை!

நான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை!

https://minnambalam.com/k/1456099254
திங்கள், 22 பிப் 2016

ஜே என் யு மாணவர் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான உமர் காலித், தீவிரவாத தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டப்பட்டார். அவரது குடும்பத்திற்கு பல அச்சுறுத்தல் வந்த நிலையில், ஜேஎன்யு மாணவர்களுக்காக அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.

Friday, February 19, 2016

நீங்கள் வலிமையான மனிதர்தான் அர்னாப். ஆனால் நீங்கள் இந்தியா அல்ல

மூத்த பெண் பத்திரிக்கையாளரான சீமா முஸ்தஃபா, அர்னாப் கோஸ்வாமிக்கு எழுதிய பகிரங்க கடிதம்.
தமிழில்: விஜயசங்கர் ராமசந்திரன்

நான் ஒரு தயக்கத்துடன்தான்தான் இதை எழுதுகிறேன் அர்னாப். ஏனென்றால், ஒரு தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் பத்திரிக்கையாளரென்றும் அவருக்குரிய இடத்தைக் கொடுக்கவேண்டும் என்று நீண்டகாலம் நான் நம்பியிருந்தேன். ஆனால் கடந்த சில வருடங்களில் தொலைக்காட்சி ஊடகம் பெற்றிருக்கும் வலிமை எந்த அளவுக்கு உங்கள் மீது தாக்கம் செலுத்தியிருக்கின்றதென்றால், ஒவ்வொரு முறை திரையில் நீங்கல தோன்றும்போதும் உங்களை ஒரு பத்திரிக்கையாளாராக அல்லாமல் தேசத்தைக் காக்கவந்த தேவதூதனைப் போல்தான் முன்னிறுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் அதீத சிந்தனையில் அன்று எந்தக் குடிமக்கள் வருகிறார்களோ அவர்களைப் பற்றிய மதிப்பீட்டில் இறங்கி, அவர்களுள் ஒருவரை தேசியவாதியாகவும், மற்றொருவரை தேசவிரோதியாகவும் அறிவிக்கிறீர்கள்.

Wednesday, February 17, 2016

காவிகளின் தேசத் துரோக வரலாறு!

அவர்கள் தேசபக்தி பற்றிப் பேசுகிறார்கள். மாற்றுக் கருத்து சொல்பவர்கள் எல்லாம் தேச விரோதி என்கிறார்கள். இந்திய அன்னை அடிமைத் தளையில் சிறைப்பட்டு உழன்று கொண்டிருந்த போது இவர்கள் சற்றும் மனம் கலங்காமல் கொண்டாடி திரிந்து கொண்டிருந்தனர். இப்போது அவர்களுக்கு ஆட்சி பீடம் கிடைத்திருக்கிறது. சுதந்திரப் போர் குறித்து அதில் தங்கள் பங்கு குறித்து சொல்லிக் கொள்வதற்கு அவர்களுக்கு ஏதும் இல்லை. அதை மீறி சொல்லத் துணிந்தால் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

தேதச் துரோக உரை - கன்னையா குமார்

இதுதான் தேதச் துரோக உரை
தமிழில்: பூ.கொ.சரவணன்

ஜவகர்லால் நேரு பல்கலையின் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் கன்னையா குமார், கடந்த வியாழனன்று அப்பல்கலையில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அடுத்த நாள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக பிரிவினைக் குற்றத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

வியாழன்று அவர் நிகழ்த்திய உரையின் மொழியாக்கம் இது...

Thursday, February 11, 2016

24 Hard Facts About 9/11 That Cannot Be Debunked – You Be The Judge

24 Hard Facts About 9/11 That Cannot Be Debunked – You Be The Judge
Posted on November 17, 2014 by Royce Christyn in Conspiracies
http://yournewswire.com/24-hard-facts-about-911-that-cannot-be-debunked-you-be-the-judge/

9/11 has been one of the biggest events in recent history that sparked a mass awakening across the world. There has been much debate as to how it happened, who is responsible and why. To this day about 1/3 of americans do not believe the official story. In other areas of the world as much as 90% of the country does not believe the official story.

Tuesday, February 9, 2016

மக்கள் நலக் கூட்டியக்கம் - குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கை

தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக களமிறங்கும் மக்கள் நலக் கூட்டு இயக்கம் வெளியிட்டுள்ள 37 பக்கங்களைக் கொண்ட குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையில் 24 தலைப்புகளில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியில் மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில், மமக சமீபத்தில் வெளியேறியது. மற்ற 4 கட்சிகளும் தொடர்ந்து கூட்டியக்கத்தில் உள்ளன.

கூட்டியக்கத்தின் தேர்தல் அணுகுமுறை குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் மதிமுக தலைமை அலுவலகமான சென்னை தாயகத்தில் இன்று நடந்தது. இதில், கூட்டியக்கத்தின் குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் வெளியிட்டனர். அதன் முக்கிய அம்சங்கள்: