Wednesday, July 20, 2016

#‎RSSKilledGandhi‬


Satheesh Kumar
via FacebooK
2016-Jul-20

--------------------------------------------------------------------------------------------------------------------------

காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் தான்


--------------------------------------------------------------------------------------------------------------------------

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்றுதான் அந்த (பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உயர்நீதிமன்றம்) தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கோட்சே காந்தியை கொன்றார் என்பதற்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் காந்தியை கொன்றது என்பதும் வெவ்வேறு விதமானவையாகும் - உச்ச நீதிமன்றம் .

பொறவு ஏனுங்க ஆபிசர் சிமி , விடுதலைப்புலி போன்ற இயக்கங்கள் பேரை சொல்லி அதை தடை செஞ்சீங்க..?




--------------------------------------------------------------------------------------------------------------------------

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஏன் காந்திமீது ஆத்திரம்?

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார். எனினும் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், காந்தி மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும்.

மேலும், மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனத்தில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார்; தொடர்ந்து முறியடிக்கப் போராடினார். காலங்காலமாக அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்களே கலவர நாட்களில் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களில், ஆயுதப் படையினரே சிறு பிரிவுகளாகச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தயங்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்ற நாட்களில், கலவர இடங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார். பிரார்த்தனைக் கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும் “மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டை யாடக் கூடாது” என்று மன்றாடினார்.

கல்கத்தாவில் காந்திஜியின் தலையீட்டைக் கண்ட இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்: “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஓர் அற்புதமான செயல்.”

அந்த அற்புதமான செயல்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆத்திரம் பெருகக் காரணமாக இருந்தது. அந்த ஆத்திரத்தின் விளைநிலம்தான் கோட்சே!



--------------------------------------------------------------------------------------------------------------------------

1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”

சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!

உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”

இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர்பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: “காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…”

பெருங்கலவரத்துக்கான முன்னோட்டம்

யோசித்துப்பாருங்கள்… காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக்கொண்டு பறந்திருக்கும்?

அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.

அப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக்களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்பே கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.


 --------------------------------------------------------------------------------------------------------------------------

மகாத்மா கொலை வழக்கு நூலிருந்து:

காந்தியைக் கொல்லப் போகும் முன் முதலில் பர்தா அணிந்து போகலாம் என புது பர்தா வாங்கி முயன்றுள்ளனர். பின் அது சரியாக இல்லை என கோட்சே கூறி ராணுவ வீரன் போன்ற உடை அணிந்து சென்றுள்ளனர். கொல்லும் முன் கோட்சே உப்புக் கடலை சாப்பிட ஆசைப்பட, பல இடத்தில் கிடைக்காமல் கடைசியாய் அவருக்கு உப்புக் கடலை வாங்கித் தந்துள்ளனர் அவருடன் இருந்தவர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

நீதிபதி ஜே.எல். காபூர் கமிஷனின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது:

1948 மார்ச் 4ம் தேதி பாம்பே போலீசில் பதிவு செய்யப்பட்டபடி, சாவர்க்கரின் மெய்க்காப்பாளரான அப்பா ராம்சந்த்ர காசரின் வாக்குமூலம் இவ்வாறு கூறுகிறது:

"1946லேயே ஆப்தேவும், கோட்சேவும் சாவர்க்கரை அடிக்கடி சந்திக்க வருவர். கர்க்கரேயும் சில நேரங்களில் சாவர்க்கரைச் சந்திக்க வருவார். 1947 ஆகஸ்ட் மாதம் சாவர்க்கர் ஒரு கூட்டம் சம்பந்தமாக பூனா சென்றிருந்தபொழுது கோட்சேயும், ஆப்தேயும் அவர் கூடவே எப்பொழுதும் இருந்தனர். அவர்கள் சாவர்க்கருடன் ஹிந்து மகாசபாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தனர். தனக்கு வயதாகிக்கொண்டு வருவதாகவும், அவர்கள்தான் இந்தப் பணியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சாவர்க்கர் ஆப்தேவிடமும், கோட்சேயிடமும் கூறினார்.

1947 ஆகஸ்ட் 5 அல்லது 6ம் தேதி, டெல்லியில் அனைத்திந்திய ஹிந்து மாநாடு நடைபெற்றது. அதற்கு சாவர்க்கரும், கோட்சேயும், ஆப்தேவும் விமானத்தில் சென்றனர். அதேபோல் அங்கிருந்து பாம்பேக்கு ஒன்றாகவே விமானத்தில் திரும்பினர். 1948 ஜனவரி 13 அல்லது 14 அன்று, கர்க்கரே ஒரு பஞ்சாபி இளைஞனோடு சாவர்க்கரிடம் வந்தார். அவர்கள் சாவர்க்கரை 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேட்டி கண்டனர். அதேபோல் 15 அல்லது 16ம் தேதி, ஆப்தேவும், கோட்சேவும் இரவு 9.30 மணியளவில் சாவர்க்கரைப் பேட்டி கண்டனர்.

அதற்கு ஒரு வாரம் கழித்து, 23 அல்லது 24 தேதியாக இருக்கலாம், ஆப்தேவும், கோட்சேவும் மீண்டும் சாவர்க்கரைச் சந்திக்க வந்தனர்.காலை 10 முதல் 10.30 மணியளவில் அவருடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.”


--------------------------------------------------------------------------------------------------------------------------

மெரார்ஜி மிகத் தாமதமாக தன் கருத்தைத் தெரிவித்தார். காந்தி படுகொலை வழக்கில் அவர் ஆதாரங்களைத் தந்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் சி.கே. தஃப்தாரி என்பவர் நீதிபதி அத்மா சரணுக்கு அளித்த மனுவின் உள்ளடக்கச் செய்தியை 1948ம் ஆண்டு செப்டம்பர் 1 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் வெளியிட்டது. அதில் சாவர்க்கர் சம்பந்தப்பட்ட செய்தி உள்ள பகுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“கண்ணியத்திற்குரிய மொரார்ஜி தேசாய் அவர்களைக் குறுக்கு விசாரணை செய்தபொழுது, குற்றவாளி எண் 7ன் (வி.டி. சாவர்க்கர்) வழக்கறிஞர் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டார்: “சாவர்க்கரின் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பேரா. ஜெய்னின் கூற்று போக, உங்களுக்கு சாவர்க்கர் குறித்து வேறு ஏதேனும் தகவல் தெரியுமா?”

“மொரார்ஜி இதற்கு இவ்வாறு பதிலளித்தார்: “நான் முழு உண்மைகளையும் சொல்லட்டுமா? நான் பதிலளிக்கத் தயாராகவே வந்திருக்கிறேன். சாவர்க்கர்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்?”

குற்றவாளி எண் 7ன் (வி.டி. சாவர்க்கரின்) வழக்கறிஞர் தான் கேட்ட கேள்வியைப் பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்தக் கேள்வி, பதில், சாவர்க்கரின் வழக்கறிஞரின் கூற்று இவையனைத்தையும் நீதிமன்றத்தில் பதிவு செய்ய அனுமதிக்கும்படி நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதி அவ்வாறு பதிவு செய்வதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.”

இப்படி நீதிபதி போட்ட தடையை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏப்ரல் 8, 1948 அன்று பாம்பே சட்டசபையில் மொரார்ஜி வெளிப்படையாக இவ்வாறு சொன்னார்: “சாவர்க்கரின் கடந்த கால சேவைகள் அனைத்தும் இந்தத் தீய சேவையின் மூலம் அழிந்துவிட்டது.”

--------------------------------------------------------------------------------------------------------------------------

நள்ளிரவில் சுதந்திரம், பக். 429-430

சாவர்க்கர் தீவிரக் கண்காணிப்பின் கீழ் வந்தார். ஜிம்மி நகர்வாலாவின் பாம்பே புலன் விசாரணை முதல் 48 மணி நேரத்தில் கொஞ்சம் புதிய செய்திகளைக் கொண்டு வந்தது. பாம்பே கண்காணிப்பாளர் பிரிவு சாவர்க்கர் சதான் என்னும் சாவர்க்கர் இல்லத்தின் முன்பு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டது. ஆனால் அதிபுத்திசாலியான சாவர்க்கர் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தவில்லை. சில ஆபத்தான மர்ம அலை அந்த இல்லத்திலிருந்து வெளிவருவது போலிருந்தது.

சாவர்க்கரின் வீட்டைச் சுற்றி அவரின் சீடர்களின் நடமாட்டங்களில் நகர்வாலாவுக்கு சந்தேகம் பிறந்தது. அவரது போலீஸ் மூளை ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போவது குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தது. டெல்லி காவல்துறைத் தலைவரிடம் நகர்வாலா இவ்வாறு கூறினார்: “ஏன் என்று கேட்காதீர்கள். இன்னொரு கொலை முயற்சி நடக்கவிருக்கிறது. இங்கு நிலவும் சூழ்நிலையை வைத்து நான் இதனை உணர்கிறேன்.”

--------------------------------------------------------------------------------------------------------------------------

1975ம் ஆண்டு லாரி காலின்ஸ், டொமினிக் லேப்பியர் ஆகியோர் எழுதிய மிகப் பிரபலமான “நள்ளிரவில் சுதந்திரம்” (Freedom at Midnight) என்ற நூல் வெளிவந்தது. அந்த நூல் காவல்துறை ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.

மேற்கு பாகிஸ்தானிலிருந்து இங்கே வந்த அகதியான மதன்லால் கே. பஹ்வா 1948ம் ஆண்டு ஜனவரி 20 அன்று காந்தி பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு குண்டை வெடிக்கச் செய்தான். அவனுடன் கூட வந்த கோட்சேயும், இன்னும் சிலரும் தப்பி ஓடி விட்டனர்.

அடுத்த நாள், இந்த வழக்கு விசாரணையை பாம்பே மாகாண உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் காவல்துறை அதிகாரி நகர்வாலாவிடம் ஒப்படைத்தார். “நள்ளிரவில் சுதந்திரம்” நூலில் அதன் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்: (நள்ளிரவில் சுதந்திரம், பக். 417)

“நகர்வாலா மதன்லாலைப் பிடிக்க அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டார். காந்தியைக் கொல்ல முனைந்தவர்கள் பனை மரங்களுக்கிடையில் அமைதியாக இருந்த வீடுகளைக் கடந்து பாம்பேயின் கெலுக்சர் சாலையில் அமைந்துள்ள சாவர்க்கரின் வீட்டிற்குச் சென்றார்கள் என்பதைக் கண்டறிய அந்த இளம் அதிகாரிக்கு வெகு நாட்கள் பிடிக்கவில்லை. மதன்லால் அந்தக் கொலை முயற்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சாவர்க்கரை அவரது வீட்டில் வைத்து சந்தித்ததை அடிப்படையாக வைத்து சாவர்க்கரைக் கைது செய்ய நகர்வாலா மொரார்ஜியிடம் அனுமதி கேட்டார்.

மொரார்ஜி கோபத்துடன் அதற்கு மறுத்ததுடன் இவ்வாறு அந்த அதிகாரியிடம் எரிந்து விழுந்தார்: “உமக்கென்ன பைத்தியமா? இந்த மொத்த மாகாணமும் தீக்கிரையாகிப் போக வேண்டும் என்று நீர் எண்ணுகிறீரா?”

நகர்வாலாவால் சாவர்க்கரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்தான் போட முடியவில்லை. ஆனால் ஒரு காரியம் செய்தார். பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட அதிபுத்திசாலிப் பிரிவான ‘கண்காணிப்பாளர் பிரிவு’ (Watchers’ Branch) என்ற பிரிவுக்கு சாவர்க்கரைக் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைக்க முடிந்தது.”

--------------------------------------------------------------------------------------------------------------------------

“மகாத்மா காந்தியின் வாழ்வும், மரணமும்” (The Life and Death of Mahatma Gandhi) என்ற நூலை ராபர்ட் பெய்ன் (Robert Payne) என்பவர் எழுதி 1969ல் வெளியிட்டார். அதில் சாவர்க்கர் குறித்து அவர் இவ்வாறு எழுதுகிறார்:

“காந்தி படுகொலை செய்யப்பட்டு 8 மணி நேரத்துக்குள் சாவர்க்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர்தான் இந்தப் படுகொலையின் முதல் சந்தேகத்திற்குரியவர். ஆனால் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் ஆரம்பத்தில் கைது செய்யப்படவில்லை. அவர் லண்டனில் வசித்திருந்தால் உடனே அவர் மீது சந்தேகம் பாய்ந்திருக்கும்.

நாதுராம் வினாயக் கோட்சேதான் சதித் திட்டம் தீட்டுவதற்கு ஒருங்கிணைப்பு செய்தவர் என்று காட்டுவதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு எந்தக் கஷ்டமும் இருந்திடவில்லை.

ஆனால் சாவர்க்கர் நேரடியாக இதில் ஈடுபட்டார் என்பது நிரூபிக்கப்படுவதற்கு மிகுந்த கஷ்டம் இருந்தது. படுகொலை நடப்பதற்கு முன்பாக பல மாதங்கள் தான் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும், சொற்ப நபர்களே தன்னை வந்து சந்தித்ததாகவும், கோட்சேயோ, நாராயண் டி. ஆப்தேயோ தன்னை ஒரு வருடத்திற்கும் மேலாக சந்திக்கவேயில்லை என்றும் சாவர்க்கர் கூறினார்.

காந்திப் படுகொலைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது ஜனவரி 17ம் நாள், திகாம்பர் பாட்கே என்பவர் கோட்சேவையும், ஆப்தேவையும் பாம்பேயில் சாவர்க்கர் இல்லத்திற்கு காலை 9 மணிக்கு அழைத்துச் சென்றார். பாட்கே கீழ்த்தளத்தில் காத்திருக்க, தங்கள் அரசியல் குருவான சாவர்க்கரை கடைசியாக ஒரு முறை பார்க்கவும், இறுதிக் கட்ட அறிவுரைகளைக் கேட்டு விட்டுப் போகவும் கோட்சேவும், ஆப்தேவும் மேல் தளத்திற்குச் சென்று சாவர்க்கரைச் சந்தித்தனர்.

ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள் கோட்சேவும், ஆப்தேவும் திரும்பி கீழ்த்தளத்திற்கு வந்தனர். அவர்களுடன் சாவர்க்கரும் வந்தார். “வெற்றியுடன் திரும்பி வாருங்கள்” என்று சாவர்க்கர் அவர்களிடம் சொன்னார். இந்தப் படுகொலைக்கு தார்மீக ரீதியான அதிகப் பொறுப்பு சாவர்க்கருக்கே உள்ளது.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323)

--------------------------------------------------------------------------------------------------------------------------

Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323

“காந்திஜியின் படுகொலை குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தப் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மகாசபா ஆகிய இரு அமைப்புகளின் பங்கு குறித்து நான் இப்பொழுது கருத்து கூறக்கூடாது. ஆனால் ஒன்றை எனக்குக் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த இரண்டு அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகளின் விளைவால், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகளின் விளைவால், நாட்டில் ஒரு சூழல் உருவானது. எப்படிப்பட்ட சூழல் என்றால் இப்படிப்பட்ட கொடூரக் கொலைகள் நடப்பதற்கு சாத்தியப்படக்கூடிய அளவுக்கு மோசமான சூழல் உருவானது.

ஹிந்து மகாசபாவின் மதவெறி பிடித்த தீவிரவாதப் பிரிவுதான் இந்தப் படுகொலையைச் செய்தது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகள் அரசின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அது தடை செய்யப்பட்ட பின்பும், அதன் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்று எனக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. மாறாக, உண்மையில் சொல்லவேண்டும் என்றால், அதன் கீழறுப்பு நடவடிக்கைகள் அதிகமாகத்தான் ஆகியிருக்கின்றன.”

--------------------------------------------------------------------------------------------------------------------------

Sardar Patel’s Correspondence, Volume 6, Page 56

1948ம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று மத்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு இவ்வாறு எழுதியனுப்பினார்:

“காந்தியின் படுகொலை வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தை நான் தினமும் கவனித்து வருகிறேன். சாவர்க்கரின் கட்டுப்பாட்டிலுள்ள RSS ஹிந்து மகாசபாவின் தீவிரவாதப் பிரிவுதான் இந்தப் படுகொலைக்கான சதித் திட்டத்தைத் தீட்டி, அதனை நிறைவேற்றியது.”

--------------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் அன்று மாலை ஸ்வபன் தாஸ் குப்தா தொலைக்காட்சியில் ஓர் உண்மையை வெளிப்படுத்தினார். வி.டி. சாவர்க்கருக்கு மகாத்மா காந்தியின் படுகொலையில் பங்குண்டு என்றும், ஆனால் அவர் தப்பித்து விட்டார் என்றும் மொரார்ஜி தேசாய் சொன்னதாக எல்.கே. அத்வானி தன்னிடம் கூறினார் என்பதுதான் அந்தச் செய்தி.

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஜனவரி 20, 1948, மதன்லால் பக்வா, சங்கர் கிஸ்தயா, திகம்பர் பட்கே, விஷ்ணு கார்கேற், கோபால் கோட்சே, நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் அப்தே இவர்கள் அனைவரும் தில்லியில் பிர்லா பவனில் கூடி அடுத்தக்கட்டத் தாக்குதலைத் தீர்மானித்தனர். அதன்படி காந்தி பேசும் மேடை அருகே வெடிகுண்டை வெடிக்கச்செய்து அதன்மூலம் கலவரம் ஏற்பட்டவுடன் காந்தியை சுட்டுக் கொல்லத் தீர்மானிக்கப்பட்டது. சுட்டுக்கொல்ல திகம்பர் பக்டேவும் அல்லது சங்கர் கிஸ்தி இருவரில் யாராவது நிலைமைக்குத் தகுந்தார்போல் செயல்படவேண்டும் என்ற தீர்மானத்தின்படிப் புறப்பட்டனர்.

அதன்படி தனியார் வாகனத்தை பயன்படுத்தி காந்தி பேசும் மேடையருகே மத்னலால் பக்வாவால் பற்றவைக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக குண்டு வெடிக்கவில்லை இதனால் இந்த முயற்சியும் தோல்வியுற்றது.மதன்லால் பக்வாவை விட்டுவிட்டு மற்றவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். காவல்துறை மதன்லால் பக்வாவை விசாரித்ததில் உண்மைகள் தெரிந்தன ஆனால் காவல்துறையால் உடனிருந்தவர்களை பிடிக்கமுடியவில்லை. அவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்தைவிட்டு தப்பிவிட்டனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஜூன் 29,1946 ல் காந்திக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தொடர்வண்டியில் பிராயாணித்தபொழுது அத்தொடர்வண்டி மும்பை அருகேயுள்ள நேரல் க்கும் கர்ஜட் க்கும் இடையே தடம் புரண்டது.

இருப்புப்பாதையின் கடையாணிகளை விசமிகள் வேண்டுமென்றே காந்திக்கு குறிவைத்து கழற்றியுள்ளதால் தடம் புரண்டது என்ற அறிக்கையை சமர்ப்பித்தார். ஏனென்றால் காந்தியின் சிறப்பு தொடர்வண்டி மட்டுமே அவ்வழியில் செல்வதாயிருந்தது. வேறு எந்த வண்டியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

காந்தி முகமது அலி ஜின்னாவுடன் பேச்சு வர்த்தை நடத்துவதற்காக செப்டம்பர் 9, 1944 ல் சேவாகிராம் ஆசிரமத்தை விட்டு மும்பைக்கு பயணமானார் வழியில் RSS ஹிந்து மகா சபாவினர் இடைமறித்தனர்.

அவரை மும்பையில் ஜின்னாவுடன் சந்திப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அந்த கூட்டத்தின் தலைவனாக நாதுராம் கோட்சே அவர்கள் காந்தியைக் கொல்வதற்கு முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து எதற்கு காந்தியை கொல்வதற்கு முயல்கிறாய் என்று வினவியதற்கு வீர் சாவர்க்கர் கட்டளைப்படி அவரைக் கொல்லவேண்டும் என்று கூறினர். 

டாக்டர் சுசிசிலா நாயர் கப்பூர் ஆணையத்தின் முன் இவ்விவரங்களை அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

மே 1944, காந்தி அகா கான் அரண்மணை சிறையில் இருந்து மலேரியா தாக்குதலினால் விடுவிக்கப்பட்டார். மருத்துவர் அறிவுறுத்தலின் படி பஞ்ச்கனி மலை வாழ்விடத்தில் தங்கவைக்கப்பட்டார். இவர் இருப்பிடத்தை எப்படியோ அறிந்து நாதுராம் கோட்சே குழுவினர் 20 இளைஞர்களுடன் சிறப்பு பேருந்தில் வந்திறங்கினர். மாலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை நோக்கி காந்தி எதிர்ப்பு வாசகங்களைக் கூறிக்கொண்டே மிகுந்த ஆவேசத்துடன் கத்தியுடன் உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்த கூட்ட நெரிசலில் அவர்களால் காந்தியை நெருங்க முடியவில்லை காந்தியை பத்திரமாக அவர் தொண்டர்கள் அழைத்துச் சென்று விட்டனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஜூன் 25, 1934 அன்று காந்தி புனேவுக்கு தன் மனைவி கஸ்தூரிபாய் காந்தியுடன் மாநகராட்சி அரங்கத்தில் உரையாற்ற சென்றார். அவர்கள் இரண்டு மகிழுந்தில் சென்றனர். காந்தியும் அவர் மனைவியும் இருந்த மகிழுந்து அரங்கத்தை சென்று அடையும் முன்னரே, முதலாவது மகிழுந்து அரங்கத்தை வந்து சேர்ந்தது. 

அந்த வாகனம் அரங்கத்தினுள் நுழைந்த சில நிமிடங்களில் அதனை நோக்கி எறியப்பட்ட கையெறிக்குண்டு அதன் முன் வெடித்தது. இதனால் புனே ஊராட்சித் தலைமை அதிகாரி, இரு காவலர்கள் மற்றும் ஏழு இதர உறப்பினர்கள் பலத்த காயமடைந்தனர். காந்தி எக்காயமுமின்றி உயிர் தப்பினார். அது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை யாரும் கைது செய்யப்படவில்லை. 

இது கப்பூர் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. 

அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. 

இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். 

மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.

இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப் படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத் துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான் “இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல” என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!

--------------------------------------------------------------------------------------------------------------------------

நாங்கள் சகோரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.ல் இருந்தவர்கள்தாம். நாதுராம் (கோட்சே) பட்டாரிய்யா நான், கோவிந்த் ஆகிய நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.ஐ சார்ந்தவர்களே. நாங்கள் எங்கள் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ்.ஸில்தான் அதிகமாக வளர்ந்தோம்.

நாதுராம் (கோட்சே) ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்தாரா? அவர் ஆர்.எஸ்.எஸ்.ஐ விட்டு விலகிடவில்லையா?

நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.ல் (காரியவாஹ்) செயலாளராக இருந்தான். அவன் காந்தி கொலை வழக்கில் கொடுத்த வாக்குமூலத்தில் தான் ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து விலகி விட்டதாகக் குறிப்பிட்டார். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்.ன் அப்போதைய தலைவர் கோல்வால்கரும், ஆர்.எஸ்.எஸ்.ஸும், காந்திஜியின் கொலைக்குப்பின் பயங்கர கெடுபிடிகளுக்கு ஆளாகி நின்றார்கள். ஆனால், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.ஐ விட்டு வெளியேறவில்லை.

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஆரம்பம் முதல் காந்தியை கொலை செய்யும் திட்டத்தின் சூத்திரதாரியே சாவர்க்கர்தான். கோட்சே என்பவனை இயக்கியவர் சாவர்க்கர். அதேபோல், கோட்சே சாவர்க்கரைதான் தன்னுடைய மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருந்தான். இதனை மெய்ப்பிக்கவே காந்தி கொலையில் தனக்கு மட்டுமே பங்குள்ளது என்று ஆணித்தரமாக கூறினான். கோட்சே நீதிமன்றத்தில் என்ன மாதிரி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் சாவர்க்கர் பார்த்துக் கொண்டார். 

இதனடிப்படையில் 1949 பிப்ரவரி 10 சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அதன்படி, நாதுராம் கோட்சேவிற்கும், நாராயண ஆப்தேவிக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. விஷ்ணு கர்கரே, மதன் லால் பாவா, கோபால் கோட்சே, சங்கர் கிச்திய, டாக்டர் பச்சுரே ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார்.
இந்த தீர்ப்பை கேட்ட அனைவரும் சாவர்க்கரின் காலில் விழுந்து வணங்கினார்கள். எவ்வளவு மரியாதை வைத்திருந்தால் அவர்கள் காலில் விழுந்திருக்க வேண்டும். அதே விசுவாசம்தான் இன்றைக்கு பாராளுமன்றத்தில் அவரை புகைப்படமாக அமர வைத்திருக்கிறது.
காந்தி படுகொலையில் குற்றவாளியான சாவர்க்கரின் புகைப்படம் கடந்த பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியின் போது பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

கோட்சேவிற்கு நாங்கள்தான் ( ஆர்.எஸ்.எஸ்) துப்பாக்கி வழங்கினோம். டெல்லி, மும்பைக்கு விமானத்தில் பறந்து செல்ல பண உதவி செய்ததும் நாங்களே. அதேப்போன்று ஹிந்துத்துவா வெறியை மக்களிடம் ஊட்ட பத்திரிகை நடத்த உதவியதும் நாங்களே” - சாக்சி மகாராஜ்

--------------------------------------------------------------------------------------------------------------------------

மோடி பதவி ஏற்ற பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் மகாத்மா காந்தி கொலை வழக்கு தொடர்பான கோப்புகள் உட்பட 1.5 லட்சம் முக்கிய கோப்புகளை அவசர அவசரமாக அழித்திருக்கிறது. காந்தி கொலை வழக்கில் இந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தும் கோப்புகளை அழித்து விடுமாறு மோடி கூறியதன்படி இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று சி.பி.எம் உறுப்பினர் ராஜீவி மாநிலங்களவையில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “கோப்புகளை அழிக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார் என்பதை நான் உறுதியாக மறுக்கிறேன்” என்று அரசின் சார்பில் பதில் சொல்லியிருக்கிறார். அதாவது, கோப்புகள் அழிக்கப்பட்டதை அரசு மறுக்கவில்லை, மோடி அறிவுறுத்தலின் பேரில் அது நடக்கவில்லை என்பது மட்டும்தான் அவர்களது பதில்.

காந்தி கொல்லப்பட்ட செய்தியை வெளியிடுவதற்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தின் பதிவுகள் அடங்கிய கோப்புகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் என்னென்ன கோப்புகள் அழிக்கப்பட்டன என்பது மோடிக்கும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும்தான் வெளிச்சம்.

இன்னும் கொஞ்ச நாளில் காந்தி சாகவேயில்லை, காந்தியை கோட்சே கொல்லவேயில்லை, காந்தியை சுட்ட கோட்சேவுக்கு ஆர்.எஸ்.எஸ்சுடன் தொடர்பே இல்லை, ஆர்.எஸ்.எஸ் இந்து பாசிச பயங்கரவாத அமைப்பு இல்லை என்று அடுத்தடுத்து வரிசையாக வரலாற்றை திருத்துவதற்கு ஏற்ப பதிவுகள் அழிக்கப்படும், அல்லது மாற்றப்படும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பிட்ட தினத்தன்று காந்தி பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வரும் போது கோட்சே சுட வேண்டும் என்று காத்திருக்க, காந்தி உள்துறை அமைச்சர் பட்டேலுடன் தீவிர ஆலோசனையில் இருந்துள்ளார்.

பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அப்போது ஏதோ கருத்து வேறுபாடு. அது பற்றி காந்தியிடம் பேசியுள்ளார் பட்டேல். பட்டேலுடன் பேசியதில் பிரார்த்தனை கூட்டத்துக்கு நேரமாகி விட்டது என்று அவசரமாகக் குறுக்கு வழியில் காந்தி சென்றுள்ளார்.

காந்தியை மேடையில் வைத்துத்தான் சுடவதுதான் கோட்சேவின் திட்டம். ஆனால் காந்தி வழக்கமாய்ச் செல்லும் வழியை விடுத்து, கோட்சே நின்ற இடம் வழியே செல்ல, அங்கேயே அவரைச் சுட்டான் கோட்சே.

மூன்று குண்டுகள் மகாத்மா மார்பைத் துளைக்க அங்கேயே இறந்து விட்டார். சுட்ட கோட்சே கைகளைத் தூக்கியவாறு, “போலிஸ்.. போலிஸ்” என்று கத்தியுள்ளான். மக்கள் வந்து அடித்து கொன்று விடுவார்களே என்று தான் கோழைத்தனமாக பயந்து போலிசை அழைத்துள்ளான்.ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களால் எழுதிகொடுக்கப்பட்ட வாக்குமூலத்தை படித்த கோட்சே வீரனை போல முடிவு குறித்து தெரிந்தே கொல்ல துணிந்தேன் என கூறினான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

காந்தியைக் கொல்ல ஒரு நாளுக்கு முன் கோட்சே தன்னுடன் இருக்கும் கார்கரே மற்றும் ஆப்தேக்கு ஒரு கடிதம் எழுதி அவர்கள் ஊரான மகாராஷ்டிராவுக்கு அனுப்புகிறார். காரணம் அவர்கள் தன்னுடன் இல்லை; ஊரில் இருந்தார்கள் என்று நிரூபிக்க! வழக்கு நடக்கும் போதும் “நான் தான் கொன்றேன்; அவர்கள் உடன் இல்லை” என கோட்சே வாதிட்டாலும், போலீஸ் ஆதாரத்துடன் அவர்களும் உடன் இருந்ததை நிரூபிக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

சுதந்திரத்துக்கு முன்பும் ஒரு முறை கோட்சே காந்தியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றுள்ளான்.கூட்டத்தில் இது நிகழ, பலரும் சேர்ந்து காப்பாற்றி விட்டனர்.

காந்தி அப்போது “அந்த மனிதரை எதுவும் செய்யாதீர்கள். விட்டு விடுங்கள். அவரை என்னுடன் எட்டு நாட்கள் வந்து தங்கச் சொல்லுங்கள். அவரது கருத்தை நான் அறிய விரும்புகிறேன்” என்றார்.

கோட்சே அவருடன் தங்குவதை (அப்போதும் கொல்ல முயற்சிப்பார் என்பதால்) மக்கள் யாரும் விரும்ப வில்லை.


--------------------------------------------------------------------------------------------------------------------------

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும், காந்தி கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பா.ஜ.கவினர் வாதாடுகின்றனர். அவர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே, ஆர்.எஸ்.எஸ்.காரர்தான் என்று உறுதி செய்து, காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சே, பிரண்ட்லைன் இதழுக்கு 1994 ஆம் ஆண்டு அளித்த நேர்காணல் இதை உறுதி செய்கிறது.


“நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். சில் இருந்தவர்கள் தாம். நாதுராம் (கோட்சே) சத்பத்ரேயா, நான், கோவிந்த் ஆகிய நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களே. நாங்கள் எங்கள் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ்.சில்தான் அதிகமாக வளர்ந்தோம். நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.இல் (காரியவாஹ்) செயலாளராக இருந்தான். அவன் காந்தி கொலை வழக்கில் கொடுத்த வாக்குமூலத்தில்தான் ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகி விட்டதாகக் குறிப்பிடுகின்றார். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்.சின் அப்போதைய தலைவர் கோல்வால்கரும், ஆர்.எஸ்.எஸ்.சும், காந்திஜியின் கொலைக்குப் பின் பயங்கர கெடுபிடிகளுக்கு உள்ளானதுதான். ஆனால், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சை விட்டு வெளியேறவில்லை. 

அத்வானி, கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.விற்கும் சம்பந்தமில்லை என்று கூறி இருக்கின்றாரே? என்ற கேள்விக்கு, அதைத் தான் மறுப்பதாகவும், அத்வானி சொல்வது கோழைத்தனம் என்றும் பதிலளித்திருக்கிறான் கோபால் கோட்சே. 1944‍ஆம் ஆண்டு முதல் இந்து மகா சபைக்காகப் பணி செய்யத் தொடங்கிய நாதுராம் கோட்சே, அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பணி செய்யத் தொடங்கினான். ஆர்.எஸ்.எஸ் இல் காரியவாஹ் என்ற அறிவுத்துறை செயலாளராகவும் இருந்தததாகவும் கோபால் கோட்சேவின் நேர்காணல் தெரிவிக்கிறது.

காந்தியின் மரணம் என்பது ஆர்.எஸ்.எஸ் ஒரு வன்முறை இயக்கம் என்பதற்கான வெளிப்படையான, ஆதாரப்பூர்வமான சான்று. இப்படியான ஒரு கொடூரமான வன்முறைப் பின்னணி கொண்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் ஒரு அரசியல் முகமான பா.ஜ.க தற்போது ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கைககளை, இந்தியா முழுமைக்கும் செயல்படுத்துவதற்கு உறுதி பூண்டிருக்கும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் அத்தகைய அரசுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பா.ஜ.க அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையின் உயர் பொறுப்பில் இருக்கிறவர்கள் என்று அத்தனை பேரும் ஆர்.எஸ்.எஸ் எனும் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் தான் நாங்கள் என்பதை கூச்ச நாச்சமின்றி பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் கூட தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில், பா.ஜ.க உறுப்பினர்கள், தாங்கள் சிறுவயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதை வெட்கமின்றி, களிப்போடு அறிவித்து மகிழ்கின்றனர். இதை விட ஒரு ஆபத்தானச் சூழலை, இந்திய நாடு ஒரு போதும் சந்தித்திருக்க முடியாது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

காந்தியைக் கொன்றதற்கு “பாகிஸ்தான்” பிரிவினையையும் அதனையொட்டிய விளைவுகளையும் காரணங்களாக அடுக்கும், இந்துத்துவாதிகள் ஒரு செய்தியை வசதியாக மறந்து விடுகின்றனர். 

கடைசியாக 1948 சனவரி 20 ஆம் திகதியும், 30 ஆம் திகதியும் காந்தி உயிர் மீது குறி வைக்கப்படுவதற்கு முன்பாகவே, பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சிகள் நான்குமுறை நடந்திருக்கின்றன. தோல்வியடைந்த ஐந்து கொலை முயற்சிகளில் நான்கு முயற்சிகள், முசுலிம்களின் கொள்கைத் திட்டங்களில் ”பாகிஸ்தான்” என்பது இடம் பெறாத காலத்தில் நடைபெற்றவை. அதாவது பாகிஸ்தான் பிரிவினை பேச்சு எழுமுன்பே, காந்தியின் உயிருக்கு தேதி குறிக்கப்பட்டிருக்கிறது. 

1934 இல், காந்தி காரில் சென்று கொண்டிருந்த போது, பூனாவில் ஒரு கை வெடிகுண்டு அவர் வண்டி மீது வீசப்பட்டது. அது தான் முதல் முயற்சி. அன்றிலிருந்து சனவரி 30 வரை, பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சிகள் நான்கு. பதிவு செய்யப்படாத முயற்சிகளின் எண்ணிக்கை பத்து.

தோல்வியடைந்த நான்கு தாக்குதல்களும் பூனாவைச் சேர்ந்த உயர் சாதி இந்துக்களால் நடத்தப் பட்டவை. இந்த நான்கில் மூன்று முயற்சிகள் “நாராயண் ஆப்தே-கோட்சே” கும்பலால் மேற்கொள்ளப்பட்டவை. இதில் இரண்டு முறை நாதுராம் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறான்.

மேற்சொன்ன அனைத்து முயற்சிகளிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இச்சதியில் ஈடுபட்ட அனைவருமே சித்பாவன பார்ப்பனர்கள். அனைவரும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கியவர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் தான்

RSS and BJP constantly claim that Nathuram had quit RSS long before he murdered Gandhi. On the other hand, RSS also constantly claims that they do not maintain any membership details. 
(Ref: RSS - basic FAQ)

How does an organization which doesn't maintain membership records can claim that an individual has quit the organization? In fact, Nathuram Godse's own brother, Gopal Godse, has admitted that Nathuram was in fact very much part of RSS. Why should we believe BJP and RSS when Nathuram Godse's own brother clearly says that he was still a part of RSS when he murdered Gandhi. In an interview to Frontline magazine printed in the Jan 1994 issue, Gopal Godse made the following statements:

Q. Were you a part of the RSS?

A. All the brothers were in the RSS. Nathuram, Dattatreya, myself and Govind. You can say we grew up in the RSS rather than in our homes. It was like a family to us.

Q. Nathuram stayed in the RSS? He did not leave it?

A. Nathuram had become a baudhik karyavah (intellectual worker) in the RSS. He (Nathuram) said in his statement that he left the RSS. He (Nathuram) said it because Golwalkar and the RSS were in a lot of trouble after the murder of Gandhi. But he did not leave the RSS.

--------------------------------------------------------------------------------------------------------------------------

























Thursday, July 14, 2016

நிலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனு



பகல் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் !!

நாம் வாங்கும் நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் சேர்த்தே சமர்ப்பிக்கிறோம்.

பதிவுத் துறையின் மூலமாகவே, நமது 'பட்டா மாறுதல் மனு' வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்படி, வருவாய்த் துறையினர் இயல்பாகவே, நாம் வாங்கிய நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்து, நமக்குத் தர வேண்டும்.

அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு 1984. ஆனால், நடைமுறை அப்படியா இருக்கிறது? இல்லவே இல்லை!

நிலத்தைப் பதிவு செய்துவிட்டு, 'பட்டா பெயர் மாறுதலுக்காக' வி.ஏ.ஓ., -விடம் போகிறோம்.

அவர் குறைந்த பட்சம் 4000 ரூபாயில் தொடங்கி நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
வெறும் பட்டா பெயர் மாறுதலுக்கோ, உட்பிரிவு உள்பட பெயர் மாறுதலுக்கோ 'சல்லிக்காசு' கூட கட்டணமில்லை. ஆனால் அவரோ, தாசில்தார், மண்டல துணை தாசில்தார் உள்பட, வருவாய்த் துறையின் அத்தனை மேஜைகளுக்கும் படியளந்துதான் பட்டா பெற முடியும் என்பதாக நம்மிடம் 'அளந்து', நம்மிடம் எதிர்பார்க்கும் தொகைக்கான 'பங்குத் தொகைப் பிரிப்புப் பட்டியலை' விரிக்கிறார்.

இந்தக் கொள்ளையை எதிர்த்து, சமூக ஆர்வலர் திரு ஓ.பரமசிவம் என்பவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்துள்ளார்.
தலைமை நீதிபதி திரு. சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ஆகியோர், தமிழக அரசின் 1984-ஆம் ஆண்டு அரசாணையின்படி எவ்விதக் கட்டணமுமின்றி உடனடியாகப் பட்டா பெயர் மாறுதல் செய்து வழங்கிட ஆணையிட்டுள்ளனர்.

மேலும், "நிலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் பெறப்படுவதால், பதிவு செய்த ஒரு மாத காலத்துக்குள் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து உரியவருக்கு வழங்கப்பட வேண்டும்; புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை!" என்றும் அத் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளனர்.

இதோ நண்பர்களே, அந்தத் தீர்ப்பின் நகல் கிடைத்துவிட்டது!

https://www.google.co.in/url…

தாசில்தார் தொடங்கி, வி.ஏ.ஒ வரை அடிக்கும் பகற்கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைப்போம்!

எல்லோருக்கும் போய்ச் சேருமளவு இத் தகவலைப் பரப்புங்கள்!


Consumer Rights Protection ... vs Tamil Nadu Govt. on 6 February, 2015
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
DATED: 06.02.2015

Coram
THE HONOURABLE Mr.SANJAY KISHAN KAUL, The Chief Justice
and
THE HONOURABLE Dr.JUSTICE S.TAMILVANAN

Writ Petition (MD) No.8250 of 2008
and
M.P.(MD)No.1 of 2018

Consumer Rights Protection Council,
through its Secretary O.Paramasivam,
No.6, Thamukkam Shopping Complex,
Tallakulam, Madurai-2,
Madurai Ditrict.                              ... Petitioner

    vs.
1.Tamil Nadu Govt., rep.by
  The Secretary, Revenue Department,
  St.George Forts Building, Chennai.

2.Inspector General of Registration,
  The Registration Department,
  120, Santhome High Road,
  Chennai-4.                                  ... Respondents

Writ Petition filed under Article 226 of the Constitution of India,
praying for issuance of a writ of mandamus, directing the respondent No.2 and
his subordinates to forward the application and the fee collected for survey
and patta transfer at the time of registration fo sale deed to 1st respondent
Revenue Offices and respondent No.1 to transfer patta in the name of the
purchaser without obtaining another application and charges.

  
!For Petitioner  : Mr.S.Thamizharasan
For Respondents  : Mr.B.Pugalendhi,
            Spl.Govt.Pleader.
 

:ORDER
 (Order of the Court was made by The Hon'ble Chief Justice) The petitioner, claiming to be the Secretary of the Consumer Rights Protection Council, seeks to file the present writ petition, in public interest, on account of the grievance that any transaction for purchase of immovable property of any kind, which are registrable and whereafter patta is required to be issued, the 2nd respondent/Registration Office is collecting charges for patta transfer and even issuing receipts as also for sub- division. It is submitted that thus when the purchaser approaches the revenue authorities, a second set of charges are to be paid.

2.In the counter affidavit, it has been stated that patta transfer application in prescribed form/Registration-II Form No.52, tendered along with documents presented for registration, is forwarded by the Sub- Registrar to the Tahsildar in whose jurisdiction the property is situated and the job of collecting this fee now has been entrusted to the Registration Department as per G.O.Ms.No.916 CT & RE Department, dated 23.08.1984. It is thus submitted that there is no occasion to once again pay the fee to the Revenue Authorities.

3.The aforesaid stand of the respondents thus shows that the requirement is to pay only one set of fee but, the collecting agency for such fee is now the Registration Office. No second set of fee is required to be paid.

4.The petition is accordingly closed. No costs. Connected miscellaneous petition is also closed.
Index:yes/no            (S.K.K.,CJ)     (S.T.,J)
Internet:yes/no.        06.02.2015
gb

       The Hon'ble Chief Justice
        and
       S.TAMILVANAN,J
        gb
To:
1.The Secretary, Revenue Department, Government of Tamil Nadu, St.George Forts Building, Chennai.
2.Inspector General of Registration, The Registration Department, 120, Santhome High Road, Chennai-4.
Order in W.P.(MD)No.8250/2008 and MP(MD)No.1 of 2008 Dated:06.02.2015