Sunday, August 30, 2020

அவதாரங்கள்

டாக்டர். சாலினி


விஷ்ணுவை மையமாக வைத்து புனையப்பட்ட புராணங்கள் பலவற்றிலும் story line ஒன்று தான்.

ஒரு திராவிட அரசன் இருப்பான்.
அவன் சிவபக்தனாக இருப்பான்
அவன் கடும் தவம் செய்து வரம் வாங்குவான். 
(Note this point, தவம் தான், நோ யாகம்)

என்ன வரம் என்றால்: சாகாவரம்.
மொத்தமாக சாவே இல்லாதவன் சாமி ஆகிவிடுவானே, அப்புறம் “இந்திரன் ஒத்துக்க மாட்டான், அதனால் வரத்தை கொஞ்சம் குறைச்சிக்கேளுப்பா” என்று சிவபெருமான் negotiate செய்வார்.

அதனால் பொத்தம் பொதுவாய் “சாவே இல்லை” என்பதை கொஞ்சம் மாற்றி, “இப்படி இப்படி எல்லாம் சாவு வர்றாது” என்று contentடை கொஞ்சம் மாற்றி வரம் பெறுவார் அந்த அரசர்.

அந்த வரத்தின் மகிமையால் அரசன் அமோகமாய் ஆட்சி செய்வான்.

இதற்கிடையில் இந்திரன் insecure ஆகி, பெருமாளிடம் போய் புலம்புவார்ல்.  ஏன் பெருமாளிடம் போகிறார்? வரத்தை கொடுத்த சிவனிடமே போய் வரத்தை வாபஸ் பெற சொல்லி கேட்கலாமே? 

No, சிவன் ரொம்ப straight forward. சொன்னா சொன்னது தான் டைப். விஷ்ணு தான் சாதுர்யமானவர். இந்திரனின் inferiorityயை எல்லாம் cover-up செய்வதை உபதொழிலாய் கொண்டவர்.

உடனே பெருமாள் அந்த வரத்தின் MUOவை கூர்ந்து கவனித்து, அதில் ஒரு loopholeலை கண்டுபிடித்து, கரெக்டாய், அந்த கெட் அப் ஒன்றை அணிந்துக்கொண்டு போய், அந்த அரசனை சந்திப்பார். கொல்வார். Assassination Expert அவர்.

இப்படி அவர் எடுத்த அவதாரங்களும் கொன்ற அரசர்களும் யார் யார்?
அவதாரம் # 4:  நரசிம்மா——>ஹிரன்யகஷிப்பு அவுட்
அவதாரம் # 5:  வாமணன்——>மகாவலி அவுட்
அவதாரம் # 6: பரசுராமர்——-> All kings all over the world out
(ஆமாம், உலகமெங்கும் உள்ள எல்லா ஷத்திரியர்களையும் தன் கோடாளியால் கொன்றாராம் மிஸ்டர் பர்ஸ். அப்படியானால் எகிப்து, கிரேக்கம், சுமேர், பாரசீகம், இந்தியா, சீனா என்ற சர்வ லோக அரசர்களும் அவுட்.
நம் ஊரில் இருந்த எல்லா ராஜாக்களும் அவுட்)

அவதாரம் # 7: ராமன். இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றும். அது தான் எல்லா ராஜாக்களையும் முந்தைய அவதாரத்தில் கொன்றுவிட்டாரே, அப்புறம் எப்படி ரகுவம்சத்தில் மட்டும் ஒரு தசரதன்? அந்த தசரதனுக்கு நான்கு பாயச புத்திரர்கள்?!

இந்த லாஜிக் கேள்விக்கெல்லாம் பதில் இல்லை. 

ஓவர் டு அவதாரம் # 7 ராமா: அவன் கொன்ற அரசர்கள் வாலி, இராவணன். 

அவதாரம் # 8: கிருஷ்ணா——> மொத்த குரு வம்சமும் க்ளோஸ்

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

மட்ஸ்ய, கூர்ம, வராக அவதாரங்கள்; மிருக உருவம், அதனால் அவற்றுக்கு தனி வழிப்பாடு இல்லை.

நரசிம்மருக்கும், சீதா ராமருக்கும், கிருஷ்ண அவதாரத்திற்கும் கோயில் வழிபாடு உண்டு.
@இதிலும் ராமனுக்கு தனியா சிலை லேது!

பரசுராமருக்கும், வாமணருக்கும் கோயில் வழிபாடு இல்லை. இந்த இரண்டு அவதாரத்தில் தான் விஷ்ணு பிராமணராய் வருகிறார்.  பரசுராமனாவது ஷத்திரியாஅம்மாவிற்கு பிறந்த பையன் என்று கதை சொல்லுவார்கள்.

What about the full blooded twice born brahmana Vamana? Why no Temple for him? 
பிகாஸ் கோயில் கட்டி வழிபடும் முறை பிராமணர்களுக்கு உண்டானது அல்ல.
அவர்கள் யாகம் வளர்த்து வேதம் ஓதி மட்டுமே வழிப்பட வேண்டும்.

அப்ப அவர்கள் நம்ம கோயில்களில் வந்து பூஜை போடுவது?
நாம் ஏமார்ந்த்தோம், அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.

ஆக, வாமணனுக்கு கோயிலோ, பூஜையோ, வழிபாடோ இல்லை. ஆனால் மாவலிக்கு வழிபாடு உண்டு!

நாளை ஓணத்திரு நாள். ஐந்தாம் அவதாரம் காலி செய்த மாவலியை இன்னும் இந்த மலையாளிகள் ஞாபகம் வைத்து, பண்டிகை எடுக்கிறார்கள். புது துணி உடுத்தி, பூக்கோலம் போட்டு, விருந்து உண்டு, டீவியில் புது நிகழ்ச்சி பார்த்து...

மக்கள் இன்னமும் மாவலிக்கு தான் விஸ்வாசம் காட்டுகிறார்கள். 

ஆக அவதாரம் எடுத்தும் யூஸ் இல்லாடா மோனே
வாமணன் அவுட்டு, மக்கள் வின்னு!!

#ஆன்மீகப்பகுத்தறிவு

Tuesday, August 11, 2020

சண்டை செய்யனும்

அன்பு
வடசென்னை

ஒருத்தன் செத்தா முடியிற சண்டையாக்கா இது? 

ஜெயிக்கிறோமோ இல்லையோ, முதல்ல சண்டை செய்யனும். திருப்பி அடிக்கலனா, இவனுவ நம்மள அடிச்சு ஓட உட்டுகுனே இருப்பானுவ. 

குடிசையோ குப்பமேடோ இது நம்ம ஊரு, நாமதான் இத பாத்துக்கனும், நாம்தான் இதுக்காக சண்ட செய்யனும். 

Saturday, August 8, 2020

பாபர்_மருத்துவமனை

உச்சிக்குடுமி மன்றத்தின் ஆணையின்படி வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான #பாபர்_மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை எனத்தெரிய வருகிறது.

#பாபர்_மருத்துவமனை என்பது பொய்யான செய்தியாக இல்லாமல் உண்மையாகவே அதுதான் நடக்க வேண்டும்.

ஆனால் நியாயப்படியும், இந்த அரசு நமக்கு கொடுத்த வாக்குறுதிகளின்படியும் #பாபர்_மசூதி அது இருந்த இடத்தில், 450 ஆண்டு காலமாக தொழுகை நடத்தப்பட்டு வந்த அதே இடத்தில் தான் மீண்டும் எழுப்பப்பட வேண்டும். 

அதன் மீது இன்று பார்பன அதிகார திமிரில் எழுப்பப்படும் ராமர் கோவில் இடித்து தரைமட்டமாக்கியபின் மீண்டும் அதே இடத்தில் தான் #பாபர்_மசூதி கட்டப்பட வேண்டும். வேறு ஒரு இடத்தில் பாபர் மசூதி நிச்சயமாக கட்டப்படக்கூடாது. அது மதசார்பற்ற இந்திய அரசியலமைப்புக்கு நாம் செய்யும் மகத்தான துரோகமாகும். 

இது இன்று இல்லை என்றாலும் நிச்சயமாக ஒரு நாள் நடந்தேறும். இதுதான் நியதி! இதுதான் நியாயம்.!! 

இந்த நியாயத்தை இந்த மண்ணில் நிலை நாட்டிடும் தேசபக்தர்கள்/போராளிகள் நிச்சயம் உருவாக்குவார்கள்.