Friday, June 19, 2020

எம்.ஜி.ஆர் - ரின் மனைவிகளும், கீப்புகளும்

Priya Perumal
2020-06-19

**எம்.ஜி.ஆர் - ரின் மனைவிகளும், கீப்புகளும்**

எம்ஜிஆர் மற்றும் கலைஞர் மூன்று திருமணங்கள் செய்தவர்கள் தான். 

ஆனால், கலைஞரின் திருமணங்கள் மட்டுமே விமர்சிக்கப்படுகின்றன, ஏன்?

முழுமுதற்காரணம்... 

கலைஞரைப்போல அவருக்கு வாரிசுகள் இல்லை. மேலும் சமூக வலைத்தளங்கள் வளர்ச்சிக்கு முன்பே சிக்கி சின்னாபின்னமாகமல் மறைந்து விட்டார்.  

முக்கியாமானது... 

கலைஞரை பார்ப்பனுக்கு பிடிக்காது. இன்றுவரை பெரும்பான்மையான ஊடகம் பார்ப்பன்னர்கள் மற்றும் பார்பன அடிவருடிகளிடம் இருக்கிறது. 

கலைஞர் இறந்த பின்னும் அரசியலில் அவரை நிலை நிறுத்த ஸ்டாலின் கனிமொழி மற்றும் அழகிரி (பாவம் சேர்த்து கொள்வோம்) இருக்கிறார்கள்.

கலைஞருக்கு தளபதி மு க ஸ்டாலின் போல எம் ஜி ஆருடைய வாரிசு இப்போது இருந்தால் நிலைமை வேறுவிதமாக இருக்கும்.

சரி விடுங்கள் விஷயத்திற்கு வருவோம்!!!

எம் ஜி ஆருக்கு சட்டப்படி மூன்று மனைவிகள் இருந்தனர்...

*முதல் திருமணம்*

எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார்.

*இரண்டாவது திருமணம்*

அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தாக கருதப்பட்டார் அல்லது தள்ளி வைக்கப் பட்டார். 

*மூன்றாவது திருமணம்*

1948 மோகினி திரைப்படத்தில் எம்ஜிஆரும் வி. என். ஜானகியும் தோன்றும் காட்சி
எம்.ஜி.ஆர் இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த ராஜ முக்தி படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். 

அவர் எம்.ஜி.ஆரின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது எம்.ஜி.ஆருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.  (😂😂😂)

அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத் தலைவனாக எம்.ஜி.ஆரும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது.

அக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆரால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதல் கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதி பட் கைகளில் கிடைத்தன.

கணபதி பட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார்.

எம்.ஜி.ஆர் அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார்.

கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை எம்.ஜி.ஆர் தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.

இத்திருமணத்தை எம்.ஜி.ஆரின் அண்ணனும் நடிகருமான எம்.ஜி. சக்ரபாணியும், குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர்.

எனினும் எம்.ஜி.ஆரின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்ததால் தம் திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே எம்.ஜி.ஆரும் ஜானகியும் உடனுறைந்தனர் (Lived Together).

12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் சூன் 14ஆம் நாள் எம்.ஜி.ஆரும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.

மற்றபடி எம் ஜி ஆருக்கும் நடிகைகளான ஜெயலலிதா, மஞ்சுளா, லதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

Saturday, June 13, 2020

கூத்தாடி - M. R. Radha

படித்தது/பகிர்ந்தது

கமலஹாசன் உஞ்சவிருத்தி பற்றி உளறியதை பார்த்ததும் நடிகர்கள் என்பவர்களை பற்றி அன்று M.R. ராதா சொல்லியது நினைவுக்கு வருகிறது

."என்னடா நடிகன், கலைஞன்னு நமக்கு பெயரு? ஆளாளுக்கு ஒரு பெயர் வச்சிக்கிறானுக‌. ஆனா அன்னைக்கு ஜனங்க வச்ச பேரு என்ன தெரியுமா? கூத்தாடி!!

 ஜனங்கஒழுங்கா உழைக்க போவான். காடு, கரை, வயல்னு உழைப்பான். கூத்தாடி பயலுக என்ன செய்வான் தெரியுமா? வீடு வீடா பிச்சை வாங்க போவான். ஆத்தா கூத்தாடி வந்திருக்கோம், அரிசி கம்பு இருந்தா போடுங்க தாயின்னு பிச்சை எடுப்பான். அது தான் அவனுக்கு சாப்பாடு. ராத்திரி உழைச்ச மக்கள் எல்லாம் வீடு திரும்பி
சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் கூத்து பார்க்க வருவான், அப்போதான் கூத்தாடி வேலையே ஆரம்பிக்கும்! உழைச்ச மக்களுக்கு கொஞ்சம் உற்சாகம் கொடுக்குற கூத்தாடி பரம்பரை தான் நாங்கெல்லாம். அதனால அந்த கூத்தாடி பசங்கள பெருசா நினைச்சி அவனுகள மதிச்சி நாட்டை கொடுக்காதீங்க. நாசமாக்கிருவானுக!

அவனுகளுக்கு கூத்த தவிர ஒண்ணும் தெரியாது! ஒழுங்கா படிப்போ வேலையோ தொழிலோ இருந்தால் அவன் ஏன் கூத்தாட வாரான்?

 ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாத பய தான் அங்க வருவான். அடி மட்ட வரிசை அது. அவனை விட கீழான மடையன் ஒரு பயலுமில்ல, தெரிஞ்சிக்க!

அன்னைக்கு நாங்க வீடு வீடா போனோம். அரிசி கம்புகேழ்வரகுன்னு கொடுத்தாங்க. பசியாறினோம்! 

இன்னைக்கு விஞ்ஞானம் உங்கள எங்கள் கொட்டாயி தேடி வந்து காசு கொடுக்க சொல்லுது அவ்வளவு தான்.

 மற்றபடி நாங்க அன்னைக்கும் கூத்தாடி, இன்னைக்கும் கூத்தாடி, என்னைக்கும் கூத்தாடி

இது புரியாம நடிகன் மன்றம், தலைவன், மயிருன்னு கிளம்பாத! 
அசிங்கம் அவமானம்!
கூத்துக்கு அரிசி சோளம் கொடுத்த மாதிரி காசு எறிஞ்சுட்டு போயிட்டே இரு.

 தலைவன அங்க தேடாத! 
அது முட்டாள்தனம். 
அவன ஒரு ஆளுண்ணே நினைக்காத.
காசு கொடுத்தா எப்படி வேணும்னாலும் நடிப்பான் அயோக்கிய பயலுங்க!!” 😃 😃

திராவிடத்தால் குடித்தோம் ஒறவுகளே - உண்மை என்ன?

பெரியாரின் பேரன் நான்
2020-06-15

"திராவிடத்தால் குடித்தோம் ஒறவுகளே" என்று Mark Anthony என்ற "தம்பி" எனக்கு பட்டியலின மக்களின் பதிவில்  பதில் சொல்லியிருந்தார்...

என்னவோ, மது என்பதை திராவிட இயக்கங்கள் தான் தமிழனுக்கு அறிமுகப் படுத்தியது போன்ற தோற்றத்தை அவர் நிரூபிக்க முயன்றார்.....

1500 ஆண்டுகளுக்கு முன்னரே ,  ‘அர்த்த சாஸ்திரம்’  எழுதிய  கவுடில்யன் என்ற ஆ(சி)ரியன் தனது நூலில் "மக்களை எப்படி குடிக்கு அடிமையாக்குவது" தெளிவாக எழுதியுள்ளான்.

தனது  நூலில்  , எப்படி மக்களை குடிக்கு அடிமையாக்குவது, டாஸ்மாக் இல்லாமலேயே எப்படி பணத்தை கல்லாக் கட்டுவது என்பது குறித்து விரிவாகவே பதிவு செய்திருக்கிறான்.

மதுபானங்களை வடித்தெடுத்து அதனை நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு எனவும், 
மது வணிகத்தை அரசுடைமையாக்க வேண்டுமெனவும்,அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் எழுதியுள்ளான். 

முக்கியமான பகுதி தம்பிகள் கவனமாக பின்வரவும்......

பிற்கால சோழர்களின் காலத்தில்

(அதாவது 
சீமான் தலைமேல்  தூக்கி  வைத்து, காசு,பணம் ,துட்டு,money க்காக கொண்டாடும் அதே சோழப் பேரரசன் தான்)

அவன் ஆட்சிக் காலத்தில் "குடி" கொடி கட்டிப் பறந்ததாகவும் 

"குடி மக்களுக்காகவே"

வசூலிக்கப்பட்ட வரி  ‘ஈழப் பூச்சி வரி’, 

என்று நான் சொல்லவில்லை...
சோழர்களின் ஆட்சி முறை சொல்கிறது.

சோழர்கள் காலத்தில் திராவிடமா ஆட்சிப் பொறுப்பில் இருந்தது ?

ஆங்கிலேயர் ஆட்சியில் ‘அப்காரி’ (Abhari Excise System) சட்டம் 1790-ல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, மதுவகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் என்பதற்கான உரிமைகளை அதிகத் தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கினர். 

இதனை தொடர்ந்து 1799-ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், 

தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 
1793 – 94-ஆம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள் வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் 
(அதாவது ரூ.1088) 
என குறிப்பிட்டுள்ளனர். (ஆதாரம்: தஞ்சை மாவட்ட கெசட்). 

1900 களில் திராவிடமா தமிழகத்தை ஆண்டது ?

சரி,.........

தமிழ் வாழ்க !

நானே ஒரிஜினல் அக் மார்க்  தமிழ்ப்பிள்ளை !

என தனக்குத் தானே
Genealogical DNA test எடுத்து 

தமிழ்நாட்டில் தற்போது உள்ள தலைவர்களில் "வந்தேறிகள் " போக மீதமுள்ள ஒரே ஒரு தமிழன் நான் மட்டுமே என்று 

"கமுக்கூட்டில்  கட்டி வந்தவன் போல கையைத் தூக்கி நிற்கும் சீமானே" !

உங்களது பாட்டன்களில் ஒருவனான வள்ளுவன், 2000 ஆண்டுகளுக்கு முன்பே , கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தில் பத்து குறள்களை எழுதுகிறார்...

கள் குடிப்பது தமிழரிடம் பரவியிருந்தது, என்பதற்கு அந்த பத்து குறள்கள் ஆதாரமில்லையா ?

அதனால்தான் வள்ளுவர் "மது தீமையானது என மக்களுக்கு அறிவுரை கூறி, கள் குடிக்க மக்களை அனுமதிக்காதே என்று அரசனுக்குக் கட்டளையிட்டார்.....

ஆனால் பார்ப்பன ஆரியக் கூட்டம் , என்ன சொன்னது.....

"அரசன் சாராயம் காய்ச்சவும், சாராயம் விற்கவும் மக்களை அனுமதிக்க வேண்டும். அவற் றைச் செய்கிறவர்களுக்கு வரிவிதிக்க வேண்டும் என்று அர்த்தசாத்திரம் மூலம் கட்டளையிட்டது. அன்றைய "சீமானின் தம்பிகளாக" இருந்த அரசர்கள் - அதை அப்படியே செய்தனர்.

இப்படி வள்ளுவர்....குடிக்காதே தம்பி குடிக்காதே !

என்று தமிழனைப் பார்த்து தொண்டைத் தண்ணி வத்த கூவிய போது திராவிடமா ஆட்சியில் இருந்து ஊத்திக் கொடுத்தது ?

உங்களது "முப்பாட்டிகளில்" ஒருத்தியான ஔவையார் அதியமானைப் பற்றி எப்படி புகழ்ந்து பாடுகிறார் என்று கேளும்...

"சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகடட் பெறினே யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே"

என புறநானூற்றில் 235 வது பாடலில் புகழ்கிறார்.

பொருள் புரியுதா ?

சிறிதளவு கள் கிடைக்குமானால் அதனை முழுமையாக எனக்கு உண்ணக் கொடுத்துவிடுவான். அது தீர்ந்துபோன பின்னர் 

பெருமளவு கள் கிடைக்குமாயின் வேண்டிய அளவு எனக்குக் கொடுத்து நான் உண்டு பாடக் கேட்டுக்கொண்டே அவனும் பருகுவான். 

கேட்கவே புல்லரிக்குது !
ஔவையார் காலத்து அரசு திராவிட அரசா, அதிபரே ?

அடுத்து அதே ஔவையார் மூவேந்தர்கள் பற்றிப் பாடும் பாடல்...

பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து,         
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி,

சேரமான் மாரிவெண்கோவும், 

பாண்டியன்கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும்,

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும்,

ஒன்னா இருந்து சரக்கடித்தது பற்றி பாடியது.

இன்னொரு தமிழ் மன்னன்,
ஆவூர் மூலங்கிழார்,இவர் 
மல்லி கிழான் காரியாதியைக் காணச் சென்றார். மல்லி கிழான் தந்த கள்ளை, அவ்வூரில் பல அரண்களிலிருந்து ஆடவர் பலரும் குடித்து, களா, துடரி போன்ற பழங்களை உண்பதையும், பின்னர் காட்டாற்று மணற்குன்றின் மீது ஏறி நின்று நாவல் பழங்களைக் கொய்து தின்பதையும், பன்றிக் கறி உண்பதையும் பற்றி பாடியுள்ளார்.
புறநானுறு 177 வது பாடல்.

பரிபாடலில் ஒரு பாடல்....
 
"விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர
கரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் 
பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே
கூர் நறா ஆர்ந்தவள் கண்"

அதாவது உடலை மூடியிருக்கும் நனைந்த ஆடையை சூடாக்கும் பொருட்டு அவள் கள்ளை மாந்தினாள் that means  சரக்கை  Full ஆ ஏத்திக்  கொண்டாள், அதனால் அவளது நெய்தல் மலர் போன்ற கண்கள் சிவந்தன.... 

ஒரு மகிழ்வுந்தில் அண்ணன் பேட்டி தரும் போது கண்கள் சிவக்க "ஒளறினாரே" அது போல...

இப்படி பதிற்றுப்பத்து, பரிபாடல், குறுந்தொகை என தமிழ் இலக்கியத்தில்
 33 % இட ஒதுக்கீட்டையும் 
தாண்டி பெண்களும் மது மாந்திய போது ஆட்சியில் இருந்தது திராவிட அரசல்ல என்பதை
சீமானின் ஒறவுகள் "நுட்பமாக புரிந்து கொள்ள வேணும்"

இதுக்கெல்லாம் வரலாற்று ஆதாரம் இருக்கா? என்று கேட்டு "நெத்திக்கண்ணை தொறந்துகிட்டு" ஒரு நக்குற குரூப்....sorry "நக்கீர குரூப்" கெளம்பி வரும், அவர்களுக்காக...

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்

பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்

ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,                              

ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!
 
என்ற புலவர் நக்கீரரின் பாடல் இன்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கையாளும் பாடலாக உள்ளது.

சீமாண்டியார் தும்பிகளே !

இருக்கீங்களா ?........

இப்படி சங்கிகளும், பாப்பார வேதங்களும் தூக்கிச் சுமக்கும் கடவுளர்கள் குடித்து "ரிப்பன் கட் பண்ணி" தொடங்கி வைத்ததை, வேத காலம் மக்களும், சங்க கால "தமிழ்ப் பிள்ளைகளும்"தொடர,

ஓகோன்னு குடிச்சு கும்மாளம் போட்டுட்டு இங்க வந்து "திராவிடத்தால் தான் குடித்தோம்னு கொம்பு சுத்துறீங்களே "!

வெக்கமாயில்ல !

சரி... சமகால அரசியலுக்கு வருவோம்.....

பெரியார் தான் இந்தியாவிலேயே முதன்முதலாக 1921 நவம்பரில் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலை ,தம் மனைவி, தங்கை, உறவினர், நண்பர் களைக் கொண்டு நடத்தினார்.

15.11.1921இல் தண்டனை பெற்றார். அது இந்தியா முழுவதிலும் எதிரொளித்தது. சேலத்தில் தனக்குச் சொந்தமாக இருந்த தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவதை முதலில் நிறுத்தினார். பிறகு தென்னை மரங்களையே வெட்டி னார். அப்போது  பெரியார் 
"திராவிட இயக்கத்தில்" இல்லீங்கோ !முதல்நிலை காங்கிரசுக்காரர், அப்படி காங்கிரஸில் இருந்தாலும் "எண்ணத்திலும் செயலிலும் தீவிர திராவிட அரக்கனுங்கோ"........

"கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு
எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்?"....

'எனவே மதுவிலக்கை ரத்து செய்கிறேன்" என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் விளக்கமளித்தார்.

இப்படியொரு விளக்கத்தை ஏன் தரவேண்டும் ?

ஆமா,ஆமா....தமிழ்நாட்டுல மதுவைக் கொண்டு வந்தது கருணாநிதிதானே !

ரொம்ப சந்தோசப்பட வேணாம்....

1971-ம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யபட்டதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே குடி, திருட்டுத்தனமாகப் பெருகிவிட்டது. 

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் , கள்ளச்சாராயம் காய்ச்சி, சிக்கிய  "தம்பிகள்" விவரம்.......

1961 - 1,12,889 பேர்

1962 - 1,29,977 பேர்

1963 - 1,23,006 பேர்

1964 - 1,37,714 பேர்

1965 - 1,65,052 பேர்

1966 - 1,89,548 பேர்

1967 - 1,90,713 பேர்

1968 - 2,53,607 பேர்

1969 - 3,06,555 பேர்

1970 - 3,72,472 பேர்

இப்படி ஒரு கணக்கை அன்று வெளியிட்டவர் யார் தெரியுமா ?

MGR.!

'ஆனந்த விகடனில்’ அவர் எழுதி வந்த 'நான் ஏன் பிறந்தேன்?’ தொடரில்தான் இந்த ஆதாரங்களை அள்ளி வீசினார்...

ஏம்பா,  1960 - 1070 திராவிட ஆட்சியா ? 

குடி இருந்தது; குடிகாரர்களும் இருந்தார்கள். கள்ளச் சாராயமாக இருந்ததை நல்ல சாராயமாக மாற்றி, அதில் இருந்தும் அரசுக்கு நிதி திரட்டலாம் என்ற பாதையைக் கண்டுபிடித்த பாவச் செயலை கலைஞர் செய்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்......

தொடங்கிய அவரே அதை முடித்தும் வைத்தார்.

மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவோம்’ என அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்திருந்தார்.

'தமிழ்நாட்டுக்கு நிதி உதவி செய்யுங்கள்’ என கலைஞர் கேட்டார். 'இது மதுவிலக்கைப் புதிதாக அமுல்படுத்தும் மாநிலங்களுக்குத்தான் தரப்படும்’ என "அந்தர் பல்டி"  அடித்தார் இந்திரா !

"காங்கிரஸை" வீழ்த்திவிட்டு பதவிக்கு வந்த அந்த "தன்மான அரக்கன்" கலைஞருக்கு, நிதி கொடுக்க மறுக்கும் தந்திரமாக அந்தக் காரணத்தை இந்திரா கண்டுபிடித்தார். 

கடுமையான நிதி நெருக்கடியில் தமிழக அரசு தள்ளாடிய போது .... வேறு வழி தெரியாமல் தவித்தபோது....

ராஜாஜி கலைஞரிடம்......"மதுவிலக்கை 1937-ம் ஆண்டில் நான் அமல்படுத்தியபோது, நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே விற்பனை வரியை அமல்படுத்தினேன். அப்படி புது வழி இருக்கிறதா எனப் பாருங்கள்’ என்றார்.

அதற்கு கலைஞரோ "ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கவிடுவதை விட, மதுவிலக்கை ரத்து செய்வது மேல், நிதிநிலை சீரானதும் மீண்டும் அமுல்படுத்துவோம்"..........

எனக்கூறி 30.8.1971 ல் மதுவிலக்கை ரத்து செய்தார்....

சொன்னபடியே 
1973ல் கள்ளுக்கடைகளையும், 1974ல் சாராயக்கடைகளும் மூடி...
1975 முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கை கலைஞர் அமுல்படுத்தினார்.

அதன் பிறகு MGR ம் JJ யும் "ஜே ஜே" என சாராயக்கொடி நாட்டியதை நாடறியும்.

என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக் கொள்கிறேன்’ (2.12.1979 'அண்ணா’ நாளிதழ்) எனச் சொன்ன அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இரண்டு ஆண்டுகள்கூட அதில் உறுதியாக இருக்க முடியவில்லை......

TASMAC க்கில்  அடிமை அதிமுக அரசு PASS MARK வாங்கி வரும் நிலையில் .....

இந்த வரலாற்றையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு

 "பெரியாரையும் ,அண்ணாவையும், கலைஞரையும்" 

நோக்கி மட்டுமே உங்களது விரல்களும் நாவும் நீளுமென்றால்.....

அவற்றை வெட்டியெறிய எங்களுக்கு "திராவிடம்" கற்றுத் தந்துள்ளது, என்பதையும் மனதில் இறுத்துங்கள்.

இனிமேலும் யாராச்சும் வந்து
"திராவிடத்தால குடித்தோம், கெட்டோம்னு பதிவத் தூக்கீட்டு வருவீங்க"......

வாங்க....காத்திருக்கிறேன்....

பெரியாரின் பேரன் நான்.

ஆதார நூல்கள் :
"மதுவிலக்கு நேற்று, இன்று, நாளை" ஆசிரியர் கோ.செங்குட்டுவன்
கிழக்கு பதிப்பகம்.

"மதுவிலக்கு" :சின்னக்குத்தூசி
பதிப்பகம்:நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்.

Kautilya Arthashastra, R. P. Kangle, tr. 3 vols. Laurier Books, Motilal, New Delhi (1997) ISBN 81-208-0042-7

Kautilya: The Arthashastra . L.N. Rangarajan (Ed., Rearranger & Translator), 1992, Penguin Classics, India. ஐஎஸ்பிஎன் 0-385-49062-3'

Ajnapatra' by Ramchandra Pant AmatyaBoesche, Roger (2002). 

The First Great Political Realist: Kautilya and His Arthashastra. Lanham: Lexington Books......

திராவிட இயக்கம் தலித்களுக்கு செய்ததென்ன?

தேவேந்திரர் குரல் தேசம்... என்ற குழுவில் பெரியாரைப் பற்றி இழிவாகவும் பட்டியல் இன மக்களுக்கு திராவிட கட்சிகள் எதுவுமே செய்யவில்லையென்றும்...

"வாட்ஸ் ஆப் தகவல்களே வரலாறு" என்று எண்ணிக் கொண்டிருக்கும் சில அதிமேதாவிகள் புலம்பிக்கொண்டிருந்தனர்.

நான் மிகவும் நாகரீகமாக எதிர்க் கருத்தைப் பதிவிட்டேன்...

அதற்கு Valuthi Venthan ,  Sandhiyar Sandy ,  என்ற தோழர்கள் பதில்வினையாற்றினர்.

அவர்களுக்கு அங்கேயே பதில் சொல்வதைவிட தனிப்பதிவில் பதில் கூறுவதே சிறப்பாக இருக்கும் என்பதால் இப்பதிவு.....

அய்யா, Ariyalur Parobakari & விஸ்வநாதன் விஸ்வநாதன், பெரியார் எங்களுக்கு "ஊ...ப" கொடுக்கவில்லை...
அவர் ஒருவர் மட்டும் இல்லையென்றால் நீங்கள் தான் இன்னமும் "அவாளை"  ஊம்....க் கொண்டு இருந்திருப்பீர்கள்.

பட்டியலின மக்களுக்கு அப்படி என்னதான் செய்துவிட்டன திராவிட இயக்கங்கள் ? 

 “பள்ளர், பறையர் என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி ஆதி திராவிடர் என்ற பொதுப் பெயர் மாற்றம் செய்தது நீதிக்கட்சியின் ஆட்சி.
எண் 217 சட்டம் (பொது) நாள் 25.03.1922.

ஆதி திராவிடர் பிள்ளைகளைப் பொது பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்க அரசு ஆணை. G.O.No.87 நாள் 6.1.1923.

அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆதி திராவிடர் பிள்ளைகளைச் சேர்க்க மறுத்தால் அரசு மானியம் இரத்து செய்யப்படும். அரசு ஆணை G.O.No.88. நாள் 16.1.1923.

திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆதி திராவிடர் பிள்ளைகளை தனி இடத்தில் தங்கிப் படிக்க அனுமதி கோரியதை அரசு ஏற்க மறுத்து, ஆதி திராவிடப் பிள்ளைகளையும், மற்ற சாதிப் பிள்ளைகளையும் ஒன்றாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆணை. G.O.No.2015 dated 11.2.1924.

இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதி திராவிட மாணவர்கள் இலவசமாகத் தங்கி படிக்க, ஆதி திராவிடர் மாணவர் விடுதி திறக்கப்பட்டது. G.O.No.2563 dated 24.10.1923.

1931க்குள் ஆதி திராவிட மாணவர்களுக்கு மூன்று விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. (T.G.Boag ICS. Madras Presidency 1881 - 1931 பக்கம் 132).

ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. G.O. 1243.நாள்  5.7.1922.

ஆதி திராவிட மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதத் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. G.O. 1241 சட்டம் (கல்வி) நாள் 17.10.1922.

ஆதி திராவிட வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்கிட அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. G.O. 1568 சட்டம், 
நாள் 06.11.1923

ஆதி திராவிட மாணவர்களுக்குச் சில பள்ளிகளில் தனி வகுப்பறைகள் இருந்ததை அரசு கண்டித்தது. ஆதி திராவிட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் அரசின் பண உதவி அளிக்கப்படும் என்று அரசாணைப் பிறக்கப்பட்டது.  G.O.205 நாள் 11.02.1924.

மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. G.O. 866 (பொது) சுகாதாரம், நாள் 17.06.1922.

இந்தியாவில் இருந்த வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத அளவிற்கு ஆதி திராவிடர்களுக்குப் பஞ்சமி நிலத்தைப் பிரித்து வழங்கியது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை, 1920-21 ஆதி திராவிடர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலம் 19,251 ஏக்கர் மட்டுமே. ஆனால் நீதிக் கட்சி ஆட்சியில் 1931 வரை பிரித்துக் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் 3,42,611 ஏக்கர் ஆகும். (சென்னை மாகாண அரசின் புள்ளிவிவர அதிகாரி எழுதிய Madras Presidency 1881 - 1931 என்ற நூல் பக்கம் 132.) மேலும் 1935 மார்ச் 31 வரை ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவு 4, 40, 000 ஏக்கராக உயர்ந்துள்ளதை ஜஸ்டிஸ் ஏடு, 19.7.1935 இல் சுட்டிக் காட்டியுள்ளது.

கல்வி, சுகாதாரம், பொதுப்பணி போன்ற முக்கியப் பணிகளை அப்போது உள்ளாட்சி நிர்வாகங்களே கவனித்து வந்தன. அந்த நிறுவனங்களில் ஆதி திராவிடர் ஒருவரை அரசு நியமனம் மூலம் அமர்த்தி அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்தது நீதிக் கட்சியே. சென்னை மாகாணத்தில் உள்ளாட்சியில் ஆதி திராவிடர் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த விவரம்:

1920-21 மொத்த எண்ணிக்கை ஆதி திராவிடர் நியமனம் பெற்றவை மாவட்டக்கழகங்கள் (District Boards) 17 வட்டக்கழகங்கள் (Taluk Boards) 66 நகராட்சிகள் (Municipalities) 46 என்க.

ஆதி திராவிடர் பொது இடங்களில் புழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று இரட்டை மலை சீனிவாசன் 22.08.1924 இல் சென்னை சட்ட மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தையும், வீரய்யன் 24.02.1925 இல் கொண்டு வந்த தீர்மானத்தையும் ஏற்றுக் கொண்டு சத்திரம், சாவடி, அரசு அலுவலங்கள், பொதுச் சாலைகள், பொதுக் கிணறுகள், போன்ற பொதுவான இடங்களில் ஆதி திராவிடர்கள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு ரூ 100 அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் (Gazette Notification 08.04.1925 Part IV) தெரிவிக்கப்பட்டது. இந்த அரசாணையைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளில் வெளியிட்டதோடு தண்டோரா மூலம் சென்னை மாகாணம் முழுவதும் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆதி திராவிடர்களுக்கு இருந்த சமூகத் தடைகளை நீக்க வழிவகை செய்தது நீதிக் கட்சியே.

1935 அரசியல் சட்டம் நடப்புக்கு வரும்வரை தாழ்த்தப்பட்டவர் நியமனம் மூலம் மட்டுமே பதவி வகித்தனர். அப்போது டெல்லியில் இருந்த சட்டசபைக்குப் பெயர் (MLA) Member of Legislative Assembly 1928இல் சென்னை சட்டமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சட்டசபைக்கு அனுப்பப்பட்ட முதல் தாழ்த்தப்பட்ட உறுப்பினர் எம்.சி.ராஜாதான். நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் ஆட்சியில்தான் அது நிறைவேறியது. அவர் டெல்லி சென்றதால்தான் அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒருங்கிணைக்க முயற்சி செய்ய முடிந்தது.

1921 - 22 இல் வகுப்புரிமை ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும்,  பார்ப்பனர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அதை நடைமுறைப் படுத்தாவண்ணம் இடையூறு செய்து வந்தனர். 1924 இல் அரசுப் பணிகளில் வேலைக்கு ஊழியர்களை அமர்த்துவதற்காக ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது ‘Staff Selection Board ‘என்று அதற்குப் பெயர் அது தான் இப்போது T.N.P.S.C ஆக மாறியுள்ளது; 1925 முதல் அரசாங்க ஆண்டறிக்கைகளில் வகுப்பு வாரியாக அரசு ஊழியர்கள் விவரம் காலாண்டுதோறும் வெளியிடப்பட்டு வந்தது.

பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் 1927-1926க்குள் ஆதி திராவிடர்கள் காவலர் பணியில் 382 பேரும், தலைமைக் காவலர் பணியில் 20 பேரும், துணை ஆய்வாளர் பணியில் ஒருவரும் அமர்த்தப்பட்டனர். 1935இல் துணைக் கண் காணிப்பாளர் வரை ஆதி திராவிடர் பதவி உயர்வு பெற்றனர்; 1927 இல் தான் ஆதி திராவிடர் ஒருவர் இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; (‘Staff Selection Board அறிக்கை பக் 120.) அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆதி திராவிடர்களைக் காவல் துறையில் காவலர்களாக கூடச் சேர்த்துக் கொண்டதில்லை என்று எம்.சி ராசா 1928 இல் மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியுள்ளார். (எம்.சி. ராசா வாழ்க்கை வரலாறும் எழுத்தும் பேச்சும் ஜெ. சிவசண்முகம் பிள்ளை, பக் 42).....

இவ்வளவு உரிமைகளையும் திராவிட இயக்கங்கள் வாங்கித் தரவில்லையென்றால் என்ன செய்துகொண்டு இருப்பீர்கள்.......என்பதை உங்கள் முடிவிற்கே விடுகிறேன்.

பெரியார் வழியில் ஆட்சி செய்த கலைஞரும், தற்போதைய திமுக வும் செய்த சாதனைகளை பதிவிட்டால் பதிவு பெரிதாகி விடும்.....எனவே அதை தனிப் பதிவாக இடுகிறேன்......

அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.....

இந்தப் பாடலின் பொருள் தெரிந்து கொண்டு நாவடக்கத்துடன் பதில் தரவேண்டும்......

என்ற எச்சரிக்கை விடும்.......

பெரியாரின் பேரன் நான்.

Sunday, June 7, 2020

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பெறும் இந்து ஜாதிகள்:367

இட ஒதுக்கீடு ஜாதியை வளர்கிறதா?பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்.

இட ஒதுக்கீடு சுருக்கம்:

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பெறும் இந்து ஜாதிகள்:367

BC-139, MBC-48
De-notified - 68
SC-76, ST-36 
BC Muslim - 7

சதவிகிதம்:

FC(EWS)10%
BC Hindu:26.5%
BC Muslim:3.5%
MBC:20%
SC:18%(Total)
SC:15%
SC(Arunthathiyar):3%  
ST:1%