Saturday, June 13, 2020

திராவிடத்தால் குடித்தோம் ஒறவுகளே - உண்மை என்ன?

பெரியாரின் பேரன் நான்
2020-06-15

"திராவிடத்தால் குடித்தோம் ஒறவுகளே" என்று Mark Anthony என்ற "தம்பி" எனக்கு பட்டியலின மக்களின் பதிவில்  பதில் சொல்லியிருந்தார்...

என்னவோ, மது என்பதை திராவிட இயக்கங்கள் தான் தமிழனுக்கு அறிமுகப் படுத்தியது போன்ற தோற்றத்தை அவர் நிரூபிக்க முயன்றார்.....

1500 ஆண்டுகளுக்கு முன்னரே ,  ‘அர்த்த சாஸ்திரம்’  எழுதிய  கவுடில்யன் என்ற ஆ(சி)ரியன் தனது நூலில் "மக்களை எப்படி குடிக்கு அடிமையாக்குவது" தெளிவாக எழுதியுள்ளான்.

தனது  நூலில்  , எப்படி மக்களை குடிக்கு அடிமையாக்குவது, டாஸ்மாக் இல்லாமலேயே எப்படி பணத்தை கல்லாக் கட்டுவது என்பது குறித்து விரிவாகவே பதிவு செய்திருக்கிறான்.

மதுபானங்களை வடித்தெடுத்து அதனை நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு எனவும், 
மது வணிகத்தை அரசுடைமையாக்க வேண்டுமெனவும்,அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் எழுதியுள்ளான். 

முக்கியமான பகுதி தம்பிகள் கவனமாக பின்வரவும்......

பிற்கால சோழர்களின் காலத்தில்

(அதாவது 
சீமான் தலைமேல்  தூக்கி  வைத்து, காசு,பணம் ,துட்டு,money க்காக கொண்டாடும் அதே சோழப் பேரரசன் தான்)

அவன் ஆட்சிக் காலத்தில் "குடி" கொடி கட்டிப் பறந்ததாகவும் 

"குடி மக்களுக்காகவே"

வசூலிக்கப்பட்ட வரி  ‘ஈழப் பூச்சி வரி’, 

என்று நான் சொல்லவில்லை...
சோழர்களின் ஆட்சி முறை சொல்கிறது.

சோழர்கள் காலத்தில் திராவிடமா ஆட்சிப் பொறுப்பில் இருந்தது ?

ஆங்கிலேயர் ஆட்சியில் ‘அப்காரி’ (Abhari Excise System) சட்டம் 1790-ல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, மதுவகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் என்பதற்கான உரிமைகளை அதிகத் தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கினர். 

இதனை தொடர்ந்து 1799-ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், 

தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 
1793 – 94-ஆம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள் வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் 
(அதாவது ரூ.1088) 
என குறிப்பிட்டுள்ளனர். (ஆதாரம்: தஞ்சை மாவட்ட கெசட்). 

1900 களில் திராவிடமா தமிழகத்தை ஆண்டது ?

சரி,.........

தமிழ் வாழ்க !

நானே ஒரிஜினல் அக் மார்க்  தமிழ்ப்பிள்ளை !

என தனக்குத் தானே
Genealogical DNA test எடுத்து 

தமிழ்நாட்டில் தற்போது உள்ள தலைவர்களில் "வந்தேறிகள் " போக மீதமுள்ள ஒரே ஒரு தமிழன் நான் மட்டுமே என்று 

"கமுக்கூட்டில்  கட்டி வந்தவன் போல கையைத் தூக்கி நிற்கும் சீமானே" !

உங்களது பாட்டன்களில் ஒருவனான வள்ளுவன், 2000 ஆண்டுகளுக்கு முன்பே , கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தில் பத்து குறள்களை எழுதுகிறார்...

கள் குடிப்பது தமிழரிடம் பரவியிருந்தது, என்பதற்கு அந்த பத்து குறள்கள் ஆதாரமில்லையா ?

அதனால்தான் வள்ளுவர் "மது தீமையானது என மக்களுக்கு அறிவுரை கூறி, கள் குடிக்க மக்களை அனுமதிக்காதே என்று அரசனுக்குக் கட்டளையிட்டார்.....

ஆனால் பார்ப்பன ஆரியக் கூட்டம் , என்ன சொன்னது.....

"அரசன் சாராயம் காய்ச்சவும், சாராயம் விற்கவும் மக்களை அனுமதிக்க வேண்டும். அவற் றைச் செய்கிறவர்களுக்கு வரிவிதிக்க வேண்டும் என்று அர்த்தசாத்திரம் மூலம் கட்டளையிட்டது. அன்றைய "சீமானின் தம்பிகளாக" இருந்த அரசர்கள் - அதை அப்படியே செய்தனர்.

இப்படி வள்ளுவர்....குடிக்காதே தம்பி குடிக்காதே !

என்று தமிழனைப் பார்த்து தொண்டைத் தண்ணி வத்த கூவிய போது திராவிடமா ஆட்சியில் இருந்து ஊத்திக் கொடுத்தது ?

உங்களது "முப்பாட்டிகளில்" ஒருத்தியான ஔவையார் அதியமானைப் பற்றி எப்படி புகழ்ந்து பாடுகிறார் என்று கேளும்...

"சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகடட் பெறினே யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே"

என புறநானூற்றில் 235 வது பாடலில் புகழ்கிறார்.

பொருள் புரியுதா ?

சிறிதளவு கள் கிடைக்குமானால் அதனை முழுமையாக எனக்கு உண்ணக் கொடுத்துவிடுவான். அது தீர்ந்துபோன பின்னர் 

பெருமளவு கள் கிடைக்குமாயின் வேண்டிய அளவு எனக்குக் கொடுத்து நான் உண்டு பாடக் கேட்டுக்கொண்டே அவனும் பருகுவான். 

கேட்கவே புல்லரிக்குது !
ஔவையார் காலத்து அரசு திராவிட அரசா, அதிபரே ?

அடுத்து அதே ஔவையார் மூவேந்தர்கள் பற்றிப் பாடும் பாடல்...

பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து,         
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி,

சேரமான் மாரிவெண்கோவும், 

பாண்டியன்கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும்,

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும்,

ஒன்னா இருந்து சரக்கடித்தது பற்றி பாடியது.

இன்னொரு தமிழ் மன்னன்,
ஆவூர் மூலங்கிழார்,இவர் 
மல்லி கிழான் காரியாதியைக் காணச் சென்றார். மல்லி கிழான் தந்த கள்ளை, அவ்வூரில் பல அரண்களிலிருந்து ஆடவர் பலரும் குடித்து, களா, துடரி போன்ற பழங்களை உண்பதையும், பின்னர் காட்டாற்று மணற்குன்றின் மீது ஏறி நின்று நாவல் பழங்களைக் கொய்து தின்பதையும், பன்றிக் கறி உண்பதையும் பற்றி பாடியுள்ளார்.
புறநானுறு 177 வது பாடல்.

பரிபாடலில் ஒரு பாடல்....
 
"விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர
கரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் 
பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே
கூர் நறா ஆர்ந்தவள் கண்"

அதாவது உடலை மூடியிருக்கும் நனைந்த ஆடையை சூடாக்கும் பொருட்டு அவள் கள்ளை மாந்தினாள் that means  சரக்கை  Full ஆ ஏத்திக்  கொண்டாள், அதனால் அவளது நெய்தல் மலர் போன்ற கண்கள் சிவந்தன.... 

ஒரு மகிழ்வுந்தில் அண்ணன் பேட்டி தரும் போது கண்கள் சிவக்க "ஒளறினாரே" அது போல...

இப்படி பதிற்றுப்பத்து, பரிபாடல், குறுந்தொகை என தமிழ் இலக்கியத்தில்
 33 % இட ஒதுக்கீட்டையும் 
தாண்டி பெண்களும் மது மாந்திய போது ஆட்சியில் இருந்தது திராவிட அரசல்ல என்பதை
சீமானின் ஒறவுகள் "நுட்பமாக புரிந்து கொள்ள வேணும்"

இதுக்கெல்லாம் வரலாற்று ஆதாரம் இருக்கா? என்று கேட்டு "நெத்திக்கண்ணை தொறந்துகிட்டு" ஒரு நக்குற குரூப்....sorry "நக்கீர குரூப்" கெளம்பி வரும், அவர்களுக்காக...

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்

பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்

ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,                              

ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!
 
என்ற புலவர் நக்கீரரின் பாடல் இன்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கையாளும் பாடலாக உள்ளது.

சீமாண்டியார் தும்பிகளே !

இருக்கீங்களா ?........

இப்படி சங்கிகளும், பாப்பார வேதங்களும் தூக்கிச் சுமக்கும் கடவுளர்கள் குடித்து "ரிப்பன் கட் பண்ணி" தொடங்கி வைத்ததை, வேத காலம் மக்களும், சங்க கால "தமிழ்ப் பிள்ளைகளும்"தொடர,

ஓகோன்னு குடிச்சு கும்மாளம் போட்டுட்டு இங்க வந்து "திராவிடத்தால் தான் குடித்தோம்னு கொம்பு சுத்துறீங்களே "!

வெக்கமாயில்ல !

சரி... சமகால அரசியலுக்கு வருவோம்.....

பெரியார் தான் இந்தியாவிலேயே முதன்முதலாக 1921 நவம்பரில் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலை ,தம் மனைவி, தங்கை, உறவினர், நண்பர் களைக் கொண்டு நடத்தினார்.

15.11.1921இல் தண்டனை பெற்றார். அது இந்தியா முழுவதிலும் எதிரொளித்தது. சேலத்தில் தனக்குச் சொந்தமாக இருந்த தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவதை முதலில் நிறுத்தினார். பிறகு தென்னை மரங்களையே வெட்டி னார். அப்போது  பெரியார் 
"திராவிட இயக்கத்தில்" இல்லீங்கோ !முதல்நிலை காங்கிரசுக்காரர், அப்படி காங்கிரஸில் இருந்தாலும் "எண்ணத்திலும் செயலிலும் தீவிர திராவிட அரக்கனுங்கோ"........

"கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு
எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்?"....

'எனவே மதுவிலக்கை ரத்து செய்கிறேன்" என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் விளக்கமளித்தார்.

இப்படியொரு விளக்கத்தை ஏன் தரவேண்டும் ?

ஆமா,ஆமா....தமிழ்நாட்டுல மதுவைக் கொண்டு வந்தது கருணாநிதிதானே !

ரொம்ப சந்தோசப்பட வேணாம்....

1971-ம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யபட்டதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே குடி, திருட்டுத்தனமாகப் பெருகிவிட்டது. 

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் , கள்ளச்சாராயம் காய்ச்சி, சிக்கிய  "தம்பிகள்" விவரம்.......

1961 - 1,12,889 பேர்

1962 - 1,29,977 பேர்

1963 - 1,23,006 பேர்

1964 - 1,37,714 பேர்

1965 - 1,65,052 பேர்

1966 - 1,89,548 பேர்

1967 - 1,90,713 பேர்

1968 - 2,53,607 பேர்

1969 - 3,06,555 பேர்

1970 - 3,72,472 பேர்

இப்படி ஒரு கணக்கை அன்று வெளியிட்டவர் யார் தெரியுமா ?

MGR.!

'ஆனந்த விகடனில்’ அவர் எழுதி வந்த 'நான் ஏன் பிறந்தேன்?’ தொடரில்தான் இந்த ஆதாரங்களை அள்ளி வீசினார்...

ஏம்பா,  1960 - 1070 திராவிட ஆட்சியா ? 

குடி இருந்தது; குடிகாரர்களும் இருந்தார்கள். கள்ளச் சாராயமாக இருந்ததை நல்ல சாராயமாக மாற்றி, அதில் இருந்தும் அரசுக்கு நிதி திரட்டலாம் என்ற பாதையைக் கண்டுபிடித்த பாவச் செயலை கலைஞர் செய்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்......

தொடங்கிய அவரே அதை முடித்தும் வைத்தார்.

மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவோம்’ என அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்திருந்தார்.

'தமிழ்நாட்டுக்கு நிதி உதவி செய்யுங்கள்’ என கலைஞர் கேட்டார். 'இது மதுவிலக்கைப் புதிதாக அமுல்படுத்தும் மாநிலங்களுக்குத்தான் தரப்படும்’ என "அந்தர் பல்டி"  அடித்தார் இந்திரா !

"காங்கிரஸை" வீழ்த்திவிட்டு பதவிக்கு வந்த அந்த "தன்மான அரக்கன்" கலைஞருக்கு, நிதி கொடுக்க மறுக்கும் தந்திரமாக அந்தக் காரணத்தை இந்திரா கண்டுபிடித்தார். 

கடுமையான நிதி நெருக்கடியில் தமிழக அரசு தள்ளாடிய போது .... வேறு வழி தெரியாமல் தவித்தபோது....

ராஜாஜி கலைஞரிடம்......"மதுவிலக்கை 1937-ம் ஆண்டில் நான் அமல்படுத்தியபோது, நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே விற்பனை வரியை அமல்படுத்தினேன். அப்படி புது வழி இருக்கிறதா எனப் பாருங்கள்’ என்றார்.

அதற்கு கலைஞரோ "ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கவிடுவதை விட, மதுவிலக்கை ரத்து செய்வது மேல், நிதிநிலை சீரானதும் மீண்டும் அமுல்படுத்துவோம்"..........

எனக்கூறி 30.8.1971 ல் மதுவிலக்கை ரத்து செய்தார்....

சொன்னபடியே 
1973ல் கள்ளுக்கடைகளையும், 1974ல் சாராயக்கடைகளும் மூடி...
1975 முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கை கலைஞர் அமுல்படுத்தினார்.

அதன் பிறகு MGR ம் JJ யும் "ஜே ஜே" என சாராயக்கொடி நாட்டியதை நாடறியும்.

என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக் கொள்கிறேன்’ (2.12.1979 'அண்ணா’ நாளிதழ்) எனச் சொன்ன அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இரண்டு ஆண்டுகள்கூட அதில் உறுதியாக இருக்க முடியவில்லை......

TASMAC க்கில்  அடிமை அதிமுக அரசு PASS MARK வாங்கி வரும் நிலையில் .....

இந்த வரலாற்றையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு

 "பெரியாரையும் ,அண்ணாவையும், கலைஞரையும்" 

நோக்கி மட்டுமே உங்களது விரல்களும் நாவும் நீளுமென்றால்.....

அவற்றை வெட்டியெறிய எங்களுக்கு "திராவிடம்" கற்றுத் தந்துள்ளது, என்பதையும் மனதில் இறுத்துங்கள்.

இனிமேலும் யாராச்சும் வந்து
"திராவிடத்தால குடித்தோம், கெட்டோம்னு பதிவத் தூக்கீட்டு வருவீங்க"......

வாங்க....காத்திருக்கிறேன்....

பெரியாரின் பேரன் நான்.

ஆதார நூல்கள் :
"மதுவிலக்கு நேற்று, இன்று, நாளை" ஆசிரியர் கோ.செங்குட்டுவன்
கிழக்கு பதிப்பகம்.

"மதுவிலக்கு" :சின்னக்குத்தூசி
பதிப்பகம்:நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்.

Kautilya Arthashastra, R. P. Kangle, tr. 3 vols. Laurier Books, Motilal, New Delhi (1997) ISBN 81-208-0042-7

Kautilya: The Arthashastra . L.N. Rangarajan (Ed., Rearranger & Translator), 1992, Penguin Classics, India. ஐஎஸ்பிஎன் 0-385-49062-3'

Ajnapatra' by Ramchandra Pant AmatyaBoesche, Roger (2002). 

The First Great Political Realist: Kautilya and His Arthashastra. Lanham: Lexington Books......

No comments:

Post a Comment