1968-ல் நடந்த "தமிழ்நாடு" பெயர் சூட்டும் விழாவில் பேரறிஞர் அண்ணா சொன்னார்:

என்னை மருத்துவர்கள் தடுத்தார்கள்; என் தாய்த்திரு நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைப்பதைவிட, நான் வீட்டிலிருந்து என்ன பயன்? இந்த உடல் இருந்து என்ன பயன்? மூன்று பெரும் சாதனைகளை எங்களுடைய அரசு - திராவிட முன்னேற்றக் கழக அரசு - செய்திருக்கிறது.

*தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறோம். 

*சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்திருக்கிறோம். 

*இருமொழிக் கொள்கை - தமிழ் - ஆங்கிலம் மட்டும்தான் மும்மொழிக்கு இடமில்லை. 

இந்த மூன்றும் மிக முக்கியமானது. எங்கள் ஆட்சியையே மாற்றவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று எனக்குச் செய்தி வந்தது.

அவர்களால் முடியுமா? என்று நான் சவால் விடமாட்டேன். இன்றைய அரசியல் அமைப்புச் சட்டப்படி, அவர்கள் நினைத்தால் முடியும். 

ஆனால், அப்படியே வேறு யார் வந்து உட்கார்ந்தாலும், நாங்கள் செய்த இந்த முப்பெரும் சாதனைகளை மாற்றலாம் என்று நினைத்தாலோ, அந்த நேரத்தில் அதை மாற்றினாலோ, மக்கள் நிலை என்னாகும்? தமிழ்நாடு எப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கும் என்று நினைக்கின்ற நேரத்தில், அவர்களை அறியாமல் ஒரு அச்சம் தோன்றும், அந்த அச்சம் இருக்கின்றவரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்