Thursday, April 18, 2024

தூய்மைவாதம் பாஸிசத்தின் மிக முக்கியமான கூறு.

Karl Max Ganapathy

தூய்மைவாதம் பாஸிசத்தின் மிக முக்கியமான கூறு. ஏனெனில் அது மனித இயல்பை ரத்து செய்கிறது.

*அது என்ன மனித இயல்பு?*

பிழைகள் புரிவது. மிக முக்கியமாக, பிழை என்று எதைச் சொல்கிறோமோ அதன் மீது சந்தேகம் கொள்வது. குழம்புவது. அதை மீறுவது. ஒழுங்கில் இருந்து பிறழ்வது. 

*இத்தகைய பிழைகள் எப்போது குற்றமாகின்றன?*

அவை இன்னொரு உயிரை வதைக்கிறபோது!

*தீர்வு என்ன?*

இங்குதான் அதிகாரம் வருகிறது. மதம் வருகிறது.

*எப்படி?*

மதம் அதன் தூய வடிவத்தில், எல்லா குற்றத்துக்கும் மன்னிப்பைப் பரிந்துரைக்கிறது.

*அதிகாரம்?*

அது தண்டனையை, ஒழுங்குபடுத்துதலைப் பரிந்துரைக்கிறது.

*அப்படியென்றால் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், நிர்வாகத்தை, தண்டனையைப் பரிந்துரைக்க முடியுமா?*

முடியாது. அப்படி நிகழ்கிறபோது மதம் என்பது ஒரு சாக்கு. வெறும் கருவி. வன்முறையின் மீது இருக்கிற ஜிகினா.

*இதிலிருந்து என்ன புரிந்து கொள்வது?*

மதம் என்பது ஒழுங்கைக் குலைப்பது. கத்தியோடு நிற்பவனைக் கட்டியணைப்பது. தன் உயிரை ஈவதன் வழியாக அவனது வன்முறையை இல்லாதாக்குவது.

*இதில் அரசியலைக் கலக்கும்போது என்ன ஆகும்?*

மதத்தின் பெயரால் அதிகாரத்தைப் பரிந்துரைக்கும் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கும்.

*அவர் மதவாதியா?*

இல்லை. மதத்தின் பெயரால் அதிகாரத்தைப் பரிந்துரைக்கும் மத விரோதி. அதன் தூய அர்த்தத்தில் மனித விரோதி. 

*ஒரு பெயரைச் சொன்னால் இன்னும் எளிதாகப் புரியும்.*

நரேந்திர மோடி!