Tuesday, October 27, 2015

மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்ல வேண்டிய அறிவுரை

புதிதாக திருமணம் செய்து கொண்ட தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்ல வேண்டிய அறிவுரை...!
*
*
இது போன்று இதுவரை இருந்த தாய்மார்கள் பின்பற்ற வில்லையென்றாலும்......
*
இனி, வருங்காலத்தில் புதிய தலைமுறைகள், தாய்மார்களாக மாறும் போது, பின்பற்றுவர்கள் என்று நம்புவோம்....
*
*
1. எந்த சமயத்திலும் மனைவியை, அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!
*

தீபாவளி சிற(ரி)ப்பு கதை

1.ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச்(!!) சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். 
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார். 
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. 
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது. 

Monday, October 26, 2015

இந்து மதத்தில் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க வக்கிரங்கள்

1) தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும்? - மனு இதை இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார்.
''ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்; அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்" 37
"ஓர் அழகிய பெண்ணின் பெண் உறுப்பைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்குச் சமமாவான்"
என்கிறது இந்து மதம். வக்கிரம் கொப்பளிக்கின்ற போது, எல்லா கூத்துகளுமே இந்து மத ஆன்மீகமாகும்.

Tuesday, October 20, 2015

நோபல் பரிசு: நியூட்ரினோக்களின் வேஷத்தை கலைத்த விஞ்ஞானிகள்

இயற்பியலுக்கான 2015-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு ‘நியூட்ரினோ வகை மாறல்’ எனப்படும் புதுமைத்தன்மையைக் கண்டுபிடித்த, ஜப்பானைச் சார்ந்த தகாகி கஜிதாவுக்கும் (56) கனடாவைச் சார்ந்த ஆர்தர் மெக்டொனால்டுக்கும் (72) தரப்பட்டுள்ளது. தகாகி கஜிதா டோக்கியோவிலுள்ள காஸ்மிக் கதிர்கள் ஆய்வு மையத்தின் இயக்குநர். ஆர்தர் மெக்டொனால்டு கிங்ஸ்டன் நகரிலுள்ள குவீன்ஸ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்.

பிரபஞ்சத்தின் நியூட்ரினோ மழை
புரோட்டான், நியூட்ரான் முதலிய அணுத்துகள்களைவிட நுணுக்கமான அடிப்படைத் துகள்களான குவார்க்ஸ், எலக்ட்ரான் போல மிக அடிப்படையான துகள்களில் ஒன்றுதான் நியூட்ரினோ. பொதுவாக, நியூட்ரினோ என்று சொன்னாலும் உள்ளபடியே எலக்ட்ரான்- நியூட்ரினோ, மியூவான்-நியூட்ரினோ மற்றும் டாவ்-நியூட்ரினோ என மூன்று வகை (flavour) நியூட்ரினோக்கள் உள்ளன.

22 உறுதிமொழிகள் - அண்ணல் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவியபோது மக்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழிகள்:

1) சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை கடவுள்களாக நம்பி நான் வணங்கமாட்டேன்.

2) ராமனையும் கிருஷ்ணனையும் கடவுள்களாக நம்பி நான் வணங்கமாட்டேன்.

3) பார்வதி, கணபதி, என்ற உருவங்களையும் கடவுளாக நம்பி நான்
வணங்கமாட்டேன்.

Thursday, October 8, 2015

சாதி ஒழிப்பு என்பது சாதியை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பதல்ல

மெட்ராஸ் படத்திற்கான சுந்தர் ஸ்ரீனிவாஸின் மதிப்புரையை சாருநிவேதிதா தன் தளத்தில் ஷேர் செய்திருக்கிறார். கட்டுரையின் முக்கியமான இறுதி வரி இது .

“Dude, இந்த திராவிடம், communism, தமிழ்தேசியம்.. Nothing will help dude. நம் கைகளில் இருக்கிற ஒரே ஆயுதம் நம் குழந்தைகள் தான். என் குழந்தைக்குத் தான் என்ன ஜாதி என்று மட்டுமல்ல, ஜாதியென்றாலே என்னவென்று தெரியாமல் தான் வளர்ப்பேன் dude.”

Wednesday, October 7, 2015

முஸ்லிம்கள் தாய் மொழியான தமிழை அவமதிக்கிறார்களா?

 தமிழில் பெயர் வைத்தால என்ன?
முஸ்லிம்கள் தாய் மொழியான தமிழை அவமதிக்கிறார்களா?
அரபியில் வழிபடுவது ஏன்?

இது போன்ற நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் குற்றச்சாட்டுகளுக்கு சகோ.பிஜேயின் பதில்...
முஸ்லிம்கள் தங்கள் பெயர்களை அரபு மொழியிலேயே சூட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தமது வழிபாடுகளை அரபு மொழியிலேயே நடத்துகின்றனர். பள்ளி வாசல்களில் தொழுகைக்காக விடப்படும் அழைப்பும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளது.

Thursday, October 1, 2015

கௌரவம் கொலை குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா - 2015

தமிழ்நாடு அரசு சட்டமன்றப் பேரவை விதி எண் 123-ன் கீழ் “கௌரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிகழ்த்தப்படும், கொலை மற்றும் குற்றங்கள் தடுப்பு மற்றும்தண்டனை மசோதா - 2015” சட்ட முன்வடிவை நடப்புக் கூட்டத்தில் அறிமுகம்செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் அ. சவுந்தரராசன் (29.9.2015) பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த சட்ட மசோதா பேரவைச் செயலகத்தின் ஆய்வில் உள்ளது. அதன் நகல் இங்கு தரப்படுகிறது.