Thursday, October 8, 2015

சாதி ஒழிப்பு என்பது சாதியை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பதல்ல

மெட்ராஸ் படத்திற்கான சுந்தர் ஸ்ரீனிவாஸின் மதிப்புரையை சாருநிவேதிதா தன் தளத்தில் ஷேர் செய்திருக்கிறார். கட்டுரையின் முக்கியமான இறுதி வரி இது .

“Dude, இந்த திராவிடம், communism, தமிழ்தேசியம்.. Nothing will help dude. நம் கைகளில் இருக்கிற ஒரே ஆயுதம் நம் குழந்தைகள் தான். என் குழந்தைக்குத் தான் என்ன ஜாதி என்று மட்டுமல்ல, ஜாதியென்றாலே என்னவென்று தெரியாமல் தான் வளர்ப்பேன் dude.”


இந்த வரிகளில் இருக்கும் கவர்ச்சியால் நிறைய நண்பர்கள் இதை இங்கு ஷேர் செய்திருக்கிறார்கள். உண்மையில் நம் பிள்ளைகளுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா ?
  1. எப்படி இங்கு சாதி உருவானது ?
  2. ஏன் சாதியின் பெயரால் மக்களை பிரித்து வைத்திருக்கிறார்கள் ?
  3. பிரித்து வைத்ததினால் பலன் பெற்றது யார் ?
  4. நம்முடைய சாதி என்ன ?
  5. சாதியை ஏன் நம்மால் மாற்றிக் கொள்ள முடியவில்லை ?
  6. சாதியை நாம் எப்படி பார்க்க வேண்டும் ?
  7. சாதியை ஒழிக்க ஏன் இங்கு ஆண்டாண்டு காலமாக போராட்டம் தொடர்கிறது ?
  8. சாதி ஒழிப்புக்கு முன் என்ன செய்ய வேண்டும் ?
  9. சாதியை ஏன் ஒழிக்க வேண்டும் ?

இந்தக் கேள்விகளுக்குரிய பதில்களை வரலாற்று பூர்வமாகவும், சமூகப் பார்வை மூலமாகவும் , பிறருடைய, நம்முடைய வாழ்வியல் அனுபவங்கள் மூலமாகவும் நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலமாகவே சாதிகளற்ற சமூகத்தை உருவாக்க முடியும் .

சாதி ஒழிப்பு என்பது சாதியை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பதல்ல Dude , முழுமையாக தெரிந்துகொண்டு அதன் பின்னர் திட்டமிட்டு அதை அழிப்பது பற்றியது . This alone will help us dude.

No comments:

Post a Comment