Tuesday, October 20, 2015

22 உறுதிமொழிகள் - அண்ணல் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவியபோது மக்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழிகள்:

1) சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை கடவுள்களாக நம்பி நான் வணங்கமாட்டேன்.

2) ராமனையும் கிருஷ்ணனையும் கடவுள்களாக நம்பி நான் வணங்கமாட்டேன்.

3) பார்வதி, கணபதி, என்ற உருவங்களையும் கடவுளாக நம்பி நான்
வணங்கமாட்டேன்.



4) இந்த பூமியில் ஆண்டவன் என்றொருவன் பிறக்க முடியும் என்பதையும் அவதாரமாக வருவான் என்பதனையும் நான் ஒருபோதும் நம்பமாட்டேன்.

5) "புத்தர்..., கடவுளின் அவதாரம்" என்ற பொய்யான கட்டுக் கதையை நான் நம்பவில்லை.

6) இறந்த முன்னோர்களுக்கு பிண்டங்கள் வைத்து சிரார்த்தம் செய்யும் சடங்கை நான் இனிமேல் செய்யமாட்டேன்.

7) புத்தமதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், கொள்கைகள் இவற்றுக்கு எதிராக நான் செயல்படமாட்டேன்.

8) பார்ப்பணர்கள் மூலம் எந்தவிதமான மதச்சடங்குகளையும்(சமங்கார்) செய்யமாட்டேன்.

9) மக்கள் அனைவரும் சமம் என்ற கொள்கையை, நான் ஏற்று நடப்பேன்.

10) மக்களிடையே ஒற்றுமையையும் சமத்துவத்தையும் ஏற்படுத்த நான் பாடுபடுவேன்.

11) புத்தர் போதித்த எட்டு தர்மநெறிகளை நான் ஏற்று நடப்பேன்.

12) புத்தர் போதித்த பத்து அறவழிகளை பின்பற்றி நடப்பேன்.

13) உயிர் வாழ் இனங்கள் அனைத்தின் மீதும் அன்பு செலுத்துவேன்.

14) பொய் சொல்லமாட்டேன்.

15) அடுத்தவருக்குச் சொந்தமான பொருளை திருடவோ அபகரிக்கவோச் செய்யமாட்டேன்.

16) ஒழுக்கக் கேடான பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன்.

17) மது மற்றும் போதையூட்டும் பொருட்கள் எதையும் தீண்ட மாட்டேன்.

18) புத்தர் போதித்த கருணை, அன்பு, மற்றும் பகுத்தறிவு வழிகளில் எனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன்.

19) பார்ப்பணர்களே உயர்ந்த முதல் சாதி என்று வலியுறுத்தும் மனிதர்களுக்கிடையே சமத்துவமின்மையை போதிக்கும் மற்றும் மனிதகுல விடுதலைக்கு எதிரான இந்துமதத்தை இன்றோடு கை கழுவி நான் புத்தமதத்தில் என்னை இணைத்துக்கொள்கிறேன்.

20) புத்த மதமும் அதன் தர்மமுமே இம்மண்ணில் சிறந்தது என்று அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

21) இன்று தான்........., நான் புதியபிறவி எடுத்திருப்பதாக உணர்கிறேன்.

22) இன்றுமுதல் புத்தர்காட்டிய வழியில் நான் உறுதியாக நடப்பேன்.

No comments:

Post a Comment