*புத்தக அறிமுகம்76/100*
*"சரயு"*
அருணன் எழுதிய புத்தகம் இது.
உலகமே மெச்சும் ராமராச்சியம் எவ்வளவு கேவலமானது என சொல்லும்.
வருணாசிரம கொள்கைகளுக்காக பல அவச்செயல்கள் செய்த ராமராச்சியத்தை தானா நாம் விரும்புகிறோம்? படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்.
தசரதனுக்கு வாரிசில்லை என்று தானே படித்திருக்கிறோம்.
தசரதனுக்கு ஒரு மகள் இருந்ததையும் அவளின் கணவனின் தயவினாலேயே(?) தசரதன் மனைவிகள் கர்ப்பம் தரித்தனர் என்கிற விடயம் அறிந்திருக்கிறீர்களா?
இந்த ரகசியத்தை அறிந்த
சம்பூகன் என்ற தாழ்த்தப்பட்டவரை, சூத்திரன் தவம் செய்யக்கூடாது என வெட்டி கொன்றதையும்,
எந்த லெட்சுமணன் தன் மனைவியை கூட விட்டுவிட்டு அண்ணா அண்ணா என்று வந்தானோ அவனை சரயு நதிக்கரையில் ராமனே தலையை வெட்டி வீசியதையும் இவர்கள் சொல்லும் ராமாயணம் மறைத்ததை சொல்லும் நூல்.
பரதனின் மனைவியின் அதிகார வெறியினாலே, பிறப்பறியாத சீதை நாடாள கூடாது என்ற சதியை மறைத்து வேலைக்காரி கூனியை பலியாக்கிய பாவிகளின் கதை ராமாயணம்.
ராமாயணத்தில் பரதனின் மனைவியின் பாத்திரத்தை மையமாக வைத்து ஆய்வு செய்யப்பட்டிருக்கும் அற்புத நூல் இந்த புத்தகம்.
கார்னிவல் தியேன்டரில் ஒரு பாப்கான் விலையில் புத்தகம்.
வாங்குங்க, வாசிங்க.
அட ஏற்கனவே படிச்சாச்சா!
விடுங்க
உங்க நண்பருக்கு சொல்லுங்க.
வாசித்ததைப் பகிர்வோம்,
பகிர்வதற்காக வாசிப்போம்.
*மு.வீரகடம்ப கோபு*
திண்டுக்கல்.
*#8489277070*