Monday, December 7, 2020

அரிசி ஒகே சார், டிவி மிக்சி, கிரைண்டர் எல்லாம்?

#நிருபர் : அரிசி ஒகே சார், டிவி மிக்சி, கிரைண்டர் எல்லாம்?

#ஜெயரஞ்சன் : நீங்க என்னைக்காவது அம்மில சட்னி அரைச்சிருக்கீங்களா?

#நிருபர் : இல்லை, மிக்சி தான்.

#ஜெயரஞ்சன் : பகல் பூரா வயல்ல வேலை செஞ்சுட்டு, அரிசியை ஆட்டுக்கல்லில் ஆட்டி, சட்னியை அம்மில அரைக்கமுடியுமா? இல்ல தெரியாமதான் கேட்கிறேன் , இந்த மாதிரி தேவை இருக்கிற பெண்கள் யாராவது உங்ககிட்ட வந்து வேண்டான்னு சொன்னாங்களா?

***********************************************************************

#நிருபர்: அரிசியை வாங்கி கோழிக்கு போடறாங்களே?

#ஜெயரஞ்சன்: கொடுக்கிற அரிசில சாப்பாடு மட்டும் தான் செஞ்சி சாப்பிடனும், இட்லி, தோசை, பொங்கல் வைத்து சாப்பிடக்கூடாதுன்னு ஏதாவது இருக்கா?

#நிருபர் : இல்லை.

#ஜெயரஞ்சன்: அதேபோலத்தான் இதுவும். கோழிக்கு போட்டு வளர்த்து அவன்தானே சாப்பிடறான்? அரசாங்கத்தின் வேலை அரிசி கொடுப்பதோடு முடிந்தது. அதை என்னவாக்கி சாப்பிடனும்கிறது அவன் உரிமை.

*************************************************************************

#நிருபர்: அரிசியை இலவசமாக வாங்கி வெளியில் விக்கிறாங்களே அதற்கு என்ன சொல்றீங்க?

#ஜெயரஞ்சன்: விக்கிற அரிசியை நீங்க வாங்குறீங்களா, இல்லை உங்க கூட வேலை செய்றவங்க யாறாவது வாங்கறாங்களா?

#நிருபர்: இல்லை.

#ஜெயரஞ்சன்: யார் வாங்கறாங்க தெரியுமா?, அரசு கொடுக்கும் அரிசி ஒரு குடும்பத்து தேவையில் 30% சதம் தான். மீதம் தேவையான 70% த்துக்கு அவன் எங்க போவான்? அதனால தான் தேவையில்லன்னு விக்கிறவங்கிட்ட குறைஞ்ச விலையில் வாங்கி தன் மற்றும் தன் குடும்ப தேவையை பூர்த்தி செய்து கொள்கிறான். இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை ?

Natarajan Kandasamy