Sunday, February 28, 2021

திமுக செய்ததென்ன

கலைஞர் என்ன கிழித்துவிட்டார்?தெரிந்து கொள்ளுங்கள்.இந்த சாதனையெல்லாம்  வேறு ஒரு அரசியல் தலைவரால் நினைத்துப் பார்க்கவேணும் முடியுமா?

விடைபெறுகிறேன் உடன்பிறப்புகளே....

1967-1969

1. மெட்ராஸ் மாகாணம்  தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
2. சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்.
3. தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு இருமொழி அங்கீகாரம் 
4. அரசாங்க ஊழியர்கள் பயன்படுத்தாத விடுமுறைக்கு சம்பளம்.

1969 - 1971

1. போக்குவரத்து துறை தேசியமயமாக்கப்பட்டது.
2. போக்குவரத்து கழகம் துவங்கப்பட்டது.
3. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வசதி
4. 1500 மக்களுக்கு மேல் வசிக்கும் கிராமங்கள் அனைத்திற்கும் சாலை வசதி கொடுக்கப்பட்டது.
5. குடிசை மாற்று வாரியம் துவக்கம்
6. குடிநீர் விநியோகம் மற்றும் வடிகாலுக்கு தனி வாரியம் அமைக்கப்பட்டது.
7. இலவச கண் மருத்துவ முகாம். 
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வுத் திட்டம் துவங்கப்பட்டது.
9. கைரிக்ஷாக்களை ஒழித்து அந்த தொழிலாளர்களுக்கு சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டம்.
10. எஸ்.சி,எஸ்.டி மக்களுக்கு இலவச கான்க்ரீட் வீடு கட்டி கொடுக்கும் திட்டம். 
11. விவசாயிகளுக்கு என்று நியாயமான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.
12. வழங்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகளே உரிமை கொள்ளும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
13. இந்தியாவிலேயே முதன்முதலாக போலீஸ் கமிஷன் துவங்கப்பட்டது.
14. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்களுக்கு தனி அமைச்சகம் துவங்கப்பட்டது.
15. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகவும் சிறுபான்மையினருக்கு 16 சதவீதத்திலிருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டது.
16. பியுசி வரை இலவசக் கல்வி
17. உழைப்பாளர் தினமான மே முதல் நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
18. நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.

1971 - 1976

1. கோவையில் முதல்  வேளாண் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
2. அரசாங்க ஊழியர்களின் குடும்பத்தாருக்கும் பயன்தரும் வகையிலான நிதித் திட்டங்கள் துவங்கப்பட்டது.
3. அரசாங்க ஊழியர்களிடத்தில் செயல்பட்ட ரகசிய அறிக்கை முறை ஒழிக்கப்பட்டது.
4. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம். 
5. கோவில்களில் கொண்டு வந்து விடப்படும் குழந்தைகளுக்காக குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக கருணை இல்லம் துவங்கப்பட்டது. 
6. சேலம் எஃகு ஆலை துவங்கப்பட்டது.
7. நில உச்சவரம்பு திட்டத்தின்படி தனிநபர் வைத்திருக்கும் நில உடைமைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
8. நெய்வேலியில் இரண்டாவதாக சுரங்கம் வெட்டும் திட்டம்.
9. தூத்துக்குடியில் பெட்ரோலியம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படும் கெமிக்கல்கள் தயாரிக்கும் திட்டம்.
10.  தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகமான சிட்கோ துவங்கப்பட்டது.
11. தமிழ் பேசும் முஸ்லீம்களைப் போலவே உருது பேசும் முஸ்லீம்களும் பின்தங்கியோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். 
12. வறண்ட நிலங்களுக்கு நிலவரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
13. ஆட்சியர்களிடம் மக்கள் நேரடியாக மனு அளிக்கும் விதமாக மனுநீதி திட்டம் துவங்கப்பட்டது.
14. பூம்புகார் கப்பல் கழகம் துவங்கப்பட்டது.
15. கொங்கு வேளாளர் பின்தங்கிய வகுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டனர். 
16. பசுமை புரட்சி கொண்டு வரப்பட்டது.

1989 - 1991

1. வன்னியர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
2. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிலிருந்து வரும் குழந்தைகள் மற்றும் பிற்படுத்தபட்டோர் வகுப்பிலிருந்து வருமான உச்சவரம்புக்கு உட்பட்ட குடும்பத்தின் குழந்தைகளுக்கு டிகிரி வரையில் இலவச கல்வி. 
3. சிறுபான்மையினருக்கு இலவசக் கல்வி. பட்டப்படிப்பு வரையில் பெண்களுக்கு வருமான உச்சவரம்பு.
4. நாட்டிலேயே முதன் முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
5. பெண்களுக்கும் சமமான சொத்துரிமை வழங்கும் திட்டம்.
6. அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு.
7. ஆசியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
8. ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம்.
9. கைம்பெண் மறுமண உதவித்தொகை திட்டம்.
10. சாதி மாறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவித்தொகை திட்டம்.
11. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டன.
12. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு வண்டி வாடகைக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்.
13. ரேசன் கடை ஆரம்பிக்கப்பட்டது.
14. கர்பிணி பெண்களுக்கு உதவித்தொகை.
15. தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு.
16. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக பத்து லட்சம் பெண்களுக்கு நிதி உதவி.
17. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
18. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
19. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
20. காவேரி தீர்ப்பாயத்திற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

1996 - 2001

1. ஆட்சி பொறுப்பேற்ற ஆறுமாதத்திற்கு உள்ளாக தடைப்பட்ட இடங்களுக்கு தேர்தல் நடத்தி முடிவு அறிவிக்க வேண்டும் என்ற முறை கொண்டு வரப்பட்டது.
2. சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு. இவர்களில் இரண்டு பெண் மேயர்கள் சிறுபான்மையினராக இருக்க வேண்டும் என்ற விதியும் கொண்டு வரப்பட்டது.
3. மெட்ராஸ் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது.
4. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு ஒற்றை சாளர முறை கொண்டுவரப்பட்டது.
5. புதிய தொழில்துறை கொள்கைகள் வெளிப்படையாக கொண்டுவரப்பட்டது. 
6. புதிய தொழில் துவங்குவதற்கான உரிமங்களை பெற ஒற்றை சாளர முறை கொண்டு வரப்பட்டது.
7. சாலை மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டது.
8. கிராமங்களில் கான்க்ரீட் சாலை அமைக்கப்பட்டது.
9. ஆறுகள்,கால்வாய் போன்றவை தூர்வாரும் திட்டம்.
10. இந்தியாவிலேயே முதன் முதலாக சுகாதார மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
11. எம்.எல்.ஏ தொகுதியின் மேம்பாட்டு நிதி என்று தனியாக நிதி ஒதுக்கப்பட்டது.
12. அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம்.  
13. கிராமங்களில் படித்து வரும் மாணவர்கள் தொழில்முறை படிப்புகளில் சேரும் போது 15 சதவீத இடஓதுக்கீடு வழங்கும் திட்டம்.
14. சமத்துவபுரம் துவங்கப்பட்டது.
15. சாதி பாகுபாட்டினை ஒழிக்க திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
16. அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில் மினிபஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது.
17. இந்தியாவிலேயே முதன்முதலாக டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
18. சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
19. உலக தமிழர்களுக்கு உதவும் வகையில் மெய்நிகர் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
20. உருது அகாதெமி ஆரம்பிக்கப்பட்டது.
21. சிறுபான்மையினரின் பொருளாதரத்தை மேம்படுத்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
22. உழவர் சந்தை கொண்டு வரப்பட்டது.
23. ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்கும் வருமுன் காப்போம் திட்டம் கொண்டு வரப்பட்டது.
24. கால்நடை பராமரிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது.
25. பள்ளிகளில் வாழ்வெளித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
26. கன்னியாகுமாரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.
27. சென்னையில் டைட்டல் பார்க் அமைக்கப்பட்டது.
28. அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு. 
29. புறம்போக்கு நிலங்களில் வசித்த இரண்டு லட்சத்திற்கும் அதிகமான குடும்பத்தினருக்கு வீடு வழங்கும் திட்டம். 
30.   1996 ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம். 
31    ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது.
32.   தென்மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு தனித்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
33.   பெண்களுக்கான சிறுவணிக கடன் திட்டம். 
34.   வேளாண் ஊழியர்களுக்கு தனிநபர் நல வாரியம் அமைக்கப்பட்டது.
35   .ஒழுங்குபடுத்தப்படாத ஊழியர்களுக்கு தனி நல வாரியம் ஏற்படுத்தப்பட்டது.
36.   தமிழ் அறிஞர்கள் மற்றும் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டும் திட்டும்.
37.  சத்துணவில் முட்டை வழங்கும் திட்டம். 
38.  இருபது அணைகள் வரை கட்டப்பட்டது.
39.  ஒன்பது மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது.
40.  மதுரையில் உயர்நீதிமன்ற கிளை அமைப்பு.
41.  மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் திட்டம். 
42.  அண்ணா மறுமலர்ச்சி திட்டம் துவங்கப்பட்டது.
43.   நமக்கு நாமே திட்டம் துவங்கப்பட்டது.
44.   குடும்ப நலத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
45.   104 கோடி ரூபாய் செலவில் சென்னை பொது மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
46.   13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு திட்டம். 
47.   முதன்முதலாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாலை போடும் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
48.   தமிழ் அறிஞர்களின் படைப்புகள் தேசியமயமாக்கப்பட்டது. 
49.   500 கோடி செலவில் 350 மின்சார துணை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
50.   ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்கும் திட்டம். 
51.   போக்குவரத்து ஊழியர்களுக்கு பென்சன் வழங்கும் திட்டம். 
52.  தூத்துக்குடி,கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி துவங்கப்பட்டது.

2006 - 2011

1. 1 கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டம்.
2. ஐம்பது ரூபாய்க்கு பத்து பொருட்கள் வீதம் ரேசன் கடைகளில் எண்ணெய்,பருப்பு,கோதுமை போன்றவை மாநிய விலையில் வழங்கும் திட்டம். 
3. 22 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 7000 கோடி வரையில் கடனுதவி வழங்கும் திட்டம். 
4. உரிய காலத்தில் வங்கிக் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்ற முறையும் கொண்டு வரப்பட்டது.
5. நெல் மற்றும் அரிசி வகைகளுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டது.
6. கரும்பு விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்.
7. 189 கோடி செலவில் காவிரி மற்றும் குண்டாறு இணைப்புத் திட்டம். 
8. 369 கோடி செலவில் தாமிரபரணி-கருமேனியாரு-நம்பியாரு இணைக்கும் திட்டம். 
9. ஒழுங்குப்படுத்தப்படாத ஊழியர்களுக்கு என்றே தனி வாரியம் அமைக்கப்பட்டது.
10. ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம். 
11. காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது.
12. மதிய உணவு திட்டத்தின் கீழ் முட்டை மற்றும் வாழைப்பழம் வாரத்தில் ஒரு நாள் வழங்கும் திட்டம். 
13. பொது நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.
14. அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டது.
15. செம்மொழி தமிழ் மையம் மைசூரிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது.
16. கும்பாபிஷேகம் மற்றும் கோவில் மாரமத்து பணிகளுக்கு 523 கோடி ஒதுக்கீடு. 
17. அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு 277 லட்சம் செலவில் பத்தாயிரம் சைக்கிள்கள் இலவசமாக வழங்கும் திட்டம். 
18. மூவலூர் ரமாமிர்தம் அம்மையார் நிதி உதவித்திட்டத்தின் கீழ் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவித் தொகை பத்தாயிரத்திலிருந்து இருபத்தைந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
19. அரசு ஊழியர்களுக்கு புதிய மெடிக்கல் இன்ஸூரன்ஸ் திட்டம். 
20. நலமான தமிழகம் திட்டம் என்ற பெயரில் இதயம், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் இலவச மருத்துவ முகாம் நடத்து திட்டம்.
21. கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் இலவசமாக மருத்துவ அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம். 
22. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் 108 இலவச ஆம்புலன்ஸ் வசதி. 
23. 37 புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்க கையெழுத்து இட்டு 46 ஆயிரம் கோடி முதலீடுகள் பெறப்பட்டது. இதன் மூலமாக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. 
24. கல்வி கற்று வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம். 
25. கோவை,திருச்சி,மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் டைட்டல் பார்க் ஆரம்பிக்கப்பட்டது.
26. மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை உயர்த்தப்பட்டது.
27. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் படி பத்தாயிரம் கிராமங்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. 
28. 57 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான சாலையில் பன்னிரெண்டாயிரம் கோடி செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
29. 4,945 கிலோமீட்டர் நீளமான சாலை இருவழிச் சாலையாக மாற்றப்பட்டது. 
30. வறண்ட நிலங்கள் மற்றும் சதுப்பு நிலத்திற்கு ஏற்ப நியாயமான வரி நிர்ணயிக்கப்பட்டது.
31. பேருந்துகளுக்கு கட்டணம் உயர்த்தாமல் புதிதாக 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. 
32. அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
33. அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகும் திட்டம். 
34. சாதி பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்கும் வகையில் பெரியார் நினைவு சமுத்துவபுரம் கூடுதலாக உருவாக்கப்பட்டது.
35. சென்னை கோட்டூர்புரத்தில் 171 கோடி செலவில் உலகத்தரத்தில் அண்ணா நினைவு நூலகம் கட்டப்பட்டது.
36. ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் புதிய சட்டமன்ற வளாகம் 1200 கோடி செலவில் கட்டப்பட்டது.
37. 100 கோடி செலவில் அடையார் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி பூங்கா கட்டப்பட்டது.
38. சென்னையில் செம்மொழி பூங்கா கட்டப்பட்டது.
39. மிஞ்சூர்,நிமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம். 
40. ஜப்பான் வங்கி உதவியுடன் 14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம். 
41. ஓகேனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம். 
42. ராமநாதபுரம்-பரமக்குடி கூட்டு குடிநீர் திட்டம் 630 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டது.
43. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் திரும்பி வழங்கப்பட்டன. TESMA மற்றும் ESMA போன்றவை நிறுத்தப்பட்டன. 
44. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்பட்டன. 
45. கலைஞர் வீட்டமைப்பு திட்டத்தின்படி 21 லட்சம் குடிசை வீடுகள் கான்க்ரீட் வீடுகளாக மாற்றப்பட்டன. 
46. பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் ஐந்தாயிரமாக உயர்த்தப்பட்டது.
47. கோவையில் முதல் உலக செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.
48. 119 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டன. 302 கோடி செலவில் நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. 
49. 13வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி நிலுவையில் இருக்கிற வழக்குகளை விசாரிக்க மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் நீதிமன்றம் செயல்பட வைத்தது.
50. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலியில் துவங்கப்பட்டது.
51. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 331 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 
52. சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது.
53. அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டணம் நிர்ணயம் செய்ய தனி கமிஷன் அமைக்கப்பட்டது.

PS:  பகைவனுக்கும் அருளும் கலைஞரின் பண்பு அனைவரும் கற்க வேண்டியது  ,கடைசி வருடங்களில் சக்கர நாற்காலியில் அமர்ந்த நிலையிலும் அவர் பிரயத்தனப்பட்டு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்த  சவமரியாதைகள் எத்தனையோ உண்டு, கலைஞர் சக்கர நாற்காலி செல்ல தோதாக plywood ramp அமைக்கும் ஒரு கார்பென்டர் முதலில் சென்று ramp அமைப்பார், இந்த அரசியல் நாகரீகம் மிகவும் அரியது.

பதிவு - Geethappriyan Karthikeyan Vasudevan
பகிர்வு - Mohamed Raffi

Thursday, February 18, 2021

ஷாலினி vs சிலந்தி

தவறான தகவல்களால், தவறான புரிதல்களால், தவறான சகவாசத்தால் - சில நேரங்களில் நமது சொல்லும் செயலும் பிழையாகி விடும் 

Sunday, February 14, 2021

அவரவர் அறிவு முதிர்ச்சிக்கு தக்கவாறு காரித்துப்பலாம்/தெளிவு-பெறலாம்/கடந்து-போகலாம்.

Abubake Siddiq நண்பா, அவரவர் அறிவு முதிர்ச்சிக்கு தக்கவாறு காரித்துப்பலாம்/தெளிவு-பெறலாம்/கடந்து-போகலாம். 

அது அவரவர் விருப்பம். 

வாழ்கையில் ஒரு முறைகூட நாகரிகமில்லாத வார்த்தைகளை பேசியிராத உங்களைப் போன்ற ஒலியுல்லாக்கள் வாழும் ஊரில் எங்களைப் போன்றவர்களும் இருக்கதான் செய்கிறோம். மன்னிச்சு. 

அடுத்தவன் என்ன பேசனும்/படிக்கனும்/பதிவு-போடனும் என்று சொல்வது எந்த வகையான நாகரிகம் என்று தெரியவில்லை. அது ஒரு பாசிச மன நிலை. 

Saturday, February 13, 2021

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா?

#எழுதியவர்_பெயர்_தெரியவில்லை

பெரியார் காலத்தில் அவரது செயல்பாட்டுக்கு எதிர்வினையாற்றி தோற்றுப் போன RSS & சங்கிகள், தந்தை பெரியார் இயக்கத்தைப் பார்த்து இப்போது சவால் விடுகிறார்கள்.

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? ராமனை செருப்பால் அடிச்ச மாதிரி இப்போ அடிக்க முடியுமா? என்று கேட்கிறார்கள்.
அவர்களுக்கு நமது எதிர் வினாக்கள்:

1) முன்பு எங்கள் மக்களைப்பார்த்து சூத்திரப்பயலே தள்ளிப் போடா என்று சொன்னீர்களே! இப்போது அது மாதிரி சொல்ல முடியுமா?

2) எங்கள் மக்களை தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

3) முன்பு நாங்கள் தொட்ட பொருளைத் தண்ணீர் தெளித்து எடுத்துச் செல்வீர்களே! இப்போது அது மாதிரி செய்ய முடியுமா?

4) முன்பு சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

5) முன்பு தவம் இருந்த சம்பூகனின் சிரம் கொய்தீர்களே! இப்போது அதுபோலச் செய்ய முடியுமா?

6) முன்பு ஏகலைவன் கட்டைவிரல் வாங்கியதுபோல இப்போது கட்டைவிரலை வாங்க முடியுமா?

7) முன்பு எங்களைக் காலில் செருப்பணியாதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

8) முன்பு தமிழன் கட்டிவைத்த சத்திரத்துச் சாப்பாடு பார்ப்பானுக்கு மட்டும்தான் என்று தின்று கொழுத்தீர்களே! இப்போது அப்படித் தின்று தீர்க்க முடியுமா?

9) முன்பு எங்கள் தோளில் துண்டு போடாதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

10) முன்பு எங்களைத் தெருவில் நடக்காதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

11) முன்பு எங்களை முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியாதே என்றீர்களே! 
இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

12) முன்பு எங்களைக் குடைபிடிக்காதே என்று சொன்னீர்களே! இன்று அப்படிச் சொல்ல முடியுமா?

13) முன்பு தீண்டத்தகாதவதர் எச்சில் துப்ப கழுத்திலே கலயத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வைத்தீர்களே! அதுபோல இப்போது செய்ய முடியுமா?

14) எங்கள் முன்னோர் தலைமுடி வளர்த்தால் முண்டாசு கட்டினால் அதற்கெல்லாம் வரி போடடீர்களே! அதுபோல இப்போது வரி போட முடியுமா?

15) திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒவ்வாரு ஜாதிக்காரனும் நம்பூதிரிக்கு இவ்வளவு அடி தூரத்தில்தான் நின்று பேச முடியும் என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

16) முன்பு எங்கள் பெண்கள் ஜாக்கெட் அணியக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

17)முன்பு RSS தோன்றிய மராட்டியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கால் பட்டால் தீட்டு, அவர்கள் நடந்த தடத்தை அழிக்க விலக்குமாற்றைக் கட்டி நடக்க வைத்தீர்களே, இப்போது அவ்வாறு செய்ய முடியுமா?

18)முன்று எங்கள் தாய்மார்கள் ஜாக்கெட் அணிந்தால் முலைவரி போட்டீர்களே, இன்று அதுபோல் வரி போட முடியுமா?

19) முன்பு எங்கள் பிள்ளைகளுக்கு மங்கலகரமான உயர்வான பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

20) முன்பு சீரங்கம் போன்ற கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று போர்டு வைத்தீர்களே இப்போது அப்படி வைக்க முடியுமா?

21) முன்பெல்லாம் படிப்பு எங்களுக்கு மட்டும்தான் வரும். உனக்கெல்லாம் வராது என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

22) எங்களுக்கு மட்டும்தான் தகுதி திறமை இருக்கு. உங்களுக்கு இல்லேன்னு சொன்னீங்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

23) முன்பு குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்து வண்ணான் பிள்ளை துணி வெளுக்கனும். நாவிதன் பிள்ளை முடிவெட்டனும். என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

24) அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு முன்பு சொன்னீங்களே! அதுபோல இப்போது சொல்ல முடியுமா?

25)இவன் குயவன் மண்பாண்டம் செய்கிறான். இவன் வண்ணான் துணி வெளுக்கிறான். இவர் அய்யர் மிகவும் நல்லவர். பாடம் படிக்கிறார் என்று பாடம் வைத்தீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

26)அன்று விதவைப் பெண்களை வெள்ளைப் புடவை உடுத்தி மூலையில் உட்கார வைத்தீர்களே அதுபோல இன்று செய்ய முடியுமா?

27) ராஜாஜி சொன்னதுபோல உங்கள் பிள்ளைகளை உயர் படிப்பு படிக்க வைக்காதீங்க. குலத்தொழிலைக் கற்றுக் கொடுங்கள் என்று சொல்ல முடியுமா?

28) முன்பு கணவனை இழந்த பெண்ணை சதி என்ற பெயரால் உயிரோடு கொளுத்தினீர்களே! அதுபோல இப்போது கொளுத்த முடியுமா?

29) முன்பு எட்டு வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று குழந்தைத் திருமணத்தைச் செய்து வைத்தீர்களே! இன்று அதுபோலச் செய்ய முடியுமா?

30) முன்பு கன்னிகாதானம் என்ற பெயரால் பெண்ணையே தானமாகப் பெற்றீர்களே! அதுபோல் இன்று செய்ய முடியுமா?

31) தேவதாசி முறையை ஆதரித்த நீங்கள் அதனை மீண்டும் கொண்டுவருவோம் என்று உங்களால் துணிச்சலாகச் சொல்ல முடியுமா?

32) பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

33) முன்பு மன்னர்களை ஏமாற்றி ஊர்களையே தானமாகப் பெற்றீர்களே! இன்று அதுபோல் ஏமாற்ற முடியுமா?

34) 5 வயசு பார்ப்பன பொடியன் 60 வயசு முதியவரை டேய் குப்பா , டேய் முனியான்னு கூப்பிட்டீங்களே ! இப்ப அப்படி கூப்பிட முடியுமா ?

35 இவை எதுவும்கூட வேண்டாம் உங்கள் திட்டமான மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்டத்துக்குப் பதிலாக மீண்டும் கொண்டு வருவோம் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

இப்படி அடுக்கடுக்கான வினாக்களை எங்களாலும் தொடுக்க முடியும். இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத் தந்தை பெரியார் போராடியபோது அதற்கு எதிராக பிள்ளையாரையும் ராமனையும் நீங்கள் கொண்டு வந்ததால்தான் பிள்ளையாரை உடைத்தார். ராமன் படத்தை எறித்தார்.
பெரியாரின் உழைப்பால் பலன் பெற்ற மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.
இன்று அதனையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் பக்தியைக் காட்டி மக்களை ஏய்க்கப் பார்க்கிறீர்கள். அதற்கெல்லாம் மக்கள் ஏமாற மாட்டார்கள்.ஏமாறப் போவது நீங்கள்தான். 

பெரியார் படைகள் அதனை முறியடிக்கும் எச்சரிக்கை!

டிவிட்டரில் படித்தது 

Via Timothy B

Sunday, February 7, 2021

கேரளாவில் அந்தர்ஜனம் என்னும் பெயரில் நடந்த பெண்களுக்கு எதிராக பல நூற்றாண்டுகள் நடந்த கொடுமை

Sheshadri dhanasekarn

கேரளாவில் அந்தர்ஜனம் என்னும் பெயரில் நடந்த பெண்களுக்கு எதிராக பல நூற்றாண்டுகள் நடந்த கொடுமை

சுமார்த்த விசாரம் என்பது கேரளத்தில் நம்பூதிரிகளின் சமூகத்தில் வழக்கிலிருந்த ஒரு குற்ற விசாரணை முறை. நம்பூதிரிப் பெண்களின் நடத்தையில் சந்தேகம் உண்டானால் அவர்களை விசாரணைக்குட்படுத்தி தண்டனை வழங்கும் ஒருதலைப்பட்ச விசாரணை முறை இது.

நம்பூதிரிகள் சிறுபான்மையினர். அவர்களுக்கு நேரடியாக ஆயுதபலம் சாத்தியமில்லை. ஆகவே கேரளத்தில் மட்டும் ஒரு தனி வழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தார்கள். நம்பூதிரி ஆண்கள் மன்னர்குடும்பங்களிலும், நாயர்சாதியின் பெருநிலப்பிரபுக்களின் குடும்பங்களிலும் பெண்களை மணம்புரிந்துகொண்டார்கள். அதன்மூலம் அக்குடும்பங்களுடன் உதிர உறவை நிறுவினார்கள். நாயர்கள் நேரடியாக ஆயுதங்க¨ளைக் கையாண்ட சாதி. நிலங்களை கையில் வைத்திருந்தவர்கள். இந்த உறவு நம்பூதிரிகளுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியது.நாயர்களுக்கு மத அதிகாரத்தை அளித்தது.

இந்த வழக்கம் நின்றுவிடாமலிருக்க நம்பூதிரிகள் ஒரு மரபை சட்டமாக்கினார்கள். நம்பூதிரிச் சாதியில் ஒரு குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே நம்பூதிரிப்பெண்ணை மணம் புரிந்துகொள்ள முடியும். பிற மகன்கள் மன்னர்குடும்பங்களிலோ, நாயர் சாதியிலோ மட்டுமே மணம்புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு நம்பூதிரிப்பெண் விலக்கு. நம்பூதிரிகள் ஆண்வழிச் சொத்துரிமை கொண்டவர்கள். நாயர்கள் பெண்வழிச்சொத்துரிமை கொண்டவர்கள். ஆனால் நம்பூதிரிச்சொத்துக்களுக்கு குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே வாரிசு. பிறருக்கு எந்த உரிமையும் இல்லை
இதன் விளைவாக நம்பூதிரிச் சொத்துக்கள் நூற்றாண்டுகளாக பிளவுபடவே இல்லை. 

நம்பூதிரிச்சாதியின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. ஆகவே அவர்களின் ஆதிக்கம் நீடித்தது. ஆனால் நம்பூதிரிப்பெண்களில் மிகப்பெரும்பாலானவர்கள் கன்னியராகவோ விதவைகளாகவோ நின்றுவிட நேர்ந்தது. ஆகவே அவர்களிடம் பாலியல் மீறல்களுக்கான வாய்ப்புகள் சற்று அதிகம். இதனால் நம்பூதிரிகள் தங்கள் பெண்களின் கற்பை கண்காணிக்கவும் தண்டிக்கவும் ஸ்மார்த்த சபை(ஆசார விதிகளின்படி ஒழுக்க மீறல்களை விசாரிக்கும் ஒரு அமைப்பு) என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டார்கள். பாலுறவைக் கண்காணிப்பதற்கென்றே ஒரு தனி அமைப்பு வைத்திருந்த ஒரே சாதி நம்பூதிரிகள்தான்
நம்பூதிரிப்பெண் அந்தர்ஜனம் [உள்ளே இருப்பவள்] என்று அழைக்கப்பட்டாள். அதன் மொழியாக்கம் சாதாரணர்களால் அழைக்கப்பட்டது, அகத்தம்மா. அந்தர்ஜனங்கள் வெள்ளை ஆடை மட்டுமே அணியவேண்டும். உடலையும் முகத்தையும் முழுமையாக மறைத்துக்கொண்டுதான் வெளியே கிளம்ப வேண்டும். குளிப்பதற்குக் கூட தனியாக வீட்டை விட்டு செல்லவே கூடாது. எப்போதும் கையில் ஒரு ஓலைக்குடையை வைத்திருக்க வேண்டும். இதற்கு மறைக்குடை என்று பெயர். ஆண்கள் யாரைக் கண்டாலும் அந்தக்குடையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். விதவை மறுமணம் அனுமதிக்கப்படவில்லை. மொத்தத்தில் இருண்ட நம்பூதிரி இல்லங்களில் பிறந்து இருளில் வாழ்ந்து இருளில் மடியும் வாழ்க்கை அவர்களுடையது.
அந்தர்ஜனங்களின் அடுக்களை தோஷம் என்பது இந்தக் குற்றச்சாட்டுக்குப் பெயர். பரபுருஷனிடம் ஒரு அந்தர்ஜனம் (மனைக்குள் இருக்கும் மக்கள் என்று அர்த்தம்) தொடர்பு கொண்டுவிட்டாள் என்ற சமூகத்துக்குள் ஒரு வதந்தி உருவாகும்போது இந்த ஸ்மார்த்த விசாரம் நடத்தப்படும்.

இந்த ஸ்மார்த்த விசாரம் 'தாசீ விசாரத்தில்' துவங்குகிறது. அதாவது அந்தர்ஜனத்தின் வேலைக்காரியை விசாரணை செய்தல். வேலைக்காரி தன் எஜமானி நடத்தை கெட்டவள் என்பதை உறுதி செய்துவிட்டால், உடனே அந்த அந்தர்ஜனம் தன் பெயரை இழக்கிறாள். தன் திணையையும் இழக்கிறாள். அதாவது அஃறிணை ஆகிறாள். அதுமுதல், அவள் 'சாதனம்' என்றே அறியப்படுகிறாள்.
தாசீ விசாரம் முடிந்தவுடன் அடுத்த கட்டம் சாதனத்தை அஞ்சாம் புறையில் தள்ளுவது. அதாவது அவள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு அஞ்சாம் புறை எனப்படும் தனி அறையில் தனிமைக்காவலில் வைக்கப்படுகிறாள்.

அடுத்த கட்டமாக அந்த தேசத்தின் ஆட்சியாளரிடம் (ராஜா அல்லது 'நாடுவாழி' என்று அழைக்கப்படும் பண்ணையார்) குற்ற விசாரணைக்கான அனுமதி கோரப்படுகிறது. விசாரணையை ஒரு நம்பூதிரிதான் நடத்த வேண்டும். அவருக்கு 'ஸ்மார்த்தன்' என்று பெயர். ராஜா அந்தப் பகுதியின் பிரபலமான ஒரு ஸ்மார்த்தனையும், இரண்டு மீமாம்சகர்களையும் ஒரு அரசப் பிரதிநிதியையும் விசாரணைக்காக நியமிக்கிறார்.

விசாரணை நடத்தி, சாதனம் குற்றம் செய்திருக்கிறது என்பதை எப்படியேனும் நிரூபித்து, சாதனத்தை 'கதவடைத்து பிண்டம் வைப்பது' வரை ஒரு மிகப்பெரிய கடமையை நிர்வகிப்பதுதான் ஒரு 'உண்மையான' ஸ்மார்த்தனின் பணி.
விசாரணை நேரத்தில் மேற்பார்வை செய்கின்ற அரசப் பிரதிநிதியை 'புறக் கோய்மை' என்றும் அந்தப் பிரதேசத்து நம்பூதிரிகளின் பிரதிநிதியை 'அகக் கோய்மை' என்று அழைப்பார்கள். அஞ்சாம்புறையின் புறத்தளத்தில் இவர்கள் எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள். விருப்பமுள்ள ஊர் மக்களும் பங்குபெறலாம்.
ஸ்மார்த்தனும் இரண்டு கோய்மைகளும் சேர்ந்து உள்ளே நுழைய முற்படுகிறார்கள். அப்போது வாசலில் இருக்கும் தாசி அவர்களைத் தடுக்கிறாள். ஆண்கள் உள்ளே நுழையக் கூடாது என்கிறாள். ஏன் என்று இவர்கள் கேட்கிறார்கள். உள்ளே ஒரு சாதனம் இருக்கிறது என்று தாசி கூறுகிறாள். யார் அது என்று ஸ்மார்த்தன் கேட்கிறார். இந்த மாதிரி இந்த மாதிரி மனையின் இந்த மாதிரி இந்த மாதிரி நம்பூதிரியின் மகள் அல்லது சகோதரி அல்லது மனைவியான இந்த மாதிரி இந்த மாதிரி சாதனம் என்று அவள் பெயரைக் கூறுகிறாள் தாசி. இப்படிப்பட்ட ஒரு பெண் இந்த வீட்டில் எப்படி தனியாக இருக்கிறாள் என்று ஆச்சர்யம் அபிநயிக்கும் ஸ்மார்த்தன் கூடுதல் விவரங்களைக் கோருகிறார்.

இந்த இடத்திலிருந்து அதிகாரபூர்வமாகத் துவங்குகிறது ஸ்மார்த்த விசாரம். குற்றவாளியான சாதனம், கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டு, கண்ணையும் முகத்தையும் வெள்ளைத் துண்டால் கட்டி, ஸ்மார்த்தனின் கேள்விகளுக்கு தாசியின் மூலமாக பதில் அளிக்க வேண்டும். வேறு யாரும் பேசுவதற்கு அனுமதியில்லை. ஸ்மார்த்தனின் கேள்விகளில் ஏதேனும் தவறு இருந்தால் அகக்கோய்மை தன் தலையில் கட்டியிருக்கும் துண்டை கீழே போடுவார். இதற்கு 'நாட்டாமை, கேள்வியை மாத்து' என்று அர்த்தம், ஸ்மார்த்தன் தன் கேள்வியை மாற்றிக் கேட்பார். எல்லாமே அவளை குற்றத்தை சம்மதிக்க வைப்பதற்கான வழிகள்தான்.
ஸ்மார்த்த விசாரம் அன்றைய தினம் முடியாமல் நீண்டு போகிறது என்றால் அன்றைய தினம் தனக்குக் கிடைத்த விவரங்களை சபையின் முன் அறிவிப்பார் ஸ்மார்த்தன். இதற்கு 'ஸ்வரூபம் சொல்லுதல்' என்று பெயர். ஒவ்வொரு நாளும் ஸ்மார்த்த விசாரம் முடிந்ததும் குற்றவாளியின் உறவினர்கள் ஜட்ஜ் டிரிப்யூனல் அங்கத்தினர்களுக்கு விருந்து அளிக்க வேண்டும். சில ஸ்மார்த்த விசாரங்கள் மாதக்கணக்கிலும் வருடக்கணக்கிலும் நீடித்திருக்கின்றன. (ஷோரணூருக்கு அருகில் கவளப்பாறையில் ஒரு நம்பூதிரி குடும்பத்தில் இந்த ஸ்மார்த்த விசாரம் 36 வருடங்கள் நீண்டது. இறுதியில் அந்த அந்தர்ஜனம் குற்றமற்றவர் என்று நிரூபணமாயிற்று. ஆனாலும்... தன யௌவனம் முழுவதும் இருளடைந்த அஞ்சாம்புறையில் கழித்ததற்கான எந்த நியாயமும் அவருக்கு வழங்கப்படவில்லை.)

சாதனம் குற்றத்தை ஒத்துக்கொண்டதும் தான் சம்போகித்த ஆள் யார், எந்த தருணத்தில் நடைபெற்றது, எப்படி நடைபெற்றது, எவ்வளவு முறை நடைபெற்றது என்பதையெல்லாம் விவரிக்க வேண்டும். ஒரு வேளை ஒன்றிற்கு மேல் ஆட்கள் இருந்தால் ஒவ்வொருவர் பெயர் சொல்லப்படும்போதும் இந்த விவரணைகளும் தேவை. அதற்குப் பிறகு சாதனம் சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது. அவள் மரித்துவிட்டதாகக் கருதி பிண்டம் வைக்கப்படுகிறது. பிரஷ்டம் செய்யப்பட்ட அவள் தனக்குத் தோன்றிய திசையில் செல்கிறாள்.
அவளால் சுட்டப்பட்ட ஆண்களும் சமூகத்திலிருந்து விலக்கப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அப்பீலுக்குப் போகலாம். தான் குற்றமற்றவன் என்பதை கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு நிரூபிக்கலாம். இந்த கைமுக்கல் சடங்கு நடப்பது கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்தரம் கோவிலில்.
இப்படி ஆணாதிக்கம் கொடிகட்டி வாழ்ந்திருந்த அந்தக் கால நம்பூதிரி சமுதாயத்தில் இந்தக் கொடுமைகளுக்கு உள்ளாகி வீரத்துடன் எதிர்த்து நின்ற ஒரே ஒரு அந்தர்ஜனம் தாத்ரிக்குட்டி
குன்னங்குளம் கல்பகசேரி மனையின் குறியேடத்து தாத்ரி என்ற தாத்ரிக்குட்டி, அழகாகயிருந்ததாலேயே ஆணாதிக்கத்தின் அனைத்துக் கொடுமைகளுக்கும் ஆளானவள். 

சிறு வயதிலேயே தன் சொந்த தந்தையாலும் சகோதரனாலும் பாலியல் வன்கொடுமைக்கு இரையாகிறாள். திருமணம் நடந்ததும் முதலிரவில் கணவனின் மூத்த சகோதரனிடம் முதலில் தன்னைக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இதற்குப் பிறகுதான் பழி தீர்க்கும் படலத்தைத் துவக்குகிறாள் தாத்ரிக்குட்டி. சமூகத்தின் பிரபலமானவர்கள் எல்லோரையும் வசியப்படுத்தி வீழ்த்துகிறாள். அவர்களுடன் சம்போகித்ததற்கான எல்லா நிரூபணங்களையும் சேகரித்து வைக்கிறாள். அவளிடம் ஸ்மார்த்த விசாரம் நடத்தப்படுகிறது.
நம்பூதிரி சமூகத்தையே நடுங்கச் செய்த இந்த ஸ்மார்த்த விசாரம் நடந்தது 1905ம் ஆண்டு. இதுவே கடைசி ஸ்மார்த்த விசாரம் என்றும் அறியப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் எண்பதுகளில் அரங்கோட்டுக் கரையில் கல்பகசேரி இல்லத்தில் அஷ்டமூர்த்தி நம்பூதிரியின் மகளாகப் பிறந்தவள் சாவித்திரி. பிடிவாதக்காரக் குழந்தையாக வளர்ந்தாள். பெண்கள் கல்வி கற்பது ஆசாரத்துக்கு ஒவ்வாததாகக் கருதப்பட்ட காலத்தில் அருகிலிருந்த குருகுலத்தில் படிக்க அந்தப் பிடிவாதம் துணைசெய்தது. தர்க்க புத்தியுடனும் சுதந்திர வாஞ்சையுடனும் வளர்ந்த பெண் பூப்படைந்தபோது தீச்சுடரின் அழகுடன் ஒளிர்ந்தாள்.உடல் மலர்வதற்கு முன்னும் உடல் மலர்ந்த பின்னும் அவளை மோகித்து கலந்தவர்கள் பலர் என்று செவிவழிக் கதைகள் சொல்கின்றன.
தாத்ரியை வேளி முடித்து அனுப்பியது குறியேடத்து இல்லத்துக்கு. அவ்வாறு வெறும் சாவித்திரிக் குட்டி குறியேடத்து தாத்ரியாகிறாள்.அவளை மணந்தவர் குறியேடத்து இல்லத்தை சேர்ந்த இரண்டாம் சந்ததியான ராமன் நம்பூதிரி. 

இந்த மணஉறவில் ஒரு சதி மறைந்திருந்தது.நம்பூதிரிக் குடும்பங்களில் மூத்தவரான மூசாம்பூரிக்கு மட்டுமே திருமணம் செய்துகொள்ளும் உரிமை.இரண்டாமவரான அப்பன் நம்பூதிரி திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால்வேத விதிப்படி ஒரே ஒரு வழியிருந்தது. மூசாம்பூதிரியால் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வாரிசை உற்பத்தி செய்ய முடியாமலிருந்தாலோ தீராத நோயிருந்தாலோ அவரது அனுமதியுடன் வைதிகமுறைப்படி பரிகாரங்கள் நடத்திய பின்பு இரண்டாமவர் மணமுடித்துக் கொள்ளலாம்.
குறியேடத்து நம்பியாத்தன் நம்பூதிரி தீராத நோயாளியாக இருந்தார்.அதனால் ராமன் நம்பூதிரிக்குதாத்ரியை மணந்துகொள்ள முடிந்தது. ஆனால் முதலிரவில் அவளுடன் உறவுகொண்டவர் மூசாம்பூதிரி. தாத்ரியின் கனவுகள் பொசுங்கின. மனம் துவண்டது.உடல் களவாடப்பட்டது. அந்த கொடூர நொடியில் தாத்ரி வெஞ்சினப் பிறவியானாள்.தன்னை வஞ்சித்தவர்களைப் பழிவாங்க தனது உடலை ஆயுதமாக்கினாள். அவளது மாமிசப் பொறியில் பல ஆண்கள் சிக்கினர்.தாத்ரியின் துர்நடத்தை ஊர்ப்பேச்சாக மாறியது.கொச்சி சமஸ்தானத்தின் ராஜா விசாரணைக்கு அனுமதியளித்தார். தாத்ரியை முன்னிருத்திய ஸ்மார்த்த விசாரம் நாற்பது நாட்கள் நீண்டது.தன்னைக் காமப்பிழைக்கு ஆளாக்கியவர்களைப் பற்றி முப்பத்தியொன்பது நாட்கள் எதுவும் பேசாமலிருந்தாள் தாத்ரி. அப்படிப் பேசாமலிருப்பது ஒருதலைப்பட்சமான தீர்ப்பில் முடியும்.

தான்மட்டுமே குற்றத்தின் பாரத்தைச் சுமக்கவேண்டியிருக்கும் என்ற உள்ளுணர்வில் நாற்பதாம் நாள் தன்னோடு கிடந்தவர்களை அடையாளம் காட்டினாள்.அவள் பகிரங்கப்படுத்திய வரிசையில் அறுபத்தி நான்கு புருஷர்களின் பெயர்கள் இருந்தன.அறுபத்தி ஐந்தாவது பெயரைச் சொல்வதற்கு முன்பு பணிப்பெண்ணிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து சபையில் காட்டச் சொன்னாள். 'இந்தப்பெயரையும் சொல்லவேண்டுமா ? ' என்று அவள் கேட்டதும் ஸ்மார்த்தனும் மீமாம்சகனும் மகாராஜாவும் அதிர்ந்து நடுங்கினர்.அந்த நொடியில் ஸ்மார்த்த விசாரம் முடிந்தது. தாத்ரியுடன் உறவுகொண்ட அறுபத்தி நான்கு ஆண்களும் விலக்கு கற்பித்து நாடு கடத்தப்பட்டனர். தாத்ரிக்குட்டிக்குப் பிண்டம் வைக்கப்பட்டது. அவளுடைய முதுகுக்குப் பின்னால் மரண ஓலத்துடன் கதவு அறைந்து மூடப்பட்டது. அவள் இறந்துபோனவர்களில் ஒருத்தியாகக் கருதப்பட்டாள்.
தாத்ரி வெளிப்படுத்திய அறுபத்தி நான்கு பெயர்களில் எல்லா வயதினரும் இருந்தனர்.உறவினர்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள், அண்டை வீட்டவர்கள்,கல்வி கற்பித்த குரு,இல்லத்துக்கு வந்துபோன இசைவாணர்கள், கதகளிக் கலைஞர்கள் என்று எல்லா ஆண்களும் இருந்தனர். அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பெற்ற தகப்பனின்பெயரும் உடன்பிறந்த சகோதரனின் பெயரும் இருந்தன. தாத்ரி சொன்னவர்களில் பாதி அவளை வீழ்த்தியவர்கள். மறுபாதி அவளால் வீழ்த்தப்பட்டவர்கள்.அவள் சொல்லாமல்விட்ட அறுபத்தி ஐந்தாவது பெயர் கொச்சி மகராஜாவின் பெயர் என்றும் ராஜாவுக்கு நெருக்கமுள்ள நபரின் பெயர் என்றும் நிரூபணம் செய்யப்படாத ஊகங்கள் நிலவின.இன்றும் அது விடுவிக்கப்படாத புதிர்.
குறியேடத்து தாத்ரி சம்பவத்துக்கு முன்பும் சில அந்தர்ஜனங்கள் பிரஷ்டம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 

வாயில்லாப் பிராணிகளாக தண்டனையை ஏற்றுக்கொண்டு மடிந்து காலத்தின் புழுதியாக அவர்கள் மறைந்தனர்.தாத்ரி குட்டி மட்டுமே எதிர்விசாரணைக்குத் தயாரானவள். தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தின் ம்றுபக்கத்தை அம்பலப்படுத்தி தார்மீக உறுத்தலை உண்டாக்கியவள்.
ஆணாதிக்க மனோபாவத்தையும் பெண்ணுக்கு விரோதமான சாதியொழுக்க விதிகைளையும் கேலிக்குள்ளாக்கியவள்.எந்த உடல் பாவக்கறை படிந்தது என்று உதாசீனமாகச் சொல்லப்பட்டதோ அதே உடலை ஆயுதமாக தாத்ரி மாற்றினாள். எந்த ஒழுக்க விதிகள் தன்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தனவோ அதேவிதிகளை தனது பிரதிவாதமாக்கினாள்.
குலப்பெண்ணுக்குத்தான் பிரஷ்டம். எப்போது ஒரு குலப்பெண்ணை நடத்தை கெட்டவள் என்று தீர்மானிக்கிறீர்களோ அப்போதே அவள் அந்தத் தகுதியிலிருந்து கீழே தள்ளப்பட்டு வேசியாகிறாள். வேசியின் தர்மத்தைக் கேள்வி கேட்கவோ அவளைத் தண்டிக்கவோ ஸ்மார்த்த சபைக்கு என்ன அதிகாரம் ? ' என்ற தாத்ரியின் கேள்வியில் அன்று மிரண்ட சமுதாயம் பின்னர் ஸ்மார்த்த விசாரம் நடத்தவில்லை.
ஸ்மார்த்த விசாரம் நடத்தி பிரஷ்டு கற்பிக்கப் பட்ட குறியேடத்து தாத்ரிக்கு என்ன ஆயிற்று என்பது வாய்மொழிக் கதைகளிலிருந்தே அறியப்படுகிறது. தாத்ரி விசாரணை பற்றிய தகவல்கள் வில்லியம் லோகன் எழுதிய 'மலபார் கையேட் 'டில் (மலபார் மானுவல்) விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் பின்கதைகள் அனைத்தும் மக்கள் பேச்சிலிருந்தே பெறப்படுகின்றன.சம்பவத்தோடு தொடர்புடைய பலரது பின் தலைமுறையினர் இன்றும் வாழ்கிறார்கள் என்ற நிலையில் வாய்மொழித் தகவல்களை பொய்யென்று தள்ளுபடி செய்வதும் தவறாகிவிடும். சமுதாயத்தால் விலக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றும் பொறுப்பு மகாராஜாவைச் சேர்ந்தது. கூடாவொழுக்கத்துக்காக தண்டிக்கப்பட்டவளை ஊர் மத்தியில் பராமரிப்பது ராஜ நீதிக்கு இழுக்கு என்பதால் புறம்போக்குப் பகுதியில் அவளுக்கான வீடும் நிலமும் ஒதுக்கப்படும்.வைதீக நியதி அது. 

அதுபோன்று தாத்ரிக்கும் பெரியாற்றின் கரையில் மயானத்தையொட்டி இடம் ஒதுக்கப்பட்டது. அங்கே அவள் வாழ்ந்ததற்கான சான்றுகளில்லை. 1905 இல் இறந்துபோகவில்லை என்பது மட்டும் நிச்சயம். முன் காலங்களில் பிரஷ்டம் செய்யப்பட்ட பிற பெண்களைப்போல தாத்ரியும் பாண்டிதேசத்துக்கு -தமிழ்நாட்டுக்கு- அடைக்கலம் தேடிப்போனாள் என்பது ஏற்றுக்கொள்ளப் பட்ட விவரம். தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆங்கிலோ- இந்தியர் ஒருவரை மணந்து மூன்று பிள்ளைகளுக்குத் தாயுமாகியிருக்கிறாள். இரண்டு பெண்களும் ஓர் ஆணும். மகள்களில் ஒருத்தி பாலக்காட்டிலும் மற்றொரு மகளும் மகனும் சென்னையிலும் வாழ்ந்தார்கள்.சென்னைவாசியான மகள்வழிப் பேத்தி நடிகையாக அறிமுகமாகி மலையாளத்திரையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நட்சத்திரமாக ஜொலித்திருக்கிறாள்.
அறுபத்தைந்து பேருடன் உடலுறவு கொண்டும் கர்ப்பமடையாத தாத்ரி மூன்று குழந்தைகளுக்குத் தாயானது உயிரியல் விந்தையா ? மனதின் தந்திரமா ? என்பது இன்றும் தெளிவாகாத ரகசியம்.ஸ்மார்த்த விசாரத்தின்பேரில் புறக்கணிக்கப்பட்ட ஆண்கள் குற்றவுணர்வால் சாதியும் பெயரும் மாறி வேறிடங்களுக்குப் போனார்கள். அவ்வாறு வெளியேறிய ஒருவரைப் பற்றி மலையாளச் சிந்தனையாளரும் இலக்கியவாதியுமான எம்.கோவிந்தன் பின்வருமாறு எழுதினார். 

மேனன் சாதிப்பிரிவைச் சேர்ந்த அவர் திருச்சூர் நகரத்தில் முன்சீப்பாகவோ மாஜிஸ்திரேட்டாகவோ பணியாற்றி வந்தார்.திருமணமானவர். ஸ்மார்த்த விசாரத்தில் விலக்கப்பட்டவர்களின் பட்டியலில் அவர் பெயரும் இருந்தது. பதறிப்போன அவரது மனைவியும் குடும்பத்தினரும் மேனனைக் கைவிட்டனர்.ஊரைவிட்டு வெளியேறினார் மேனன். அப்போது இளைஞராக இருந்த அவர் பாலக்காடு ஜில்லாவில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த எளிய குடும்பத்துப் பெண்மணி ஒருவரை மணந்துகொண்டு பிழைப்புத் தேடி இலங்கைக்குப் போனார்.தம்பதியருக்குஇரண்டு மகன்கள் பிறந்தார்கள். பெரும் சம்பாத்தியம் எதுவும் தேடாமல் இலங்கையிலேயே காலமானார் மேனன். அவரது விதவை பாலக்காட்டுக்குத் திரும்ப மனமில்லாமல் தமிழ் நாட்டில் குடியேறினார். வீட்டு வேலை பார்த்தும் சின்னச்சின்ன வேலைகளில் ஈடுபட்டும் பிள்ளைகளை வளர்த்தார். பிற்காலத்தில் அந்த இரு பிள்ளைகளும் எம். ஜி. சக்கரபாணி மற்றும் எம். ஜி. ஆர் திரைப்பட நடிகர்களானார்கள். அவர்களில் ஒருவர் தமிழக மக்களின் அமோக ஆதரவுக்குப் பாத்திரமானார். காலப்போக்கில் அவர்களை ஆள்பவருமானார்.

 A field of one's own: gender and land rights in South Asia - Page 429 Bina Agarwal - 1994

https://m.facebook.com/story.php?story_fbid=1763549050486606&id=100004945836169