கக்கனையும் காமராஜரையும் 1967ல் தோற்கடித்தவர்கள் தமிழக மக்கள் என்று தொடர்ச்சியாக புலம்பும் கூட்டம் ஒன்று எப்போதும் உன்டு.
திராவிட முன்னேற கழகம் துவங்கிய நாளில் இருந்து தமிழுக்காய், தமிழர் நலனுக்காய் அவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள், அவர்களின் அர்ப்பணிப்புகள், தியாகங்கள் பற்றி எல்லாம் சிறிதும் தெரியாமல் அரசியல் வரலாறு படிக்காமல், திமுக வெறுப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டு பொய்யை மட்டுமே பேசி பரப்பி மக்களின் மனதில் நஞ்சை விதைக்க முயல்கிறவர்களின் முட்டாள் தனமான ஒப்பீட்டுப் பிதற்றலே இது.
அரசியல் வரலாறு படிக்காத, தெரியாத இளைஞர்களின் கனவு அரசியல் தலைவர்களான கக்கன், காமராசர், பக்தவசலம் ஆகியோரின் 1964-1967 வரையிலான தமிழக ஆட்சி தான் இன்று வரை தமிழகத்தின் மிக மோசமான இருண்ட காலம்.
1964-67 ஏன் தமிழகத்தின் #இருண்டகாலம் :-
♦ விவசாயிகள் விளைச்சல் இன்று தவித்தது பக்தவத்சலம் ஆட்சியில் தான்.
♦ விவசாயிகள் எலி கறி சாப்பிட்டது பக்தவத்சலம் ஆட்சியில் தான்.
♦ பொதுமக்கள் உணவிற்கு அரிசி இன்றி தவித்தது பக்தவத்சலம் ஆட்சியில் தான்.
♦ மூட்டையாய் அரிசி வைத்திருக்க அரசு தடை விதித்தது பக்தவத்சலம் ஆட்சியில் தான்.
♦ ஒரு வீட்டில் கல்யாணம் நடந்தால் எத்தனை பேருக்கு சாப்பாடு போடப்பட்டது என்று இலையை வைத்து கணக்கு பார்க்கும் கொடுமை நடந்தது அப்போது தான்
♦பருப்பு, கடுகு விலை சாமானியன் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்தது பக்தவத்சலம் ஆட்சியில் தான்.
♦ தமிழக மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க முதல் முறையாக மாநிலத்திற்குள் இந்திய ராணுவத்தை வரவழைத்தது பக்தவத்சலம் ஆட்சியில் தான்.
♦ விவசாயிகள் வாழ்வாதாரத்தை தொலைத்து நூற்றுக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டதும் இதே பக்தவத்சலம் ஆட்சியில் தான்.
அரிசிக்கு தட்டுப்பாடு, உணவு பஞ்சம், பட்டினி சாவு,
உணவாய் எலி கறி உண்ணுதல், மாணவர் போராட்டம் என மக்களின் மிகப்பெரும் சொல்லொனாத் துயரத்திற்கு காரணமான 1964 - 1967 பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலம் #தமிழகத்தின்_இருண்ட_காலம்.
சரி 1964 - 1967 என்பது பக்தவச்சலம் ஆட்சியின் அவலங்கள் என்றே வைத்துக்கொள்வோம்.
அதற்கும் கக்கனுக்கும் காமராசருக்கு என்ன தொடர்பு என்று கேட்டு வருவார்கள்.
அதற்கும் நம்மிடம் பதிலிருக்கிறது.
யார் இந்த #கக்கன்?
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோருக்கு தெரிந்தது எல்லாம் ஏழ்மையின் சிகரம், எளிமையின் உச்சம், கரைபடியாத கரத்திற்கு சொந்தக்காரர் கக்கன் என்பது தான். ஆனால் தமிழக போலீஸ் இலாக்கா மந்திரி கக்கனின் உண்மை முகம் அறிந்திடாத பேதைகளே இவர்கள்.
இந்தியை எதிர்த்து நடந்த மாணவர்களின் போராட்டத்தை நசுக்க மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் மந்திரி தான் இந்த கக்கன். பொள்ளாச்சியில் மட்டும் நூற்றிற்கும் மேலான மாணவர்களை சுட்டுக் கொன்றது கக்கனின் ஒற்றை கையெழுத்து.
தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 500க்கும் மேலான மாணவர்கள் கக்கன் மந்திரியாய் இருந்த அரசின் துப்பாக்கி குண்டிற்கு இறையானார்கள் என்பது இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?
யார் இந்த #காமராஜர்?
கல்வி கண் திறந்தவர், மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர், ஏழை மக்களின் பால் தீராத அன்பு கொண்டு காலம் முழுவதும் அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர். இவை மட்டுமே காமராசர் அல்ல. இதற்காக நாமும் அவரை மதிக்கிறோம், புகழ்கிறோம், அது தனி department.
அதே நேரத்தில் இங்கே தாய் தமிழகத்தில் பட்டினி சாவு, விவசாயி தற்கொலை, அரிசி தட்டுப்பாடு, உணவு பஞ்சம், விலைவாசி உயர்வு என்று மக்கள் தினம் தினம் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே போராடி கொண்டு இருக்கையில் தேசிய அரசியலில் இருந்து மீண்டும் மாநில அரசியலுக்கு வந்த காமராசர், விருதுநகரில் தன் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு இடத்தில் கூட பஞ்சம், பசி, பட்டினியால் வாடும் மக்களின் இந்த வறுமையை போக்க காங்கிரஸ் அரசு என்ன திட்டங்களை வைத்து இருக்கிறது என்று குறிப்பிடவில்லை.
ஆனால் என்ன குறிப்பிட்டார் தெரியுமா?
நாங்கள் படுத்துக்கொண்டே வெற்றி பெறுவோம். இந்த மக்கள் மீண்டும் எங்களை தான் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்றல்லவா குறிப்பிட்டார்.
அது தான் மக்கள் காங்கிரசை ஒரேடியாக படுக்கையில் வைக்க காரணமானது.
திமுகவும், நீங்கள் படுப்பது நிச்சயம், ஜெயிப்பது கடினம் என்று காமராசரின் வாயை அடைத்தது.
1967ல் கக்கன், காமராசர், பக்தவத்சலம் இருந்த காங்கிரசின் எதேச்சதிகார மக்கள் விரோத இருண்ட கால ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்க தமிழக மக்களை காக்க அரசியல் களத்தில் திமுக எவ்வளவு போராடி வென்றது தெரியுமா?
1967 வரை 50 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு தமிழகத்தின் எதிர்கட்சியாய் இருந்த திமுக 1967 பொது தேர்தலில் தன் அயராத உழைப்பை வெளிப்படுத்தினால் இன்னும் சில சட்ட மன்ற உறுப்பினர்களை கூடுதலாக பெற முடியும் என்று அரசியல் ஆர்வலர்கள் பரவலாய் கருத்து தெரிவித்து இருந்த போதும், தானும் தன் கட்சி உறுப்பினர்களும் சட்டமன்ற படி ஏறுவதை விட மக்களின் துயர் துடைக்க இன்னல் நீக்க, படி அரிசி திட்டத்தை காமராஜர் தலைமையிலான காங்கிரசு அரசு கொண்டு வந்தால் திமுக இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று சாமானிய மக்களின் நலனுக்காய் அறிவித்தவர் அண்ணா.
காமராசர், பகதவச்சலும் உள்ளிட்ட அன்றைய ஜமீன்தார்களுக்கான தலைவர்கள் ஒரே குரலில் உங்களால் முடிந்தால் படி அரிசி திட்டத்தை செய்து காட்டுங்கள் பார்க்கலாம் என்று நம் பேரறிஞரை பார்த்து எள்ளி நகையாடினர். இவர்களின் இந்த ஏளன பேச்சு தான் அன்று திமுகவை கோட்டையில் அமர்த்த அண்ணாவை உந்தும் சக்தியாக இருந்தது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் நீங்கலாக அனைத்து கட்சிகளுடனும் கட்சிகள் என்று சொல்வதைவிட அனைத்து தரப்பு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் ஒருங்கிணைத்து அன்று வரை இந்திய வரலாற்றில் யாரும் கண்டிராத மற்றும் காங்கிரசுக்கு எதிராய் யாரும் முன்னெடுக்காத மிகப் பெரிய கூட்டணியை பேரறிஞர் தமிழகத்தில் உருவாக்கினார். "முடிந்தவரை கரும்புச் சாறு சிந்தாமல் பிழிந்துவிட்டேன். அதற்கு மேலும் சாறு இருந்தால் ஈக்களுக்கு உணவாகட்டும் என்று விட்டுவிட்டேன்’’ என்றார் . அதை "கூட்டுறவு" என்றும் அறிவித்தார் அண்ணா.
வேறு வேறு இலக்கு, லட்சியம், விடாப்பிடிவாதம் கொண்ட பலரை இணைத்து அமைத்த கூட்டணிக்குக் கொள்கையே இல்லை. மக்களை ஏமாற்றும் வேலை. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று காமராசரும், காங்கிரசாரும் தெருத் தெருவாய் பிரசாரம் செய்தனர். ‘ஒன்றுபட்ட கொள்கை உண்டு, அதுதான் எதேச்சதிகார காங்கிரஸை வீழ்த்துவது’ என்று காமராசரை பார்த்து கர்ஜித்தார் அண்ணா.
”ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி அரிசி நிச்சயம்” என்றார் அண்ணா. அரிசி வைத்திருக்க தடை விதித்த காங்கிரஸ் அரசின் மீதான கோபத்தில் கொதித்து கொண்டிருந்த சோற்றுக்கே வழி இன்றி சாக கிடந்த மக்கள் மனதில் அண்ணாவின் படி அரிசி திட்ட அறிவிப்பு திமுக சாமானிய மக்களுக்கான கட்சி என்ற மிக பெரும் நம்பிக்கையை கொடுத்தது மட்டும் இன்றி காமராசரின் காங்கிரஸ் கட்சி பெரு முதலாளிகளுக்கான கட்சி என்ற உண்மையை மக்கள் உணர செய்தது.
பக்தவத்சலம் அண்ணாச்சி...பருப்பு விலை என்னாச்சு?’,
‘காமராசர் அண்ணாச்சி...கடுகு விலை என்னாச்சு?’
என்ற காங்கிரஸ் அரசுக்கு எதிரான தி.மு.கவினரின் இந்த இடி முழக்கம் தமிழகம் எங்கும் விண்ணதிர ஒலித்தது. இதற்கு மக்கள் மத்தியில் காங்கிரஸ் தலைவர்கள் பதில் சொல்ல முடியாமல் திண்டாடினர்.
அன்று விகடன் பத்திரிக்கை "அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கழுதையில் சவாரி செய்வது போல்" ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டது. இந்த கேலிச்சித்திரத்தை சுவரொட்டிகளாக மாற்றி தமிழகம் முழுவதும் காமராசரின் காங்கிரஸ் பிரச்சாரம் செய்து மக்களிடம் வாக்குகளை கேட்டது. கழுதை மீது எரியா கோட்டையை பிடிக்க முடியும்? என்று கேலி பேசியது காங்கிரஸ். "கோட்டையை பிடிக்க கழுதை தேவை இல்லை. மக்கள் தான் தேவை" என்றது திமுக.
ஒரு புறம் மக்கள் பஞ்சத்தில் சாகும் கொடுமை நடந்து கொண்டு இருக்க இந்த "விகடன்" காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக கருத்தை பரப்புகிறதே என்று திமுக உள்ளிட்ட அனைத்து கூட்டணி தலைவர்களுமே புலம்பி கொண்டிருக்க திமுகவின் முன்னணி தலைவர் ஒருவரின் குரல் விண்ணதிர ஒலித்தது!
“எவ்வளவு நாளைக்கு இந்த அதிகாரம் செய்ய முடியும் ஆட்சியாளர்களே! அதிகாரிகளே! எண்ணிக்கொள்ளுங்கள் இன்னும் ஆறே நாள்! ஆட்சி மாறும்! அதிகாரமும் மாறும்!" என்று முழங்கினார் அவர்.
ஆம் அவர் தான் அவரே தான்...தானிருந்தவரை இந்திய அரசியலை தன்னை சூற்றியே சூழல விட்ட தென்னகத்தின் சூரியன் #கலைஞர்_மு_கருணாநிதி.
5 லட்சம் செலவு செய்தால் அணணாதுரையையே தோற்கடிப்போம் என்றார் காமராசர். அந்த காமராசரை தோற்கடித்து காட்டியது திமுக.
எல்லா எதிர்ப்புகளையும் மீறி ‘எப்படியாவது வென்றாக வேண்டும்’ என்ற அண்ணாவின் தம்பிகளின் துடிப்பு, கண் துஞ்சாத உழைப்பாய் மாற, மக்கள் செல்வாக்கோடு திமுக 137 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்தது.
எந்த விகடன் திமுக தலைவர்கள் "கழுதையில் செல்வதாய்" கேலி சித்திரம் வரைந்ததோ, அதே விகடன் திமுகவின் வெற்றியை தொடர்ந்து "திமுக தனித்து போட்டியிட்டு இருந்தாலும் நிச்சயம் ஆட்சியை பிடித்தே இருக்கும் " என்று தன் தலையங்கத்தில் எழுதியது.
1967 திமுகவின் சட்டமன்ற தேர்தல் வெற்றி என்பது சாதாரண வெற்றி கிடையாது.
அது ஒரு சரித்திர சாதனை வெற்றி!
இந்திய அரசியல் வரலாற்றில் சுதந்திரம் பெற்று தந்த கட்சி என்ற பிம்பத்தை தாங்கி அசுர பலத்துடன் நின்ற தேசிய கட்சியை "முதன் முதலில் வீழ்த்தி ஒரு மாநில கட்சி ஆட்சியை பிடித்தது இந்தியாவில் அதுவே முதல் முறை".
அது நிகழ்ந்தது தமிழகத்தில் தான்.
அந்த சாதனையை செய்தது திமுக தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று காமராசரையும் கக்கனையும் தூக்கி கொண்டு வருபவர்களுக்கு சொந்தமாக சுட்டிக்காட்ட ஒரு தலைவர் கூட இல்லை என்பதை உணருங்கள்.
அந்த காமராசரையும், கக்கனையும் இன்று வரை திமுகவினர் தங்களால் முடிந்தளவு மதித்தே எழுதுகின்றனர் என்பதையும் மனதில் வையுங்கள்.
அரசியல் தலைவர்களை அவர்களின் நிறை குறைகளோடு அணுகி சீர் தூக்கி அலசுவதில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
அதே சமயத்தில் காமராஜர் காரில் போனார், கக்கன் சைக்கிளில் போனார் என்று எழுதிக்கொண்டிருந்தால் உரித்து உப்புக்கண்டம் போடப்படும்.