Sunday, November 14, 2021

Internet existed during the Mahabharata

Internet existed during the Mahabharata, says Tripura Chief Minister Biplab Kumar Deb ‘How could Dhritarashtra see through Sanjay’s eyes? This means technology was there, internet was there....😃😃😃

இந்து புராணங்களின் கால கணிப்பின்படி யுகங்கள் நான்கு வகைப்படும். அவை:கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம்,கலியுகம்.இவற்றுள் சிறிய கடைசி யுகமான கலியுகம் 4,32,000 ஆண்டுகள் கொண்டதெனவும் துவாபர யுகம் கலியுகத்தைப்
போல் இரண்டு மடங்கு கால அளவு அதாவது 8,64,000 ஆண்டுகள் கொண்டதெனவும் புராணங்கள் தெரிவிக்கிறது. கலியுகத்தைப்போல் மூன்றுமடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகள் கொண்டதாகவும். கலியுகத்தின் நான்கு மடங்கு கொண்ட கிருதா யுகம் 17,28,000 ஆண்டுகள் கொண்டதாகவும் தெரிவிக்கிறது

ராமாயணம் நடைபெற்றதென சொல்லப்படுவது இரண்டாவது யுகமான திரோதா யுகம். மகாபாரதம் நடைபெற்றதாக சொல்லப்படுவது மூன்றாவது யுகமான துவாபர யுகம்..புராணப்படி  நடந்ததாக சொல்லப்படும் இந்த இரண்டு கதைகளுக்கும் இடையே லட்சக்கணக்கான வருடங்கள் கொண்ட  மிகப்பெரிய கால இடைவெளி இருந்ததெனவும் சொல்லப்படுகிறது. இதன்படி நம் புராண அவதார புருஷர்கள் 39லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே நாகரீக மனிதர்களாக வாழ்ந்ததாகிறது...

பூமியின் வரலாறு...

சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி (acccretion) மூலம் சூரியனுடன் சேர்ந்து 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் அதாவது 454 கோடி வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியதென அறிவியல் கூறுகிறது...

அதேபோல் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி 100 கோடி வருடங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.அதில் மனித இனம் என்று எடுத்துக்கொண்டால் குரோமன்யான் மனிதனுக்குப் பின் தோன்றிய நியோ லித்திக் என்னும் புதிய கற்கால மனிதனே மனித நாகரிக இனத்தின் தொடக்கமாகக் கருதப்படுபவன். இன்றைக்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே முழுமையான
இந்த நியோலித்திக் நாகரிக மனிதன் தோன்றி வாழ்ந்தான் என்று புதைபொருள் வரலாற்றறிஞர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்...

40,000 ஆண்டுகளாக மனித சமூகம்,இன்றைய பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பு மற்றும் முயற்சியால் அடைந்திருந்த போதிலும், இங்கே மதங்கள் அறிவியலின் ஒளியை தடை செய்து கொண்டு தனக்கான ஆட்சியை தடங்கலின்றி நடத்திக்கொண்டுதான் இருக்கிறது...மதங்கள் அனைத்தும் அறியாமையையும், கேள்விக்கிடமற்ற அடிமைத்தனத்தையும் வைத்து மக்களின் அறிவுத் தேடலை காலம் காலமாய் தடை செய்துகொண்டே வருகின்றன. இதன் பொருட்டே இம்மதவாதிகள் பல நூறு குதர்க்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இணையம் வந்த பிறகு டார்வின் பொய், ஐன்ஸ்டீன் தோல்வி சிதம்பரம் நடராஜர் பாதம் பூமியின் மையப்பகுதியில் உள்ளதென்று தமது முட்டாள்தனங்களுக்கு தைரியமாக பெருமை கொள்கிறார்கள்.அதிலும் அரசியலில் மதம் கலக்கும்போது ஓட்டு வங்கி ஆதாயத்திற்காக அரசாங்கமே முன்னின்று மக்களை வடிகட்டிய முட்டாளாக்கும் வேலையை சிறிதும் கூச்சமற்று செய்கிறது...

டார்வின் தியரியின்படி உயிர்கள் பரிணாம வளர்ச்சி பெறப்பெற அவற்றின் மூளைவளர்ச்சியும் சிந்திக்கும் ஆற்றலும் வளர்ந்துகொண்டே வந்துள்ளது..கற்பனை வளம் கொண்ட மனிதன் அந்தந்த காலத்தில் தனக்குத் தோன்றிய கற்பனை வளத்தை மற்றவர்க்கு எடுத்தியம்பதில் தவறில்லை...ஆனால் அறிவியல் வளர்ச்சியில் புதிய புதிய உண்மைகள் புலப்படும்போது பழைய பஞ்சாங்க சிந்தனைகளை விடாமல் உண்மையென எடுத்தியம்புவதும் அறிவியலை வைத்துக் கொண்டு மதங்களின் முட்டாள்தனத்தை அகற்றுவதற்கு முயலாமல் ,மாறாக ஊக்குவிக்கும் வேலையை செய்வதும் அதற்கு அரசே துணை போவதும் அறிவியலாளர்களின் உழைப்பு மற்றும் அவர்தம் தியாத்தின்மீது காறி உமிழும்
செயல்....

No comments:

Post a Comment