கஸ்தூரி பவன்,
ஐயர் மெஸ்,
ஐயங்கார் மெஸ்,
பிராமணாள் கபே
என உணவுத் தொழிலில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது தான் உண்மை..
ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே பிராமணர்கள் உணவுத் தொழிலில் ஈடுபட்டதாக எழுத்தாளர் பாலகுமாரன் தனது உடையார் நாவலில் எழுதியிருப்பார் . அக்காலத்தில் இருந்தே உணவுத் தொழில் பார்ப்பனர் பிடிக்குள் தான் இருந்ததுள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநிலக் கல்லூரிக்கு படிக்க வந்த பிராமணரல்லாத மாணவர்கள் , உணவுக்காக பார்ப்பனர்கள் நடத்தும் ஹோட்டல்களையே நம்பி இருந்தனர் . ஆனால் அங்கு மாணவர்களை உள்ளே அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்து உணவு கொடுத்தனர் பிராமணர்கள் . உணவை அமர்ந்து சாப்பிட மாணவர்கள் இடம் தேடி அலைந்தனர், மாணவர்கள் கொடுக்கும் பணத்தை பிராமணர்கள் தீட்டு கழித்தே எடுத்துக் கொண்டனர் .
இதைக் கண்ட திராவிட இயக்க நாயகர்களுள் ஒருவரான நடேசனார் பிராமணரல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க " திராவிடர் இல்லம் " உருவாக்கினார் . அக்காலத்தில் இவ்விடுதி பிராமணரல்லாத எண்ணற்ற மாணவர்களுக்கு கல்வி கற்க முன்னேற ஏதுவாக இருந்தது . இந்தியாவின் முதல் நிதியமைச்சரான சண்முகம் செட்டியார் கூட இவ்விடுதியில் தங்கிப் படித்தவர் தான் . இந்த இல்லமே திராவிட இயக்க அரசியலின் ஊற்றுக்கண்ணாகவும் விளங்கியது
பெரியார் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் போது நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பிராமணர், பிராமணரல்லாதோருக்கு தனித் தனியே உணவு சமைத்து வழங்கப்பட்டதும் , வவேசு ஐயர் தனது குருகுலத்தில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு தனித்தனியாக உணவு செய்து பரிமாறியதும், அம்பேத்கர் தான் பணி செய்த இடத்தில் நீர் அருந்தக் கூட ஆட்சேபனை செய்யப்பட்டதும், தங்க விடுதியின்றி அவர் வீதிவீதியாக அலைந்ததும் இம்மண்ணின் வரலாறு தான்.
பெரியார் தான் அதை எல்லாம் உடைத்தெறிந்தார். பிராமணர்க்கு மட்டும் என இருந்ததற்கும் , பிராமணாள் கபே என பெயர் இருந்ததற்கும் எதிராக உணவு விடுதிகள் மீது பெரும் போராட்டங்களை முன்னெடுத்தார். பெரியாரின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து சேலத்தில் ஆரம்பித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிராமணியத்தை தாங்கிப் பிடித்த பெயர்கள் அதன் உரிமையாளர்களாலேயே மாற்றப்பட்டன.
மாற்றப்படாத கடைகள் முன் பெரியார் பெயர் அழிப்பு போராட்டம் அறிவித்தார். அதற்கு கடையினரோ காவல்துறையினரோ தடை செய்த பட்சத்தில், அமைதி வழியில்கடைக்கு முன் நின்று அக்கடைக்கு சாப்பிட வருபவர்களை கையெடுத்து கும்பிட்டு " சாதி ஆணவத்தை தாங்கிப்பிடிக்கும் இக் கடைக்குச் சென்று உணவருந்த வேண்டாம் " என்று கேட்டுக் கொள்ளும் வகைமில் போராட்டத்தை வடிவமைத்துத் தொடர்ந்தார்.
அதன் பின்பே பிராமணர்,ஐயர், ஐயங்கார் என்ற "ஆணவம்" உணவுத்துறையில் இருந்து அகற்றப்பட்டது. பெரியார் தனது சுயமரியாதை மாநாடுகளில் நாடார் சமைத்த உணவு பரிமாறப்படும் என்றே விளம்பரம் செய்தார்.தொடர்ந்து திக மற்றும் திமுக வின் வளர்ச்சியால் உணவுத்துறையில் சமத்துவத்தை எட்டியது தமிழ்மண்.
இதைத்தான் அடையாறு ஆனந்தபவன் முதலாளி அவர்களும் சுருக்கமாக ஒரே வார்த்தையில் " யார் வேண்டுமானாலும் உணவுத் தொழிலில் ஈடுபடலாம்" என்ற சூழலை உருவாக்கிய பெரியாருக்கு நன்றி" என மனசாட்சியுடன் கூறினார். இதற்குத்தான் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பூணூலிஸ்ட் களும் தாம் தூம் எனக் குதிக்கிறார்கள்.
குதிக்கட்டும் மதுரை முனியாண்டி விலாஸ்களின் கறிதோசை மணமும் , கொத்து புரோட்டா சத்தமும், ஐயர் மெஸ்களின் நெய்தோசை மற்றும் பில்டர் காபிகளை காலி செய்த வலி அவாள்களுக்கு இருக்கத்தானே செய்யும். நன்றாக கதறட்டும்.
A2B யின் வியாபார வெற்றியினால் உருவாகும் அவாள்களின் கதறல் சத்தம் பட்டாசு சப்தங்களை விட பெருமகிழ்ச்சி தரக்கூடியது நமக்கு.
A2B ன் வெற்றி இன்னமும் இது பெரியார் மண் தான் என்பதை டெல்லியை ஆள்பவர்களுக்கும் ,
டெல்லிக்கு கூஜா தூக்குபவர்களுக்கும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கட்டும்!
வாழ்க பெரியார் 💐💐.
தோழர் வினேஷ்பாபு
No comments:
Post a Comment