Saturday, November 30, 2024

கசப்பான உண்மைகள்

படித்ததில் பிடித்தது

😢"கசப்பான உண்மைகள்"😢

1. உடன் பிறந்த சகோதரனோ சகோதரியோ, இனிமேல் நம்மால் ஒரு நையா பைசாவிற்குப் பிரயோஜனம் இல்லையென்றால் தானாக விலகி விடுவார்கள் அல்லது நாம் விலக்கப்படுவோம்.

2, வீட்டிற்கு வந்த மருமகள் உ.யிரை கொடுத்து மாமியாரை பார்த்துக் கொண்டாலும், தன் மாமியார் பெற்ற மகளுக்கு என்றும் ஈடாகவே மாட்டாள் (மருமகளின் பெருமை தான் பெற்ற மகளின் ஒரு சிணுங்கலில் (அ) ஒரு சொட்டுக் கண்ணீரில் கரைந்து விடும்)

3. வயதான பெற்றோர் பெரும்பாலும் வசதியுடன் இருக்கும் மகனிடம் இருக்கவே விரும்புவார்கள்.

4. கொட்டி கொடுத்தாலும் அள்ளி அணைத்தாலும், நம் மனைவியோ குழந்தைகளோ ஒரு குறிப்பிட்ட வயதில் 'எனக்கு அப்படி என்ன செய்து கிழிச்சீங்க?.." என்று கேட்காமல் விட மாட்டார்கள்.

5. 70 வயதுக்கு மேல் வாழாமல் இருப்பது உத்தமம். நான் பார்த்தவரை பெரும்பாலான வயதானவர்கள் நாய்படாத பாடு படுகிறார்கள்.

6. உடன் பிறந்த அண்ணன் தம்பியை தவிர, வேறு எந்த நாயும் அடுத்த வீட்டுப் பெண்களைச் சகோதரிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்த அக்கா மாதிரி, தங்கை மாதிரி எல்லாம் எப்பவுமே நம்பாதீங்க..

7. தோள் கொடுக்கும் உறவுகளை விட, காலை வாரும் உறவுகளே அதிகம். ஒன்று வார்த்தைகளால் அல்லது செயல்களால்.

8. ஒருமுறை பொருளாதாரத்தில் வீழ்ந்த குடும்பம் எவ்வளவு போராடி எழுந்தாலும், நம் உறவினர்கள் அதை முதன்மைப்படுத்திப் பேசாமல் இருக்க மாட்டார்கள். (எப்படியோ கடவுள் அருளால பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தவன் இன்னைக்கு நல்ல நிலைமை'ல இருக்கான்) என்று தான் பேசுவார்கள்.

9. வாழ்க்கையோட சூட்சுமம் புரியும் போது, நமக்கு நடக்க முடியாத அளவுக்கு வயசாகிடும்.. அந்த வயசுல எல்லாம் தெரிஞ்சு எந்தப் பிரயோஜனமும் இல்ல.

10. நாம நல்லா இருக்கணும்னு எந்தச் சொந்தக்காரனும் விரும்ப மாட்டான். (யோசிச்சு பார்த்தா, நாமளும் யாருக்காவது ஒரு சொந்தக்காரனா தான் இருக்கோம்)..

11. முக்கியமா நம்மள பத்தி அதிகமா தப்பா பேசுறது நம்ம அப்பா அம்மா, மேரேஜுக்கு அப்புறம் மனைவி.. வயசான காலத்துல நம்ம பிள்ளைங்க..

No comments:

Post a Comment