Monday, December 30, 2019

பார்பனர்களின் ஆன்மீக வியாபார டர்ன் ஓவர்

Sandy
2019-12-31

பிராமணர்களின் வியாபார தந்திரம்

Business Model
________________________________________

தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8 கோடி அதில் இஸ்லாமியர்கள் 42 லட்சம், கிறிஸ்தவர்கள் 65 லட்சம் ஏறக்குறைய ஒரு கோடியை கழித்துவிட்டால், ஏழுகோடி இந்து மக்களைக் கொண்டது தமிழகம்.

ஏழு கோடி மக்கள் தொகையை நான்கு பேர் கொண்ட குடும்பமாக எடுத்துக்கொண்டால், 1.75 கோடி குடும்பங்களாக எடுத்துக்கொள்ளலாம்.

இதில் கணக்கு கொஞ்சம் ஏறக்குறைய இருக்கும் அது தவிர பணத்தை கூட்டுவதற்கும் பெருக்குவதற்கும் வசதியாக அதை இரண்டு கோடி குடும்பமாக எடுத்துக்கொள்வோம்.

ஆக தமிழகத்தில் இரண்டு கோடி இந்து குடும்பங்கள் இதில் பிராமணர்களையும் சேர்த்து தான் கணக்கிடப்பட்டுள்ளது.

கூகுள் அக்காவின் கூற்றுப்படி 2% மக்களை கொண்ட பார்ப்பன சமூகம், 16 லட்சம் மக்களைக் கொண்டது. இதில் 10 சதவீத மக்கள் தான் கோயிலில் குருக்களாக இருப்பது ஹோமம் செய்வது போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

அப்படிப் பார்த்தால் ஒன்றரை லட்சம் பிராமணர்கள் இந்த வேலையை செய்கின்றனர் அவர்களின் வருமானத்தை கண்டறிவது தான் இந்த முயற்சி.

2 கோடி குடும்பங்கள் vs 1.5 லட்சம் பிராமணர்கள்

அயிஷ ஹோமம்
________________

எப்படியும் ஒரு வீட்டில் இரண்டு குழந்தை பிறக்கும் இரண்டு குழந்தைகள் அயிஷ ஹோமம் செய்வார்கள். இதற்கு குறைந்தது 3 ஆயிரம் வசூல் செய்கிறார்கள். 

2 crores x 3000= 6000 கோடி. (One time expense)

கிரகப்பிரவேசம்
________________

எப்படியும் இரண்டு கோடி குடும்பங்களில் ஒரு கோடி குடும்பம் சின்னதாகவும் பெரியதாகவோ ஒரு சொந்த வீடு வைத்திருப்பார்கள். இந்த ஹோமத்திற்கு அவர்கள் ஐந்தாயிரம் வசூல் செய்கிறார்கள். 

அப்படிப் பார்த்தால்

1 கோடி x 5000 ....5000 கோடி.(One time exp)

தேவசம் மற்றும் காரியம்
__________________________

இரண்டு கோடி குடும்பங்களில் குறைந்தது இரண்டு பேர் தவறி இருப்பார்கள் இந்த காரியத்திற்கு அவர்கள் வசூல் செய்யும் தொகை குறைந்தது ஆயிரம்.

4 கோடி x 1000 = 4000 கோடி (Recurring exp)

கல்யாணம்
____________

எப்படியும் இரண்டு கோடி குடும்பங்களில் இரண்டு திருமணம் கண்டிப்பாக உண்டு அவர்கள் வாங்கும் குறைந்தபட்ச வருமானம் 25,000.

4 கோடி x 25000 = ஒரு லட்ச கோடி (one time)

கணபதி ஹோமம்
__________________

என் வாழ்க்கையில் நானே  6-8 கணபதி ஹோமமும் செய்து இருப்பேன்.

ஒவ்வொரு புது அலுவலகம் மாறும்போது அப்படிப் பார்த்தால் குறைந்தது ஒவ்வொரு குடும்பமும் ஒரு அலுவலகமும் புது வீட்டிற்கு மாறும்போது கணபதி ஹோமம் செய்வார்கள்.

ஒரு குடும்பம் தன் வாழ்நாளில் குறைந்தது நான்கு கணபதிஹோமம் செய்து இருக்கலாம்.

அப்போ 2 கோடி x 4 = 8 கோடி தடவை.

இதற்கு இவர்கள் வசூலிக்கும் தொகை குறைந்தது 5000.

8 கோடி x 5000 = 40 ஆயிரம் கோடி.

கோயில் காணிக்கை
______________________

இருக்கிற மக்கள்தொகையில் சிறிய, ரொம்ப சிறிய, சிறுபான்மை மக்கள் யாரென்றால் இந்த நாத்திகர்கள் தான்.

அவர்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது, ஏனென்றால் அவர்கள் மக்களே கிடையாது.

அப்படிப் பார்த்தால் இந்த 8 கோடி பேரும் கோயிலுக்கு செல்வார்கள், குறைந்தபட்சம் ஆளுக்கு ஒரு ரூபாய் ஒருநாள் விதம் கொடுத்தால், மாதத்திற்கு 30 ரூபாய் ஒவ்வொரு மக்களும் தட்டில் போடுகின்றனர்.

8 கோடி x 30 = 240 கோடி

240 x 12 மாதம் = 2880 கோடி.... கணக்கு பண்ணுவதற்கு வசதியாக 3000 கோடி.

இந்தத் தொகை மிக மிக சொற்ப தொகைதான் இதைவிட குறைந்தபட்சம் ஐம்பதிலிருந்து நூறு சதவீதம் கூடுதலாக தான் இருக்கும், இருந்தாலும் என்னிடம் இருக்கும் கால்குலேட்டர் ரொம்ப சின்னது என்பதால் இதற்கு மேல் போக வேண்டாம் என்று நினைக்கிறேன்.

இது தவிர 400 விதமான ஹோமங்கள் இருக்கின்றன.... அதற்கு குறைந்த பட்சமாக 20 ஆயிரம் கோடிகள் சேர்த்துக் கொள்ளப்படுகிறது

Aiysha homam.             6000 crores
House warming.            5000 crores
Devasam.                       4000 "
Ganapathi homam.     40000 "
400 other homam.      20000
Koil thattu.                      3000
Marriage.                    100000

ஒரு லட்சம் மற்றும் 78 ஆயிரம் கோடி...இதில் 70 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பதால் இவர்கள் இந்த செலவு செய்ய மாட்டார்கள்.

இதில் 40,000 குறைத்துக் கொண்டாலும் ஒரு லட்சத்தி 38 ஆயிரம் கோடி....

அடப் போங்கப்பா எனக்கு தலையே சுற்றுகிறது இத்தனைக்கும் இந்த வருமானத்திற்கு வரி கிடையாது.

ஒரு லட்சத்து 38 ஆயிரம் கோடியை ஒன்றரை லட்சம் மக்களாக வகுத்தால், ஒரு நபர் எவ்வளவு சம்பாதிக்கிறார் எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்.

புலனாய்வு உதவி... Krishnavel T S

https://m.facebook.com/story.php?story_fbid=3091079694239497&id=100000124904448

பிராமணர்களின் ஆன்மீக வியாபார டர்ன் ஓவர்

Sandy
2019-12-31


https://m.facebook.com/story.php?story_fbid=3091079694239497&id=100000124904448

"அல்லாஹு அக்பர்!" எனும் பூரண விடுதலை முழக்கம்

உவைஸ் அகமது
2019-12-30

"அல்லாஹு அக்பர்!" எனும் பூரண விடுதலை முழக்கம்

எவ்வவகைப் போராட்டங்களை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் எழுப்பப்படும் முழக்கங்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. குறியீட்டுரீதியில் மட்டும் இல்லை; மிகவும் பொருண்மையான, பருண்மையான பொருளிலேயே முழக்கங்கள் முக்கியமானவை. போராடுபவர்களின் மன உறுதியை, உலகக் கண்ணோட்டத்தை, போராட்டத்தின் திசைநெறியைச் சுட்டுபவை அவை.

இன்குலாப் ஜிந்தாபாத், ஆஸாதி, புரட்சி ஓங்குக, ஜெய் பீம், கம்யூனிசமே வெல்லும், தமிழ் வாழ்க எனப் பலவகைக் கோஷங்கள் முன்பும் இப்போதும் எழுப்பப்படுகின்றன. எதிர்மறையில் ஃபாசிசம் ஒழிக, பார்ப்பனியப் பயங்கரவாதம் ஒழிக, இந்துத்துவம் ஒழிக என்றும் முழக்கங்கள் எழுப்பப்படுவதுண்டு. இவை ஒரு வகை.

பிறரை இழிவுசெய்யும், ஆதிக்கம் செய்யும் நோக்கில் எழுப்பப்படும் இரண்டாம் வகைக் கோஷங்களும் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணிக் கும்பல்களின் (சொல்ல நாகூசும்) கோஷங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இதில் 'அல்லாஹு அக்பர்!' என்ற முழக்கம் எவ்வகையில் சேரும்? இதை முழங்கும் முஸ்லிம்கள் பொருள்கொள்வது என்ன? முஸ்லிம் அல்லாதோர் பலருக்கு இதுபற்றி பெரும் மயக்கம் நிலவுகிறது. குறைந்தபட்சமாக, 'இது ஒரு மதவாதக் கோஷம்; எனவே, தவிர்க்கப்பட வேண்டும்' என்பதே பெரும்பான்மை அபிப்பிராயமாக நிலவுகிறது.

இன்று நேற்றல்ல, வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களின் போராட்ட முழக்கமாக இதுவே இருந்து வந்துள்ளது, இனியும் அப்படியே நீடிக்கும். வலுவான நிலையில் இருந்தாலும் வலுக்குன்றிய நிலையில் இருந்தாலும் இம்முழக்கம் மட்டும் மாறுவதில்லை. "அல்லாஹு அக்பர்!" எனும் சொற்கள் வழி முஸ்லிம்கள் மனம்கொள்வது என்ன என்று விளங்கிக் கொண்டால் குழப்பம் தீரும். இதுவொரு மதவாதக் கோஷமோ, பிரிவினைக் கோஷமோ அல்ல; உண்மையில் அனைவருக்குமான பரிபூரண விடுதலைக் கோஷம் என்பது தெள்ளென விளங்கும்.

"அல்லாஹு அக்பர். இறைவனே மிகவும் பெரியவன். நாங்கள் அஞ்சுவதற்கும் அடிபணிவதற்கும் உரியவன் அவன்  ஒருவனே. உலகின் வேறெல்லாச் சக்திகளும் அற்பமானவையே. அவனன்றி எச்சக்தியின் முன்பும் நாங்கள் மண்டியிட மாட்டோம். எதுவரினும் எவர் முன்னும் எங்கள் சிரம் தாழாது. அடக்கியாள, ஆதிக்கம் செலுத்த எண்ணும் எவரையும் நாங்கள் துச்சமாகவே மதிப்போம். எம்மை இழிவுசெய்திடவோ, அடிமைப்படுத்திடவோ எவரையும் அனுமதியோம். இம்மண்ணில் நாங்கள் சுதந்திரமாகவே பிறந்தோம். சுதந்திரவான்களாகவே சாவைத் தழுவுவோம்."

இதுதான் அம்முழக்கத்தின் சாரம். 

இதில் ஆதிக்க மனப்பான்மையோ, பிறர் குறித்த இழிதொனியோ, பிரிவினைப் பாங்கோ, மதவெறியோ இருக்கிறது எனப் புத்தி சுவாதீனமுள்ள எவரும் சொல்ல முடியுமா?

இறைவனின் இருப்பை மறுக்கும் நாத்திகர் சிலருக்கு மேற்சொன்னதன் முதற்பகுதி உவப்பாய் இல்லாமலிருக்கலாம். பூரண விடுதலையைப் பிரகடனம் செய்யும் பிற்பகுதிபற்றி அவர்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இருக்க முடியாது. ஒட்டுமொத்த முழக்கத்தையும் மதவாத, மதவெறிக் கோஷம் என்று ஒதுக்கிவிட முடியாது. 

உதாரணத்திற்கு, மார்க்சியர்கள் பலருக்கு அம்பேத்கரின் கருத்துகள் பலவற்றுடனும் உடன்பாடு இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் அதிமுக்கியமான பல்வேறு விஷயங்களில் அடிப்படை நோக்கிலேயே அவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் உண்டு. எனினும், ஒருமித்த குரலில் "ஜெய் பீம்" என்று முழங்குவதில் அவை தடையாக வந்து நிற்பதில்லை. அதையே "அல்லாஹு அக்பர்!" என்ற கோஷத்திற்குப் பொருத்திப் பாருங்கள். "உலகின் எந்தச் சக்திக்கும் அடிபணிய மாட்டோம்!" என்ற அந்த முழக்கத்தை ஏற்பதில் உள்ள மனத்தடை அகலலாம். 
அகலவில்லை என்றாலும் பரவாயில்லை. கொச்சைப் படுத்துவதையாவது நிறுத்துங்கள். 

எது எப்படியாயினும், இந்த உலகம் உள்ளளவும் முஸ்லிம்கள் தங்களுடைய எல்லாப் போராட்டக் களங்களிலும் இந்த most perfect, most revolutionary, most liberating, most poetic முழக்கத்தை எதிரொலிக்கச் செய்துகொண்டுதான் இருப்பார்கள். விரும்பாதோர் காதில் பஞ்சை அடைத்துக் கொள்ளவும்!

https://m.facebook.com/story.php?story_fbid=3411211125587221&id=100000951015971

Friday, December 27, 2019

குவாண்டம் துகள்களின் செயற்பாடுகள்

Raj Siva
2019-12-28

குவாண்டம் துகள்களின் செயற்பாடுகள், பல நிலைகளில் இயற்பியல் விதிகளுக்குக் கட்டுப்படாதவை. அதில் ஒன்றுதான் ‘குவாண்டம் என்டாங்கிள்மென்ட்’ என்று சொல்லப்படும் ‘நுண்துகள் பின்னல்’. இதுபற்றி அலுக்க அலுக்கப் பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். ஆனால், நிச்சயம் அதை மறந்துபோய் இருப்பீர்கள். 

அணுவின் அடிப்படைத் துகள்கள் இரண்டை, ஒன்றுடன் ஒன்று காதலன் காதலிபோலப் பிணைத்து வைத்துப் பின்னர் பிரித்தெடுத்து, ஒன்றை ஓர் இடத்திலும், மற்றதை இந்த அண்டத்தில் வேறு எந்த இடத்திலாவது வைத்துவிட்டு, ஒருவரின் இடுப்பில் கிச்சுக் கிச்சு மூட்டினீர்களாயின், எங்கோ இருக்கும் மற்றவர் தன் இடுப்பை அந்தக் கணமே அசைப்பார். இருவருக்குமான இடைவெளி எத்தனை ஒளியாண்டுகளாக இருந்தாலும், இவர் இடுப்பாட்டும் தகவல் அந்தக் கணத்திலேயே அடுத்தவருக்குத் தெரிந்துவிடும். 

இந்தத் தகவல் பரிமாற்ற வேகம், ஒளியின் வேகத்தைவிடப் பல மடங்குகள் அதிகமானது. இயற்பியல் விதிகளில் இது சாத்தியமே இல்லாதது. “அடப் போங்கடா! இந்த விதிகளெல்லாம் உங்களுக்குத்தான். எங்களுக்கில்லை” என்று சொல்லிச் சிரிக்கின்றன குவாண்டம் துகள்கள். இந்தக் குவாண்டம்  என்டாங்கிள்மென்ட் பற்றி எத்தனை தடைவைதான் சொல்லியிருப்பேன். முருகா...!

குவாண்டம் எண்டாங்கிள்மெண்டை அடிப்படையாக வைத்துப் பல பரிசோதனைகள் கடந்த தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றன. அவற்றில் குவாண்டம் டெலிபோர்டேசன் (quantum teleportation) என்பது மிகமுக்கியமானது. குவாண்டம் நிலைத் தகவல்களை, ஒரு இடத்திலிருந்து தொலைவிலிருக்கும் வேறோர் இடத்திற்கு, அதே கணத்தில் அனுப்பி வைப்பது. 

இதைக் குவாண்டம் கணணி (quantum computers) மற்றும் குவாண்டம் இணையத்தளம் (quantum internet) ஆகியவற்றில் பயன்படுத்துவதற்காக ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்று அதற்கான மாபெரும் சாத்தியக் கதவு உடைத்துத் திறக்கப்பட்டிருக்கிறது.

டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும், பிரிஸ்டல் பல்கலைக்கழகமும், வெவ்வேறு இடங்களில் இருக்கும் இரண்டு கணணிகளின் சிப்களுக்கிடையே (Computer chips), தகவல்களைப் பரிமாறியிருக்கின்றனர். இந்தக் கணணிகள் எந்த வகையிலும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாதவை என்பது இங்கு முக்கியமானது. 

நான் மேலே சொன்ன குவாண்டம் என்டாங்கிள்மென்ட் மூலமாக இந்தத் தகவல் பாய்ச்சல் நடந்திருக்கிறது. அதாவது, கால இடைவெளியற்ற அதே கணத்தில். இந்த இரண்டு கணணிகளும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்னும் பேச்சுக்கு, இங்கு அர்த்தமே கிடையாது. 

முதலில் ஒரே அறையில் தகவலைப் பரிமாறிப் பரிசோதித்தார்கள். பின்னர் 25 கிமீ தூர இடைவெளியில் பரிசோதித்தார்கள். அப்புறம் 100 கிமீ நகர்த்திப் பின்னர் 1200 கிமீ இடைவெளியில் தகவலைப் பரிமாறிப் பரிசோதனை செய்து வெற்றி கண்டிருக்கிறார்கள். எல்லாத் தொலைவிலும் பரிமாற்ற நேரம் பூச்சியம். 

ஐன்ஸ்டைன் காலிடறி, ‘இதுவொரு spooky action’ என்று வர்ணித்த குவாண்டம் எண்டாங்கிள்மெண்டை, கணணிகளில் நிஜமாக்கியிருக்கிறார்கள். குவாண்டம் கணணிகளின் ஆராய்ச்சியில் இன்னும் பல மைல் கற்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது. ஆனால், பெருவெளியின் முதல் வாசல் திறக்கப்பட்டுவிட்டது.

கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா?

*கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தார் என்ற முட்டாள்தனமான குற்றச்சாட்டை மறுத்து தியாகு தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு:*

கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?

இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய முத்துராம லிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார்.

கீழ்வெண்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்' சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி ‘விடுதலை’ சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியால சாதிக்க முடியாததை, அவர்கள் இவ்வளவு காலம் போராடியும் செய்யமுடியாததை இராஜாஜி ஆட்சி காலத்தில் பெரியார் செய்தார். அது `தஞ்சை ஜில்லா பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்` . அன்று பண்ணையாளுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. ஒரு நாள் காலையில் வேலைக்கு போனால் மறுநாள் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். வேலைக்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. அப்படி வேலை திடீரென மறுக்கப்பட்டால் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று அந்த சட்டம் உறுதி செய்தது. அது ஒரு பெரிய பாதுகாப்பாக பண்ணையாளுக்கு வந்தது. அது பெரியாரின் கோரிக்கையால், திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்தால் கிடைத்தது.

டிசம்பர் 25, 1968 இரவு கீழ்வெண்மணியில் கலவரம் நடந்தது 44 பேர் உயிரோடுக் கொளுத்தப்பட்ட போது பெரியார் உடல் நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்துவந்தாரென்பது டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் ஆசிரியர்

கி. வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக அறியப்படுகிறது. எனவே உடனடியாக பெரியார் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. ஆனால் பிறகு ‘கீழ்வெண்மணியைத் தடுப்பது எப்படி?’ என்றத் தலைப்பில் இரண்டு அறிக்கைகளை எழுதினார். 12.1.1969 அன்று செம்பனார் கோவிலில் நடந்த கூட்டத்தில் கீழ்வெண்மணி கலவரம் பற்றி பேசுகிறார். பொதுவாக கூலி உயர்வுப் போராட்டங்களை பெரியார் ஆதரிக்கவில்லை. தொழிலாளர்கள் பங்குதாரர்கள் ஆவதுதான் முக்கியம் என்பதே பெரியாரின் நிலைப்பாடு.

“எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல், ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள்.  அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்க வேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம் கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித்தகராறு என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்” (குடிஅரசு 01.10.1933).

"நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படிச் செய்ய வேண்டும்” - “(பகுத்தறிவு - 2.12.1934)

"முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்" -1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானம்.

இந்த அடிப்படையிலேதான் போராட்டத்தை முன்னிருந்து நடத்திய கம்யுனிஸ்ட் கட்சியை விமர்சித்தார். இருந்தாலும் திராவிடர் கழகத்தினரும், கம்யுனிஸ்ட் கட்சியினரும் கீழ்வெண்மணி மக்களுடன் தொடர்ந்து இயங்கி வந்தனர். இது தொடர்பான சட்ட நடவடிக்கைக்குப் போராடி வந்தனர்.

கலவரத்தைப் பற்றி விசாரிக்க தனி நபர் கமிஷன் போட்டிருந்தார் அன்றைய முதல்வர் அண்ணா. அதற்கு கணபதியா பிள்ளை கமிஷன் என்று பெயர். திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நிறைய தோழர்கள் சாட்சியம் சொன்னார்கள்.

கீழ்வெண்மணியை சார்ந்த முனியன் என்பவர் கீவளூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற எண்:327/68ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கோபால கிருஷ்ண நாயுடு உட்பட 106-பேரை காவல் துறை கைது செய்தது. கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 1970-இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ணா 10-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார்.

இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண நாயுடு சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4-வருடங்கள் 3-மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975-ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன் கோபால கிருஷ்ண நாயுடு மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

கவனிக்க: பெரியார் 1973 டிசம்பரில் இறந்துவிட்டார். அவருக்கு கோபால கிருஷ்ண நாயுடு கீழ் நீதி மன்றத்தில் தண்டனை பெற்றதும், மேல் முறையீடு செய்ததும், ஜாமீனில் வெளி வந்ததும் மட்டுமே தெரியும். மேல் முறையீட்டு விடுதலை அவரின் மறைவுக்குப் பின். எனவே கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு அவர் ஆதரவளித்தாகச் சொல்வது எங்குமே பொருந்தாது. இன்னொரு முக்கிய விசயம். ஜாமீனில் வெளிவந்த கோபால கிருஷ்ணன் கீவளூர் வந்திருந்த பெரியாரை சந்திக்க முயன்ற போது பெரியார் “ என் கிட்ட என்ன சொல்ல நினைக்கிறாரோ அத கோர்ட்ல சொல்லச் சொல்லு. அவரையெல்லாம் பார்க்கவே பிடிக்கலை. அவரை கண்ணாலே பார்க்க விருப்பமில்லை. போ. போ. போகச் சொல்லு” எனக் கூறி சந்திக்க மறுத்து விட்டார். இதை கணபதியா கமிசனில் சாட்சியம் அளித்த நாகை எஸ்.எஸ்.பாட்சா பதிவு செய்துள்ளார்.

கோபால கிருஷ்ண நாயுடு விடுதலை ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு தியாகிகள் நினைவிடத்திற்கு அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைத் தொடர்பாக காவல் துறை 12 பேரைக் கைது செய்தது. அதில் 9 பேர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் கைதான ‘காவலாக்குடி மதி' இன்னும் உயிரோடு இருக்கிறார். குடந்தை ஆ.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால்தான் வழக்கில் கைது செய்யப்பட்ட திராவிடர் கழக இளைஞர்களுக்காக நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும்,சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்குகளை நடத்தி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆக, கலவரத்திற்கு முன்பும், பின்பும் திராவிடர் கழகமும், பெரியாரும் ஒரு போதும் ஆதிக்கச் சாதியினர்க்கு ஆதரவாக இல்லை !

Wednesday, December 25, 2019

கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா?

*கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தார் என்ற முட்டாள்தனமான குற்றச்சாட்டை மறுத்து தியாகு தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு:*

கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?

இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய முத்துராம லிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார்.

கீழ்வெண்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்' சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி ‘விடுதலை’ சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியால சாதிக்க முடியாததை, அவர்கள் இவ்வளவு காலம் போராடியும் செய்யமுடியாததை இராஜாஜி ஆட்சி காலத்தில் பெரியார் செய்தார். அது `தஞ்சை ஜில்லா பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்` . அன்று பண்ணையாளுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. ஒரு நாள் காலையில் வேலைக்கு போனால் மறுநாள் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். வேலைக்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. அப்படி வேலை திடீரென மறுக்கப்பட்டால் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று அந்த சட்டம் உறுதி செய்தது. அது ஒரு பெரிய பாதுகாப்பாக பண்ணையாளுக்கு வந்தது. அது பெரியாரின் கோரிக்கையால், திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்தால் கிடைத்தது.

டிசம்பர் 25, 1968 இரவு கீழ்வெண்மணியில் கலவரம் நடந்தது 44 பேர் உயிரோடுக் கொளுத்தப்பட்ட போது பெரியார் உடல் நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்துவந்தாரென்பது டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் ஆசிரியர்

கி. வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக அறியப்படுகிறது. எனவே உடனடியாக பெரியார் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. ஆனால் பிறகு ‘கீழ்வெண்மணியைத் தடுப்பது எப்படி?’ என்றத் தலைப்பில் இரண்டு அறிக்கைகளை எழுதினார். 12.1.1969 அன்று செம்பனார் கோவிலில் நடந்த கூட்டத்தில் கீழ்வெண்மணி கலவரம் பற்றி பேசுகிறார். பொதுவாக கூலி உயர்வுப் போராட்டங்களை பெரியார் ஆதரிக்கவில்லை. தொழிலாளர்கள் பங்குதாரர்கள் ஆவதுதான் முக்கியம் என்பதே பெரியாரின் நிலைப்பாடு.

“எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல், ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள்.  அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்க வேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம் கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித்தகராறு என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்” (குடிஅரசு 01.10.1933).

"நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படிச் செய்ய வேண்டும்” - “(பகுத்தறிவு - 2.12.1934)

"முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்" -1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானம்.

இந்த அடிப்படையிலேதான் போராட்டத்தை முன்னிருந்து நடத்திய கம்யுனிஸ்ட் கட்சியை விமர்சித்தார். இருந்தாலும் திராவிடர் கழகத்தினரும், கம்யுனிஸ்ட் கட்சியினரும் கீழ்வெண்மணி மக்களுடன் தொடர்ந்து இயங்கி வந்தனர். இது தொடர்பான சட்ட நடவடிக்கைக்குப் போராடி வந்தனர்.

கலவரத்தைப் பற்றி விசாரிக்க தனி நபர் கமிஷன் போட்டிருந்தார் அன்றைய முதல்வர் அண்ணா. அதற்கு கணபதியா பிள்ளை கமிஷன் என்று பெயர். திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நிறைய தோழர்கள் சாட்சியம் சொன்னார்கள்.

கீழ்வெண்மணியை சார்ந்த முனியன் என்பவர் கீவளூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற எண்:327/68ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கோபால கிருஷ்ண நாயுடு உட்பட 106-பேரை காவல் துறை கைது செய்தது. கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 1970-இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ணா 10-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார்.

இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண நாயுடு சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4-வருடங்கள் 3-மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975-ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன் கோபால கிருஷ்ண நாயுடு மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

கவனிக்க: பெரியார் 1973 டிசம்பரில் இறந்துவிட்டார். அவருக்கு கோபால கிருஷ்ண நாயுடு கீழ் நீதி மன்றத்தில் தண்டனை பெற்றதும், மேல் முறையீடு செய்ததும், ஜாமீனில் வெளி வந்ததும் மட்டுமே தெரியும். மேல் முறையீட்டு விடுதலை அவரின் மறைவுக்குப் பின். எனவே கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு அவர் ஆதரவளித்தாகச் சொல்வது எங்குமே பொருந்தாது. இன்னொரு முக்கிய விசயம். ஜாமீனில் வெளிவந்த கோபால கிருஷ்ணன் கீவளூர் வந்திருந்த பெரியாரை சந்திக்க முயன்ற போது பெரியார் “ என் கிட்ட என்ன சொல்ல நினைக்கிறாரோ அத கோர்ட்ல சொல்லச் சொல்லு. அவரையெல்லாம் பார்க்கவே பிடிக்கலை. அவரை கண்ணாலே பார்க்க விருப்பமில்லை. போ. போ. போகச் சொல்லு” எனக் கூறி சந்திக்க மறுத்து விட்டார். இதை கணபதியா கமிசனில் சாட்சியம் அளித்த நாகை எஸ்.எஸ்.பாட்சா பதிவு செய்துள்ளார்.

கோபால கிருஷ்ண நாயுடு விடுதலை ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு தியாகிகள் நினைவிடத்திற்கு அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைத் தொடர்பாக காவல் துறை 12 பேரைக் கைது செய்தது. அதில் 9 பேர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் கைதான ‘காவலாக்குடி மதி' இன்னும் உயிரோடு இருக்கிறார். குடந்தை ஆ.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால்தான் வழக்கில் கைது செய்யப்பட்ட திராவிடர் கழக இளைஞர்களுக்காக நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும்,சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்குகளை நடத்தி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆக, கலவரத்திற்கு முன்பும், பின்பும் திராவிடர் கழகமும், பெரியாரும் ஒரு போதும் ஆதிக்கச் சாதியினர்க்கு ஆதரவாக இல்லை !

Tuesday, December 24, 2019

பெரியாரின் தேசிய இன விடுதலைப் பார்வை

ஆழி செந்தில்நாதன் 
2019-12-24


பெரியாரை நினைவேந்தும் நேரத்தில் நீங்கள் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை,

பெரியாரின் தேசிய இன விடுதலைப் பார்வை   

ஆழி செந்தில்நாதன்

நாம் பெரியார் என்று பேசும்போது பெரும்பாலும் அவரது சமூக நீதி, பகுத்தறிவு, பார்ப்பனீய எதிர்ப்பு, பெண்விடுதலை போன்ற கருத்துகள் பற்றித்தான் அதிகம் பேசுகிறோம். அவரது வாழ்க்கையின் சேதி சமூக நீதிதான். சமூக நீதியை வென்றெடுக்கும்பொருட்டே அவர் சாதியை ஒழிக்கவேண்டும் என்றும் மதங்களை சாய்க்கவேண்டும் என்றும் கடவுள் என்கிற மாயையை நீக்கவேண்டும் என்றும் பேசியும் போராடியும் வந்தார்.

இந்தச் சமூகநீதிக்கானப் போராட்டத்தை இறுதிநாள் வரை தொடர்ந்துவந்த பெரியார் தமிழ்நாட்டின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தார் என்பதும் நாம் அறிந்ததுதான். சுயமரியாதை இயக்க காலத்திலிருந்து அவரது இறுதி சொற்பொழிவுவரை தமிழ்நாட்டை விடுதலை செய்வது என்பது அவரது கோரிக்கையாக இருந்துவந்தது. அந்த விடுதலைக்கோரிக்கையின் அடிப்படையும் சமூகநீதியே என்பதுதான் பெரியாரியப் பார்வை. 
அனைவரும் சமம் என்கிற நோக்கிலிருந்தே பெரியாரின் அனைத்து அரசியல் முடிவுகளும் உருவாகியுள்ளன. தேசிய இனப் பிரச்சினை என்பதும் இனம் அல்லது தேசியம் சார்ந்து சமத்துவத்தைக் கோருவது. மொழி உள்ளிட்ட அடையாள உரிமைகள், பொருளாதாரம், இயற்கை வளம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றுக்கான போராட்டமாகவே பெரிதும் புரிந்துகொள்ளப்படும் தேசிய இனச் சிக்கலுக்கு, பெரியார் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்தார். அதாவது, இன்றைய நவீன அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் கூறினால், இந்தியாவில் தேசியஇனப் பிரச்சினை குறித்த பார்வையில், சமூக நீதி என்ற ஒரு காரணியை பெரியார்தான் நுழைத்திருக்கிறார்.

ஏன் வேண்டும் தமிழ்நாட்டு விடுதலை, அல்லது இந்தியா ஏன் பல்வேறு தேசங்களாக ஆகவேண்டும் என்பதற்கு தேசிய இன உரிமைகளுக்காகப் போராடும் தேசியவாதிகளும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை ஏற்கும் மார்க்சியர்களும் பல காரணங்களை முன்மொழிவார்கள். ஆனால் பெரியார் ஒரு கூடுதல் காரணத்தையும் முன்மொழிந்தார். இந்தியா என்றால் அது பார்ப்பன – பனியா மேலாதிக்க நாடாகத்தான் இருக்கும், ஒருபோதும் அது சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் இழிவுபடுத்தப்படுகிற மக்களின் ஆட்சியாக இருக்காது என்பது அவரது உறுதியானக் கருத்து. 

எனவே இந்தியாவிலுள்ள மக்கள் – ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் – முழுமையான அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்றால் இந்தியாவே பல தேசங்களாகப் பிரிக்கப்படவேண்டும் என்பதுதான் அவரது கருத்து. 

ஆனால் அண்மைக்காலமாக, ஏன் 1990களிலிருந்தே, இங்கே பெரியாரியம் என்கிற கோட்பாடாக முன்வைக்கப்பட்டவற்றில், பெரியாரின் இந்தக் கருத்துப் பற்றி அதிகம் பேசாப்படமால் வந்திருப்பதையும் நாம் காணமுடிகிறது. பெரியாரியத்தை ஏற்பவர்கள், மறுப்பவர்கள் என இருதரப்பினரிடமும் இதில் தடுமாறுகிறார்கள்.

தேசிய இனப் பிரச்சினையில் பெரியாரிய பார்வை என்ற ஒன்று தெளிவாக துலக்கமுறாமல் போனது ஏன் என்று ஆராய்ந்துபார்க்கவேண்டும். அது குறித்து விவாதிக்கும் பொருட்டு, ஒரு குறிப்பிட்ட எடுத்துக்காட்டை முன்வைத்துப் பேசலாம். தோழர்கள் எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா இணைந்து எழுதிய பெரியார்: சுயமரியாதை சமதர்மம் என்கிற புகழ்பெற்ற நூலில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது:

“திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தப் பெரியாரும் அவரது இயக்கத்தினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளை, காங்கிரஸ் தேசியவாதிகள், கம்யூனிஸ்ட் தேசியவாதிகள் முதலியோரின் எதிர்ப்புகள், பெரியாருக்கு கிடைத்த வரலாற்று வாய்ப்புகள், அவர் செய்தவை, செய்யத் தவறியவை ஆகியன பற்றி ஆய்வுக்கு இந்நூல் இடங்கொடுக்காது,. சென்னை மாநிலம் பிரிக்கப்படுவதற்கு ராஜாஜியின் ஒத்துழைத்துழைப்பை நாடியிருந்திருக்கலாம் என்று சிலர் கூறிவருவதால், பெரியார் விரும்பிய சென்னை மாநிலம் (அல்லது திராவிட நாடு/தமிழ்நாடு) பார்ப்பனராதிக்கத்துக்குட்படாத ஒரு நாடு என்பதை மட்டும் இங்குக் குறிப்பிட வேண்டியுள்ளது. பார்ப்பனாதிக்கமே தனி சென்னை மாநிலத்திலும் இருக்குமானால், அதற்குப் பதிலாக இந்தியாவிலே இருந்துவிடலாம் என்றுதான் பெரியார் கருதியிருப்பார்” (பக்கம் 717, பெரியார்: சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா).

பெரியாரின் திராவிட நாடு கோரிக்கை, கிரிப்ஸ் தூதுக்குழுவிடம் பெரியார் உள்ளிட்டோர் பேசியது உள்ளிட்டவை குறித்து இந்த நூல் விரிவாகப் பேசத்தான் செய்கிறது. ஆனால் இவ்விவகாரம் குறித்து மிகவிரிவாக பேச இடமில்லை என்று எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா குறிப்பிட்டிருப்பதையும் ஏற்றுக்கொள்வோம்.

ஆனால், பார்ப்பனராதிக்கத்துக்கு உட்பட்ட ஒரு நாடாக திராவிட நாடு இருக்கும் என்கிற நிலை வருமானால், அதை பெரியார் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்; அதைவிட இந்தியாவிலேயே இருந்துவிடலாம் என்றே கருதியிருப்பார் என தன்னுடையக் கருத்தாக எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா இங்கே குறிப்பிட்டிருப்பதுதான் நம் கவனத்தை ஈர்க்கிறது.
அது ஆச்சரியமாகவும் இருக்கிறது. ஏனென்றால் உண்மை வேறு மாதிரியாக இருந்திருக்கிறது! 

பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு அரசியல் என்பது ஒருபோதும் நெகிழாத, எப்போதும் தாழாத, என்றென்றைக்குமான உறுதியான ஒன்றுதான். நான் விஸ்தீரணத்துக்காக போராடுகிறவன் அல்ல, சமூக விடுதலைக்காக போராடுகிறவன் என்றும்கூட பெரியார் கூறியிருக்கிறார்.  ஒரு பிடி மண்ணாக இருந்தாலும் அது சமூகநீதி நிலவும் மண்ணாக இருக்கவேண்டும் என்பதுதான் அவரது சிந்தனை. ஆனால் சில சமயம் அவரது கனவு தேசமும் நிஜ தேசமும் முரண்படும்போது, நிஜத்தையே பிரதிபலிக்கிறார், 

விடுதலை குறித்த பெரியாரின் கருத்துகளை முழுமையாக அறிந்திருக்கும் யாரும் எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா வந்திருக்கும் இந்த முடிவுக்கு வரமாட்டார்கள். இந்த ஆய்வாளர்களும் பெரியார் “கருதினார்” என்று உத்தரவாதமாகச் சொல்லாமல், “கருதியிருப்பார்” என்று யூகமாகவே சொல்கிறார்கள்.

பெரியாரை ஒரு மிகப்பெரிய அரசியல் ஆசானாக ஆக்கியதில் எஸ்.வி. ராஜதுரை, வ. கீதாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பெரியாரை இடதுசாரிகளும் பிற நவீன ஆய்வாளர்களும் காத்திரமாக கருத்திலெடுத்துக்கொள்வதற்கான மிகமுக்கிய பங்கினை ஆற்றியவர்கள் இருவரும். அந்த நன்றியறிதலுடனேயே இந்த விமர்சனத்தை நான் வைக்கிறேன். பெரியாரின், ஏன் திராவிட இயக்கத்தின், தேசிய இன விடுதலை அரசியல் பார்வைகள் குறித்து அவர்கள் சற்றே கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கவேண்டும். 

“பார்ப்பனராதிக்கத்துக்குட்பட்ட சென்னை” என்பதை பெரியார் விரும்பியிருக்க மாட்டார்தான் என்ன்பதில் ஐயமில்லை. ஆனால் பெரியார் என்னதான் “கருதியிருப்பார்?”
அதற்கான விடை 1960களில் இருக்கிறது. 1960 மே மாதம் பெரியார் அன்றைய நாம் தமிழர் கட்சித் தலைவர் சி பா ஆதித்தனாரோடு இணைந்து சுதந்தரத் தமிழ்நாட்டைக் கோரியும் தமிழ்நாடு நீங்கலான இந்திய வரைபடத்தை கொளுத்தவேண்டும் என்று அறைகூவல் விடுத்தும் ஓர் இயக்கம் நடத்துகிறார். ஈரோடு, தஞ்சை. திருவையாறு, திருப்பத்தூர் என பல நகரங்களில் கூட்டங்களில் கலந்துகொண்டு இக்கோரிக்கையை வலியுறுத்தி, ஏன் சுதந்தர நாடு வேண்டும் என்று பேசுகிறார். 1956 மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு திராவிடநாட்டுக் கோரிக்கையை கைவிட்டுவிட்ட பெரியார், தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கைக்காக போராடுவதாக அறிவிக்கிறார். பல கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், கோரிக்கை உடன்பாட்டைக் கருதி ஆதித்தனாரோடு இணைந்து இயக்கம் காண்பதாகவும் கூறுகிறார்.
இது ஒரு இனப் போராட்டம் என்கிறார் பெரியார். “நமது சமுதாய இழிவு நீங்கவே இன்றைக்கு நாடு பிரியவேண்டும்; விடுதலை அடையவேண்டும் என்பதாக நாங்கள் சொல்லுகிறோம் என்றால் அது ஏதோ அரசியல் காரணத்துக்காக சொல்லுகிறோம் என்று நீங்கள் நினைக்கக்கூடாது. பணத்தை அவன் கொள்ளையடித்துக்கொண்டு போய்விடுகிறானே என்பதுகூட முக்கியமல்ல, பின்னே எதற்காக என்றால், சமுதாய நோக்கத்துக்காகத்தான் நாடு பிரியவேண்டும் என்று கேட்கிறோம். 3000 ஆண்டுகளாக இருந்துவருகிற பிறவி இழிவு அவமானம் நம்மைவிட்டு ஒழியவேண்டும் என்றால் நமக்கு இதைத்தவிர வேறு வழியே கிடையாது” என்பதுதான் பெரியாரின் பார்வை (சுதந்தரத் தமிழ்நாடு ஏன்? – பெரியார் ஈவெரா, பக்கம் 32). 

நம் நாட்டை நாம்தான் ஆளவேண்டும், நமது மொழிக்காரன், இனத்தவன் அல்லாமல் வேறு யாரும் ஆளக்கூடாது என்றெல்லாம் கூறும் பெரியார் அவரது பேச்சுகளினூடாக இரண்டு இடத்தில் ஆச்சரியப்படத்தக்க ஒரு கருத்தைக் கூறுகிறார். எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா ஆகியோரின் யூகத்துக்கு அது பதிலாக இருக்கிறது.

முதலாவது, 1960 மே 22 இல் ஈரோட்டில் பேசியது): “நம் நாட்டை நாம் ஆளவேண்டும் என்று கேட்பதற்குக்கூட நாதி இல்லையே? நம் நாட்டு ஆதிக்கம் நமக்கு வரவேண்டும் என்று கேட்கிறோம் என்றால், ஆட்சி நம் கைக்கு வரவேண்டிய அவசியம்கூட இல்லை. நம் நாடு பிரிந்து அதிகாரம் பார்ப்பான் கையிலிருந்தால்கூட பரவாயில்லை. டெல்லி ஆதிக்கம் போச்சு என்று தெரிந்தால் அப்புறம் பார்ப்பனர்களெல்லாம் நாம் சொன்னபடி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்! ‘சோத்துக்கில்லாத பார்ப்பான் சொன்னபடியெல்லாம் கேட்பான்’. பிறகு நம் இஷ்டப்படி நாம் பார்ப்பானிடம் வேலைவாங்கமுடியும்.” (சுதந்தரத் தமிழ்நாடு ஏன்? – பெரியார் ஈவெரா, பக்கம் 17, தோழமை வெளியீடு)
இரண்டாவது, இந்திய வரைபடம் எரிப்பு தொடர்பாக தஞ்சை, திருவையாறு, திருப்பத்தூர் போன்ற நகரங்களில் பேசியதிலிருந்து தொகுத்ததிலிருந்து:
“இந்த நாடு சுதந்தரமான நாடான நிலையில் பார்ப்பான் ஆண்டால்கூட பரவாயில்லை. அவனுக்கு இந்த நாட்டின்மீது பற்று இருக்குமானால் சரி. ஏன், இந்த இராஜகோபாலாச்சாரியே வேண்டுமானாலும் ஆளட்டுமே! அப்போது இன்றைய தினம் வடநாட்டு அரசாங்கத்தில் பார்ப்பான் எஜமானானாகவே இருந்து உத்தரவு போடுவதால் பார்ப்பனர்களுக்கு கொண்டாட்டம். நாளை நாடு பிரிந்தால் இந்த சி.ஆர். அவர்களே மந்திரியாக வந்தாலும் அவரை மந்திரி ஆக்கும் நாம் சொல்கிறப்படித்தானே கேட்டாகவேண்டும். இல்லையெனில் வீட்டுக்கனுப்பும் அதிகாரம் நம்மிடம்தானே இருக்கும்?’ - (சுதந்தரத் தமிழ்நாடு ஏன்? – பெரியார் ஈவெரா, பக்கம் 31)
பெரியாரின் பேச்சிலிருந்து எடுத்து நான் கொடுத்திருக்கும் இந்த இரு மேற்கோள்களையும் எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா கூற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள். சொல்லப்போனால் இந்த இரு மேற்கோள்களும் நம் அனைவருக்குமே ஆச்சரியமாகவும் ஏன் நம்பவியலாததாகவும்தான் இருக்கும்.

1947 இல் உருவான ஆட்சியை பார்ப்பனராட்சி என்று வரையறுத்த பெரியார், பார்ப்பனர்களிடம் இருப்பதைவிட வெள்ளைக்காரனிடம் டொமினியன் அந்தஸ்திலேயேகூட திராவிட நாடு இருக்கலாம் என்று யோசித்த பெரியார். பார்ப்பனீயத்தை ஒழிப்பதற்காகவே தன் அனைத்து செயல்பாடுகளையும் செய்துவந்த பெரியார்,  இந்த இடத்தில் மட்டும் தவறிவிடுகிறாரோ என்று ஒரு சந்தேகம்கூட வரலாம். 

ஆனால் இதே பேச்சுக்களின்போது வேறு ஒரு இடத்தில் பெரியார் சொல்கிறார். தன்னுடைய போராட்டத்தை இனப்போராட்டம் (இன்றைய மொழியில் தேசிய இனப் போராட்டம்) என்று கூறுகிறார் அவர்.  “ஒரு இனப்போராட்டம் என்றால், அந்த இனத்துக்குரிய மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், பண்பாடு முதலியவற்றுக்கு முற்றிலும் மாறுபட்ட வேறு இனத்துக்காரன் ஆட்சியை வெறுப்பது, வெறுத்து எதிர்த்து ஒழிப்பது என்பதாகும். இந்தக் கண்ணோட்டத்தோடு இன்றைய தினம் நம் நாட்டில் நடைபெறும் வடவர் – தென்னாட்டவர் கிளர்ச்சி, ஆரியர் – திராவிடர் போராட்டம் (மேல்சாதி – கீழ்சாதி) போராட்டம், இனப்போராட்ட உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதுதான். இன்றைய டெல்லி ஆட்சி பார்ப்பன மேல்சாதிக்கார்கள் ஆட்சியே; அது மேலும் வெளிநாட்டான் (வடநாட்டான்) ஆட்சியே ஆகும்”.

தமிழ்நாடு நீங்கலான இந்திய வரைபட எரிப்புப் போராட்டத்தில், பல நகரங்களில் பெரியார் பேசிய பேச்சுகள்  மிக முக்கியமானதாகும். 
நாடு பிரியவேண்டும், பார்ப்பனர்களே ஆட்சிக்கு வந்தால்கூட பரவாயில்லை, நாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற பெரியார் பேசியிருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது விடுதலையின் முக்கியத்துவத்தையும் அவரசத்தையும் உணர்த்தும் பேச்சுதானே ஒழிய, பார்ப்பனர்களின் அதிகாரத்தோடு அவர் சமரசம் செய்துகொள்கிறார் என்று அர்த்தமில்லை. 

ஒரு தேசிய விடுதலைப் பார்வையில், அது சரியான நிலைப்பாடுதான். பார்ப்பன மேலாதிக்கத்தை தமிழ்நாட்டில் ஒழிக்கவேண்டும் என்றாலும்கூட டெல்லியிலிருந்து தமிழ்நாடு விடுபடாமல் அது நடக்காது என்று பெரியார் உணர்ந்திருந்தார் என்பதை நாம் புரிந்துகொள்வது முக்கியம். (பெரியாரின் இந்த ஒற்றைப்புள்ளிதான், அண்ணாவிடம் வியூகமாகவே உருவெடுக்கிறது என்பது தனியாக ஆராயவேண்டிய ஒரு விஷயம்)

அப்படியிருக்க, “பார்ப்பனாதிக்கமே தனி சென்னை மாநிலத்திலும் இருக்குமானால், அதற்குப் பதிலாக இந்தியாவிலே இருந்துவிடலாம் என்றுதான் பெரியார் கருதியிருப்பார்” என்று எஸ்விஆரும் வ. கீதாவும் எழுதியிருக்கிறார்களே அது எப்படி என்று கேட்கலாம். அவர்கள்தான் அதற்கு பதில் சொல்லவேண்டும். 

இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் உள்பட அனைத்து முற்போக்காளர்களும் இந்தியா என்னும் யானையை தனித்தனி உறுப்புகளாக் கண்டறிந்து தடவிக்கொண்டிருந்தபோது, இது ஒரு தேசம் இல்லை என்று 1930 இலேயே முடிவெடுத்து பேசியவர் பெரியார். முதல் மொழிப்போரின் போது, பிற தமிழறிஞர்களோடு இணைந்து நின்று தமிழ்’நாட்டை’  கண்டறிந்தார் அவர். அது பிறகு திராவிட நாடாக ஆனது. நமக்குள்ள தனிப்பட்ட “தமிழ்நிலை” உணர்ச்சியின் காரணமாகவே நாம் சிறிதேனும் சுயமரியாதை உணர்ச்சியும் சுதந்திர உணர்ச்சியும் கொண்டவர்களாக இருக்கிறோம் என்று 1937 இல் குடியரசில் பெரியார் எழுதியது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு கருத்தாகும். இன்றைய தமிழ்த்தேசியவாதிகள் சிலரும் பெரியாரை முற்றுணராத திராவிட இயக்க வாதிகள் சிலரும் இதையெல்லாம் படித்திருக்கவே வாய்ப்பில்லை. 
1938 இல் சென்னை மாகாணத்திலிருந்து தமிழ் மாகாணம் பிரியவேண்டும் என்கிற கருத்தை பெரியாரும் சோமசுந்திர பாரதியார், எம் எஸ் பூர்ணலிங்கம் பிள்ளை, அண்ணா, உமாமகேசுவரன் பிள்ளை ஆகியோரும் பேசினர் என்பதை மேற்கண்ட நூலில் ஆசிரியர்கள் பதிவுசெய்கிறார்கள். இதுவே பிறகு தனி திராவிட நாடு கோரிக்கையாகவும் மலர்கிறது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் வெளியேறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கிற நிலையில், முஸ்லீம்கள் காங்கிரஸாரின் இந்துத்துவ மேலாண்மை கண்டு அஞ்சிய நிலையில், ஜின்னாவிடம் திராவிட நாட்டுக்கு ஆதரவு கேட்டார்கள் பெரியாரும் பிற திராவிடத் தலைவர்களும். அப்படியே 1942 இல், கிரிப்ஸ் தூதுக்குழுவைச் சந்தித்துப் பேசிய பெரியார், எம் ஏ முத்தையா செட்டியார், செளந்தபாண்டிய நாடார், சாமியப்பா முதலியார் ஆகியோர் சென்று சந்தித்தனர். புதிய இந்தியா பார்ப்பனராதிக்கம் உள்ளதாகவே இருக்கும் என்றும் அதன் பொருட்டு தாங்கள் தனிநாடுகோருகிறோம் என்றும் அவர்கள் கிரிப்ஸ் குழுவிடம் முறையிட்டார்கள். இன்னொரு பக்கம் மூத்த நீதிக்கட்சித் தலைவர்களான ஆர் கே சண்முகம் செட்டியார், ஏ டி பன்னீர்செல்வம் முதலியோரின் அனுபவங்கள், அதிகார உறவுகளைப் பயன்படுத்தி தனிநாடு கோரிக்கைக்கு வலுசேர்க்கவும் முயன்றார்கள். ஆனால் இவையாவும் பலனளிக்கவிலை என்பதும் அதற்கான காரணங்கள் என்ன என்பதும் முக்கியமான ஆய்வுக்குரியவை.
ஆனால், நமக்கான அரசு வேண்டும் என்கிற அடிப்படை கோரிக்கையைத்தான் இங்கே நாம் பிரதானமானதாக எடுத்துக்கொள்ளவேண்டும். பெரியாரின் மற்றுமொரு முன்னுரிமை தேசிய இனப் பிரச்சினைக்கான விடை தருவது. அவரது சமூகம் சார்ந்த பங்குபணிகளை மட்டும் பேசிவிட்டு, அரசியல் அதிகாரம் சார்ந்த முன்னுரிமைகளைப் பற்றி பேசாமலிருப்பது பெரியாருக்குச் செய்யும் துரோகமாகும். 

இன்று தமிழ்நாட்டில் பெரியார் மீண்டும் பேருரு எடுத்து சங்கிகளின் கனவுகளை நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மீண்டும் பெரியாரை நோக்கிச் செல்கிறார்கள்.  ஆனால் பெரியாரை முழுமையாக புரிந்துகொள்ளவேண்டும் என்றால் நடுத்தரவர்க்க கனவுக்கார்களிடமிருந்தும் அவரை மீட்கவேண்டும். அவரை ஒரு அரசியல் ராக் ஸ்டாராக, அதிர்ச்சி வைத்தியமளிப்பவராக மட்டுமே பார்ப்பது அதிகரித்துவருகிறது. அவரை யதார்த்தத்திலிருந்து விலக்கி, தமிழ் மண்ணிலிருந்து விலக்கி, கட்சி, தேர்தல் போன்ற நடைமுறைகளிலிருந்து விலக்கி, அவரை “சுத்திகரிப்பு” செய்யக்கூடிய ஒரு போக்கையும் நாம அவதானித்துவருகிறோம்.
பெரியாருக்கு தேசிய இனப்பிரச்சினை குறித்து முழுமையான புரிதல் இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது. ஆனால் அதன்  சில முக்கிய கூறுகளில் சரியான புரிதல் உடையவராக இருந்திருக்கிறார் என்பதைத்தான் மேற்கண்ட விவகாரம் கூறுகிறது. அதிகாரம் முதலில் வேண்டும், பிறகு எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள முடியும் என்பதுதான் அவரது கருத்து. இதுதான் தேசிய விடுதலை அரசியலின் அடிநாதமும்கூட. நாம் எத்தகைய சமூகத்தை உருவாக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அகற்கு முதலில் தேவை அரசியல் அதிகாரம் என்பதுதான் அது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்.

பெரியார் கேட்ட அதே பாணியில் இன்று சுதந்திரம் கேட்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் அந்தத் திசைவழியில், ஐயா ஆனைமுத்து உள்ளிட்ட திராவிட இயக்கத்து சிந்தனையாளர்கள் முன்வைக்கும் தன்னாட்சி அரசியலை நாம் முன்னெடுக்கவேண்டும்.   

இன்றைய நிலையில், பெரியாரியவாதிகள் தனியாட்சிக்காகவோ தன்னாட்சிக்காகவோ – அவரவர் விருப்பம், வியூகம், திட்டம் – களத்தில் இறங்கவேண்டும். காவி கும்பலை விரட்டுவது மட்டும் நம் நோக்கமல்ல. டெல்லி ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபெறுவதுதான் நோக்கம். இல்லையென்றால் பாஜக போய் காங்கிரஸ் வந்தால் எல்லாம் “நமத்து” போய்விடும்.
தன்னுடைய அரசியல் வாழ்நாளில் வேறு எந்த இடத்திலும், வேறு எந்த ஒன்றுக்காகவும், பார்ப்பனீய எதிர்ப்பைத் தவிர வேறு எதற்கும் முதலிடம் கொடுக்காத பெரியார். தனிநாட்டு விஷயத்தில் மட்டும் சற்றே நெகிழ்ந்து கொடுத்திருக்கிறார் என்றால், அது பிறழ்ச்சி அல்ல.
பெரியாரியர்கள் இந்த முன்னுரிமையை நினைத்துப்பார்க்கவேண்டும். பெரியாரை நிராகரிக்கும் போலித் தமிழ்த்தேசியவாதிகள் சிலருக்கு பதில் அளிக்கும்போது, “இல்லை இல்லை, பெரியார் தனித்தமிழ்நாட்டுக்காக போராடினார்” என்று மறுப்பு கூறுவதில் இருக்கும் ஆர்வம். இன்றைய தமிழ்த்தேசியஇன பிரச்சினை குறித்த ஒரு பெரியாரிய அணுகுமுறையை உருவாக்குதில் இருப்பதாகத் தெரியவில்லை.

மத்திய அரசை எதிர்த்தல் என்கிற அளவில் மட்டுமே அது முடிந்துவிடாது. அரசியல் அதிகாரம் சார்ந்து நமது கொள்கை என்ன, திட்டம் என்ன, வழிமுறை என்ன என்பதிலும் பெரியாரியர்கள் கவனம் செலுத்தவேண்டும். 

நமது அதிகாரம் நம் கையில் இருக்கவேண்டும். எந்த சட்டத்தையும் நமக்குத் தேவையெனில் நாம் போட்டுக்கொள்ள முடியவேண்டும். டெல்லிக்காரனிடம் கையேந்தி நிற்கும் அவலம் ஏற்படக்கூடாது. உள்ளூரில் நமது பரம வைரியிடம்கூட சற்று சமரசம் செய்துகொள்ளலாம், ஏனென்றால் பிறகு அதை மாற்றிக் கொள்ளமுடியும். ஆனால் அந்த வடநாட்டானிடம் மட்டும் சமரசமே கிடையாது’. – இதுதான் அய்யாவின் வழி. எச் ராஜாக்களை விளாசித்தள்ளுவது ஒரு சிறு பகுதிதான்.

(சிந்தனையாளன் பொங்கல் மலர் 2019 இல் வெளிவந்தது).

பசுமைப் போராளி பின்னணியில் சாதி ஒளிந்திருக்கிறதா?

Kathir RS 
2019-12-24

கேள்வி: பசுமைப் போராளி, கார்ப்பரேட் எதிர்ப்புப் போராளி, இயற்கை விவசாயப் போராளி, சுற்றுச்சூழல் ஆர்வலர் போன்ற அடையாளங்களின் பின்னணியில் சாதி ஒளிந்திருக்கிறதா? 

பதில்: கிராமப்புறத்தின் பழைமை மாறாமல் இயற்கைக்குத் திரும்புதல் என்பதே சாதிய அடுக்குகளுக்கு ஏற்ப வாழ்வதற்கான அழைப்புதான். பசுமைப் போராளி ஆவதிலும், இயக்கம் அல்லது அமைப்பு நடத்திவதிலும் சாதிய படிநிலைகள் தெளிவாக உண்டு. 

இயற்கை விவசாயம் + கார்ப்பரேட் எதிர்ப்பு குறித்த அமைப்புகளில் சாதிக்கு ஏற்பவே பிரபலத்தன்மையும், வசூலும் அமைகிறது. 
உங்களுக்குத் தெரிந்த பிரபலமான ஐந்து ஆர்கானிக் ஆக்டிவிஸ்ட் அமைப்புகளைக் கவனித்துப் பார்த்தீர்களேயானால் அதன் நிறுவனர்கள் அல்லது பெருந்தலைகள் பிராமணர்களாக இருப்பதைக் காணலாம். அபூர்வமாக அப்படி இல்லாவிட்டாலும் அசைவ உணவு எதிர்ப்பு, கோசாலை, விவசாயத்தைக் காப்பதில் கோவில்களில் இருக்கும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் முக்கியத்துவம், நீட் தேர்வு ஆதரவு, மெரிட் சிஸ்டம் போன்ற கருத்துகளில் தாராளமாகப் புழங்குபவர்களாக இருப்பர். 

அத்தகைய பிராமணப் பின்புலமுள்ள அமைப்புகளுக்கே பெரும்பாலான  நன்கொடை வருவாய்கள், புகழ், பெருமை எல்லாம் கிடைக்கும். தோற்றாலும் வென்றாலும் நல்ல விளம்பரமும்,  நன்கொடைகளும் கணிசமாக கிடைக்கும் என்பது மாதிரியான ஏரியா எனில் இந்த அமைப்புகள் இறங்கிவந்து வழக்குத் தொடுக்கும். பெரும்பாலும் கார்ப்பரேட் கம்பெனிகளை இவை வழக்குக்கு இழுக்குமே தவிர அரசாங்கத்தை எதிர்த்து வழக்குத் தொடருவதைக் கவனமாகத் தவிர்க்கும். 

பிராமண அடையாளங்களைத் தாங்கிய இந்த அமைப்புகள் அப்பழுக்கற்ற தங்கங்களாக உருவகப்படுத்துப்பட்டு சூத்திர வேசிமகன்களிடம் விளம்பரப்படுத்தப்படும். மனுஸ்மிரிதியால் தேவடியாப்பயல் என்று விளிக்கப்படும் சூத்திர ஆக்டிவிஸ்டுகள் நடத்தும் ஒன்றிரண்டு அமைப்புகளுக்கு அரசாங்கத்தை எதிர்த்து நடத்தும் வழக்குகள், பெரிய கவனம் கிடைக்காத ஆனால் நீதிமன்றங்களுக்கு செருப்புத் தேய நடக்கவேண்டிய விவகாரங்களை எல்லாம் கொடுத்து வழக்குத் தொடரும்படி, பிரச்சாரம் செய்யும்படி அறிவுறுத்தப்படும். இவர்களும் செருப்பைத் தூக்கி தலையில் வைத்து விட்டிருக்கிறார்கள் என்றே புரியாமல் தமக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாகக் கருதி கொஞ்சம் கொஞ்சமாகப் போராளி ஆகிவிடுவார்கள்.

மஞ்சளுக்கும், வேம்புக்கும் அமெரிக்கா காப்புரிமை பெற்ற விவகாரத்தில் வந்தனா சிவா அம்மையாருடன் நம்மாழ்வார்  இணைந்து போராடி வென்றதாக ஐயாவின் வானகம் ரிசார்ட்டில் இயற்கை விவசாயப் பயிற்சி பெற்ற பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வேப்பங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் Azadirachtin என்ற பூச்சிக்கொல்லியின் ஒரு பகுதி காப்புரிமையை ஜெர்மானிய கம்பெனி ஒன்றிடம் இராயல்ட்டி கட்டியே இந்தியாவில் பிரபல நிறுவனங்கள் வாங்கி விற்பனை செய்கின்றன என்பதைத் துறையில் புழங்குபவர்கள் அறிவர். 

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க இயற்கை வேளாண்மை பிரச்சாரகர்கள் பிராமணர்களாக இருந்தாலும் சூத்திரர் ஆன நம்மாழ்வாரின் வானகம் ரிசார்ட் ஆனது சமகாலத்திய வேளாண் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கவல்லதாக நிறுவப்பட்டிருப்பது பெரிய நகைமுரண் கிடையாது. ஐயாவின் கோசாலை, கோசாணம், பாரம்பரிய மருத்துவ ஞானம் குறித்த உரைகளைக் கேட்டவர்களுக்கு வர்ணாசிரம அமைப்பின்மீது அவருக்கு உள்ள அன்பை அறிவார்கள். 

இயற்கை வேளாண்மை சார்பான அமைப்புகள் மட்டுமல்லாது விவசாயிகளின் பல்வேறு அமைப்பு தலைவர்கள் வெளிப்படையாகவே சாதிய ஆதரவாளர்களாவர். மரபுக்குத் திரும்புதல், பாரம்பரிய வாழ்வியல் முறை என்றாலே சாதிக்குத் தக்க வாழ்வியல் முறை என்பதே இந்தியாவில் பொருளாகும். விவசாயத்தைக் காப்போம் என்பதற்கும் "விவசாயிகளைக் காப்போம்" என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு என்பதை உணர்வது முக்கியமானதாகும்.

Sunday, December 22, 2019

NRC & CAA

Copied from Fb

Firstly, it's not a Bill anymore (CAB), it's been passed by both Houses of Parliament and it is now an Act (CAA). Also, the CAA is toothless without the NRC. To see the bigger picture, you have to look at BOTH of these together. 

FACT1: The Home Minister of our Country has announced that NRC, which was implemented in Assam, is now going to be rolled out across the country. Everyone living in India will soon need to prove their citizenship. 

FACT2: A PAN card or an AADHAR card is not proof that you are an Indian citizen. 

FACT3: Detention centres are being built all across the nation. 

These are facts and they are undisputed. Digest that for a minute. 

Now let's look at what happened in Assam when the NRC was rolled out. These are the words of Harsh Mander, who was an IAS officer during the implementation of NRC in Assam and resigned when the CAB became an Act. "I have witnessed the incredible levels of suffering created by the National Register of Citizens (NRC) in Assam. Impoverished rural people, often landless and unlettered, staked all their meagre belongings and many years to gather documents to prove that they were citizens. These certificates of birth, schooling, land-ownership and voters’ lists dating back several decades are such that most of us would find impossible to muster. Even a small discrepancy in spelling was sufficient for these documents to be rejected. The consequences of such rejection were catastrophic. You could be sent to detention centres for years, with no hope of release. Finding names missing from the NRC lists, or when loved ones were exiled to detention centres, several committed suicide in despair."

19 lakh (1.9 million) people were not able to prove their citizenship. Right now, we're still talking about human beings across caste, creed and colour. In fact, out of these 1.9 million people, only less than one-third were found to be Muslims. 

It is this that the CAA will change. In the nationwide NRC declared by Union home minister Amit Shah, now undocumented people of any religious identity EXCEPT Muslim will be treated as refugees and given citizenship. Only undocumented Muslims will be treated as illegal immigrants, carted away to detention centres and in all likelihood divested of all citizenship rights — of voting, land ownership and social security. This is only Assam; extrapolate this across the country! Millions of Muslims, from the poorest sections of our country, who are unable to produce the necessary documents, are going to get stuffed into detention centres all over India. 

The process that has been devised is like a funnel. At the top-of-the-funnel (TOFU) there's all of us. In the middle-of-the-funnel (MOFU) there's everyone unable to prove (and unable to afford to buy the necessary papers to prove) their citizenship. Right at the bottom-of-the-funnel (BOFU) there's only the Muslims who can't prove (and can't afford to buy the necessary papers to prove) their citizenship. 

Going from TOFU to MOFU is itself going to be a herculean, massively expensive and massively corrupt process. Do you remember demonetization? The people that did the jugaar got away scot free, and the politicians, middle men and some corrupt bankers got rich. How will this be different? Does India have the money to carry out this exercise? Has anyone budgeted it? Has anyone estimated the expense? Has anyone planned anything except meaningless, jingoistic, rhetorical statements? 

And then, after hundreds of thousands of crores have been spent, and all 1.3 billion of us have been whetted by the powers that be, there will be a final report card, leaving millions of people at the bottom of the funnel, who will be carted away to detention centres. Every single one of those people will be Muslim, because that is what this evil Act has been designed to do. 

For the first time, in the history of Free India, a very specific section of the country is being openly targeted. This is what the students are protesting about. This is why India is burning right now. Do you think the students at IIT Madras, IIT Bombay and scores of other academic institutions of this country are BRAINWASHED MASSES? They are at the forefront, leading the country through Protest. More power to them!

I'll end with Harsh Mander's words "This graded citizenship brings back, among other histories, terrifying memories of Nazi Germany. Another remembrance of those times is the silence and indifference of non-Jew Germans. Anguished young Germans interrogate their parents and grandparents even today: “How could you have remained silent? What did you do to resist?" Decades later, these same questions will doubtless be asked of us. What answers will we give our later generations?"

சாவர்கர் என்னும் இழிபிறவி

சாவர்கர் பற்றி விகடன் இதழின் அருமையான கட்டுரை

அமித் ஷாவின் `சாவர்க்கர் பாசம்' அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் வரைபடம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோவுக்கு போஸே கொடுப்பார் மனிதர்.

ஆக, விஷயம் தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள், வேகமெடுத்துவிட்டன. ஏற்கெனவே, `ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும். இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும்கூட. இந்த நேரத்தில், சாவர்க்கர் யார், அவரது அரசியல் எப்படிப்பட்டது, அவர் பாடுபட்டது யாருக்காக என்பதையெல்லாம், விரிவாகப் பேச வேண்டியது அதிஅவசியமாகிறது. இல்லையென்றால், நாளைக்கு ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் சாவர்க்கர் சிரிப்பதை, வரும் தலைமுறைப் பிள்ளைகள் பார்க்க நேரிடும். அமித் ஷா வேறு `வரலாற்றை மாற்றி எழுதுவோம்’ என்று பீதி கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இப்போது பேசுவதுதான் சரி!.
சாவர்க்கர் ஒரு சிந்தனைவாதி என்பதில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. அவர் சிந்தனைவாதிதான்! ஆனால், அவரது சிந்தனைகள் எதை நோக்கி இருந்தன என்பதுதான் முக்கியமானது. அதையே அதிகம் கவனத்தில் எடுத்து விவாதிக்க வேண்டும். அவரது சிந்தனை என்ன. இந்து ராஷ்டிரம்தான்! அந்த இந்து ராஷ்டிரம் எப்படியிருக்கும் அவரே அதை விவரிக்கிறார்... `எவரெல்லாம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லையோ, அவர்களெல்லாம் இந்தியர்களும் அல்ல’. ஒரு தேசியத்துக்கு கொடுக்கப்படும் `Motherland, Fatherland' என்ற கருத்துரு வாக்கங்களைத் தாண்டி, `Holy land' என்ற கருத்துரு வாக்கத்தை கொண்டுவந்து வைக்கிறார் சாவர்க்கர். அவரது அந்தத் தத்துவத்தின்படி, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இந்தியர்கள் அல்லர். ஏனென்றால், அவர்களின் புண்ணியபூமி அரேபியாவிலும் பாலஸ்தீனத்திலும் இருக்கிறது என்பது அவரது வாதம். இதைத்தான் 1905 தொடங்கி 1966 வரை வெவ்வேறு வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்தார் அவர். அதாவது, அவர் மரணத்தைத் தழுவும் வரை அதிலிருந்து மாறவே இல்லை. கடைசிக்காலங்களில், `இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்து பெண்களைச் சூறையாடியதைப் போலவே, இந்துக்கள் இஸ்லாமியப் பெண்களைச் சூறையாட வேண்டும்’ என்று சொல்லும் அளவுக்குக்கூட அவர் இறங்கியிருக்கிறார். மத அடிப்படைவாதத்தில் அவரது மனம் எந்த அளவுக்கு கெட்டித்தட்டிப் போயிருந்ததது என்பதற்கான உதாரணம், அந்த வார்த்தைகள்.

காந்தி 'Power to people' என்று சொன்னார் என்றால், சாவர்க்கர் அதிலிருந்து அப்படியே வேறுபட்டு ‘Power over people’ என்று சொன்னார். அதாவது, மக்களின் மீது அரசு மேலாதிக்கம் செலுத்துவதை அப்பட்டமாக ஆதரித்தவர் சாவர்க்கர்.

போதாக்குறைக்கு, இந்தியாவை இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ராணுவ தேசமாக உருவகித்தார் சாவர்க்கர். காந்தி 'Power to people' என்று சொன்னார். சாவர்க்கர் அதிலிருந்து அப்படியே வேறுபட்டு `Power over people’ என்று சொன்னார். அதாவது, மக்களின் மீது அரசு மேலாதிக்கம் செலுத்துவதை அப்பட்டமாக ஆதரித்தவர் சாவர்க்கர். அதனால்தான் அவருக்கு ஜெர்மனி பிடித்தது. பின்னாளில், இஸ்ரேலும் அவரது மனதைக் கவர்ந்ததற்குக் காரணம் அதுவே. இந்தியாவை காலனியாதிக்கத்தின் கண்கள் கொண்டு பார்த்தவர் சாவர்க்கர்’ என்று சில ஆய்வாளர்கள் சொல்வது, அதனாலேயே!

இந்துத்துவத்தை கண்டுபிடித்தவர் சாவர்க்கர்தான்! விவேகானந்தரும் அரவிந்தரும் திலகரும் `இந்துயிஸம் (Hinduism)’ என்று பேசியதை, `இந்துத்துவம் (Hindutva)’ என்ற இடத்துக்கு நகர்த்தியவர் சாவர்க்கர். இந்துயிஸத்தை, இந்துமதத்தைப் பின்பற்றுவது, அதைப் பற்றி பேசுவது, அதன் தத்துவங்களை பரப்புவது என்று வரையறுக்கலாம். ஆனால், இந்துத்துவம் அப்படியல்ல. அது, இந்துக்களை ஒருங்கிணைப்பது, ஒருங்கிணைத்து ஓர் இந்து சமுதாயத்தைக் கட்டமைப்பது! அதாவது, இந்துயிஸம் இந்துக்களை ஒரு மதமாகப் பார்த்தால், இந்துத்துவா ஓர் இனமாகப் பார்க்கும். அந்த இனத்தின் ஆதிக்கத்துக்குள் அது தேசத்தைக் கொண்டு வரும். அந்தத் தேசத்தில், சிறுபான்மை இனத்தவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். அவர்களுக்கென்று எந்த உரிமையும் இருக்காது. இதை நோக்கியே, அந்த 'Holy land' என்ற பதத்தை வெகு சாதுரியமாகப் பயன்படுத்தினார் சாவர்க்கர்.

இந்தியாவை முழுவதுமாக `இந்துமயமாக்குவதே’ சாவர்க்கரின் நோக்கம். அதற்காக, படை உருவாக்குவது, அந்தப் படையை மக்கள் மேல் செலுத்தி அவர்களை ஆளும் அதிகாரத்தை அடைவது, அந்த அதிகாரத்தின் வழியே, நாடு முழுவதும் ஒற்றைத்தன்மையைக் கொண்டுவருவது என்று, தெளிவாக வரைபடம் வரைகிறார் சாவர்க்கர். `Hinduise all politics, Militarize Hinduism' என்ற பதத்தை அவர் அடிக்கடி பயன்படுத்துகிறார். இந்த ஒருங்கிணைத்தலை செய்ய அவருக்கு ஒரு எதிர்த்தரப்பு தேவைப்பட்டது. அதனால்தான், இந்து அல்லாதவர்களை, அதாவது இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களை ‘Others' என்று அழைத்து, `Self' எனப்படும் இந்துக்களின் எதிரிகளாகக் கட்டமைக்கிறார் அவர். ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்களைக்கூட அவர் ஓரமாகவே நிறுத்துகிறார். அதுவும், அன்பையும் சமத்துவத்தையும் போதித்த பௌத்தத்தை, இஸ்லாம் கிறிஸ்துவத்துக்கு இணையாக வெறுக்கிறார். அவருடைய, 'Hindutva : Who is a Hindu' புத்தகம், ஏறக்குறைய ஹிட்லரின் 'Mein kampf' புத்தகத்துக்கு இணையானது! 

சாவர்க்கரின் இந்து ராஜ்ஜியத்தின் இன்னொரு ஆபத்து, அது இந்து சமுதாயத்தையே பிளவுபடுத்திப் பார்க்கிறது என்பது. இதற்கு, சாவர்க்கர் அவ்வளவு பெரிய சனாதனவாதியும் அல்ல. கடவுள் நம்பிக்கையும்கூட அவருக்கு குறைவுதான். Agnostic வகையைச் சேர்ந்தவர். அவரின் மனைவியும் மகனும் இறந்தபோதுகூட, அவர் மதச்சடங்குகள் ஏதும் செய்யவில்லை. ஆனால், சாவர்க்கர் கோயில்கள் கட்ட குரல் கொடுத்திருக்கிறார். 1939-ல் டெல்லியில் சிவன் கோயில் ஒன்று இடிக்கப்பட்டபோது, அதை எதிர்த்தவர்களுள் சாவர்க்கர் முக்கியமானவர். அதில் கிடைத்த வெற்றியைப் பெருமளவில் கொண்டாடியவர் சாவர்க்கர். `இது போன்ற நடவடிக்கைகளே இந்து மக்களை ஒருங்கிணைக்கும்’ என்று அருகிலிருப்பவர்களிடம் சொல்லி மகிழ்கிறார். கடவுளையே வணங்காதவர், கோயில் கட்டுமானங்களை ஏன் ஆதரித்தார் என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும். காரணம் அதுவேதான். அது, அவருக்கு ஓர் அரசியல் ஆயுதம்! இந்துத்துவத்தின் தந்திரமே அதுதான். அதற்கு, மதம் என்பது மக்களை அடக்கியாளும் ஓர் அரசியல் கருவி மட்டுமே. அதைக் கடந்து யோசிப்பதற்கு இந்துத்துவத்தில் எந்த இடத்தையும் ஏற்படுத்தி வைக்கவில்லை சாவர்க்கர்.

சாவர்க்கரின் இந்து சமுதாயமும் எப்படிப்பட்டது தெரியுமா? உயர்சாதி இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவே அது இருக்கும். ஏனென்றால், இந்து சமுதாயத்தின் அடித்தளமாக `வர்ணப் பாகுபாடு’ இருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல் கிறார் சாவர்க்கர். அந்த இந்து சமுதாயத்தின் முக்கிய மொழிகளும்கூட இந்தியும் சம்ஸ்கிருதமும்தான். கடவுளர்களும்கூட கிருஷ்ணனும் ராமனுமே. `பழங்குடி மக்கள் தங்களின் குலதெய்வத்தை துறந்துவிட்டு, ராமவழிபாட்டுக்கு மாற வேண்டும்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் சாவர்க்கர். `வறண்டு கிடந்த இந்து மதத்தை, சாதிதான் செழிப்பாக்கியது’ என்று சொல்லுபவராகவும் இருந்தார் அவர். அவரது தீண்டாமை ஒழிப்பு முழக்கங்கள் எல்லாமே, வெறும் பாவ்லா மட்டுமே. ஆங்கிலத்தில் `Escapism' என்று அதைச் சொல்வார்கள். வெற்று, தப்பித்தல்வாதம்! இது போதாதென்று, கறுப்பு நிறத்தவர்களை இந்துக்களாக ஏற்றுக்கொள்வதிலும் அவருக்கு தயக்கம் இருந்தது. இந்து பெண்களைப் பற்றியும் எங்கும் பெரிதாகப் பேசுவதில்லை சாவர்க்கர். `அவர்களின் கடமை அடுப்பங்கறை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுதல் மட்டுமே’ என்பது சாவர்க்கர் கொண்டிருந்த எண்ணம். இத்தகையவரைத்தான், தனது அணிகலனாக இந்தியத் தாய் சூட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். 

இவற்றையெல்லாம் விலக்கிவிட்டுப் பார்த்தாலும், அவரை அங்கீகரிப்பதற்கு மூன்று இடையூறுகள் இருக்கின்றன. முதலாவது, அடிமைப்படுத்திய ஆங்கிலேயனிடமே `நான் உங்கள் சேவகன்’ என்று அவர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். இரண்டாவது, `இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றன’ என்று ஜின்னாவுக்கு பாயின்ட் எடுத்துக்கொடுத்ததும்கூட அவரேதான். மூன்றாவதுதான் மிக முக்கியமானது. அதாவது, தேசப்பிதா காந்தி கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாக அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

1911-ம் ஆண்டு ஜூன் மாதம், அந்தமான் செல்லுலார் சிறையை வந்தடைகிறார் சாவர்க்கர். நாசிக் மாவட்ட நீதிபதி ஜாக்சன் கொலைக்கு, அவர் தூண்டுதலாக இருந்தார் என்பது வழக்கு. அப்போது, `ஆபத்தான கைதி’ என்று அவருக்கு அடையாளம் இடப்பட்டது உண்மைதான். `D' என்பது அந்த கோட்வேர்ட். ஆனால், சாவர்க்கர் ஒன்றும் அவ்வளவு ஆபத்தானவராக ஆங்கிலேயருக்கு இருக்கவில்லை என்பதுதான் முரண்பாடு. சாவர்க்கர் 1924-க்கு முன்பு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பதுதானே, நாம் அறிந்தது. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார் சாவர்க்கர். 1911-லேயே அவர் ஒரு கடிதம் எழுதினார். அது இப்போது கிடைப்பதில்லை. ஆனால், 1913 அவர் அனுப்பிய மற்றொரு கடிதத்தில் அந்த முந்தைய கடிதத்தைக் குறிப்பிடுகிறார். கடிதத்தில், `அடிபணிதல்’ வாசகங்கள் பளிச்சென்று இருக்கின்றன. `To : The home member of the government of India' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், `சிறைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. எண்ணெய் ஆலையில் போட்டு வதைக்கிறார்கள். அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால், நான் அரசியலமைப்பின் தீவிர ஆதரவாளனாகச் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் அரசுக்கு சேவகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்ட வில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கே சென்று நிற்பேன்...’ என்று சொல்கிறார் சாவர்க்கர்.
சாவர்க்கரைப் போலவே, பகத்சிங்கும் ஒரு கடிதத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எழுதினார். லாகூர் சிறையில் இருந்து 1931-ம் ஆண்டு அவர் அனுப்பிய கடிதம் அது. அதில், `உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு, எங்களை போர்க்கைதிகளாக வகைப்படுத்துகிறது. ஆம், நாங்கள் போர்க்கைதிகள்தான். ஆகவே, எங்களை நீங்கள் தூக்கிலிடக்கூடாது. மாறாக, துப்பாக்கித் தோட்டாக்களால் சுட வேண்டும்’ என்று, அறிவித்தான் அந்த 23 வயது இளைஞன். அடுத்து, `இந்தப் போர் தொடரும்’ என்று அறிவித்துவிட்டு, `எங்களைக் கொல்லப்போகும் ராணுவ அதிகாரிகளை எப்போது அனுப்புகிறீர்கள்’ என்ற கேள்வியோடு அந்தக் கடிதத்தை முடிக்கிறார் அவர். கடிதத்தில் ஓர் இடத்தில், குறித்துக்கொள்ளுங்கள். முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நாள்கள் எண்ணப்படுகின்றன. ஒருநாள் இங்கு, சோசியலிஸ சமுதாயம் மலரும்’ என்று கர்ஜிக்கிறான், அந்த மாவீரன்.

கடிதம் முழுவதுமே, அப்படித்தான். அதிகமும் தேசத்தைப் பற்றித்தான் பேசுகிறார் பகத் சிங். இதற்கு லாகூர் சிறையும் ஒன்றும் சொகுசு சிறையல்ல. ஆனாலும், பகத்சிங் அதைப் பற்றியெல்லாம் கவலைகொள்வதில்லை. உதிரம் முழுவதும் விடுதலை வேட்கை ஓடும் ஒருவனின் வார்த்தைகள் எப்படியிருக்குமோ, அப்படியிருக்கின்றன பகத் சிங்கின் வார்த்தைகள். உறைவிட்டெழும் வாளென, நாண் தொட்டு புறப்படும் அம்பென பாய்கின்றன, அவன் சொற்கள்! அப்படியே சாவர்க்கரின் வார்த்தைகளையும் பார்க்கவும். `நான் இப்படியெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்கிறேன்... கருணை காட்டுங்கள்... நல்ல படியாக நடந்துகொள்வேன்’ என்றெல்லாம் அந்நியனிடம் பணிகிறார் சாவர்க்கர். இவர் எப்படி பாரதத்தின் ரத்தினம் ஆவார்? `நீங்கள் என்னை விடுவித்தால், இந்தியாவில் உங்கள் புகழ் பெருகும்’ என்றெல்லாம்கூட ஆங்கிலேயர்களிடம் உருகியிருக்கிறார் சாவர்க்கர்.

1924-ல் அவரது விடுதலைக்குக் காரணமான மன்னிப்புக் கடிதம், இன்னும் உக்கிரமானது. `என்னை விடுவித்தால் நான் உங்களுக்கு நல்ல சேவகனாக இருப்பேன்’ என்று அதில் பட்டயமே எழுதித் தருகிறார் சாவர்க்கர். `நான் எவ்வளவு நன்றாக நடந்துகொள்ள முடியுமோ, அவ்வளவு நன்றாக நடந்துகொள்கிறேன்...’ என்றும்கூட வாக்குறுதி அளிக்கிறார். வெளிவந்த பின், அவர் அதைத்தான் செய்தார். சிறையிலிருந்து வெளியேவந்த பிறகுதான் `Hindutva : Who is a Hindu' புத்தகத்தையே எழுதினார். அது, இந்தியாவை பிரித்தாளத் துடித்துக்கொண்டி ருந்த பிரிட்டிஷாருக்கு ஒரு கையேடாகவே உதவியது. ஜின்னாவுக்கும் அது ரெஃப்ரன்ஸாக மாறியது. 1926-ல் சாவர்க்கரைப் பற்றி ஒரு புத்தகம் வெளிவந்தது. அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் அது. பெயர், `Life of Barrister Savarkar'. அதை எழுதியவரின் பெயர் சித்திரகுப்தன். விநோதம் என்னவென்றால், அந்த சித்திரகுப்தனே சாவர்க்கர்தான். ஏனென்றால், அந்தச் சித்திரகுப்தன் அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி எந்தப் புத்தகமுமே எழுதவில்லை. எழுதிய ஒரே புத்தகம் சாவர்க்கருடைய வரலாறு மட்டும்தான். சுயவரலாறு எல்லோரும் எழுதுவதுதான். ஆனால், அதை அவர்களின் பெயரில் எழுதுவது அல்லவா உலக வழக்கம்! தனது படத்தை தானே வணங்கிய நித்யானந்தாவைப்போல, தன்னைப் பற்றி தானே புகழ்ந்து எழுதியவர் சாவர்க்கர். இதுதான் அவரது நேர்மை!
`அவர் ஏன் மன்னிப்புக் கேட்டார் தெரியுமா? தேசப் பணிக்காகவே அதைச் செய்தார்’ என்கிறார்கள் சிலர். அப்படி மன்னிப்புக் கேட்டு வெளியேவந்து சாவர்க்கர் செய்த மாற்றங்கள் என்று எதுவுமில்லை. ஆங்கிலேயனை எதிர்க்கும் எந்தச் செயல்களையுமே அவர் முழுவீச்சில் செய்யவும் இல்லை. மழைக்கு பயந்து எலி வளைக்குள் ஒடுங்கிக்கொள்வதைப்போல, ஒடுங்கிக் கொண்டார். ஆங்கிலேயன் இந்தியாவைவிட்டு விலகும் வரை, அவருக்கு மழைக்காலம் போகவே இல்லை. காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தபோது, அதிலிருந்து விவரமாக விலகிநின்றவர் சாவர்க்கர். இப்படி இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

`காந்தி 4 வருடங்கள்தான் சிறையில் இருந்தார். ஆனால், சாவர்க்கர் 14 வருடங்கள் சிறையில் இருந்தார். அப்படியென்றால், யார் பெரிய தேசபக்தர்’ என்றும் கேட்கிறார்கள். இதில் இருக்கும் தகவல் சரி, ஆனால், பார்வை தவறு. காந்தி ஒரே முறையாக 4 வருடங்கள் சிறையில் இருக்கவில்லை. மொத்தம் பதினொரு முறை அவர் சிறைக்குச் சென்று திரும்பினார். தென்னாப்பிரிக்கச் சிறைகளும் அதில் அடக்கம். ஒன்றை நோக்கவும். ஒவ்வொரு முறையும் ஒரு போராட்டம், அதில் விசாரணை, அதற்குப் பிறகு தண்டனை என்று சிறை சென்றவர் அவர். அவர் சிறை சென்றபோதெல்லாம், மக்கள் கொதித்தெழுந்தார்கள். காந்தியை விடுவிக்கக்கோரி போராடினார்கள். அவரும் தன்பங்குக்கு சிறை சீர்திருத்தம் என்று களமிறங்கினார். ஆக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கண்முன்னால் இருந்த ஒரே வழி, காந்தியை விடுவிப்பது மட்டும்தான். ஒரு தடவை, நான்கு நாள்களுக்குள் மூன்றுமுறை காந்தி கைது செய்யப்பட்டு திரும்பத் திரும்ப விடுவிக்கப்பட்டிருக்கிறார். அந்தளவுக்கு ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்குபவராக இருந்திருக்கிறார் காந்தி! தென்னாப்பிரிக்காவில் காந்தி சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்தபோது, காந்தியை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் வாசலில் திரண்டு நின்றார்கள் என்பது வரலாறு. அவர் பின்னால் எப்போதுமே மக்கள் இருந்தார்கள். ஏனென்றால், அவர், அவர்களின் மனங்களில் இருந்தார். 75 வயதிலும்கூட சிறைக்குச் செல்லும் துணிவை, அவருக்கு அளித்தது அந்த மக்களின் அன்புதான்!

ஆனால், சாவர்க்கர் விவகாரம் அப்படியல்ல. அவருக்காக யாரும் இங்கே கொதித்தெழவில்லை. சாவர்க்கரை விடுவிக்கக்கோரி ஒரு போராட்டம்கூட இங்கே நடக்கவில்லை. ஏன், அவரது தரப்பினரேகூட அவரை மறந்துவிட்டிருந்தார்கள். சாவர்க்கருக்கும் மக்கள் செல்வாக்குக்கும் காத தூரம். சாவர்க்கர் என்றொருவர் இருக்கிறார் என்பதையே மக்கள் அறிந்திருக்கவில்லை. அறியும் அளவுக்கு சாவர்க்கரும் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அவர் பேசியதெல்லாம் வன்முறை, வெறுப்பு, பிரிவினை மட்டும்தான். சிறைக்குள்ளேயும் அவர் அதைத்தான் செய்தார். கைதிகளை இஸ்லாமியர், இந்துக்கள் என்று பிரித்துப் பார்த்து வேலையைக் காட்டினார். இது, அவர் எழுதிய அந்தமான் சிறை அனுபவங்கள் புத்தகத்திலேயே பதிவாகியிருக்கிறது. `இஸ்லாமியர்களின் தொழுகை நேரத்தில், சங்கநாதம் எழுப்புங்கள் என்று இந்துக்களை அவர் தூண்டினார்’ என்று, அவரது ஆதரவாளர்களே பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலே, `நான் நெருப்புடன் விளையாடுகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், அதை நான் தொடர்ந்து செய்வேன்’ என்று, ஆங்கிலேயனின் நீதிமன்றத்தில் நெஞ்சம் நிமிர்த்தி அறிவித்தவர் காந்தி!

ஜின்னாவுக்கு முன்பே, இரண்டு தேசங்கள் கோட்பாட்டை முன்மொழிந்தவர் சாவர்க்கர்தான். நன்றாகக் கவனிக்கவும். ஜின்னாவை வழிமொழிய வில்லை சாவர்க்கர். அவர்தான் முன்மொழியவே செய்கிறார். அந்த `Holy land' கருத்தாக்கத்திலேயே, இரண்டு தேசங்களுக்கான அடித்தளம் போடப்பட்டுவிட்டது. அதையே, பின்னாளில் அரசியல்வெளியில் விரித்தெடுத்தார் ஜின்னா. அதாவது, கல்லை உரசி நெருப்பைப் பற்றவைத்தார் சாவர்க்கர். ஜின்னா அதை ஊதிப் பெரிதாக்கினார். அவ்வளவுதான். உண்மையில் 1939-ம் ஆண்டு லாகூர் மாநாட்டில்தான், `இரண்டு தேசங்கள் (Two Nations)’ எனும் தீர்மானத்தையே போடுகிறது, முஸ்லிம் லீக். ஆனால், 1937-ம் ஆண்டே, `இரண்டு தேசங்கள்’ தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டது, இந்து மகா சபா. சாவர்க்கர் அப்போது அதன் தலைவர். 1937-ம் ஆண்டின் முற்பகுதியில், அகமதாபாத்தில் நடந்த இந்து மகாசபா கூட்டத்தில் பேசிய சாவர்க்கர், `இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றன. ஒன்று இந்துக்களுடையது, இன்னொன்று முஸ்லிம்களுடையது’ என்று பிரகடனம் செய்தார். அந்தப் பிரகடனமே பின்னர் தீர்மானமானது.

அடுத்து காட்சிக்கு வருகிறார், மாதவ சதாசிவ கோல்வால்கர். சாவர்க்கரின் சிஷ்யப்பிள்ளை இவர். கோல்வால்கர் என்ன சொல்கிறார் தெரியுமா? `இந்துப் பெரும்பான்மை அடையாள அரசியலே உண்மையான தேசியவாதம். அது அல்லாத எந்த அரசியலும் இந்தியாவுக்கு விரோதமானது’ என்று இன்னொரு குண்டைத் தூக்கி வீசுகிறார். இவர்களின் இதுபோன்ற கூற்றுகளுக்குப் பிறகுதான், ஜின்னா அதிக நம்பிக்கை கொள்கிறார். `அவர்களே சொல்லிவிட்டார்கள். அப்புறம் என்ன?’ என்று பிரிவினைக்கத்தியை இன்னும் ஆழமாக இந்தியாவின் நெஞ்சில் ஜின்னா இறக்க ஆரம்பித்தது 1940-களுக்குப் பிறகே! இன்னுமொரு தகவல். 1945-ம் ஆண்டு இன்னும் எல்லையைக் கடக்கிறார் சாவர்க்கர். `ஜின்னாவின் இரண்டு தேசங்கள் எனும் கருத்தாக்கத்தில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. நாம் இந்துக்கள் ஒரு தேசம், முஸ்லிம்கள் இன்னொரு தேசம்’ என்கிறார்.

இங்கே நாம் இன்னொன்றை பார்க்க வேண்டும். இன்றுவரை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏன் பாரத ரத்னா மறுக்கப்படுகிறது? எம்.ஜி.ஆரால் அடைய முடிந்த அந்த விருதை அவரின் ஆசான்களான அவர்களால் ஏன் அடைய முடியவில்லை? இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது ஒரே ஒரு விஷயம்தான். அதாவது, `அவர்கள் பிரிவினை பேசினார்கள்’ என்பது. பெரியாரும் அண்ணாவும் பேசியது பிரிவினை என்றால், சாவர்க்கர் பேசியதற்கு பெயர் என்ன? பெரியார், அண்ணாவுக்கு ஒரு நியாயம், சாவர்க்கருக்கு ஒரு நியாயமா?’அதெப்படி ஒரே விஷயத்தில் இரண்டு நியாயங்கள் இருக்க முடியும்’ என்பதே நாம் எழுப்பும் கேள்வி!

கடைசியாக, காந்தி கொலை! காந்தி கொலையில் சிக்கியவர்கள், மொத்தம் 9 பேர். நாதுராம் கோட்சே, அவரின் சகோதரர் கோபால் கோட்சே, நாராயண் ஆப்தே, விஷ்ணு கர்கரே, மதன்லால் பஹ்வா, ஷங்கர் கிஸ்தயா, தத்தாத்ரேயா பர்சுரே மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர். இன்னொருவர் இருக்கிறார். அவர் திகம்பர் பாட்ஜே. இந்த பாட்ஜே மிகவும் முக்கியமானவர். ஏனென்றால், இவரது வாக்குமூலம்தான் கோட்சேவுக்கும் சாவர்க்கருக்கும் இருந்த தொடர்பை, தெள்ளத்தெளிவாகக் காட்டியது. பாட்ஜேவின் வாக்குமூலம் இது... `1948 ஜனவரியில் நாங்கள் இருமுறை சாவர்க்கரை சந்தித்தோம். முதல் சந்திப்பு ஜனவரி 14-ம் தேதி நடந்தது. நான், நாதுராம், ஆப்தே மூவரும் பாம்பேயில் இருக்கும் சாவர்க்கர் சதனுக்குச் சென்றோம். இரண்டாவது மாடியில் அவரது அறை இருந்தது. நான் கட்டடத்துக்கு வெளியே நின்றேன். நாதுராமும் ஆப்தேவும் உள்ளே சென்றனர். சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தனர். `காந்தியையும் நேருவையும் முடிக்க வேண்டும் என்று அவர் சொன்னதாக கோட்சே என்னிடம் சொன்னார்’. `Gandhi and Nehru should be finished' என்ற வார்த்தையையே வாக்குமூலத்தில் சொல்கிறார் பாட்ஜே. அந்த ஜனவரி 14-ம் தேதிதான், கோட்சேவின் கைக்கு துப்பாக்கியும் வந்து சேர்கிறது.

அடுத்த சந்திப்பு, ஜனவரி 17-ம் தேதி நடக்கிறது. இப்போதும் அதே மூவர்தான் செல்கிறார்கள். இந்த முறை பாட்ஜே, சதனுக்குள் நுழைந்து, முகப்புப் பகுதியில் நிற்கிறார். 10 நிமிடம் கழித்து கோட்சேவும் ஆப்தேவும் மாடி அறையில் இருந்து வெளியே வருவதை, பாட்ஜே கவனிக்கிறார். அவர்களுக்கு முன்னால் நின்றபடி ஒரு மனிதர் பேசிக்கொண்டிருக்கிறார். அவரது முகம் பாட்ஜேவுக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், குரல் நன்றாகக் கேட்கிறது. அந்த நபர், மராத்தியில் பேசுகிறார். `வெற்றியுடன் திரும்புங்கள்’ என்று, அவர் இருவர்களிடம் சொல்லும் வார்த்தை பாட்ஜேவின் காதில் விழுகிறது. அடுத்து, ஜனவரி 20-ம் தேதி, காந்தியைக் கொல்ல ஒரு முயற்சி நடக்கிறது. அதைச் செய்தது, மதன்லால் பஹ்வா. `விஷ்ணு கர்கரேவால் சாவர்க்கரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவன் அவன்’ என்பது, சாவர்க்கரின் உதவியாளர்களான ராமச்சந்திர காசரும் விஷ்ணு தம்லேவும் அளித்த வாக்குமூலம். ஆனால், அந்த முயற்சி தப்புகிறது. பஹ்வா கைது செய்யப்படுகிறான். ஜனவரி 30-ம் தேதி காந்தி கொல்லப்படுகிறார். கோட்சேவின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட மூன்று குண்டுகள் அதைச் செய்கின்றன.

பாட்ஜேவை `நம்பகமான சாட்சி (Trustful Witness)’ என்றே வரையறுக்கிறார், விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி ஆத்ம சரண். ஆனால், அவரது சாட்சியத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள், கிடைக்காமல் போகின்றன. இதன் அடிப்படையிலேயே, சாவர்க்கர் விடுவிக்கப்படுகிறார். உண்மையில், கோட்சேவுக்கும் சாவர்க்கருக்கும் இருந்த உறவு குரு - சிஷ்யன் வகையிலானது. இந்து மகாசபா கூட்டங்களுக்கு, கோட்சேவையும் ஆப்தேவையும் அழைத்துச் செல்வதில், அதிக ஆர்வமாக இருந்திருக்கிறார் சாவர்க்கர். ஆனால், காந்தி கொலைக்குப் பிறகு, இருவருக்கும் இடையே விரிசல் உண்டாகிறது. காரணம், சாவர்க்கரின் சந்தர்ப்பவாத வாக்குமூலம்! கோபால் கோட்சேவின் வழக்கறிஞர் இனாம்தார் நாதுராமின் அப்போதைய மனவோட்டம் என்னவாக இருந்தது என்பதைப் பதிவு செய்கிறார். `நாதுராம் சிறையில் தனிமைப்பட்டுக்கிடந்தார். அவருக்கு அப்போது தேவைப்பட்டது அவரது கையை அன்பாகத் தொட்டு உரையாடக்கூடிய அவரது குருவின் சொல். ஆனால், அது நடக்கவில்லை. அந்த வருத்தத்தை சிறையில் என்னை சந்தித்தபோது பகிர்ந்துகொண்டார் நாதுராம்’ என்கிறார் அவர்.

1964 அக்டோபரில் கோபால் கோட்சே விடுதலையானார். அடுத்த மாதமே, அவருக்கு ஒரு வரவேற்பு விழா நடக்கிறது. அதில், `காந்தியைக் கொல்வதன் அனுகூலங்களை எனக்கு விளக்கினான் நாதுராம்’ என்று சொல்கிறார் கோபால் கோட்சே. விவகாரம் மீண்டும் வெடிக்கிறது. நீதிபதி ஜேஎல் காபூர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு, காந்தி கொலை மறு விசாரணை செய்யப்படுகிறது. இது நடந்தது 1965 மார்ச் மாதம். அடுத்த வருடம், பிப்ரவரி மாதம் சாவர்க்கர் இறக்கிறார். உணவையும் தண்ணீரையும் மறுத்து வலுக்கட்டாயமாக அவர் அந்த மரணத்தைத் தேடிக்கொள்கிறார். அவர் அந்த முடிவை எடுக்க முக்கியமான காரணம், காபூர் கமிட்டியால் அவர் முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டிருந்தார் என்பது. இன்னும் கொஞ்சநாள் இருந்திருந்தால், காபூர் கண்டிப்பாக சாவர்க்கர் கையில் விலங்கு மாட்டியிருப்பார். காபூர் அறிக்கையின் ஆறாம் அத்தியாத்தில், `Background of the accused' என்றொரு பகுதி இருக்கிறது. அதில், காந்தி கொலையில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு, விரிவாகவே பேசப்படுகிறது.

காந்தி மீதான சாவர்க்கரின் பகைக்கு மிக முக்கியக் காரணம், அவரது அகிம்சை! வாழ்வு முழுதுமே, `Hindu Masculinity (இந்து வீரம்)’ என்பது குறித்து தீவிரமாகப் பேசுகிறார் சாவர்க்கர். ஒன்று தெரியுமா? சாவர்க்கர் பசுவழிபாட்டை கடுமையாக எதிர்த்தவர். அதற்குப் பின்னால் இருந்தது, பன்மைத்துவத்தைப் பேணும் அக்கறை என்று தவறாக நினைக்க வேண்டாம். `பசுவை வணங்கினால் பசுவைப் போலவே நாமும் சாந்தமாகிவிடுவோம்’ என்று அவர் எண்ணியதே, அதற்குக் காரணம். அந்த அளவுக்கு அகிம்சை அவருக்கு ஆகாத ஒன்றாக இருந்தது. அவர் ஆரம்ப காலத்தில் அங்கம் வகித்த, அபினவ் பாரத் அமைப்பு, அடிப்படையிலேயே வன்முறையைப் போற்றும் அமைப்பு. அதிலிருந்து கிளைத்து எழுந்து வந்தவர் அவர்! இந்துக்களை வீரம்மிக்க ஒரு சமுதாயமாகவே அவர் உருவகித்தார். `பள்ளிகளில் படிப்பைவிட உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்று அவர் குரல் கொடுத்தது, அதற்காகவே. கனவு வெளியில், வேதகாலத்திலேயே வாழ்ந்துகொண்டிருந்த மனிதர் அவர். ஆகவே, அகிம்சை அவருக்கு பிடிக்கவில்லை.

இப்படிப்பட்டவர், வீரம்செறிந்த நேதாஜியுடன் இணைந்திருக்கலாமே என்ற கேள்வி, சிலருக்கு எழலாம். அந்தக் கேள்வி நியாயமான ஒன்று. ஆனால், அங்கேதான் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, காந்தியைப்போலவே, நேதாஜியும் உடையாத, மதச்சார்பு இல்லாத ஒரு இந்தியாவை கனவு கண்டவர். நேதாஜியின் அகிம்சையைக் காந்தி சந்தேகித்தாரே ஒழிய, அவரது மதச்சார்பற்ற தன்மையை அவர் எப்போதுமே சந்தேகித்ததில்லை. நேதாஜியின் படையில் இஸ்லாமியர்களும் அதிகளவில் பங்கெடுத்ததற்கு, அவரது மதச்சார்பற்ற தன்மையே காரணம். அது, சாவர்க்கரின் பிரித்தாளும் கொள்கைக்கு உவப்பானதாக இல்லை. அதுவும் இல்லாமல், சாவர்க்கர் களவீரரும் அல்ல. அவர் எப்போதுமே பின்னால் இருந்து இயங்குபவர். தூண்டிவிடுவதில் சமர்த்தர். `Man in the chair' என்போம் அல்லவா, அதே போன்றவர்.

இன்னொன்று தெரியுமா? அவர், இந்தியாவில் வைத்து கைது செய்யப்படவில்லை. லண்டனில் வைத்துதான் கைதானார். வில்லியம் கர்சனின் கொலையாக இருக்கட்டும், ஜாக்சனின் கொலையாக இருக்கட்டும், அவர் நேரடியாகச் செயலாற்றவே இல்லை. அதற்குரிய அத்தனை உதவிகளையும் செய்தார், திட்டங்களை வகுத்தார். `20 துப்பாக்கிகளை அவர் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பினார்’ என்கின்றன, தரவுகள். ஆனால், எங்குமே காட்சிக்கு வராமல் சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொண்டார் சாவர்க்கர். அந்தமான் சிறையிலும்கூட தூண்டிவிடும் வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். சக கைதிகளை உண்ணாவிரதத்துக்குத் தூண்டிவிட்டுவிட்டு, அவர் உணவருந்த சென்ற நிகழ்வும்கூட நடந்திருக்கிறது.

ஆகவே, இதுதான் சாவர்க்கர்! இவைதான் அவரது அரசியல்! மக்களைப் பிரித்தாளும் சித்தாந்தம், களத்துக்கு வராமல் பின்னே இருந்து இயங்குவது, மாட்டிக்கொண்டால் சீடனாகவே இருந்தாலும் கழட்டிவிடுவது என்று இருந்தவர் சாவர்க்கர். அவரது சித்தாந்தத்தாலோ, அவரது செயற்பாடுகளாலோ இந்தியாவுக்கும் எந்தப் பயனுமில்லை. இவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும், `சாவர்க்கருக்கு பாரதரத்னா கொடுத்தால் என்ன தப்பு’ என்று கேட்பவர்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. குறைந்தபட்சம் ஒன்றை மட்டுமேனும் உணர்வோம். சாவர்க்கர் முன்னே எழுந்துவரும் ஒவ்வொருமுறையும் அசோகர் புதைக்கப்படுகிறார், அவரது தத்துவம் புதைக்கப்படுகிறது. ஒன்றை யோசிப்போம். அகிலத்தின் எத்தனையோ நாடுகளில் ஜனநாயகம் வெறும் கனவாக மட்டுமே இருக்கும் சூழலில், இந்தியா மட்டும் எப்படி அதை இன்னும் தக்கவைத்திருக்கிறது? காற்றடித்தாலும் மழையடித்தாலும், இந்தியாவின் ஜனநாயக தீபம் மட்டும் தொடர்ந்து ஒளிர்வது எப்படி. காரணம் எளிது. ஏனென்றால், இந்தியாவின் மரபிலேயே ஜனநாயகப் பண்புகள் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கின்றன. கட்டியவர், அந்த மகா சக்கரவர்த்தி அசோகர்! அவரும் ஓர் அரசர்தான். ஆனால், மற்ற அரசர்களிடம் இருந்து அசோகர் எங்கே வேறுபடுகிறார் தெரியுமா. மக்களின் மீதான அபிமானத்தில் வேறுபாடுகிறார். மரபை சீரமைத்து முன்னெடுத்துச் சென்றதில், வேறுபடுகிறார். கலிங்கத்தின் தயா நதிக்கரையில் இறந்து மிதந்த மனித உடல்களைக் கண்டு, ‘என்ன செய்துவிட்டேன் நான்...’ என்று வருந்திய குரலில், வேறுபடுகிறார்.

ஆம். இத்தேசம் அசோக தத்துவத்தால் கட்டமைப்பட்டது! `வரலாற்றை நிறைத்து நிற்கும் எத்தனையோ பேரரசர்களின் பெயர்களின் மத்தியில், அசோகர் மட்டுமே ஒரு வீழா நட்சத்திரமென தனித்து ஒளிர்கிறார்’ என்று ஆய்வாளர் ஹெச்.ஜி. வெல்ஸ் விழிவிரித்து கூறினாரே, அந்த அசோகரின் தத்துவத்தால் கட்டமைக்கப்பட்டது! இதை உணர்ந்தே, சிவாஜியை இடதுபக்கமும் அக்பரை வலது பக்கமும் ஒதுக்கிவிட்டு, அசோகரை இந்தியாவுக்கு அடையாளமாக்கினார் நேரு. தர்ம சக்கரம் சுழலும் அந்தச் சிங்கச்சிலையை இந்திய சின்னமாக்கி, `எழுக அவர் வேதம். எக்குடியும் என்குடியே என்றுரைக்கும் அசோகவேதம்’ என்று நேரு அறிவித்தபோது, இந்திய அன்னை துள்ளிக்குதித்து கூத்தாடினாள். சாவர்க்கர் வழிபாடு, அவளின் அந்த சந்தோஷத்தைக் கண்டிப்பாக நிர்மூலமாக்கும். 2,000 ஆண்டுகளாக இந்த மண்ணில் ஊறி நின்றிருக்கும் மகத்துவத்தை, அது 20 வருடங்களுக்குள் அழித்தொழிக்கும்.

அறிக... அசோகரே புதைகிறாரென்றால் காந்தியும் இருக்கப்போவதில்லை. நேருவும் அகன்றிருப்பார். அம்பேத்கரும் கூட கைவிட்டிருப்பார். இது உருவாக்கப்போகும் விளைவை, நம்மால் இப்போது உணர முடியாது. ஹிட்லரின் ஜெர்மனியாக, நத்தேன்யாஹூவின் இஸ்ரேலாக இத்தேசம் மாற்றப்பட்ட பிறகுதான், நமக்கு அந்த உணர்வு எழும். ஆனால், அப்போது எல்லாமே கையைமீறிப் போயிருக்கும். நமக்கான கங்கைகளைத் தேடி நாம் அலையத் தொடங்கியிருப்போம். நாசிக்குள் புகுந்து நம்மை நிலைகுலையச் செய்யும் ரத்தத்தின் வீச்சத்தை நம்மால் கடக்கவே முடியாமல் இருக்கும். அது வீடோ, அலுவலகமோ, பேருந்தோ, ரயிலோ, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வெறுமனே அமர்ந்திருப்போம். உண்ணச் சென்றால், தட்டில் இஸ்லாமிய குழந்தையின் உடைக்கப்பட்ட வெள்ளெலும்பு உணவென நெளியும். உறங்கச் சென்றால், கிறிஸ்துவ குழந்தையின் உரிக்கப்பட்ட தோல், படுக்கை விரிப்பென விரியும். அரண்டு ஓடிவந்து வெட்டவெளியில் நின்று, வான்நோக்கி இறைஞ்சுவோம், `அய்யோ... அப்போதே உணரத் தவறிவிட்டோமே...’ என்று. அதைக் கேட்கவும் அப்போது நாதியிருக்காது. கடவுளால் தனித்துவிடப் பட்டிருப்போம். அறத்தால் தள்ளிவைக்கப் பட்டிருப்போம். மனிதர்களை மதத்தாலும், இனத்தாலும் பிரித்து அரசியல் செய்த அரக்கர்களின் பின்னால் நின்ற அத்தனை பேருக்கும் கடைசியில் எஞ்சுவது, தீரா பழிச்சொல்லும், விலகா பெரும் பாவமுமே.

அது நமக்கு உவப்பென்றால், சாவர்க்கருக்கு பாரதரத்னா அளிப்போம். அடுத்து, கோல்வால்கருக்கும். கடைசியாக, கோட்சேவுக்கும்!

நன்றி விகடன்

ஆயிரம் பேர் தங்கும் கேம்ப், 40 கோடி செலவாகும்

Sandy
2019-12-21

குடியுரிமை திருத்த மசோதா (CAB):
கேள்வி-பதில் பாணியில் சில விளக்கங்கள்..

1. இந்தியாவில் இது தான் முதல் குடியுரிமை சட்டம்மா?

இல்லை, 1955 ஆம் ஆண்டு முதல் குடியுரிமை சட்டம், 1995 ஆம் ஆண்டு இரண்டாம் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

2. அந்த சட்டங்கள் குறிப்பிடுவது என்ன?

இந்தியாவில் குடியுரிமை கோரும் வெளிநாட்டவருக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பாக, 1995 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, இந்தியாவில் 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்து, குடியுரிமை கோருபவர்களுக்கு, இந்திய குடியுரிமை கொடுக்கலாம்.

3. பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு புகலிடம் தேடி வந்த இந்துக்களுக்கு, இதற்க்கு முன் குடியுரிமை கொடுக்கப்படவில்லையா?

மிகவும் தவறானது, 1947 பிரிவினையின் போது இடம்பெயர்ந்தவர்களுக்கு அப்போதே இந்திய குடியுரிமை கொடுக்கப்பட்டுவிட்டது.. அதின் பின்னர் புகலிடம் தேடி வந்தவர்களுக்கு, அப்போதைய குடியுரிமை சட்டத்தின் படி 11 ஆண்டுகள் இந்தியாவில் வாசித்தபின், இந்திய குடியுரிமை கொடுக்கப்பட்டு வந்தது.

4. அப்படியென்றால், இப்போதைய சட்ட திருத்தம் சொல்வது என்ன?

இந்த சட்ட திருத்தம், பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு புகலிடம் தேடி வரும் "முஸ்லீம்" அல்லாதவர்கள், 11 ஆண்டுகள் இந்தியாவில் வசிக்கவேண்டும் என்ற பழைய சட்டத்துக்கு பதில், 5 ஆண்டுகள் வசித்தாலே, இந்திய குடியுரிமை கொடுக்கலாம் என்பது தான்.

The law reduces duration of residency from existing 11 years to just five years for people belonging to the same six religions and three countries. The Act covers six communities namely Hindu, Sikh, Buddhists, Jains, Parsis and Christian migrants from Pakistan, Bangladesh and Afghanistan

5. அப்படியென்றால் இந்த மூன்று நாடுகள் தவிர, பிற நாடுகளில் இருந்து வந்து இந்திய குடியுரிமை கோருபவர்களுக்கு?

அவர்கள் பழைய சட்டத்தின் படி 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்..

6. குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு இந்தியாவில் வசித்திருக்க வேண்டிய ஆண்டுகளின் எண்ணிக்கையை 11 லிலிருந்து 5 ஆண்டுகளுக்கு குறைத்ததற்காகவா இங்கே அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு?

இல்லை, இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு இரு முனைகளில் இருந்து வருகிறது. 

முதல் வகை : இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக, மத அடிப்படையில் வித்தியாசப்படுத்துவதை எதிர்த்து..

 இரண்டாவது வகை : வடகிழக்கு மாநிலங்களில், ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மீறுவதை எதிர்த்து..

7. ஏன் வடகிழக்கு மாநிலங்களில் எதிர்க்கிறார்கள்?

இந்திய சுதந்திரத்திற்கு முன்பே இந்து முஸ்லிம் உள்ளிட்ட வங்காளிகள் வடகிழக்கு மாநிலங்களில் குடியேறினார்கள், அப்போது அங்கிருந்த அஸ்ஸாம் மற்றும் எண்ணற்ற பூர்வகுடி மக்களுடன் மோதல்கள் உருவாகியது.. தொடர்ச்சியாக இந்த குடியேற்றம் நடந்து வந்தது.. 

1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் என அப்போது அழைக்கப்பட்ட பங்களாதேஷ் நாட்டின் விடுதலை போரின் போது, எண்ணற்ற வங்காள மொழி பேசும் இந்துக்களும் முஸ்லிம்களும் அசாம் திரிபுரா போன்ற மாநிலங்களில் அகதிகளாக குடியேறினார்கள்.. போர் முடிந்த பின் பெருமளவு அகதிகள் மீண்டும் பங்களாதேஷ் நாட்டிற்கு திரும்பி விட்டார்கள், இருந்தாலும் சிலர் இங்கேயே தங்கிவிட்டார்கள்..

இப்படி அம்மாநிலங்களில் குடியேறிய வங்க மொழி பேசும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களால் தங்களது மொழி கலாச்சாரம் பாதிக்கப்பட்டு தாங்கள் தங்களுடைய மாநிலங்களில் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக வட கிழக்கு மாநில இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து இவர்களை எதிர்க்க ஆரம்பித்தார்கள் அப்போது உருவானதுதான் உல்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள்.

பல தீவிரவாத இயக்கங்கள் தோன்றி, குடியேறிய வங்க மொழி பேசும் இந்து மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக போராடினார்கள். அசாம் மாநிலமே தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு, போராடிய தீவிரவாத இயக்கங்களை அழைத்து 1983 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டது, அதுதான் அசாம் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது..

இந்த ஒப்பந்தத்தின் படி 1971 ஆம் ஆண்டுக்கு முன்பு குடியேறிய வங்க மொழி பேசும் மக்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும், அதற்குப்பின் குடியேறிய வங்க மொழி பேசும் மக்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை வழங்கப்படாது என்பதுதான் அசாம் ஒப்பந்தத்தின் அடிப்படை சாராம்சம். இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகுதான் அசாம் மாநிலத்தில் தீவிரவாதம் ஒழிந்து, அமைதி திரும்பியது.

இப்போது, இந்த ஒப்பந்தங்களை மீறி, வடகிழக்கு மாநிலங்களில் குடியேறியுள்ள வங்காள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து தான் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையாக எதிர்த்து போராடுகிறார்கள்..

8. இந்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பா?

நேரடியான பாதிப்பு இல்லை, ஆனாலும் என் ஆர் சி எனப்படும் குடிமக்கள் பதிவேடு சட்டம் வந்தால், வங்காள முஸ்லிம்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு..

 காரணம் மேற்குவங்காளத்தில் அதிகளவு பூர்வீக வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், அவர்களை பங்களாதேஷில் இருந்து வந்தவர்கள் என்ன சொல்ல வாய்ப்புண்டு.. 

அதே போல், குடியுரிமையை நிரூபிக்க பழைய ஆவணங்கள் இல்லை என்றால் சிக்கல் தான்.. இந்தியா போன்ற நாடுகளில் சாதாரண பொதுமக்கள் எத்தகைய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி..

9. அப்படி என்றால் இந்த சட்டத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

காரணம் இதுதான் சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக மத அடிப்படையில் வித்தியாசம் பார்க்கும் சட்டம்.. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருப்பதால் எதிர்க்கிறார்கள்..

10. சிலர் சொல்வதுபோல உண்மையிலேயே அண்டை நாடுகளில் இருந்து கள்ளத்தனமாக இந்தியாவுக்கு வருகிறார்களா?

மிக மிக குறைவு ஆண்டுக்கு 10 பேர் வந்தாலே அதிகம், அதிலும் பாகிஸ்தானில் இருந்து முஸ்லிம்கள் வருவது கிடையாது.. 

அதுபோல வங்காளத்தில் இருந்தும் பெங்காலி முஸ்லிம்கள் வருவது மிக சொற்பமே.. இந்தியாவை சுற்றி இருக்கும் சர்வதேச எல்லையை 24 மணி நேரமும் பாதுகாப்பது, மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் வரும் நமது இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர்.. இவர்களை மீறி, எப்படி பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து கள்ளத்தனமாக ஊடுருவி வருகிறார்கள்?? 

அப்படி என்றால் இந்திய ராணுவ வீரர்கள் திறமை இல்லாதவர்களா??

11. அப்படி என்றால் லட்சக்கணக்கான அகதிகள் எப்போது வந்தார்கள்?

முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட இன்றைய பங்களாதேஷ் நாட்டின் சுதந்திரப் போரின்போது அகதிகளாக வங்காள ஹிந்து மற்றும் முஸ்லிம்கள் அடைக்கலம் தேடி இங்கே வந்தவர்கள்.. அதில் பெரும்பாலானோர் போர் முடிந்தபின் பங்களாதேஷ் நாட்டிற்கு திரும்பிவிட்டனர்.

12. ஏற்கனவே 11 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் குடியுரிமை வழங்கப்படும் என்று சட்டம் இருக்கும் நிலையில், இந்த சட்டத்திருத்தம் எதற்காக??

அதுதான் பிஜேபியின் அரசியல்.. மேற்குவங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வருகிறது அங்கு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த இது ஒரு வாய்ப்பு.. 

அதாவது பங்களாதேஷிலிருந்து முஸ்லிம்கள் இங்கே வந்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்யவும், முன்னர் வந்த பெங்காலி இந்துக்களுக்கு மட்டும் குடியுரிமை அளிப்போம் என்று சொல்வதன் மூலம், மதரீதியான அணிதிரட்டல் செய்வதற்குத்தான் இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்..

13. சிலர் சொல்லுவது போல் பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளில் உள்ள இந்துக்கள் மக்கள்தொகை குறைந்து விட்டதா? மதரீதியாக கொடுமை படுத்தப்படுகிறார்களா?

அவர்கள் தவறான புள்ளி விவரங்களை கொடுக்கிறார்கள்.. நாடு பிரிவினையின் போது கிழக்கு பாகிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தான் இரண்டிலும் இருந்த இந்து மக்கள் தொகையை வைத்து, பங்களாதேஷ் பிரிந்தபின் பாகிஸ்தானில் இந்து மக்கள் தொகை குறைந்துவிட்டதை மறைத்து, தவறாக புள்ளிவிவரங்களை சொல்கிறார்கள்.

 பார்க்கப்போனால் பாகிஸ்தானில் முன்னர் இருந்ததைக் காட்டிலும், ஒரு சதவிகிதம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.. அதுபோல தற்போது இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சூழலைப் போல, கண்டிப்பாக பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் உள்ள இந்துக்களுக்கு எதுவும் நேரவில்லை என்பதை உறுதியாக சொல்லலாம்.. 

வட மாநிலங்களில்  முஹம்மத் அக்லாக்ஹ் போல பலர் கும்பல்களால் அடித்து கொல்லப்பட்டதை போல அங்கே நடப்பதில்லை...

14. இந்த சட்டத்தை உண்மையிலேயே அமல்படுத்த முடியுமா?

உதாரணமா, 10 லட்சம் வங்காள
முஸ்லிம்களை வெளியேற்றம் செய்யன்னும்.. பங்களாதேஷ் ஏற்கனவே சொல்லிட்டாங்க, அவங்க இந்திய குடிமக்கள், நாங்க ஏற்றுக்கொள்ள மாட்டோம்.. எந்த நாடும் ஏற்றுக் கொள்ளாத போது, 10 லட்சம் பேர் எங்க போவாங்க?? 

கேம்ப் கட்டி அவங்கள தனியா தங்க வைக்கணும்ன்னா, ஆயிரம் பேர் தங்கும் கேம்ப், 40 கோடி செலவாகும்.. அசாமில் ஒன்றை கட்டினார்கள்.. அப்படின்னா ஆயிரம் கேம்ப் க்கு 40 ஆயிரம் கோடி..

 இது வெறும் கேம்ப் கட்டும் செலவுதான்.. அப்புறம் 10 லட்சம் பேருக்கு சாப்பாட்டு செலவு எத்தனை ஆண்டுகளுக்கு?? இது வெறும் அசாம் கணக்கு மட்டும்தான்.. மேற்கு வங்காளத்தில் ஒரு 25 லட்சம் இருந்தா, ஒட்டுமொத்த இந்திய பட்ஜெட் அதுக்குத்தான் செலவாகும்.. அதனால இதெல்லாம் ஆகாத காரியம்..

அப்போ என்ன டேஷக்கு இதை பண்றாங்க.  

ரொம்ப சிம்பிள் எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறார் என்று நிரூபிப்பதற்காக.

 திருவாளர் Sandy அவர்களின் பதிவு