Omar Sahrif
2020-01-18
தரவு 1: எங்கள் ஊரில் இருக்கும் இறைச்சிக் கடையில் ஒரு நாளைக்கு ஒரு மாடு எனும் விகிதத்தில் தான் இறைச்சி விற்கப்படும். ஊரில் இருக்கும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 800இற்கும் சற்று மேல்.
தரவு 2: மனித பரிணாம வளர்ச்சியின் படி மனிதன் என்பவன் ஒரு omnivore அதாவது அனைத்தும் உண்ணி. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அவனால் தாவரம், மாமிசம் இரண்டையும் உண்ணவும், சமிபாடடையச் செய்யவும் முடியும்.
தரவு 3: உணவுச் கலாச்சாரம் என்பது நிலம், தட்பவெட்பம், சூழல், மனித உடல் - உழைப்பு போன்ற பிரதான காரணங்கள் மற்றும் இன்னபிற காரணங்களுக்கமைய மாறுபடும். இக்கலாச்சாரம் பல்லாயிரம் வருடங்கள் பரிணாம வளர்ச்சியைக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு தென்னாசிய மக்களின் உடல் உழைப்பிற்கும் ஐரோப்பியனின் work smart not hard ஏற்ப அவர் அவர் உணவு கலாச்சாரம் சுவை, வகையறா, அளவு போன்றவற்றில் பயங்கரமாக மாறுபடும். இதை ஒன்றும் பண்ண முடியாது. வழுக்கட்டாயமாக மேற்கு உணவுக்கலாச்சாரத்தை இங்கு திணிக்க முயன்றாலும் இன்னும் பகல் சோற்றை replace பண்ண முடியவில்லை.
தரவு 4: எமது ஒருவேளை பிரதான உணவில் சோறு, ஏதாவது ஒரு இறைச்சி வகை அல்லது முட்டை, ஒன்றிரண்டு மரக்கறி, கீரை இருக்கும். இந்த வீகனிஸ்ட் மற்றும் அனிமல் அக்டிவிஸ்ட் நினைத்துக் கொண்டிருப்பது எப்படியென்றால் நாமெல்லாம் ஒருவேலை உணவிற்கு தனியொரு மாட்டை சாப்பிடுகிறோம் என்று.
தரவு 5: உணவுச் சங்கிலி என்று ஒரு வஸ்து இருக்கின்றது. தாவரங்களை மாத்திரம் உண்பவை, மாமிசம் மாத்திரம் உண்பவை, இவையிரண்டையும் உண்பவை. இயற்கையாகவே அமைந்திருக்கும் balance இது. இதற்குள் இருக்கும் விளக்கங்கள் மாத்திரமே விஞ்ஞான விளக்கமாக அமையும். இதற்கு முரணாக இருப்பவை எவ்வளவு முக்கினாலும் விஞ்ஞானத்திற்கு முரணாகவே இருக்கும்.
தரவு 6: இலங்கையில் குறைபோஷக்குடையவர்கள் 22% சரியான போஷனை உணவு கிடைக்கப் பெறாதவர்கள் 33% இதில் பாதிப்பிற்குள்ளானவர்கள் பெரும்பாலும் குழந்தைகள்.
தரவு 7: மகப்பேறு நிலையங்களில் தொடர்ந்தும் வலியுறுத்தும் ஒரு விடயம் iron. குழந்தைகளுக்கு இரும்புச்சத்துள்ள உணவுகளை கொடுங்கள் என்பதுதான். இரும்புச்சத்து அதிகம் இருப்பது ஈரல். அங்கு பணியாற்றும் தாதிமார்கள் குறைபட்டுக்கொள்ளும் ஒரு விடயம் பெரும்பாலானவர்கள் (சிங்களவர்கள்) இறைச்சி வகைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை என்பதுதான்.
தரவு 8: Veganism என்பது மேற்கில் உருவான ஒரு மொண்ணைத் தனமான கன்சப்ட். Animal Cruelty என்ற ஒரு விடயத்தை வைத்து உருட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் எவரும் குழந்தைப் பருவத்தில் இருந்து வீகனிஸத்தை ஆரம்பித்தவர்கள் இல்லை. நன்றாக உண்டு, குடித்து விட்டு தமது இன்னொரு பென்டசியாக உருவாக்கிக் கொண்டதே இந்த வீகனிஸம்.
தரவு 9: நாம் பழகியிருக்கும் உணவு முறைக்கு ஒருபோதும் வீகனாக மாற முடியாது. ஒரு இறைச்சித் துண்டுக்கு பகரமாக எவ்வளவு மரக்கறி, கீரை, தானிய வகைகள், nuts சாப்பிட வேண்டும் என்பதை calorie நிபுணர்களிடம் கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
தரவு 10: இந்த நவீன முதலீட்டியம் எப்படி மனிதனின் உணவுக் கலாச்சாரத்தில் புகுந்து அவற்றை தமது வியாபார லாபங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கின்றது என்பதையும் இந்த வீகனிஸத்தையும் ஒப்பிட்டுப் பாரத்தால் இந்த கணக்கு விளங்கும்.
https://m.facebook.com/story.php?story_fbid=10207124562348731&id=1721970697
No comments:
Post a Comment