Wednesday, January 8, 2020

ஆலய நுழைவு போராட்டத்தில் மூஸ்லீம்களின் பங்கு

Dhileepan Bakutharivu
2020-01-07

17 ஆகஸ்டு 1938.

ராவ் பகதூர் எம்.சி.ராஜா விடாப்பிடியாக கோயில் நுழைவு மசோதா ஒன்றை மெட்ராஸ் மாகாணத்தின் முதல் சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். கோயில்களுக்குள் அனைத்து சாதியினரும் நுழைய வழிவகுக்கும் இந்த மசோதாவுக்கு முதல் முட்டுக்கட்டை போட்டவர் அன்றைய மாகாண முதல்வர் ராஜாஜி. "புது சட்டம் எதுவும் தேவை இல்லை. இதற்கு மக்களின் ஆதரவு இருக்காது", என்பது அவரது வாதம். 

ராஜா விடுவதாக இல்லை. விடாப்பிடியாக வாக்கெடுப்புக்கு விட்டே ஆக வேண்டும் என்று வாதிட, அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் நுழைய வழி செய்யும் ரிமூவல் ஆஃப் சிவில் டிசெபிலிட்டி பில் வாக்கெடுப்புக்கு வந்தது. அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் 24 பேர் மட்டுமே! அவர்களின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:
1. குமாரராஜா முத்தையா
2. ஆதிமூலம்
3. அப்பாதுரை
4. பக்தவத்சலு
5. கவுஸ் முஹைதீன்
6. ராஜா ராவ்
7. லால்ஜான்
8. கிராந்தி வெங்கடர்
9. செல்லப்பள்ளி ஜமீன்
10. அப்துல் ஹமீது கான்
11. அப்துல் ரவூப்
12. அப்துல் அலி ராசா, ஆரக்கல் சுல்தான்
13. அப்துல் ரகுமான் கான்
14. ஹெச் எஸ் ஹுசைன்
15. ஷேக் தாவூத்
16. ஷேக் மன்சூர்
17. முகம்மது அலி பேக்
18. அகமது பாதுஷா
19. கே சி சப்தரிஷி
20. கலீஃபுல்லா
21. ஆர் எம் பலட்
22. எம்.சி. ராஜா
23. சுவாமி சகஜானந்தம்
24. ஆரி 

மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்தவர்கள் 130 பேர்! நடுநிலை எடுத்தவர்கள் 8 பேர். அவர்களில் 7 பேர் ஆங்கிலேயர் அல்லது ஆங்கிலோ இந்தியர். மீதமுள்ள அந்த ஒருவர் தன் கணவரை எதிர்த்து நடுநிலை எடுத்தவர். அவர் கணவரோ ராஜாஜியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மசோதாவை எதிர்த்து ஓட்டளித்த அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் யாகூப் ஹாசன் சேட். நடுநிலை எடுத்த அந்தப் பெண்மணி, யாகூப் ஹாசனின் மனைவியும், மாகாணத்தின் முதல் இசுலாமியப் பெண் சட்டமன்ற உறுப்பினருமான துருக்கி நாட்டைச் சேர்ந்த கதீஜா யாகூப் ஹாசன்!  

ஆக, அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று வாக்களித்தவர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் - இசுலாமியர்! கணவரை எதிர்த்து நடுநிலை எடுத்த ஒரே பெண்ணும் இசுலாமியர்!

*வரலாறை அறிய வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தப் பதிவு. இங்கு வந்து மத ரீதியாக கம்பு சுற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்!

#மீள்



https://m.facebook.com/story.php?story_fbid=2834135776671604&id=100002256278432

No comments:

Post a Comment