*எழுதியவர்: Jagadeesan Saivaraj*
---------------------------
உங்களுடைய shoe வை எடுத்து அதில் இருக்கும் lace ஐ பாருங்கள். அதன் முனையில் ஒரு கச்சை (Aglet) இருக்கிறதவல்லவா? அது எதற்காக கொடுக்கப்பட்டுள்ளது? Shoelaces லிருந்து நூல்கள் திரிந்து வராமல் இருக்க.
சரி இப்போது நமது உடலில் இருக்கும் ஒரு செல்லை எடுத்துக்கொண்டால் அதில் உட்கரு இருக்கும், உட்கருவில் குரோமோசோம் இருக்கும். இந்தக் குரோமோசோமை எடுத்துக் கொள்வோம்.
* குரோமோசோம் என்பது நூல் போன்ற நீளமான DNA மற்றும் புரதங்களால் ஆனது.
* இந்த நீளமான டி.என்.ஏ நூலைச் சுருக்கி, செல்லின் உட்கருவில் அழகாகவும் நேர்த்தியாகவும் அடைத்து வைக்கும் வேலையைத்தான் இந்த குரோமோசோம்கள் செய்கின்றன.
ஒவ்வொரு குரோமோசோமின் முடிவிலும் மேலே சொன்ன சூலேசில் இருக்கும் முனைக்கச்சை போன்று ஒரு அமைப்பு இருக்கும். அதன் பெயர் தான் Telomeres.
இது என்ன செய்யும்?
* குரோமோசொமில் இருக்கும் நூல் போன்ற டி என் ஏ திரிந்து வராமல் பாதுகாக்கும்.
* குரோமோசோம் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் பாதுகாக்கும்.
* ஒருவேளை குரோமோசோம் உடைந்தால் உடைந்த பகுதி இன்னொரு முனைப்பகுதியோடு இணைந்திடாமல் தடுத்து, உடைந்த பகுதியோடு மட்டுமே இணைவதை உறுதி செய்யும்.
இதுபோக மிக முக்கியமான வேலையையும் இது செய்கிறது. நமது உடலில் பெரும்பாலான செல்கள் பகுக்கும் திறனுடையவை அதாவது செல் பிரிதல் (cell division).
இப்படி பகுக்கும் செல்களுக்கு நீ பிரிவதை நிறுத்திக்கொள் என யார் சொல்வது? அந்த முக்கியமான வேலையைத் தான் இந்த Telomeres செய்கின்றன. எப்படி?
* தனது நீளத்தை குறைத்துக் கொள்வதன் வாயிலாக. ஒவ்வொரு பகுத்தலின் போதும் Telomeres யின் நீளம் குறைந்து கொண்டே வருகிறது.
* முற்றிலுமாக குறைந்த உடன் அந்த செல் பகுவதை நிறுத்திக் கொள்கிறது.
* அதன் பின் அந்த செல் ஒரு ஜாம்பி செல்லாக மாறி விடுகிறது.
* இது முக்கியமாக உடலின் நோய் தடைகாப்பு மண்டல செல்களில் நடக்கிறது.
இந்தச் செயல்பாடு எதை நினைவுபடுத்துகிறது? வயது முதிர்தலை நினைவு படுத்துகிறதா? நமக்கு வயதாகும் போது இது தான் நமது உடலில் நடக்கிறது.
இதையெல்லாம் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் இந்த டெலோமியர்கள் வளர்வதற்கும் தேய்வதற்கும் வேறு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதையும் ஆராய்ந்தனர்.
* டெலோமியர்கள் வளர்வதற்கு டெலோமரேஸ் எனும் நொதி காரணமாய் இருக்கிறது என்பதை எலிசபெத் பிளாக்பார்ன் என்கிற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். அதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
டெலோமியர்கள் தேய்வதற்கு மிக முக்கியமான காரணம் என ஒன்றையும் கண்டுபிடித்தனர். எது?
* Lower Socio- economic status. சமூகத்தில் நிலவும் சமூக - பொருளாதார வேறுபாடுகள் மிக முக்கியமான காரணம் என கண்டறிந்தனர்.
சமூகத்தில் பல தரப்புகளில் ஒடுக்கப்படும் மக்களின் டெலோமியர்கள் மற்றவர்களை காட்டிலும் வெகு விரைவில் தேய்கிறது. அதனால் அவர்கள் சீக்கிரமே வயது முதிர்வினை அடைகிறார்கள். வயது முதிர்வினால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை எல்லோரும் அறிவோம்.
* நம்முடைய நோய் தடையாப்பு மண்டலம் சரிவர வேலை செய்யாது,
* நம்முடைய நினைவுத்திறன் மங்கி போகும்,
* உடல் உறுப்புகள் யாவும் சரிவர வேலை செய்யாது.
* இப்படி ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறக்கும் ஒரு குழந்தை, நல்ல ஒரு சமூக - பொருளாதார சூழல் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தையை விட பத்து வருடம் முன்னதாகவே வயது முதிர்வை அடையும். ஒடுக்கப்பட்ட மக்களின் சுற்றுப்புறம் என்பது எப்போதும் அழுத்தங்களால் சூழப்பட்டது:
* தெருவில் வசிக்கும் பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தை மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்து போயிருக்கும்.
* வேலைக்குப் போன இடத்தில் தனது பெற்றோர் விபத்தில் சிக்கி இறந்து போயிருப்பர்.
* தன்னை மேலத்தெருவை சேர்ந்த ஒருவன் சரியான கூலி கேட்டதற்கு "போடா பறப்பயலே" என திட்டி அடித்து இருப்பான்.
* நான் உட்கார்ந்த இடத்தை தீட்டு என சொல்லி தண்ணீர் விட்டு கழுவி விடுவான்.
* என்னை விலங்குகளுக்கும் கீழான ஒரு உயிரினமாக என்னுடைய முதலாளி நடத்தி இருப்பான்.
* அம்பேத்கர் தெரு என்பதால் எனக்கு வேலை தராமல் இழுத்து அடித்திருப்பர்.
* நான் இந்த சாதி என தெரியும்போது எனது பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தவன் பாதியிலேயே எழுந்து போயிருப்பான்.
* தண்ணீர் கேட்டால் கொட்டாங்குச்சியில் தண்ணீர் கொடுத்திருப்பர்.
* மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு கொல்லப்பட்டிருப்பார்
* அவரது கர்ப்பிணியான மனைவி/மகள்களின் வயிறு கிழிக்கப்பட்டு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கும்.
* அவர்களின் சொத்துரிமை, வழிபாட்டுரிமை, ஓட்டுரிமை போன்ற அடிப்படை உரிமைகள் ஃபாசிஸ்டுகளால் தெடர்ந்து மறுக்கப்பட்டது
இதெல்லாம் தான் stress factors. இது தான் டெலோமெராஸ் நொதியை மழுங்க செய்கிறது. டெலோமெரின் நீளத்தை குறைகிறது. அதனால் சீக்கிரம் வயதானவர்களாக ஆகிறார்கள்.
உங்களுக்கு மூன்று நாட்களுக்கு மேலும் உடம்பு சரியில்லை என்றால் மருத்துவர் ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வார். அதில் C-Reactive Protein என்கிற சோதனையும் அடங்கும்.
* நோய் தொற்று இருந்தால் இதன் அளவு அதிகமாக இருக்கும்.
* அது மட்டும் இல்லை அதிகப்படியான மன அழுத்தம் இருந்தாலும் அழற்சி அதிகரித்து இதையும் அதிகரிக்கும்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வளரும் குழந்தைகள் அதிக மன அழுத்தத்துடனே வளர்கிறார்கள். அதனால் அவர்களது C-Reactive Protein அதிகமாகவே இருக்கிறது, மேலும் சீக்கிரமே இதயம் செயல் இழந்து மரணிக்கிறார்கள்.
இதை விட கொடுமையான விஷயம் இம்மாதிரியான விளைவுகள் எல்லாம் நமது ஜீனில் பதியப் பெற்று அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படும். என் அம்மாவை கருவில் சுமக்கும் போது எனது பாட்டி ஏதேனும் ஒரு வகையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தால் அது என்னுடைய தலைமுறையே பாதிக்கும். இவை எல்லாம் அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட விஷயங்கள்.
வறுமையிலும் ஒடுக்கு முறையிலும் வளரும் இந்த குழந்தைகள்
* சரியான வழிகாட்டுதல் இல்லாமல், சரிவர முடிவு எடுக்க தெரியாமல் சீக்கிரமே குடி மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.
* வண்டியில் வேகமாய் போய் விழுந்து மரணிக்கிறார்கள்.
* ரயிலில் படியிலே தொங்கி சாகசம் செய்து மரணிக்கிறார்கள்.
* கல்வியை விடுத்து அரிவாள் கத்தியுடன் ரீல்ஸ் போடுகிறார்கள்.
*சரிவர முடிவு எடுக்க தெரியாமல் போய் சாகிறார்கள் என்றால் சாகட்டுமே என்று தானே நினைக்கிறீர்கள்?*
நீங்கள் கண்டிப்பாக நினைப்பீர்கள்.
உண்மையில் அவனால் சரிவர முடிவு எடுக்கத் தெரியாமல் இருப்பது அவனுடைய பிரச்சனை இல்லை. சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் தான் மிக முக்கியமான பிரச்சனை. மனித மூளையில் இருக்கும் Pre Frontal cortex எனும் பகுதி தான்
* கடினமான சூழ்நிலைகளின் போதும் சரியான விஷயங்களை செய்யவும்,
* நீண்ட கால நோக்கில் வாழ்க்கையை திட்டமிடல், முடிவெடுத்தல்,
* மனக்கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல், தாமதமான திருப்தி (Delayed Gratification)
போன்ற சிறப்பான விஷயங்களை கட்டுப்படுத்துகிறது.
ஒரு மனிதனின் 25 வது வயதில் தான் இது முதிர்ச்சி அடைகிறது. இது நல்ல சமூகப் பொருளாதாரம் இருக்கும் குழந்தைக்கு நடக்கும் விஷயம்.
ஆனால் வறிய ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வளரும் குழந்தைகளுக்கு இதன் வளர்ச்சி முழுமை அடையாமல் மிகப்பெரிய பிரச்சனையை கொடுக்கிறது. இது புறச் சூழலினால் பாதிக்கப்படுவதால்தான் அந்த சூழலில் வளரும் குழந்தைகளால் சரிவர முடிவு எடுக்க முடிவதில்லை.
Marshmallow Test என்கிற ஒரு ஆராய்ச்சி இருக்கிறது. ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஒரு நிகழ்ச்சியில் கூட பேசி இருப்பார். ஆனால் அவரே அதை சரிவர புரிந்து கொள்ளவில்லை. Delayed Gratification தான் ஒரு மனிதனை வெற்றியாளர் ஆக்குகிறது. உடனடியாக கிடைக்கும் இன்பத்தின் பின்னால் போகாமல் நீண்ட கால நோக்கில் கிடைக்கும் இன்பத்தை தேடி போவது தான் மனிதனுக்கு வெற்றியை கொடுக்கும் என பேசியிருப்பார். ஆனால் இந்த டெஸ்டின் நோக்கம் வேறு.
சரி இப்போது, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒரு குழந்தையையும் நல்ல சமூக பொருளாதார சூழ்நிலை கொண்ட குடும்பத்திலிருந்து ஒரு குழந்தையும் அழைத்து, இருவருக்கு முன்னும் ஆளுக்கு ஒரு லட்டை வைத்து மார்ஷ்மெல்லோ டெஸ்டில் சொல்லப்பட்ட அதே விஷயத்தை சொல்லுவோம். உடனடியாக வேண்டுமானால் இந்த லட்டை சாப்பிட்டுக் கொள்ளலாம், ஆனால் ஒரு நாள் பொறுத்திருந்தால் உங்களுக்கு 2 லட்டு கிடைக்கும் என சொல்வோம்.
* நல்ல சமூகப் பொருளாதார சூழலை கொண்ட குழந்தை நாளை வரை காத்திருந்து 2 லட்டுக்களை பெற்றுக் கொள்ளும். ஏனெனில் அவர்கள் வீட்டில் நாளைய சாப்பாடு என்பது பிரச்சனை இல்லாத விஷயம்.
* ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த குழந்தைக்கு "நாளைய உணவு என்பதும், நாளைக்கு உனக்கு எல்லாம் கிடைக்கும் என்பதும்" நிச்சயமற்ற விஷயம். அதனால் அவர்கள் உடனடியாக கிடைக்கும் ஒரு லட்டுவை தேர்ந்தெடுப்பார்கள்.
புரிகிறதா? ஏன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் Instant pleasure ஐ நோக்கி செல்கிறார்கள் என. சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் நன்றாக மூடி வைத்துவிட்டு, எல்லாம் இங்கு சமம் என்கிற மாயை மட்டும் ஏற்படுத்தி, நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் நம்மையே பொறுப்பேற்க வைத்து, Deserved-Reserved என கதை கட்டிக் கொண்டு ஒடுக்கப்பட்டவர்களை இன்னும் ஒடுக்கப்பட்டவர்களாகவே வைத்திருக்கும் இந்த அறிவு வளராத கூட்டம் அடிக்கடி இட ஒதுக்கீட்டை கேவலமாகவும், மெரிட் மெரிட் என கத்திக் கொண்டும் அடுத்தவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
மேலே சொன்ன இத்தனை பிரச்சனைகளையெல்லாம் தாண்டி நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு தான் இந்த சலுகைகளும் இட ஒதுக்கீடும்.
இந்த ஐயர் வீட்டுப் பெண்
* EWS க்கு இருக்கும் இட ஒதுக்கீட்டை பேசாமல்,
* படத்திலே இருக்கும் பெண்களுக்கான் இட ஒதுக்கீட்டை பேசாமல்,
* ஊன முற்றோருக்கான இட ஒதுக்கீட்டை பேசாமல்,
* OBC இற்கு இருக்கும் இட ஒதுக்கீட்டை பேசாமல்
நேராக SC ST இட ஒதுக்கிட்டை மட்டும் குற்றம் சொல்லி பேசுவது அறிவற்ற செயல்.
எல்லா இட ஒதுக்கீட்டிற்கும் ஒரு காரணம் இருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.
ஆனால் 60,000 மாதம் சம்பாதிக்கும் ஒருவர் இந்தியாவில் ஏழை என்றால், அவர் Economically weaker Section என இட ஒதுக்கீடு பெறுகிறார் என்றால் இதை விடப் பெரிய அநீதி இந்த உலகத்தில் இருக்கவா போகிறது?
இதற்கு எதுக்கு 18% வரி என அரசாங்கத்தை கேட்கவில்லை.. நேராக SC ST இட ஒதுக்கீட்டிற்கு வந்து விட்டார்.
சரியாகச் சொன்னார்கள்,
*இந்தப் பார்ப்பனர்கள் "அறமற்றவர்கள்" என*