Sunday, July 20, 2025

SSS சிகரெட் காமராஜர்

இதுவரைக்கும் காமராஜர் எளிமையானவர், நல்வர்னு நம்பிட்டு இருந்த இளம் தலைமுறையினர் எல்லாருட்டயும்,

* ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறையை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தினார். 
* கீழ்வெண்மணி படுகொலையை நிகழ்த்தியவர்களை கட்சியின் பொறுப்புகளில் வைத்திருந்தார். 

* TVS iyyangar கிட்ட இனாமா வாங்குன பங்களாவுலதான் வாழ்ந்தாரு (தி. நகர், திருமலைப்பிள்ளை 60 அடி சாலையில் உள்ள பங்களா) - எதற்காக லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்பது காம்ராஜ்-க்குதான் வெளிச்சம். 

நேரு, சாஸ்திரி, இந்திராவின் தொடக்க காலங்களில் ஆண்டுதோறும் இந்திய அரசு கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அமெரிக்கா grant ஆக கொடுக்கும் கோதுமையை கொண்டுவந்து இந்தியாவில் பசியாற்றிக்கொண்டு இருந்தன. (grant - பச்சையா சொல்லனும்னா பிச்சை). அப்போதெல்லாம் அமெரிக்காவில் சொல்வார்களாம்: பிரெட் சாப்பிடும் போது அதன் ஓரங்களை குப்பையில் போடாதீர்கள், பாவம் இந்தியாவில் பல பசித்த வயிறுகள் அதற்காக காத்திருக்கின்றன. 

(இந்த அசிங்கத்தையெல்லாம் போக்க இந்திரா காந்தி பசுமை புரட்சியை தொடங்க வைத்தார். நாம் என்னவென்றால் எம்.எஸ்.சுவாமிநாதனை வில்லனாகவும், பெரியாழ்வாரை ஹீரோவாகவும் மாற்றிவிட்டோம்).

அப்படிப்பட்ட காலத்திலேயே - 

(a) அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிப்பான Chevrolet கார்
(b) பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவன தயாரிப்பான 555 சிகரெட் 
(c) டி.வி.எஸ். பங்களா 
(d) அன்றைய தமிழ் நாட்டு மக்கள் சினிமால கூட பார்த்திராத ஏ.சி.

வாழ்த்திருக்காரு மனுஷன். எளிய வாழ்க்கை! (பிராண்ட் நேம்: "எளிமை")

* லஞ்சமாகப் பெற்ற விலையுயர்ந்த செவ்ரோலேட் காரில் தான் பயணம் செய்தார். 

* அவர் ஆட்சியிலதான் ஏகப்பட்ட தமிழ்நிலங்கள மற்ற மாநிலங்களுக்கு தாரை வார்த்து குடுத்தாரு,
* அவர் ஆட்சியிலதான் அரிசி இல்லாம எலிக்கறி தின்னாங்க,
* ரேசன்ல அரிசி கிடைக்காது ஆனா ப்ளாக்ல அரிசி அநியாய விலைக்கு கிடைச்சுது
* மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்தும் போது விலை உயர்ந்த 555 சிகரெட்டை குடித்த செயின் சுமோக்கராக இருந்தார் 
* ஏசி வைத்த வீட்டில்தான் வாழ்ந்தார். 
* பல பார்பனர்கள் புதிய புதிய நிறுவனங்களை தொடங்க சட்டத்தை வளைத்தார். 
* இந்திக்கு எதிராக போராடிய தமிழ்நாட்டு மாணவர்களை கக்கன் சுட்டுக் கொன்ற போது அதை ஞாயப்படுத்தி கொண்டிருந்தார். 
* 1954-ல் முஸ்லீம்களுக்கு இருந்த 7% இட ஒதிக்கீட்டை ரத்து செய்தார்
* தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை அடியோடு மறுத்து, அதற்காக உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் சாவதற்கு காரணமானவர். 
* மிராசுதாரர்களையும், பண்ணையார்களையும் கட்சி, ஆட்சிப் பொறுப்பில் வைத்துக்கொண்டு எளிய மக்களிடம் வேசம் போட்டுக் கொண்டிருந்தார். 

---

* உச்சவரம்புச்சட்டம் பட்டபாடு 

வினோபா பாவே-ன்னு ஒரு தீவிர காந்தியவாதி தலைவர் வடக்கே இருந்தார். அவர் தான் பூ-தான இயக்கம் (பூ (bhoo) என்றால் பூமி. நிலம்.) என்ற ஒன்றை தொடங்குகிறார். நிலம் உழுபவனுக்கு சொந்தம் என்று கம்யூனிஸ்டுகள் சொல்வது போல, நிலம் அரசுக்கு மட்டுமே சொந்தம் என்று சோவியத்து ரஷ்யாவில் செய்தது இங்கே எவனும் குரல் கிளப்பும் முன்பாக இவர் தொடங்கிய இயக்கம். 
குறிப்பிட்ட அளவிற்கு மேல் எந்த தனி நபருக்கும் நிலவுடைமை இருக்கக் கூடாது. excess நிலத்தை நிலமில்லாத உழவர்களுக்கு கொடுக்க வேண்டும். இது தான் பூதான இயக்கம்.
இதனை முதல் ஐந்தாண்டு திட்டத்தில் (1951-56) கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டது நேரு அரசு. அதற்காக மாநிலங்களை நில உச்சவரம்புச்சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை செய்யச் சொன்னார் ஐயா நேரு. 
1954-55ல் அப்போதைய மதராஸ் மாநில முதல்வர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் + புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளடக்கிய பழைய, பெரிய தஞ்சாவூர் மாவட்டம்) சூறாவளிச்சுற்றுப்பயணம் செய்கிறார். கார்ல தான். அதுவும் imported செவ்ரோலெ கார்ல தான் (அப்போ உள்நாட்டில் வாகன உற்பத்தி கிடையாது!). கிராமம் கிராமமா போய் பண்ணையார்கள், பெரும் நிலக்கிழார்களை சந்தித்து - நில உச்சவரம்புச்சட்டம் வரப்போகுது. உஷார் ஐயா உஷாரு. ஆயிரம் ஏக்கர், ஐயாயிரம் ஏக்கர்னு வெள்ளைக்காரனையும் அவனுக்கு முன்னாடி ஆண்ட ராஜாக்களும் தாஜா பண்ணி வளைச்சு போட்ட நிலங்களை பாதுகாத்துக்கோங்கன்னு heads up கொடுக்குறாரு. அவர் யோசனைப்படியே... பண்ணையார்கள், மிராசுதாரர்கள், பெரும் நிலக்கிழார்கள், தங்கள் பண்ணை அடிமைகள் பெயர்களில் இடத்தை மாற்றி எழுதி - பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொண்டு, நில அடிமைகளை மேலும் துன்புறுத்தி - நில உச்சவரம்புச்சட்டம் 1961ல் மதராஸ் மாநிலத்தில் இயற்றப்பட்ட போது அது ஒரு டம்மி சட்டமாக ஆக்கப்பட்ட வரலாறு அறியாதவர்கள் இன்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள். 
பல decades ஆக பண்ணையார்களின் விசுவாசம் இப்பெருமத்தலைவர் மேல் தான். காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் பண்ணையார்களின் கட்சியாக்கிய பெருந்தகை! 
சாதிய ஒடுக்குமுறையும் அதன் காரணமாக இருந்த வர்க ஏற்றத்தாழ்வுகளும் இருந்த இந்தியாவில், உலக அளவில் அந்நாட்களில் (1940ஸ் டு 1960ஸ்) ட்ரெண்டிங் கருத்தியலாக இருந்த கம்யூனிச கருத்தியல் நாட்டிற்குள் ட்ரெண்ட் ஆக விடாமல் தடுக்க அப்போதைய காங்கிரஸ் பெருந்தலைகள் பல soft schemes கொண்டுவந்தன. அதையும் நீர்த்துப்போகச் செய்தவர் தான் நம்ம பெருந்தலை. 
இருந்தாலும் அவரை நாம் போற்றவேண்டிய கடமை ஒன்றுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் அரசியல் தளத்தில் பார்ப்பன தலைவர்களை நேரடியாக எதிர்க்கவோ மாற்றாக பிற சாதியினர் வரவோ யோசிக்க முடியாத காலகட்டத்தில் பார்ப்பன முதலவரை ஓடவிட்டு மிகவும் பின்தங்கிய வகுப்பில் இருந்து வந்தவர் முதல்வர் பதவியை grab செய்த guts. அத்தகைய guts அவருக்கு எப்படி வந்தது என்று சொன்னால், அதனை எப்படி தமிழ்நாட்டில் sustain செய்ய முடிந்தது என்று சொன்னால் வயிறெரிய ஒரு கோஷ்டி எப்பவுமே ரெடியா இருக்கும். தங்கள் ஆளை வீழ்த்திய இவருக்கு குடியிருக்க பங்களா தருகிறார் டி.வி.எஸ். முதலாளி என்றால், இனி இங்கே (தமிழ் நாட்டில்) அரசியல் இப்படித்தான் இருக்கப்போகிறது என்பதை அவர் (டி.வி.எஸ். முதலாளி) அன்றே கணித்துவிட்டார் என்று தானே பொருள். எதற்கு சொல்கிறேன் என்றால்.... 50-70 ஆண்டுகள் கழித்து யோசிக்கும்போது with reference to context யோசிக்க வேண்டும்.

---

இவ்வளவு மக்கள் விரோத செயல்களை செய்த மக்கள் விரோதி SSS காமராஜர், தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

தெய்வம் நின்றே கொல்லும். 

No comments:

Post a Comment