Wednesday, July 9, 2025

இந்து சமய அறநிலையத்துறையின் கல்லூரிகள்

ர ரக்களுக்கு மூளைத்திறன் குன்றியிருந்தாலும், அவர்களுடையக் குருதியில் தமிழ், திராவிடம், கழகங்களின் ஆட்சியால் விளைந்த சமூகநீதிப் புரட்சி என்கிற தமிழ்நாட்டின் சிறப்புகளைப் போற்றும் பண்பு கலந்திருக்கும்.  அதை ஒருபோதும் வழுவ விட்டுக் கொடுக்காதவர்கள் ! 

அதனால்தான், எம் ஜி ஆர் பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீட்டைக் கொண்டு வந்த போதும், ஜெயா கடுஞ்சங்கியாகி கோயிலில் ஆடு, கோழி பலியிடக்கூடாது, மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்த போதும், அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.  உடனடி தோல்விகளைப் பரிசளித்தனர்.

அடிபட்ட அவர்களும் சுதாரித்து சங்கித்தனத்தை தங்களுக்குள் ஆழப்புதைத்து மீண்டும் அது வெளிப்பட்டுவிடாமல் பார்த்துக் கொண்டனர் !

அதனால் அதிமுக வீழும் போது திமுக எழுச்சி பெறும்.  திமுக வீழும் போது அதிமுக உயிர்த்தெழும்.  மாறாக தொடர்ந்து சங்கித்தனத்தை ஆதரித்திருந்தால் அதிமுகவின் பெருந்தலைகள் வீழ்ந்த வேகத்தில், அந்த இடத்திலிருந்து அதிமுகவை அகற்றிவிட்டு சங்கிக் கட்சிகள் ஆக்கிரமித்திருப்பார்கள் !

2019 முதல் அதிமுக ஏனோ சங்கிகளுடன் தொடர்ந்து அதீத நெருக்கம் காட்டி, கூட்டணி வலையில் சிக்கித் தவிக்கிறது.  2024 ல் தனித்து நிற்பது போல பாவ்லா காட்டினாலும் அதனால்தான் மக்கள் அதை நம்பவில்லை.  பழைய குருடி கதவைத் திறடி என்றபடி அடுத்த தேர்தலுக்கு மீண்டும் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.  அதனால்தான் ர ரக்கள் உஷாராகிவிட்டனர் என்கிறேன்.  எடப்பாடி பழனிச்சாமி எனும் கோடாரியைக் கூர்தீட்டி சங்கிகள் வெட்ட நினைப்பது திமுகவை அல்ல.  அதிமுகவை.

ர ரக்களே, கசாப்புக் கடைக்காரன் உங்களுக்கு கருணை காட்டுவது அவனுடைய அதீத கறித் தேவைக்காக.  அவனை நம்பி பின் செல்கிறீர்களே ?

உள் ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு தரப்போகிறேனென கள்ளர்களை பகைத்துக் கொண்டான்.  அய்யிய்ய நம்பிட்டீங்களா அது ச்சும்மா, லுல்லுலாயிக்கு என்று நீர்த்த அந்த சட்டம் பல்லிளிக்க,  வன்னியர்களையும் பகைத்துக் கொண்டான் !

இருக்கும் ஒரே நம்பிக்கை கொங்கு.  அங்கும் அண்ணாமலை இவன் பெயரை ஏகத்துக்கும் கெடுத்து வைத்துள்ளான்.  செந்தில் பாலாஜியை வேறு தேவையில்லாமல் சீண்டி அவர் முழுவேகத்துடன் வேலை பார்ப்பது போல செய்து வைத்துவிட்டான்கள்.  கோமணமும் மிஞ்சாது என்கிற நிலைதான்.

அது போனா போகுது.  

ஆனால் அதிமுக அழிந்து அந்த இடத்தைச் சங்கிகள் ஒருபோதும் ஆக்கிரமித்துவிடக் கூடாது !

பாருங்கள்.  கோயில் செல்வத்தை வைத்து கல்லூரிகளைக் கட்டுவது சதி என்கிறான்.

அந்தந்தக் கோயில் பணத்தைக் கொண்டு கட்டப்படும் கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்தக் கோயில் பெயரே சூட்டப்படுகின்றன எனத் தெரியுமா உங்களுக்கு ?

சான்றுக்கு நம் பழநி முருகன் கோயில் வருவாயிலிருந்து உருவாக்கப்பட்ட கல்லூரியின் பெயர் அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரி.   மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வருவாயிலிருந்து உருவாக்கப்பட்ட பள்ளியின்  பெயர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,  நெல்லையப்பர் கோயில் வருவாயில்  உருவானது ஸ்ரீ காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி ...

இப்படியாக இதுவரை 
5 கலைக் கல்லூரிகள், 
1 பொறியியல் கல்லூரி, 
15 மேல்நிலைப் பள்ளிகள், 
8 உயர்நிலைப் பள்ளிகள், 
2 நடுநிலைப் பள்ளிகள்,
1 துவக்கப் பள்ளி,
1 CBSE பள்ளி,

இதுபோக இசைப் பயிற்சி பள்ளிகள், தேவாரப் பயிற்சி மையம், ஓதுவார் பயிலுமிடம், மருத்துவமனைகள், முதியோர் காப்பகம் என பொதுமக்கள் அனைவரும் பயன்படும்படி பல நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோயில்களுக்குச் சென்று உண்டியலில் காணிக்கையிட்ட நாம் அனைவரும் இதன் உரிமையாளர்கள்.  இதனால் பயன்பெறும் எவருடைய வாழ்த்தும், ஆசியும் நமக்கேச் சேரும்.  இதுதான் நாம் செய்யும் உண்மையான தர்மம், அசலான புண்ணியம் !

மாறாக நீங்கள் அர்ச்சனை தட்டில் போடுவது, நீறு குங்குமத்திற்காக கையிலளிப்பது, சாமியின் தோளிலிருக்கும் ஓசி மாலைக்காக அடியில் திணிப்பது எதுவுமே தர்மமாகாது.  அது பிச்சையளிப்பது, லஞ்சமளிப்பது வகையில் போய்ச் சேரும்.  

நிம்மி மாமியைப் போல உண்டியலில் போடாதீங்கோ, தட்டில் நொட்டுங்கோ என்று மனச்சாட்சி இல்லாமல் சொல்லமாட்டேன்.   மாறாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பெரிய கோயில்களுக்குப் போனால், உண்டியலில் தாராளமாகப் போடுங்கள் !

நீங்கள் போடும் ஒரு ரூபாய் கூட நிச்சயம் ஒரு மாணவனின் ஒரு நாள் கல்விக்குப் பயனளிக்கும், உணவளிக்கும், அறிவளிக்கும்.   

மாறாக, அரசுப்பணியில் ஒன்றாம் தேதி மணியடித்தால் சம்பளம் பெறும் வேலைக்காரர்களின் தட்டுகளில், கைகளில்  சொற்பமாய் போடுங்கள் போதும் !

ஆக, அறநிலையத்துறை கோயில் சொத்துக்களின் மூலம் கோயில் பெயரிலேயே பல நல்ல கட்டமைப்புக்களை உருவாக்கி, உங்களுக்குப் புண்ணியம் தேடிக் கொடுத்தால் சங்கி டாய் எலிகளுக்கு வலிக்கட்டும்.  இந்த பல்லனுக்கு ஏன் வலிக்கிறது ? இந்தப் பாம்பாட்டிக்கு ஏன் நோகிறது ?  சாதி வாக்குகளை மட்டுமே நம்பியுள்ள இந்த கோடநாடு கொலைகாரனுக்கு / கொள்ளைக்காரனுக்கு ஏன் காந்துகிறது ?

மறுமொழிப்பெட்டியில், அறநிலையத்துறை நிர்வகிக்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை இணைத்துள்ளேன்.

நம் சாதி, மதம் பாராத கல்விச்சேவைகளை குலைக்க வரும் சங்கிகள் எந்த மாறுவேடங்களில் வந்தாலும் உடனடியாக அவர்களுடைய முகமூடிகள் கிழிக்கப்பட வேண்டும்.  மக்கள் முன் அந்தத் துரோகிகளை அம்பலப்படுத்த வேண்டும்.  

இதன்படி, எடப்பாடி பழனிச்சாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை அதிமுகவினர் துரத்தி அடிக்க வேண்டும்.  அண்ணா திராவிட என்கிற பெயருக்கேற்பச் செயல்படும் நல்ல தலைவனைக் கண்டடைந்து கட்சிக்கு அவரைத் தலைவராக்க வேண்டும்(சீரியசான பதிவு தோழர்களே, ஹாஹா ஸ்மைலி போடாதீர்கள் ப்ளீஸ்)

https://hrce.tn.gov.in/hrcehome/hrce_institutions.php

No comments:

Post a Comment