இராமயணத்தில் இராமன் பரதனுக்கு இராஜ நீதி பற்றி கூறுகிறார்:
பவுத்தர்கள், சார்வாகர்கள் முதலிய நாத்திகர்களோடு பழகாமல் இருக்கின்றாயா? சாத்திரங்களுக்கு வெகு சாமர்த்தியமாக அர்த்தங்களை உபதேசிப்பதில் இவர்கள் வெகு சாமர்த்தர்கள். தத்துவ ஞானத்திற்கு மாறாக விபரீத ஞானத்தை உடையவர்கள். ஒன்றும் தெரியாவிட்டாலும் பெரிய பண்டிதர்கள் என்று எண்ணிக் கொண்டுயிருப்பார்கள். வேத மார்க்கத்திற்கு விபரீதமான புத்தியினை உடையவர்கள். தர்மசாத்திர மிருதிகளையும், புராணங்களையும் நீக்கி மகரிசிகளால் சொல்லப்பட்டு சாதுகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட புராணங்களையும், தர்மசாத்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாய பரம்பரைப்படி அர்த்தம் சொல்லாமல் கேவல தர்க்கத்தை பிரயோகித்து அவைகள் இகத்திலும், பரத்திலும் பிரயோசனமற்றவை என்று வாதிப்பார்கள்.
-வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம்
சர்க்கம்109, பக்கம் 412
எழுதியவர் சி.ஆர்.சீனிவாச அய்யங்கார்.பி.ஏ
இராமன் சொல்லுவதைப் பார்க்கும் போது இராமனுக்கு முன்பே புத்தர் இருக்கிறாரா? பின் ஏன் புத்தமும் இந்துனு சொல்கிறார்கள். அப்போது புத்தமதத்தை இவர்களே அழித்தார்கள். புத்தரின் காலம் 2400 ஆண்டுகளுக்கு முற்பட்டது
இப்போது சொல்லுங்கள் ராமாயணம் எழுதப்பட்டது எப்போது
சகோ..
ReplyDeleteஇதோ அதன் மொழிபெயர்ப்பு ...
வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், சர்க்கம்-109 சொல்வது ...
"அறிவாளியானவன், நாத்திகவாதத்திற்கு இடம் கொடுப்பானாகில், ஆதாவது வேதத்திற்கு புறம்பான வழியில் செல்வானாகில், அவன் திருடனை போலவனே . அவ்வாறு சந்தேகிக்க தக்கவர்களை நல்லறிஜர்கள் முகம் கொடுத்ததும் பேசுவதில்லை (இதுவே அவர்களுக்கு பெரிய தண்டனை ஆயிற்று ) - வசனம் -34 சொல்கிறது ...
இதில் புத்தா' என்கிற வார்த்தை புத்தரை குறிப்பிடவில்லை
buddhaH = a mere intellection (வெறும் அறிவாற்றல்)
buddhaH = should a wise man (புத்திசாலி மனிதன்)
இது தான் இந்த வசனத்தின் அர்த்தம் !
இதோ அதன் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் ...
34. yathaahi tathaa hi = It is an exact state of the case; saH = that; buddhaH = a mere intellection; choraH = (is deserves to be punished) as a thief; viddhi = and know; naastikam = an atheist; atra = here; tathaagatam = to be on par with a mere intellectual; tasaat = therefore; yaH = he who; shaN^kya tamaH = is the most suspectable; prajaanaam = (should be punished in the interest of) the people; na syaat = In no case; buddhaH = should a wise man; abhimukhaH = consort; naastikaa = with an atheist.
அயோத்தியா காண்டத்தில் வரும் "புத்த" என்ற சொல்லுக்கு, "அறிவாளி" என்று அர்த்தம் .
வேதகாலத்திலேயே, லோகாயதவாதம் என்று ஒன்று உண்டு. கடவுள் மறுப்புவாதம் அது. அதை "நாத்திகம்" என்று பகருவார்கள். இராமன் அப்படிப்பட்ட நாத்திக அறிவாளியையே "புத்த:" என்று குறிப்பிட்டு, அப்படிப்பட்ட ஒருவர் திருடனுக்கு ஒப்பாக வைத்து தண்டிக்கப்பவேண்டும் என்று இயம்புகிறார்.
இராமன் யசுர்வேதமும், தனுர்வேதமும், அவ்வேதங்களின் உட்பகுதிகளையும் [வேதாங்கம்- வேதாந்தம் அல்ல] என்று அனுமன் சுந்தரகாண்டத்தில் சீதைக்கு இராமனைப்பற்றி அடையாளம் கூறுகிறார். எனவே வேதத்தைக் கற்று ஒழுகும் இராமன் [இதில் இராவணனையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். சாமவேதத்தை இசையாக இசைத்து சிவபெருமானின் அருளைப்பெற்றவன் -- படைக்கும் கடவுளான பிரம்மாவின் கொள்ளுப்பேரன் - பிறப்பால் பிராமணனாக -- தந்தை பிராமணர், தாய் அரக்கி -- இருப்பினும், அரக்க குணம் கொண்டவன் அவன்] நாத்திக வாதம் செய்யும் காபாலியிடம் அப்படிச் சொல்வது வியப்பல்ல.
மற்ற சுலோகங்களி வருவது "ப்ர'புத்த' என்ற சொல்லே. "ப்ரபுதத" என்றால் எழுப்பப்ட்ட, மலர்ந்த, பெருகிய, திறந்த, தோன்றிய, அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட, அறிந்துகொண்ட, உணர்ந்துகொண்ட, புரிந்துகொண்ட .வெடித்துச் சிதறிய என்று பல பொருள்கள் கொள்ளலாம்.
அந்த 'ப்ரபுதத" வரும் சுலோகங்களில் எல்லாம் மலர்ந்த என்ற பொருளே கொள்ளும்படி வருகிறது, ஏனெனில் மலர்களைப்பற்றிய விவரிப்பே அவை.ஒரு இடத்தில்மட்டும் உணர்ந்தறிந்துகொண்ட என்ற பொருள் வருகிறது.
எனவே, "புத்த" என்ற சொல் இராமயணத்தில் "சித்தார்த்த புத்தரை"க் குறிக்கவில்லை