சிரியா நாட்டைக் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையுமுன் சில காலம் ஈரானை சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள் அதன்பின் இந்தியாவிற்குள் வந்தபின் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள்.
இராமன், ஆரியன், ராணா, ராணி, இந்திரன், வருணன், இரான், சாமி (கடவுள்), ரங்கா ராகவன், ரகு, பீஹார், (Daeva) தேவா, மணி (கடவுள்), கந்தர்வா, கயா, லஷ்கரி, ஜலம், மன்னன், மந்த்ரம், மாரி(கடவுள்), கௌ போன்ற சொற்கள் பாரசீக மொழியில் இடம்பெற்று, அதற்குரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
பஞ்சாங்கம் என்ற ஆண்டுகாட்டியில் உள்ள அங்கம் பாரசீக சொல்லாகும். இதன் பொருள், காலம், பருவம் (Time) (Season) ஆகும். பஞ்ச என்ற சொல், அய்ந்து வகை ஆண்டு கணக்கீட்டு முறையைக் குறிக்கின்றது. பாரசீகத்தின் அன்பளிப்பு பஞ்சாங்கமாகும். இந்த பஞ்சாங்கத்தை வைத்து நாள் குறிப்பது. பூணூல் அணிந்த ஆரியர்களின் வேலை ஆகும்.
Hom (ஓம்) என்ற சொல்லுக்கு, பாரசீக மொழியில் - யாக சடங்குகளில் பயன்படுத்தும் சாறு என்பதனை குறிக்கின்றது. இது சோமபானம் போன்றது.
Jal (ஜலம்) என்ற பாரசீக சொல்லுக்கு தண்ணீர் என்று பொருள். இன்று கூட ஆரியர்கள், தமிழர் திருமணங்களில் ஜலம் விடுங்கள் என்கிறார்கள்.
பாரசீக மொழியில் ஈரான் நாட்டினைக் குறிக்கும் சொல் Airan இந்த பாரசீக சொல்லுக்குப் பொருள் ஈரான் ஆகும். இந்த நாட்டை ஆரியர்களின் தாயகமாக இந்த பாரசீக அகராதியில் கூறப்பட்டிருக்கிறது. இது ஆரியர்கள் பாரசீகம் வழியாக இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றது.
பாரசீக மொழி அகராதியில் ஆரியர்களின் மூதாதையர் பிறந்த நாடாக துர்கிஸ்தான் (Turkistan) அய் குறிப்பிடுகின்றது. ஆரிய இனம் தோன்றிய பகுதியின் பெயர் “Airyana Vaeja” இது துர்கிஸ்தான் நாட்டில் புல்வெளிகள் நிறைந்த பகுதியில்,
பாரசீகமொழியில், இந்தியாவில் வாசிக்கப்படும, தம்புரா, வீண்(ணா), வாத்ய (வாத்யம்) என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. வாத்யம் என்ற சொல் அவஸ்தன் நூலில் உள்ளது.
வீர் (Vir) என்ற சொல் பாரசீக மொழியில் உள்ளது. இந்த சொல்லே வடமொழியில் வீர்பூமி, பரம் வீர் சக்ரா போன்ற சொற்களில் உருப்பெற்றுள்ளது.
முடிவுரை:
துருக்கிஸ்தான் என்று அறியப்பட்ட பகுதியில் (துர்க்மேனிஸ்தான் அருகில்) இருந்து முதல் ஆரியர் தோன்றியதை இந்த அகராதி தெரிவிக்கின்றது. இந்த நூல் பாரதீய ஜனதா கட்சியின் பாரசீகத்திலிருந்து வந்த வேதகால கடவுள்கள், இந்திரன், பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்கள் இந்தியாவில் பிராமணீயத்தை வளர்க்க உதவியதாக வரலாற்று ஆசிரியர் ஆடம் ஹார்ட் டேவிஸ் தனது நூல் “History” இல் தெரிவிக்கின்றார்.
கனிஷ்கர் காலத்தில் கல்வெட்டுகள் 1993இல் ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டன. இதில் இராணிய மொழியை ஆரிய மொழியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
Helena Petroun Blavatsky தனது “Secret Doctrine” (1888) இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். யூதர்கள் ஆரியன் அல்லாதவர்கள் ஆபிரஹாம்_அய் சார்ந்தவர்கள். Abraham x-brham (பிரம்மன்=பிராமணர்) கிதீக்ஷீலீணீனீ பிராமணனின் எதிர்பதம்.
பிராமணர் அல்லாத யூதர்களை அறவே அழிக்கும் கொள்கையை நாசி (NAZI) கொள்கை என்று கூறுவர். இந்த கொள்கை Aryanization ஆரியமயமாக்குதல் என்று பெயர்.
(ஆரியர் பற்றிய இன்னும் நிறைய தகவல்கள் சொல்லமுடியும். ஆந்திராவிலிருந்து ஆரியபவன் வந்ததாக நீர் கூறினாலும்கூட ஆரியபவனை நடத்துகிற 90% பேர் பிராமனர்களே. ஏன் ஆந்திர பிராமனர்கள் இல்லையா? அப்புறம் அதையும் மெனக்கிட்டு வீடியோ ஆதாரமெடுத்து என்னால் தரவியலும். அதற்கெல்லாம் நீர் அசையமாட்டீர். சொரணை இருந்தால் அசைந்து கொடுப்பீர். இருந்தால் நான் நேற்று கேட்ட கேள்விகளுக்கு பதிலளியும். இன்னும் இருபதுக்கு மேற்பட்ட கேள்விகள் இருப்பில் உள்ளன)
https://www.facebook.com/perarivalan.mura/posts/864090687043474
No comments:
Post a Comment